பின்பற்றுபவர்கள்

12 மே, 2006

விஜயகாந்த் கட்சியால் வெற்றி பெற்ற திமுக

இந்த தேர்தலில் விஜயகாந்தின் கட்சி பெரும் விவாதப் பொருளாகிவிட்டது. விஜயகாந்தின் தயவில் திமுகவுக்கு 43 இடங்கள் என்று ஒரு அட்ட வணையை தினமலர் வெளி யிட்டிருக்கிறது. அந்த அட்டவணை மூலம் விஜயகாந்த் தனித்து நின்றதால் திமுக வெற்றி பெற்றதாக சொல்கிறது. விஜயகாந்தில் கட்சி அதிமுகவுடன் இணைந்திருந்தால் அதிமுக அந்த தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்குமாம்.

அதாவது கேட்பவன் கேனையன் என்றால் கேல்வரகில் இருந்து நெய் எடுக்களாம் என்று சொல்வார்களாம் அதுமாதிரி இருக்கிறது தினமலரின் செய்தி. விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக கூட்டணியாக கருதப்பட்டே மக்கள் வாக்களிப்பார்கள் அதில் விஜயகாந்தின் ஆதரவு வாக்குகள் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் நடந்த தேர்தலில் விஜயகாந்தின் கட்சிக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் திமுக - அதிமுக அரசியல் பிடிக்கா தவர்கள் அல்லது புதியவர்கள். அவர்களுடைய வாக்கு எப்படி தேமுதிக-அதிமுக கூட்டணி கட்சிக்கு கிடைக்கும் என்று கொள்ளமுடியும் ? விஜயகாந்த் தனித்து நின்றதால் அந்த வாக்குகளை பெற்றிருக்க முடிந்தது. இல்லையென்றால் அந்த வாக்குகள் இரு கூட்டணி கட்சிகளுக்கும் பிரிந்தே கிடைத்திருக்கும். மேற்கண்ட திமுகவின் வெற்றியைப் பற்றிய அறிய கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் ஜல்லி.

விஜயகாந்திற்கு தன் ஸ்டார் அந்தஸ்தினாலும், பாமகவின் சாதி அரசியலும் பிடிக்காத மாற்று இனத்தாரின் வாக்குகளாலுமே விருத்தாலத்தில் விஜயகாந்திற்கு விருந்துகிடைத்து. அவருடைய செல்வாக்கு எங்கும் இருக்குமானால் மற்ற தொகுதிகளில் இரண்டாவது இடத்திற்கு அவருடைய கட்சி வந்திருக்கும். வீன்பிடிவாதத்தில் அவர் கூட்டணி சேராமல் கிடைக்ககூடிய சில தொகுதிகளை கூட இழக்க நேரிட்டது. அப்படி சேர்ந்திருந்தாலும் அது எதிர்பார்க்கும் அளவுக்கு, அதாவது ஆட்சி அதிகாரத்தை மாற்றும் அளவுக்கு இருக்கும் என்றெல்லாம் சொல்லமுடியாது. சைதாப்பேட்டையில் பாமக தோற்றதும் அக்கட்சியின் மீதுள்ள சாதிமுத்திரைக்கு எதிராகவே வாக்குகள் கிடைக்க, பாமக சைதையில் தோல்வி அடைந்தது. சைதையில் திமுக நின்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கும்.

மேலும் ஜெயலலிதாவை திருப்தி படுத்த தினமலர் ஒரு படம் போட்டுவிட்டு பாகங்களை மட்டும் குறிக்காமல் விட்டுவிட்டுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக திமுகவைவிட அதிமுக 7% அதிக வாக்குகள் பெற்றுள்ளதாம். காங்கிரசைவிட தேமுதிக 0.55% அதிகம் பெற்றுள்ளதாம். இவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை என்று குறிப்பிடவில்லை. அதிகம் பெற்றுள்ளதில் என்ன ஆச்சரியம் ? திமுக நின்றது 132 தொகுதிகள் அதிமுக நின்றது 180+ தொகுதிகள் கண்டிப்பாக வாக்குவித்யாசம் இருக்கத்தானே செய்யும். அதேபோல் 48 தொகுதிகளில் மட்டுமே நின்ற காங்கரசும், 234 தொகுதிகளில் நின்று 0.55% அதிகம் பெற்ற தேமுதிகவும் ஒன்றா ? இது மாபெரும் சாதனை என்று இளிக்கிறார்கள்

இவர்களும் இவர்களின் கணக்கையும் பார்க்கும் போது எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று சொல்வார்களே அதுதான் ஞாபகம் வருகிறது.

10 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Govikannan,

உங்கள் தலைப்பே தவறு. "விஜய்காந்த் தயவால் வெற்றி பெற்ற திமுக" என்று இருக்க வேண்டும்.

திமுக தோற்றால் கருணாநிதி புள்ளி விபரம் சொல்லுவார். எங்களுக்கு அந்த உரிமை இல்லையா என்று வலைபூ அத்தாரிடியார் கோவிச்சுகுவார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//திமுக தோற்றால் கருணாநிதி புள்ளி விபரம் சொல்லுவார்.//
இருக்கலாம், 2001ல் திமுக தோற்றபோது மதிமுகவை இணைத்து இப்படி ஒரு செய்திவந்தது.

பெயரில்லா சொன்னது…

எவன் தயவாலும் தி.மு.க வெற்றி பெறவில்லை. தினமலர் பார்பபான் எழுதியதை அப்படியே வாந்தி எடுக்க வேண்டாம்.

மக்கள் வாக்களித்து தான் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ்மறவன் சைட்... எவன் தயவாலும் தி.மு.க வெற்றி பெறவில்லை. தினமலர் பார்பபான் எழுதியதை அப்படியே வாந்தி எடுக்க வேண்டாம்//
பதிவை முழுவதும் படிக்காமல் உங்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கிறீர்கள்.

பெயரில்லா சொன்னது…

இந்த தேர்தலில் இரண்டு திராவிடக் கட்சிகளின் வெற்றியும் மிகவும் சொற்ப ஓட்டு வித்தியாசத்தி லே கிடைத்திருக்கிறது. ஆக மொ த்தம் பார்க்கும் போது முன்னாள் முதல்வரின் ஆட்சியின் மீது மக்கள் அவ்வளவு வெறுப்படையவி ல்லை என்றே தெரிகிறது.

போனமுறை ஜெ.வின் ஆட்சி முகம் சுளிக்க வைத்தது என்னவோ உண்மை தான். ஆனால் இந்த ஆட்சிகாலத்தில் எந்த ஒரு ஆட்சியாளரும் எடுக்கத் தயங்கும் முடிவுகளை எடுத்த முதல்வரை மக்கள் ஏகமனதாக பாரட்டத்தான் செய்கின்றனர்.

//ஒட்டுமொத்தமாக திமுகவைவிட அதிமுக 7% அதிக வாக்குகள் பெற்றுள்ளதாம். காங்கிரசைவிட தேமுதிக 0.55% அதிகம் பெற்றுள்ளதாம். இவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை என்று குறிப்பிடவில்லை. அதிகம் பெற்றுள்ளதில் என்ன ஆச்சரியம் ? திமுக நின்றது 132 தொகுதிகள் அதிமுக நின்றது 180+ தொகுதிகள் கண்டிப்பாக வாக்குவித்யாசம் இருக்கத்தானே செய்யும். அதேபோல் 48 தொகுதிகளில் மட்டுமே நின்ற காங்கரசும், 234 தொகுதிகளில் நின்று 0.55% அதிகம் பெற்ற தேமுதிகவும் ஒன்றா?//

அய்யா சதவீதத்தில் கணக்கிட்டால் எவ்வளவு தொகுதி கூட குறைய இருந்தாலும் விடை சரியாகவே வரும். இரண்டுபேரின் மொத்த தொகுதிகளின் வாக்குகளையும் கணக்கிட்டுப் பாருங்கள்.

பெயரில்லா சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் கோவிக்கண்ணன்.
இன்று காலை தினமலரைப் பார்த்த போது எனக்கும் இதுதான் தோன்றியது. தினமலரின் அதிமுக ஜல்லி தாங்க முடியவில்லை. 129 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 182 தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தால் கண்டிப்பாக அதிக வாக்குகள் பெற்றிருக்கும். போன சட்டமன்ற தேர்தல் நிலவரத்தைப் பார்த்தால் உண்மை தெரியும்

கூட்டணிகளால் ஓட்டுகள் மாறுகின்றன என்பதில் ஐயமில்லை. அதே சமயம் இது போன்ற காயங்களுக்கு எச்சில் தடவும் வேலையும் தேவையில்லை. இனியாவது தினமலர் ஒரு புரொபஷனலிசத்தை வளர்க்கிறதா என்று பார்ப்போம். அதுவும் இல்லாவிடில் தினகரனுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

பெயரில்லா சொன்னது…

Dinamalar is going down. Yesterday there was a photo of "4 DMK Women" on their homepage with the title D.M.K. MagalirAniyinar "Aatam Potanar".

What an expression to describe??
Ellam Vayitherichal thaan.

பெயரில்லா சொன்னது…

பசித்தவன் தான் பழங்கணக்கு பார்ப்பான் என்பார்கள்!
புசித்தவனுமா?

அதுதான் வென்றாகி விட்டதே!
எதில் இன்னும் அலசல் எதற்கு?
அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம்!
சரிதானே!

கோவி.கண்ணன் சொன்னது…

நாகு, பிரதீப், கிறுக்கன் ஆகியோரின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி
//
sk said...
அதுதான் வென்றாகி விட்டதே!
எதில் இன்னும் அலசல் எதற்கு?
அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம்!
சரிதானே!
//

வெற்றி எதனால், தோல்வி எதனால் என்று இருண்டு பக்கமும் கட்சிகள் மாறி மாறி சுருதி வாசிக்கும் போது சகிக்க முடியாமல் எழுத வேண்டியிருக்கிறது

பெயரில்லா சொன்னது…

தோற்றுபோனவன் மனசு உடைஞ்சுபோகாம அது இதுன்னு சொல்லி மனசை தேத்திக்கனும். அது தான் இப்ப நடக்குது, அதை தப்புன்னு சொல்லாதிங்க. இந்த வாரம் எல்லோர் மனசும் ஆறுதல் அடையனும்.
அதிமுக காரனுக்கு எரிச்சல், திமுக காரனுக்கு எரிச்சல் ( 118 வாங்க முடியலயேன்னு) தேமுதிக ஆளுக்கு மட்டும் தான் கொண்டாட்டம். ( பேராசையுள்ள தேமுதிக காரங்களுக்கு கொஞ்சம் வருத்தம்).

அதாவது வலையுலகில் SK வுக்கு மட்டும் கொண்டாட்டம். :-)

தினமலர் அதிதீவிர திமுக எதிர்ப்பு நாளிதழ் அதனால ஒரு 2 மாசத்துக்கு அதை படிக்கிறத விடுங்க. மொத்தமா விட்டாலும் நல்லது தான். :-))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்