பின்பற்றுபவர்கள்

12 மே, 2006

வைகோ பழிதீர்த்துக் கொண்டார் ?

இந்த தேர்தால் நிறைய ஊகங்களை விட்டுச் சென்றிருக்கிறது. தேர்தலுக்கு முன்புவரை திமுகவின் பின் நின்ற வைகோ ஒரே நாளில் ஜெ-வை த்தேடி போனது எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்சியாகவும் இருந்தது. பெட்டிவாங்கி கொண்டாரென்றும், கட்சியை அடகுவைத்து விட்டார் என்றும் துரோகி என்றும் முத்திரை குத்தப்பட்டார்.


அவர் சிறையில் இருந்து வெளியே வந்த போது 'ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியை மக்கள் சக்தியை கொண்டு முறியடிப்பேன் என்று அறைகூவல் விடுத்ததை சன் தொலைக்காட்சியும் மறு ஒளிபரப்பு செய்ததது. இதையெல்லாம் பார்க்கும் போது. வைகோ ஏன் அதிமுகவிற்கு ஆதராவாக சென்றார் ? அவருக்கு அரசியல் அனுபவம் குறைவா ? என்றெல்லாம் விவாத்தித்தார்கள். அவர் சரியாகத்தான் முடிவு மேற்கொண்டார் என நினைக்கத் தோன்றுகிறது. ஜெயலலிதாவுக்கு எதிராக சந்தர்பவாதம் என்று முத்திரை குத்தப் படவேண்டும் என்று அவர் திட்டமிட்டு செயல்பட்டதாக நினைக்கத் தோன்று கிறது.


அதற்கு தன் கட்சியும் தானும் விமர்சனத்துக்கு ஆளாகினாலும் பரவாயில்லை, ஜெயலலிதாவின் ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் அதே சமயத்தில் திமுகவின் தயவில் தன் கட்சி வளர்ந்தாக திமுக வோ மற்ற கட்சிகளோ நினைத்து விடக் கூடாது என்று அவர் நினைத்திருக்க கூடும்.


அவருடைய சபதத்தில் அவர் வெற்றி பெற்றுருக்கிறார். ஜெயலலிதா ஆட்சி அகற்ப்பட தன்னாலான முயற்சியில் அவர் தன் கட்சியை நன்கு பயன்படுத்தியிருக்கிறார். அதேசமயத்தில் அவருடைய கட்சிக்கும் முதன் முறையாக ஆறு இடங்கள் கிடைத்திருக்கிறது.


இன்னும் மூன்று மாதங்களில் அவர் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, விஜயகாந்துடன் இணைவார் தமிழகத்தில் அந்த கூட்டணி இரு முக்கிய கட்சிகளுக்கு மாற்று சக்தியாக விளங்கும்.

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//அவருடைய சபதத்தில் அவர் வெற்றி பெற்றுருக்கிறார். ஜெயலலிதா ஆட்சி அகற்ப்பட தன்னாலான முயற்சியில் அவர் தன் கட்சியை நன்கு பயன்படுத்தியிருக்கிறார். அதேசமயத்தில் அவருடைய கட்சிக்கும் முதன் முறையாக ஆறு இடங்கள் கிடைத்திருக்கிறது.
//

இப்படி ஒரு கோணம் இருக்கிறதா!
புதிய கோனத்தில் அலசிய கோவிகண்ணனுக்கு பாராட்டுக்கள்.


//இன்னும் மூன்று மாதங்களில் அவர் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, விஜயகாந்துடன் இணைவார் தமிழகத்தில் அந்த கூட்டணி இரு முக்கிய கட்சிகளுக்கு மாற்று சக்தியாக விளங்கும்.//

இதனால் யாருக்கு என்ன பயன்? தற்போதைய ஆட்சியை இது எந்த அளவிலும் பாதிக்காதே!
இப் புதிய கூட்டணி எதிர்கட்சி என்றும் சொல்லிக்கொள்ள முடியாதே!

பெயரில்லா சொன்னது…

சிறந்த தேர்தல் ஜோக்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இதனால் யாருக்கு என்ன பயன்? தற்போதைய ஆட்சியை இது எந்த அளவிலும் பாதிக்காதே!
இப் புதிய கூட்டணி எதிர்கட்சி என்றும் சொல்லிக்கொள்ள முடியாதே! //

உடனடி பலன் தற்போதைக்கு கிடையாது ஆனால், மானில அரசு, மத்திய அரசு என இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு தேர்தல் வந்து கொண்டு இருக்கிறதே.

சிபி,

என்னுடைய தேர்தல் முடிவுகள் தொடரில் நான் உறுதியாக எழுதிய மே 4ல் எழுதிய தேர்தல் முடிவு 5 பதிவில் எழுதிய தேர்தல் முடிவுதான் தற்போதைய தமிழக நிலவரம் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்

http://govikannan.blogspot.com/2006/05/5.html

பெயரில்லா சொன்னது…

உங்கள் எண்ணம் பலிக்க வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் எண்ணம் பலிக்க வாழ்த்துகள். //
மிஸ்டர் கறுப்பு,
பழிக்காத உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

அட! இந்தக் கோணத்துலே பார்த்தா......
'பகையாளிக் குடியை உறவாடிக் கெடு'?

கோவி.கண்ணன் சொன்னது…

துளசி,
அப்படித்தான் தோன்றுகிறது. 40ஆண்டுகாலம் அரசியல் அனுபவம் கொண்டவர் ஒரு சர்சைக்குறிய முடிவெடுத்தால் வேறு என்ன நினைப்பது

பெயரில்லா சொன்னது…

எனக்கு இந்தச் சந்தேகம் மொதல்ல இருந்தே உண்டு. இதுல கருணாநிதியும் சம்பந்தப்பட்டிருப்பாரோன்னு நெனச்சேன். அரசியல்ல எப்படியும் இருக்கலாம்.

விஜயகாந்த் + வைகோ கூட்டணி....நடந்தாலும் நடக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

தமிழ் ஆர்வலர் ஜி.ராகவன் அவர்களே, உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

பெயரில்லா சொன்னது…

//"வைகோ பழிதீர்த்துக் கொண்டார் ?" //

இல்லை, இல்லை,

"வைகோ பழிவாங்கிக் கொண்டார்"
என்று தலைப்பை மாற்றுங்கள்

இந்த கூட்டணியில் இருந்தால் அவர் அதிகம் இருக்கைகள் வாங்கியிருப்பார்.

பெயரில்லா சொன்னது…

ஜெ:

அடிச்ச கைப்புள்ளைக்கே(வைகோ) இவ்வளவு இரத்தம்னா....

அடி வாங்னவன் உயிரோட இருப்பாங்கிரா...!!??



நாஞ்சில் சம்பத்:

இப்படி.. உசுப்பேத்தியே....உசுப்பேத்தியே....வைகோவை... சைகோ அக்கிவிட்டுட்டுடானுங்க.....



வைகோ:

இன்னும் நம்மள இந்த ஊரு நம்புதாடா??

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்