ஓட்டு பதிவு முடிந்துவிட்டது. எல்லோரும் ஒருவிதத்தில் வெற்றி பெற்றுருக்கிறார்கள்.
கட்டுக் கோப்புடன் கூட்டணிக்கு தொகுதி பங்கு பிரித்ததது கொடுத்தததும், தேர்தல் வாக்குறுதியில் முத்திரை பதித்ததால் கருணாநிதிக்கு வெற்றி.
பழமொழி : தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் (ஜெ விசயத்தில்)
சிறையில் தள்ளி பழி தீர்த்துக் கொண்டுவிட்டதும் இல்லாமல், தன்னை பேய் என்று தூற்றி, மக்கள் சக்தியை திரட்டி பாசிச ஜெயலலிதாவை தூக்கி எறிவேன் என்றவரை தன் காலடியில் மீண்டும் விழவைத்தது ஜெயலலிதாவின் வெற்றி
பழமொழி : பணம் பாதளம் வரை பாயும்
தன்னை அமுக்கி கட்சியை திமுக ஜோதியில் கலக்க வைத்துவிடுவார் கருணாநிதி என்று சமயத்தில் உணர்ந்து, மதிமுக முடங்கிவிடாமல் காத்ததில் வைகோவிற்கு வெற்றி.
பழமொழி : தனக்கு இரண்டு கண்களும் போனாலும் ஆகாதவனுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் (கருணாநிதி விசயத்தில்)
திரையில் எழுதிக் கொடுத்த வசனத்தை பேசுபவர்கள் மக்களை நேரடியாக சந்திக்க முடியாது என்று சொல்லுபவர்களுக்கு தலையில் ஒரு குட்டுவைத்து போல் தமிழகம் முழுவதும் சுற்றி தானும் ஒரு தொகுதியில் போட்டியிட்டதில் விஜயகாந்தின் தைரியம் வெற்றிதான்.
பழமொழி : முயற்சி உடையார் இகழ்சி அடையார்
கூட்டணி ஆட்சி என்றதும் எகிறி குதித்தவர்களுக்கு கடிவாளமாக 48 சீட்டுகள் வாங்கி, திமுக சின்டை பிடித்துக் கொள்ள தயார் படுத்திக் கொண்டதில் காங்கிரஸ் வெற்றி.
பழமொழி : தும்மை (கயிறு) விட்டுவிட்டால் வாலை பிடிக்க முடியாது
போதும் உன் சகவாசம் என்று திராவிடக் கட்சிகள் தூக்கி எரிந்த நிலையில், 1000 விண்ணப்பங்களை பெற்றதே பாஜகவின் சாதனை தான். இந்த தேர்தல் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு பேர் என்று பாஜக ஓட்டுவங்கியின் கணக்கை சொல்லிவிடும் என்று நம்பிக்கையில் 222 தொகுதிகளில் டெபாசிட் இழக்கத் தயாரனதே பா.ஜவின் வெற்றிதான்
பழமொழி : முடியைக் கட்டி மலையை இழு, வந்தால் மலை போனால் முடி
5 கருத்துகள்:
மிக மிக நடுநிலையோடு எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் எழுதி இருக்கிறீர்கள்!!!! வாழ்த்துக்கள்!!!!
//மிக மிக நடுநிலையோடு எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் எழுதி//
காழ்புணர்வுடன் எழுதினால் விமர்சனங்களே எஞ்சும், எழுத்தும் ஒரு வட்டத்துக்குள் சுருங்கிவிடும் என்பதாக நினைக்கிறேன்
நல்ல பதிவு. உங்கள் "காலம்" என்ற வலைப்பூத்தலைப்பும் அதற்கான வாசகமும்கூட அருமை. தொடருங்கள்.
//நல்ல பதிவு. உங்கள் "காலம்" என்ற வலைப்பூத்தலைப்பும் அதற்கான வாசகமும்கூட அருமை. தொடருங்கள்.//
அருணகிரி அவர்களின் பாராட்டுகளுக்கு நன்றி
அருமை...
கருத்துரையிடுக