பின்பற்றுபவர்கள்

13 ஏப்ரல், 2011

இன்னையோட ஆட்டம் க்ளோஸ் !

எந்த விதத்திலும் ஒற்றுமை இல்லாத கட்சிகள் கூட்டணி சேர்ந்து இன்று தேர்தலை சந்திக்கின்றன.

தேர்தல் முடிவுக்கு சுமார் ஒருமாதம் இருப்பதால், சேர்ந்த வேலை முடிந்துவிட்டது அடுத்து லாப அரசியலை தக்கவைத்துக் கொள்வதில் முயற்சி செய்வோம் என்ற ரீதியில் தேர்தல் முடிவுக்கு முன்பே கூட்டணிகளுக்குள் குழப்பம் ஏற்படுத்தி கட்சிகள் வெளியேறும் என்று நினைக்கிறேன். தேர்தல் ஆணையத்தைப் பொறுத்த அளவில் வெற்றி பெற்ற வேட்பாளர் கூட்டணி ஆதரவால் வெற்றி பெற்றாரா என்கிற கணக்கெல்லாம் கிடையாது. எனவே தேர்தல் முடிவுக்கு முன்பே கூட்டணிகள் புட்டுக் கொண்டால் மறுதேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

திமுக கூட்டணியில் வெளியேறும் கட்சிகள்:

இந்த தேர்தலில் பலத்த அடிவாங்கப் போவது காங்கிரஸ் தான். காங்கிரஸ் தயவில்லாமல் அன்பு மணிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்க முடியாது என்பதால் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லாமல் வெறும் 120 இடங்களில் போட்டியிட்ட திமுகவுடன் இணைந்திருப்பதில் இராமதாஸின் பாமக பெறப் போவது எதுவும் இல்லை. பாமகவிற்கு சுமார் 15 - 17 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்கலாம். தேர்தல் முடிவுக்கு முன்பே திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறும் என்று எதிர்பார்க்கிறேன். ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பில் அடுத்து சிபிஐ எடுக்கும் நடவடிக்கைகளினால் காங்கிரஸ் மீது ஐயுறும் திமுக, காங்கிரடன் உறவு கசந்து காங்கிரசுடன் கூட்டணி முறிந்துவிட்டதாக அறிவிக்கும்.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சி.
தேர்தல் களத்தில் ஜெவுக்கு பெரும்பான்மை கிடைப்பது அரிது, சுமார் 20 இடங்கள் வரை வெல்லப் போகும் தேமுதிகவின் ஆதரவு ஆட்சி அமைக்கத் தேவைப்படும், கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லும் விஜயகாந்தின் தேமுதிகவை கூட்டணியில் வைத்திருப்பது அதிமுகவின் வளர்ச்சிக்கு பின்னடைவே. தேர்தல் முடிவிற்கு முன்பே அதிமுக தேமுதிகவை கழட்டிவிட்டு விட்டு மாநில மந்திரிப்பதவி கொடுப்பதாக ஆசைக்காட்டி பாமகவிடம் பேரம் பேசினாலும் வியப்படைய ஒன்றும் இல்லை. அதிமுக கூட்டணியில் முதலில் வெளியேறும் கட்சி தேமுதிக தான்.

*********

தமிழக வாக்களர்களிடையே தமிழக கட்சிகளுக்கு தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது, அதனால் தமிழக கட்சிகள் சட்டமன்ற உறுப்பினர்களை பங்கிட்டுக் கொள்ளும் அடிப்படையில் தான் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன, வாக்குப் பதிவோடு அவர்களின் நோக்கம் முடிந்துவிட்டது, அதன் பிறகு முடிவுகளுக்கு முன்பே அவரவர் பாதையில் அவரவர் செல்வர். தேர்தல் முடிவுக்கு 30 நாட்கள் இடைவெளி அதற்கு வாய்ப்பை உடனேயே ஏற்படுத்தித் தந்துள்ளது.

வாழ்க சனநாயகம்.

தனிக்கட்சி ஆட்சிக்கு வாய்ப்பு அமையாமல் மைனாரிட்டி ஆட்சியாகவே அடுத்தும் ஆட்சி அமையும் என்றே நினைக்கிறேன். அப்படி அமைந்தால் தான் நாட்டுக்கும் நல்லது.

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

அரசியலில் எதுவும் நடக்கலாம்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பொறுத்திருந்து பார்ப்போம்

எல் கே சொன்னது…

பாப்போம் கோவி அண்ணே. டைம் இருக்கு

Rathnavel Natarajan சொன்னது…

ஒரு மாசம் - cooling period.

SP.VR. SUBBIAH சொன்னது…

/////தனிக்கட்சி ஆட்சிக்கு வாய்ப்பு அமையாமல் மைனாரிட்டி ஆட்சியாகவே அடுத்தும் ஆட்சி அமையும் என்றே நினைக்கிறேன். அப்படி அமைந்தால் தான் நாட்டுக்கும் நல்லது./////

ஏனிந்த கோபம்? ஏனிந்த சாபம்?

SurveySan சொன்னது…

///தேர்தல் முடிவிற்கு முன்பே அதிமுக தேமுதிகவை கழட்டிவிட்டு விட்டு மாநில மந்திரிப்பதவி கொடுப்பதாக ஆசைக்காட்டி பாமகவிடம் பேரம் பேசினாலும் வியப்படைய ஒன்றும் இல்லை. அதிமுக கூட்டணியில் முதலில் வெளியேறும் கட்சி தேமுதிக தான்.////

நடந்தால் நன்மையே. கறுப்பு எம்ஜிஆர், வேலைக்கே ஆவ மாட்டாரு. அடுத்த தேர்தலுக்குள்ள அவரை மறக்கடிக்கரதுதான் நல்லது.

Muthu சொன்னது…

கோவி,

கூட்டணி மாறினா அப்புறம் நீங்க மாத்தி தட்டுனுமே? எவன் ஜெயிக்கிறானோ இல்லையோ..உங்க டங்குவாரை அறுக்கிறானுங்களே இவனுங்க ம்..)



யாரது? சர்வேசனா...போன தோ்தலில் விஷயகாந்துக்கு பால் காவடி எடுத்ததா ஞாபகம் )

எனக்கென்னமோ இந்த தோ்தலில் விஸயகாந்த் தனியா நின்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது...

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//தனிக்கட்சி ஆட்சிக்கு வாய்ப்பு அமையாமல் மைனாரிட்டி ஆட்சியாகவே அடுத்தும் ஆட்சி அமையும் என்றே நினைக்கிறேன். அப்படி அமைந்தால் தான் நாட்டுக்கும் நல்லது.//

அசுர பலம் பெற்றபோது நடந்த கூத்துகள் போதும். பலம் குறைந்து; பல கட்சி ஆட்சி வருவதே நன்று!

பூங்குழலி சொன்னது…

//தனிக்கட்சி ஆட்சிக்கு வாய்ப்பு அமையாமல் மைனாரிட்டி ஆட்சியாகவே அடுத்தும் ஆட்சி அமையும் என்றே நினைக்கிறேன். அப்படி அமைந்தால் தான் நாட்டுக்கும் நல்லது.//

இங்கே இந்த முறையும் ஆண்டது பெரும்பான்மை இல்லாத அரசே .அதனால் காங்கிரஸ்காரர்கள் சிலரும் பெரும் பணக்காரர்கள் ஆனது தான் மிச்சம் .மத்தியில் தொடர்ந்து கூட்டணி அரசு தான் நடக்கிறது ..அதனால் நமக்கு நன்மை நடந்ததா என்ன ?பெரும்பான்மை அரசு அமைந்தால் ஆட்சி நடத்துவதிலும் பிறரின் டாமினேஷன் அதிகம் இருக்கிறது .ஆட்சியை காப்பாற்றி கொள்ள அதிகமாக ததிங்கினத்தோம் போடா வேண்டியதிருக்கிறது .பெரும்பான்மை ஆட்சி அமைவது தான் நல்லது

MANI சொன்னது…

கூட்டணி ஆட்சிதான் நடக்கும், அது சரி யாருக்கு கூட்டணி ஆட்சி நடத்த சகிப்புத் தன்மை அதிகம் இருக்குன்னு நினைக்குறீங்க ஜெயாவுக்கா கருணாவுக்கா. அத்தனை பேரையும் அனுசரிச்சு அவங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைஞ்சு கொடுக்க கலைஞரால மட்டும் தான் முடியும்.

நேரம் இருந்தா இங்க வந்து படிங்க.

http://mani-mycollection.blogspot.com/2011/04/blog-post_14.html

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்