பின்பற்றுபவர்கள்

11 ஏப்ரல், 2011

திராவிடத் தாய் குஷ்பு மற்றும் திராவிட புலி வடிவேலு - முதல்வர் புகழாரம் !

நேற்றைய பிரச்சாரங்களை முடித்துக் கொண்ட வடிவேலு இரவு 10:30 வாக்கில் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். வடிவேலுவை கண்ட நெகிழ்ச்சியில் மிகவும் உயர்வாகப் பாராட்டினார்.

"வாய்யா வடிவேலு....விஜயகாந்துக்கு முன்பே நீ கட்சி ஆரம்பிச்சிருந்தா உன் கூட கூட்டணி வச்சிருந்தாலே திமுக பெரும்பான்மை பெற்றிருக்கும்.....இன்று முதல் உனக்கு 'திராவிட புலி' என்று பட்டம் சூட்டுகிறேன்" என்று மனம் திறந்து பாராட்டினாராம். இதை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்ட வடிவேலு, எனக்கு இவ்வளவு கூட்டம் கூடும் என்று தெரிந்தால் விஜயகாந்தை எதிர்த்து நின்றிருப்பேன், முதல்வர் ஐயாவும் எனக்க்கு 100 சீட்டு தந்திருப்பார், இம்சை அரசன் இரண்டாம் புலி கேசி என்பதைவிட திராவிடப் புலி பட்டம் தனக்கு பொருத்தமாக இருப்பதாகவும் திமுகவை கரையேற்றுவதில் தனது பங்கு பெருமை சேர்ப்பதாகவும் உள்ளது" என்று கூறினார்.

வடிவேலுவைத் தொடர்ந்து குஷ்புவும் கருணாநிதியைச் சந்தித்தார். "பெண்களின் கற்பு குறித்த சிந்தனையில் உன்னிடம் ஒரு பெண் பெரியாரையே பார்க்கிறேன், இன்று முதல் நீ நடிகை குஷ்பு அல்ல, திராவிடர்களின் இளையத் தாய்" என்று மனம் நெகிழ்ந்து பாராட்டினாராம். விஜயகாந்த், வடிவேலுவைப் போலவே தனக்கும் கூட்டம் கூடுவதால் முன்பே கட்சி துவங்கி இருந்தால் திமுகவிடம் 50 சீட்டுகள் வரையிலும் தன்னாலும் பெற்றிருக்க முடியும் என்று குஷ்பு செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

4 கருத்துகள்:

சென்னை பித்தன் சொன்னது…

நடந்தாலும் நடக்கும்!

குறும்பன் சொன்னது…

தாத்தா அவர்களை வாயார புகழ்ந்தார்.

கபிலன் சொன்னது…

கமெண்ட்டும் போது தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டக் கூடாது என்ற நாகரிகம் காரணமாக அமைதியாகச் செல்கிறேன்.. : )

R.Gopi சொன்னது…

ஹா...ஹா...ஹா...

தாத்தா இப்போ வடிவேலுவ மிஞ்சிட்டாரு காமெடியில...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்