பின்பற்றுபவர்கள்

21 ஏப்ரல், 2011

சாய்பாபா செத்துப் போவாரா ?

சாய்பாபா செத்துப் போய்விடுவாரொன்னு பக்தர்கள் பதட்டம் அடைந்துள்ளார்களாம். அவர் தான் அவதாரமாச்சே அவருக்கு ஏது மரணம் என்று இவர்கள் ஒருகால் நினைத்தால் இவ்வாறு பதட்டம் ஆகுமா ?

கவலைப்படாதீர்கள் ஏதோ ஒரு சிறுவன் நான் தான் சாய்பாபா என்று ஓரிரு ஆண்டுகளில் அறிவிக்கக் கூடும், சீரடி சாய்பாபா செத்துப் போன பிறகு தானே அது என்று அறிவித்துக் கொண்டவர் தான் தற்போது மரணத்துடன் போராடிவரும் சத்திய சாய்பாபா.

சாமியார்கள், மடாதிபதிகள், சாய்பாபாக்களும் சாவதில்லை, எப்படியோ அவதாரம் எடுத்துவிடுவார்கள்.

***********

மூப்பு, பிணி மரணம் இவையெல்லாம் சதைப் பிண்டமான உடம்பை உடைய எல்லோருக்கும் வரும் சாமியார்களோ, சாய்பாபாக்களோ விதி விலக்கு இல்லை, புத்தரே செத்துப்போனதாகத்தான் வரலாறு சொல்கின்றன. எந்த ஒரு பிரம்மச்சாரியும் தாய் தந்தை உடலுறவு இல்லாமல் பிறந்திருந்தால் அவர்கள் செத்துப் போகமாட்டார்கள், சாய்பாபா அப்படியாக ஒன்றும் பிறக்கவில்லை.

கடவுள் முகம் காட்டாதவரை இறைத்தூதர்களுக்கும், 'நான் கடவுள்' அவதாரங்களுக்கும் இவ்வுலகில் பஞ்சம் ஏற்படுவதே இல்லை.

17 கருத்துகள்:

சுப.தமிழினியன் சொன்னது…

//கவலைப்படாதீர்கள் ஏதோ ஒரு சிறுவன் நான் தான் சாய்பாபா என்று ஓரிரு ஆண்டுகளில் அறிவிக்கக் கூடும்,//

இப்போதே இப்படி ஒரு பேச்சு வரத்துவங்கிவ்விட்டது... பெண் அவதாரமாம்

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//கடவுள் முகம் காட்டாதவரை இறைத்தூதர்களுக்கும், 'நான் கடவுள்' அவதாரங்களுக்கும் இவ்வுலகில் பஞ்சம் ஏற்படுவதே இல்லை//

கடவுள் முகம் காட்ட மாட்டார் என்று அவர்களுக்கு மிக மிக மிக நன்றாகவே தெரியும். எனவே ஒன்று போனாலும் ஒன்று வந்துவிடும்.

Indian சொன்னது…

//கவலைப்படாதீர்கள் ஏதோ ஒரு சிறுவன் நான் தான் சாய்பாபா என்று ஓரிரு ஆண்டுகளில் அறிவிக்கக் கூடும், //

அதெல்லாம் ஏற்கனவே வந்தாச்சு. இங்க பார்க்கவும்.

என்ன, புட்டபார்த்தியிலதான் ஃப்ராஞ்சைஸ் கொடுக்க மாட்டேனுட்டாங்க. பின்ன தங்கள் வணிகத்துக்குப் போட்டின்னா ஒத்துக்குவாங்களா?

Indian சொன்னது…

இன்னோரு சாயிபாபா வழித்தோன்றல் சுவாமி விஸ்வானந்தா.

நிகழ்காலத்தில்... சொன்னது…

//எந்த ஒரு பிரம்மச்சாரியும் தாய் தந்தை உடலுறவு இல்லாமல் பிறந்திருந்தால் அவர்கள் செத்துப் போகமாட்டார்கள்//

நன்றி கோவியானந்தா..

அப்ப டெஸ்ட் டியூப் பேபியா பிறந்தவங்க பிரம்மச்சாரியா இருந்தாங்கன்னா/வாழ்ந்தாங்கன்னா சாகவே மாட்டாங்க...

இப்பத்தான் நிம்மதியா இருக்கு...

ராவணன் சொன்னது…

நீங்கள் சாய்பாபா மடத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் உள்ளீர்கள்.

அடுத்த சாய்பாபாவின் அவதாரம் மைசூரில். அவரது படத்துடன் பல பொருட்கள் புட்டபர்த்தியில் கிடைக்கின்றன.

புட்டபர்த்தி ஆசிரமம் மைசூருக்கு மாறுகின்றது.
எந்த சாய்பாபா பக்தரிடமும் கேட்டு இதை உறுதிசெய்யலாம்.

நியோ(அ.முத்து பிரகாஷ்) சொன்னது…

//எந்த ஒரு பிரம்மச்சாரியும் தாய் தந்தை உடலுறவு இல்லாமல் பிறந்திருந்தால் அவர்கள் செத்துப் போகமாட்டார்கள், சாய்பாபா அப்படியாக ஒன்றும் பிறக்கவில்லை.//
ஈஸ்டர் காலத்தில் சொல்லப்பட்டிருப்பதால் உள்ளர்த்தங்கள் ஏதும் இருக்கின்றதா தோழர்! ;-)

சித்தூர்.எஸ்.முருகேசன் சொன்னது…

இல்லிங்கண்ணா.. பிரேம் சாயிங்கற பேர்ல ஆணா பிறப்பேன்னு சொல்லிவச்சுட்டாராம்.

டைம் ஆஃப் பர்த்,ப்ளேஸ் ஆஃப் பர்த் எல்லாம் கூட சொல்லி கீறாராம்.

கேப்பையில நெய் வடியுதுன்னா கேட்கிறவுக கே.பு ங்களா?

இவிக இம்சை தாங்க முடியலிடா சாமி..

DrPKandaswamyPhD சொன்னது…

சாய்பாபா இறந்து விட்டால் நானும் இறந்துவிடுவேன்!

உடனே அல்ல. என்னுடைய நாள் வரும்போது!?

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//கவலைப்படாதீர்கள் ஏதோ ஒரு சிறுவன் நான் தான் சாய்பாபா என்று ஓரிரு ஆண்டுகளில் அறிவிக்கக் கூடும்//

நம்பிக்கைதான் வாழ்க்கை

துளசி கோபால் சொன்னது…

அடுத்தது பெண் அவதாரமா?

பேஷ் பேஷ்...... எனக்கு ஒரு சான்ஸ் வர்றமாதிரி இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்.

சாமியே பதிவராக ..........பதிவரே சாமியாக......

ஆஹா.... நினைக்கும்போதே
'ஜிவ்'ன்னு இருக்கு:-))))

எல்லாம் பதிவர்கள் செஞ்ச புண்ணீயம்!!!!!!!!!!!!!!!

S A P Sope சொன்னது…

வாரத்துக்கு ரெண்டு பேர் நாந்தான் இறைதூதர்னு சொல்ரதால ...அவதாரங்கள் மாதிரி இது தினசரி ப்ரெச்சனைதான்........நல்லா முடிவு பண்ணிட்டு எழுதிறீங்கையா

Bala சொன்னது…

Hello Sir,

i follow tamilish regularly. At times i have felt some of the postings posted by some bloggers are very mcuch targeted towards certain community/caste. These postings are from those bloggers who claim to be very neutral. This is one such posting. Please dont think i am a devotee of Sai baba. But these posting reveal that you donot have respect for a human life and also respect for the feelings of millions of followers of Sai baba. Which i think is very creul particularly the title and the title expresses your hatred towards sai baba. i agree with you on the content which is very common in our country.

I know you have the rights to not to approve my comments but thought register/share my thoughts on the title to you.

May be you can write something about Kesab who deserves to die and still enoying a vip treatment in our jail or so many criminals including the our dirty politicians!

Thanks
Bala,SG

Bala சொன்னது…

Hello Sir,

i follow tamilish regularly. Please dont think i am a devotee of Sai baba to post this comment. But your posting reveal that you donot have respect for a human life and also respect for the feelings of millions of followers of Sai baba. Which i think is very creul particularly the title. I accpet that your content is common thing in india.

Thanks
Bala

SURESH சொன்னது…

சாய்பாபா சாவுராரோ இல்லையோ அவர வச்சி நீங்க பேமஸ் ஆகிடீவீங்க போல இருக்கே.ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் மதம்,பகுத்தறிவு என்று பேசுவோர் எல்லாம் இந்து மதம் மட்டும் பற்றித்தான் பேசுகிறார்கள்(பகுத்தறிவு பற்றி) ஏனைய மதங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மூட நம்பிக்கைகள் பற்றி பேசுவதில்லை.காரணம் என்னவோ? பயமா?

Jayadev Das சொன்னது…

ஒரு வேலை அந்த ஆள் மண்டையைப் போட்டாதும் பிணத்தை அப்படியே அமுக்கி ஒளித்து வைத்து விட்டு, வெளியில் அவர் திடீர்ன்னு சொர்க்க விமானத்துல தன்னுடைய லோகத்துக்கு போயிட்டார்ன்னு புருடா விடுவானுன்களோ!!

Jayadev Das சொன்னது…

@Indian

நீங்க சொன்ன போஸ்டைப் பார்த்தேன், வேறொன்னும் வேண்டாம் தலையில புசு புசுன்னு மயிறு இருந்தா போதும், நீங்கதான் அடுத்த சாய்பாபா, ஹா.ஹா.ஹா...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்