பின்பற்றுபவர்கள்

25 ஏப்ரல், 2011

போலி சாமியார்களின் முன்மாதிரி - சத்திய சாய் பாபா !

முன்குறிப்பு : ஒருவர் இறந்த பிறகு பழிக்கலாமா ? என்ற கேள்விக்கு ஆன விடை, பாராட்டுதல்களைப் போலவே எதிர்ப்புகளும் சமகாலத்தில் பதிய வழிசெய்வது, கருத்துரிமையை மதித்தல் என்கிற புரிந்துணர்வு இருந்தால் இந்தக் கேள்வி பொருளற்றது.

தோற்றம் : அண்மையில் கல்லீரல், மூச்சடைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பிரேமானந்தம் என்கிற சாமியார் அவதாரத்தின் (?) சாமியார் ஆசைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் தான் சத்திய சாய்பாபா. மக்களின் மனதில் உடனடியாகப் பதியவைக்க போதனைகளை விட உருவமே முதன்மையானது என்ற அடிப்படையில் தலைக்கு மேல் அடர்ந்த காட்டை வளர்த்து வைத்திருந்தவர் சத்திய சாய்பாபா. இது சாமி, ஒண்ணும் செய்யாது, கும்பிட்டுக் கொள் என்று சொல்லாவிடில் குழந்தைகள் பார்த்தால் பயந்துவிடும் தோற்றம் தான். ஒரு சாமியாரின் ஆன்மிக வியாபாரத்தில் தோற்றமே விளம்பரத்தின் ப்ளேவர் என்பதை நிருபனம் செய்து காட்டியவர் சத்திய சாய்பாபா. விவேகானந்தர், இராமகிருஷ்ணன் சீரடி சாய்பாபா மற்றும் நம்ம பக்கத்து வள்ளலார் உள்ளிட்டோர் மாறுபட்ட ஒரு தோற்றத்தை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதன் மூலம் அவர்களது தோற்றங்களும் மனதில் நிற்கிறது. ஆனால் சத்திய சாய்பாபாவை நினைக்க அவரது அடர்ந்த தலையே போதுமானதாகும். இதே யுத்தியைத்தான் பிரேமானந்தம் பயன்படுத்தினார். அதே போன்று முடி வளர்ந்தாலும் கூந்தல் போல தொங்குவதால், பெண் போல தோற்றம் தருவதால் அதை அப்படியே தலைப்பாகையில் மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தம். ஆக சாமியார் தொழிலுக்கு தலைமுடியோ மூலதனம் என்று செயலில்காட்டி வென்றவர், முன்னோடி சத்திய சாய்பாபாதான்.

ஆன்மிக அதிசயம் என்கிற பெயரிலும், அற்புதம் என்ற பெயரிலும் படத்தில் இருந்து விபூதி கொட்டுவது, கனவில் ஊடுறுவது, மோதிரம் வரவழைப்பது, லிங்கம் (வாந்தி எடுத்து) வரவழைப்பது உள்ளிட்ட மாய விளையாட்டுகள் (மேஜிக்) இதை பிரேமானந்தம் உள்ளிட்ட பல சாமியார்கள் பின்பற்றினார்கள், கடவுளால் வெறும் கையினால் முழம் போட முடியும் என்கிற நம்பிக்கை உடைய பக்தர்களை இந்த வித்தைகள் உடனடியாகக் கவர்ந்தது, இவர்களும் கடவுள் அல்லது கடவுள் அவதாரம் என்று அவர்களின் பக்தர்கள் நம்புகிறார்கள், படத்திலிருந்து விபூதி கொட்டுவது, படத்தில் இருக்கும் மாலையை வளரச் செய்வது போன்ற வித்தைகளை கொண்ட மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரும் அவரது சக்தி வழிபாட்டு மன்றங்களும் வளர்ந்திருப்பதும் கூட இத்தகைய வித்தைகளினாலே. மாலை வளரும் பின்புலன் என்ன வென்று தெரியாது, ஆனால் முதனாள் மாலை மறுநாள் ஒரு அடியாவது நீளமாக இருக்கும், அதாவது கொஞ்சம் அடர்த்தியாகக் கட்டப்பட்டபட்டு படத்தில் போடப்பட்ட மாலை இழுத்துவிட்டது போல் கொஞ்சம் நீளம் கூடி இருக்கும் பூக்களின் எண்ணிக்கை கூடி இருக்காது, இதை நான் கண்ணால் பார்த்துள்ளேன். நூலை அல்லது மாலை கட்டப்பயன்படுத்தும் நாரை குறிப்பிட்ட இரசாயணத்தில் நினைத்து எடுத்து மாலை கட்டினால் நீளும் தன்மை ஏற்படுமா ? அல்லது குறிப்பிட்ட நீளமுள்ள நாரை இராசயணத்தில் நனைப்பதன் மூலம் சுறுங்கி அதன் பிறகு மாலை கட்ட மறுநாள் முதல் நார் தன் ஒரிஜினல் நீளத்தை நோக்கி தளர்ந்து நீளுமா என்பது தெரியவில்லை, ஆனால் இவற்றில் இருப்பது வெறும் இராசயண மாற்றம் தான். இவை பயபக்தியுடன் கடவுளின் அற்புதமாக நம்பப்படுகிறது. இவர்களில் எந்த சாமியாரும் ஏழை பக்தர்களுக்கு தங்க மோதிரம், தங்கை சங்கிலி வரவழைத்துக் கொடுத்தது இல்லை, அவர்களுக்கு வெறும் கையால் கொட்டப்படும் திருநீறு மட்டுமே கிடைக்கும். கோவிலில் அருச்சனை தட்டில் நூறு ரூபாய் போட்டால் உபரியாகக் கொடுக்கப்படும் பிரசாதம் போல ஆசிரமங்களுக்கு வரும்படி தருபவர்களுக்கும், அரசியல் ரீதியில் அரசு ஆதரவு தருபவர்களுக்கு மட்டுமே தங்க மோதிரம், தங்க செயின் வழங்கப்படும். ஒருகிராம் தங்கத்தை மணலில் இருந்து பிரிக்க எத்தனை டன் மணல் தேவைபடுகிறது என்பது இந்த சாமியார்களுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை.

செக்ஸ் சர்சை : சத்திய சாய்பாபா சிறுவர்களுடன் செக்ஸ் சில்மிசம் என்கிற சர்சையில் பலகாலம் அடிப்பட்டு வருகிறார், இன்றைய காலத்தைப் போலவே அவர் 50 வயதுவரை இருந்த காலத்தில் உயர் தொழில் நுட்பம் இருந்திருந்தால் நித்தியைப் போல் ஏதேனும் ஒரு விடியோவில் சிக்கி இருக்கக் கூடும், ஆதாரம் இல்லாமல் எதையும் நம்ப முடியாது என்று சொல்லிக் கொள்வோரை விட சாமியார்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு உணர்ச்சி இருக்காதா ? விருப்பதுடன் கூடிய பாலியல் தேவை தவறில்லையே என்று தனிமனித உரிமை பேசுவோர்கள் நிறைய உண்டு. ஆனால் பாபாவின் மீது பாலியல் குற்றச்சாட்டுவைத்தவர்கள் பலகாலம் அவருடன் ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்கள் என்பதால் அவர்களது குற்றச் சாட்டை புறம்தள்ளிவிட முடியாது. மாட்டிக் கொள்ளாதவன், ஆதரம் வைக்காதவன் குற்றவாளியே இல்லை என்கிற நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் வேண்டுமானால் பாபாவின் மீதான பாலியல் குற்றச் சாட்டுகளுக்கு ஆதரமில்லை என்று கூறலாம், ஆனால் அவ்வாறு குற்றம் சுமத்துபவர்களை இவர்கள் மானநஷ்ட வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு இழுக்காதது, இவர்களின் கள்ள மவுனம் பொருள் பொதிந்தது என்றும் கொள்ள வேண்டி இருக்கிறது. சத்தியசாய் பாபாவைப் போலவே செக்ஸ் சர்சைகளில் அடிபட்டு தண்டனை பெற்றவர் பிரேமானந்தம், தொடர்ந்து அடிபட்டாலும் இன்னும் தண்டனை பெறாதவர்கள் நித்தி மற்றும் கல்கி, காஞ்சி பெரியவா சாமியார்கள்.

நானே கடவுள் : சத்தியசாய், பிரேமனந்தம், நித்தியானந்தம், கல்கி மற்றும் பங்காரு - இவர்கள் அனைவருமே தானே கடவுள் மற்றும் அவதாரம் என்று கூறிக் கொள்பவர்கள், இவர்களின் மடங்களில், மன்றங்களில் இவர்களது படங்களே முக்கியமாக வணங்கப்படும், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இவர்களில் ஒருவர் அவதாரம் என்றால் மற்றவர்களெல்லாம் போலி. ஏனென்றால் இவர்களெல்லாம் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள், இவர்களுக்குள் பொதுவானக் கொள்கை என்று எதுவுமே கிடையாது. மக்களின் அடைப்படை நம்பிக்கையான பக்தியையும் பயத்தையும் மூலதனமாக்கிக் கொண்டவர்கள் என்பது தவிர்த்து வேறெந்த ஒற்றுமையும் கிடையாது, ஒரு சாய் பக்தரிடம் சென்று பங்காரு அடிகளாரும் அவதாரம் தானே என்று கேளுங்கள், ஒரு பங்காரு அடிகளார் பக்தரிடம் சென்று நிதியானந்தம் கடவுளா என்று கேளுங்கள், எவருமே ஒப்புக்கு கூட ஒப்புக் கொள்ளமாட்டார்கள். இந்த அவதாரங்களின் (அவ)லட்சணம் அவரவர் பக்தர் என்ற அளவில் தான், ஆனாலும் கட்சிக்காரத் தொண்டன் தன் தலைவனை உலகமாகத் தலைவன் என்று உயர்த்திப் பாடுவது போலவே, மதவாதிகள் எங்களது கடவுளும் இறைத்தூதரும் தான் டாப்பு மற்றதெல்லாம் டூப்பு என்று சொல்வது போன்று உலகுக்கான ஒரே ஒளிவிளக்கு எங்கள் சாமி(யார்) தான் என்று கூவுவார்கள்.

ஒற்றுமை : பணக்காரர்களில் இருவகை தான் உண்டு, ஒன்று பரம்பரை பணக்காரன், மற்றொன்று திடிர் பணக்காரன், இராசாவைப் போன்ற திடிர் பணக்காரர்களில் பெரும்பாலோர் அரசை, மக்களை பல்வேறு வகையில் ஏமாற்றி அந்த நிலையை அடைந்தவர்கள், அவர்களில் பலர் இல்லாத மனசாட்சி உறுத்துவதாக நினைத்தும், மன அமைதிக்காவும் இத்தகைய சாமியார்களை நாட, சாமியார்களுக்கும் பணக்காரர்களுக்கும் நெருக்கம் என்பது அடிப்படை தேவை என்ற அடிப்படையில் இயல்பாகவே ஏற்பட சாமியார்களின் சொத்துக்கள் இமயமலையை ஏளனம் செய்யத் துவங்குகின்றன. இந்த சாமியார்கள் உண்மையிலேயே கடவுளின் அவதாரம் என்றால் முறைகேடாக சம்பாதிப்பவர் எவரும் எங்களுக்கு நன்கொடை அளிக்கத் தேவை இல்லை என்று வெளிப்படையாக அறிவிப்பார்கள், ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெற்றதே இல்லை, கொள்ளைச் சொத்தில் எனது பங்கு என்பதாகத்தான் அவர்கள் வளர்ந்துள்ளனர். பணக்காரர்களை கொள்ளையடிப்பதில் சாமியார்கள் அனைவருமே முகமூடி இல்லாத திருடர்கள் போல் தான் செயல்படுகின்றனர். இதுவே இவர்களது தொழில் ஒற்றுமை.

தாதா : தாதா என்றால் வள்ளல், தற்காலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து நாலு பேருக்கு வேலு நாயக்கர் பாணியில் நல்லது செய்தால் அவர்கள் தாதா எனப்படுகின்றனர். பாபா உள்ளிட்ட சாமியார்களும் ஒருவகையில் தாதாக்களே, இவர்களிடமும் ஆள் பலம், பண பலம் எல்லாமும் உண்டு, அதே போன்று பணக்காரர்கள் கொடுக்கும் பங்கு பணத்தில் பல்வேறு உதவிகள் செய்கின்றனர். சென்னைக்கு தண்ணீர் கொடுக்க பாபா 200 கோடி தந்தார் என்று முதல்வர் புகழாரம் சூட்டி இருக்கிறார். 200 கோடியும் எந்த எந்த பாவங்களை குறைக்க வேண்டும் என்ற வேண்டுதலில் இவர்களிடத்தில் வந்ததோ. யார் யாரோ செய்த பாவத்தின் பரிகாரமாக சென்னைக்குத் தண்ணீர். 200 கோடி கொடுக்க மனது வேண்டுமே ? பில்லியன்களில் சொத்து மதிப்பு, 200 கோடி அவர்களுக்கு பெரிதே இல்லை. பாகிஸ்தான் மக்களுக்கு ரூ 500 கோடி சமூக நலன் நிதி என்று தாவூத் இப்ராஹிம் அறிவித்தால், பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுப்பாமல் பாகிஸ்தான் தாவூத் இப்ராஜிமை கொண்டாடும் என்று தான் நினைக்கிறேன்.

பொது புத்தி : சாய் பாபா யாராக இருந்தால் என்ன ? மெஜிக் செய்தால் என்ன ? மக்களுக்கு நல்லது செய்கிறார், எனக்கு பிடிச்சிருக்கு.... நாலு பேருக்கு நல்லது செய்தால் எதுவுமே தப்பில்லையாம். ஒருவர் எந்த வழியில் வேண்டுமானாலும், பணம், புகழ் ஈட்டலாம் ஆனால் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால் அவரது பின்புலன் பேசப்படாது, மக்கள் கொண்டாடுவார்கள். இராசபக்சே கூட சிங்களர்களுக்கு ஹிரோதான், மாவீரன் தான். சிங்களருக்கு நல்லது செய்கிறாரே.

பின்குறிப்பு : எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்

19 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

ஆமாம்.....எழுத்துப்பிழைகள் நிறையத்தான் இருக்கு. போகட்டும்...மன்னிச்சுட்டேன்:-)

சாமியார்களை ஓரளவு நம்பலாம். ஆனால் நானே சாமின்னு சொல்லிக்கறவங்க யாராக இருந்தாலும் என்னால் நம்ப முடியாதுங்க. ஏற்கெனவே நான் எழுதி இருந்தபடி....அந்த நிஜசாமியே மனுசனா எதிரில் வந்து பேசினால் நான் நம்பவே மாட்டேன்.

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பதே கடவுளின் விளக்கம்.

ஆமாம்..... தமிழ்நாட்டு அரசுக்கு 200 கோடி என்பது பெரிய தொகையா? 'தண்ணி'வித்து வர்ற லாபத்துலே குடிதண்ணி வரவழைக்க இந்த 200 கோடியை அரசு செலவு செஞ்சுருக்க முடியாதா?

இல்லே ஓசியில் யாராவது செய்யட்டுமேன்னு பெருந்தன்மையா விட்டுட்டாங்களா?

என்னவோ போங்க.

வயசான மனிதர் இறந்துட்டார். அடக்கம் நல்லபடி முடியட்டும்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>> ஆனால் அவ்வாறு குற்றம் சுமத்துபவர்களை இவர்கள் மானநஷ்ட வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு இழுக்காதது, இவர்களின் கள்ள மவுனம் பொருள் பொதிந்தது என்றும் கொள்ள வேண்டி இருக்கிறது.

சரியா சொன்னீங்க சார்

சீனு சொன்னது…

ஒருவர் இறந்த பிறகு பழிக்கலாமா? கண்டிப்பாக பழிக்கலாம். ஆனால், இறந்த உடனே (அதற்காக காத்திருந்து) பழிப்பது என்பது தான் நெருடுகிறது.

எஸ். கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

வேறு டாபிக்கே கிடைக்கவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. :-)))))))

இதை சொல்லும்போது நான் சாயி பக்தனோ, அல்லது அவர் நிகழ்த்தியதாக சொல்லப்படும் அற்புதங்களை நம்புகிறவனோ இல்லை.

ஆனால், ஏமாற்று சாமியார்களுக்கு புட்டபர்த்தி சாயிபாபா தான் முன்னுதாரணம் என்று சொல்வது சரியில்லை.உள்ளூரிலேயே முந்தைய காலங்களில் இப்படிப் பலர் இருந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இங்கே கிறித்தவம் வேகமாகத் தழைப்பதற்கு, அது கூட ஒரு லாபகரமான வியாபாரமாக இருப்பதுதான்! வேண்டுமானால், நாளுக்கு நூறு புதிது புதிதாக முளைத்துவருகிற ஜெபக் கூட்டங்கள், ஊழியங்களைப் பற்றி விசாரித்துப் பாருங்கள்! சாயிபாபாவைத் தூக்கி சாப்பிடுகிற 'காருண்யமானவர்கள்; கண் முன்னாலேயே இருக்கிறார்கள்.

ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை இப்படிப் புரட்டுகளும் இருந்துகொண்டுதான் இருக்கும்! இங்கே ஒருத்தர் கடைசி ஏழை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்று சொல்லவில்லையா, அதுபோலத்தான்!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால், ஏமாற்று சாமியார்களுக்கு புட்டபர்த்தி சாயிபாபா தான் முன்னுதாரணம் என்று சொல்வது சரியில்லை.//

இந்த புகழ் கூட அவருக்கு கிடைக்கக் கூடாதா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆமாம்..... தமிழ்நாட்டு அரசுக்கு 200 கோடி என்பது பெரிய தொகையா? 'தண்ணி'வித்து வர்ற லாபத்துலே குடிதண்ணி வரவழைக்க இந்த 200 கோடியை அரசு செலவு செஞ்சுருக்க முடியாதா? //

கலாநிதி க்கு டீ சாப்பிடுற பணம்

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கண்டிப்பாக பழிக்கலாம். ஆனால், இறந்த உடனே//

சீனு அப்படி அல்ல,

எல்லோரும் பேசும் போது தான் அது குறித்துப் பேசுதல் நலம் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//சரியா சொன்னீங்க சார்//

சிபிசெ, நன்றி !

SV Dheva சொன்னது…

மற்ற சாமியார்கள் யாரும் யாருடிய வாரிசாக அல்லது அடுத்த பிறவியாக அறிவித்தது இல்லை. இவரே முதலில் அறிவித்து கொண்டார். மேலும், அடுத்த பிறவி எங்கே என்பதையும் சொல்லி இருக்கிறார்.

perumalrealty சொன்னது…

உங்களுடைய மனக்குப்பைகளுக்கு அளவே இல்லையா? அதுதான் இந்த தளமா? நல்லது தொடரட்டும் உங்கள் பணி...

Dharan சொன்னது…

உருப்படியான ஒரு பதிவு.

Dharan சொன்னது…

http://www.youtube.com/watch?v=oNVJyycAZYw&feature=related

வலிபோக்கன் சொன்னது…

100 பேர் பணத்தை பறித்து நாலு பேருக்கு
உதவுறது.ஆசாமிகளின் பார்வையில்
தப்பேயில்லைங்கோ?

சி.கருணாகரசு சொன்னது…

//சாமியார்கள் அனைவருமே முகமூடி இல்லாத திருடர்கள் போல் தான் செயல்படுகின்றனர்//

சாமியார் என்பதே கொள்ளையடிப்பதற்கான “முகமூடி”த்தானே!

எம்.கே.குமார் சொன்னது…

நல்ல அலசல்.

இந்த கூவத்தைச் சுத்தம் செஞ்சுட்டுப் போயிருந்தாருன்னா சந்தோசப்பட்டுருப்பேன்.

இனிமே எங்க பண்ணப்போறானுக? சொத்து சண்டை கூடிய சீக்கிரம் ஆரம்பிச்சுரும்ன்னு நினைக்கிறேன்.

எம்.கே.குமார்

சித்தூர்.எஸ்.முருகேசன் சொன்னது…

கண்ணன் சார்,
ப்ரசாந்தி நிலயத்துல அன்னிய நாட்டவரின் கொலைகள்,தற்கொலைகள் ஏன் பாபா மேலயே கொலை முயற்சி நடந்ததே அதையெல்லாம் விட்டுட்டாப்ல இருக்கு.

paddhusjottings சொன்னது…

இவர்கள் அறியாமல் செய்யும் தவறுக்கு இவர்களை மன்னியுந்கள் என்ற வாக்குதான் எனக்கு நினைவுக்கு வருகிறது உங்களது பதிவைப் பார்த்தவுடன்.
கடவுள் மனித உருவில்தான் வருவார் என்று சொவார்கல்‍ பாபா ட்ய்ஹன்னைக் கடவுள் என்று சொன்னார்‍ அது உண்மையா , பொய்யா என்ற ஆராய்ச்சி தேவையில்லை‍ ஆனால் அவர் தனது சித்து வியாட்டுக்களால் எந்தச் செய்வினையும் செய்யவில்லை‍ யாரையும் கெடுக்கவில்லை‍ இன்று அவர்களது தொண்டர்களையே நம் நாட்டுக்கான ஒரு ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கொன்டுவந்திருக்கிறார். அன்பே கடவுள் என்ரு போத்தித்திருக்கிறார். எல்லாமதமமும் ஒன்றே என்று சர்மத நல்லிணக்கத்தை ஏர்படுத்தியிருகீறார்‍ பல அரக்கட்டலைகல், இலவச மருத்துவம்னைகள், கல்விச்சாலைகள் ஆகியவற்றோடு வரண்டு கிடந்த பலபாலைகளை சோலைவனம் ஆக்கியிருக்கிறார்.
அன்பே கடவுள் என்பது உண்மையானால் ஏழைகளின் சிரீபில் இறைவனைக் காணலாம் என்பது மெய்யென்றால் நிச்சயம் பாபாவும் க்டவுளாகப் போற்றத் தக்கவர்தான்.அவரது பணிகளைப் போற்ற வேண்டம்‍ சேற்றைவாரிதூற்ற வேண்டாம் தயவு செய்து

டி.எஸ்.பத்மநாபன்

கோவி.கண்ணன் சொன்னது…

கடவுளே.....! இந்த சாய்பாபா பக்தர்களிடம் இருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்

கோவி.கண்ணன் சொன்னது…

//அவரது பணிகளைப் போற்ற வேண்டம்‍ சேற்றைவாரிதூற்ற வேண்டாம் தயவு செய்து

டி.எஸ்.பத்மநாபன்//

எத்தனை ஏழைகளுக்கு தங்கச் சங்கிலியும், மோதிரமும் எடுத்துத்தந்தார் என்று சொல்லவும். 2 லட்சம் கோடி சொத்துக்களில் ஏழைகளுக்காகக் கிள்ளிக் கொடுத்ததை பகவானின் செயல் என்று போற்ற வேண்டுமா ?

போலி சாமியார்களுக்கும் மட்டுமல்ல, கார்பரேட் சாமியார்களுக்கும் இந்த சாய்பாபா தான் முன்மாதிரி, இவரு உண்மையான பகவான் என்றால் நித்தியாந்தன் கூட உண்மையான பகவான் தான். அவனும் ஏழைகளை சொஸ்தப்படுத்தினானாம் சாரு கூட எழுதி பின் ... வாங்கினார்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்