பின்பற்றுபவர்கள்

7 ஏப்ரல், 2011

தேர்தல் ஆணையம் காங் ஆசியுடன் ?

கருணாநிதி தேர்தல் பொதுக் கூட்டத்திற்கு கூட்டம் தேர்தல் ஆணையத்தைப் பற்றி தாறுமாறாக விமர்சனம் செய்கிறார். கூடவே ஸ்டாலின் உள்ளிட்ட உடன்பிறப்புகள் தேர்தல் ஆணையத்தை காட்டமாக விமர்சனம் செய்கிறார்கள், போதக் குறைக்கு தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடுப்பதாக அஞ்சாநெஞ்சன் வேறு ஆவேசப்பட்டுள்ளார்.

ஆனால் கூட்டணியில் இணைந்த 63 நாயன்மார்களோ, அவர்களுடைய தலைவர்களோ அதாவது காங்கிரசு இது பற்றி வாய்த்திறக்க்கக் காணும். தேர்தல் ஆணையமோ, அமலாக்கத்துறையோ தனியானது என்றாலும் அவர்களுடைய செயல்பாடுகள் மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல் இருக்க முடியாது, ஏனெனில் இதன் உயர் அலுவலர்களை தேர்ந்தெடுத்து அல்லது பரிந்துரைப்பவர்கள் மத்திய அரசை ஆளும் கட்சியினரே. அண்மையில் நீராராடியவை விசாரணை செய்த சிபிஐ நீராராடியாவின் காங்கிரசு பிரமுகர்கள் தொடர்பு குறித்து எதுவும் விசாரணை நடத்தியது போன்றா தகவல் வெளியாகவில்லை,. சிபிஐ தன்னிச்சையானது என்றால் காங்கிரஸ் மற்றும் நீராராடியாவின் தொடர்புகள் அம்பலப்பட்டிருக்கும். தேர்தல் ஆணையமும் தன்னிச்சையானது என்று சொல்லப்பட்டாலும் மத்தியில் ஆளும் கட்சியிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது.

தமிழகத்தின் 234 தொகுதிகளுமே பதட்டமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது தமிழகத்தை ஆளும் கட்சிக்கு மானக்கேடானது, அதாவது ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்திருந்தால் மட்டுமே அவ்வாறு அறிவிக்க முடியும். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு அந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் மறைமுகமாகச் சுட்டி இருப்பது வரவேற்கத்தக்கது தான் என்றாலும் எந்தத் தேர்தலிலும் இல்லாத கெடுபிடி மலைப்பாகவே இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் நெருக்கடியில் காங்கிரசும் பாதிக்கப்படுகிறதே என்று கேட்பவர்களிடம், 'என்னமோ திட்டம் இருக்கு' என்கிறார்களாம் தேர்தல் அதிகாரிகள். காங்கிரசுக்கு என்ன பலன் ? அவர்களால் கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்து கூட்டணி ஆட்சி ஏற்படுத்துவிடமுடியுமே ? அதை காங்கிரஸ் விரும்பவில்லை, மேலும் சட்டமன்ற தேர்தலுடன் திமுகவை தலைமுழுகவும் காங்கிரஸ் தயார் ஆகிவருகிறதாம் (ஜூவியில் படித்த ஒருசில வரிகள்). 'மாற்றம் ஏற்படுத்த உங்களால் முடியும்' என்கிற வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளை அச்சிட்ட தேர்தல் ஆணையம், 'மாற்றம்' என்ற சொல்லை கடுமையாக திமுகவினர் எதிர்க்க பின்னர் அந்தப் பதாகைகளை பயன்படுத்தாமல் கைவிட்டதாம் தேர்தல் ஆணையம்.

தங்கப்பாலு, இளங்கோவன், பசி உள்ளிட்ட காங்கிரசின் நாடறிந்த முகங்கள் திமுகவுடன் கூட்டணியில் இடம்பெற்றும் தேர்தல் ஆணையத்தின் கெடுப்பிடிகள் தெரிந்திருந்தும், கருணாநிதியைப் போல் புலம்பாமல் இருக்க பின்னனி எதுவும் இல்லை என்பதை நம்பவும் முடியவில்லை. இது எதுவும் தெரியாமல் அல்லது பிடிபடாமல் வடிவேலுவை வைத்து விஜயகாந்தை தரக்குறைவாகப் பேசினால் தேர்தலில் 'வென்று'விடலாம் என்று நினைக்கின்றனர் திமுகவினர். ஸ்டாலினுக்கு ஒருநிமிடம் ஒதுக்கியுள்ள சன் டிவி வடிவேலுக்கு ஐந்து நிமிடமும், குஷ்புவுக்கு மூன்று நிமிடமும் ஒதுக்கியுள்ளது, தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பிறகு மூத்திரசந்துகளே இருக்காது என்பது போல் உண்மையான தீப்பொறி திருமுகமாக வடிவேலு பொளந்து கட்டுகிறார். பணப்பட்டுவாடாவில் இவ்வளவு கெடுபிடி செய்யும் தேர்தல் ஆணையம் கள்ள ஓட்டை கண்டுகொள்ளாமல் விடுவார்களா என்பது ஐயத்துக்குரியது.

13 கருத்துகள்:

பிரியமுடன் பிரபு சொன்னது…

+1

ராஜேஷ், திருச்சி சொன்னது…

//தமிழகத்தின் 234 தொகுதிகளுமே பதட்டமானவை //

தேர்தல் ஆணையம் வெளியிட்ட குறிப்பில் - அனைத்தும் பதட்டமானவை (sensitive ) என்று சொல்லவில்லை , critical (முக்கியத்துவம் வாய்ந்தவை) என்று தான் சொன்னோம் என்று இரு வாரங்களுக்கு முன்னரே தெரிவித்தது .. கோவியாருக்கு அம்மா பாசம் கண்ணை மறைப்பதால் இது தெரியவில்லை போலும்

கோவி.கண்ணன் சொன்னது…

//அனைத்தும் பதட்டமானவை (sensitive ) என்று சொல்லவில்லை , critical (முக்கியத்துவம் வாய்ந்தவை) என்று தான் சொன்னோம் என்று இரு வாரங்களுக்கு முன்னரே தெரிவித்தது //

மண்ணு ஒட்டலையா ? அவ்வ்

234 தொகுதிகளுக்கும்
துணை இராணுவம் சாரை சாரையாக வந்து இறங்கி இருக்கு சார். இதுவரை இது போல் தேர்தல் நடந்ததே இல்லை

ராஜேஷ், திருச்சி சொன்னது…

மண்ணு இல்லங்க கோவி.. அது ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் தேர்தல் அதிகாரி பிரவின் சொன்னது.. சோ மண்ணு அவருக்கு தன் .. :)

ராணுவம் வந்ததுக்கு எல்லாம் அர்த்தம் தேர்தல் ஆணையத்தை தான் கேட்கணும்... அது தி மு க க்கு எதிர எடுத்து வந்து இலிங்க.. எல்லா கட்சிகாரனுக்கும் தான்.. அதிலும் இந்த வாட்டி தே ஆணையம் ரொம்ப அடவடியா நடப்பது அனைவருக்கும் தெரிந்ததே

ராஜ நடராஜன் சொன்னது…

நீங்க இவ்வளவு யோசிக்கிறீங்க!கருணாநிதி இதை விட பன்மடங்கு யோசிப்பார்.இருந்தும் ஸ்பெக்ட்ரம் என்ற அஸ்திரம் காங்கிரசிடம் இருப்பதால் அவர் பல் பிடுங்கப்பட்ட பாம்புதான்.

ராஜ நடராஜன் சொன்னது…

தமிழக தேர்தல் களம் ஜனநாயக விதிமுறைகள் முரணின் உச்சக்கட்டம்.
திருமங்கல பார்முலாவைப் பார்த்து தேர்தல் ஆணையம் இந்த அதிரடி முடிவுக்கு வந்திருக்கலாம்.

தேர்தலின் புதுமாற்றங்களை வரவேற்போம்.அடுத்த தேர்தலில் இன்னும் ஜனநாயக மரபுகள் வளரும் என நம்புவோம்.

Yoga.s.FR சொன்னது…

அந்த காங்கிரஸ் பன்னாடைகளை எங்கள் இந்து மதம் தழைத்தோங்க பாடுபட்ட 63 நாயன்மார்களுக்கு ஒப்பிடல் சரியானதா?சிந்தியுங்கள் நண்பர்களே!

ஜோதிஜி சொன்னது…

1 இதற்குப்பின்னால் பல அரசியல் உண்டு கண்ணன். ஆனால் எப்படிப் பார்த்தாலும் இது வரவேற்ககத்தக்கது தான். தேர்தலில் யார் அதிகமாக தில்லுமுல்லு செய்வார்கள். காலம் காலமாக ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் தானே? எனவே தான் தேர்தல் ஆணையம் இத்தனை கெடுபிடிகளை உருவாக்குகின்றது. எனக்கே சற்று வியப்பாக உள்ளது. செல்லும் எந்த இடத்திலும் வெட்டிப் பந்தா ஆடம்பரம் அதிகார துஷ்பிரயோகம் எதுவும் இல்லை.

ஜோதிஜி சொன்னது…

2. பொதுவா இதுபோன்ற சமயத்தில் தங்கள் பலத்தைக்காட்ட தெருவெங்கும் வரிசையாக ட்யூப் லைட்டுகள், அலங்கார செட்டுகள், அப்புறம் மேடைகளுக்கான மின்சார விளக்கு போன்றவைகள் இருக்கும். ஆனால் இந்த முறை கலைஞர் ஜெயலலிதா போன்ற முக்கிய தலைகள் அங்கங்கே பேசும் இடங்களில் தான் கொஞ்சம். அதுவும் அடக்கி வாசித்துக் கொண்டு. இதுவும் ஒரு வகையில்நல்லது தான்.

ஜோதிஜி சொன்னது…

3. பொதுவா திருப்பூரில் உள்ள ஒவ்வொரு நிறுவனங்களும் தமிழ்நாடு மின்சார வாரியம் அளிக்கும் மின்சாரத்தில் 80 சதவிகிதம் மட்டுமே (உயர் அழுத்தம்) பயன்படுத்த வேண்டும். இதற்கு மீறி பயன்படுத்தினால் ஒவ்வொரு யூனிட்டிற்கும் பல மடங்கு தண்டனைத் தொகை. இன்று மின்சார வாரியத்தில் இருந்து ஒரு சுற்றறிக்கை வந்துள்ளது. இன்று முதல் 70 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று. பெரும்பாலும் ஒவ்வொருவரும் ஜெனரேட்டர் போட்டு தான் மிகப் பெரிய நிறுவனங்கள் செயல்பட வேண்டிய சூழ்நிலை. இப்படிப்பட்ட தட்டுப்பாடான சூழ்நிலையில் அரசியல்வாதிகளை தேர்தல் ஆணையம் சும்மா விட்டிருந்தால் என்னவாகும். திருப்பூர் முதல் கோவை வரைக்கும் அலங்கார விளக்குகளை போட்டு பொளந்து கட்டியிருப்பார்கள். பாதிக்கப்படுபவர்கள் யார்?

ஜோதிஜி சொன்னது…

4. தேர்தல் ஆணைய சார்பாளர்கள் அழகிரி காணிக்கை செலுத்திய தொகையைத்தான் வீடியோ எடுத்துள்ளார்கள். அவர் அருகே இருந்த குஞ்சாமணிகள் செல்லத்தட்டுத் தட்ட பிரச்சனை விஸ்ரூபம். சரி இவரே இதை செலவு கணக்கில் எழுதிக் கொள் என்று நகர்ந்து விடலாம் அல்லவா? அழகிரியை விட அழகிரியிடம் நல்ல பெயர் எடுக்க வாய்ப்பு கிடைக்காதா என்று காத்திருக்கும் பட்டாளங்களால் தான் அழகிரிக்கு ஒவ்வொரு முறையும் பிரச்சனையே உருவாக்கின்றது. இடையே கொஞ்சம் அடக்கி வைத்திருந்தார். இப்போது அவருக்கே சற்று குழப்பம் அத்துடன் இயல்பான பயம்.

கலைஞருக்கு நன்றி என்று ஊடகத்தில் காட்டிக்கொண்டிருக்கும் விளம்பர வாசகத்தை எத்தனை பேர்கள் நம்புகிறார்களோ விரும்புகிறோர்களோ தெரியவில்லை பலரும் தேர்தல் ஆணையருக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜோதிஜி சொன்னது…

அதென்ன பொதுவா ஒரு விசயத்தை குறிப்பிட்டு நீங்க எழுதினால் அம்மா பாசம் அய்யா பாசம் என்று ராஜேஷ் கம்பெடுத்துவிடுவார் போல(?)

ஜோதிஜி சொன்னது…

இது என் தனிப்பட்ட கருத்து. திமுகவிற்கு என்று உழைத்து எந்த திரைப்பட நடிகர்களும் வளர்ந்த சரித்திரம் இல்லை. காரணம் கலைஞரைப் பற்றி பொதுவா எல்லாருக்குமே தெரியும். என்ன செய்வார்? எப்போது செய்வார்? அதையும் எப்படி செய்வார் என்று? மொத்தத்தில் நடிகர் வடிவேலுக்கு ஒரு சிறப்பான திசை தொடங்கப் போகின்றது என்று தோன்றுகின்றது. மற்றொரு வகையில் வடிவேலுக்கு பல வருடம் முன்னால் இந்த திரையுலகில் ஆட்சி செலுத்தும் விஜயகாந்த் இனி பேசவாவது நடிகர் வடிவேலிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் உண்மை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்