பின்பற்றுபவர்கள்

25 ஏப்ரல், 2011

தமிழ்நாடு பற்றி எரியலாம் - பொது மக்களுக்கான எச்சரிக்கை !

2ஜி வழக்கில் இன்று 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல்

2ஜி ஊழல் வழக்கில் சிபிஐ சார்பில் இன்று 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனியிடம் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அவரது மகள் கனிமொழி, உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. இதனால் அனைவரின் கவனமும் இந்த குற்றப்பத்திரிகையின் மீது திரும்பியுள்ளது.

- இவ்வாறு ஆளும் கட்சியின் ஆதரவு செய்தி இதழான 'புலானாய்வு புலி' நக்கீரனும் செய்தி வெளியிட்டுள்ளது.

********

திமுகவின் பங்காளி சண்டையில் தினகரன் அலுவலர் 3 பேரை பாடையில் ஏற்றப்பட்டது, அதிமுகவினர் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்தது உள்ளிட்ட கடந்த கால உணர்ச்சி கொந்தளிப்புகளை நினைவு கூர்ந்து பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

மேற்கண்ட செய்தியின் படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டால் முதல்வரின் மனைவி மற்றும் ஸ்டாலின், அழகிரியின் தாயாருமான தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோர் குற்றவாளிகளாக நீதி மன்றத்தில் அறிவிக்கப்படுவர். இது திமுகவினருக்கு மானப் பிரச்சனை, உணர்ச்சி வசப்படும் தொண்டர்கள் திறந்திருக்கும் கடைகளை அடித்து நெறுக்குவதுடன் பொதுச் சொத்தான அரசு பேருந்துகள் தீவைக்கப்படும் அபாயமும் உள்ளது.

மதிய வேளைக்குப் பிறகு வெளியூருக்கு பேருந்து பயணம் மேற்கொள்வோர் தவிர்பது நல்லது, குழந்தைகள் மற்றும் பொது மக்கள் சுற்றுலா சென்றிருந்தால், தங்கி இருக்கும் இடத்தில் இருந்து வெளியே செல்லாமல் இருப்பது. சிறுகடைகள் திறந்து வைத்திருக்கும் தனியார் வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று ஓய்வெடுப்பதன் மூலம் நட்டத்தை தவிர்க்கலாம்.

கலவரங்களை தலைவர்கள் தூண்டிவிடாவிட்டாலும் நன்றி செலுத்த நாயாக காத்திருப்பவர்கள் அவர்களாகவே செயல்பட்டு சேதம் விளைவித்துவிடுவார்கள், ப்ளசென்ட் ஹோட்டல் வழக்கில் ஜெ கைது செய்யப்பட்ட போது இவை தானாகவே நடந்தது குறிப்பிடத் தக்கது.

கலவரம் நடக்கலாம் என்பது ஊகம் தான் என்றாலும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆளும் கட்சிக்கு எதிராக நடந்து வருவற்றை தேர்தல் கருதி தொண்டர்கள் அமைதி காத்தார்கள், தேர்தல் முடிந்த நிலையிலும் அவ்வாறு இருப்பார்களா, அதுவும் முதல்வரின் நேரடி உறவுகளை தொடர்பு படுத்திய குற்றச் சாட்டுகளுக்கு அமைதி காப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல ஒன்றும் இல்லை. ஏற்கனவே காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் திமுகவினர் முன்பு காங்கிரஸ்காரர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது.

எதுவும் அசம்பாவிதம் நடக்கக் கூடாது, யாருமே பாதிக்கப்படக் கூடாது என்பது நம் நோக்கம், அப்படியே நடந்தாலும் தெரியமால் சிக்கிக் கொள்வோர்களிடையே இந்தத் தகவல் தெரிந்தவர்களின் சொந்தங்கள் யாரும் இல்லாமல் இருந்தால் நாம் ஓரளவு அரசியல் நடவடிக்கைப் பற்றிய விழிப்புணர்வுகளில் காப்பாற்றிக் கொண்டோம் என்றாவது இருக்கும். தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவெடிக்கை எதையும் எடுத்து போல் தெரியவில்லை.

10 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

வீண் வதந்தியா?சுனாமி எச்சரிக்கையா?

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜ நடராஜன் said...
வீண் வதந்தியா?சுனாமி எச்சரிக்கையா?//

சுனாமி எச்சரிக்கை கொடிதான், நிலவரம் கலவரம் ஆகலை என்றால் எச்சரிக்கையை திரும்பப் பெற்றுவிடலாம்.
:)

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

ஒன்றும் ஆகாது கண்ணன்..

அம்மாக்களின் பெயர்கள் பட்டியலில் இருக்குமா என்பது சந்தேகம்;63 சீட்டுகள் வீசப்பட்டது அந்த டீலுக்காகத்தான் இருக்கும் என்பது எனது ஊகம்.
இவா சரத் மாட்டலாம்..
அப்படியே அம்மாக்களின் பெயர்கள் இருந்தாலும் ஒன்றும் பெரிதாக நடைபெறாது;தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக இருக்கிறது,மேலும் போலோநாத் தான் இன்னும் காவல்துறைத் தலைவராக இருக்கிறார்.

நடப்பது கிட்டத்திட்ட கவர்னர் ஆட்சிதான்,ஐயா சும்மா பொம்மை முதல்வர்.

எனவே பெரிதாக நடக்க ஏதும் வாய்ப்பில்லை.

Yaathoramani.blogspot.com சொன்னது…

சரியான நேரத்தில் சரியான எச்சரிக்கை
சமூக உணர்வுள்ள பொறுப்பான பதிவு
நன்றி

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

என்டிடிவியில் பெரியம்மாவின் பெயர் அரசியல் அழுத்தத்தினால் சேர்க்கப் படவில்லை என்று சொல்லியிருக்கிறது..

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//என்டிடிவியில் பெரியம்மாவின் பெயர் அரசியல் அழுத்தத்தினால் சேர்க்கப் படவில்லை என்று சொல்லியிருக்கிறது..

:))//

அறிவன் சார்,

கூகுள் பஸ்ஸுல நண்பர் ஒருவர் இப்படிச் சொல்கிறார்,
"என் 10வது +2 ரிசல்ட்டுக்கு கூட நான் இப்படி காத்திருந்ததில்லை :-"

suvanappiriyan சொன்னது…

இதை சாக்காக வைத்து சசிகலா ஆட்கள் கலவரத்தை தூண்டி பழியை திமுகவின் மீதும் போடலாம். காவல்துறை மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய நேரமிது.

கோவி.கண்ணன் சொன்னது…

//இதை சாக்காக வைத்து சசிகலா ஆட்கள் கலவரத்தை தூண்டி பழியை திமுகவின் மீதும் போடலாம்//

உங்களுக்கும் சசிகலாவின் ஆட்கள் தேவமாருங்களுக்கும் அப்படி என்ன வாய்க்காத் தகராறு? அதிமுக ஆட்கள் என்று சொல்லி இருக்கலாமே.

Darren சொன்னது…

நடுநிலை என்கிற போர்வை உங்களுக்கு சிறப்பாக பொருந்துகிறது.

Chittoor Murugesan சொன்னது…

பாஸ்,
கலைஞருக்கு -அவர் ரத்தத்துல ஒரு காலத்துல இருந்ததா சனம் நினைச்சிருக்கிற எல்லாமே ஆவியா போயிருச்சு போல.

இப்போ இருக்கிறதெல்லாம் மீதி உள்ள காலத்தை எப்படியோ ஓட்டிட்டு போய் சேர்ந்தா போதுங்கற ஸ்டேஜுக்கு வந்துட்டாரு போல.

பத்தி எரியறதெல்லாம் இனி "அது அந்த காலம்" தேன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்