பின்பற்றுபவர்கள்

31 ஜனவரி, 2011

தாமரையின் மீது திடீர் மீது பாசம் கொண்ட உபிகள் !

மேயிர மாட்டுக்கு நக்குற மாடு இளப்பம் என்பார்கள், அதைவிடுங்க, காலில் விழுவதற்கும் காலை நக்குவதற்கும் எதாவது வேறுபாடு இருக்கிறதா ? வேண்டுமானால் மாகாத்மா காந்தி கூட வெள்ளைக்காரனின் காலணியை நக்கப் பணிக்கப்பட்டார், அதானால் காலை நக்குவது இளிவானது அல்ல, காலில் விழுவது தான் இழிவு என்று விளக்கம் கொடுக்கலாம். அம்மா காலில் விழும் அதிமுக தொண்டர்கள் இருப்பது போலவே கருணாநிதிக்கு காலை நக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள். இதுல யார் சிறந்த விசுவாசி என்று எப்படிச் சொல்ல முடியும் ? வளர்பவனுக்காக குலைக்கும் நாயும், வளர்பவனுக்காக கடிக்கும் நாயும் ஒன்று தானே. இதில் உசத்தி என்று எதைச் சொல்வது ?

******

சீமானின் சமூக / அரசியல் ரீதியான வளர்ச்சியைப் பற்றிக் கேட்டால், சீமான் ஒரு வெத்து வேட்டு, பெரிதாக தொண்டர்கள் இல்லை, எங்களை எதிர்த்து ஒண்ணும் புடுங்க முடியாது என்று தான் பாராளுமன்ற தேர்தலின் போது உபி களால் சீமான் பற்றி கருத்துக் கூறமுடிந்தது. அதே 'தேச துரோகம் செய்துவிட்டார்' என்று அடைக்கப்பட்ட சீமான் சிறையில் இருந்து வந்த பிறகு கருணாநிதியை வீழ்த்த ஜெ - வை ஆதரிப்போம் என்று சொன்னதும், 'தன்மான சீமான் போயாஸ் தோட்டத்து அடிமை ஆனார், சீமானை நம்பியவர்களுக்கு பட்டை நாமம், சீமான் ஆதரவாளர்களே உங்கள் நிலை அந்தோ பரிதாபம்' என்றார்கள்.

சென்றவாரம் கவிஞர் தாமரை ஜெ - கருணாநிதியை ஒப்பிட்டு இரண்டுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தான் எதற்கும் ஜெ வை ஆதரிக்கும் முடிவை மறுபரீசிலனை செய்யவும் என்று இருந்தது, தாமரையின் கடிதத்தில் எள்ளளவும் கருணாநிதிக்கான ஆதரவு என்று எதுவும் இல்லை, கிட்டதட்ட முத்துக்குமார் கடிதம் போன்று சற்று நிதானத்துடன் எழுதப்பட்டதே தாமரையின் கடிதம். தாமரையின் கடிதத்தை உபி கண்ணாபின்னாவென்று வழிமொழிந்தார்கள். தாமரையின் கடிதம் பற்றி எனது கருத்து என்னவென்றால், இது தேர்தல் நேரம், ஜெ-வையோ, கருணாநிதியையோ அரசியலை விட்டே அனுப்பும் சக்தி உடைய மூன்றாம் தலைவர்கள் யாருமே இல்லை. எனவே தற்போதைய சூழலில் தமிழின எதிர்பாக தொடரும் ஆட்சியை அகற்றவேண்டும் என்பதே முதன்மையான இலக்கு, எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற ரீதியில் தான் சீமானின் ஆதரவு அமைந்திருக்கிறது. ஒருவேளை ஜெ வெற்றிபெற்றால் ராஜபக்சேவிடம் (திருமா, கனிமொழி போன்று) விருந்து சாப்பிடப் போவாரா இல்லையா என்பதெல்லாம் பின்னால் நடைபெறுவது, அந்த நேரத்தில் எது போன்று நடந்து கொள்ளவேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்ள முடியும். இன்னும் சொல்லப் போனால் தன்னை சிறையில் அடைத்தவருக்கே ஓட்டு கேட்ட வைகோ போன்ற நிலை சீமானுக்கு இல்லை.

கருணாநிதி எதிர்பாளர்கள் ஜெவின் ஆதரவாளர்களாகவோ, சீமானின் ஆதரவாளர்களாகவோ இல்லாத சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜெ விற்கு தான் வாக்களித்தனர், அந்த வாக்கு கூட 'ஜெ திடிர் ஈழத்தாயானார்' என்பதற்காக அல்ல, காங்கிரசுக்கும் திமுகவிற்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நிலையை தற்போது தான் சீமான் வெளிப்படையாக அறிவித்து எடுத்திருக்கிறார். எனவே ஆளும் கட்சிக்கான எதிர்ப்பு வாக்கு என்பது கடந்த பாராளுமன்ற தேர்தல் முதலே துவங்கப்பட்டது, அது சீமான் மூலமாக இன்னும் பலம் பெறுகிறது அவ்வளவே. தமிழர் நலன் கருதும் அனைவரின் நிலைப்பாடும் இதுவே, இதற்கும் சீமானின் நிலைப்பாடுகளுக்கும் தொடர்பே இல்லை, ஒருவேளை சீமான் எந்த முடிவும் எடுக்காவிட்டாலும் ஈழ/ தமிழக மீனவர் ஆதரவு நிலை கொண்டவர்கள் ஜெ - வைத்தான் ஆதரிப்பாளர்கள், அதற்குக்கு காரணம் ஜெ வெற்றிப் பெறவேண்டும் என்கிற நோக்கம் இல்லை, கருணாநிதி ஆட்சி தொடரக் கூடாது என்பதே.

சீமான் மீது உபிகள் பாசம் கொண்டிருந்தார்கள் என்பது சீமான் அதிமுகவை ஆதரிக்கப் போகிறேன் என்று அறிவித்தப் பிறகே தெரிந்தது, அதே போன்று தாமரை மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் என்பது தாமரை சீமானுக்கு எதிர்ப்பு கடிதம் எழுதிய போது தெரியவருகிறது. இது தீடிர் பாசமா ? சந்தர்பவாத வேசமா ?

5 கருத்துகள்:

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

அசர மாட்டேங்கிறீங்களே :))

தருமி சொன்னது…

//ஆளும் கட்சிக்கான எதிர்ப்பு வாக்கு என்பது கடந்த பாராளுமன்ற தேர்தல் முதலே துவங்கப்பட்டது, அது சீமான் மூலமாக இன்னும் பலம் பெறுகிறது அவ்வளவே. //
//தமிழர் நலன் கருதும் அனைவரின் நிலைப்பாடும் இதுவே,ஈழ/ தமிழக மீனவர் ஆதரவு நிலை கொண்டவர்கள் ஜெ - வைத்தான் ஆதரிப்பாளர்கள்,//

மன்னிக்கணும் கோவி. இப்படி பொதுமைப்படுத்த வேண்டாமே. ‘மம்மி’க்கு ஓட்டு போடும் எண்ணமே இல்லாத ஜீவன்களை கொஞ்சம் யோசித்துப் பாருங்க!

வேற வழி பார்க்கணும் ...

கோவி.கண்ணன் சொன்னது…

//மன்னிக்கணும் கோவி. இப்படி பொதுமைப்படுத்த வேண்டாமே. ‘மம்மி’க்கு ஓட்டு போடும் எண்ணமே இல்லாத ஜீவன்களை கொஞ்சம் யோசித்துப் பாருங்க!

வேற வழி பார்க்கணும் ...

12:49 PM, January 31, 2011//

வேற வழி..... ஓட்டுப்பிரிக்கத்தான் வழிவகுக்கும்.

பிரியமுடன் பிரபு சொன்னது…

MMM ULLEN AYYA......

தருமி சொன்னது…

//வேற வழி..... ஓட்டுப்பிரிக்கத்தான் வழிவகுக்கும்.//

எப்போதைக்கும் தாமரைக்கும் மம்மிக்கும் என்னால் ஓட்டுப் போட முடியாது.

இந்த கம்யூ. பண்ற கூத்துதான் கடுப்பேத்துது எனக்கு. காங்ரஸ் மாதிரி இன்னும் ‘குதிரையேத்தத்திலேயே’ இருக்காங்களே :(

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்