ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கள்ளப்பணம் மலைக்கவைக்கிறது. உலகின் முதல் நிலை பணக்கார நாடாக இருக்க வேண்டிய இந்தியாவைச் சுரண்டி மக்களுக்கு கீழே வறுமைக் கோட்டைப் போட்டுவிட்டு இலவசத் திட்டங்களால் ஆளும் மாநில, நடுவன் அரசுகளை நினைத்தால் இந்த நாட்டை ஆள்வோர் ஏன் நாசமாகப் போகக் கூடாதுன்னு நினைக்கத் தோன்றுகிறது.
Black money in Swiss banks — Swiss Banking Association report, 2006 details bank deposits in the territory of Switzerland by nationals of following countries :
TOP FIVE
INDIA $1,456 BILLION
RUSSIA $470 BILLION
U.K. $390 BILLION
UKRAINE $100 BILLION
CHINA $96 BILLION
Now do the math’s – India with $1,456 billion or $1.4 trillion has more money in Swiss banks than rest of the world combined. Public loot since 1947:
ஆளும் அரசியல்வாதிகள் இவற்றை இந்தியாவிற்கு கொண்டுவர முயற்சிக்கமாட்டார்கள், ஏனெனில் இதில் அரசியல்வாதிகள் வைத்திருக்கும் கணக்கும் அடங்கும், மேலும் தேர்தல் தோறும் செலவுகளுக்கு இந்தக் கருப்புப் பணத்தை மிரட்டி வாங்கிதான் இறக்குவார்கள். போலிஸ்காரனே திருடனாக இருந்தால் திருட்டை எப்படி கண்டுபிடிக்கத் துணிவார்கள். இந்தியாவின் ஏழ்மை உருவானது அல்ல சுரண்டி சுரண்டியே உருவாக்கப்பட்டது, வெள்ளைக்காரனே நாட்டை ஆண்டிருக்கலாமா ? 60 ஆண்டுகால குடியரசு இந்தியாவை காங்கிரசு கட்சி தான் நிறையமுறை தனியாகவும் கூட்டணீயாகவும் ஆண்டு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
*****
அற்புதம் என்று சொல்லாமல் ஏற்றும் திருவண்ணாமலை தீபம் லட்சகணக்கானோரை ஈர்பதுடன், அது ஏற்றபடுவது என்று தெரிந்தும் ஆன்மிக அன்பர்களின் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு குறைவதில்லை. ஐயப்பன் சோதியாக காட்சி தருகிறார் என்று நம்பிக்கைய ஊட்டி ஏற்றப்படும் தீபத்தையும் இப்படி வெளிப்படையாகவே அறிவித்து சபரிமலை பருவம் (சீசன்) வரை நாள் தோறும் மகரசோதி ஏற்றினால் இப்படி ஒரே நாளில் கூட்டம் கூடி நெருங்கி 350க்கும் மேற்பட்டோர் இறந்தது நேர்ந்திருக்காது. சபரிமலை (காந்தமலை) மகரசோதி ஒரு நம்பிக்கை மோசடி அல்லது கோவில் நிர்வாகத்தினரால் ஏற்றப்படுவது தான் என்று அறிவித்து இந்த மாயையை உடைக்க நீதிமன்றம் நாடி ஏன் யாரும் பொது நல வழக்குத் தொடரவில்லை ? இந்தியாவில் செய்யப்படும் தெரிந்தே தவறுகளில் இதுவும் ஒன்று. ஆன்மிகம் ஏமாற்றோ அல்லது அற்புதமோ இல்லை, அது (வெறும்) அனுபவம் தான் என்பதை உணரும் நம்பிக்கையாளர்கள் தான் இது போன்ற எதிர்பாராத கெட்ட நிகழ்வுகளுக்கு விடிவு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும். என்னதான் பகுத்தறிவுவாதி அறிவு வெளிச்சம் காட்டினாலும் பக்தி போதையில் சொருகிய கண்களுக்கு அவை தெரியவே தெரியாது, ஆன்மிகம் அற்புதம் அல்ல என்று வாழ்ந்து காட்டிய வள்ளலார்கள் இருந்தாலும் ஆன்மிக வியாபாரிகளும், மூடநம்பிக்கையாளர்களும் இவற்றை கிஞ்சித்தும் நினைத்துப் பார்ப்பது இல்லை.
*****
கிடக்கிறவ கிடக்கா கிழவியைத் தூக்கி மனையில் வை என்று பழமொழி சொல்லுவார்கள், அகோபில மடத்தின் ஸ்ரீரங்கநாத யதிந்திர மகாதேசிகன் சுவாமிகள் என்னும் ஒரு சாமியார் (இந்தியாவில் பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை ஒழித்தாலும், சாமியார்களுக்கு பெயருக்கு முன்னால் வைத்துக் கொள்ளும் ஶ்ரீ தாங்கிய நீள புனைப் பெயர்களை அழிக்கவே முடியாது போல) சமஸ்கிரதத்தை தேசியமொழியாக அறிவிக்கச் சொல்லி வேண்டுகோள் வைத்து அந்த முயற்சிக்கு இந்துக்கள் 10 அல்லது விழுக்காடேனும் வருமானத்தை செலவிடனுமாம். குதிரை பசிக்கு கொள்ளு காணூம் சேனத்தை தங்கத்தில் செய்ய ஆசைப்பட்டானாம் குதிரைக்காரன். மாநில மொழிகளுக்கே அந்த தகுதியைத் தர மத்திய அரசு அசைந்துக் கொடுக்கக் காணும் இந்த கோலத்தில் எந்தமாநிலத்திலும் பேசப்படாத சமஸ்கிரதத்திற்கு ஆட்சி மொழி/ தேசியமொழி தகுதிக் கொடுக்கனும் என்கிற வேண்டுகோளை எப்படி எடுத்துக் கொள்வது. இந்த சாமியார்கள் பேசும் தாய்மொழிகளுக்கு அந்த தகுதியைக் கேட்பதில்லை என்பது எவ்வளவு நகைமுரணாக இருக்கிறது பாருங்கள்.
*****
தேர்தல் நெருங்க நெருங்க ஆளும் கட்சிக்கு காய்சல் எடுத்து நாள் தோறும் இலவச அறிவிப்பு மாத்திரை எடுத்துக் கொள்ளப்படுகிறது. வீடுகட்ட பயன்படுத்தும் ஆற்றுமணலின் ஒரு கிலோ விலை தமிழக அரசு கொடுக்கும் இலவச அரிசியின் ஒரு கிலோ விலையை விட கூடுதலாக இருக்கிறதாம். யானை இலவசம் யானைக்குப் போடும் ஒருவேளை தீணி ஐந்து யானைகளுக்கான விலை. இதுதான் இலவசங்களின் பலாபலன். சிறிதும் கூச்சமின்றி 'இந்த ஆண்டின் கூடுதல் மழை நல்லாட்சிக்கு கிடைத்தச் சான்றிதழ்' என்று ஒரு அமைச்சர் சொல்லுகிறார். அப்படி என்றால் மழையால் பயிர்கள் அழிய கடன் தொல்லையால் நிவாரணமின்றி தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பிணங்கள் அரசுக்குக் கிடைத்தச் சான்றிதழின் முத்திரைகளா ?
*****
எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பதில் முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்து, ஓரளவுக்கு இடங்கள் முடிவாகி விட்டன. அதன்படி, தி.மு.க., 128 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. காங்கிரசுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. பா.ம.க.,வுக்கு 24 இடங்களும், 2013ம் ஆண்டு காலியாகவுள்ள ராஜ்யசபா இடங்களில் அன்புமணிக்கு ஒன்றும் வழங்கப்பட உள்ளது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு 12, கொ.மு.க., - 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளுக்கு தலா மூன்று இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், 2006 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், 48 இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை, 12 இடம்கூடுதலாக வழங்கப்படுகின்றன. அக்கட்சிக்கு, அ.தி.மு.க., அணியிலும், "டிமாண்ட்' இருந்ததால், அக்கட்சியை தக்க வைக்க தி.மு.க., சற்று தாராளம் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க., அணியில் இருந்து காங்கிரசுக்கு, 75 சீட் வரை தர பேரம் பேசப்பட்டுள்ளது. அதனால், வேறு வழியின்றி காங்கிரசுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க, தி.மு.க., தரப்பில் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. தி.மு.க., அணியில் கொங்கு முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், தி.மு.க., சின்னத்திலேயே போட்டியிட அறிவுறுத்தப்பட்டுள்ளன.
- இது தினமலரில் வந்த செய்தி
தனித்து ஆளும் திமுக அடுத்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சியாக மாறுவதற்கு முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது. கழுதைத் தேய்ந்து கட்டெறும்பானக் கதையாக திராவிடக் கட்சிகளின் நிலைமையும் இப்படி கவலைக்கிடமாகியுள்ளது, திராவிடத்தின் பரிணாமம் தான் இந்த வீழ்ச்சி என்று கொள்ளவேண்டும். இந்தத் தேர்தலுடன் காங்கிரசு தமிழ்நாட்டில் இருக்குமா இல்லையா என்று நன்கு தெரிந்துவிடும்.
1 கருத்து:
இந்த நாட்டை ஆள்வோர் ஏன் நாசமாகப் போகக் கூடாதுன்னு நினைக்கத் தோன்றுகிறது.
பழைய காலத்து வில்லன் வசனம் ஞாபத்திற்கு வருதோ?
காங் க்கு வந்த வாழ்வை பாத்தீயளா?
கருத்துரையிடுக