பின்பற்றுபவர்கள்

28 ஜனவரி, 2011

செயற்க்கைக் கோளை சனிப் பிடிக்கிறதாம் - நாசா !

என்னக் கொடுமைங்க,

மின்னஞ்சலில் வந்தது.... என்பதாக கூகுள் பஸ்ஸுலும், பேஸ்புக்கிலும் கீழ்கண்ட தகவல் கசிய விடப்படுகிறது.

*********************

செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு சனி பகவான்


இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது. எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது. கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது. எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு- ஸ்ரீதர்ப்பணேசவரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா விலிருந்து பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர். இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன. இதைப் பற்றிய தகவல்கள் ஜூனியர் விகடனில் 2005 -06 வாக்கில் , வெளிவந்தது. நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை..?

**************

மேற்கண்ட மின் அஞ்சலில் நாசா இணையத் தளம் செயற்கைகோள் குறித்து அவ்வாறான அறிக்கைக் கொடுத்ததாக சுட்டிகள் எதுவும் இல்லை. ஜூனியர் விகடன் 2005-2006 வாக்கில் கட்டுரை வெளியிட்டதாக சொன்னதன் பகுதியின் இணைப்பும் இல்லை, இந்த தகவல் 7 ஆண்டுகள் முந்தையது என்றாலும் இந்துத்துவவாதிகளுக்கு தேவையான தகவல் என்பதால் கண்டிப்பாக எடுத்து வைத்திருப்பர் என்பது குறிபிடத் தக்கது. முழுக்க முழுக்க வெறும் வதந்தியைப் பரப்பி திருநள்ளாருக்கு கூட்டம் சேர்க்கும் நோக்கிலும், மதநம்பிக்கையைப் பரப்பும் மலிவான உத்தியுடனும் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதே தகவல் மின் அஞ்சல்வழியாக பரப்பப்படுவதுடன் தமிழ் பார்பனர்கள் நடத்தும் இணையத் தளத்திலும், பார்பனர் உலகம் என்றபெயரில் மற்றொரு இணையத் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது

மத நம்பிக்கைகளுக்கு அறிவியல்சாயம் பூசுவதும் அது களைவதும் புதிதல்ல. மகரவிளக்கு குட்டு வெளிப்பட்டு இருக்கும் இவ்வேளையில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு இது போன்று புதியவத(வா)ந்திகளை பரப்புகிறார்கள்.

இது போன்று மற்றொரு அறிவியல் ஆன்மிகத் தகவல் என்பதாக இஸ்லாமியர்களின் புனித வழிபாட்டுத்தலமான மெக்கா உலகத்தின் மையத்தில் இருப்பதாக கட்டுரைகள் எழுதப்படுவதுண்டு. பூமி தட்டையாக இருந்தால் நீள அகலத்தை வைத்து நடுப்பகுதி எது என்றே சொல்ல முடியும், ஆனால் கோள வடிவத்தில் அதுவும் சுழலும் கோள வடிவத்தில் நடுப்பகுதி எது ? அப்படியே கோளத்தின் நடுப்பகுதி எது என்றால் அது சுழற்சி மையமான துருவ பகுதிதானேயன்றி நாடுகள் அமைந்த நிலப்பகுதி அல்ல. இப்படி நடுப்பகுதியில் தான் மெக்கா அமைந்திருக்கிறது என்று நம்பப்பட்டு பரப்பப்பட்டாலும், சென்ற ஆண்டுவரை இந்தோனேசிய இஸ்லாமியர்கள் மெக்கா எந்தப் பக்கத்தில் இருக்கிறது என்ற குழப்பத்தில் வேறொரு இடம் நோக்கி தொழ, அதை அல்லா ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்னும் விவாதங்கள் கூட நடந்து முடிவில் தெரியாமல் செய்-தவற்றை அல்லா ஏற்றுக் கொள்வான், தொழுகையின் பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த மெக்கா - உலக நடுப்பகுதி நம்பிக்கையை மேலும் வளர்த்துக் கொள்ள இஸ்லாமியர்கள் கிரின்விச் நேரத்திற்கு மாற்றாக மெக்காவை மையப்படுத்தும் நேரங்களுக்கு மாறவேண்டும் என்றும் இஸ்லாமிய அறிவியல் அறிஞர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏசுநாதர் கண்களில் வடியும் ரத்தம் என்று கிளப்பிவிடப்படும் வதந்திகளில் ஒன்றாக அவரின் இரத்தவகையையும் அந்த இரத்ததில் இருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் அறிவித்தனர்.

மிராக்கல் ஆப் அல்லா
மிராக்கல் ஆப் ஜீஸஸ்
மிராக்கல் ஆப் புத்தா
மிராக்கல் ஆப் காத்தவராயன்
என்று இணையத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடுங்கள் ஏகப்பட்ட குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டும்.

it is a medical miracle என்று தமிழ் படத்தில் சொல்லப்படுவது போல் அறிவியல் ஆன்மிக அற்புதம் என்கிற கட்டுக்கட்டுகான கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. மனித வரலாறுகள் பதியப்பட்ட காலங்களில் இருந்தே இந்த நம்பிக்கைகள் ஊன்றுவதும் பின்பது பட்டுப்போவதும் நடந்தேறிவருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. புதிய மதத்தின் / மதங்களின் எழுச்சி என்பது பழைய மதத்தின்/மதங்களின் பழைமைவாதத்தை எதிர்த்து கட்டப்பட்டுகிறது என்பதால் நான் குறிப்பிடும் கூற்று உண்மை. அண்ணாவின் மாஜி கடவுள் நூல் கிடைத்தால் படித்துப்பாருங்கள், பண்டைய ஐரோப்பிய நாடுகளில் இருந்த கடவுள்களெல்லாம் காணாமல் போன வரலாறுகள் தெரியும். இன்றைய கடவுள்கள் குறித்த நம்பிக்கைகள் அழிய இன்னும் ஒராயிரம் நூற்றாண்டுகள் எடுக்கலாம், ஆனால் கண்டிப்பாக நம்பிக்கைகள் அனைத்தும் அழிவுக்கு உட்பட்டதே.

இன்னும் இரண்டு சுனாமிக்கு இரையாக வேண்டிய இலக்கிய குப்பைகள் தமிழகத்தில் உண்டு ஆனால் வாழ்க்கைகுக்த் தேவையான இலக்கியம் இன்னும் கிடைத்தபாடில்லை என்று தமிழகத்து இலக்கிய வளர்ச்சி பற்றி வைரமுத்து ஆதங்கமாகக் குறிப்பிட்டாராம். இவை மதங்களுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் கூட பொருந்தும் அதாவது இன்னும் சில உலக அழிவுகளுக்கு அசைந்து கொடுக்காத மதங்கள், மூடர் நம்பிக்கைகள் நிறைய உண்டு ஆனால் முடநம்பிக்கையை கட்டுமானமாகக் கொள்ளாத உண்மையான ஆன்மிகம் இது என்று காட்ட மனிதனுக்கு எந்த ஒரு மதமும் இன்னும் கிடைத்தப்பாடில்லை.

இணைப்பு :

அப்துல்கலாம் ஐன்ஸ்டன் ஆனக் கதை !

11 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

எனக்கும் வந்தது!

கேக்குறது கேனப்பயலா இருந்தா கேப்பையில நெய் வடியுதுன்னு சொல்வாங்களாம் என்ற பழமொழி ஞாபகம் வருதுன்னு ரிப்ளை அனுப்பிட்டேன்!

பிரியமுடன் பிரபு சொன்னது…

siripputhan varuthu... vera enna solla..

ராவணன் சொன்னது…

சாமி போட்டோவை வைத்து பூஜை செய்யும் நீங்கள் எழுதலாமா?

ஒவ்வொரு பண்டிகைக்கும் படையல் போட்டு சாமி கும்பிடும் நீங்கள் எழுதுவதை நான் ரசிக்கின்றேன்.

தருமி சொன்னது…

கடவுளே ...!

தங்கம்பழனி சொன்னது…

ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும் போலிருக்கிறது.. (சிந்திக்கத் தெரியாதவர்களுக்கு மட்டும் இது..) மூளையை சலவை செய்து காய வைக்கும் கயவர்களின் மத்தியில் இதெல்லாம் சாதாரணம் தலைவா.. நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

கோவி.கண்ணன் சொன்னது…

//ராவணன் said...
சாமி போட்டோவை வைத்து பூஜை செய்யும் நீங்கள் எழுதலாமா?

ஒவ்வொரு பண்டிகைக்கும் படையல் போட்டு சாமி கும்பிடும் நீங்கள் எழுதுவதை நான் ரசிக்கின்றேன்.

10:36 PM, January 28, 2011//

மூல நோயை அகற்ற கத்தியெடுக்கும் மருத்துவன் ஒரு கொலைகாரன், அவன் கைகள் சீழ் படிந்த கைகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//எனக்கும் வந்தது!

கேக்குறது கேனப்பயலா இருந்தா கேப்பையில நெய் வடியுதுன்னு சொல்வாங்களாம் என்ற பழமொழி ஞாபகம் வருதுன்னு ரிப்ளை அனுப்பிட்டேன்!

11:39 AM, January 28, 2011//

அதை தரமான பசு நெய் என்றும் விற்பார்கள் தல

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியமுடன் பிரபு said...
siripputhan varuthu... vera enna solla..//

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
கடவுளே ...!

11:21 PM, January 28, 201//

வந்தாலும் அவருக்கே கஷ்டம் தான். கிள்ளிப் பார்ப்பாங்களோ !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//
தங்கம்பழனி said...
ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும் போலிருக்கிறது.. (சிந்திக்கத் தெரியாதவர்களுக்கு மட்டும் இது..) மூளையை சலவை செய்து காய வைக்கும் கயவர்களின் மத்தியில் இதெல்லாம் சாதாரணம் தலைவா.. நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

7:08 PM, January 29, 2011//

கருத்துக்கு மிக்க நன்றி ஐயா

Kiruththikan Yogaraja சொன்னது…

நீங்க அப்பவே ஆரம்பிச்சிட்டீங்க பாஸ் நீங்கெ என்கேயோ போய்ட்டீங்க

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்