பின்பற்றுபவர்கள்

25 ஜனவரி, 2011

தமிழக மீனவர்களுக்கு இலவச இறுதிச் சடங்கு !

நாள் தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் செய்திகளுக்கு குறைவு இல்லை. வட இந்தியன் வம்பிலுத்துவிட்டு வெளிநாடுகளில் நைய புடைக்கப்பட்டால் இந்தியனை அடித்துவிட்டார்கள் என்று கண்டனம் தெரிவித்து அனைத்து மாநில மக்களிடம் இந்திய உணர்வு அரசியல் நடத்தும் இந்தியா, எதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் சிங்கு தலைப்பாகை வைக்கக் கூடாது என்றால் இந்தியர்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று பொங்கி எழும் பிரதமர், தான் எழுதிய பாடல் போலவே காகிதக் ஓடத்தை டெல்லிக்கு அனுப்பும் தமிழக முதல்வர், இவர்கள் கூட்டணி தமிழக சட்ட சபைத் தேர்தலை நெருங்கும் இந்த நேரத்தில் கொலை செய்யப்படும் மீனவர் உடல் நலம் கருதி 'இலவச இறுதிச் சடங்கு நடத்தவும், பதினாறாம் நாள் கருமாதிக்கு பண உதவி செய்யும் இலவச திட்டம்' அறிவித்து தேர்தலில் வென்றுவிட நினைத்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை. ஈழத்தமிழர்கள் பிணங்களின் மீது ஏறி நின்று பாராளுமன்ற வெற்றியைச் சுவைத்தார்கள், சட்ட மன்ற வெற்றிச் சுவைக்கு தமிழக மீனவன் பிணங்கள் போலும்.

வங்காளவிரிகுடா சிங்களவெறிகுடாவாகி மீனவர்களின் இரத்தங்கள் கலந்து நிறமாறிக் கிடக்கிறது.

தமிழர்கள் இந்தியர்கள் இல்லை என்று இந்தியாவே ஒதுங்கி வேடிக்கைப் பார்பதன் மூலம் மறைமுகமாகக் குறிப்பிட்டு உணர்த்தும் போது தேசியவாதம் பேசும் தேசியவியாதிகளை எதால் அடிக்கலாம் ?

நம்மால் நேரிடையாக ஒரு மயிரையும் புடுங்க முடியாது என்றாலும், முடிந்த வழியில் இந்த அக்கரமங்களுக்கு செருப்படிக் கொடுத்தோம், எதிர்ப்பைக் காட்டினோம் என்று வரலாற்றில் எழுத்தின் வழியாகப் பதியவைக்கவில்லை என்றால் நாம் தமிழனுக்கு பொறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

9 கருத்துகள்:

Mugundan | முகுந்தன் சொன்னது…

இலவச இறுதிச் சடங்கா,?
கலைஞர் வாழ்க...
முதல் ஆளா எனக்கு குடுங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

//எண்ணத்துப்பூச்சி said...
இலவச இறுதிச் சடங்கா,?
கலைஞர் வாழ்க...
முதல் ஆளா எனக்கு குடுங்க//

அதுக்கு நீங்க தமிழக மீனவனாக இருந்து சிங்கள இராணுவத்திடம் குண்டடிப்பட்டு......

priyamudanprabu சொன்னது…

தமிழக மீனவர்களுக்கு இலவச இறுதிச் சடங்கு !"
///\

MMM SERUPPADI ..

Make Money Online Forum சொன்னது…

இந்திய உணர்வு அரசியல் நடத்தும் இந்தியா, எதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் சிங்கு தலைப்பாகை வைக்கக் கூடாது என்றால் இந்தியர்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று பொங்கி எழும் பிரதமர், தான் எழுதிய பாடல் போலவே காகிதக் ஓடத்தை டெல்லிக்கு அனுப்பும் தமிழக முதல்வர்

The best CM in India
The Best PM in the world

awards given by Tamilan

மாணவன் சொன்னது…

//நம்மால் நேரிடையாக ஒரு மயிரையும் புடுங்க முடியாது என்றாலும், முடிந்த வழியில் இந்த அக்கரமங்களுக்கு செருப்படிக் கொடுத்தோம், எதிர்ப்பைக் காட்டினோம் என்று வரலாற்றில் எழுத்தின் வழியாகப் பதியவைக்கவில்லை என்றால் நாம் தமிழனுக்கு பொறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை//

ஒன்றும் சொல்வதற்கில்லை........தமிழகத்தில் பிறந்துவிட்டோமே என்பதைத் தவிர...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

களிங்கர்ஜீ வால்க...!

Gokul சொன்னது…

தலைப்பு நச்!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மிகவும் வேதனையான விசயம்.

துளசி கோபால் சொன்னது…

செஞ்சாலும் செய்வாங்க.

தேர்தலில் ஜெயிப்பது ஒன்றே இப்போதைய நோக்கம்.

எதுக்கு இந்த மாதிரி ஐடியாவெல்லாம் கொடுக்கறீங்க?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்