பின்பற்றுபவர்கள்

6 பிப்ரவரி, 2011

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி ?!

'மிஸ்டர் க்ளீன்' காங்கிரசு கட்சி தன் பகடையை நன்றாகவே உருட்டுகிறது. பிகாரில் புறமுதுகு காட்டிய கோ மகன் ராகுல் காந்தி தமிழக சட்ட(ச)பைக்கு 90 இடங்கள் வரை பேரம் பேசுவதாக நாளிதழ் செய்திகள் அறிவிக்கின்றன. அந்த 90ம் ஏ,பி,சி என்ற பிரிவுகள் அடிப்படையில் அதாவது ஏ - காங்கிரஸ் வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள், பி - காங்கிரஸ் கூட்டணியாக வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகள், சி - இழுபறி தொகுதிகள். கருணாநிதியின் இலவச அறிவிப்புகளை வைத்து திமுக கூட்டணி வெற்றிபெரும் என்கிற (நப்)பாசையில் இவ்வாறு மிகுதியாகக் கேட்கப்படுவதாக நினைக்க முடிகிறது, அதிலும் திமுக வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதில் தனிப்பட்ட கவனமாக ராசா கைது நடவடிக்கைகள் இந்த நேரத்தில் செய்வதன் மூலம் நெருக்குதல் கொடுத்து கேட்டும் சீட்டுகளைப் பெற்றுவிட முடியும் என்று காங்கிரஸ் கருதுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள், இதன் மூலம் காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் கனிசமான வெற்றியைப் பெற வாய்ப்புள்ள அதே நேரத்தில் திமுக ஊழல் குறித்த குற்றச் சாட்டில் தோல்வியைச் சந்தித்தால் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக் கொண்டு தேர்தலுக்குப் பிறகு தன் தலைமையில் ஆட்சி அமையும் என்று காங்கிரஸ் நம்புவதாக ஐயம் ஏற்படுகிறது.

அதாவது திமுகவின் இலவசத் திட்டங்கள் காங்கிரசை கரையேற்றும் அதே சமயத்தில் திமுகவின் மெகா ஊழல் திமுகவை (மட்டும்) வீழ்த்தும் என்றும் நம்புகிறார்கள் போலும். இதற்கனவே திமுகவின் இலவசத் திட்டங்கள் மத்திய அரசின் மானியத்தில் செயல்படுவதாக இளங்கோவன் உள்ளிட்டோர் கூறுவதை ஒப்பு நோக்கவும். அதாவது ஊழலில் பலனை திமுக அனுபவம் செய்யவும், இலவசத் திட்டங்களின் அறுவடையை காங்கிரஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் திட்டம் போலும்.

ராசா அப்பழுக்கற்ற உத்தமராசா என்றும் பார்பனப் பத்திரிக்கைகளின் சூழ்ச்சி என்று புலம்பும் தாத்தா நெருக்குதல் தரும் காங்கிரசிற்கு அடிபணிவது 'அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதை நினைவுப்படுத்துகிறது. தாத்தாவின் நிலை காங்கிரசை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலைதான். தாத்தாவின் நிலை பரிதாபம் என்றாலும் இது எதிர்பார்த்த ஒன்று தான். நேர்மையானவர்கள் வளைய மாட்டார்கள்.

தாத்தாவுக்கும் நமக்கும் தெரிந்தவையில் தாத்தா மவுனம் சாதிப்பவை :

1. ஸ்பெக்டரம் டேப் விவகாரத்தில் ராசா - நிராடியா தொடர்புடைய உரையாடலை மத்திய அரசின் கீழ் உள்ள தொலை தொடர்பு நிறுவனமே வெளியிட்டது. இதில் காங்கிரசின் கைங்கரியம் இருக்கிறது என்றும் தெரிந்தும் தாத்தாவின் மவுனம்

2. நீராராடியாவுன் மத்திய அமைச்சர் பதவிகளுக்கான போரம் குறித்த உரையாடல், இது ஒரு நரித்தனமான காங்கிரசின் அரசியல் அசிங்க விளையாட்டு, நீராராடியா டெலிபோன் பேச்சுகளில் திமுகதரப்பின் பேச்சுகளை மட்டுமே வெளியிட்டுவிட்டு, நீரா ராடியா காங்கிரசின் எந்த பிரமுகருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதை வெளியிடாமல் காங்கிரஸ் தற்காத்து கொண்டது, நீரா ராடியா காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரா ? அவர் கண்டிப்பாக திமுக அமைச்சர் பதவிகளுக்கு இன்னொரு காங்கிரஸ் பெருந்தலைகளிடம் தானே பேசு இருப்பார் அது ஏன் வெளிவரவில்லை. இதை ஏன் தாத்தா இதுவரை கேட்காமல் வெறும் பார்பன பத்திரிக்கை சதி என்றே கூறி வர அதற்கு போயாஸ் தோட்டத்து முன்னாள் பூசாரி (மானமிகு வீரமணி ஐயா) ஜிங்க்சா அடிக்கிறார் ? பொதுமக்களுக்குத் தோன்றும் இந்தக் கேள்விகள் திமுகவினருக்கு தோன்றாதா ?

திமுக காங்கிரசை கேள்வி கேட்காததற்கு ஸ்பெக்டரம் ஊழலில் பெரும் பங்கு திமுகவிற்கு இருப்பதே காரணம், அதற்கான வழுவான ஆதாரமும் காங்கிரஸ் வசம் உள்ளது. தயாநிதி மாறன் தொலைதொடர்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இராசா அமர்ந்த பிறகு ராசாவின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டு அதன் பிறகான மத்திய அரசு தேர்தல் முடிகளுக்கு பிறகு மத்திய அமைச்சர் பேரமும் பதியப்பட்டுள்ளது. ஆக ஸ்பெக்டரம் விவகாரம் காங்கிரசிடம் இலங்கைப் போருக்கு முன்பே சிக்கி இருக்க, திமுகவை காங்கிரஸ் தன் இலங்கை அதிபரின் ஆதரவுக்கும் பயன்படுத்தி இருக்கிறது, இதன் பிறகும் தாத்தா போர் நிறுத்தத்திற்கு ஆடியவை வெறும் நாடகம் தான். ஒராண்டாக ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடிக்கக் காரணம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிறது என்பதால், இதில் திமுகவுக்கு நெருக்கடிக் கொடுத்து மிகுதியான இடங்களைப் பெற்று வென்றால் தன் தலைமையில் ஆட்சி அமைத்துவிட்டு திமுகவை கழட்டிவிடலாம் என்பதே காங்கிரசின் எண்ணமாக இருக்கவேண்டும். முதலில் திமுகவின் விரல்களைப் பயன்படுத்தியும் தமிழர்களின் கண்களில் குத்திய காங்கிரஸ் பிறகு திமுகவின் கையைக் கொண்டே திமுகவை குத்திக் கொள்ளும் நிலைக்கு பகடை ஆடிவருகிறது.

திமுகவின் ஊழல் குறித்து பெரிய விழிப்புணர்வு இல்லை, அதனால் இலவச திட்டங்களினால் திமுக வெல்லும் என்று உடன்பிறப்புகள் பரப்பி நம்பி வந்தாலும், திமுகவின் இலவசத் தொலைகாட்சி வழியாகவே திமுகவின் ஊழல்களையும் அறிந்துள்ளார்கள் பெருவாரியான மக்கள். ஈழ மற்றும் தமிழக மீனவர்களுக்கு ஆதரவானர்களின் எழுச்சி காங்கிரசுக்கு எதிராக பலமாகவே வேர்விட்டிருக்கிறது. எனவே திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் அது ஒரு உடன்கட்டை கூட்டணி தான். இதில காங்கிரஸ் தன் தலைமையில் கூட்டணி ஆட்சி என்னும் கனவுக்கு உரமாக உருட்டி விடுவது பகடையா? அல்லது தனக்குத் தானே கட்டிக் கொள்ளும் (பீகாரில் தோற்றோடியதைப்) போன்ற பாடையா ?

13 கருத்துகள்:

sarul சொன்னது…

உங்களைப் போல் தெளிவாகச் சிந்திக்கத்தெரிந்த ஒருவராவது பதிவிடுவது ஆறுதலளிக்கிறது ,தாத்தா இப்போது தாதாக்களை மட்டுமே நம்புகிறாரோ.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

தி.மு.க. காரர்களை அவ்வளவு லேசாக எடை போடாதீர்கள். உள்குத்து வேலைகள் செய்தே இந்த காங்கரஸ் கார்களை ஓரம் கட்டிவிடுவார்கள்.
பாவம் தாத்தா தன குடும்பத்தினரின் பேராசையினால் அந்த கட்சின் நிலைபாட்டை கெடுத்தார்.

சி.கருணாகரசு சொன்னது…

இது காங்கிரஸ்க்கு அதிக சீட்டை வேண்டுமென்றால் வாங்கி தரலாம்.... நிச்சயமாக ஓட்டையல்ல!

சி.கருணாகரசு சொன்னது…

எந்த நரிதந்திரத்தாலும்... காங்கிரசின் ஆட்சி கனவு....அல்லது காங்கிரசின் தலைமையில் கூட்டாச்சி கனவு பலிக்கவே பலிக்காது.

bandhu சொன்னது…

Bulls Eye! இது தான் நடக்க போகிறது. காங்கிரஸின் குறி கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தின் வெற்றிடம். இப்போது நெத்தியடி அடித்தால் தி மு க வரவே முடியாது என்று நினைக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ இது ஒரு மிக முக்யமான தேர்தலாக உருமாறி வருகிறது!
மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

தமிழ்மலர் சொன்னது…

//முதலில் திமுகவின் விரல்களைப் பயன்படுத்தியும் தமிழர்களின் கண்களில் குத்திய காங்கிரஸ் பிறகு திமுகவின் கையைக் கொண்டே திமுகவை குத்திக் கொள்ளும் நிலைக்கு பகடை ஆடிவருகிறது.//

மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்...

ராவணன் சொன்னது…

கோவி இல்லாமல் யாரும் இப்படி எழுதமுடியுமா?

ஏப்ரலுக்குப் பின், தாத்தா ஒரு புளித்த ஊத்தாப்பம் என்று புரியும்.

அப்போது எந்த அம்மையார் தாத்தாவைக் காப்பாற்ற வருவார்? அது நீரடியா அம்மையாரா,கனிமொழி அம்மையாரா, இத்தாலி அம்மையாரா,
இல்லை வீரமணி அம்மையாரா?
(ஹி..ஹீ....வீரமணி அம்மணியாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன)

ராஜ நடராஜன் சொன்னது…

ஊக்கு...ம்!

Karikal@ன் - கரிகாலன் சொன்னது…

யோசிக்க வைக்க கூடிய பார்வை, கருத்து.
இருக்கலாம்தான் யார் கண்டது?

தேள் கொட்டினாலும், கத்த இயலுமோ திருடனுக்கு !

Karikal@ன் - கரிகாலன் சொன்னது…

இது பின்னூட்ட தொடர்தலுக்கு

மதுரை சரவணன் சொன்னது…

நல்ல அலசல்... வாழ்த்துக்கள் .

நந்தா ஆண்டாள்மகன் சொன்னது…

அருமயான பார்வை நல்ல பதிவு நண்பரே!!!

ismail சொன்னது…

Dear Sir,

Please note that SPECTRUM SCAM is done at UPA i.e. Congress Government and not DMK's biggest alone scam.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்