பின்பற்றுபவர்கள்

12 ஜனவரி, 2011

கமான் சீமான் கமான் !

வைகோ ஜெயலலிதாவிடம் சேர்ந்ததற்கும் சீமான் ஜெ வுடன் கைகோர்த்திருப்பதும் ஒரே நிகழ்வாக பரப்பப்படும் அளவுக்கு சீமான் அரசியல் நுழைவு ஆளும் கட்சி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. தமிழக வாக்காளர்களைப் பொருத்த அளவில், நோக்கர்களைப் பொறுத்த அளவில் வைகோ ஜெ விடம் சேர்ந்த நிகழ்வு அரசியல் ரீதியாக வைகோவினால் எடுக்கப்பட்ட தனிப்பட்ட முடிவு. வைகோ உள்ளே இருந்ததற்கும் சீமான் உள்ளே இருந்ததற்கும் சொல்லப்பட்ட காரணம் விடுதலைப் புலிகள் ஆதரவு என்றாலும் சீமானுக்கு அதை தேச தூரோகம் என்ற இந்திய முத்திரை குத்தி அனுப்பினார்கள். வைகோ உள்ளே இருந்த போது இலங்கையின் நிலவரம் கவலை கொள்ளுவதாக இல்லை. சீமான் உள்ளே வைக்கப்பட்டது எல்லாம் முடிந்த பிறகே எனவே இவை இரண்டும் ஒரே மாதிரியான உணர்வுகளுக்கு பின் எடுக்கப்பட்ட முடிவோ, பார்க்கக் கூடிய நிகழ்வோ அல்ல. வைகோ ஜெவின் தனிப்பட்ட முடிவால் பழிவாங்கப்பட்டு அந்த காயம் முற்றிலும் ஆறும் முன்பே துரோகியை விட எதிரியே மேல் என ஜெவுடன் தொடர்ந்தால் தான் அரசியல் வாழ்வு என்னும் நிலைக்கும் என்னும் முடிவுக்குத் தள்ளப்பட்டவர். வைகோ ஜெவுடன் அரசியலில் சேர்ந்திருந்தாலும் தனிப்பட்ட கொள்கையான ஈழ ஆதரவு என்பதையெல்லாம் மாற்றிக் கொள்ளவும் இல்லை. சீமான் எடுத்துள்ள முடிவு எதிரிக்கு எதிரிக்கு நண்பன் என்னும் நிலையே.

2006ல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் அரசியல் சூழலும் தற்போதைய அரசியல் சூழலும் ஒன்று இல்லை. பலமான கூட்டணி, இலவசத் திட்டம் என்பதுடன், விஜயகாந்து என்கிற திரைப்படக் கவர்ச்சியும் வாக்குகளைப் பிரித்தும் கருணாநிதியின் திமுக வெற்றி பெற்றதோ மைனாரிட்டி அளவில் தான். ஆனால் இன்றைய தேர்தல் சூழலுக்கு முன்பு ஈழம், தமிழக மீனவர் பிரச்சனைகள், ஸ்பெக்டரம் மெகா ஊழல் , விலைவாசி உயர்வு விஷ்வரூபமாக நின்று கொண்டு இருக்கின்றன. இவற்றையெலலம் சரி செய்து ஈழ எதிர்ப்பாளர்களான காங்கிரசு மற்றும் பாமக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது கருணாநிதிக்கு பெரும் அறைகூவல்.

இந்த தேர்தல் இலவச திட்ட ஏமாற்றுகளுக்கும் இன உணர்விற்கும் நடக்கும் போர் போல் தான் நினைக்க வேண்டி இருக்கிறது, இன உணர்வு சார்பாக வாள் சுழற்றப் போகும் சீமான் வைகோவைப் போல் வெறும் வைகோல் புலி அல்ல. அடிபட்ட புலி. இதுவரை சீமானை ஆதாரித்துவந்தது போலவும், ஜெவுடன் கைகோர்ததால் சீமான் தன்மானம் இழந்துவிட்டது போலவும் பரப்பும் உபிகளின் புலம்பல்களில் சீமான் ஒரு பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்து வந்திருப்பதைக் காட்டுகிறது, அது உறுதிப்பட்டதால் தான் என்னவோ சீமானும் தேச துரோகம் செய்ததாக கைது செய்து அடைக்கப்பட்டார்.

கருணாநிதியால் வாரி வழங்கப்படும் இலவசத் திட்டங்களைக் கருத்தில் கொண்டும், ஸ்பெக்டரம், ஈழ ஆதரவு ஆகியவற்றுடன் ஊன்றிப் பார்த்தால் இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிகவும், சீமானும் இணைந்து சந்தித்தால் தமிழகத்தில் வெற்றித் தோல்வியில் இழுபறி நிலையே நீடிக்கும், அப்போது காங்கிரசோ, பாமகவோ எடுக்கும் முடிவில் அதிமுக ஆட்சி அமைய வாய்ப்பு இருக்கிறது.

ஜெ நம்ப வைத்து கழுத்து அறுப்பவராம், நம்ப வைத்து பிறகு 'இதயத்தில் இடம் கொடுப்பது' கழுத்தறுப்பு கணக்கில் வராதா ? ஜெ காலில் விழ வைப்பவராம். உண்மை தான். அஜித்திற்கு நேர்ந்த அவமானம், மிரட்டல்கள், கருணாநிதி என்று மேடையில் சொன்னதற்காக கவுதம் மேனனுக்கு நடந்தது எல்லாம் என்ன ? விஜய் ஜெவைத் தேடிப் போனதன் காரணம் என்ன ? இவை எல்லாம் காலில் விழாததால் ஏற்பட்ட பலாபலன்கள் தானே.

வைகோ அப்படி மாறினார், சீமானும் மாறுவார்.......! மாறிவிட்டுப் போகட்டுமே....அரசியல் யாருடைய அப்பன் வீட்டுச் சொத்தும் இல்லையே.......பிறகு என்ன ? நம்பிக் கழுத்தறுத்தவர்கள் நிறைய உண்டு தான்....அவர்களிடம் மட்டும் தான் கழுத்து அறுத்து கொள்வேன் என்பது மட்டும் என்ன கொள்கையோ, சீமான் நாளைக்கே கழுத்தறுத்தாலும் அவர் ஏற்கனவே கழுத்து அறுத்தவர் இல்லையே.

வரும் தேர்தலில் யார் முதல்வராக வரவேண்டும் என்பதைவிட யார் தொடரக் கூடாது என்கிற முடிவில் ஜெவுடன் கைகோர்த்த சீமானின் முடிவு என்னைப் போன்ற பொதுவானவர்களால் வரவேற்கத்தக்கது.

சீமான் ஒன்றும் வைகோ போன்று ஒடுங்கிய புலி அல்ல... அடிபட்ட புலி

கமான் சீமான் கமான் !

சீமான் முடிவு சரியானதே......பதிவர் மோகன்தாஸின் பதிவு

43 கருத்துகள்:

Robin சொன்னது…

இது நகைச்சுவை பதிவா?

நிகழ்காலத்தில்... சொன்னது…

வரும் தேர்தலில் யார் வெற்றி பெறக்கூடாது என்பதில் நிச்சயம் கூடுதல் கவனம் செலுத்தத்தான் வேண்டும்.

மு.இரா சொன்னது…

நல்ல செய்திகளை இங்கே கோடிட்டுகாட்டினைமைக்கு நன்றி.
அய்யா நெடுமாறனுக்கு அடுத்தபடியாக, நான் மதிக்கும் பெரும் தலைவர் சீமான் அவர்கள்... தலைவர் என்பதை விட நம்மில் ஒருவர் என்று கூறவே தோணுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//
Robin said...
இது நகைச்சுவை பதிவா?

4:09 PM, January 12, 2011//

நகத்தைக் கடித்துக் கொண்டே படித்தீர்களா ?
:)

^ சித் || sid ^ சொன்னது…

சிங்கப்பூர் ல இருந்து தமிழ் நாட்டுல வார்டு கவுன்சில் தேர்தல் நிக்கலாம் போல ...

tharuthalai சொன்னது…

கருணனிதி குடும்பத்தின் துரோகங்களையும், தி.மு.க.வின் கையாலாகாத்தனத்தையும் அடுக்கிக்கொண்டு போகலாம். அதை சீமான் செய்வார் என்று எதிர்பார்த்தேன். அன்னல் தானும் ஒரு 'கைப்புள்ள' ஆக ஆசைப்படுகிறார் போல.

தயவுசெய்து ஜெயலலிதா, விஜயகாந்து எல்லாம் மாற்று என்று சொல்லதீர்கள்.

சமரசமின்றி மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டிய சீமான் இப்படி தவறான முடிவுகளை எடுப்பது வருத்தமளிக்கிறது.

எலும்புத்துண்டுக்கும் பொறைகளுக்கும் ஆசைப்பட்டு வரிசையில் நிற்கும் கைப்புள்ள, வெறுமா பின்னால் நிற்க எதற்கு இந்த வீராப்பு?

-----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -ஜன'2011)

எல் கே சொன்னது…

பொறுத்திருந்து பார்ப்போம் கோவி அவர்களே

கோவி.கண்ணன் சொன்னது…

//
^ சித் || sid ^ said...
சிங்கப்பூர் ல இருந்து தமிழ் நாட்டுல வார்டு கவுன்சில் தேர்தல் நிக்கலாம் போல ...

4:39 PM, January 12, 2011// இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருந்தால் பாகிஸ்தானில் இருந்து கூட சீர்காழியில் நிற்கலாம்

தமிழ்மலர் சொன்னது…

தேர்தலில் வைகோ, நெடுமாறன், ராமதாசு, திருமாவளவன், சீமான், பெரியார் திராவிடகழகம் இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் ஈழம் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் வெற்றி செயலலிதாவுக்கோ கருணாநிதிக்கோ சொந்தமாகிவிடும் என்பது தான் நிதர்சன உண்மை.

திமுக காங்கிரசை தோற்கடிக்க எதிரணியில் இருக்கும் பெரிய கட்சிக்கு ஆதரவாக ஓட்டுகேட்கும் சீமானின் முடிவு 100% வரவேற்க கூடியது தான்.

இது குறித்த எனது பதிவு...

http://tamilmalarnews.blogspot.com/2011/01/blog-post_12.html

மு.சரவணக்குமார் சொன்னது…

சீமான் தலை குப்புற விழுந்தார்.ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை, ஏன் தெரியுமா? அவருக்குத்தான் மீசையே இல்லையே!

இது மாதிரித்தான் நகைச்சுவை ததும்ப இருக்கிறது உங்கள் பதிவு!

கோவி.கண்ணன் சொன்னது…

//மு.சரவணக்குமார் said...
சீமான் தலை குப்புற விழுந்தார்.ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை, ஏன் தெரியுமா? அவருக்குத்தான் மீசையே இல்லையே!//

இப்போதாவது அவர் இவ்வளவு நாளும் நிண்ணு தான் ஆடினார், அவங்க ஆடிப் போனங்க என்று சொல்லாமல் சொல்கிறீர்களோ !
:)

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// நம்பிக் கழுத்தறுத்தவர்கள் நிறைய உண்டு தான்....அவர்களிடம் மட்டும் தான் கழுத்து அறுத்து கொள்வேன் என்பது மட்டும் என்ன கொள்கையோ,//

Well said . ஒன்று புரிகிறது. என்னதான் சொன்னாலும் இம்முறை சீமானின் Impact சற்று அதிகமாகவே இருக்கும். அவருக்கு கூடும் இளைஞர்களின் கூட்டமே சான்று.
அவ்விடத்திலும் வயிற்றில் கேஸ் உண்டாக ஆரம்பித்துவிட்டது.

மு.சரவணக்குமார் சொன்னது…

இத்தனை நாள் நின்று ஆடியதால்தான் அவர் கவனிக்கப் படுகிறார்.மாற்று அரசியலை முன்னெடுப்பதில் சமரசத்திற்கு இடமில்லை.

கொள்கையே பெரிதென காங்கிரஸையும், காந்தியையும் தூக்கி எறிந்த பெரியாரின் துணிச்லில் கொஞ்சமேனும் இவரிடம் எதிர்பார்த்தேன். ஏனெலில் சிமானுக்கு அரசியல் நிர்பந்தங்கள் இல்லை, நேற்றுவரை தனிபப்ட்ட எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாத மனிதராகத்தான் தெரிந்தார்.

மு.சரவணக்குமார் சொன்னது…

திடீரென தேவரின் சமாதியில் அஞ்சலி செலுத்தி தன் தேவரின அடையாளத்தை காட்டிக் கொண்டது...

இலங்கை படவிழாவில் கலந்து கொண்டவர்களை புறக்கணிப்போம் என க்ர்ஜித்து விட்டு தம்பி சூர்யாவுக்காக விலக்கு அளிக்கிறோம் என வளைந்து கொடுத்தது....

கால்ஷீட் கிடைக்கிறது என்பதற்காக விஜய் மாதிரியான சோப்ளாங்கி ஹீரோக்களுக்கு உண்மைத் தமிழன், உரிமைத் தமிழன் என சர்ட்டிஃபிகேட் கொடுத்தது என ...

அவர் நீர்த்து போனதை புரிந்து கொள்ள நாம்தான் தவறிவிட்டோமென தோன்றுகிறது.

மு.சரவணக்குமார் சொன்னது…

இந்த மனிதர் தமிழகத்தின் பால் தாக்கரேயாக வருவதற்கும், திராவிர கொள்ளையர்களை தட்டிக் கேட்கும் அல்லது மிரட்டும் ஒரு சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பினை தவற விட்டுவிட்டாரோ என்பதே என்னுடைய ஆதங்கம்....

பெயரில்லா சொன்னது…

துரோகி, எதிரி என்பதெல்லாம் சரி தான். இது தாழ்வு அது உச்த்தி என்பது கூட ஒத்துக்கொள்வோம். ஆனால் துரோகியை ஒழிப்பதற்கு எதிரியிடம் கை கோர்த்தால் பின்னர் வெற்றி அடைய 'நாம்' இருக்க மாட்டோமே! இறுதி வெற்றி எதிரி க்கு தானே...!

சி. கருணாகரசு சொன்னது…

இன்றைய சூழலுக்கு சீமானின் முடிவு ஏற்கத்தான் வேண்டியுள்ளது....

சி. கருணாகரசு சொன்னது…

தமிழ் மலர் கருத்து மிக சரியா படுதுங்க.....

சே.முகம்மது ஆதம். சொன்னது…

அரசியலில் ஏதும் நடக்கலாம் இதுவும் நடக்கலாம் வாழ்த்துக்கள் சீமான்

Prakash சொன்னது…

Can expect below shall happen in due course,

1. Jaya shall never meet Seemon or she will not allow Seemon to meet her in Boes Garden or ADMK HQ.
2. All dealings with Seeman shall be done thru ViKO only and Jaya will treat Seeman as untouchable.
3. Jaya & Seemon shall never share a common dias in any public meeting.
4. If Seemon & his party is contesting in any constituency, Jaya shall NOT campaign in those Constituencies.
5. If ADMK losses the election, CHO and other likeminded ADMK sympathizers shall say, because of “terrorists” like Seemon supported and campaigned for ADMK, it lost the election.

Though DMK to be defeated because of its recent Anti Tamil policies and becoming slave of Congress.

But the question is,

BY WHOM DMK to be defeated?

Is it by the hands of Brahminical elements like CHO & Jaya Or Is it by biased North Indian Vested elements who wants to defame Dravidian identity. No way…DMK to be defeated only by a True Tamil party. This might not happen during this election, but Seemon & likeminded parties need to become a mainstream political party and do this in 2016.

In this 2011 election, Seemon can focus only in Congress Constituencies and ensure their defeat.

ராவணன் சொன்னது…

உங்களுக்கு ஓட்டு உள்ளதா? எனது ஓட்டை எப்போதோ புடுங்கிவிட்டார்கள்.
எல்லாம் அரசியல்.ஆனா கள்ளஓட்டுப் போடலாம்.

ஆனால் ஓட்டுப்பொறுக்கி அரசியலில் ஓட்டுப் போடுவது எனக்குப் பிடிக்காது.
நாங்கெல்லாம் பொரச்சி செய்கின்றோம்.

Avargal Unmaigal சொன்னது…

//////ஜெ காலில் விழ வைப்பவராம். உண்மை தான். அஜித்திற்கு நேர்ந்த அவமானம், மிரட்டல்கள், கருணாநிதி என்று மேடையில் சொன்னதற்காக கவுதம் மேனனுக்கு நடந்தது எல்லாம் என்ன ? விஜய் ஜெவைத் தேடிப் போனதன் காரணம் என்ன ? இவை எல்லாம் காலில் விழாததால் ஏற்பட்ட பலாபலன்கள் தானே./////

சரியாக சொன்னிர்கள் திரு.கண்ணன் ........

ஜெகதீஸ்வரன்.இரா சொன்னது…

நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிக்கும் சில தினங்களுக்கு முன் சீமான் சொன்னது.. எந்த ஒரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டனி வைக்கும் நிலை ஏற்ப்பட்டால் கட்சியை கலைத்துவிட்டு திரைப்படம் இயக்க சென்றுவிடுவேன்.

இது அவரின் கொள்கை சறுக்கலையே காட்டுகிறது. இருந்தாலும் தற்க்கால தேவையை கருத்தில் கொண்டு இயக்கத்தையும் தமிழினக் குரலையும் நிலைநிறுத்தவே இந்த அ.தி.மு.க ஆதரவு என நினைக்கிறேன்.

நிலையாக இல்லாத எந்த ஒரு அரசியல் கட்சியும் இயக்கிய கொள்கைகளுடன் இலக்கை அடைவது இயலாத காரியம்தான்.

தர்மம் வெல்ல கீதையின் வழியே தற்க்காலத் தேவை.
அண்ணன் வழியில் சொல்ல வேண்டுமானால் எதிரிகளே எங்களுக்கு ஆயுதம் தருவான் அவனை எதிர்த்து சண்டையிட..!!

Shanthamoorthi சொன்னது…

என்னுடைய நிலைப்பாடும் உங்களை போன்றது தான். அது போதுமா? கோவி அவர்களே உங்களை போன்றவர்களின் சிந்தனைக்கு....
http://www.shansugan.net/2011/01/12/india-tamilnadu-polatical-change-in-your-han/

ரிஷபன்Meena சொன்னது…

ஆனா அம்மாகிட்ட காலந்தள்ளுவதற்குள் நாக்குத் தள்ளப் போகிறது.(சீமானுக்கு)

சுவனப்பிரியன் சொன்னது…

அரசியலில் ஏதும் நடக்கலாம் இதுவும் நடக்கலாம்

Santhose சொன்னது…

There are some exceptions in every field. We think that Seemaan is an exception in political and few (or Intellectual people or Elaam supporters) support Seeman.

But he proved that he is not an exception and he proved that he is also compromise issues like other politicians.

There are 2 groups in TN politics (supporters of Karunanidhi or Jaya)
they always (you are also not an exceptions) support and find reasons to support them.

I didn't find any difference between your post and Lucky's post.

Do not fool us by giving reasons for this.

Santhose

ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) சொன்னது…

உண்மை தான் கண்னன் ஆனால் நம் நாடு இன்னும் அறியாமை நிறைந்த நாடகவே உள்ளது ...பணம் பத்தும் செய்யும் நம் நாட்டில்

ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) சொன்னது…

உண்மை தான் கண்னன் ஆனால் நம் நாடு இன்னும் அறியாமை நிறைந்த நாடகவே உள்ளது ...பணம் பத்தும் செய்யும் நம் நாட்டில்

daniel surender சொன்னது…

மதவாதிகளையும் இனவாதிகளையும் மாற்றமுடியாது. சீமான் போன்ற சந்தர்ப்பவாதிகளையும் மாற்றமுடியாது.சீமான் மீது பற்றுக் கொண்டவர்கள் எல்லாம் ஒரு முட்டாள். மனித மிருகங்களைஎல்லாம் கடவுள் என்று நம்பும் இந்தியனுக்கு சீமான் ஒரு போராளி. என்னைப் போன்ற தமிழனுக்கு சீமான் ஒரு கோமாளி.இவன் போன்ற ஒருசில குள்ளநரிகளால் தான் தமிழனுக்கு அவலம்.உணர்ட்சிபூர்வமாக பேசும் ஒருவனிடம் அறிவுபூர்வமாக செயற்படமுடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//மனித மிருகங்களைஎல்லாம் கடவுள் என்று நம்பும் இந்தியனுக்கு சீமான் ஒரு போராளி. என்னைப் போன்ற தமிழனுக்கு சீமான் ஒரு கோமாளி//

வெள்ளைக்காரனுக்கு சுபாஷ் ஒரு தீவிரவாதி, இந்தியனுக்கு போராளி. எல்லாம் அவரவர் பார்வையில் பாதிப்பில் தான் இருக்கு

கோவி.கண்ணன் சொன்னது…

//ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...
உண்மை தான் கண்னன் ஆனால் நம் நாடு இன்னும் அறியாமை நிறைந்த நாடகவே உள்ளது ...பணம் பத்தும் செய்யும் நம் நாட்டில்

8:31 AM, January 13, 2011//

மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//Santhose said...
There are some exceptions in every field. We think that Seemaan is an exception in political and few (or Intellectual people or Elaam supporters) support Seeman.

But he proved that he is not an exception and he proved that he is also compromise issues like other politicians.//

இருந்துட்டுப் போகுது, ஏற்கனவே கொள்ளையடிச்சவன் தான் கொள்ளை அடிக்கும் தொழில் செய்யனுமா ? அவ்வ்வ்

//There are 2 groups in TN politics (supporters of Karunanidhi or Jaya)
they always (you are also not an exceptions) support and find reasons to support them.

I didn't find any difference between your post and Lucky's post.

Do not fool us by giving reasons for this.

Santhose//

என்னை பொருத்த அளவில் ஜெ வை விட கருணாநிதியின் மலிவு அரசியல் அறுவெறுப்பாகத்தான் இருக்கு

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
அரசியலில் ஏதும் நடக்கலாம் இதுவும் நடக்கலாம்

4:43 AM, January 13, 2011//

நடக்கட்டும் நடக்கட்டும்.......ஓடும் வரை நடக்கட்டும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//
ரிஷபன்Meena said...
ஆனா அம்மாகிட்ட காலந்தள்ளுவதற்குள் நாக்குத் தள்ளப் போகிறது.(சீமானுக்கு)

3:45 AM, January 13, 2011//

சீமான் இந்த விசயத்தில் ஆளும் கட்சியை ஒழித்துக்கட்ட செய்யும் சந்தர்பவாத அரசியல் தான் அம்மா கூட்டணி என்றாலும், செயல் சரிதான். அரசியலில் சந்தர்பவாதத்தைப் பயன்படுத்தாதோர் யார் ?

கோவி.கண்ணன் சொன்னது…

// Shanthamoorthi said...
என்னுடைய நிலைப்பாடும் உங்களை போன்றது தான். அது போதுமா? கோவி அவர்களே உங்களை போன்றவர்களின் சிந்தனைக்கு....
http://www.shansugan.net/2011/01/12/india-tamilnadu-polatical-change-in-your-han/

1:34 AM, January 13, 2011//

கருத்துக்கு மிக்க நன்றி சாந்தமூர்த்தி ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

// கொக்கரகோ... said...
துரோகி, எதிரி என்பதெல்லாம் சரி தான். இது தாழ்வு அது உச்த்தி என்பது கூட ஒத்துக்கொள்வோம். ஆனால் துரோகியை ஒழிப்பதற்கு எதிரியிடம் கை கோர்த்தால் பின்னர் வெற்றி அடைய 'நாம்' இருக்க மாட்டோமே! இறுதி வெற்றி எதிரி க்கு தானே...!

6:39 PM, Janu//

நாளைக்கு என்ன நடக்கவேண்டும் என்பதை இன்று முடிவு செய்வது நல்லது. நாளான்னைக்கு இப்படி நடக்கும் என்று தவிர்த்தால் நாளைய பொழுதே விடியாதே

கோவி.கண்ணன் சொன்னது…

//ராவணன் said...
உங்களுக்கு ஓட்டு உள்ளதா? எனது ஓட்டை எப்போதோ புடுங்கிவிட்டார்கள்.
எல்லாம் அரசியல்.ஆனா கள்ளஓட்டுப் போடலாம்.//

உண்டு பெயர் கொடுத்து இருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//சமரசமின்றி மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டிய சீமான் இப்படி தவறான முடிவுகளை எடுப்பது வருத்தமளிக்கிறது. //

அகற்றபட வேண்டிய பொது எதிரி என்பது தானே தற்போதைய குறி, நாளை நடப்பது நாளைக்கு

கோவி.கண்ணன் சொன்னது…

// தமிழ்மலர் said...
தேர்தலில் வைகோ, நெடுமாறன், ராமதாசு, திருமாவளவன், சீமான், பெரியார் திராவிடகழகம் இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் ஈழம் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் வெற்றி செயலலிதாவுக்கோ கருணாநிதிக்கோ சொந்தமாகிவிடும் என்பது தான் நிதர்சன உண்மை.

திமுக காங்கிரசை தோற்கடிக்க எதிரணியில் இருக்கும் பெரிய கட்சிக்கு ஆதரவாக ஓட்டுகேட்கும் சீமானின் முடிவு 100% வரவேற்க கூடியது தான்.

இது குறித்த எனது பதிவு...

http://tamilmalarnews.blogspot.com/2011/01/blog-post_12.html//

மிக்க நன்றி

Dharan சொன்னது…

சீமான் இணையத்தை தாண்டி ஒரு பாதிப்பையும் தேர்தலில் திமுக வுக்கு ஏற்படுத்தப் போனதில்லை.

உணர்ச்சிவசப்படுதல் என்கிற முட்டாள்தனதில் வீழ்ந்தனர் புலிகள் என்கிற அடிப்படை உண்மை பல பேருக்கு புரிந்ததாகவே தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//
உணர்ச்சிவசப்படுதல் என்கிற முட்டாள்தனதில் வீழ்ந்தனர் புலிகள் என்கிற அடிப்படை உண்மை பல பேருக்கு புரிந்ததாகவே தெரியவில்லை.

3:38 PM, January 13, 2011//

உணர்ச்சி உள்ளவர்கள் வசப்படத்தான் செய்வார்கள். காலம் அப்படியேவும் இருக்காது. புலிகளின் வீழ்ச்சி மகாபாரதக் கதையில் அபிமன்யுவை எதிரிகள் சூழ்ந்து கொண்டு வீழ்த்தியதை நினைவுபடுத்துகிறது.

பிரியமுடன் பிரபு சொன்னது…

திமுக-வை பலர் விமர்சித்து உள்ளனர் . ஆனால் சீமான் பேச்சுக்கு ஏன் உபிகள் அதிக முக்கியதுவம் தந்து பதி விமர்சனம் செய்யுது?
பயம் தானே...

அவரின் முடிவு சரிதான்னு தோனும் , அவர் தனித்து போட்டியிட்டல் ஒன்னும் செய்ய முடியாது..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்