பின்பற்றுபவர்கள்

17 ஜனவரி, 2011

பொங்கல் பொங்கல் !

வழக்கமாக வேலை நாட்களில் வரும் பொங்கல் இந்த ஆண்டு சனிக்கிழமை வந்ததால் கொண்டாட மிக்க மகிழ்ச்சியாக அமைந்தது. சிங்கை குட்டி இந்தியாவிலும் இரு ஆண்டுகளாக பொங்கலுக்கு அலங்கார மின் விளக்குகள் ஒளிர்ந்தன. வழக்கமாக பொங்கல் காய்கறிகளுக்கு வரும் பச்சை மொச்சை இந்த ஆண்டு தேடினாலும் கிடைக்கவில்லை. தமிழக தொடர் மழையால் மொச்சைப் பூக்கள் உதிர்ந்தோ அல்லது விளைச்சல் குறைந்தோ இருக்கலாம் என்றே நினைக்கிறேன். மற்றபடி பனங்கிழங்கு, மஞ்சள், இஞ்சி மற்றும் இதர பொங்கல் காய்கறிகள் கிடைத்தன.

7:00 - 9:00 நல்ல நேரமாம். அன்று சனிக்கிழமை காலை 9:00 - 10:30 இராகு காலம். இந்தக்கணக்குகளெலெல்லாம் இந்தியாவைத் தாண்டி எடுபடுமா ? சிங்கையில் பகல் வெளிச்ச சேமிப்பிற்காக ஒருமணி நேரத்தை கூட்டியே வைத்திருக்கிறார்கள், 6:30 - மணிக்கு மேல் தான் சூரியன் வெளியே தலைகாட்டும், சூரியன் உதிப்பை வைத்து கணக்கிடும் நாள், வின்மீன் கணக்குகள் இப்படி தள்ளப்பட்ட பகல் உடைய நாடுகளில் சூரிய உதிப்பை கணக்கிட்டு ஒப்பிட்டுப்பார்பது நம்பிக்கை என்றாலும் எந்த வகையிலும் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. இருந்தாலும் இவற்றிலெல்லாம் எனக்கு சிறிதும் நம்பிக்கையும் கிடையாது. பூமி என்றாவது சுழலாமல் போனால் அன்று கெட்ட நாள், மற்றபடி எல்லா நாளும், நேரமும் என்னைப் பொருத்த அளவில் உலகில் உள்ள ஒருவருக்கேனும் நல்ல நாள் தான் நல்ல நேரம் தான்.

சனிக்கிழமை என்பதால் பொருமையாகவே பொங்கலிடுவோம் என்கிற முடிவில் காலை 7 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு 7:30 வாக்கில் பொங்கல் வைத்தோம், பானையில் பசும்பாலை ஊற்றி வைத்த பற்ற வைத்த 10 நிமிடத்திற்குள் இரு பானைகளும் பொங்கியது. இருவருக்குப் போதும் என்று சிறிய அளவில் வாங்கிய சில்வர் பானைதான், விளக்கி எடுக்க சில்வர் பானையே சரியாக இருக்கும் என்பதால் சில்வர் பானையையே பொங்கலுக்கு பயன்படுத்துகிறோம், அதுவும் சென்ற ஆண்டு அடிப்பிடிக்க அதை தமிழகம் செல்லும் போது எடுத்து நன்றாக தேய்த்து திரும்பவும் எடுத்து வந்திருந்தோம்.

வெண்பொங்கல், சர்கரை பொங்கல், மரக்கறி எல்லாம் செய்து முடிக்கவே 9:00 மணிக்கு மேல் ஆகி இருந்தது. இடையில் மகள் அரிசிமாவினால் கோலம் போட்டு முடித்திருந்தாள். அதற்குள் செங்கதிரை எழுப்பி பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் சொல்ல வைக்க அவன் கையில் தட்டையும் கரண்டியையும் பிடித்த ஒலி எழுப்பச் செய்ய, கரண்டியை வீசி எரிந்தான், பிறகு புத்தாடை அவனுக்கு அணிவித்து, பொங்கலை வழிபாட்டு அறையில் வைத்து பூசை போட்டு முடிக்க 9:30 மணிக்கு மேல் ஆகி இருந்தது. வெளிச்சத்தைப் பார்த்தால் கொண்டாட்டம் தான் அவனுக்கு, தீப ஆரதனைக்குக் முன்பே சாமி கும்பிட போட்டால் நீச்சல் அடிக்கும் (குப்புற கிடக்கும் குஷி மன)நிலையில் அவனுக்கு கட்டுக்கடங்காத மகிழ்ச்சி. சென்ற ஆண்டு இதே நேரத்தில் வயிற்றினுள் இருந்தான். எங்களுக்கும் அவன் வருகையால் இல்ல எண்ணிக்கை இந்த பொங்கலுக்கு கூடி இருந்தது மேலும் பொங்கல் கொண்ட்டாட்டத்தை உற்சாகம் ஆக்கியது.

அளவான இனிப்புடன் சர்கரைப் பொங்கல் மிகச் சுவையாகவே வந்திருந்தது. பெண்கள் மட்டும் தான் பண்பாட்டு உடைகளை அணிய சமூகம் பணித்திருக்கிறது, நினைக்க வெட்கமாக இருக்க... இன்னிக்காவது வேட்டி அணிவோம் என்றே நான் அணிந்திருந்தேன். அன்று முழுவதுமே வெளியிலும் கூட வேட்டியுடன் சென்று வந்தேன். ராம்ராஜ் வேட்டி சட்டை நல்லா தான் இருக்கு. தூய வெள்ளையில் கட்டியதும் நான் தமிழன் என்கிற ஒரு கர்வத்தைக் கொடுக்கிறது, வேட்டி அணிபவர்கள் கண்டிப்பாக அதை உணர்கிறார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு சில மனத்தடைகளைத் தவிர்த்து என்னைக் கேட்டால் ஆண்களுக்கு எளிதான, உடுத்த வசதியான (சவுகரியம்) உடை வேட்டி தான்.

வழக்கமாக பொங்கல் அன்றே வரும் பொங்கல் இடுகை, வீட்டில் கணிணியை பதிவெழுதப் பயன்படுத்தக்கூடாது, படிக்க மட்டுமே என்கிற தற்கட்டுப்பாட்டினால் இன்று வந்துள்ளது.

பொங்கல் கொண்டாடிய, தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடிய அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.


இது சென்ற பொங்கல் :

2009 பொங்கல்

9 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பொங்கலோ பொங்கல்..... ! வாழ்த்துக்கள் சார்!

கக்கு - மாணிக்கம் சொன்னது…

இன்றும் கூட கல்யாண வைபவங்கள், புதுவீடு குடி போவது போன்ற விழாக்களுக்கு செல்ல நேர்ந்தால் ஜரிகை வேட்டி சட்டையுடன் செல்வதே வழக்கம். அது எனக்கு பழகிப்போன ஒன்று.வீட்டிலும் அபடித்தா இருப்பேன்.தொட்டதற்கெல்லாம் "கொழசட்டையை " போட்டுகொள்வது எரிச்சலைத்தான் தருகிறது.
அதே சமயம் அந்த விழாக்களில் ஈடுபடுபவர்கள் ஜீன்ஸ், பான்ட் ,டி ஷர்ட் என்று நிற்கும் கோலத்தை பார்த்தல் பரிதாபமாக இருக்கும். வேஷ்டி அணிவது மிகவும் சரியான, எளிமையான. மரியாதையான ஒன்றுதான்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கண்ணன்.

மாணவன் சொன்னது…

பொங்கல் சிறப்பாகவே கொண்டாடியிருக்கீங்க வாழ்த்துக்கள் சார்

இனிய உழவர்தின நல்வாழ்த்துக்கள்

RAZIN ABDUL RAHMAN சொன்னது…

சகோ கோவிக்கண்ணன் அவர்களே,உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும்,இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

சிங்கப்பூர் பொங்கல் நல்லவே இருக்கு..படங்கள் அருமை..

/தொடர் மலையால்/ - திருத்திக்கொள்ளவும்..

அன்புடன்
ரஜின்

கோவி.கண்ணன் சொன்னது…

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பொங்கலோ பொங்கல்..... ! வாழ்த்துக்கள் சார்!

4:14 PM, January 17, 2011//

மிக்க நன்றி சார்

கோவி.கண்ணன் சொன்னது…

//
கக்கு - மாணிக்கம் said...
இன்றும் கூட கல்யாண வைபவங்கள், புதுவீடு குடி போவது போன்ற விழாக்களுக்கு செல்ல நேர்ந்தால் ஜரிகை வேட்டி சட்டையுடன் செல்வதே வழக்கம். அது எனக்கு பழகிப்போன ஒன்று.வீட்டிலும் அபடித்தா இருப்பேன்.தொட்டதற்கெல்லாம் "கொழசட்டையை " போட்டுகொள்வது எரிச்சலைத்தான் தருகிறது.
அதே சமயம் அந்த விழாக்களில் ஈடுபடுபவர்கள் ஜீன்ஸ், பான்ட் ,டி ஷர்ட் என்று நிற்கும் கோலத்தை பார்த்தல் பரிதாபமாக இருக்கும். வேஷ்டி அணிவது மிகவும் சரியான, எளிமையான. மரியாதையான ஒன்றுதான்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கண்ணன்.

4:27 PM, January 17, 2011//

நீங்கள் சொல்வதை வழிமொழிகிறேன்.

உங்களுக்கும் நல்வாழ்த்துகள் கக்கு - மாணிக்கம்

கோவி.கண்ணன் சொன்னது…

//
மாணவன் said...
பொங்கல் சிறப்பாகவே கொண்டாடியிருக்கீங்க வாழ்த்துக்கள் சார்

இனிய உழவர்தின நல்வாழ்த்துக்கள்

4:28 PM, January 17, 2011//

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சார்

கோவி.கண்ணன் சொன்னது…

// RAZIN ABDUL RAHMAN said...
சகோ கோவிக்கண்ணன் அவர்களே,உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும்,இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

சிங்கப்பூர் பொங்கல் நல்லவே இருக்கு..படங்கள் அருமை..

/தொடர் மலையால்/ - திருத்திக்கொள்ளவும்..

அன்புடன்
ரஜின்

1:29 PM, J//

ரஜின்,

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி

திகழ் சொன்னது…

இனிய தமிழ்ப் புத்தாண்டு,தைப்பொங்கல் வாழ்த்துகள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்