பின்பற்றுபவர்கள்

20 ஜனவரி, 2011

பிள்ளைக்கறி, பலி கேட்ட கடவுள்கள் !

நரபலி என்றதும் எதோ போலி சாமியார் அல்லது மந்திரவாதிகள் செய்யும் கொடிய செயல் என்று நினைக்கிறோம். ஆனால் இவை பக்தி ஆன்மிகம் என்ற பெயரில் போற்றபடுவது எத்தனை பேருக்குத் தெரியும். தான் விரும்பும் ஒன்றை வேண்டுதல் நிறைவேறியதும் கடவுளுக்காக விட்டுக் கொடுப்பது என்பது காலம் காலமான இறை நம்பிக்கையில் ஒன்று அதன் நீட்சியாக பெற்றப் பிள்ளையை பலி கொடுப்பது, அல்லது வேண்டிய வரம் கிடைக்க மாற்றான் பிள்ளையை கடத்தி பலி கொடுப்பது இவையெல்லாம் அண்மைக் காலம் வரையிலும் கூட நடந்தேறிவருகிறது. மின்னொளி காலத்திலேயே இப்படி என்றால் படிப்பறிவும், உலக அறிவும் இல்லாதா இருண்ட காலங்களில் இவை நடைபெற்றது மிகுதியாவே இருந்திருக்க வேண்டும்.

சேக்கிழார் "அருளிச்" சமைத்த திருத்தொண்டர் என்னும் பெரிய புராணத்தில் பெற்ற பிள்ளையை இறையடியார்களுக்கு கறி சமைத்துக் கொடுத்த சிறுதொண்டர் என்னும் அடியார் பற்றிய கதை ஒன்று உண்டு, தட்டச்சப் பொறுமையில்லை, அதில் புதிதாக ஒன்றும் சொல்லப் போவதில்லை, எனவே கூகுளிட்டத் தேடலில் கிடைத்தக் கதையை அப்படியே தருகிறேன்.

சிவனடியாருக்கு அன்னம் அளித்தப்பின் தான் சிறுதொண்டர் சாப்பிடுவது வழக்கம். மன்னரின் சேனதிபதியான பரஞ்சோதியாரே இவர். ஒரு நாள் அவ்ர் வீட்டிற்கு ரொம்ப நேரமாகியும் ஒரு அடியாரும் வராததால் அடியாரைத் தேட இவர் வெளியில் சென்றார். அவரைச் சோதிக்க எண்ணி சிவபெருமானே இப்படி ஒரு நாடகம் நடத்தினார். சிவனே ஒரு பைரவர் சடாதாரி வேஷத்தில் வந்து சாப்பிட கேட்டார். அவரது மனைவி மகிழ்ந்து, "அடியாரைத் தேடித்தான் என் கண்வர் போயிருக்கிறார். இதோ வந்துவிடுவார் என்றார். சிவனும் வெளியே ஒரு மரத்தடியில் அமர்ந்தார். பின் சிவன் வந்தபின் சாப்பாடு தயாராக இருந்ததால் இலை போடப்பட்டது, ஆனால் சிவனோ அவரது மகனைக் கறி செய்து படைத்தால்தான் தான் சாப்பிடுவேன் என்று சொல்ல, அடியாருக்கு அன்னம் படைப்பதே தன் முதல் கடமை என்பதால் அதேபோல் தன் ஐந்து வயது மகன் சீராளத்தேவன் பள்ளியிருந்து வந்ததும் அவன் சம்மதத்துடன் தம்பதிகள் இருவரும் அவனை வெட்டிக் கறி சமைத்தனர். பின் உணவு உண்ணும் சமயம் சிவன் ரூபத்தில் இருந்த அடியார், "பிள்ளை இல்லாத வீட்டில் நான் உண்ண மாட்டேன் என்று சண்டி பண்ண, சிறுத்தொண்டர் மனம் கலங்கி சிவபெருமானை வேண்ட, பின் வெட்டப்பட்டு உணவாக இருந்த மகன் உயிருடன் திரும்பி வந்தான்.

இந்தக் கதை உண்மை என்றால் இது போன்றச் செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியது மற்றபடி கற்பனையாக இருந்தால் இது போன்ற சமூகக் கேடு மற்றும் மூட நம்பிக்கையின் உச்சமான அபத்தக் கற்பனை என்பதால் நிராகரிப்பதுடன் கண்டிக்கத்தக்கது. இதை இலக்கியமாக பதித்த சேக்கிழார் தற்போது இல்லை என்பதால் இதை மிகச் சிறந்த பக்தியின் / அன்பின் வெளிபபடு என்பவர்கள் கண்டிக்கத் தக்கவர்கள். இது போன்ற அபத்த கற்பனைகளும், நடப்புகளும் சைவ சமயத்திலோ அல்லது இந்து மதத்திலோ மட்டும் தான் இருக்கிறது என்று கருதத் தேவை இல்லை.

ஆப்ரகாமிய மதங்களில் ஒரு பொதுக் கதை உண்டு, இது பழைய ஏற்பாட்டிலும், குரானிலும் சொல்லப்படுகிறது, இஸ்ரவேலர்கள் பின்பற்றும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்படுவது படி ஆப்ராகாமின் இருமனைவிகளான ஹகர் மற்றும் சாராவிற்குப் பிறந்த குழந்தைகள் முறையே ஈசாக் மற்றும் இஸ்மாயில் என்பவர்கள் ஆகும், முதல் மனைவியான சாராவுக்கு குழந்தைப் பேரு இல்லாததால் இரண்டாவதாகப் மணந்து கொண்ட எகிப்திய மனைவியான ஹகருக்கு பிறந்தவர் இஸ்மாயில், இஸ்மாயில் பிறந்த பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு சாராவும் ஒரு மகனைப் பெற்றெடுத்தார், அவர் பெயர் ஈசாக். இஸ்மாயில் எகிப்திய மனைவி குழந்தையாதலால் இஸ்லாமாயிலை இஸ்ரவேலர்களும் சாராவும் வாரிசாக அங்கீகரிக்கவில்லை. பின்பு அவர்கள் எகிப்திற்கே திரும்பச் சென்றுவிட்டார்கள். ஈசாக் இஸ்ரவேலர்களின் வாரிசாகத் தொடர்ந்தார். ஆப்ரகாமை சோதிக்க விரும்பிய இறைவன் ஈசாக்கை பலி இட பணித்தார், இறைவன் விருப்பதை ஏற்ற ஆப்ரகாம் ஈசாக்கை பலியிட வாளை உயர்த்த இறைவனால் தடுக்கப்பட்டு, ஆப்ராமின் நேர்மை பாராட்டப்பட்டு ஈசாக்கு பதிலாக ஒரு கம்பளி ஆட்டை பலியிடச் சொன்னார் இறைவன் என்பதாகக் கதை முடிகிறது. ஈசாக் வழிவந்தவர்கள் இஸ்ரவேலர்கள் எனவும், இஸ்மாயிலின் வழிவந்தவர்கள் இஸ்லாமியர்கள் என்பவும் இஸ்ரவேலர்களுக்கு மற்றொரு இறைத் தூதரான மோசஸ் கிடைத்தார் என்பதும் பழைய ஏற்பாட்டை பின்பற்றுபவர்களின் நம்பிக்கை.


இதே கதை சற்று மாறுபட்ட வடிவத்துடன் குரானிலும் சொல்லப்படுகிறது. இப்ராஹிம் (ஆப்ரகாம்) மகன் இஸ்மாயில் என்று சொல்லபடுவதுடன் மகனைப் பலியிட இறைவன் கட்டளை இட்டான், பலியிடும் நேரத்தில் இறைவனால் தடுக்கப்பட்டு மகனுக்கு பதிலாக ஆட்டைப் பலியிட்டால் போதும் என்று இறைவன் பணித்தான் என்பது குரானில் சொல்லப்படும் கதை. குரானில் இஸ்மாயிலின் தாய் பெயர் குறிப்பிடப்படவில்லை என்கிறார்கள். இரண்டு கதையிலும் கம்பளி ஆடும், ஆடும் இடம் பெறுகிறது, பலி இடப்படுபவர் பெயர் வேறு, ஆனால் அவர்களின் தந்தை ஒருவரே. இஸ்ரவேலர்கள் சொல்லுவது திரிக்கப்பட்டக் கதை எனவும் குரானை அல்லாவே நேரடியாக ஜிப்ரல் (காப்ரில்) மூலமாக இறைத்தூதர் முகமது நபிக்குச் சொன்னதால் அல்லாச் சொன்னதே உண்மையான கதை என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். பலி இட கட்டளை இட்டது ஈசாக்கையா அல்லது இஸ்மாயிலையா என்று குரானில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இஸ்லாமியர்கள் இஸ்மாயிலையே பலியிடச் சொல்லி இருக்கக் கூடும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை, மேலும் இஸ்லாமியர்கள் தொழுகையை நோக்கிய புனிதத் தலமான காஃபாவை கட்டியவர் இஸ்மாயில் என்பதும் அவர்களின் நம்பிக்கை. இஸ்மாயிலை இப்ராஹிம் நபி பலியிடத் துணிந்ததைத் தான் தியாகத் திருநாள் (பக்ரீத்) என்று கொண்டாடப்படுகிறது.

*****

மேற்கண்ட இந்துமத (சைவ சமய) கதைகளிலும், சரி ஆப்ரகாமிய மதக்கதைகளிலும் சரி குழந்தைகள் உயிருடன் மீண்டதாக அல்லது பலியிடாமல் மீண்டதாகச் சொல்லப்படுவது சற்று ஆறுதலான முடிவு. இறைவன் நரபலி கேட்பதாகவும், கொடுப்பதாகவும் அதுவும் பெற்ற மகனையே இறைவன் கேட்பதாகச் சொல்லப்படும் கதைகள் எந்த ஒரு தனிபட்ட மதத்திற்கும் உடையகதைகளோ, அவைகள் மட்டும் தான் மூட நம்பிக்கைகளைக் கொண்டிருந்தது என்று சொல்ல எதுவும் கிடையாது. ஆனால் இம்மதங்கள் ஒன்றை ஒன்று மூடநம்பிக்கைக் கொண்டுள்ளதாகத் தான் சாடிக் கொள்கின்றன எவ்வளவு நகைமுரணானது என்பதே இந்த இடுகையில் நான் ஒப்பிட்டு அளவில் பதிய வைத்துள்ளேன்.

இணைப்புகள் :
சிறுதொண்டர்
ஈசாக்
இஸ்லாமியில்
ஆப்ரகாம்

8 கருத்துகள்:

எல் கே சொன்னது…

கோவி அண்ணே, அந்தக் கதை நானும் அறிவேன். அவர் தனக்கு பலி வேண்டும் என்றுக் கேட்கவில்லை. சிறுத் தொண்டரை சோதிப்பதற்கே, அவரது பக்தியை சோதிக்கவே இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. வெறும் சம்பவத்தை மட்டும் பார்க்காமல் பின்னுள்ள கருத்தையும் பார்க்கவும்.

மற்றப் படி, இடையே கொஞ்ச காலம், நரபலி இடும் ஒரு சிறு பிரிவு இருந்தது ,அவை காபாலிகம் மற்றும் காளாமுகம் என்ற இரு பிரிவினர் அப்படி செய்தனர். பின் அவை காலப் போக்கில் அழிந்துவிட்டன.,

புரிதலுக்கு நன்றி

உமர் | Umar சொன்னது…

நல்ல ஒப்பீடு.

எல்லா மதங்களுமே கற்பனைக் கதைகளை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டவையே.

எல்லாம் தெரிந்த கடவுளுக்கு ஏன் பக்தனின் பக்தியை அறியும் ஆற்றல் இல்லை? சோதனைகள் வைத்துதான் அறிந்துகொள்ள முடிந்தால் அவர் எப்படி கடவுள்?

கோவி.கண்ணன் சொன்னது…

//
எல்லாம் தெரிந்த கடவுளுக்கு ஏன் பக்தனின் பக்தியை அறியும் ஆற்றல் இல்லை? சோதனைகள் வைத்துதான் அறிந்துகொள்ள முடிந்தால் அவர் எப்படி கடவுள்?

5:06 PM, January 20, 2011//

மாணவனைப் பற்றி ஆசிரியர் நன்கு அறிந்தும் தேர்வு வைத்து மதிப்பெண் போடுவதில்லையா ? :)

பக்தனைப் பற்றித் கடவுளுக்கு நன்குத் தெரியும் ஆனா பக்தன் என்ன நினைக்கிறான் என்று கடவுளுக்குத் தெரியாது போலும்னு நாம புரிஞ்சுக்கனும் :)

உமர் | Umar சொன்னது…

மதத்தின் பெயரால் சொல்லப்படும் கதைகளை, அப்படியே நம்புபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

முன்னர் நித்தியானந்தா செய்த விஷயங்கள் எல்லாம், 'கவனிக்க' வேண்டிய விதத்தில் கவனித்து முடிந்து விட்டன. இப்பொழுது இன்னொரு மதவியாபாரி சிக்கியிருக்கின்றான். யமுனை நதிக்கரையில் ஜல்சா செய்து அதை விடியோ எடுத்து பணம் சம்பாதித்திருக்கின்றான்.

வாழ்க மக்களின் மதப்பற்று! வளர்க அதனை மூலதனமாக்கி காசு பார்க்கும் கூட்டம்.!

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி அண்ணே, அந்தக் கதை நானும் அறிவேன். அவர் தனக்கு பலி வேண்டும் என்றுக் கேட்கவில்லை. சிறுத் தொண்டரை சோதிப்பதற்கே, //

மனிதன் என்பவன் தனித்தனியானவன் ஒரு பக்தனை சோதிக்க அவனுடைய தலையைக் கேட்லாம், அவனுடைய மகனைக் கேட்பது முறையற்றது. பெற்றவர்களே பிள்ளையைக் கொன்றால் அரசுகள் கூட அதைக் கொலை என்று தான் சொல்லுகின்றன.

உதிரச்சூடு சொன்னது…

நண்பர்.கோவி .. தங்கள் பதிவு பக்கத்திற்கு நான் புதியவன் . எனக்கு புரிதலுக்கட்பட்டு சொல்கிறேன் ..

பக்தனைப் பற்றித் கடவுளுக்கு நன்குத் தெரியும் ஆனா பக்தன் என்ன நினைக்கிறான் என்று கடவுளுக்குத் தெரியாது போலும்னு நாம புரிஞ்சுக்கனும் :) ///

பக்தன் என்ன நினைக்கிறான் என்பது கடவுளுக்கு தெரியும் ... ஆனால் அதை உங்களுக்கு தெரிவிப்பது எப்படி ...? மாணவன் புத்திசாலி என்று ஆசிரியர்க்கு தெரியும் அதை மற்றவருக்கு தெரிவிப்பதன் சான்றே பரீக்சை இல்லையா ...?


எல்லா மதங்களுமே கற்பனைக் கதைகளை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டவையே. ///

மிக தவறு ... அதன் கொள்கைகளின் சார் கதைகள் கட்டமைக்கபட்டன என்பதே ஏற்ப்புடையாதாக இருக்கும் என்பது என் கருத்து ..

Unknown சொன்னது…

அல்லாஹ் யாரையும் சோதிக்கலையா அப்படியே சோதிக்காமல் உண்மையான பக்தியை எப்படி அறிவார் அப்படி அறிந்து இருந்தால் இஸ்ரவேலர் அடியையாகிருக்கு மாட்டாட்டார்கள்

Unknown சொன்னது…

அண்ணே அரபியில் கூட ஒரு வியாபாரி இருக்கான்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்