உலக அளவிலான ஒலிம்பிக் போட்டியை சீனா வெற்றிகரமாக நடத்தி முடித்தது, ஏழைகளை இருப்பிடங்களை விட்டுத் தூறத்தினார்கள், பெய்ஜிங்க் மக்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள் என்கிற வெளி நாட்டுத் தகவல்களை தவிர்த்து சீனா ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்திமுடித்து ஐரோப்பிய நாடுகளின் விழிகளை விரிய வைத்தது.
காமன்வெல்க்த் போட்டிகளை ஏற்று நடத்துவதாக ஏற்பாடு செய்த இந்தியா பல்வேறு நாடுகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவருகிறது. துவக்கம் முதலே ஊழல் குற்றச் சாட்டுகள், தற்போது தரமற்ற கட்டுமானங்களினால் பாதுகாப்புக் கூரைகள் இடிந்துவிழவதும், மற்றும் விளையாட்டுவீரர்களுக்கான வசதிக் குறைபாடுகள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, இங்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகள் காமன் வெல்த் போட்டிகளுக்காக தங்கள் வீரர்களை அனுப்பப் போவதில்லை என்று அறிவித்திருக்கின்றனர். காமன்வெல்த் போட்டியின் கண்காணிப்புக் குழுவும் இந்தியா வந்து போட்டி நடைபெறும் இடங்களை பார்த்து ஏற்பாடுகள் நிறைவாக இல்லை என்று அறிவித்துவிட்டன. வெளிநாட்டு ஊடக செய்திகளில் காமன்வெல்த் போட்டியின் குறைபாடுகளை கட்டம் கட்டிப் போட்டு இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றிவருகிறார்கள்.
தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியில் இருக்கும் காங்கிரசு கட்சியின் கையாலகத்தனமாகவே இதனை கருதவேண்டி இருக்கிறது, வடகிழக்கில் நக்சல்களுடன் மோதல், காஷ்மீரில் பதட்டம், காமன்வெல்த் போட்டி நடைபெறும் இடத்திலேயே குண்டு வீச்சு என பாதுக்காப்பு தொடர்புடையவற்றில் காங்கிரசின் செயல்பாடுகள் எதுவும் பாராட்டுவிதமாக இல்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும், போட்டி ஏற்பாடுகளின் சொதல்பல்களையும் கருத்தில் கொண்டு பல நாடுகள் புறக்கணித்திருப்பதை நாம் தவறு என்று பார்க்க முடியவில்லை. பளுதூக்கும் அரங்கின் கூரையே இடிந்து விழுந்திருக்கிறது என்னும் போது இவர்களை நம்பி எந்த ஒரு நாடும் வீரர்களை அனுப்ப முடிவு செய்வார்கள் என்று நம்புவது நம் மடைமை.
இலங்கைப் போரில் சிங்கள இராணுவத்திற்கு உதவியதில் முனைப்புக் காட்டி தமிழர் அழிவுகளுக்கு அடிகோலியதன் சிறு பங்கை இந்திய நலனின் காட்டி இருந்தால் விளையாட்டுப் போட்டி நடத்தும் நாம் உலகின் முன்பு தலைகுணிந்து நிற்கத் தேவை இல்லை. வாரம் ஒருமுறையாவது மீனவர்கள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்தே வருகின்றன. இந்திய பாதுகாப்பும், இந்திய விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாடுகளும் இராஜபக்சேவை திருப்திபடுத்தி இலங்கை வீரர்களாவது விளையாடவருவார்களா ? அல்லது இராஜபக்சே அரசும் இந்தியாவுக்கு பை பை காட்டுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
உணவு தானியம், பாதுகாப்பு, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காங்கிரசு அரசின் செயல்பாடுகள் மக்கள் நலன் சார்ந்ததாக, இந்திய நலன் சார்ந்ததாகவோ, பொறுப்பாகவோ இல்லை. எந்த ஒரு தனிப்பெரும்பான்மை பலமும் இல்லாத நிலையில் கூட்டணி என்ற பெயரில் ஆளும் காங்கிரசு ஆட்சியை கைப்பற்றியது தவிர்த்து எந்த ஒரு சாதனையும் செய்யவில்லை, ஏழைகளுக்கு இலவச செல்போனாம், எத்தனை ஆண்டுகளுக்கு ? ஒருவேளை ஏழைகளும் செல்போன் பயன்படுத்தி பழகிக் கொண்டால் இலவச செல்போன் திட்டங்களை களையும் போது பயன்படுத்தியவர்கள் எப்படியேனும் செல்போன் பயன்பாட்டை நாடுவார்கள், அதன் மூலம் தனியார் செல்பேசி நிறுவனங்கள் பெருத்த லாபம் அடையும் என்பதைத் தவிர்த்து வேறென்ன நடக்கும் ? கருணாநிதியில் இலவச தொலைகாட்சியைப் பெற்றுக் கொண்டோர் அவர் வாரிசுகள் நடத்தும் கேபிள் நிறுவனங்களுக்கு மாதக் கப்பம் கட்டிவருவது தானே நடந்துவருகிறது. அரசுகள் அறிவிக்கும் இலவசங்களெல்லாம் தனியார் லாபங்களை கருத்தில் கொண்டவையே.
கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணங்களை விளையாட்டு நடத்த செலவிட்டு, ஏற்பாடுகளை சரியாகச் செய்யாமல் நாட்டுமக்களை தலைகுனிய வைத்துவிட்டு, சின்னதம்பி படத்தில் 'எனக்கு கல்யாணம்......எனக்கு கல்யாணம்' என்பதாக காங்கிரசின் விளையாட்டுத் துறை அமைச்சர் செயபால் ரெட்டி 'எந்த நாடு புறக்கணித்தாலும் போட்டி வெற்றிகரமாக நடக்கும்' என்கிறார். போகிற போக்கைப் பார்த்தால் தெற்காசிய நாடுகள் தவிர்த்து எந்த ஒரு நாடும் கலந்து கொள்ளாதோ என்கிற அச்சம் தான் ஏற்படுகிறது. அதிலும் ஆழம் பார்க்க இலங்கை கழண்டு கொண்டால் வியப்பேதும் இல்லை.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
18 கருத்துகள்:
ஊழல் மன்னன் கருணாநிதி தான் இவற்றுக்கெல்லாம் காரணம்.
இதற்காகவாவது இலங்கை விளையாட வரக் கூடாது!.....
'எனக்கு கல்யாணம்......எனக்கு கல்யாணம்' என்பதாக காங்கிரசின் விளையாட்டுத் துறை அமைச்சர் செயபால் ரெட்டி 'எந்த நாடு புறக்கணித்தாலும் போட்டி வெற்றிகரமாக நடக்கும்' என்கிறார்.
/////
என்னமோ போங்க நாம புலபிகிட்டே இருக்க வேண்டியதுதான் ...
காமன்வெல்த் கேம்ஸ் சோனியாவும்,மன்மோகன் சிங்கும்,காங்கிரசும் தனுகுத்தானே ஊதிக்கொன்ட சங்கு.....ஊஊஊஊஊஊஊஉ....
பொதுமக்களின் பணம் 23000 கோடி சுவாஹா செய்த கல்மாடி & கோஷ்டிக்கு தகுந்த பாடம் கற்ப்பிக்கவேண்டும்.
ஜெ.கண்ணன். சென்னை.
//பலுதூக்கும் அரங்கின் கூரையே இடிந்து விழுந்திருக்கிறது//
பலு தூக்கியிருந்தால்:)
/ஒரிஜினல் "மனிதன்" said...
ஊழல் மன்னன் கருணாநிதி தான் இவற்றுக்கெல்லாம் காரணம்.//
காரணம் இல்லிங்க, பங்கு இருக்கலாம்
//M.G.ரவிக்குமார்™..., said...
இதற்காகவாவது இலங்கை விளையாட வரக் கூடாது!.....//
ஆனை சறுக்கினால் எலிக்குக் கொண்டாட்டம் என்பது இலங்கை நடக்கலாம்
//பொதுமக்களின் பணம் 23000 கோடி சுவாஹா செய்த கல்மாடி & கோஷ்டிக்கு தகுந்த பாடம் கற்ப்பிக்கவேண்டும்.
ஜெ.கண்ணன். சென்னை.//
வாகா...ஸ்வாகா.....கொஞ்மோண்டு பணம் கிடைத்தால் தானே அடுத்த தேர்தலுக்கு செலவு செய்ய முடியும்.
//ராஜ நடராஜன் said...
//பலுதூக்கும் அரங்கின் கூரையே இடிந்து விழுந்திருக்கிறது//
பலு தூக்கியிருந்தால்:)//
:)
எழுத்துப்பிழை சரி செய்துவிட்டேன். நன்றி
இத்தாலி சோனியாவைக் கொண்டாடும் இந்தியாவின் மானம் எப்போதோ கப்பல் ஏறிவிட்டது.
இப்பப் போவது ராக்கெட்டில்...
வெட்கமில்லா இந்தியர்கள்...
காமென்வெல்த் போட்டி நடத்துவதன் நோக்கம் விளையாட்டல்ல..
பணத்துக்காகவே என்பதற்கு சாட்சி இது
அப்ப இந்த குழுவில் ஆர்ய மாயைகள் யாரும் கிடையாதோ? இல்லேனா அதான் காரணம்னு வழக்கம்போல உளரி இருப்பீர்களே? தப்பித்தார்கள் அவர்கள்.
என்ன இது காமன்வெல்த்கும் இலங்கைகும் என்ன தொடர்பு...
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. விளையாட்டு கிராமத்தில் முதன் முதலாக நுழைந்த இங்கிலாந்து விளையாட்டு குழு தலைவர் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இந்திய கிராமம் பீஜிங் கிராமத்தை விட பல விதங்களிலும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார். கனடா தனது நாட்டிற்கு இந்த விளளயாட்டை நடத்த வாய்ப்பு கிடைக்காமல் போன ஆத்திரத்தில் என்றோ எடுத்த புககப்படங்களை வெளியிட்டு அனைவர் மனத்தையும் கெடுத்துவிட்டது. பங்கு கொள்ளவே மாட்டோம் என்று அறிவித்த அந்த நாடு இரண்டே தினங்களில் இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஆகவே பங்கு கொள்வோம் என்கிறது. ஸ்காட்லாண்ட் (இந்தியாவுடன் ஒப்பிடுகையில் கொசு போன்ற நாடு இது) அப்படித்தான். ஆஸ்திரேலியா சரியான பொறாமை பிடித்த நாடு. அவர்களுடைய கிரிக்கெட் அணி கேப்டனே பாதுகாப்பு நன்றாக உள்ளது என்கிறார். தடகள வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லையாம்.
கிராமத்தில் தற்போது நுழைந்துள்ள இந்திய அணி வீரர்க்ளும் தாங்கள் இதுவரை கண்டுள்ள கிராமங்களை விடவும் இந்திய விளையாட்டு கிராமம் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்தியர்களுக்கு தங்கள் மீதே சேற்றை அள்ளி வீசுவது கைவந்த கலை. வேறென்ன சொல்ல.
இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில்தான் பெருமை என்று சொல்பவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா?
இதில் ஏன் கலைஞ்ரை ஏன் இழுக்க வேண்டுமோ தெரியவில்லை. இதெல்லாம் இப்போது ஃபேஷனாக போய்விட்டது.
//
தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியில் இருக்கும் காங்கிரசு கட்சியின் கையாலகத்தனமாகவே இதனை கருதவேண்டி இருக்கிறது, வடகிழக்கில் நக்சல்களுடன் மோதல், காஷ்மீரில் பதட்டம், காமன்வெல்த் போட்டி நடைபெறும் இடத்திலேயே குண்டு வீச்சு என பாதுக்காப்பு தொடர்புடையவற்றில் காங்கிரசின் செயல்பாடுகள் எதுவும் பாராட்டுவிதமாக இல்லை.
//
கோவி,
இந்த லிஸ்டில் அப்படியே ஆந்திரா/தெலுங்கானா பிரச்சினையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி தான், ஆனால் பிரச்சினை வளர்ந்து கொண்டே தான் போகிறது.
அப்படியே ஆந்திராவில் இருக்கும் நக்சல் பிரச்சினையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
//
இலங்கைப் போரில் சிங்கள இராணுவத்திற்கு உதவியதில் முனைப்புக் காட்டி தமிழர் அழிவுகளுக்கு அடிகோலியதன் சிறு பங்கை இந்திய நலனின் காட்டி இருந்தால் விளையாட்டுப் போட்டி நடத்தும் நாம் உலகின் முன்பு தலைகுணிந்து நிற்கத் தேவை இல்லை.
//
தமிழர்களை கொன்று புதைத்ததிற்கும், மேற் கூரை இடிந்து விழுந்ததற்கும்...இரண்டுக்குமே ஒரே காரணம் தான் கோவி.
பணம்....பணம்.ஸ்விஸ் பேங்க் அக்கவுன்ட்கள்....
//
அல்லது இராஜபக்சே அரசும் இந்தியாவுக்கு பை பை காட்டுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
//
ராஜபக்சே அரசா? அது எப்பொழுது வந்தது? ராஜபக்சே அரசும் இந்திய அரசும் ஒன்று தானே?
டிபிஆர் ஐயா,
நீங்க எதையும் உண்மை என்று நம்பும் நல்லவராகே இருங்க. எம் எஸ் கில்லையும், செயபால் ரெட்டியையும் கூப்பிட்டு பிரதமர் கண்டித்தார், கல்மாடியின் பொறுப்புகள் பரிப்பு என்பதையெல்லாம் நான் வெறும் தகவலாகவும் அதை காமன்வெல்த்துடன் தொடர்புபடுத்தாமல் நான் புரிந்து கொள்கிறேன்.
//
இந்தியன் என்பதைவிட தமிழன் என்பதில்தான் பெருமை என்று சொல்பவர்களைப் பற்றி கேட்க வேண்டுமா?
இதில் ஏன் கலைஞ்ரை ஏன் இழுக்க வேண்டுமோ தெரியவில்லை. இதெல்லாம் இப்போது ஃபேஷனாக போய்விட்டது.//
'தமிழ்நாட்டில்' நாட்டை வெட்டிவிட்டு தமிழ்மாநிலம் என்று சொல்போர்கள் தான் இந்திய தேசிய அபிமானிகள் என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.
பைத்தியக்காரன் துணியின் தைக்கப்பட்ட, கிளிந்த சட்டைகளாக இருப்பதைவிட செத்துப் போனப் பிணத்தின் ஒத்தத் துணியாக இருப்பது தான் துணிக்கும் பெருமை.
கருத்துரையிடுக