பின்பற்றுபவர்கள்

1 செப்டம்பர், 2010

தற்கொலை தாக்குதல்களும் மரண தண்டனைகளும் !

கொலைக்கு கொலை தண்டனையாகாது என்கிற விருமாண்டி வசனங்களைப் பேசிய கமல் உன்னைப் போல் ஒருவன் படத்தில் கொலைக்கு தண்டனை கொலை செய்யப்பட்டு மரணம் என்பதாக தீர்ப்பு எழுதிய போது திரை உலகம் வழியாக சொல்லப்படும் நீதிகள் என்பவை நடிகர்களின் பிழைப்பு வாதம் என்பதாக புரிந்து கொண்டேன். மற்றபடி கொலைகளும் அதற்கு மரண தண்டனைகளும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அரசுகளின் மரண தண்டனை என்பது கொலைகளின் எண்ணிக்கையைப் பொருத்ததே. ஒரே ஒரு கொலை செய்தால் பெரும்பாலும் மரண தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட என்கிற போது கொலையாளிகள் வாழத்தகுந்தவர்கள் இல்லை என்பதாக அரசுகள் தீர்ப்பு எழுதுகின்றன. இதிலும் கூட அரசியல்வாதிகளின் தூண்டுதலில் நடைபெறும் கலவரங்களினால் அப்பாவிகள் கொல்லப்படும் போது பெரிய தூண்டுதலுக்குக்காரணமான தலைவர்களுக்கு எந்த ஒரு தண்டனையும் கொடுக்கப்படுவதில்லை. அம்புகளை தண்டிக்கும் தீர்ப்புகள் என்பதாக அவை அமைந்துவிடுகின்றன என்பதால் இவ்வகை மரண தண்டனைகள் நீதியை நிலை நாட்டுகிறது என்பதாக நம்பப்படுவை நம்மை நாமே ஏமாற்றிப் பார்த்துக் கொள்ளும் சமூகப் பார்வை என்று புரிந்து கொள்கிறேன்.

மரண தண்டனைகளை பாதிக்கப்படுபவர்களின் மன நிலையில் இருந்து பார்க்கவேண்டும், மற்றும் நம் உறவினர்கள் பாதிக்கப்பட்டால் நாம் மரண தண்டனைகளுக்கு எதிராக பேசுவோமா ? என்றெல்லாம் கூட சிலர் வியாக்கானம் கூறுகிறார்கள். என்னைப் பொருத்த அளவில் பாதிப்பு அடைந்தவர்கள் அதே போன்ற பாதிப்பு, பாதிப்பு ஏற்படுத்தியவர்களும் அடைய வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்பதாக சொல்லுகிறார்கள் என்று புரிந்து கொள்கிறேன். மரணம் அதன் வலியும் கொலைகாரர்களின் குடும்பங்களுக்கும் ஏற்பட்டால் தனக்கு ஏற்பட்ட மன வலிகள் ஆறும் என்பதாகக் கொள்ள வேண்டுமாம். பலிவாங்கும் மனநிலையால் காயங்கள் ஆறும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கிட்டதட்ட என் வாரிசுகள் உன்னை கொன்றுவிட சம்மதம் என்றால் என்னை கொன்றுவிட உன்னை நான் அனுமதிக்கிறேன் என்பது போன்ற கொலைகளை அங்கீகரிக்கும் மறைமுக ஒப்புதல் போன்றவையே பலிக்கு பலி சரி என்பதான மனநிலைகள்.

மரண தண்டனைகள் என்பவை மன்னர் ஆட்சி முறைகளின் நீட்சியாகத் தொடர்கிறதே அன்றி இன்றைய சமூக சூழலில் இன்றும் அவை தேவையான சட்டம் என்று சொல்வதற்கு எனக்கு ஒன்றும் இல்லை. நிரபராதிகள் தண்டிக்கப்பட்ட பிறகு அவற்றை சரிசெய்ய 'மவுனம், வருத்தம்' என்பது தவிர நம்மிடம் எந்த வித சட்டங்களும் இல்லை என்னும் போது கொலையாளிகளுக்கான மரண தண்டனைகள் சட்டங்கள் என்ற அளவில் நாம் சரி என்பது, எந்த விதத்தில் மனித உரிமைக்கான சட்டங்கள் தான் மரண தண்டனை சட்டங்கள் என்று கொள்ள முடியும் ?

கொலைக்கு கொலையாக மரண தண்டனை சரி என்றால் (அரசுகளின் தண்டனைக்கு பயந்து முன்கூட்டியே) கொலைகளை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதோ, மனித வெடிகுண்டுகளின் செயல்களையோ கண்டிக்க நமக்கு என்ன ஞாயாமோ, உரிமையோ, பொருளோ இருக்கிறதா ? மரண தண்டனைக்கும் பயப்படுபவன் கொலை செய்யமாட்டான் என்றால் தற்கொலை தாக்குதல்களை எந்த வகை கொலையில் சேர்ப்பது ? மரண தண்டனைகளினால் சமூகக் குற்றங்கள் குறைந்துவிட்டதற்கான ஆதாராங்கள் எதுவுமே இல்லை, உணர்ச்சி வசப்பட்டு கொலை செய்வதும், சூழலால் கொலை செய்வதும் எங்கும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கத்தான் செய்கிறது. சமூகக் கொடுங்கோலர்களை தடுக்க அவர்களை நிரந்தரமாக தனிமை படுத்துவதைத் தவிர்த்து நிரந்தரமாக கொலை செய்வது கொலையாளிகளின் செயல்களுக்கும் அரசுகளின் செயல்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. குற்றத்திற்கான தண்டனைகள் குற்றவாளிகள் மனம் திருந்த வாய்ப்பு, அதன் மூலம் அவர்களின் தொடர் குற்றங்களை தடுக்கலாம் என்பதே அடிப்படை சட்டங்களின் நோக்கம்.

மரண தண்டனை சட்டங்களுக்கு ஞாயம் பேசுபவர்கள் பெரும்பாலும் மதவாதிகளாகவே இருக்கின்றனர். ஏனென்றால் பவுத்தம் தவிர்த்து பிற அனைத்திலுமே மரண தண்டனை சட்டங்களை கடுமையாக ஆதரிக்கும் மதங்களாகும். மேலும் அரசியல் சார்பு வாதிகளின் நிலைப்பாடுகள் அதைவிடக் கேவலம். ஈழமக்களின் ஒட்டுமொத்தப் படுகொலைக்கான தண்டனைகள் குறித்து எதுவும் பேசாதவர்களும், இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகான 3000 சீக்கியர்களின் படுகொலைக்கு ஒரே ஒரு செருப்பு வீச்சு தவிர்த்து எந்த ஒரு தண்டனையும் அதில் ஈடுபட்டவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை, இவ்விரு அரசியல் சார்பு நிலைபாடுகள் கொண்டவர்கள் கூட பேருந்து எரிப்பில் மாணவிகள் கொலையில் ஈடுபட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனைகள் நீதி வழங்கி இருப்பதாக குறிப்பிடுவது நகை முரண் அன்றோ ? தினகரன் அலுவலக படுகொலைக்களுக்கான மரண தண்டனைகள், சங்கர இராமன் படுகொலைக்கான மரண தண்டனைகள் வேண்டும் என்று குறிப்பிடுவர்களுக்கு அரசியல் நிலைப்பாட்டுத் தன்மையோடு மரண தண்டனை குறித்து சரி என்று ஞாயம் பேசுவோர் எந்த ஒரு பதிலையும் வைத்திருப்பதில்லை. எனவே அரசியல், மதவாதிகளின் மரண தண்டனை குறித்த கருத்துகளை நான் புறம் தள்ளுகிறேன். காந்தி கூட மகாத்மாவாக இல்லாவிட்டால் கோட்சேவை இந்த நாட்டின் இந்துத்துவ நிலைப்பாட்டால் தூக்கிலிட அனுமதித்திருக்க மாட்டார்கள்.

இடுகையில் ஒட்டு மொத்தமாகச் சொல்ல வந்தது, பொதுவானவர்கள், சமூக நோக்கர்கள் 'கொலைகளுக்கு மரண தண்டனை சரி' என்றால் மனித நேயம் பேசி மனித வெடிகுண்டுகளின் செயல்களையோ, தற்கொலை தாக்குதல்களையோ நிறுத்த, கண்டனம் தெரிவிக்க யாருடைய உயிர் என்றாலும் மனித உயிர் மேன்மையானது என ஒப்பீட்டு அளவில் சொல்ல நமக்கு எந்த ஒரு வழியோ, ஞாயமோ தென்படவில்லை என்பதும் சரிதானே ?

25 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

என்ன சொல்ல வரிக ......

ஆ வு நா தூக்கு தண்டனை கொடுக்க படுதா ? இல்லையே ??
ஒரு மனிதன் தன மனித தன்மை மறந்து மிருகமா திரிந்தால் போ மகனே போ அடுத்த பிறவியில மனுசனா வானு அனுப்புறதா நினைச்சுக்குங்க

ஆயிரம் கனவுகளோடு வாழ்ந்த அப்பாவி பெண்கள் (3 ) இழப்போடு இந்த அயோக்கியர்களின் இழப்பை ஒப்பிட வேண்டாம்

இப்படி தண்டனை இல்லாவிடால் எளிதாக பணத்திற்காகவோ பதவிக்காகவோ கொலைசெய்து விட்டு சிலவருடங்கள் உள்ளே இருந்துட்டு வெளியே வந்திடுவான். ஆனால் தண்டனை மரணம் என்றால் பயம் வரும்
அதுக்காக தப்பே நடக்காதா என்றால் , இல்லை நடக்கும் ஆனால் குறையும்

கொவத்திலோ எதிர்பாரமலோ அல்லது எதிரி(கொல்லப்பட்டவன்) கொலை செய்யும் அளவிற்கு துண்டிவிட்டு அதனால் நடக்கும் கொலைகளுக்கு மரணதண்டனை கொடுக்க படுவதில்லை என்றே நினைக்கிறேன்

priyamudanprabu சொன்னது…

http://ramamoorthygopi.blogspot.com/2010/08/blog-post_31.html

மதுரை சரவணன் சொன்னது…

சின்ன ஒரு விசயம் நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் எத்தனை கொலை செய்தாலும் அவனை மனிதாபிமானத்துடன் மன்னித்துவிடவேண்டும்என்பது போல உள்ளது. உயிர் பெரிது என்பது உங்களுக்கும் எனக்கும் மட்டும் தெரிந்தால் போதுமா...? கொலைகாரர்களுக்கும் தெரிய வேண்டாமா..?அப்படிபட்ட உணர்வை எற்படுத்த தான் மரண தண்டனை...மேலும் இதுபோன்று பிறரும் தொடரக்கூடாது என்பதற்காகவும் தான் ...

பகிர்வுக்கு நன்றி...

கோவி.கண்ணன் சொன்னது…

//மதுரை சரவணன் said...

சின்ன ஒரு விசயம் நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் எத்தனை கொலை செய்தாலும் அவனை மனிதாபிமானத்துடன் மன்னித்துவிடவேண்டும்என்பது போல உள்ளது. உயிர் பெரிது என்பது உங்களுக்கும் எனக்கும் மட்டும் தெரிந்தால் போதுமா...? கொலைகாரர்களுக்கும் தெரிய வேண்டாமா..?அப்படிபட்ட உணர்வை எற்படுத்த தான் மரண தண்டனை...மேலும் இதுபோன்று பிறரும் தொடரக்கூடாது என்பதற்காகவும் தான் ...

பகிர்வுக்கு நன்றி...//

திரு சரவணன் நீங்கள் சொல்வதையே மாற்றிச் சொன்னால், எவ்வளவு கொலைகள் வேண்டுமானாலும் ஒருவர் செய்யலாம் அதற்கு தண்டனையாக மரண தண்டனைகள் கிடைக்கும் என்பதை மட்டும் நினைத்துக் கொண்டால் போதும் என்பது போலும் இருக்கிறது அல்லவா ?

மனிதாபத்துடன் மன்னிக்கச் சொல்லவில்லை, ஆனால் தண்டனைகளின் நோக்கம் என்பது நிறைவேறாமலேயே சென்றுவிடுகிறது என்பதைத்தான் குறிப்பிட்டுள்ளேன். பரோலில் வந்து கொலை செய்துவிட்டு மீண்டும் உள்ளே செல்பவர்களும் கூட இருக்கிறார்கள். எவரும் தண்டனைக்கோ, அல்லது தண்டனைக்கு பயந்தோ எதையும் செய்யாமல் இருப்பதில்லை என்னும் போது மரண தண்டனைகள் மேலும் ஒரு உயிர்பறிப்பு என்பது தவிர்த்து சமூக நோக்கில் எதைத் தடுக்கும் என்பது தெரியவில்லை

Jey சொன்னது…

//இடுகையில் ஒட்டு மொத்தமாகச் சொல்ல வந்தது,//

பகுத்தறிவு!!!???,

முற்போக்குவாதம்!!!???
,
அறிவார்ந்த சிந்தனை!!!???,

மனிதநேயம்!!!???,

மனிதத்தன்மை தொலைத்து மிருகங்களாக மாறி...பேருந்தில் செல்லும் தளிர்களை கொல்லும்..., மாமனிதர்களிடமும் காட்டும் பரிவு!!!????
......

எனக்கு தெரிந்தவரையிலும்...உங்க இந்த பதிவு ,மூலமா புரிஞ்சிகிட்டது இவ்வளவுதான் சார்.

THE UFO சொன்னது…

'நாம் கொலை செய்தால் நம் உயிர் போய்விடுமே' என்று தன் உயிருக்காக பயப்படும் மனிதனுக்கே மரணதண்டனை என்பது சரியான தண்டனை.

மற்றபடி... காந்தியை சுட்டவன், இந்திராவை சுட்டவன், ராஜிவை வெடித்தவள், ஹேமந்த் கார்கரேயை கொன்றவன், ஒரே நேரத்தில் பலரைக்கொல்பவன் போன்ற மூளைச்சலவைக்கு ஆட்பட்டு உந்தப்பட்ட இவர்களுக்கெல்லாம் தன் உயிர் ஒரு பொருட்டே இல்லை. இந்த வகையறாக்களுக்கு மட்டும் மரணதண்டனை அளித்தால் போதாது, சித்தாந்த மூளைச்சலவை செய்பவருக்கும் மரணதண்டனை தரப்படல் வேண்டும்.
அதாவது... நோய்நாடி நோய்முதல்நாடி...

இவ்வாறு மரணதண்டனை 'வேருடன் இலைக்கும்' தரப்பட்டால்தான் வெட்ட வெட்ட விஷச்செடி வளராது...

மேலும்,
//மரண தண்டனைகள் மேலும் ஒரு உயிர்பறிப்பு என்பது தவிர்த்து சமூக நோக்கில் எதைத் தடுக்கும் என்பது தெரியவில்லை//---என்பதற்கும் அவசியம் இருக்காது.

சமீபத்திய கோவை பஸ் எரிப்பு மரணதண்டனையை வரவேற்கிறேன்.
ஏனென்றால், நிச்சயம் நாளை இதேபோல அவரோ, வேறு ஒரு அரசியல் கட்சி தலைவரோ கைது செய்யப்பட்டால், இன்னுமொரு பஸ் மக்களுடன் எறிக்கப்படாது.

அப்படி உயிர்களுடன் ஒருவேளை எறிக்கப்பட்டால்... உங்கள் இந்த இடுகையை ஏற்றுக்கொள்கிறேன்.

டிஸ்கி:
மரணதண்டனை தரப்படுத்தல் என்பது யாருக்கும் தெரியாமல் பூட்டிய அறையில் ஏதோ ஒரு பெரும்பாவ-குற்றம் போல திருட்டுத்தனமாய் இருட்டில் கொடுக்கப்படும் முட்டாள்த்தனத்தை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

மாறாக, எல்லா நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி, செய்தி இணையதளங்களிலும், 'இன்ன குற்றத்திற்கு இவருக்கு இந்த தண்டனை' என்று விளம்பரப்படுத்தி மக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் நிறைவேற்றப்படல் வேண்டும். நேரில் பார்க்க முடியாதவர்களுக்கு கட்டாயம் லைவ் டிவி ரிலே காண்பிக்கப்படல் வேண்டும். அதையும் பார்க்க தவறியவர்களுக்கு செய்திகளில் திருப்பித்திருப்பி ஒளிபரப்பட வேண்டும். இணையத்தில் யு டியுபில் கட்டாயம் அப்லோட் செய்யப்படல் வேண்டும்.

இல்லையேல் மரணதண்டனை என்பது என்றுமே 'விழலுக்கு இறைத்த நீர்' தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வேறு ஒரு அரசியல் கட்சி தலைவரோ கைது செய்யப்பட்டால், இன்னுமொரு பஸ் மக்களுடன் எறிக்கப்படாது.

அப்படி உயிர்களுடன் ஒருவேளை எறிக்கப்பட்டால்... உங்கள் இந்த இடுகையை ஏற்றுக்கொள்கிறேன்.//

என்னங்க இது, எரிக்கப்படுவது பேருந்தா இருந்தான் சரிம்பிங்களா ? அதுவே (தினகரன்) அலுவலகமாக இருந்தால் சரி இல்லை என்று சொல்லிவிடுவீர்களா ? தினகரன் மதுரை நிகழ்வு தருமபுரி நிகழ்வுக்கு பிறகு தானே நடந்தது.

THE UFO சொன்னது…

ஒருத்தனின் அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள், தம்பி, தங்கை அனைவரையும் வேறு ஒருவன் அவன் கண்முன்னே கொன்றுவிட்டான்.

பிடிபட்ட அவனோ, நீதிமன்றத்தால் தரப்பட்ட... ஏதோ சில வருடங்கள் 'மாமியார் வீட்டில் மணியடிச்சா சோறு/ டிவி/ தினசரிகள்/ ஒரு இளங்கலை டிகிரி சர்டிபிகேட்டு என்று' ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டு... ஒரு அரசியல் தலைவரின் பிறந்த நாளன்று வெளியே ஜம்மென்று வருகிறான், அவன்.

வெளியே குடும்ப வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கும் இவனைப்பார்த்து, 'அடடா, இவனை மட்டும் விட்டுட்டோமே, நம்மை இவன் என்றாவது ஒருநாள் கொன்று விடுவானோ? இவனையும் முடித்து விட்டால் என்ன?'--என்று அவன் நினைப்பானா? மாட்டானா?

'அதற்கு முன்னர் உன்னை விட்டுவைத்தால்தானே? என் உயிரை காக்க நான் முந்திக்கொள்கிறேன். என்ன? மிஞ்சிப்போனா சில வருடங்கள்தானே? குடும்ப ஆத்மா சாந்தி அடைய வேண்டாமா?'--என்று இவன் நினைப்பானா? மாட்டானா? (இவன் இல்லாவிட்டால்... இவன் உறவினன், உயிர் நண்பன், குடும்பத்தார் ஒவ்வொருவருக்கும் தெரிந்தவர்கள்... என் ஒரு நீண்ட லிஸ்ட்...)

கொலை செய்துவிட்டு மரண தண்டனை பெறாமல் சிறை தண்டனை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும் ஒரு கொலை காரனுக்கு நீதிமன்ற வாசலிலேயே என்ன நடக்கும் என்று தினசரிகளை படித்தால் நன்கு அறிந்து கொள்ளலாம்.

ஆக, மிகப்பெரும்பான்மையான நல்லவர்களை கொலைகாரர் ஆக்காமல் காப்பதும் இதே மரணதண்டனைதான்.

மரண தண்டனை: அது கட்டாயம் இருத்தல் அவசியம். நான் ஏற்கனவே சொன்னதுபோல அதை கொஞ்சம் முறைப்படுத்தல் மட்டும் இன்று அவசரம். அதை செய்தால், அதன் முழுப்பயனை மக்களாகிய நாம் (நீங்களும்தான்) நாளேயே அனுபவிக்கலாம்.

டிஸ்கி:
மரண தண்டனை-இது கொலைகாரர்களுக்குத்தான்... மனிதர்களுக்கு அல்ல.

THE UFO சொன்னது…

//என்னங்க இது, எரிக்கப்படுவது பேருந்தா இருந்தான் சரிம்பிங்களா ? அதுவே (தினகரன்) அலுவலகமாக இருந்தால் சரி இல்லை என்று சொல்லிவிடுவீர்களா ? தினகரன் மதுரை நிகழ்வு தருமபுரி நிகழ்வுக்கு பிறகு தானே நடந்தது.//---அடடா..! அட்டகாசமாய் என் கருத்துக்கு மரணதண்டனையை விட ஒரு கொடூர தண்டனையான 'திமுக காரன் இவன் என்று அவதூறுடன் கூடிய திசைத்திருப்பல்' என்ற ஒன்றை தந்துவிட்டீர்களே.

அவர்களுக்கும் தானய்யா மரணதண்டனை தரப்படல் வேண்டும்.

ஏனென்றால்....
(இதற்கு முந்தைய மறுமொழியை இப்போது படித்துக்கொள்ளவும். அதில் வரும் கதையில் அந்த 'ஹீரோ' அந்த பத்திரிகை அலுவலரின் மகனாகவோ/தந்தையாகவோ/சகொதரனாகவோ/உயிர் நண்பனாகவோ கூட இருக்கலாம்).

தயவு செய்து விஷயத்தை புரிந்து கொண்டபின்னால் திசைத்திருப்பல் வேண்டாமே. மனசு வலிக்கிரதய்யா.

கோவி.கண்ணன் சொன்னது…

//UFO said...

ஒருத்தனின் அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள், தம்பி, தங்கை அனைவரையும் வேறு ஒருவன் அவன் கண்முன்னே கொன்றுவிட்டான்.

பிடிபட்ட அவனோ, நீதிமன்றத்தால் தரப்பட்ட... ஏதோ சில வருடங்கள் 'மாமியார் வீட்டில் மணியடிச்சா சோறு/ டிவி/ தினசரிகள்/ ஒரு இளங்கலை டிகிரி சர்டிபிகேட்டு என்று' ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டு... ஒரு அரசியல் தலைவரின் பிறந்த நாளன்று வெளியே ஜம்மென்று வருகிறான், அவன்.

வெளியே குடும்ப வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கும் இவனைப்பார்த்து, 'அடடா, இவனை மட்டும் விட்டுட்டோமே, நம்மை இவன் என்றாவது ஒருநாள் கொன்று விடுவானோ? இவனையும் முடித்து விட்டால் என்ன?'--என்று அவன் நினைப்பானா? மாட்டானா?

'அதற்கு முன்னர் உன்னை விட்டுவைத்தால்தானே? என் உயிரை காக்க நான் முந்திக்கொள்கிறேன். என்ன? மிஞ்சிப்போனா சில வருடங்கள்தானே? குடும்ப ஆத்மா சாந்தி அடைய வேண்டாமா?'--என்று இவன் நினைப்பானா? மாட்டானா? (இவன் இல்லாவிட்டால்... இவன் உறவினன், உயிர் நண்பன், குடும்பத்தார் ஒவ்வொருவருக்கும் தெரிந்தவர்கள்... என் ஒரு நீண்ட லிஸ்ட்...)

//

நான் கேட்டதற்கு பதிலே வரவில்லை, அப்பாவிகள் கொல்லப்படுவது போல் அப்பாவிகள் தண்டனை பெறுவதை தடுக்கவும் 'அனுதாபம், பரிதாபம், வருத்தம்' என்பது தவிர்த்து சட்டங்களில் இடமே இல்லை. உங்கள் வாக்குமூலப்படி கொலைகளை செய்துவிட்டு உடனே அவன் தற்கொலை செய்து கொண்டால் சட்டத்திற்கு கூட வேலை இல்லாமல் போய்விடும், அது தான் நடக்க வேண்டுமா ? அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகளும் உடனே தற்கொலைகளும் அப்படித்தான் நடக்கிறது. உங்க வாதப்படியே வைத்துக் கொண்டாலும் 3 பேரைக் கொன்றவனுக்கும் 100 பேரைக் கொன்றவனுக்கும் ஒரே ஒரு தண்டனை தான். எண்ணிக்கை அளவில் இரண்டிற்கும் பெரிய வேறுபாடுகள் என்றாலும் அடிப்படையில் இவை ஒரே குற்றங்கள். 3 பேரை கொன்றவனை தூக்கில் போடனும், 100 பேரைக் கொன்றவனையும் தூக்கில் தான் போட முடியும். அவன் தவறை உணரும் முன்பே ஒரே நாளில் பொசுக்கென்று நிம்மதியாகவேப் போய்விடுவான், அதே போன்று மரணத்தை பிறந்த ஒவ்வொருவருமே அடைகின்றன. ஒரே வேறுபாடு கால நிலை மட்டுமே.

//கொலை செய்துவிட்டு மரண தண்டனை பெறாமல் சிறை தண்டனை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும் ஒரு கொலை காரனுக்கு நீதிமன்ற வாசலிலேயே என்ன நடக்கும் என்று தினசரிகளை படித்தால் நன்கு அறிந்து கொள்ளலாம். //

என்னங்க இது கொலைகளை செய்துவிட்டு அரசியல்வாதிகளின் பக்க பலத்தோடு கண் முன்பே வருபவர்களை என்ன செய்துவிடுகிறார்கள். உங்க வாதப்படி தண்டனைகள் என்பது கூட அரசியல் பக்க பலம் இல்லாதவர்களுக்கு மட்டும் தானே கிடைக்கிறது

//ஆக, மிகப்பெரும்பான்மையான நல்லவர்களை கொலைகாரர் ஆக்காமல் காப்பதும் இதே மரணதண்டனைதான். //

90 விழுக்காட்டு கொலைகள் திட்டமிடாமல் சூழ்நிலையால் நல்லவர்களால் நடப்பது தான். மீதம் 10 விழுக்காடு கூலிப்படைகளால் நிகழ்வது என்றாலும் கூட நல்வர்களாக இருந்தவர்கள் தான் தண்டனை அடைகிறார்களேயன்றி கூலிப் படைகளோ, அவற்றை தூண்டிவிடுபவர்களோ அல்ல.

//மரண தண்டனை: அது கட்டாயம் இருத்தல் அவசியம். நான் ஏற்கனவே சொன்னதுபோல அதை கொஞ்சம் முறைப்படுத்தல் மட்டும் இன்று அவசரம். அதை செய்தால், அதன் முழுப்பயனை மக்களாகிய நாம் (நீங்களும்தான்) நாளேயே அனுபவிக்கலாம்.//

மரண தண்டனைகள் ஒழிக்கப்பட்ட நாடுகளில் குற்றங்கள் மிகுந்ததாக புள்ளி விவரம் எதுவும் தந்துவிட்டு பிறகு சொல்லுங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//UFO


//என்னங்க இது, எரிக்கப்படுவது பேருந்தா இருந்தான் சரிம்பிங்களா ? அதுவே (தினகரன்) அலுவலகமாக இருந்தால் சரி இல்லை என்று சொல்லிவிடுவீர்களா ? தினகரன் மதுரை நிகழ்வு தருமபுரி நிகழ்வுக்கு பிறகு தானே நடந்தது.//---அடடா..! அட்டகாசமாய் என் கருத்துக்கு மரணதண்டனையை விட ஒரு கொடூர தண்டனையான 'திமுக காரன் இவன் என்று அவதூறுடன் கூடிய திசைத்திருப்பல்' என்ற ஒன்றை தந்துவிட்டீர்களே.

அவர்களுக்கும் தானய்யா மரணதண்டனை தரப்படல் வேண்டும். //

உங்களை நான் திமுககாரன் என்று சொல்லவில்லை. உங்களைப் பொருத்த அளவில் கல்லால் அடித்துக் கொல்லப்படுவது கூட சரியானது என்று சொல்லக் கூடிய நிலைப்பாடு உடையவர் என்பது நன்கு தெரியும். எனவே திசை திருப்பியதாக என்னை திருப்ப வேண்டாம். :)

Unknown சொன்னது…

இந்த தண்டனையைப் பார்த்து எவனும் திருந்தப் போவதில்லை, இது போன்ற அயோக்கிய அரசியல் கலவரத்தில் ஈடுபடும் சில பேருக்காவது இதைப் பார்த்து பயம் வரும். (அம்மாவுக்கு மனசாட்சி அளவிலாவது பயம் வருமா:) )

இந்த மூவருக்கும் கிடைத்த தண்டனை இனிமேலும் இவர்கள் இந்த உலகத்தில் உயிர் வாழ தகுதி இல்லாதவர்கள் என்பதாகத்தான் அர்த்தம்.

கோவி.கண்ணன் சொன்னது…

UFO - நான் தெளிவாக மதவாதிகளின் கருத்துகளை அதுவும் மரண தண்டனை குறித்தக் கருத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை என்று சொல்லி இருக்கிறேன். உங்கள் நிலைப்பாடு அறிந்தவன் என்பதால் இது குறித்து நான் உங்களிடம் விவாதம் செய்வது வீன் என்றே நினைக்கிறேன்.

வேறொரு இடுகையில் பார்ப்போம்.

மன்னிக்கவும்.

பொதுவாக நான் இந்துத்துவாகளிடம் இந்துமதம் பற்றியும், இஸ்லாமியர்களிடம் இஸ்லாம் பற்றியும், கிறித்துவர்களிடம் கிறித்துவம் பற்றியும் விவாதிப்பதில்லை. பக்க சார்புள்ளவர்களிடம் விவாதிப்பது வீண் என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்று கருதுகிறேன்.

THE UFO சொன்னது…

//3 பேரை கொன்றவனை தூக்கில் போடனும், 100 பேரைக் கொன்றவனையும் தூக்கில் தான் போட முடியும். அவன் தவறை உணரும் முன்பே ஒரே நாளில் பொசுக்கென்று நிம்மதியாகவேப் போய்விடுவான், அதே போன்று மரணத்தை பிறந்த ஒவ்வொருவருமே அடைகின்றன. ஒரே வேறுபாடு கால நிலை மட்டுமே.//
--"வாவ்..!
உண்மையிலேயே மிகச்சரியான கோணத்தில் சிந்திக்கிறீர்கள். அதோடு நின்று விடுகிறீர்கள். இதற்கு சரியான விடை எங்காவது யாராவது சொல்லி இருக்கிறார்களா என்று மட்டும் தேட மாட்டேன் என்கிறீர்கள். இதற்கு விடை மதவாதிகளிடம்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாத்தில் மிகத்தெளிவாக..." ---இப்படியெல்லாம் நான் சொல்லாமல் விட்டபோதும் எனக்கு திமுககாரன் பட்டம் போய் இப்போது மதவாதி பட்டமா..?!

ம்ம்ம்ம்ம்....அப்புறம்,

//பொதுவாக நான் இந்துத்துவாகளிடம் இந்துமதம் பற்றியும், இஸ்லாமியர்களிடம் இஸ்லாம் பற்றியும், கிறித்துவர்களிடம் கிறித்துவம் பற்றியும் விவாதிப்பதில்லை. பக்க சார்புள்ளவர்களிடம் விவாதிப்பது வீண் என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்று கருதுகிறேன்.//--சூப்பர்..! நான், 'மரணதண்டனை பற்றிய பதிவு இது மற்றும் அதன் விவாதம் இது' என்று தவறாக நினைத்து உள்ளே வந்து விட்டேன்.

//நான் தெளிவாக மதவாதிகளின் கருத்துகளை அதுவும் மரண தண்டனை குறித்தக் கருத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை என்று சொல்லி இருக்கிறேன். உங்கள் நிலைப்பாடு அறிந்தவன் என்பதால் இது குறித்து நான் உங்களிடம் விவாதம் செய்வது வீன் என்றே நினைக்கிறேன்.//---இங்கே அப்புறம் எதற்கு பின்னூட்டத்தை திறந்து வைத்து இருக்கிறீர்கள்? பேசாமல் கண்ணாடிக்கு முன்னால் போய் நின்று கொண்டு நீங்களே உங்களுடன் 'கருத்துப்பரிமாற்றம்' செய்து கொள்ளலாமே?
\\"என் பெயர் கோவி"
"உங்கள் பெயர் என்ன?"
"என் பெயர் கோவி"
"அட!உங்கள் பெயரும் கோவியா"\\--என்கிற ரீதியில்...!

//வேறொரு இடுகையில் பார்ப்போம்.//
--'மதவாதி'யுடனா?
மன்னிக்கவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

////வேறொரு இடுகையில் பார்ப்போம்.//
--'மதவாதி'யுடனா?
மன்னிக்கவும்.//

ம், மதவாதியுடன் மதம் தவிர்த்து பேச ஒன்றும் இல்லை என்று நீங்கள் முடிவு செய்தால் நான் பொறுப்பு இல்லை. பின்னூட்டங்களுக்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//இதற்கு விடை மதவாதிகளிடம்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாத்தில் மிகத்தெளிவாக..." ---இப்படியெல்லாம் நான் சொல்லாமல் விட்டபோதும் எனக்கு திமுககாரன் பட்டம் போய் இப்போது மதவாதி பட்டமா..?!//

அப்படியே சொன்னாக் கூட குற்றத்திற்கு ஏற்ப எரியும் கற்கள் பற்றி எண்ணிக்கைகள், வெளியாகும் இரத்த அளவுகள் குறித்து எதேனும் வரையறை அவர்களுக்கு கொடுக்கப்படும் மரண தண்டனையில் இருக்கிறதா என்று என்னால் கேட்க முடியும். எனவே கவலை வேண்டாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இங்கே அப்புறம் எதற்கு பின்னூட்டத்தை திறந்து வைத்து இருக்கிறீர்கள்? பேசாமல் கண்ணாடிக்கு முன்னால் போய் நின்று கொண்டு நீங்களே உங்களுடன் 'கருத்துப்பரிமாற்றம்' செய்து கொள்ளலாமே?
\\"என் பெயர் கோவி"
"உங்கள் பெயர் என்ன?"
"என் பெயர் கோவி"
"அட!உங்கள் பெயரும் கோவியா"\\--என்கிற ரீதியில்...//

நான் என்ன கொள்ளலாம், செய்யலாம் என்று தீர்மாணிக்கும் உரிமையை நான் யாருக்கும் கொடுப்பதோ கேட்டுப் பெறுவதோ இல்லை. யார் யாரிடம் எதை விவாதிக்கலாம் என்று முடிவு செய்யும் உரிமை எனக்கு இருப்பதை நான் சொல்லிக் கொள்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

கிரி சொன்னது…

கோவி கண்ணன் ..இந்த வெண்ணை வெட்டிகளை எல்லாம் கொஞ்சம் கூட கருணை பார்க்காமல் தூக்கில் போட வேண்டும்..என்பதே என் கருத்து.. விரிவாக எழுத நினைக்கிறேன்..நேரம் தான் இல்லை.. பொறுமையா எழுதுவோம்.

Unknown சொன்னது…

இடுகையில் ஒருவர் கூட தீர்ப்புக்கு எதிராக கருத்து சொல்லிவில்லை ஜிகே.

தீர்ப்பு பற்றி கேட்டவுடன் அவர்களுக்கும் குடும்பம் இருக்குமே என்ற கவலை வந்தது. ஆனால் ஒரு குற்றமுமறியாத இளந்தளிர்கள் பொசுக்கப்பட்டதற்கு நீங்கள் தர நினைக்கும் தண்டனை என்ன? அதனால் இனி குற்றங்கள் எப்படி குறையும் என்று சொல்ல ஏலுமா?. நம்மிடம் வேறொரு சிறந்த தீர்வு இருந்தால் இந்த தீர்ப்பை தவறென்று வாதிடலாம்.

பாதிக்கப்பட்டவர்கள் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...

இடுகையில் ஒருவர் கூட தீர்ப்புக்கு எதிராக கருத்து சொல்லிவில்லை ஜிகே.//

அப்படியென்றால் படித்துப் பார்த்து (எதிர்) கருத்துச் சொல்லாமல் சென்றவர்கள் பதிவை சரி என்று சொல்கிறார்கள் என்று நான் கொள்ள முடியுமா ? :)

//தீர்ப்பு பற்றி கேட்டவுடன் அவர்களுக்கும் குடும்பம் இருக்குமே என்ற கவலை வந்தது.//


//ஆனால் ஒரு குற்றமுமறியாத இளந்தளிர்கள் பொசுக்கப்பட்டதற்கு நீங்கள் தர நினைக்கும் தண்டனை என்ன? அதனால் இனி குற்றங்கள் எப்படி குறையும் என்று சொல்ல ஏலுமா?. நம்மிடம் வேறொரு சிறந்த தீர்வு இருந்தால் இந்த தீர்ப்பை தவறென்று வாதிடலாம்.//

முன்விரோதம் (மோடிவேசன்) இல்லாத குற்றங்கள் குற்றங்களே இல்லை அல்லது தண்டனை குறைவாகக் கொடுப்பதும் சட்ட நடைமுறைதான். குற்றவாளிகளின் செயலை நான் ஆதரிக்கவில்லை. சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்த காவலர்களுக்கோ, எரிப்பில் பங்கெடுத்தவர்கள் அனைவருக்குமே தண்டனைகள் எதுவும் கிடையாது, சிலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் இன்றைய கேமராக்களால் நிகழ்வு பதிவு செய்யப்படவில்லை என்றால் குற்றவாளிகள் அனைவருமே தினகரன் எரிப்பு போல் தப்பி இருப்பார்கள். சிக்கியவர்களுக்கு தண்டனை என்பதாக மட்டுமே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் ஊற்றியவர், பற்றவைத்தவர் ஆகிய மூவர் மட்டுமே குற்றவாளிகளாம். என்ன தண்டனை கொடுக்கலாம் ? அவர்களின் உறுப்புக்களில் வாழத்தேவையானதை தவிர்த்து பிறவற்றை தேவைபடுவர்களுக்குக் கொடுக்கலாம் (அவர்கள் அனுமதியோடு மரண தண்டனை வழங்கப்படுவது இல்லை என்பது போல் அவர்கள் அனுமதி இல்லாமல் அவர்கள் உறுப்புகளை தேவைபடுவோருக்கு வழங்களாம்), சாகும் வரை சிறையில் அடைக்கலாம், இப்படி எவருக்குமே பயன்படாமல் மரண தண்டனை கொடுப்பது அவர்களுக்கு தண்டனை இல்லை, அவர்களுடைய குடும்பத்திற்கு கொடுக்கும் தண்டனை மட்டுமே. இதைத்தான் பாதிக்கப்பட்டவர்களும் விரும்புகிறார்கள் என்பது பலிக்கு பலி வாங்குவது சரியான செயல் என்பது ஒப்புக் கொள்ளும் வாதம் ஆகும்

// பாதிக்கப்பட்டவர்கள் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள்.//

உமர் | Umar சொன்னது…

கோவி,
நான் எந்த மதத்தையோ, அரசியல் கட்சியையோ சார்ந்தவன் அல்ல. ஆனால், இந்த வழக்கில், நிச்சயம் தூக்குத்தண்டனை வேண்டும் என்கின்றேன்.

வக்கீல் விஜயனைத் தாக்கியவர்களுக்கு, அதிமுக தலைமை என்ன பரிசளித்தது என்பது நினைவிருக்கும் என்று எண்ணுகின்றேன். எம்பி சீட். அன்று மனிதத்தன்மையற்ற செயலை செய்த ஒருவனுக்கு, வெகுமதி கொடுத்த கட்சியைச் சார்ந்த இன்னொருவன், தனக்கென்று ஒரு வாய்ப்புக் கிடைத்தபோது, பலரையும் எரித்துக்கொன்றிருக்கின்றான். அவன் செய்தது தன கட்சித் தலைமையின் அன்பைப் பெறுவதர்காகதானே!

அன்று, வக்கீலைத் தாக்கியவனை, கட்சிக்குள் சேர்க்காமல், சட்டப்படி தண்டனைப் பெற வழி வகுத்திருந்தால், இன்னொருவன் இதுபோன்ற செயலை செய்ய முனைந்திருக்கமாட்டான் அல்லவா? அரசியல் கட்சிகளே ஒருவனை தவறு செய்ய தூண்டுகின்றன.

தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்பது அவனுக்கு தெரிந்திருந்தால், அவன் அதுபோன்று செய்யத் துணிய மாட்டான். அதிமுகவினரின் பஸ் எரிப்பு போன்றே, தினகரன் அலுவலக எரிப்பும், சீக்கிய மக்கள் மீதான தாக்குதலும். தங்கள் கட்சி தலைமையை குளிர்விக்க நடைபெற்ற செயல்கள்.

இன்று, தருமபுரி வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டால், நாளை நாம் இதுபோன்று செய்யப்போய், ஒருவேளை கட்சித் தலைமை தன்னை காப்பாற்றாவிட்டால், தன் கதி, தன் குடும்பத்தின் கதி எல்லாம் என்னவாகும் என்று இதுபோன்ற அரசியல்வாதிகள் சிந்திக்க வழி ஏற்படும்.

எதெதெற்கோ விழிப்புணர்ச்சி வேண்டும் என்று கூப்பாடு போடுகின்ற நாம், அரசியல்வாதிகளுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை வரவேற்போம்.

----
நாளை தினகரன் அலுவலக எரிப்பும், மற்ற வழக்குகளும் தோண்டப்பட்டு உண்மையானக் குற்றவாளிகளுக்கும் தூக்குத்தண்டனை கிடைத்துவிட்டால் தன் கட்சியின் இமேஜ் என்னாவது என்ற பதைபதைப்பே, அரசியல் கட்சிகளைச் சார்ந்த பதிவர்கள், மனித உரிமை முகமூடி அணிந்து, அரசியல் பற்றி பேசுவதை புறம்தள்ளி, வெட்டி வியாக்கியானம் கொடுப்பதாக எனக்குப் படுகின்றது.

அறிவிலி சொன்னது…

இந்த நாய்களையெல்லாம் தண்டிக்க இத்தனை நாளா? என்ற ஆதங்கத்தை தவிர எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.

(நாய்கள் - மன்னிக்கவும்)

மணிகண்டன் சொன்னது…

என்னுடைய அக்கா (கசின்) கணவரின் அண்ணன் மும்பையில் லியோபால்ட் கபேயில் சுடப்பட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு குண்டுகள் தலையிலும் இரண்டு முதுகிலும் பட்டு இறந்தார். அந்த குற்றம் செய்தவரை ஏன் அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கொடுக்ககூடாது என்று அவர்கள் கேட்டால் என்ன பதில் சொல்லவேண்டும்.
இதே போன்று திருநெல்வேலியில் நடந்த வன்முறையின் போது இறந்த பெண்ணின் சகோதரி என்னுடன் கல்லூரியில் படித்தவள். அவர்களுக்கு என்ன பதில் சொல்லவேண்டும் ?

எனக்கு தனிப்பட்ட அளவில், தூக்கு தண்டனையில் ஆதரவு கிடையாது. ஆனால் அது ஒரு உயிரை பறிப்பதற்க்கு அதிகாரம் கிடையாது என்ற நிலையில் இருந்து வந்தது. ஆனால் இந்தியா போன்ற ஒரு நாடு அதற்குரிய maturity அடைந்துவிட்டதா என்பதும் கேள்விக்கு உட்படுத்தவேண்டியது தான்.

Unknown சொன்னது…

பவுத்தம் மரணதண்டனையை ஆதரிப்பதில்லையா???? என்னாது காந்தி செத்துட்டாரா??

Unknown சொன்னது…

தொடர

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்