பின்பற்றுபவர்கள்

27 செப்டம்பர், 2010

தியானம், தவம் !

தன்வயம் என்ற சொல் திரிபின் வடிவமே தவம் என்ற சொல் என்பதாக நினைக்கிறேன். தன் + திறன்(ம்) > தந்திரம், மன்(மனம்) + திறன் > மந்திரம் என்பதாக சொற்பிறப்பியல் அமைந்திருக்கிறது, இவை முழுக்க தூய தமிழ்ச் சொல்லென்றாலும் வடமொழியில் கடன் பெற்றவையோ என்பதான சொல் மயக்கத்தை ஏற்படுத்துவை தந்திரம், மந்திரம் என்ற சொற்கள். த்யான் என்ற சொல் தமிழில் தியானம் என்பதாக வழங்கப்படுகிறது என்றாலும் இவற்றிற்கான மாற்றுப் பொருள் தமிழில் மனப் பயற்சி என்பதாம். அதுபோன்று யோகம் என்பது உடற்பயிற்சியாகும், ஆசனம் என்பது தமிழில் உட்காரும் காலிகள் மற்றும் (உடல்) நிலை அமைப்பு என்ற பொருளில் வழங்கப்படுகிறது. சம்மணமிட்டு அமர்தல் என்ற சொல் சம + அணம் அல்லது அணங்கு (கட்டுதல், சேர்த்தல்) என்ற பொருளில் கால்களை ஒன்றாக மடித்து உட்காரும் நிலையைக் குறிப்பதாகும். த்யான் (அ) த்யாணம் என்ற சொல்லின் பின்னொட்டான ஆணம் (பற்றுதல், கட்டுதல்) தமிழ் சொல்லாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன். மனதைக் கட்டுதல், ஒன்றிணைத்தல் என்ற பொருள் கொண்டவையே தியானம் என்ற சொல்லின் பொருள்.

*****

புத்தர் தவமிருந்தார், 'ஆசையே துன்பத்திற்கு காரணம்' என்று கண்டு கொண்டார் என்பதாக புத்தர் பற்றிய வரலாறு மற்றும் சமூகக் கருத்தாக அறிந்து கொண்டிருக்கிறோம். புத்தர் வைதீக சமயவாதியாக இருந்திருந்தால், புத்தர் கடும் தவம் புறிந்த காரணத்தினால் ஈச்வரன் அவரின் முன் தோன்றி அவருடைய அறிவின் கண் திறந்து ஆசி கொடுத்தார் என்பதாக எழுதி இருப்பார். புத்தர் இறை மறுப்பாளரோ, ஏற்பாளரோ இல்லை என்பதால் விஷ்ணுவோ, சிவனோ அவருக்கு அருள்பாலிக்கவில்லை. நேற்று கூட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது இந்து மதத்தின் எல்லா கடவுளும் ஏன் கனவில் மட்டுமே வந்து தனக்கு கோவில் கட்டச் சொன்னார்கள் ? நேரடியாக ஏன் ஒருவரும் வரவில்லை என்பதாகப் பேசினோம். நேரில் வந்தால் ஒருவேலை சிறைபிடித்து வேண்டிய வரங்களை அவ்வப்போது அடியார்கள் கறந்துவிடுவார்கள் என்கிற இறை அச்சமே காரணமாகக் கூட இருக்கலாம். இதையெல்லாம் விட அனைத்து சக்தியும் மிக்க கடவுள் தனக்கு தானே கோவில் எழுப்பிக் கொள்ள முடியவில்லை என்றும் ஒரு பக்தனை கெஞ்சாமல் தானே பிறந்து வந்து தனக்கு கோவில் கட்டிக் கொள்ள முடியவில்லை என்பதையும் யாரும் எண்ணிப் பார்க்க அங்கே தெய்வ குத்தம் தடுக்கிறது. கடவுள் பற்றிய சிந்தனைகளில் கடவுள் பயத்தின் காரணமாகவே பலர் சிந்திக்க விரும்புவதில்லை, அது ஏன் தொல்லை நாம ஏதாவது நினைக்க அது தவறாகிப் போய் தண்டனை அடைந்துவிட்டால் ? என்கிற அடிப்படை பயமே இவற்றிற்கு காரணம். இவர்களில் ஒருவர் கூட எந்த ஒரு சமய நம்பிக்கைச் சாரந்தவருக்கும் பிற சமயங்களின் நம்பிக்கை கேலியும், கேள்வியும் மட்டுமே என்பதை சிந்திப்பதில்லை. அதாவது பிள்ளையாரைப் பற்றி கேள்வி கேட்க ஒரு இஸ்லாமியருக்கோ, கிறித்துவருக்கோ எந்த கடவுளும் தடைவிதித்து தெய்வக் குற்றம் ஆக்கிவிடவில்லை, கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் அது போல் இந்துக்களுக்கும் அல்லாவின் இருப்பில், ஏசுவின் இருப்பில் ஐயம், கேள்வி எழாமல் இருப்பதில்லை. ஆனால் ஒருவருக்கு தத்தமது மத நம்பிக்கைக்குள்ளான கேள்விகள் என்பது மட்டுமே பெரும்பாலும் இறை அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பதை (எந்த ஒரு) நம்பிக்கையாளர்களும் நினைப்பதே இல்லை. ஒரு கிறித்துவர் இந்து சமய நம்பிக்கையை பலிப்பதை பொறுத்துக் கொள்ளும் (இந்துக்) கடவுள் எல்லாக் கடவுளையும் மறுக்கும் நாத்திகனை தண்டித்துவிடுவார் என்று கூட இன்னும் பலர் நம்புகிறார்கள். இவ்வாறான மதம் சார்ந்த இறை நம்பிக்கைகள் அனைத்துமே மடைமை, அறிவீனம் அல்லது பகுத்தறிவின்மை என்று சொல்வதில் நான் என்றுமே தயங்கியதே இல்லை.

குறிப்பிட்ட சில ஆன்மிகம் சார்ந்த இடங்களை குறிப்பாக பெத்லகேம், மெக்கா, வாடிகன், திருப்பதி, இமய மலை ஆகியவற்றை இறைவனின் இருப்பிடம் என்றே அம்மதத்தைச் சார்ந்தவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இவை வழிப்பாட்டுத்தளங்கள் அதுவும் குறிப்பிட்ட மதத்தை, சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. கடவுளின் நாடு கேரளா என்பதாக கேரளவாசிக்கள் சொல்லிக் கொள்வதைப் போன்றவையே அவை. உலகின் ஆன்மிக நாடு இந்தியா என்பதாக இந்துக்கள் சொல்வது போல், உலகில் அரசியல்வாதிகளின் நாடு (Country of Politicians) என்று சொன்னாலும் பொருத்தமாகத்தான் இருக்கும் :) அந்த அளவுக்கு இந்தியா பல்வேறு அரசியல் வாதிகளால் (உறிஞ்சப்பட்டு) பயன்படுத்திக் கொள்ளப்பட்டுவருகிறது (எழுத வந்தது வேறு, மன ஓட்டம் எங்கே செல்கிறது மன்னிக்கவும்)

மனம், சிந்தனை இவற்றின் அடைப்படையில் தான் செயல்கள் நடக்கின்றன. தவத்தின் பலனாக கிடைததது என்று சொல்வதெல்லாம் 'நாம் அதையே சிந்தனைசெய்து செயலாற்றியதன்' விளைவால் கிடைத்த நன்மை என்பதே பொருள். முன்னோர்கள் தவம் செய்து அதன் மூலம் வரமாக கிடைத்தவற்றையே 'வேதங்களாக' ஆக்கி வைத்தனர் என்று விளக்கம் (வ்யாக்காணம்) சொல்லுவர். தவம், தியானம் செய்வதால் வரம் எதுவும் கிடைகாது. சிந்தனை வளம் பெருகும், அதன் மூலம் சில ஐயங்களுக்கு விளக்கம் கிடைக்கும். இவைதான் மனப் பயிற்சியின் பலன்கள். எந்த ஒரு எழுத்தாளரும் முழுக்க முழுக்க யாருமே அறியாத தகவல்களை தந்துவிட மாட்டார்கள், பல்வேறு நூல்களின் படித்தவற்றில் மனம் விரும்பும், மார்கெட் (விற்பனைக்கு ஈர்ர்கும் தகவல் என்பதை நம்பி) செய்யக் கூடிய தகவல்களை அவர்கள் தொகுப்பார்கள், அந்நூலை அமைக்கும் வரை அவர்களுடைய மனம் அந்நூலை எப்படி சீராகக் கொண்டு செல்வது பற்றிய சிந்தனைகளில் இருக்கும். இது ஒருவகையான தவம், இது போல் இயக்குனர்கள், ஆராய்சியாளர்கள் ஆகியோரும் மனம் சார்ந்து மன ஒரு நிலையில் இருப்பர். இவற்றைத்தான் தவம் என்கிறார்கள். தவம் என்பது தன்வயத்தில் ஒத்த சிந்தனையில் இருப்பது, தியானம் என்பது அதனை வழிநடத்துவதற்கான செயல். ஒவ்வொரு படைப்பாளியும் தவம், தியானம் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றபடி தியானம், தவம் என்ற சொற்களெல்லாம் சமய நம்பிக்கையில் சம்மணம் மிட்டு அமர்ந்திருக்கும் சாமியார்களின் நிலை பற்றியது மட்டுமே அல்ல. வடமொழி சொற்களாக, அலங்காரமாக நமக்கு படுவதால் அந்தச் சொல்லின் மீது பெருமதிப்பு வைத்திருக்கிறோம், அவையும் செயல்கள் (verb) குறித்தான மற்றொரு சொற்கள் தான். நானும் இந்த இடுகை நிறைவுறும் வரையில் சிறு நினைவு தடங்கல் ஏற்பட்டிருந்தாலும் எழுதி முடிக்கும் வரை தியானமும், தவமும் செய்து கொண்டிருந்தேன் :)

எளிமையாகச் சொல்வதென்றால் ஒன்றைப் பற்றிய சிந்தனையும் செயலும் நல்ல விளைவுகளை தந்திருந்தால் நீங்கள் தவமும் தியானம் செய்து பலன் அடைந்திருக்கிறீர்கள் என்பதே.

24 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

தியானம் என்று தானே வர வேண்டும்.

அதென்னன துளசி கோபால் நீங்க இரண்டு பேருமே ஒரே சமயத்தில் பக்கத்தில் வந்து இருக்கீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//தியானம் என்று தானே வர வேண்டும்.

அதென்னன துளசி கோபால் நீங்க இரண்டு பேருமே ஒரே சமயத்தில் பக்கத்தில் வந்து இருக்கீங்க.///

கூகுளில் தேடினேன் தியாணம் என்ற சொல்லுக்கும் பக்கங்கள் கிடைத்தன, அதனால் சொல் சரியோ என்பதாக விட்டுவிட்டேன். ஆனால் பிழைதான்.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

உலகில் அரசியல்வாதிகளின் நாடு (Country of Politicians) என்று சொன்னாலும் பொருத்தமாகத்தான் இருக்கும் :) //
அரசியலை தொழிலாக பாவிக்கும் நாடும் சொல்லலாம்.

வால்பையன் சொன்னது…

முழுமையாக உடன்படுகிறேன்!

பிரியமுடன் பிரபு சொன்னது…

ம்ம் சரிதான்

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இப்படி உண்மைகளை உள்ளபடி எழுதுவது பெரும் தெய்வ குற்றம்.
நல்ல அலசல்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\ஒன்றைப் பற்றிய சிந்தனையும் செயலும் நல்ல விளைவுகளை தந்திருந்தால் நீங்கள் தவமும் தியானம் செய்து பலன் அடைந்திருக்கிறீர்கள் என்பதே.\\

தவமும் தியானமும் எப்படி நமக்குத் தரப்பட்டதோ அப்படி நம்மால் செய்ய இயன்றால் அதன் பரிமாணமே வேறு..

தற்போது நாம் செய்வதெல்லாம் தவம் தியானம் என சற்று அமைதியாக மனதையும் உடலையும் பழக்கி வருகிறோம். அதற்கேற்ற பலன் தான் நீங்கள் சொன்னது.

அதன் வீச்சு அனுபவத்தில் வந்தால்தான் புரியும்.

நன்றி கருத்துப்பகிர்வுக்கு..

ம.தி.சுதா சொன்னது…

நல்ல பதிவொன்று... எனக்க கடவுள் ஏன் கல்லானான் கவிதை தான் ஞாபகம் வருகிறது...

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ம்ம்ம்ம் சரியாகதான் இருக்கு

V.Radhakrishnan சொன்னது…

அருமை. நன்றி.

துளசி கோபால் சொன்னது…

நேரில் வந்தால் நான்(கூட) நம்பமாட்டேன். அவர் சிலையா இருக்கும்வரைதான் மதிப்பும் அழகும்.

பெருமாளும் லக்ஷ்மியும் நகை நட்டோடு வந்தாங்கனா ஆபத்தும் கூடுதல்!


அநேகமாப் பதிவர்கள் அனைவரும் தியானத்தில் ஈடுபடுகிறார்கள் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கிருக்கு.

என்ன எழுதலாம் எப்படி எழுதலாம் எப்போ எழுதலாம் இப்படி மூளையில் ஓடிக்கிட்டே இருக்கே:-)

ஜோதிஜி சொன்னது…

இன்ட்லியை இணைக்க............

அப்படியே ச்சும்மா விட்டுட்டீங்க போலிருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

உலகில் அரசியல்வாதிகளின் நாடு (Country of Politicians) என்று சொன்னாலும் பொருத்தமாகத்தான் இருக்கும் :) //
அரசியலை தொழிலாக பாவிக்கும் நாடும் சொல்லலாம்.//

எல்லாம் ஒண்ணு தான் தலைவரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...

முழுமையாக உடன்படுகிறேன்!//

நன்றி தலைவரே

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியமுடன் பிரபு said...

ம்ம் சரிதான்//

நன்றி தம்பி

கோவி.கண்ணன் சொன்னது…

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்படி உண்மைகளை உள்ளபடி எழுதுவது பெரும் தெய்வ குற்றம்.
நல்ல அலசல்.//

வாங்க அண்ணன். நல்லா அலசிட்டு காயவும் வச்சாச்சு :)

கோவி.கண்ணன் சொன்னது…

//
தவமும் தியானமும் எப்படி நமக்குத் தரப்பட்டதோ அப்படி நம்மால் செய்ய இயன்றால் அதன் பரிமாணமே வேறு..

தற்போது நாம் செய்வதெல்லாம் தவம் தியானம் என சற்று அமைதியாக மனதையும் உடலையும் பழக்கி வருகிறோம். அதற்கேற்ற பலன் தான் நீங்கள் சொன்னது.

அதன் வீச்சு அனுபவத்தில் வந்தால்தான் புரியும்.

நன்றி கருத்துப்பகிர்வுக்கு..//

நீங்க தியானம் தவம் என்ற தலைப்பைப் பார்த்து வந்துட்டிங்க. ஸ்வாமி ஓம்காரைக் காணும்.

கருத்துக்கும் நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

//ம.தி.சுதா said...

நல்ல பதிவொன்று... எனக்க கடவுள் ஏன் கல்லானான் கவிதை தான் ஞாபகம் வருகிறது...//

நன்றி ம.தி. சுதா

கோவி.கண்ணன் சொன்னது…

// ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் சரியாகதான் இருக்கு//

தெரிஞ்ச அளவு, முடிஞ்ச அளவு எழுதி இருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

நேரில் வந்தால் நான்(கூட) நம்பமாட்டேன். அவர் சிலையா இருக்கும்வரைதான் மதிப்பும் அழகும்.

பெருமாளும் லக்ஷ்மியும் நகை நட்டோடு வந்தாங்கனா ஆபத்தும் கூடுதல்!


அநேகமாப் பதிவர்கள் அனைவரும் தியானத்தில் ஈடுபடுகிறார்கள் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கிருக்கு.

என்ன எழுதலாம் எப்படி எழுதலாம் எப்போ எழுதலாம் இப்படி மூளையில் ஓடிக்கிட்டே இருக்கே:-)//

எழுத்து தவம் மட்டும் இல்லை என்றால் துளசி அம்மாவின் தரிசனம் கிடைத்திருக்காது என்பது உண்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி said...

இன்ட்லியை இணைக்க............

அப்படியே ச்சும்மா விட்டுட்டீங்க போலிருக்கு.//

தமிழிஷாக இருந்த போது கூட இணைப்பதில்லை, கருவி பட்டையை மட்டும் சேர்த்துவைத்தேன். எப்போதாவது இணைக்கலாம் என்று தோன்றினால் இணைப்பதுண்டு, மற்றபடி தொடர்ந்து இணைக்கும் தளங்கள் இரண்டு தான் தமிழ்மணம், தமிழ்வெளி இவற்றை நடத்துபவர்கள் இன்னார் என்று தெரிவதால் அனைத்தையும் உடனே இணைக்கிறேன்

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

//ஸ்வாமி ஓம்காரைக் காணும்.//

பெரியவாள் எல்லாம் கூடி பேசிண்டு இருக்கேள்.. நமக்கு என்ன இங்கே ஜோலினு ஒதுங்கிட்டேண்ணா... :)

கபிலன் சொன்னது…

//தன்வயம் என்ற சொல் திரிபின் வடிவமே தவம் என்ற சொல் என்பதாக நினைக்கிறேன். தன் + திறன்(ம்) > தந்திரம், மன்(மனம்) + திறன் > மந்திரம் என்பதாக சொற்பிறப்பியல் அமைந்திருக்கிறது, //
தன்வயம் ....தெரியலை...லிங்க் மிஸ் ஆகுற மாதிரி இருக்குங்க கோவி...! வடச்சொல்லாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

//ஒரு கிறித்துவர் இந்து சமய நம்பிக்கையை பலிப்பதை பொறுத்துக் கொள்ளும் (இந்துக்) கடவுள் எல்லாக் கடவுளையும் மறுக்கும் நாத்திகனை தண்டித்துவிடுவார் என்று கூட இன்னும் பலர் நம்புகிறார்கள்.//

இது தவறான நம்பிக்கை. எனக்குத் தெரிந்த வரையில் (நாத்திகன்)Atheist & Agnostic (கடவுள் மறூப்பாளனும் அல்ல வழிபடுபவனும் அல்ல) ஆக இருந்தாலும், தண்டனைக்குரியவர்கள் என எந்த இந்து சமய நூலிலும் இல்லை என்றே தோன்றுகிறது.

Ramarajan சொன்னது…

தவம்னு படிக்க வந்தா எதேதோ .. இருக்கே.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்