பின்பற்றுபவர்கள்

9 செப்டம்பர், 2010

அடுத்தவாரத்தில் பற்றவைக்கப்படும் கலவர திரி !

செப் 11 நியூயார்க் இரட்டைக் கோபுர தகர்பு நினைவு நாளில் அமெரிக்காவில் (GAINESVILLE, Fla) ஒரு உள்ள ஒரு தேவாலய பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் என்பவர் இஸ்லாமியர்களின் இறைவாக்கு என்று போற்றப்படும் திருகுரானை எரிக்கப் போகிறாராம். இது குறித்து அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் எவ்வளவோ கேட்டுக் கொண்டும், பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் தனது திட்டமிட்ட முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். குரான் எரிப்பு நிகழ்வு திட்டமிட்டபடி நடந்துவிட்டால் அதன் பிறகு ஏற்படும் படுகொலைகளை, கலவரங்களை யாராலும் தவிர்க்க தடுக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

டென்மார்க் செய்தித்தாள் ஒன்றில் முகமது நபி குறித்து கேலிச்சித்திரம் வெளி இடப்பட்டதற்காக பெரும் கலவர சூழல் ஏற்பட்டு, பிறகு சம்பந்தப்பட்ட செய்த்தித்தாள்களும் அரசும் மன்னிப்பு கேட்ட பிறகு அடங்கியது. கலவரங்கள் நடக்கலாம், அப்பாவி உயிர்கள் பறிக்கப்படலாம் என்பதை பாஸ்டர் டெர்ரி அறியாதவர் இல்லை. இருந்தாலும் தற்போது பாதுக்காப்பில் இரும்பு பெட்டமாக இருக்கும் அமெரிக்காவினுள் எதுவும் நடக்காது தடுக்கப்படுவிடும் என்று நம்புகிறார் போலும். அமெரிக்கா தவிர்த்து பிற நாடுகளில் இந்நிகழ்ச்சியின் எதிர்வினையாக மூளும் கலவரங்கள் குறித்து அவர் அலட்டிக் கொள்வது போல் தெரியவில்லை. பொதுவாக மதவாதிகள் அனைவருமே 'இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் கிடைக்கட்டும்' என்பதை சமயக் கூட்டங்களில் மட்டுமே சொல்லுவார்கள், வெளியில் அவ்வாறெல்லாம் நடந்து கொள்ளமாட்டார்கள், முடிந்த வரையில் மாற்று மதத்தினரை புண்படுத்தி, கிளறிவிட்டு குளிர்காய முடியுமா என்று மட்டுமே நினைப்பார்கள், அப்படி ஒருவராகத்தான் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் என்பவர் தெரிகிறார்.

பொதுவாக மெதடிஸ் மற்றும் பெந்தகோஸ், புரோட்டஸ்டாண்ட் கிறித்துவ சபைகளை வழிநடத்துபவர்கள் பாஸ்டர்கள் எனப்படுவார்கள், கத்தோலிக்க கிறித்துவத்தில் அருள் தந்தை அல்லது சகோதரர் என்று சமயப்படிப்பு மற்றும் பயிற்ச்சி நிலைக்கேற்ப பட்டம் வைத்திருப்பார்கள், குரானை எரிப்பதாக அறிவித்தவர் கத்தோலிக்கம் சாராத கிறித்துவ அமைப்பைச் சார்ந்தவர். ஆனால் அவருக்கு எதிராக வன்முறையில் இறங்குபவர்கள் தாங்கள் தாக்குவது எந்த பிரிவு கிறித்துவர்களை என்றெல்லாம் ஆராயமல் கத்தோலிக்கப் பிரிவு உட்பட அனைத்து கிறித்துவ பிரிவுகளையும் தாக்குவர். இந்தியாவில் இந்துத்துவாக்கள் கூட புரோட்டஸ்டாண்டை சேர்ந்தவர்களை கண்டிப்பதாக நினைத்து கத்தோலிக்க கிறித்துவர்களை தண்டிப்பார்கள். பிறமதத்தினர்களுக்கு கிறித்துவத்தினுள் உள்ள பிரிவுகள் எதுவும் தெரியாது. டோனிப் ப்ளேயர் புரோட்டஸ்டாண்டில் இருந்து கத்தோலிக்க நம்பிக்கைக்கு மாறி இருக்கிறார். நம்மைப் பொருத்த அளவில் அது நமக்கு செய்தி, கிறித்துவவர்களைப் பொருத்த அளவில் அவர்களுக்குள் மதமாற்றம். இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால் குரான் எரிப்பு நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றவோ கலவரத்தில் ஈடுபவ முனைபவர்கள் கண்ணுக்கு முன் மாதா கோவில் இருந்தாலும் அவர்களைப் பொருத்த அளவில் அது ஒரு கிறித்துவ சின்னமாகத்தான் தெரியும். இதையெல்லாம் அந்த அறிவு கெட்ட பாஸ்டர், அமெரிக்காவில் பாதுகாப்பாக இருந்து கொண்டு குரானை எரிப்பேன் என்று அறிவித்திருக்கும் பாஸ்டர் உணர்ந்தவன் இல்லை.


தீயின் பிறப்பு சின்ன உரசல் தான் அதன் பிறகு அதன் பரவல்களை கட்டுப்படுத்துவது எளிதே அல்ல. தீப்பெட்டிக்குள் உறங்கும் சின்ன தீக்குச்சி ஒரு காட்டையே அழிக்கும் ஆற்றல் மிக்கது என்பது நமக்கு தெரியும். ஆனாலும் நிலமை மோசமாகவும் வரை அதை நம்புவதற்குத்தான் நாம் தயாராக இருப்பது இல்லை. யார் கண்டது அடுத்த உலகப் போர் அந்த பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் உரசப் போகும் தீக்குச்சியின் முனையில் கூட உறங்கிக் கொண்டு இருக்கலாம். உரசப்படும் தீக்குச்சி எளிதில் பற்றிப் பரவும் வண்ணம், இஸ்லாமியர்களுக்கு எதிராக எதையுமே விமர்சனம் செய்துவிட முடியாத நிலைக்கு இஸ்லாம் (அடைப்படைவாத நம்பிக்கை என்னும் தீவிரவாத, சகிப்புத் தன்மை அற்றத) பெரும்பான்மை இஸ்லாமியர்களின் பிடியில் இருக்கிறது என்பதும் கசப்பான உண்மை.


சுட்டிகள் :
1. http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/7990783/911-Koran-burning-Sarah-Palin-calls-it-unnecessary-provocation.html

2. http://blogs.aljazeera.net/americas/2010/09/08/quran-also-burns-fahrenheit-451

10 கருத்துகள்:

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இது கிறித்துவர்களை கடுமையாக பாதிக்கும் என இவருக்கு தெரியாதா..அரசாங்கம் இன்னும் இந்தாளை உள்ளே போடாமல் வைத்திருக்கிறதா?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

முஸ்லிம்களின் புனித நூலை எரிப்பதால் என்ன பலன்?இதனால் தீவிரவாதம் முடக்கப்பட்டு விடுமா?இது அமெரிக்காவுக்கு அடுத்த பெரிய அடியாகத்தான் இருக்கும்.

கும்மி சொன்னது…

Everybody draw Muhammed போராட்டம் வெற்றி பெற்றதால், டெர்ரி இத்தகைய போராட்டத்தை (Burn Quran Day) அறிவித்திருக்கின்றார். இத்தனை ஆண்டுகளாக, செப்டம்பர் 11 வந்தபோதெல்லாம் வராத எண்ணம், இந்த வருடம் மட்டும் வருவதற்கு காரணம் Everybody Draw mohammed போராட்டமே. இது நிச்சயம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

Robin சொன்னது…

இவரை கிறிஸ்தவ அமைப்புகள் கண்டித்திருக்கின்றன என்பதை வசதியாக மறந்துவிட்டீர்கள்.

ஜோ/Joe சொன்னது…

நல்ல பதிவு கோவியாரே!

//கத்தோலிக்க கிறித்துவத்தில் அருள் தந்தை அல்லது சகோதரர் என்று வயதுகேற்ற பட்டம் வைத்திருப்பார்கள்//

சின்ன திருத்தம் ..வயதுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை ..ஒருவர் குருத்துவ நிலைக்காக படிப்பு மட்டும் பயிற்சியிலிருக்கும் வரை ‘சகோதரர்’ அன்றும் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டபின் ‘தந்தை’ என்றும் அழைக்கப்படுவார் ..வயது ஒரு பொருட்டல்ல.

பிரியமுடன் பிரபு சொன்னது…

உள்ளேன் அய்யா

smart சொன்னது…

குரான் எறிபதற்கு பின் விளைவாக கிறித்தவர்களை தாக்குவது முட்டாள் தனம்

Indian சொன்னது…

At least to my knowledge, one is not identfied as Christian in US but as Catholic or Protestant or Mormon or 7th day adventist or Scientologist or any other fringe groups. In our perspective, all of them are Christians but they seem to treat them as seperate religions.

Indian சொன்னது…

Babri Masjid verdict is to be pronounced on Sept 24th. UP govt is deploying close to 35,000 security forces in various parts of UP to manage the security situation.

Centre asks all states to be vigilant.

காலப் பறவை சொன்னது…

அவசியமான பதிவு.....

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்