பின்பற்றுபவர்கள்

13 செப்டம்பர், 2010

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா !

ஒருவார இடைவெளியில் திரையுலக நட்சத்திரங்களான நடிகர் முரளியும், பாடகி ஸ்வர்ணலதாவும் திரையுலகையும் திரை இசை இரசிகர்களையும் விட்டு மறைந்துவிட்டனர்.

காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் மிகவும் இனிமையான பாடல் ஒன்று 'வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா' என்ற பாடல், இந்த பாடல் காட்சி படி கவுசல்யா ஒரு திருமணத்திற்கு வருவார் என்று நண்பர்கள் சொல்ல, அந்த திருமண ஊர்வலத்தில் பாடகராகச் சென்றால் கவுசல்யாவை பார்க்க முடியும் என்பதால் முரளி ஒத்துக் கொண்டு பாடச் செல்லுவார்.

கவுசல்யாவின் குரலை மட்டும் அறிந்தவராக படத்தின் இறுதிவரை காட்சிகளை அமைத்திருப்பார்கள். படத்தின் ஒளிப்பதிவு தங்கர் பச்சான். தங்கர்பச்சான் முரளி மீது மிகவும் அன்பு கொண்டவர், முரளியின் இறுதி சடங்குகளின் போது துக்கம் தாளாமல் மயங்கி விழுந்தாராம்.

மெற்கண்ட பாடலைப் பாடியவர்கள் ஆண் குரலுக்காக எஸ்பிபியும் பெண் குரலுக்கு ஸ்வர்ணலதாவும் மிக நன்றாகப் பாடி இருப்பார்கள். தேவாவின் இசையில் பாடல் நன்றாகவே அமைந்திருந்தது. கிளாரிநெட், ட்ரம்ஸ் என ஊர்வலப் பாடல்களின் இசையில் கேட்க சலிக்காத பாடல், படம் வெளியான பிறகு மூன்று ஆண்டுகள் வரையிலும் கூட அந்தப் பாடல்களை ஊர்வல இசைகளில் அடிக்கடி கேட்க முடிந்தது.

பாடல் காட்சியின் போது பாடகியாக நடிப்பவர் இடையில் தாகத்திற்காக சோடக் குடிப்பதாகவும் உடனேயே பெண் குரலில் தொடரவேண்டிய நிலையில் முரளியே குரலை மாற்றிப் பெண் குரலில் பாடுவதாக அமைந்தப் பாடல். சொர்ணலாதாவின் உருவத்தை ஒத்த ஒரு துணை நடிகை படத்தில் பாடலை பாடிவருவார். முரளி பெண் குரலில் பாடுவதாக அமைந்த காட்சியில் திரையரங்கில் பலத்த கைத்தட்டல். பாடியது ஸ்வர்ணலதாவாக இருந்தாலும் முரளியின் அந்த நொடி நடிப்பு அவரே அதைப் பாடுவதாக ரசிகர்களை உணரவைத்தது.

'ஆட்டமா தேரோட்டமா ?' சொர்ணலாதாவை அடையாளப்படுத்தியதைப் போன்றே ரம்யா கிருஷ்ணனின் இடைகால மீள் வரவையும் அந்தப் பாடல் பெற்றுத்தந்தது. தொடர்ந்து சித்ராவின் பாடல்கள் வெளிவந்த காலங்களில் சொர்ணலதாவின் குரல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு அவர் பாடிய அத்தனை பாடல்களும் இனிமையாக அமைய எல்லா முன்னனி இசை அமைப்பாளர்களிடம் ஸ்வர்ணலதா பாடி வந்தார்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்' போன்ற சோகப்பாடல் மட்டுமில்லாது மிகவும் விரைவான 'மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தாயா' போன்ற பாடல்களிலும் தனி முத்திரையை பதித்தார்.

பூந்தோட்டத்தில் எந்தப் பூ அழகு என்று இனம் காண முடியாதது போலவே பாடகியில் இவர் இனிமையான குரலுக்கு சொந்தமானவர் என்பதாக நான் பாடல்களை ரசிப்பதில்லை, என்பதால் எல்லாப் பாடகிகளைப் போலவே ஸ்வர்ணலதாவும் இனிமையான குரலுக்குச் சொந்தகாரராகவே எனக்கு பட்டார். எந்த ஒரு தென்னிந்திய பாடகியும் தமிழில் பாடுவதன் மூலமே பெரும் புகழடைகிறார்கள் என்பதை ஸ்வர்ணலதாவும் நிருபணம் செய்துவிட்டார். மலையாளி என்றாலும் கூட ஒரு தமிழ் பாடகியாக தமிழ் மண்ணில் சென்னையில் இறுதி மூச்சை விட்டு தமிழ் பாடகியாக மறைந்திருக்கிறார் என்பதால் தமிழ் திரை இசை இருக்கும் காலம் வரை ஸ்வர்ணலாதாவும் போற்றப் பட வேண்டிய ஒருவர்.

ஸ்வர்ணலாதவின் குரலில் இனி புதிய பாடல்கள் கிடைக்காது என்று நினைக்கையில் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. திரை இசை நுகர்வாளன் என்ற முறையில் ஸ்வர்ணலாதாவின் மறைவில் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன்.

முரளியும் ஸ்வர்ணலாதவும் முத்திரை பதித்து விட்டுச் சென்ற பாடல், யூடியுபில் கேட்டு பாருங்கள்.

4 கருத்துகள்:

சிங்கக்குட்டி சொன்னது…

மிக அருமையான பாடல் மற்றும் பாடகி :-(

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//முரளியும் ஸ்வர்ணலாதவும் முத்திரை பதித்து விட்டுச் சென்ற பாடல், யூடியுபில் கேட்டு பாருங்கள்.//

இருவரைமே விஜய் டீவில பார்த்தேன்... அதன் பின் வந்த செய்தியை ..... சொல்ல தெரியவில்லை

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

முரளி - ஸ்வர்ணலதா - இரங்கல் இடுகை அருமை - உள்ளம் நெகிழ்ந்து எழுதப்பட்ட இடுகை.

நல்வாழ்த்துகள் கோவி
நட்புடன் சீனா

தமிழினியன் சொன்னது…

பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு "பதிவர்களின் பார்வையில் தந்தை பெரியார்" என்று ஒரு கட்டுரையை தொகுக்க நான் ஆசைப்படுகிறேன். அதில் உங்களுடைய பார்வையும் இடம் பெற வேண்டுமென நான் விரும்புகிறேன், உங்களுடைய பார்வையில் தந்தை பெரியாரைப் பற்றி ஒரு கட்டுரையோ அல்லது ஒரு பத்தியோ எழுத இயலுமா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்