ஒரு நடிகர் / நடிகை மக்கள் மனதில் நிற்பவரா இல்லையா என்பதை அவருடைய இழப்பு நிருபனம் செய்துவிடும் என்பது முரளி மறைவால் உண்மையாகி இருக்கிறது. சிலுக்கு ஸ்மிதா மறைந்த போது தான் அவருடைய ரசிகர்கள் அவருடைய கவர்சியை மட்டுமே ரசிக்கவில்லை என்பது உண்மையானது. நேற்று நக்கீரன் இணைய பக்கத்தின் தலைப்பில் முரளிப் படத்தைப் போட்டு நடிகர் முரளி மாரடைப்பால் மரணம் என்று வெளி இட்டு இருந்த செய்தியைப் படித்தவுடன் அந்த ஒரு சில நொடிகள் அதிர்ச்சி கொடுத்தன. நடிகர் என்பதால் அவருடைய இழப்பு நம் கவனம் ஈர்க்கிறதா ? என்று பார்த்தாலும் அதையும் தாண்டி நம்மை அறியாமலேயே நம்முடைய மனதில் இடம்பிடித்த நடிப்புக்குச் உடைமையானவர் என்பதை தொடர்ச்சியான அவர் நடித்தப் படங்களின் காட்சிகள் மனக்கண்ணுக்குள் ஓடி உண்மையாக்கியது. முரளி நடித்த அத்தனை படங்களையும் பார்த்திருக்காவிட்டாலும் அவருடைய வெற்றிப் படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். அதில் குறிப்பிடத்தகுந்தது புதுவசந்தம் மற்றும் இதயம். நடிகன் என்றாலும் கூட நம்மைச் சுற்றிலும் இருக்கும் கருப்புநிற மனிதர்களில் ஒன்றாக வரும் பாத்திரங்களை படைத்தவர் என்பதால் முரளி நம்மை அறியாமலேயே நமக்குள் சென்றிருக்கிறார்.
தொடர்ந்து நாயகனாக நடித்தாலும் விஜயகாந்த், சரத்குமார், மம்முட்டி போன்ற பெரும் நடிகர்களின் தம்பியாக, துணைப்பாத்திரமாக நடிக்க தயங்கமால அந்தப் பாத்திரங்களை நிறைவாக செய்தவர். கேஎஸ்ரவிகுமார் இயக்கத்தில் வெளியான சமுத்திரம் படத்தில் சரத்துக்கு தம்பியாகவும் பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கு அண்ணனாகவும் , ரம்பாவுக்கு கணவனாகவும் சிறப்பாக நடித்திருப்பார், அந்தப் படத்தில் சரத்குமாரைவிட சிறப்பாக செய்தவர் முரளி தான். அதே போன்று லிங்குசாமியின் ஆனந்தம் படத்தில் 'வான்மதி சோப்' விளம்பர பணியனைப் போட்டுக் கொண்டு மம்முட்டிக்கு தம்பியாக அண்ணன் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பவராகவே நடிப்பில் பின்னி இருப்பார். சுந்தர் ராஜன் இயக்கத்தில் வெளியான என் ஆசை மச்சான் படத்தில் விஜயகாந்துக்கு தம்பியாக என இவர் தம்பியாக நடித்தப் படங்களில் தம்பி பாத்திரத்திற்கு நல்லதொரு இலக்கணம் என்று சொல்லக் கூடிய நடிப்பை வழங்கி இருப்பார்.
புதுவசந்தம், காலமெல்லாம் காதல் வாழ்க, இதயம் ஆகிய படங்களில் மேடையில் மைக் பிடித்து பாடிய இவரது பாட்டுக்கள் என்றும் இனிமையாகக் கேட்கக் கூடியவை. பெரும்பாலும் குறைவான செலவில் படமெடுக்கவும், மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆன முகம் என்பதால் புதிய இயக்குனர்கள் எப்போதும் நாடிய நடிகர் முரளி. கஸ்தூரி ராஜாவின் என் ஆசை ராசாவே படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கனேசனுக்கு மகனாகவும் நடனக் கலைஞராகவும் நடித்தார். 90களின் முன்னனி நடிகைகள் ரோஜா, மீனா உட்பட நேற்றைய முன்னனி நாயகி சிம்ரன் வரை பல முன்னனி நடிகைகளுடன் 90க்கும் மிகுதியான படங்களில் நடித்துள்ளார்
முரளியின் படங்களையும் சிறப்பான பாத்திரங்களையும் பதிவர் முரளி கண்ணன் தொகுத்து வெளி இடுவார் என்று நினைக்கிறேன்.
நடிகனுக்காக / நடிகைக்காக வருந்துவதா என்று கேட்டால் மறைமுகமாக அந்த நடிகனின் நடிப்பு நம் மனதில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நடிகர்கள் பிழைப்புக்காக புகழுக்காக நடிக்கிறார்கள் என்றாலும் அதைத்தாண்டி மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற அவர்களின் நடிப்பின் ஈடுபாடு நம்மை எப்படியும் அடைந்துவிடுகிறது, அப்படியானவர்களுக்கு உருகுவதில் தவறு இல்லை. நடிகர்கள் மட்டும் இல்லை, எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், பொது நலவாதிகள் இவர்கள் தம்முடைய பிழைப்பு வாதம் என்பதைத் தவிர்த்து அவர்களின் உழைப்பு, ஈடுபாடு, அர்பணிப்பு ஆகியவற்றினால் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் போது அவர்களுக்காக உருகுவதில் தவறே இல்லை. அது தான் நாம் அவர்களின் பொது நலத்தை, அர்பணிப்பை அங்கீகரித்ததாக நாம் அவர்களுக்கு கொடுக்கும் மதிப்பும் ஆகும்.
முரளியின் மறைவு பலராலும் பேசப்படுவதில் இருந்து அவர் அதிரடி நாயகனாக இல்லாவிட்டாலும் தமிழ் திரை ரசிகர்களின் ஆழ்மனதில் இடம் பிடித்த நடிகர் என்பதை உறுதிப் படுத்தியுள்ளது. முரளியின் மறைவால் அதிர்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன்.
என்றும் மாறாத் தோற்றத்தில் இருக்கும் முரளி தன் திடிர் மறைவின் வழி தன் தோற்றத்தை காலத்தாலும் மாற்ற முடியாமல் செய்துவிட்டார்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
9 கருத்துகள்:
அட இதில் கூட உங்க டச்சிங்.
நிஜம் தான் கோவி.கண்ணன்!இளமையான திறமையான நடிகர்..இந்த இழப்பு கொஞ்சம் ஜீரணிக்க முடியவில்லை தான்!
வணக்கம் கோவி. கண்ணன்,
//சரத்துக்கு அண்ணனாகவும் பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கு தம்பியாகவு//
சரத்துக்குத் தம்பியாகவும், மனோஜுக்கு அண்ணனாகவும் என வரவேண்டும்
//கஸ்தூரி ராஜாவின் வீரத்தாலாட்டி படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கனேசனுக்கு மகனாகவும் நடனக் கலைஞராகவும் நடித்தார்//
இந்தத் திரைப்படத்தின் பெயர் என் ஆச ராசாவே
வீரத்தாலாட்டு ராஜ்கிரணுடன் முரளி இணைந்து நடித்த படம்
//Blogger ஜோதிஜி said...
அட இதில் கூட உங்க டச்சிங்.//
டச்சிங்கெல்லாம் ஒன்றும் இல்லை. வழக்கமாக எழுதுவது போல் தான். அதைத்தான் டச்சிங்க் என்கிறீர்களோ !
நன்றி !
//ஆனந்தி.. said...
நிஜம் தான் கோவி.கண்ணன்!இளமையான திறமையான நடிகர்..இந்த இழப்பு கொஞ்சம் ஜீரணிக்க முடியவில்லை தான்!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆனந்தி
// அருண்மொழிவர்மன் said...
வணக்கம் கோவி. கண்ணன்,//
தகவல் பிழைகளை சரி செய்துவிட்டேன், குறிப்புக்கு மிக்க நன்றி அருண்
வருத்தம் தரும் செய்தி ....
//காலத்தை வென்ற முரளி !//
காலத்தை வெல்பவர் யாரும் இல்லை ...காலம் அனைவரயும் விலுங்கி ஏப்பம் விட்டு விட்டு சென்று கொண்டே இருக்கும் ...நம் காலத்தில் முரளி மறக்க முடியாதவர் எனலாம் ......
//தனி காட்டு ராஜா said...
வருத்தம் தரும் செய்தி ....
//காலத்தை வென்ற முரளி !//
காலத்தை வெல்பவர் யாரும் இல்லை ...காலம் அனைவரயும் விலுங்கி ஏப்பம் விட்டு விட்டு சென்று கொண்டே இருக்கும் ...நம் காலத்தில் முரளி மறக்க முடியாதவர் எனலாம் ......//
நான் குறிப்பிட்டதன் பொருள் முதுமை தோற்றம் கிடைக்கப் பெறதாவர் நினைவில் இருக்கும் வரை அதே தோற்றத்தில் இருப்பவர் என்ற பொருளில் தான்
மாமூ கடல் பூக்கள் படத்தை விட்டுட்டீங்களே பாக்கலைன்னா கண்டிப்பா பாருங்க
கருத்துரையிடுக