பின்பற்றுபவர்கள்

3 செப்டம்பர், 2010

பெரியார் பற்றாளர்களுக்கு அன்பு வேண்டுகோள் !

தமிழகத்தில் பெரும அளவு மக்களால் தந்தை பெரியார் என்று போற்றப்படும் பெரியார் சிலை குறித்த செய்தியில் ஈவேரா சிலை சேதம் என்று தலைப்பிட்டு தனது பார்பன, இந்துத்துவ அரிப்பை செய்தித்தலைப்பாக வெளி இட்டுள்ளது தினமலர். செய்தி இதழ்கள் தலைவர்களின் பெயரை போட்டு எழுதலாமா அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்ட பெயர்களை வைத்து அழைக்கலாம் என்று கேட்டால் தலைவர்களின் பெயரைப் போட்டு எழுதுவது தவறில்லை என்பது சரியான நிலைப்பாடு என்றாலும் மறைந்த பெண்ணிய எழுத்தாளர் அனுராதா இரமணனை கையைப் பிடித்து இழுத்தவர் என்று சொல்லப்படும் மற்றும் சங்கரராமன் கொலை வழக்கில் வாய்தா வாங்கும் காஞ்சி மட சாமியார் சுப்பிரமணியும் அவரது இளவலையும் பெயரிட்டு இந்த செய்தி இதழ்கள் எழுதுவதில்லை மாறாக 'பெரியவா, பாலப் பெரியவா' என்றே எழுதுகின்றன என்பதில் இருந்து இவர்களின் தமிழர் எதிர்ப்போக்கு மற்றும் இந்துத்துவ நிலைப்பாடு வெட்ட வெளிச்சம். இதே தினமலர் தம் நிறுவனர் பெயரை 'ராமசுப்பையர்' என்று சாதிப் பெருமையுடனே எழுதிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தினமலரை கண்டனம் செய்யவோ, தினமலர் தம் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் இதைக் குறிப்பிட வில்லை, நாய்வாலையும், சாதி மதவெறியர்களையும் நிமிர்த, நிறுத்த முடியாது.

*****

பெரியார் வெறுப்பாளர்கள் கோழைகள் போல் இரவு நேரங்களில் பெரியார் சிலைகளுக்கு சேதம் விளைவிப்பது பகுத்தறிவு பகலவன் கருணாநிதி ஆட்சி காலங்களில் தான் அவ்வப்போது நடைபெறுகிறது, கடந்த முறை திருவரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது திண்டுகல் அருகே பெரியார் சிலைக்கு சந்தனம் குங்குமம் வைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட போது கருணாநிதியே ஆட்சியில் இருந்தார். கருணாநிதி பெரியாரின் வாரிசு, காவலன் என்று காட்டிக் கொண்டாலும் அவருடைய ஆட்சியின் போது தான் பெரியார் எப்போதும் அவமரியாதை செய்யப்படுகிறார்.

மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு - நக்கீரன்

ஆகஸ்ட் 6 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட சிலை ஒரு மாதத்திற்குள் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பெரியார் சிலை சேதம்: திருச்சியில் பரபரப்பு - நக்கீரன்

அதே நாளில் திருச்சியிலும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாம்.

*****


கருணாநிதி கன்யாகுமரியில் அமைத்த வானுயர்ந்த திருவள்ளுவர் சிலை சுற்றுலா செய்வோரை மலைக்க வைக்கிறது, தமிழர்களின் தொல் பெருமைகளை பிறர் அறிந்து கொண்டு தமிழர்களை பெருமை படுத்துகிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தாழ்த்தப்பட்டோர் படித்து முன்னேறிய நிலை தமிழகத்தில் மட்டுமே உள்ளது, பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணியம் ஆகியவற்றிற்கு தமிழகத்தில் பெரியார் ஆற்றிய தொண்டுகளை முறியடிக்க இன்னொருவர் பிறக்கவோ, பெரியாருக்கும் முன்பு இருக்கவோ இல்லை. அத்தகைய பெருமை மிகு பெரியாருக்கு திருவள்ளுவருக்கு தென் கோடியில் கடற்கரையில் வானுயர்ந்த சிலை வைத்தது போல் வட தமிழகத்தில் சென்னையில் மெரினா கடற்கரையில் ஏன் வானுயர்ந்த சிலை வைத்து பெருமை படுத்தக் கூடாது ? திராவிடக் கழகம் மற்றும் பெரியார் திராவிடக் கழகம் ஆகிய அரசியல் அமைப்புகளின் ஆதரவாளர்கள் பெரியாருக்கு மிகப் பெரிய சிலை வைக்கச் சொல்லி தமிழக முதலவரை வற்புறுத்தலாமே ? தந்தை பெரியாருக்கு திருவள்ளுவரைப் போல் வானுயர்ந்த சிலை அமைந்துவிட்டால் பெரியார் சிலையை உடைக்க நினைப்பவர்கள் பெரியார் சிலையின் கால் நகத்தைக் கூட பெயர்த்துவிட முடியாது. வலைப்பதிவில் பெரியார் பாசறைத் தோழர்கள் இயங்குறார்ர்கள் இவர்கள் தமிழக அரசிடம் பெரியாருக்கு மிகப் பெரிய சிலை வைக்கச் சொல்லி வற்புறுத்தலாமே. கருணாநிதிக்கும் வரலாற்றை எழுதிக் கொள்ள இன்னொமொரு வாய்ப்பு கிடைக்கும் தவறவிட்டுவிடுவாரா என்ன ?

தாடியோடு நின்ற நிலையில் வள்ளுவரும் பெரியாரும் ஒற்றுமைகள் உண்டு. பெரியாரைப் பற்றி மக்களும், தமிழகத்தில் சுற்றுலா வருவோரும் தெரிந்து கொள்ள அவர் அன்றாடம் மக்கள் வந்து செல்லும் இடத்தில் திருவள்ளுவரைப் போல் பெரியார் சிலை பெரிய அளவில் இருக்க வேண்டும்.

33 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

நாய்வாலையும், சாதி மதவெறியர்களையும் நிறுத்த முடியாது.

priyamudanprabu சொன்னது…

நல்லது , நடக்குமா பார்ப்போம்

priyamudanprabu சொன்னது…

பெரியார் சிலை சேத படுத்துவது அவர்களின் பயத்தை காட்டுது
எந்த நிலையிலும் பெரியார் உள்ளிட்டவர்கள் யாரும் கோவிலை இடித்தது கிடையாது , ஆனால் கடவுளை நம்புவதாக சொல்லும் மதவாதிகள் தான் கோவிலை(மசூதி , ஆலயம்) இடித்துள்ளார்கள்

மாயவரத்தான் சொன்னது…

இதே அளவுகோலை வீரமணி உள்ளிட்டவர்களுக்கும் சொல்வீர்களா? சங்கராச்சாரியார் என்று அழைக்க வேண்டும், அதை சங்கராச்சாரி என்று அழைக்கலாமா? மட சாமியார் என்றெல்லாம் எழுத உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதை விட அதிக அளவு உரிமை சொந்தக் காசில் பேப்பர் ஆரம்பித்து நடத்தும் அவர்களுக்கு இருக்கிறது.

**

லைம்லைட்டில் எப்போதும் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆட்களே சிலையை உடைத்திருந்தால்?!

**

ராமசாமி நாயக்கர் உடைக்காத சிலைகளா? ஜோக்கடிக்காதீங்க சார்.

கோவி.கண்ணன் சொன்னது…

// மாயவரத்தான்.... said...

இதே அளவுகோலை வீரமணி உள்ளிட்டவர்களுக்கும் சொல்வீர்களா? சங்கராச்சாரியார் என்று அழைக்க வேண்டும், அதை சங்கராச்சாரி என்று அழைக்கலாமா? மட சாமியார் என்றெல்லாம் எழுத உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதை விட அதிக அளவு உரிமை சொந்தக் காசில் பேப்பர் ஆரம்பித்து நடத்தும் அவர்களுக்கு இருக்கிறது.

**//

வீரமணி நடத்துவது கட்சி செய்தித்தாள், அவர்களுக்கான அரசியல் நிலைப்பாடு வெளிப்படை, தினமலரையும் அவ்வாறு 'நாங்கள் இந்துத்துவ ஆதரவாளர்கள்' என்று போர்டு மாட்டிக் கொண்டு எழுதினால் நான் விமர்சனம் செய்யப்போவதில்லை. இடைச்சொருகலைத்தான் சாடுகிறேன்.

// லைம்லைட்டில் எப்போதும் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆட்களே சிலையை உடைத்திருந்தால்?!//

இதே போன்ற சந்தேகங்கள் ஏன் இந்தியாவில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு உங்களுக்கு வருவதில்லை ?

**

// ராமசாமி நாயக்கர் உடைக்காத சிலைகளா? ஜோக்கடிக்காதீங்க சார்.//

கடற்கரையில் கிரேன் கொண்டு உடைத்து நொறுக்கப்படும் பிள்ளையார் சிலைகளையும் அதன் சுற்றுப்புறச் சீர்கெடுகள் என்கிற அளவுக்கெல்லாம் பெரியார் ஆதரவாளர்கள் பிள்ளையார் சிலைகளை உடைத்து நொறுக்கி இருக்கமாட்டார்கள்.

சரவணன்-சாரதி சொன்னது…

பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டா'ன்'. இது அந்தப் பத்திரிக்கையின் இணையத்தளத்தில் ஸ்க்ரோல் செய்யப் பட்ட தகவல். சற்று நேரத்தில் அதை மாற்றிவிட்டார்கள். (இன்றுவரை அதை என்னால் மறக்க முடியவில்லை) அவர்களிடமிருந்து வேறென்ன நாம் எதிர்பார்க்க முடியும். இவர்களுடன் விவாதம் செய்வதை விட பெரியாரை - அவரது கொள்கையை நம் அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வதே சரியான வழி. ஏனென்றால் பெரியார் இருந்திருந்தால் அதைதான் செய்திருப்பார்.

வால்பையன் சொன்னது…

பெரியார் எதிர்ப்பாளர்கள் பெரியாருக்கு மாலை, போட்டு சந்தனம் தடவி விட்டதா நினைகிறிங்களா?

பெரியார் பக்தர்களே!? அதை தான் செய்யுறாங்க!

வெண்தாடிதாசன் சொன்னது…

பெரியாருக்கு 95 அடி உய‌ர‌ சிலையை சென்னையில் நிறுவ‌ திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஏற்க‌ன‌வே வேண்டுகோள் விடுத்துவிட்ட‌து. அர‌சு அத‌ற்கு ஏற்ற‌ இட‌ம் இல்லை என‌ கூறி 95 சிலைக‌ளை த‌மிழ‌க‌ம் எங்கும் உள்ள‌ பெரியார் ச‌ம‌த்துவ‌புர‌ங்க‌ளில் நிறுவும் என்று அறிவித்துவிட்டது.

ராம‌சாமி நாய‌க்க‌ர் யாரோ அமைத்த‌ சிலைக‌ளை உடைக்க‌வில்லை. த‌ன் காசில் வாங்கிய‌ பொம்மைக‌ளைதான் உடைத்தார். பொய் பிர‌ச்சார‌ம் செய்யும் கடைந்‍தெடுத்த‌ க‌ய‌வ‌ர்க‌ள் அதை மூடி ம‌றைப்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

இதை கட்டாயம் செய்யவேண்டும். அருமையான யோசனை. இப்ப இருக்கும் சூழ்நிலையில் அய்யா இதை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதுக்குன்னு நம்ம பெரியாரை விட்டுக் கொடுத்து விடமுடியுமா என்ன?

ஆதாலால், இந்த கோரிக்கையை அம்மாவுக்கு வையுங்கள். அம்மா காட்டாயம் செய்வா. அடுத்த முதல் அமைச்சர் நம்ம தைரியலட்சுமி தான். இன்னும் மூன்று மாசம் தான்.

உங்கள் கோரிக்கையை அம்மா கிட்டே வைப்பேளா? நம்ம தைரியலட்சுமி கட்டாயம் உங்க கோரிக்கையை நிறைவேற்றுவா அதுவும் பார்ப்பன பத்திரிக்கைகள் அனுமதித்தால்...

பார்ப்பன பத்திரிக்கைகள் அனுமதித்தால் அம்மாவைப் போற்றுவோம்...அனுமதிக்காவிட்டால்அப்போதும் ஐயாவை தூற்றுவோம். அது தானே சூத்திரன் வேலை...

என் பணி நம்மள விட கீழ் ஜாதிக்காரன் ஆட்சிக்கு வரக்கூடாது.

ஆனால் நம்மள விட மேல் ஜாதிக்கார அம்மா ஆட்சிக்கு வரலாம். சூத்திரனுக்கு என்னைக்கு அறிவு இருந்து இருக்கு...இப்போ வரதுக்கு...

ஒசை சொன்னது…

எந்த தலைவருக்குமே சிலை வேண்டாம் என்பதே நமது கருத்து. இருக்கிற சிலைகளையும் அகற்றிடலாம்.

யுவகிருஷ்ணா சொன்னது…

//கருணாநிதி பெரியாரின் வாரிசு, காவலன் என்று காட்டிக் கொண்டாலும் அவருடைய ஆட்சியின் போது தான் பெரியார் எப்போதும் அவமரியாதை செய்யப்படுகிறார்.//

தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரியார் சிலையின் முன்பாகவும் ரவுண்டு முறையில் இனி தினம் தினம் இரவுகளில் அவரே காவல் காக்க வேண்டுமென்று கருணாநிதிக்கு கோவியார் சார்பில் உத்தரவிடுகிறோம்.

ஜோ/Joe சொன்னது…

//தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரியார் சிலையின் முன்பாகவும் ரவுண்டு முறையில் இனி தினம் தினம் இரவுகளில் அவரே காவல் காக்க வேண்டுமென்று கருணாநிதிக்கு கோவியார் சார்பில் உத்தரவிடுகிறோம்.
//
அப்படியே என் மனதில் தோன்றியது :)

ராஜவம்சம் சொன்னது…

பதிவிட வைத்திருந்தது.

ஏன் இந்த மாலை மரியாதை

நான் நத்திகன் என்று கூறிகொள்ளும் யாவரும் அந்த கொள்கையில்
சரியாக இருக்கிறார்களா?

ஒரு பெரியார் தொண்டனிடம் விவாதித்துகொண்டிருக்கையில்
நான் கேட்டேன் உங்கள் தொண்டர்களுக்கு முன்னிலையில்
பெரியாரின் சிலையை நான் செருப்பால் அடித்தால் என் நிலைமை
என்னவாகும் என்றேன்

அடிச்ச கையை வெட்டிடுவோம் என்றார் மிகவும் கோவமாக
ஏன் என்றேன்
நாங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரை எங்கள் கொள்கையின் அடித்தலம்
இட்ட ஒருவரின் சிலையை சீண்டினால் சும்மாவா இருப்போம் என்றார்.

அது ஒரு கல் அதுக்கு உணரும் சக்தியோ புனரும் சக்தியோ கிடையாது
அதுக்கு மாலை அனிவிக்கிறீர்கள் மரியாதை செலுத்துகிறீர்கள்
இது மூடநம்பிக்கையா முற்போக்கு சிந்தனையா?

முற்போக்குவாதி என்று சொல்லிக்கொள்ளும் உங்களாலேயே
பெரியாரின் உருவம் பொதித்த கல்சிலையை அவமதிப்பதை
தாங்கமுடியவில்லை என்றால் காலாகாலமாக நம்பிவரும் மதவாதிகளை
நீங்கல் விமர்ச்சிக்கும் முறை சரியா?

Unknown சொன்னது…

சிலை வழிபாட்டை எதிர்த்தவர்க்கு சிலை எதற்கு?
திருவரங்கத்தில், கோவில் அருகே, பெரியார் சிலை வைக்க அவசியம் என்ன?அதற்கு போலிஸ் பாதுகாப்பு எதற்கு? இது எந்த வகையான அரிப்பு?

வள்ளுவர் மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்! அவர் ஒரு ஐகான்!

எத்தகைய சிலைகளையும் உடைத்து விடலாம்!

vignaani சொன்னது…

//அவரது கொள்கையை நம் அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வதே சரியான வழி. ஏனென்றால் பெரியார் இருந்திருந்தால் அதைதான் செய்திருப்பார்//
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புக்கு தரப்படும் முதன்மை சாதி ஒழிப்புக்கு தரப்படவில்லை. சாதியம் ஒழிய வேண்டும் என்பதே பெரியாரின் குறிக்கோள்.
தற்கால பகுத்தறிவாளர்கள் தங்கள் வீரத்தை பார்ப்பனர்களை வசை பாடுவதுடன் நிறுத்திக்கொள்கிறார்கள். பிற சாதி தீய வழக்கங்களை, தலித்துகளை நடத்தும் முறை பற்றி வாய் திறப்பதில்லை.
பெரியாரின் மைய நோக்கம் அதாவது சாதி ஒழிப்பு சமூகத்தில் வரவேண்டும் என அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொள்வோம்.
சிலை ஒரு அடையாளமே; மனப் போக்கு மாற வேண்டும். முதல் மாற்றம் வலைகளில் தொடங்கட்டும்.

vignaani சொன்னது…

//அவரது கொள்கையை நம் அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வதே சரியான வழி. ஏனென்றால் பெரியார் இருந்திருந்தால் அதைதான் செய்திருப்பார்//
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புக்கு தரப்படும் முதன்மை சாதி ஒழிப்புக்கு தரப்படவில்லை. சாதியம் ஒழிய வேண்டும் என்பதே பெரியாரின் குறிக்கோள்.
தற்கால பகுத்தறிவாளர்கள் தங்கள் வீரத்தை பார்ப்பனர்களை வசை பாடுவதுடன் நிறுத்திக்கொள்கிறார்கள். பிற சாதி தீய வழக்கங்களை, தலித்துகளை நடத்தும் முறை பற்றி வாய் திறப்பதில்லை.
பெரியாரின் மைய நோக்கம் அதாவது சாதி ஒழிப்பு சமூகத்தில் வரவேண்டும் என அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொள்வோம்.
சிலை ஒரு அடையாளமே; மனப் போக்கு மாற வேண்டும். முதல் மாற்றம் வலைகளில் தொடங்கட்டும்.

sundar சொன்னது…

t is funny that you are desparately trying to still portray H.H.Sankaracharya as a criminal and a womaniser which till date had not seen a shred of an evidence.This is typical of the slander and calumny campaign usually indulged by Dravidian movements.Late Anuradha Ramana had all the backing by the rulers and why she did not proceed in a court of Law?Please do not show your desperation

Raghav சொன்னது…

"பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணியம் ஆகியவற்றிற்கு தமிழகத்தில் பெரியார் ஆற்றிய தொண்டுகளை முறியடிக்க இன்னொருவர் பிறக்கவோ, பெரியாருக்கும் முன்பு இருக்கவோ இல்லை"

சிலைகளை தொழுபவனை வன்மையாக கண்டிக்கும் பகுத்தறிவு.

பகுத்தறிவுவாதிகள் ஏன் எங்கள் பெரியாருக்கு வானளாவிய சிலை வெய்க்க வேண்டும் என்று கேட்க வேண்டும் ? கேட்பது உங்கள் உரிமை, சுதந்திரம் நான் அதை கேள்வி கேட்க வில்லை... இன்னும் 20 - 30 சந்ததிகள் சென்ற பின் பெரியாருக்கு படையல் வெய்துவிட போகிறாகள்.

எனக்கு நியாயமாக படுவதால் கேட்கிறேன் - இவளவு காலம் ஆகியும் பெரியாரவர்களது படைப்புகள் *முழுவதையும்* பொது உடமைகளாக ஆக்க முடியவில்லையே... அதை செய்வோமானால் உண்மையான தொண்டாக ஆகும் அல்லவா? அதன் சிறப்பு எத்தனை ஆயிரம் அடி உயரம் கொண்ட சிலை எழுப்பினாலும் ஈடு செய்ய முடியாது என்பது என் கருத்து...

அவர் படைப்புக்களை முனைந்து வெளிகொனராவிடில் பல சந்ததிகளுக்கு பிறகு நான் சொன்னது போல் சிலை மட்டும் மிஞ்சலாம் - உண்மை புரியாமல் படையல்களும் வேயக்கபடலாம்...

மணிகண்டன் சொன்னது…

//
திருவரங்கத்தில் பெரியார் சிலைக்கு சந்தனம் குங்குமம் வைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட போது கருணாநிதியே ஆட்சியில் இருந்தார்
//

?? When did it happen ?

கோவி.கண்ணன் சொன்னது…

//sundar said...

t is funny that you are desparately trying to still portray H.H.Sankaracharya as a criminal and a womaniser which till date had not seen a shred of an evidence.This is typical of the slander and calumny campaign usually indulged by Dravidian movements.Late Anuradha Ramana had all the backing by the rulers and why she did not proceed in a court of Law?Please do not show your desperation//

ஹார்லிக்ஸ் சியாமளா, சீரங்கம் உஷா, பூக்கூடை வீடியோ கேசட், ரவி சுப்ரமணியம், பாண்டி பஜார் எழுச்சி மாத்திரை என்றெல்லாம் தேடிப்பார்த்தால் நிரம்ப செய்திகள் கிடைக்கலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

மணிகண்டன் said...

//
திருவரங்கத்தில் பெரியார் சிலைக்கு சந்தனம் குங்குமம் வைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட போது கருணாநிதியே ஆட்சியில் இருந்தார்
//

?? When did it happen ?

http://bsubra.wordpress.com/category/rationalism/

http://www.alaikal.com/new/index.php?option=com_content&task=view&id=866&Itemid=2

கோவி.கண்ணன் சொன்னது…

// ரம்மி said...

சிலை வழிபாட்டை எதிர்த்தவர்க்கு சிலை எதற்கு?
திருவரங்கத்தில், கோவில் அருகே, பெரியார் சிலை வைக்க அவசியம் என்ன?அதற்கு போலிஸ் பாதுகாப்பு எதற்கு? இது எந்த வகையான அரிப்பு?//

திருச்சிராப்பள்ளி என்பதே சமணப் பள்ளியாக இருந்த ஊர் அங்கே திருமாலுக்கு சிலை எதற்குன்னு சமணர்கள் சார்பில் நான் கூட கேட்கலாம் :)

// வள்ளுவர் மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்! அவர் ஒரு ஐகான்!//

எனக்கு தெரிந்து எந்த இஸ்லாமியர், கிறித்துவரும் திருக்குறளை திருமண அழைப்பில் கூடப் போட்டு நான் பார்த்தது இல்லை. திருக்குறளை திருமண அழைப்பில் போடும் பார்பனர்களும் மிகக் குறைவு. பிறகு திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் என்று எப்படிச் சொல்கின்றீர் ? திருவள்ளுவர் தமிழர், பெரியாரும் தமிழர் (தாய்மொழி கன்னடம்) பலரால் விரும்பப்படுபவர். ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வர் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

// எத்தகைய சிலைகளையும் உடைத்து விடலாம்!

11:02 AM, September 04, 2010//

மகாத்மா காந்தி சிலை உட்பட என்று சேர்த்துச் சொல்லி இருக்கலாமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜவம்சம் said...

பதிவிட வைத்திருந்தது.

ஏன் இந்த மாலை மரியாதை

நான் நத்திகன் என்று கூறிகொள்ளும் யாவரும் அந்த கொள்கையில்
சரியாக இருக்கிறார்களா?//

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அனைவரும் யோக்கியர்கள் என்பது போல் உள்ளது. உலகத்தில் 95 விழுக்காட்டு கடவுள் நம்பிக்கையாளர்களால் உலகம் அமைதி பூங்காவாக இருக்கனும், ஆனால் நடைமுறையில் அப்படி ஒன்றுமே இல்லை. எல்லோருரம் அரிச்சந்திரனாகவே இருந்தால் அரிச்சந்திரன் புராணத்தை யாரிடம் பாடுவீர்கள் ?

ஒரு பெரியார் தொண்டனிடம் விவாதித்துகொண்டிருக்கையில்
நான் கேட்டேன் உங்கள் தொண்டர்களுக்கு முன்னிலையில்
பெரியாரின் சிலையை நான் செருப்பால் அடித்தால் என் நிலைமை
என்னவாகும் என்றேன்

அடிச்ச கையை வெட்டிடுவோம் என்றார் மிகவும் கோவமாக
ஏன் என்றேன்
நாங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரை எங்கள் கொள்கையின் அடித்தலம்
இட்ட ஒருவரின் சிலையை சீண்டினால் சும்மாவா இருப்போம் என்றார்.

அது ஒரு கல் அதுக்கு உணரும் சக்தியோ புனரும் சக்தியோ கிடையாது
அதுக்கு மாலை அனிவிக்கிறீர்கள் மரியாதை செலுத்துகிறீர்கள்
இது மூடநம்பிக்கையா முற்போக்கு சிந்தனையா? //

கல் மூடநம்பிக்கையா இல்லையா என்பதையும் கோவில் புனிதமா இல்லையா என்பதையும் நிறைய பேசியாகிவிட்டது. ஆலய நுழைவு போராட்டம், தீண்டாமை என்கிற சொற்கள் சமூகத்தில் இருக்கும் வரை புனித சிந்தனை என்று கூட நீங்கள் சிலைக்கு எந்த ஒரு புனிதமும் கற்பிக்க முடியாது.

// முற்போக்குவாதி என்று சொல்லிக்கொள்ளும் உங்களாலேயே
பெரியாரின் உருவம் பொதித்த கல்சிலையை அவமதிப்பதை
தாங்கமுடியவில்லை என்றால் காலாகாலமாக நம்பிவரும் மதவாதிகளை
நீங்கல் விமர்ச்சிக்கும் முறை சரியா?//

வாழ்ந்த மாந்தர்களும் கற்பனை கதா பாத்திரங்களை வைத்து பிறரை அண்டவிடாமல் வைத்திருப்பதும் ஒன்று அல்ல

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...

பெரியார் எதிர்ப்பாளர்கள் பெரியாருக்கு மாலை, போட்டு சந்தனம் தடவி விட்டதா நினைகிறிங்களா?

பெரியார் பக்தர்களே!? அதை தான் செய்யுறாங்க!//

பெரியார் பற்றாளர்கள் அதைச் செய்யவில்லை, அதைச் செய்ததாக கைது செய்யப்பட்டவர்களில் பெரியார் பற்றாளர்கள் இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

// வெண்தாடிதாசன் said...

பெரியாருக்கு 95 அடி உய‌ர‌ சிலையை சென்னையில் நிறுவ‌ திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஏற்க‌ன‌வே வேண்டுகோள் விடுத்துவிட்ட‌து. அர‌சு அத‌ற்கு ஏற்ற‌ இட‌ம் இல்லை என‌ கூறி 95 சிலைக‌ளை த‌மிழ‌க‌ம் எங்கும் உள்ள‌ பெரியார் ச‌ம‌த்துவ‌புர‌ங்க‌ளில் நிறுவும் என்று அறிவித்துவிட்டது.

ராம‌சாமி நாய‌க்க‌ர் யாரோ அமைத்த‌ சிலைக‌ளை உடைக்க‌வில்லை. த‌ன் காசில் வாங்கிய‌ பொம்மைக‌ளைதான் உடைத்தார். பொய் பிர‌ச்சார‌ம் செய்யும் கடைந்‍தெடுத்த‌ க‌ய‌வ‌ர்க‌ள் அதை மூடி ம‌றைப்பது உள்ளங்கை நெல்லிக்கனி.//

நடிகர்களுக்கு இலவசமாக நிலம் ஒதுக்க தமிழ் நாட்டில் இடம் உண்டு. பெரியாருக்கு கிடையாது, இது தான் பெரியார் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் பிழைப்புவாதிகளின் பதிலாக இருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//யுவகிருஷ்ணா said...

//கருணாநிதி பெரியாரின் வாரிசு, காவலன் என்று காட்டிக் கொண்டாலும் அவருடைய ஆட்சியின் போது தான் பெரியார் எப்போதும் அவமரியாதை செய்யப்படுகிறார்.//

தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரியார் சிலையின் முன்பாகவும் ரவுண்டு முறையில் இனி தினம் தினம் இரவுகளில் அவரே காவல் காக்க வேண்டுமென்று கருணாநிதிக்கு கோவியார் சார்பில் உத்தரவிடுகிறோம்.//

நந்தனம் சிக்னலில் தேவர் சிலைக்கு பாதுகாப்புகள் கொடுக்கப்படுதே லக்கிசார். தேவர் சிலையை உடைத்தால் கலவரம் வரும் பெரியார் சிலையை உடைத்தால் கலவரம் எதுவும் வராது என்பதால் கொடுக்கப்படுவதில்லை என்று கொள்ளலாம் என்று சொல்ல வருகிறீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ/Joe said...

//தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரியார் சிலையின் முன்பாகவும் ரவுண்டு முறையில் இனி தினம் தினம் இரவுகளில் அவரே காவல் காக்க வேண்டுமென்று கருணாநிதிக்கு கோவியார் சார்பில் உத்தரவிடுகிறோம்.
//
அப்படியே என் மனதில் தோன்றியது :)//

அவர் மனதில் தோன்றியதே உங்களுக்கும் தோன்றினால் அவருக்கு கொடுத்த பதிலையே உங்களுக்கும் படித்துக் கொள்ளுங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

// ஒசை. said...

எந்த தலைவருக்குமே சிலை வேண்டாம் என்பதே நமது கருத்து. இருக்கிற சிலைகளையும் அகற்றிடலாம்.//

எல்லாரோம் மீசை எடுக்கும் போது நாமும் எடுப்போம், இப்போ வைத்திருப்போர்களை கணக்கில் கொள்வோம்

மணிகண்டன் சொன்னது…

///
//
திருவரங்கத்தில் பெரியார் சிலைக்கு சந்தனம் குங்குமம் வைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட போது கருணாநிதியே ஆட்சியில் இருந்தார்
//

?? When did it happen ?

http://bsubra.wordpress.com/category/rationalism/

http://www.alaikal.com/new/index.php?option=com_content&task=view&id=866&Itemid=2

///

திண்டுக்கல் ஸ்ரீரங்கத்திலிருந்து கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர் :)-

ஸ்ரீரங்கத்தில் உடைத்தார்கள் என்று தெரியும். விபூதி, குங்கும, சந்தன கூத்து நடந்த ஞாபகம் இல்லை. அதனால் தான் கேட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//திண்டுக்கல் ஸ்ரீரங்கத்திலிருந்து கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர் :)-

ஸ்ரீரங்கத்தில் உடைத்தார்கள் என்று தெரியும். விபூதி, குங்கும, சந்தன கூத்து நடந்த ஞாபகம் இல்லை. அதனால் தான் கேட்டேன்.//

இரண்டு இடத்திலும் 3 மாத இடைவெளியில் நடந்தவையே அந்நிகழ்வுகள்

மணிகண்டன் சொன்னது…

// திருவரங்கத்தில் பெரியார் சிலைக்கு சந்தனம் குங்குமம் வைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட போது கருணாநிதியே ஆட்சியில் இருந்தார் //

இது நீங்க எழுதினது ! அதனால தான் நான் கேட்டேன் :)-

இன்னும் ஒரு வருஷம் கழிச்சி உங்க போஸ்ட்டை ஒரு சாட்சியா வச்சு இன்னொருத்தர் ஸ்ரீரங்கத்துல சந்தன குங்கமம் பூசினாங்கன்னு சொல்லுவார் :)- அப்ப இந்த கமெண்ட் அவர்களை நல்வழி படுத்தும் இல்லையா ?

மற்றபடி, ஸ்ரீரங்கத்துல பெரியார் சிலை உடைஞ்சபோது அந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருந்த கான்ஸ்டபில் 6 மாச சஸ்பென்ஷன் கொடுத்தாங்க. அதைத்தவிர, திக கூட்டம் இப்ப எல்லாம் பெரியார் சிலை கிட்ட போடறாங்க. முன்னாடி கோவில் கோபுரத்துக்கு கீழ நடத்துவாங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

மணி,

சுட்டிக்காடியதற்கு நன்றி.

"கடந்த முறை திருவரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது திண்டுகல் அருகே பெரியார் சிலைக்கு சந்தனம் குங்குமம் வைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட போது கருணாநிதியே ஆட்சியில் இருந்தார்."

- னு மாற்றி இருக்கிறேன்

ராஜவம்சம் சொன்னது…

நீங்கள் நாகை என்பதால் உங்களுக்கு நன்றாகத்தெரியும் மதிகெட்ட இஸ்லாமியர்கள் சந்தனக்கூடு என்று எல்லா தர்காவிலும் வருடத்திர்க்கு ஒரு முறை நிகழ்த்துவார்கள் இது எங்கிறுந்து வந்தது பார்ப்பனர்கள் தேர் இளுத்தார்கள் இஸ்லாமியர்கள் எல்லோறும் இந்துக்களில் இருந்து வந்தவர்கள் அல்லவா அதனால தேருக்கு பதில் சந்தனக்கூடு இளுத்தான் இது போல் நிறையா இருக்குங்ணா.

சரி இந்த உதாரணம் எதுக்கு?

நாத்திகர்கள் அதிகமானோர் பிறப்பால் இந்துக்களே கால காலமா கல்ல கும்பிட்டவன் அதனால
பயமோ பக்தியோ மரியாதையோ ஏதோ ஒருவகையில கல்லுக்கு மரியாதை செய்யனூன்னு சொல்றிங்க நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்