பின்பற்றுபவர்கள்

2 செப்டம்பர், 2010

அண்மைய இணைய வதந்திகள் !

என்னுடைய மாணவ பருவத்தில் வதந்திகள் எனக்கு அறிமுகம் ஆகின. அப்போது திடிர் திடிரென்று வீடுகள் தீப்பிடித்து எரியும் நிகழ்வுகள் நடந்தேறியது. நெடுநாள் பகையை தீர்த்துக் கொள்ளுதல் என்பதாக தீ வைப்பு நிகழ்வுகள் அமானுஷ்யம் என்கிற பெயரில் தொடர்ந்தது. யார் வீட்டின் முன்பு நாமம் போடவில்லையோ அவர்கள் வீடு பற்றி எரிவதாக கிளப்பிவிட்டார்கள், 90 விழுக்காடு வீடுகளின் முகப்பில் நன்கு தெரியும் படி நாமம் வரைந்து வைத்தனர். எங்கள் வீட்டிலும் எங்க அண்ணன் நாமம் வரைந்து வைத்தார். இந்துக்கள் வீடுகள் மட்டுமல்லாது கிறித்துவ இஸ்லாமியர் வீடுகளிலும் நாமம் வரைந்து வைக்கப்பட்டது. நாமம் எப்படி வரைவது என்று தெரியாதவர்களின் நாமங்கள் சூலம்போன்று இருந்தது. எந்த தெருவில் நுழைந்தாலும் நாமம் வரையாத வீடுகளைப் பார்ப்பதே அரிது என்பதாக மக்களின் மனப் பயம் நாமங்களாக வரையப்பட்டு இருந்தன. இந்த வதந்திகளின் போது வெளியூர்காரர்கள் நேரம் கெட்ட நேரத்தில் சிக்கிக் கொண்டால் விசாரணை எதுவும் இன்றி அவர்களை பொதுமக்கள் கூடி அடித்தே கொன்றுவிடுவார்கள். வதந்திகள் தற்போதும் வீட்டின் முகப்பில் வேப்பிள்ளைக் கட்டுவது, உடன்பிறந்தாளுக்கு பச்சை சேலை வாங்கிக் கொடுப்பது என்பதாக பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கோலச்சுகிறது. சென்னையில் வசிக்கும் காலங்களில் ஸ்கூட்டரில் லிப்ட் கேட்ட ஒருவர் இடம் வந்து இறங்கியதும் 'வெல்கம் டு எய்ட்ஸ் வேர்ல்ட்' என்று சொல்லிக் கொண்டு எய்ட்ஸ் ஊசிப் போட்டுவிட்டு தப்பி ஓடுவதாகச் சொல்ல ஸ்கூட்டரில் சென்றவர்கள் போக்குவரத்து விளக்குகளிலும் நிற்காமல் சென்றதாக ஜூவி உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதினார்கள்.

பிள்ளையார் பால்குடித்தது (சிலை பால் குடிக்கும் ஆய் போகாது என்கிற புனிதம் காரணமாக பிள்ளையார் ஆய் போனர் என்று கிளப்பிவிடவில்லை என்று நினைக்கிறேன்) உட்பட பசுமாட்டின் கண்களில் எம்ஜிஆர், கிருஷ்ணன் வந்து போனார்கள், சில ஊர்களில் மாதாவின் கண்களிலும், ஏசு சிலையும் வடிந்த இரத்தம் வேப்பமரங்களிலும் வடிந்ததாக வதந்திகள் வடிவங்களை மாற்றிக் கொண்டு புழங்கிவருகின்றனர். வதந்திகளின் வேர் எது என்று அரியா வண்ணம் வதந்திகளின் விரைவெடுத்து பின் முற்றிலுமாக அடங்கிவிடுகின்றன.

புற உலகில் நடப்பது போலவே சைபர் ஸ்பேஸ் எனப்படும் இணைய வெளிகளிலும் வதந்திகள் பல்வேறு வடிவில் வீடியோவாக, மின் அஞ்சல்களாக பரப்பப்படுகின்றன. இதில் என்ன கொடுமை என்றால் என்றோ பரவி அடங்கிய வதந்திகள் கூட அண்மையில் ஏற்பட்ட நிகழ்வு ஒன்றைச் சொல்வதாக புதிய வடிவில் மறு உலாவரும். புற உலகில் ஊர் அளவில் பரவும் வதந்திகள் இணையங்களில் உலக அளவில் விரைவாக இணையம் பயன்படுத்துவோரிடம் பரவி விடுகிறது.

சென்ற வாரங்களில் 'நேபாள மசூதியின் அற்புதங்கள்' என்பதாக ஒரு வீடியோ இணையங்களில் சக்கைப் போடு போடுகின்றன. மசூதியின் டூம் எனப்படும் கலசத்தை அல்லா தரையில் இருந்து உயர்த்தி கோபுரத்தில் வைத்தான் என்பதாகவும், அல்லாவின் அற்புதம் என்பதாகவும் அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.


அந்த நிகழ்வு நடந்ததாக வேறு வேறு நாடுகளை வைத்துச் சொல்லப்படுவதாக அத்தகவல் பல்வேறு வரிபடிவங்களில் (வர்சன்) இருப்பதாக இந்த வதந்தியை ஆராய்ந்தவர்கள் வதந்தியை மறுத்து கட்டுரைகளை எழுதி இருக்கிறார்கள். (மறுப்பு இணைப்புக்கு நன்றி: நண்பர் சலாஹுத்தின்)

வானத்தை உயர்த்தி பூமியை பிரித்தான் என்ற குரான் வசனத்தை படிப்பவர்களுக்கு கோபுரம் உயர்த்தப்படுவது மேலும் ஒரு அல்லாவின்அதிசயம், அற்புதம் என்பதாக தெரிவது வியப்பில்லை என்பதாக இந்த வதந்தி பரவிவிடும் என்பது வதந்தி பரப்பியவர்களின் எதிர்ப்பார்ப்பு. அதன்படியே தொடர்புடைய வீடியோக்களில் பல இஸ்லாமியர்கள் நெகிழ்ந்து பின்னூட்டம் இட்டு இருக்கிறார்கள். இஸ்லாம் அற்புதம் (Miracle of Allah) மட்டுமல்ல இணையங்களில் ஏசுவின் அற்புதம், கிருஷ்ணனின் அற்புதம், சாய்பாபாவின் அற்புதம் என்று தேடினால் 1000க் கணக்கான வீடியோக்களை துப்பும். இன்னும் பெரியாரின் அற்புதம் (Miracle of Periyar) என்று வராதவரையில் பெரியார் இன்னும் சாமியாக்கப்படவில்லை என்று நம்புவோம். :)


இன்னும் ஒரு அற்புதமான வதந்தி, 'பூஜாவை அவர்கள் பெற்றோர்களிடத்தில் சேர்க்க உதவுங்கள்' என்கிற வதந்தி, இந்த வதந்தி 2003ல் இருந்தே பரவி வருவதாக இணையத் தேடல்களில் காணக் கிடைக்கிறது, பூஜா என்கிற வட இந்திய குழந்தையை பிச்சைக்காரனிடம் இருந்து மீட்டு அனாதை இல்லத்தில் சேர்த்திருப்பதாகவும், அந்தக் குழந்தை பெற்றோர் பெயர் தவிர்த்து ஊர் பெயரை புரியாத அளவுக்கு சொல்லுவதாகவும், ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்ட குழந்தை அவளை உங்களுக்கு தெரிந்தால் பெற்றோரை சென்றடைய உதவுங்கள் என்பதாக அச்செய்தி உலாவருகிறது. குழந்தையின் படத்தைப் பார்த்தால் அவை அண்மையில் டிஜிட்டல் கேமராவழி எடுத்தப் புகைப்படம் மாக இல்லாமல் பிலிம் ரோலில் எடுக்கப்பட்ட படத்தில் ஸ்கேன் நகல் போன்று இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அண்மையில் காணாமல் போய் இருந்தால் டிஜிட்டல் கேமராவில் எடுத்த பளிச் புகைப்படமே வந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். குழந்தை பூஜாவைப் பற்றி இணைய மின் அஞ்சல் வழியாக பார்வேட் மெயில் என்பதாக கிடைக்கப் பெறும் இளகிய மனம் படைத்தோர் குழந்தை என்பதில் மனதை பரிகொடுத்து, உச் கொட்டி மற்றவர்களுக்கும் அந்த தகவலை அனுப்புகிறார்கள். மின் அஞ்சல் வர்சனாக வந்தவை தற்போது பதிவாக (பதிவர் படைப்பாளி) எழுதப்படும் அளவுக்கு மாறி இருக்கிறது என்றாலும் அடிப்படையான பூஜாவின் பெயர் மற்றும் படங்களும் அதே தான். 2003ல் 4 வயதில் காணாமல் போன பூஜாவிற்கு தற்போது 11 வயது இருக்கலாம். 2003ல் கூட பூஜா காணமல் போனது உண்மையா என்பது ஆராய்ச்சிக்குரியது. 2000 ஆம் ஆண்டில் இருந்தே இணையம் பல்வேறு தரப்புகளால் நன்கு புழக்கத்தில் இருந்துவருகிறது.

தொடர்புடைய அந்த குழந்தையின் பெற்றோருக்கு வேண்டாத ஒருவர் முன்பு நெருங்கி பழகிய ஒருவர் அவர்களை பலிவாங்க அவள் காணமல் போனதாக இணையங்களில் அவர்களுடையை தொலைபேசி எண்ணுடன் கொடுத்து பல்வேறு நபர்கள் அவர்களை தொடர்பு கொண்டு செய்தி உண்மையா என்று கேட்டு டார்சர் கொடுக்கக் கூட உள்நோக்கத்துடன் வெளி இடப் பட்டிருக்கலாம். (இணையங்களில் விமர்சனக் கட்டுரைகள் எழுதுவோர் தங்கள் குழந்தைகளின் படங்களை இணையங்களில் வெளியிட்டால் விமர்சனங்களால் பாதிக்கப்படுகிறோம் என்று நம்பும் கூட்டத்தாரும், தனிநபரும் இவ்வாறான அவதூறுகள் செய்ய வாய்ப்புகள் இணையத்தில் ஏராளம் உண்டு. எனவே சர்சைகளை எழுதுவோர் குறிப்பாக பெண் குழந்தைகளின் படங்களை இணையங்களில் வெளி இடாதீர்கள் என்று இதன் மூலம் நான் கேட்டுக் கொள்கிறேன்) பூஜாவுக்கும் பூஜாவின் பெற்றோர்களுக்கும் நேரும் கெதி நமக்கும் ஏற்படலாம். பூஜாவின் பெற்றோரை கண்டு பிடித்துத் தாருங்கள் என்கிற தேடலில் 45,300 பக்கங்களை கூகுள் காட்டுகிறது.

தகவலை நம்பி அதில் உள்ள எண்ணுக்கு பல்வேறு நபர்கள் தொடர்பு கொண்டு செய்தி உண்மையா என்று கேட்க அந்த எண்ணுக்கு உரியவர் மன உளைச்சல் அடைந்ததாக ஜெகதீஸ்வரன் என்கிற பதிவர் படைப்பாளியின் பதிவின் பின்னூட்டங்களில் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவின் வழி நான் சொல்ல முயன்றது என்னவென்றால் 'இணையங்களில், பதிவுகளில், மின் அஞ்சல்களில் தகவல் பரிமாறுவோர், வந்த மின் அஞ்சலை அனுப்புவோர் தம்மைச் சார்ந்தவர்கள் கவனம் கொள்ள வேண்டும் என்பதாக அனுப்பும் தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து சிறுது சிந்தித்தோ அல்லது ஆராய்ந்தோ உறுதிப்படுத்திக் கொண்டு அனுப்பலாம், அவ்வாறு செய்யவில்லை என்றால் வதந்திகளிலும் சிலருக்கான சங்கடங்கள் பரவ நாமும் காரணமாக அமைந்துவிடுவோம்.

புற உலகைப் போலவே இணைய உலகிலும் மனநோயாளிகள், ஏமாற்றுக்காரர்கள் நிரம்ப உண்டு.

13 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

ரூமர் மாஞ்சர்ஸ் ஆர் நேஷன்ஸ் எனிமீஸ் - நல்லதொரு அறிவுரை - நல்வாழ்த்துகள் கோவி - நட்புடன் சீனா

நிகழ்காலத்தில்... சொன்னது…

நானும் படித்தேன். சந்தேகம் தோன்ற கூகுளிட்டேன். சிலவருடங்களாக இந்த வதந்தி தொடர்கிறது என்பதை அறிந்தேன். அமைதியாகிவிட்டேன் :)

உமர் | Umar சொன்னது…

'நேபாள மசூதியின் அற்புதங்கள்' என்னும் வதந்தி பற்றி பதிவிட நினைத்தேன். நீங்கள் பதிவிட்டதற்கு நன்றிகள்.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

அந்த மசூதி மேட்டர் ஒரு டுபாக்கூர் செய்தி.இவ்வளவு அற்பத்தனமாக தன் பவரைக் காட்டும் நிலையில் அல்லா இல்லை :)


//2003ல் 4 வயதில் காணாமல் போன பூஜாவிற்கு தற்போது 11 வயது இருக்கலாம். 2003ல் கூட பூஜா காணமல் போனது உண்மையா என்பது ஆராய்ச்சிக்குரியது.

//


இதவிடுங்க, நான் எல்.கே.ஜி படிச்ச காலத்துல ஜெயலலிதாவுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் ஊட்டியில் ஸ்கூல்ல படிக்கிறதாவும் சொன்னாய்ங்க. இப்பவும் அந்த புள்ள ஊட்டில ஸ்கூல்ல படிக்கிறதா சொல்றாய்ங்க. இன்னமும் ஸ்கூல்லயே படிச்சிகிட்டு இருக்கே..சரியான முட்டாள் புள்ளையா இருக்கும் போல!


// பெண் குழந்தைகளின் படங்களை இணையங்களில் வெளி இடாதீர்கள் என்று இதன் மூலம் நான் கேட்டுக் கொள்கிறேன்)
//

நான் இணையத்தை பாவிக்கத் துவங்கிய காலத்தில் இருந்து பெண் குழந்தைகளின் படங்களை சில வக்கிரங்கள் மாற்றி வெளியிட்டு இருப்பதைக் கண்டு “குடும்பத்தினரின் குறிப்பாக பெண் குழந்தைகளின் படங்களை வெளியிடாதீர்கள்” என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகின்றேன். இதைச் சொன்னதுக்குதான் ஒரு அக்கா கோவிச்சுகிட்டு என்கிட்ட பேசுறதையே நிறுத்திருச்சு :(

கோவி.கண்ணன் சொன்னது…

//
இதவிடுங்க, நான் எல்.கே.ஜி படிச்ச காலத்துல ஜெயலலிதாவுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் ஊட்டியில் ஸ்கூல்ல படிக்கிறதாவும் சொன்னாய்ங்க. இப்பவும் அந்த புள்ள ஊட்டில ஸ்கூல்ல படிக்கிறதா சொல்றாய்ங்க. இன்னமும் ஸ்கூல்லயே படிச்சிகிட்டு இருக்கே..சரியான முட்டாள் புள்ளையா இருக்கும் போல!//

கொஞ்சமாவது மாற்றி ஜெவின் பேத்தி/பேரன் ஊட்டியில் படிப்பதாகச் சொல்லியும் கொடநாடு எஸ்டேட்டில் ஜெ பேரப் பிள்ளைகளுடன் விளையாடுவதாகவும் சொல்லலாம் என்கிறீர்களா ?
:)

ராவணன் சொன்னது…

//''எம்.எம்.அப்துல்லா,
அந்த மசூதி மேட்டர் ஒரு டுபாக்கூர் செய்தி.இவ்வளவு அற்பத்தனமாக தன் பவரைக் காட்டும் நிலையில் அல்லா இல்லை :)''//

அப்ப.. அல்லா எப்பத்தான் தன் பவரைக் காட்டுவார்?
அல்லா எல்லாம் குல்லாவில் முடங்கிவிட்டது..
அல்லாவின் Power of attorney எம்.எம்.அப்துல்லாவிடம் உள்ளது.
கருணாநிதிக்கு சொம்படிக்கும் போதே தெரிந்துவிட்டது உங்கள் அல்லாவின் பவர்!

காலப் பறவை சொன்னது…

தேவையான பதிவு

ஜெகதீசன் சொன்னது…

//
இதவிடுங்க, நான் எல்.கே.ஜி படிச்ச காலத்துல ஜெயலலிதாவுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் ஊட்டியில் ஸ்கூல்ல படிக்கிறதாவும் சொன்னாய்ங்க. இப்பவும் அந்த புள்ள ஊட்டில ஸ்கூல்ல படிக்கிறதா சொல்றாய்ங்க. இன்னமும் ஸ்கூல்லயே படிச்சிகிட்டு இருக்கே..சரியான முட்டாள் புள்ளையா இருக்கும் போல!
//
வி.வி.சி...

கலக்கல் அப்துல்லா.... :)

a சொன்னது…

//
ஜெயலலிதாவுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் ஊட்டியில் ஸ்கூல்ல படிக்கிறதாவும் சொன்னாய்ங்க.
//
நாங்க படிக்கிறப்ப ஹைதராபாத்ல படிச்சிக்கிட்டு இருக்குறதா சொன்னாங்க...

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

// அப்ப.. அல்லா எப்பத்தான் தன் பவரைக் காட்டுவார்?
அல்லா எல்லாம் குல்லாவில் முடங்கிவிட்டது..

//

சகோதரர் இராவணன், நான் என் மதம் தொடர்பான,என் மதத்துக்காரர்கள் செய்த ஒரு டுபாக்கூர் வேலைக்காகத்தான் இங்கு பின்னூட்டம் போட்டு இருக்கின்றேனே தவிர ஹிந்துக்களையோ அல்லது பிற மதத்தினரைத் தாக்கியோ அல்ல.அதுப்போல பிற மதங்களைவிட என் மதம் உயர்ந்தது என்றோ,என் கடவுள்தான் பெரியவர் என்றோ அல்லது நாத்திகத்தைவிட ஆன்மீகமே சிறந்தது என்றோ பெரியாரைத் தாக்கியோ பின்னூட்டம் போடவில்லை.புரிந்து கொள்ளுங்கள்.நான்உங்களையோ உங்களைச் சார்ந்தவர்கள்களையோ,அவர்களின் நம்பிக்கையையோ விமர்சித்தால் நீங்கள் என்னை நோக்கி கேள்வி எழுப்பலாம்.இங்கே நான் விமர்சித்து இருப்பது நான் சார்ந்த சமூகத்தினர் செய்த ஒரு மடச் செயலை.எனவே நீங்கள் என்னை விமர்சித்துக் கேள்வி எழுப்ப எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை.


//அல்லாவின் Power of attorney எம்.எம்.அப்துல்லாவிடம் உள்ளது.

//


நாந்தான் அல்லாவின் பவர் ஆஃப் அட்டர்னி என்று எங்காவது சொல்லி இருக்கின்றேனா?? சவாலாகச் சொல்கின்றேன், அப்படி நான் சொல்லி இருப்பதாக எங்கேனும் காட்டுங்கள் பார்ப்போம்??


//கருணாநிதிக்கு சொம்படிக்கும் போதே தெரிந்துவிட்டது உங்கள் அல்லாவின் பவர்!

//

நான் கலைஞருக்கு சொம்படிப்பது என் சுயவிருப்பம்.அதில் உங்களுக்கு என்ன கஷ்டம்?? மேலும் நான் கலைஞருக்கு சொம்ப‌டிப்பதற்கும் அல்லாவின் பவருக்கும் என்ன சம்மந்தம்??

சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் நீங்கள் என்னைத் திட்டும் அளவிற்கு நான் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன் என்று தெரிந்து கொள்ளலாமா??

Unknown சொன்னது…

உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

Unknown சொன்னது…

உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

Raghav சொன்னது…

http://www.youtube.com/watch?v=933imCum48M

for your info :) ;)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்