தீர்ப்பு நாள்... ஏன் இவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, உலகெங்கிலும் திரையிட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. உலகம் அழிய வேண்டும் என்று நினைப்பவர்களை விட அழியலாம், அழிய வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இதற்கு ஆன்மிகம், மத நம்பிக்கை இவை காரணமென்றாலும், அந்த காரணங்களுக்கு வலு சேர்பதாக உலகெங்கிலும் நடைபெறும் தீவிரவாதம், தன்ன நம்பிக்கை இன்மை, மனித உறவுகளுக்கு இடையே இணக்காமான போக்கு இல்லாமை, மனிதர்களின் பேராசைகள், அரசியல் வாதிகளின் தன்னலம், முதலாளித்துவ நாடுகளின், நிறுவனங்களின் பேராசைகள் இவற்றில் எதோ ஒருவகையில் ஒவ்வொருவரையும் வருத்தியே வருகிறது. இன்றைக்கு உலகம் மகிழ்ச்சியாக இல்லை என்று நினைப்போர் விழுக்காட்டு அளவில் மிகுதி. இறப்பு வலியற்றதாக இருந்து மகிழ்ச்சி கொடுப்பதற்கான உறுதி கொடுக்கப்பட்டால் இறப்பதற்கு பலர் ஆயத்தம் என்பது போன்று உலக வாழ்க்கைச் சூழல் அமைந்திருக்கிறது, அதன் காரணமாக உலகம் அழியுமா ? இப்போது தான் உலகம் முற்றிலும் கெட்டுவிட்டதே, ஏசு வருவார், அல்லா சொல்லி இருக்கிறார், கல்கி அவதாராம் ஆலிழை கண்ணன், தீர்ப்பு நாள் அண்மையில் இருக்கிறது.....என்றெல்லாம் மத நம்பிக்கையாளர்கள் சொல்லி வருகின்றார்கள்.
'தீர்ப்பு நாட்களின் அருகாமை' பற்றி சென்ற நூற்றாண்டுகளில் புலம்புயவர்கள் பற்றி நமக்கு பெரிய குறிப்புகள் எதுவும் கிடைக்காததால், அண்மைய புலம்பல்களை வைத்து தற்போது தீர்ப்பு நாள் குறித்த நம்பிக்கை வலுப்பெற்றிருப்பதாக அல்லது விரைவில் நடக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கு இல்லை, 2000 ஆண்டு உலகம் அழியும் என்று பலர் 31.12.1999 வரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு கொஞ்ச நாள் அடங்கி இருந்தது. தீர்ப்பு நாள் பற்றிய மத நம்பிக்கைகள் 2000ல் எதுவும் நடக்கவில்லை என்பதால் அது பற்றிப் பேசுவோர், கவலைப்படுவோர், அதை உண்மை என்று நம்பியோர்கள் கேலிக்கு ஆளாக்கப்பட்டார்கள். மதநம்பிக்கை முற்றிலும் அறைகூவலாக அமைந்த 'தீர்ப்பு நாள்' பற்றி சிறிது காலம் யாரும் பேசவில்லை, இரட்டை கோபுரங்கள் தகர்ந்த போதும் சுனாமி அலைகள் ஏற்பட்ட போதும் 'தீர்ப்பு நாள்' குறித்த பேச்சுகள் மீண்டும் உயிர் பெற்றன. 2000 ஆண்டு வரை உலகில் மாயன் நாள்காட்டி என்று இருப்பதையோ, அதில் 2012ல் உலகம் அழியும் என்கிற குறிப்பு இருப்பதாக எங்கும் பெரிதாகப் பேசப்படவில்லை. 2000 ஆண்டுக்கு பிறகு மாயன் நாட்காட்டி தூசி தட்டி மதநம்பிக்கையாளர்கள் முன்பு மீண்டும் வைக்கப்பட்டு இருக்கிறது. அதை விளம்பரப் படுத்த இணைய தளங்கள், 2012 உலகம் எப்படி அழியும் என்பதைப் பற்றிய அசைபடங்கள், அதற்கான ஆதாரங்கள், சூழல்கள் அமைய இருப்பதாக எழுதப்பட்ட கட்டுரைகள் மீண்டும் 'தீர்ப்பு நாள்' பற்றிய நம்பிக்கைக்கு தூபம் போடத் தொடங்கி, 2012ற்கு இன்னும் மூன்றே ஆண்டுகள் இருப்பதால் அது பற்றிய பேச்சும் மிக மிக, சோனி நிறுவனம் அதைப் பற்றிய படமாக்கி தங்கள் நிறுவனத்திற்கு பணமாக்கி இருக்கிறார்கள்.
வழக்கத்துக்கு மாறாக சூரியனில் ஏற்படும் பெரிய பெரிய தீப்பிழம்புகள் பூமியின் வெப்பத்தை உயர்த்தி அழிவை தொடங்கி வைப்பதாகவும், வட திசை , தென் திசை ஈர்ப்பு விசையின் நேர் எதிர் நிலைகள் மாறுதல் ஏற்படப் போகிறது என்பதாலும் உலகம் அழிவை நெருங்குகிறது, மாயன்கள் அதை தங்களது நாட்காட்டிகளில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார்கள் என்ற கருத்தை ஒட்டி படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. கிறித்துவ, இஸ்லாம் மத நம்பிக்கைகளில் இருக்கும் 'நோவா' கப்பல் போல், இறுதிக் கட்சியில் வின்வெளி ஓடம் போன்ற பாதுகாப்புடன் செய்யப்பட்ட கப்பல் ஒன்றில் ஜோடி விலங்குகளுடன், சிலர் பிழைத்து புதிய உலகம் காண்கிறார்கள். படத்தில் ஒருவர் 1 பில்லியன் ஈரோ கொடுத்து கப்பலில் இடம் வாங்குவார். உலகமே அழிந்த பிறகு அவரிடம் வாங்கும் ஈரோ செல்லுமா ? அந்தப் பணத்தை வைத்து என்ன வாங்க முடியும் ? ஒரு பணக்காரன் பணபலத்தை வைத்து அந்தக் கப்பலில் பாதுக்காப்பாக இருக்க முயற்சிக்கிறான் என்பதைச் சொல்லுகிறோம் என்கிற பெயரில் ஹாலிவுட்காரர்களும் அபத்தமாக, லாஜிக் இல்லாமல் படம் எடுப்பார்கள் என்பதற்கான காட்டு அது. கணிணி வரைகலையாக (கிராபிக்ஸ்) முழுப்படக் காட்சியும் ஓரளவு நன்றாகவே இருக்கிறது. கிறித்துவ, தேவாலயங்கள், வாடிகன் நகர், இந்து கோவில்களெல்லாம், பிரேசில் ஏசு நாதர் சிலை கூட அப்படியே சாய்ந்து உடைந்து விழுவதாக காட்டப்படும் படத்தில் வளைகுடா நாடுகளை அல்லது ஒரு மசூதி அழிவதாகக் கூடக் காட்டப்படவில்லை, ஒரே ஒரு அரேபிய இஸ்லாமியர் நான்கு பெண்களுடன் அந்த நோவகப்பலில் பயணப்படுவார். 911 க்கு பிறகு ஹாலிவுட்காரர்கள் இஸ்லாமியர் என்றால் வேண்டாம் வீன்வம்பு என்பது போல் ஒதுங்குவது இந்தப் படத்திலும் பின்பற்றப்படுகிறது.
தீர்ப்பு நாளில் காப்பாற்றப்படுபவர்கள், அல்லது புதிய உலகிற்கு செல்வோர் என நல்லவர்களைத் தான் அந்நாளில் காப்பாற்றப்படுவதாக மதக் கதைகள் சொன்னாலும் படத்தில் அப்படியெல்லாம் தேர்வு இல்லை. தீர்ப்பு நாளில் நோவா கப்பலில் பயணம் செய்பவர்களாக யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்கள், எந்த அடிப்படையில் என்றால் அறிவாளிகளையும், நாடுகளின் அதிபர்களையும், பணக்காரர்களையும் தேர்ந்தெடுப்பதாகக் கதையில் சொல்லி இருக்கிறார்கள், அதில் காப்பாற்றப்படுபவர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை, ஆனால் இந்தியாவில் தான் படம் தொடங்குகிறது. ( இந்து மதத்தையே தீர்ப்பு நாள் அழிவின் மூலம் ஒழிச்சிட்டாங்க :).......மிசெனரிகளின் சதி என்கிற கண்டன ஆர்பாட்டங்கள் படத்துக்கு எதிராக இந்தியாவில் நடக்குமா ? ன்னு தெரியவில்லை.
ஆங்கிலப் படங்களில் வேற்றுகிரகவாசிகள் எத்தனையோ முறை உலகை அழிக்க முயற்சித்தாக அமெரிக்க நகரங்களை கிராபிக்ஸ் மூலம் அழித்து அழித்து அசதியாகி ஒட்டு மொத்த உலகை பகுதி பகுதியாக எரிமலை, பெரும் சுனாமி போன்றவற்றால் இந்தப் படத்தில் உலகை அழித்திருக்கிறார்கள். ரொம்ப எதிர்பார்ப்போடு படத்திற்கு சென்றால் படம் ஈர்க்காது.
படம் என்ன செய்தியைச் சொல்லுது ? அறிவாளிகள், நாட்டின் தலைவர்கள், பணக்காரர்கள், அவர்களுக்கு சில வேலைகாரர்கள் இவர்கள் தான் உலக அழிவுக்கு பிறகு தேவைப்படுபவர்களாம், கூடவே கொஞ்சம் விலங்குகள், நாய்குட்டிகள் போன்றவை அவற்றின் தொடர்ச்சிகாக காப்பாற்றப்பட வேண்டியவையாம்.
உலகம் அழிந்தால் மீண்டும் உயிர்பெற, உயிரின தொடர்ச்சிக்கு நோவா கப்பல் தேவை, அதன் வழியே தான் உயிரினம் காப்பாற்றப்படும் என்பது மனிதர்களின், மதங்களின் கற்பனை. என்னமோ போங்க......உலகம் உயிரினம் முற்றிலும் அழிந்ததலும், இதற்கு முன் எப்படி தோன்றியதோ, எப்படி உயிரினங்கள் உருவானதோ, எப்படி மனித நாகரீகம் வளர்ந்ததோ அப்படியே மீண்டும் ஏற்படாதா என்ன ? முன்பும் உயிரினங்கள் தோன்றியதற்கு, ஆயிரம் ஆயிரம் காலங்கள் வாழ்ந்ததற்கு இருந்த அனைத்துக் காரணங்களும் சூழல்களும் உலகம் எத்தனை முறை அழிந்தாலும் அவை மீண்டும் ஏற்படலாம், 2012 இறுதி என்றாலும் அது பற்றி அலட்டிக் கொள்ள எதுவும் இல்லை.
இணைய தளங்கள் :
http://www.2012warning.com/
http://www.2012officialcountdown.com/?a=essinkf
http://www.endoftheworld2012.net/
http://www.endoftheworld2012.net/
and
http://en.wikipedia.org/wiki/2012_phenomenon
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
30 கருத்துகள்:
இதெல்லாம் நடக்குமுன்னு....
அப்பவே தெரியும் முகவை இராம் சொன்னாரு!
201லேயா - நடக்கட்டும் நடக்கட்டும் அதுக்கு என்ன இப்போ = போற அன்னிக்குப் போக வேண்டியது தானே
சரியா
ம்கும்.
நடப்பதை 2012 இல் பார்த்துக்கொள்ளலாம். இப்போது அந்தப் படத்தை மட்டும் பார்க்கலாம்.
நல்லாத்தான் கிளப்புறாங்கையா பீதியை !!!
நடப்பது நடக்கட்டும் நல்லவையாக !
அண்ணே,
பேய் உண்டா இல்லையா?
நம்பலாமா நம்பக்கூடாதா...
கணினி, செல்போன் எல்லாம் கப்பல்ல ஏத்துனாங்களா,
சார்ஜ் எப்படி பண்ணுவாங்க, சிக்னல் எப்படி கிடைக்கும்.
இதுல பல முக்கியமான இடங்கள் , மத தோடர்பூடய இடங்கள் (Christ the redeemer statue ) அழிக்கப்படுவதை காட்டினாலும் ஒரு முக்கிய மத சின்னத்தை
காட்ட பயப்பட்டார்கள், உயிருக்கு பயந்துகொண்டு.
:)
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
இதெல்லாம் நடக்குமுன்னு....
அப்பவே தெரியும் முகவை இராம் சொன்னாரு!
//
:) முகவை இராம் மாயன் பரம்பரையா ? அவ்வ்வ்வ்
//cheena (சீனா) said...
2012லேயா - நடக்கட்டும் நடக்கட்டும் அதுக்கு என்ன இப்போ = போற அன்னிக்குப் போக வேண்டியது தானே
சரியா
//
:)
//வானம்பாடிகள் said...
ம்கும்.
//
:)
//Subankan said...
நடப்பதை 2012 இல் பார்த்துக்கொள்ளலாம். இப்போது அந்தப் படத்தை மட்டும் பார்க்கலாம்.
//
அதே அதே !
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்லாத்தான் கிளப்புறாங்கையா பீதியை !!!
நடப்பது நடக்கட்டும் நல்லவையாக !
//
:) அதுவும் சரிதான்
// அக்பர் said...
அண்ணே,
பேய் உண்டா இல்லையா?
நம்பலாமா நம்பக்கூடாதா...
2:20 AM, November 15, 2009
//
பேய் நம்மை நம்பலாமா கூடாதான்னு கேட்கிறிங்களா ? கேட்டுச் சொல்கிறேன் :)
//அக்பர் said...
கணினி, செல்போன் எல்லாம் கப்பல்ல ஏத்துனாங்களா,
சார்ஜ் எப்படி பண்ணுவாங்க, சிக்னல் எப்படி கிடைக்கும்.
//
கணிணி தகவல் தொடர்புகள் சாட்டிலைட்டில் இருந்து கிடைப்பதாக காட்டுகிறார்கள்
//Matra said...
இதுல பல முக்கியமான இடங்கள் , மத தோடர்பூடய இடங்கள் (Christ the redeemer statue ) அழிக்கப்படுவதை காட்டினாலும் ஒரு முக்கிய மத சின்னத்தை
காட்ட பயப்பட்டார்கள், உயிருக்கு பயந்துகொண்டு.
//
அப்படிகாட்டினால் படம் வெளியான பிறகு 2009லேயே படச் சுருள் அழியுமே !
:)
//நிஜமா நல்லவன் said...
:)
//
:)
2012ல் மீண்டும் 2020௦ வரும், இந்த கட்டு கதைகள் எப்போதும் முடியாது :-)
//கிறித்துவ, தேவாலயங்கள், வாடிகன் நகர், இந்து கோவில்களெல்லாம், பிரேசில் ஏசு நாதர் சிலை கூட அப்படியே சாய்ந்து உடைந்து விழுவதாக காட்டப்படும் படத்தில் வளைகுடா நாடுகளை அல்லது ஒரு மசூதி அழிவதாகக் கூடக் காட்டப்படவில்லை,//
ஐயரே நல்லாதான் பத்த வைக்கிறிங்க திரியை.... ம்ம்ம் ஆகட்டும் ஆகட்டும்...
உலகமே அழிந்துவிடும் எனின் மதம்... ம... ம... எல்லாம் எதற்கு...
நாளை உலகம் அழிந்துவிடும் என்பது உனக்கு தெரிந்தாலும், இன்று உன் கையிலிருக்கும் தானியங்களை பயிர்செய் என நபிகள் நாயகம் சொல்லி இருப்பதாக படித்தேன்.
எனக்கு என்னமோ மாயன் நாட்காட்டி அவர்கள் வாழ்ந்த உலகத்திற்கு (பகுதிகளுக்கு)மட்டும் இருக்கலாம். 5000 ஆண்டுகளுக்கு முன் உலக வரைபடம் யாரிடமும் கிடையாதே? எந்த வேத புத்தகங்களும் உலக நாடுகளை பற்றி எந்த பெரிய குறிப்புகளையும் தரவில்லை. அவர்கள் எந்த பகுதியில் வாழ்ந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து அந்த பகுதியில் இருந்து வேண்டுமானால் மக்களை அப்புறப்ப்டுத்துவதை பற்றி யோசிக்கலாம். மற்றபடி இதில் பெரிய ஆபத்தில்லை.
//இன்றைக்கு உலகம் மகிழ்ச்சியாக இல்லை என்று நினைப்போர் விழுக்காட்டு அளவில் மிகுதி. //
ஓஒ.... அப்படியா
//2012 இறுதி என்றாலும் அது பற்றி அலட்டிக் கொள்ள எதுவும் இல்லை.///
அட ஆமாம்..
//கிறித்துவ, தேவாலயங்கள், வாடிகன் நகர், இந்து கோவில்களெல்லாம், பிரேசில் ஏசு நாதர் சிலை கூட அப்படியே சாய்ந்து உடைந்து விழுவதாக காட்டப்படும் படத்தில் வளைகுடா நாடுகளை அல்லது ஒரு மசூதி அழிவதாகக் கூடக் காட்டப்படவில்லை,//
இது என்ன பூனுலின் விசமதந்திரமோ அந்த படத்தில் உலகில் உள்ள எல்லா மத அடையாழங்களையெல்லாமா காண்பித்தார்கள்?
// சிங்கக்குட்டி said...
2012ல் மீண்டும் 2020௦ வரும், இந்த கட்டு கதைகள் எப்போதும் முடியாது :-)//
கதைகள் அந்த அந்த ஆண்டோடு முடிந்துவிடும், அடுத்த பாகம் தான் அவ்வப்போது வெளிவரும் :)
//VIKNESHWARAN said...
ஐயரே நல்லாதான் பத்த வைக்கிறிங்க திரியை.... ம்ம்ம் ஆகட்டும் ஆகட்டும்...
உலகமே அழிந்துவிடும் எனின் மதம்... ம... ம... எல்லாம் எதற்கு...//
அதானே..... படத்துல மத அடையாளம் உள்ளவர்களும் காப்பாற்றப்படுகிறார். மதம் எங்கே இருந்து அழிவது ?
:(
//Raja said...
எனக்கு என்னமோ மாயன் நாட்காட்டி அவர்கள் வாழ்ந்த உலகத்திற்கு (பகுதிகளுக்கு)மட்டும் இருக்கலாம். 5000 ஆண்டுகளுக்கு முன் உலக வரைபடம் யாரிடமும் கிடையாதே? எந்த வேத புத்தகங்களும் உலக நாடுகளை பற்றி எந்த பெரிய குறிப்புகளையும் தரவில்லை. அவர்கள் எந்த பகுதியில் வாழ்ந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து அந்த பகுதியில் இருந்து வேண்டுமானால் மக்களை அப்புறப்ப்டுத்துவதை பற்றி யோசிக்கலாம். மற்றபடி இதில் பெரிய ஆபத்தில்லை.
2:06 PM, November 15, 2009//
உலகே (ஒரே நாளில்) மாயம்...ன்னு சொல்லும் மாயன் காட்டிய வழி இல்லைன்னு சொல்றிங்க !
:)
// ஆ.ஞானசேகரன் said...
//இன்றைக்கு உலகம் மகிழ்ச்சியாக இல்லை என்று நினைப்போர் விழுக்காட்டு அளவில் மிகுதி. //
ஓஒ.... அப்படியா//
இல்லையா பின்னே ?
// ராஜவம்சம் said...
//கிறித்துவ, தேவாலயங்கள், வாடிகன் நகர், இந்து கோவில்களெல்லாம், பிரேசில் ஏசு நாதர் சிலை கூட அப்படியே சாய்ந்து உடைந்து விழுவதாக காட்டப்படும் படத்தில் வளைகுடா நாடுகளை அல்லது ஒரு மசூதி அழிவதாகக் கூடக் காட்டப்படவில்லை,//
இது என்ன பூனுலின் விசமதந்திரமோ அந்த படத்தில் உலகில் உள்ள எல்லா மத அடையாழங்களையெல்லாமா காண்பித்தார்கள்?//
எனக்கு பூணூல் இடுப்பில் தான் இருக்கு, அதன் பெயர் அரைஞான் கயிறு.
மத அடையாளங்களை வேண்டுதல்களைக் காட்டினார்கள், அழிவு காட்சியில் என்ன காட்டினார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை சென்று பார்க்கவும்
நல்ல தெளிவான கட்டுரை கண்ணன் -
நாம் இருக்கும் milky way galaxy இன் மயிப்பகுதிக்கு நேராக சூரியன் இணையபோவதால் 2012 டிசம்பர் 24 அன்று இது நடக்கும் என்று சில விஞ்ஜானிகள் (?) சொல்வதாகப் படித்தேன் ஒரு நாளிதழில். அப்படியானால் அந்த அழிவு எப்போதோ நடந்து முடிந்திருக்க வேண்டிய கதை. ஏனெனில் இன்று உண்டு நாளை இல்லை என்ற நிகழ்சிகள் அல்ல இதெல்லாம். பூகம்பம் கூட பல முறை singal கொடுத்துவிட்டுதான் பின்னர் வருகிறது.
இப்படித்தான் 1966 இல் உலகம் அழியப்போகிறது என்று எல்லோரும் சொல்லவே நான் மூச்சு முட்ட சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொண்டுது நினைவுக்கு வருகிறது.
கருத்துரையிடுக