பின்பற்றுபவர்கள்

3 ஜூன், 2009

தொடருங்.............GO !

பதிவுலக சித்தப்பா டிவிஆர் என்னை தொடர்பதிவுக்கு இழுத்துவிட்டு இருக்கிறார். இன்னொரு தடவை கண்ணுல மாட்டாமல் போய்விடுவாரா ? அப்ப இருக்கு !

1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
ம் பலரும் கேட்கிறாங்க, கோவி.கண்ணன் - இதில் கோவி ங்கிறது எந்தூருங்க ? ஊரு பேரெல்லலம் இல்லை, எங்கப்பா பேரு கோவிந்தராசு, அதிலிருந்த 'கோவி'யை இணைத்துக் கொண்டேன்

2.கடைசியாக அழுதது எப்போது..?
அம்மணி சென்றவாரம் ஊருக்குச் சென்றிருந்ததால் நானே சமையல் செய்ய வேண்டி இருந்ததால் (இருந்தா மட்டும் என்னவாம்னு என்று என் வீட்டுக்கு வந்த யாரோ பொடிப்பசங்க கூவுவாங்க அலட்டிக்க வேண்டாம்) வெங்காயம் உறித்தேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
பேனா மூனை 3M அளவுக்கு இருந்தால் கையெழுத்து மரவட்டை மாதிரி வரிசையாக கோர்வையாக வரும். இல்லை என்றால் கோழி சீய்ப்பது போலத்தான். என் கையொப்பம் நல்லா இருப்பதாக பார்க்கிறவங்க சொல்லுவாங்க.

4.பிடித்த மதிய உணவு..
பதமான சற்று தூக்கலான காரம் உள்ள அனைத்து காய்கறி உணவு வகைகள், ஒரு பருக்கை, ஒரு காய்கறித்துண்டு கூட மீதம் வைக்காமல் இல்லாமல் சாப்பிட்டு முடிப்பேன். (டிவிஆர் சாட்சி)

5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
என்னிடம் விரும்பிப் பழகுபவர்களை மிகவும் நேசிப்பது உண்டு. ஆனால் சிலரைப் பார்த்தது பழகியதும் பிடித்துவிடும், அப்படிப் பழகியவர்களில் சிலர் கடிந்து கொண்டாலும் அவர்களைத் தவிர்க்கும் எண்ணம் வராது. (இதுல உள்குத்து எதுவும் இல்லை, உண்மை)

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
நாகப்பட்டினம் சொந்த ஊர், கடலில் குளிக்கப் பிடிக்காமல் இருக்குமா ? அருவி - வயல்வெளிகளுக்குச் செல்லும் போது பம்பு செட் குளியல் அருவிக்கும் அதுக்கும் வேறுபாடு தெரியல

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..
இரண்டு ஒரு முறை பார்த்த பிறகும் பலரது முகம் மறந்துவிடுகிறது. கிஷோர் நண்பர் சிவாவை மூன்று முறைப் பார்த்தும் சட்டென்று பெயரைப் பொருத்திப் பார்த்து உடனே தெரிந்து கொள்ள முடியாமல் போனதற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. தொடர்ந்து பழகவேண்டி இருக்கும் என்று நினைத்தால் இப்போதெல்லாம் ஒருவரைப் பார்க்கும் போது முடிந்த அளவுக்கு முகத்தை நினைவு வைத்துக் கொள்வதற்காக தலை வகிடு, முடி வகை, காதின் அளவு, அமைப்பு, கண்கள், முகம் அமைப்பு ஆகியவற்றை பதிய வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.

8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: எதையும் ஏற்றுக் கொள்வது / சகித்துக் கொள்வது (விதிகள் காலத்தால் மாறும்), பிடிக்காதது: நடப்புகள் எதையும் மறக்காமல் நினைவு வைத்திருப்பது


9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..
பிடித்த : விசயம் செய்து முடிக்க வேண்டியதை திட்டமிட்டு செய்வது; பிடிக்காத விசயம் : எல்லோருக்கும் சேர்த்து ஒற்றையாளாக கவலைப்பட்டுக் கொண்டு இருப்பது

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாரும் இல்லை.

11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
பச்சை / நீலம் கலந்த பொடிக்கட்டம் போட்ட நிற லுங்கி..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..
பாட்டா ? சன் செய்தியில் 'பன்றிக்காய்ச்சல் நோய் பற்றி சொல்றாங்க'

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நிறம் பற்றி எனக்கு எந்த விருப்பு வெறுப்பும் கிடையாது, எல்லா வண்ணங்களும் பிடிக்கும்

14.பிடித்த மணம்..
சந்தனம்

15.நீங்க அழைக்கப்படும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..

அறிவே தெய்வம் - அண்மையில் பழகிய நண்பர், பொறுமை சாலி, அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளத்தான்
மோகன் கந்தசாமி - எப்போதும் யாரையாவது பேட்டி எடுக்கிறார், அவராக எழுதிய பதிவுகள் குறைவுதான், இதையாவது எழுதட்டுமே :)
ஜோதிபாரதி - வெளிச்சப் பதிவர், போட்டொ ஜெனிக் முக(மா)ம். மதுரை இராம் கூடச் சொன்னார், இன்னும் கொஞ்சம் வெளிச்சமாக பார்க்கலாமே அதற்காக..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..
இது (அவசரத்துக்கு சிக்கிய ஒன்று)

17.பிடித்த விளையாட்டு...
கோழி இறகு பந்து

18.கண்ணாடி அணிபவரா?
இன்னும் இல்லை

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...
நகைச்சுவைப் படங்கள், இயல்பான கதை உள்ள படங்கள், விரைவான திரைக்கதை உள்ளப் படங்கள்

20.கடைசியாக பார்த்த படம்..
அது வந்து.......சூர்யா நடித்து சன் பிக்சர் தயாரித்து...பேரே மறந்துட்டு......ஆங் 'அயன்'

21.பிடித்த பருவ காலம்...
கார்த்திகை - பங்குனி
.
22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்
எப் எம் அப்துல்லா (அவரோட குரல் எப் எம்மில் கேட்குது) கொடுத்த புத்தகம், இனிமே தான் படிக்கனும், கொஞ்சம் தடிமானாக இருப்பதால் உடன் எடுத்துச் சென்று படிக்க முடியல

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்
எப்போதாவது மனதை ஈர்க்கும் படங்கள் கிடைத்தால் மாற்றுவேன், அடிக்கடி மாற்றூவதில்லை

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...
பிடித்த சத்தம் : குழந்தைகளின் சிரிப்பு, பிடிக்காதது: சூழலை சூன்யமாக்கும் சத்தங்கள் அனைத்தும்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு
தாய்லாந்து பேங்க்காக்

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
மொழிகள் பற்றி அறிய விரும்பும் ஆர்வம், அறிந்து கொள்ள நினைத்து தகவல் திரட்டுவது. சுவற்றில் சாயாமல் தலைகீழாக நிற்பேன் :)

27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..
பொய்யை மறைக்கச் சொல்லப்படும் பொய்கள்

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..
மேலே 27ல் இருப்பது போல் யாரேனும் நடந்து கொண்டால் விழிச்சுப் பார்த்துட்டு தூங்கிடும்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்..
இன்னும் செல்லாத இடங்கள் அனைத்தும், யாதும் ஊரே !

30.எப்படி இருக்கணும்னு ஆசை..
இப்படியே இருப்பதே நல்லாத்தான் இருக்கு, எனக்கு என்னையும் என் செயல்களையும் பிடிச்சிருக்கு வேற எப்படி ?

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...
நண்பர்களுடன் ஊர் சுற்றுவது

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..
விழிப்பது போல் வாழ்க்கை தூங்குவது போல் சாக்காடு - வள்ளுவரே சொல்லிட்டாரே, அதனால் எதையும் ரொம்ப நம்பி ஏமாந்துப் போகவேண்டாம்.

40 கருத்துகள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

me the first

"பிடித்த மணம்..

சந்தனம்."

தமிழ் மணம் இல்லியா..

கோவி.கண்ணன் சொன்னது…

//starjan said...
me the first

"பிடித்த மணம்..

சந்தனம்."

தமிழ் மணம் இல்லியா..
//

போச்சு யாருக்கோ எடுத்துக் கொடுத்திட்டிங்க.
:)

நசரேயன் சொன்னது…

//மேலே 27ல் இருப்பது போல் யாரேனும் நடந்து கொண்டால் விழிச்சுப் பார்த்துட்டு தூங்கிடும்//

அது என்ன கோவி.அண்ணன் ???

கோவி.கண்ணன் சொன்னது…

//நசரேயன் said...
//மேலே 27ல் இருப்பது போல் யாரேனும் நடந்து கொண்டால் விழிச்சுப் பார்த்துட்டு தூங்கிடும்//

அது என்ன கோவி.அண்ணன் ???
//

பொய்யை மறைக்கச் சொல்லப்படும் பொய்கள் என யாரேனும் நடந்து கொண்டால் சாத்தான் விழிச்சுப் பார்த்துட்டு தூங்கிடும்

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

//28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..
மேலே 27ல் இருப்பது போல் யாரேனும் நடந்து கொண்டால் விழிச்சுப் பார்த்துட்டு தூங்கிடும்//

-:)

//எதையும் ரொம்ப நம்பி ஏமாந்துப் போகவேண்டாம்//

நல்ல கருத்து.... பற்றுள்ள வாழ்கையில் பற்றற்று இருக்க கத்துக்கொள்ளவேண்டும் -:)

அன்புடன் அருணா சொன்னது…

நல்லாருக்குங்................GO!!!!!

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//எப் எம் அப்துல்லா (அவரோட குரல் எப் எம்மில் கேட்குது)

//

:))

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\என்னிடம் விரும்பிப் பழகுபவர்களை மிகவும் நேசிப்பது உண்டு. ஆனால் சிலரைப் பார்த்தது பழகியதும் பிடித்துவிடும், அப்படிப் பழகியவர்களில் சிலர் கடிந்து கொண்டாலும் அவர்களைத் தவிர்க்கும் எண்ணம் வராது. (இதுல உள்குத்து எதுவும் இல்லை, உண்மை)\\

இதுவே நட்பின் வரையறை


\\அறிவே தெய்வம் - அண்மையில் பழகிய நண்பர், பொறுமை சாலி, அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளத்தான்\\

என் மீது கொண்ட மதிப்பிற்க்கு தலை
வணங்குகிறேன். ’நிகழ்காலத்தில்..’
என இப்போதைக்கு பெயர் மாற்றம்
செய்துள்ளேன்.

கிரி சொன்னது…

//கடைசியாக பார்த்த படம்..
அது வந்து.......சூர்யா நடித்து சன் பிக்சர் தயாரித்து...பேரே மறந்துட்டு......ஆங் 'அயன்'//

வயசாகிட்டு போகுது.. ;-)

//சுவற்றில் சாயாமல் தலைகீழாக நிற்பேன் //

பாலா முதலில் உங்களை பார்க்காமல் போய்ட்டாரே ;-)

//starjan Said
me the first

"பிடித்த மணம்..

சந்தனம்."

தமிழ் மணம் இல்லியா..//

ஹா ஹா ஹா கலக்கல்

தினமும் மூன்று பதிவு போடுறீங்க..தமிழ் மணம் தான் சொல்லி இருக்கணும்

கீழை ராஸா சொன்னது…

வெட்டு ஒன்று துண்டு ரெண்டென்று படபட வென்று பொறிந்து தள்ளிவிட்டீர் போங்க...
நண்பர் "வம்புடன் ஜமால்" என்னையும் கோர்த்துள்ளார்.. பார்ப்போம்...

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

///கிரி said...

//starjan Said
me the first

"பிடித்த மணம்..

சந்தனம்."

தமிழ் மணம் இல்லியா..//

ஹா ஹா ஹா கலக்கல்...///


எனக்கு பிடித்தது

கீழை ராஸா சொன்னது…

17.பிடித்த விளையாட்டு...
கோழி இறகு பந்து
???

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அப்படியே வாங்க‌


http://ensaaral.blogspot.com/


வ‌ந்து மொய் வ‌ச்சுட்டு போங்க‌

கீழை ராஸா சொன்னது…

//26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
மொழிகள் பற்றி அறிய விரும்பும் ஆர்வம், அறிந்து கொள்ள நினைத்து தகவல் திரட்டுவது. சுவற்றில் சாயாமல் தலைகீழாக நிற்பேன் :)//

முடியல..

ஆளவந்தான் சொன்னது…

//
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு
தாய்லாந்து பேங்க்காக்
//

வீட்டை விட்டு போய் பாக்கவேண்டிய இடம் தான்

Test சொன்னது…

//25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு
தாய்லாந்து பேங்க்காக்//

அங்கே போய் என்ன பண்ணீங்க ?

//27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..
பொய்யை மறைக்கச் சொல்லப்படும் பொய்கள்//

மீ டூ, முடிந்த வரை உண்மையையை மட்டும் பேசினால் எதையும் நியாபகம் வைத்து கொள்ள வேண்டிய அவசியம் இருகாது - யாரோ சொன்னது :)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ஆங்.... நல்லா இருக்கு

தமிழ் சொன்னது…

/நல்லாருக்குங்................GO!!!!!/

அதே

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தன் said...
நல்ல கருத்து.... பற்றுள்ள வாழ்கையில் பற்றற்று இருக்க கத்துக்கொள்ளவேண்டும் -:)
//

அதே அதே சரியாப் புரிஞ்சிக்கிட்டிங்க. நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அன்புடன் அருணா said...
நல்லாருக்குங்................GO!!!!!
//

நன்றி அருணா !

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...
//எப் எம் அப்துல்லா (அவரோட குரல் எப் எம்மில் கேட்குது)

//

:))
//

என்ன தம்பி சிரிப்பானைப் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிட்டிங்க ?

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
நல்லாருக்கு

//

நன்றி சித்தப்பா !

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...
\\என்னிடம் விரும்பிப் பழகுபவர்களை மிகவும் நேசிப்பது உண்டு. ஆனால் சிலரைப் பார்த்தது பழகியதும் பிடித்துவிடும், அப்படிப் பழகியவர்களில் சிலர் கடிந்து கொண்டாலும் அவர்களைத் தவிர்க்கும் எண்ணம் வராது. (இதுல உள்குத்து எதுவும் இல்லை, உண்மை)\\

இதுவே நட்பின் வரையறை


\\அறிவே தெய்வம் - அண்மையில் பழகிய நண்பர், பொறுமை சாலி, அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளத்தான்\\

என் மீது கொண்ட மதிப்பிற்க்கு தலை
வணங்குகிறேன். ’நிகழ்காலத்தில்..’
என இப்போதைக்கு பெயர் மாற்றம்
செய்துள்ளேன்.
//

பெயர் மாற்றமா ? எதும் சோசியம் பார்த்திகளா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// கிரி said...
//கடைசியாக பார்த்த படம்..
அது வந்து.......சூர்யா நடித்து சன் பிக்சர் தயாரித்து...பேரே மறந்துட்டு......ஆங் 'அயன்'//

வயசாகிட்டு போகுது.. ;-)

//சுவற்றில் சாயாமல் தலைகீழாக நிற்பேன் //

பாலா முதலில் உங்களை பார்க்காமல் போய்ட்டாரே ;-)

//starjan Said
me the first

"பிடித்த மணம்..

சந்தனம்."

தமிழ் மணம் இல்லியா..//

ஹா ஹா ஹா கலக்கல்

தினமும் மூன்று பதிவு போடுறீங்க..தமிழ் மணம் தான் சொல்லி இருக்கணும்
//

கிரி, மூச்சுக் காற்றை மணம் என்று சொல்ல முடியுமா ? நான் திரட்டியைச் சொல்லவில்லை, தமிழைச் சொல்கிறேன் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கீழை ராஸா said...
வெட்டு ஒன்று துண்டு ரெண்டென்று படபட வென்று பொறிந்து தள்ளிவிட்டீர் போங்க...
நண்பர் "வம்புடன் ஜமால்" என்னையும் கோர்த்துள்ளார்.. பார்ப்போம்...
//

நன்றி ! ஜமாலை சாமாளியுங்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//starjan said...


எனக்கு பிடித்தது
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கீழை ராஸா said...
//26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
மொழிகள் பற்றி அறிய விரும்பும் ஆர்வம், அறிந்து கொள்ள நினைத்து தகவல் திரட்டுவது. சுவற்றில் சாயாமல் தலைகீழாக நிற்பேன் :)//

முடியல..

1:36 AM, June 04, 2009
//

:P)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆளவந்தான் said...
//
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு
தாய்லாந்து பேங்க்காக்
//

வீட்டை விட்டு போய் பாக்கவேண்டிய இடம் தான்
//

ஆமாம் அப்படித்தான் நடந்தது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கீழை ராஸா said...
17.பிடித்த விளையாட்டு...
கோழி இறகு பந்து
???
//
shettle cork
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// Logan said...
//25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு
தாய்லாந்து பேங்க்காக்//

அங்கே போய் என்ன பண்ணீங்க ?

சுற்றி சுற்றிப் பார்க்த்தேன். சுற்றுலா தளங்களை. சூரியனார் கோவில் மிக அருமை

////27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..
பொய்யை மறைக்கச் சொல்லப்படும் பொய்கள்//

மீ டூ, முடிந்த வரை உண்மையையை மட்டும் பேசினால் எதையும் நியாபகம் வைத்து கொள்ள வேண்டிய அவசியம் இருகாது - யாரோ சொன்னது :)
//

கரெக்ட் !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
ஆங்.... நல்லா இருக்கு

8:52 AM, June 04, 2009
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//திகழ்மிளிர் said...
/நல்லாருக்குங்................GO!!!!!/

அதே
//

நன்றி !

மாதங்கி சொன்னது…

நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
என்னிடம் விரும்பிப் பழகுபவர்களை மிகவும் நேசிப்பது உண்டு. ஆனால் சிலரைப் பார்த்தது பழகியதும் பிடித்துவிடும், அப்படிப் பழகியவர்களில் சிலர் கடிந்து கொண்டாலும் அவர்களைத் தவிர்க்கும் எண்ணம் வராது. (இதுல உள்குத்து எதுவும் இல்லை, உண்மை



நல்லாருக்கு

கோவி.கண்ணன் சொன்னது…

//மாதங்கி said...


நல்லாருக்கு
//

நன்றி மேடம் !

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\பெயர் மாற்றமா ? எதும் சோசியம் பார்த்திகளா ?\\

அறிவே தெய்வம் என்ற பெயர் பதிவுலகில் ஓரளவு தெரிய வைத்தாகிவிட்டது. அது பெயரல்ல, செய்தி

அடுத்ததும் செய்தியே...

சோதிடத்தை நான் பெரிதாக மதிப்பதில்லை.

விஜய் ஆனந்த் சொன்னது…

// கடைசியாக அழுதது எப்போது..?
அம்மணி சென்றவாரம் ஊருக்குச் சென்றிருந்ததால் நானே சமையல் செய்ய வேண்டி இருந்ததால் (இருந்தா மட்டும் என்னவாம்னு என்று என் வீட்டுக்கு வந்த யாரோ பொடிப்பசங்க கூவுவாங்க அலட்டிக்க வேண்டாம்) வெங்காயம் உறித்தேன். //

அப்போ நேத்து வெங்காயம் உரிக்கலையா???

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கண்கள் பனிக்கின்றன!
என்னையுமா...!?

என்னையும் எம்.எல்.எம் மார்க்கெட்டிங்கில் செர்விட்டுட்டீங்களா!?
நல்லா இருங்க!

விஜய் ஆனந்த் சொன்னது…

ப்ரமாதம்ம்ம்ம்ம்ம்!!!

அட் எ டைம்ல, டிவி பாக்கறீங்க...எஃப் எம் கேக்கறீங்க...பதிவு போடறீங்க....கூடவே சைட்ல வெங்காயம் உரிக்கிறது வேற!!!!

கலக்கிட்டீங்க போங்க!!!

கிஷோர் சொன்னது…

இந்த இடுகை எழுதிய அனுபவத்தைப்பற்றி உங்கள் அனுபவத்தை இன்னும் 3 இடுகைகளாக எழுதுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

;)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அடுத்த பதிவர் சந்திப்புல கட்டாயம் சுவரில் சாயாமல் தலைகீழாக நின்று காட்டுவார் என அனைத்து நல் உள்ளங்களுக்கும் அறிவித்துக்கொள்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்