'தேடல்' ஆன்மிகவாதிகளுக்கு நெருக்கமானச் சொல். தேடலில் தொடங்கி அதிலேயே முடிவதைத் தவிர்த்து யாரும் தேடியதைக் கண்டு கொண்டார்களா ? அவர்களுக்கே வெளிச்சம். உலகத்தில் இரண்டு வகை கூட்டங்கள் உண்டு. ஒன்று அனைத்தையும் ஆன்மிகம் தந்துவிடுகிறது அல்லது தந்துவிட்டது என்று திடமாக நம்புவது. அடுத்தக் கூட்டம் அறிவியல் எல்லாவற்றையும் தந்து கொண்டு இருக்கிறது தந்துவிடும் என்கிற திடமான நம்பிக்கை.
இவர்கள் இருவருமே கூட்டுக் களவானியாக ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பார்கள் அதில் சிலர் மட்டும் தனித்து ஆன்மீகம், நாத்திகம் என்பர். முழுப் பெருவெளியிலும் பூவியுலும் கூட அவிழ்க்க முடியாத புதிர்கள் எப்போதுமே உண்டு. அதனால் தான் மனிதனின் தேடல் அது ஆன்மிகமாக இருந்தாலும் சரி அறிவியலாக இருந்தாலும் முற்று பெருவதே இல்லை. ஆன்மீகம் சித்தாந்தங்களிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் கொள்கைகளை வளர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றன. வானத்தில் சாமிகள் இருப்பதாகக் காலம் காலமாக சொல்லப்பட்டுவருவது விண்கலக் காலங்கள்(Satelite) தொடங்கிய காலத்தில் கொஞ்சம், கொஞ்சம் மாக மறைந்து வருகிறது. புராணங்களை நம்பிக் கொண்டு இருந்த ஆன்மிகவாதிகள் அவைகள் புனைவுகளாக இருக்கலாம் என்று நம்பத் தொடங்கி இறைவன் ஒற்றைத் தன்மை உடையவன் அறிவியலுக்கும், புலனுக்கும் அப்பாற்பட்டவன் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள், ஏனெனில் இறைவன் காட்சிக் கொடுத்தாகவும் பார்வதி பால் கொடுத்ததாகச் சொல்லப்படும் ஞானசம்பந்தன் காலத்து கதைகளெல்லாம் அண்மைய நூற்றாண்டுகளில் எதுவும் நடக்கவே இல்லை. இந்தியா சொர்க பூமி, இறைவனின் பிறப்பிடம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள், முகலாய பேரசிடமும், வெள்ளைக்காரர்களிடமும் அடிமையான பிறகு இந்தியாவில் கடவுள் இருந்திருந்தால், அல்லது கடவுள் பார்வை பட்டிருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா ? என்றெல்லாம் நினைத்து உருவ வழிபாட்டுக் கடவுள்களையும் சின்னங்களையும் கோவில்கள் மற்றும் பூசை அறையுடன் நிறுத்திவிட்டு தத்துவங்களை முன்னிறுத்தி பேசத் தொடங்கினார்கள்.
அறிவியல் பக்கம் உள்ளவர்களில் பலர் அனைத்தும் அறிவியல் பொருள்கள் அனைத்தும் மூலக் கூறுகளால் ஆனவை என்றும் எல்லாவித இயக்கங்களையும் பார்முலாக்களில் அடக்கிவிடமுடியும், கணக்கிட முடியும் என்று நம்புகிறார்கள். பெருவெடிப்பு என்னும் கொள்ளையை உருவாக்கி, உலகமும் பிரபஞ்சத் தோற்றமும் இப்படித்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நம்புவதுடன் நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக பால்வெளித்திரல்கள் விரிவடைவதை காட்டுகிறார்கள். மனிதன் அறிந்துள்ள வரலாறுகள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குக் குறைவே, கடந்த 200 ஆண்டுகளில் பிரபஞ்ச மறைப்புகள் (ரகசியம்) அனைத்தையும் கிட்டதட்ட அறிந்துவிட்டதாகவும், முழுவதும் அறிந்துவிட முடியும் என்று அறிவியலார் நம்புகிறார்கள். சுமேரியர்களுக்கு முன்பு நாகரீக வளர்ச்சி பெற்ற மனிதர்களே இருந்திருக்க முடியாது என்று நம்புகிறார்கள். இவையெல்லாம் ஆன்மிகம் போன்ற வெறும் நம்பிக்கைதானே. பூமியில் உயிரனம் எத்தனையோ முறை அழிந்திருக்கலாம், ஆனால் ஆதாரம் எதுவும் கிட்டவில்லை என்பதால் நமக்கு தெரிந்த நாகரீகம் பெற்ற பழங்காலத்து மனிதர்கள் என்றால் அது சுமேரியர்கள், பிறகு ஆப்ரிக்கர்கள், அதன் பிறகு சிந்துசமவெளி நாகரீகம். இன்னும் சில நூற்றாண்டுகளில் அல்லது அடுத்த 10 ஆண்டுகளில் பழமையான நாகரீகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் இன்று இருப்பதைவிட மிகவும் நாகரீகம் அடைந்தவர்களாக இருப்பது தெரிந்தால் இன்றைய மனிதர்களான நாம் மிகவும் அதிர்ச்சி அடைவோம், ஆனால் அப்படிப் பட்டவர்கள் பூமியில் இருக்க வாய்ப்பில்லை, அதனால் ஒருவேளை வேற்றுக் கிரகத்தில் இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூட நம்புகிறார்கள். ஏன் அப்படி ? பூமியில் கூட இருந்திருக்கலாம், நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்கிற காரணத்திற்காக அவற்றை மறுக்கவோ, அதைப் பற்றி ஆய்வு செய்யவோ நினைப்பது இல்லை. ஏனெனில் மின்சாரமும், பெட்ரோலும் முன்பு எந்த காலத்திலும் இருந்ததில்லை என்பதைத் தாண்டி மனித மனம் சிந்திக்காது எனவே மனித இறுதிகட்ட நாகரீக வளர்ச்சியில், அறிவியலில் தற்போது இருப்பதாக நாம் கருதுகிறோம்.
நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது, அறிவியல் சார்ப்புள்ளவர்களுக்கு எந்த ஒரு பொருளுக்கும் அழிவு உண்மை என்பது தெரிந்தும் பழங்காலத்தில் வாழ்ந்தவர்களின் ஆதாரம் தேடி, கிடைத்த வரையில் இருக்கும் ஆதாரத்தை வைத்து நாமே நாகரீக உச்சம் பெற்றவர் என்று நினைக்கிறோம்.
ஆன்மிகத்திலும் அப்படியே எத்தனையோ பேர் முயன்றும், இது இப்படித்தான் என்று என்று பலவகையான அவரவர் வரையறை செய்து, புதியவர்களின் தேடல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தான் நம்புவது வரை தான் இறை அதற்குமேல் இருக்க வாய்ப்பில்லை என்பதாகவே நினைக்கிறார்கள். ஆன்மிகத் தேடல் (ஒவ்வொ)ஒருபிறவியின் தனிப்பட்ட இறை குறிந்த கேள்வி என்றால் அறிவியல் ஒட்டுமொத்த மனிதர்களின் வரலாறு அறிந்த காலத்திலிருந்து தொடர்ந்து வரும் கேள்வி. ஆன்மிகவாதிகளின் கேள்வி அந்த பிறவியோடும், அறிவியலாளார்களின் கேள்வி வரலாற்றுடன் (உலகத்தின் ஒவ்வொரு அழிவுடன்) முடிந்துவிடுகிறது. விடைகள் எப்போதும் கிடைக்காது என்பதால் தான், ஆன்மிகமானாலும் அறிவியல் ஆனாலும் அதில் மனிதர்கள் நாட்டம் கொண்டு தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.
தேடுங்கள் கிடைக்கப்படும் வெறும் நம்பிக்கை சொற்றொடர் !
(என்ன சொல்லவருகிறேன் ? நமக்கு முன்பு கூட பூமியில் தற்காலத்தைவிட மாறுபட்ட அறிவியல் / ஆன்மீக வாழ்க்கை இருந்திருக்கலாம்)

மிர்தாதின் புத்தகம் இதை ஒட்டிய கருத்தை முன்வைக்கிறது, அதில் அறிவியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை.
11 கருத்துகள்:
எக்காலத்துக்கும் பொருந்துவது 99.99 சதவிதம் இன்னும் கண்டுபிடிக்கப்படவேண்டும். -:) என்னை பொறுத்தவரை.
//நமக்கு முன்பு கூட பூமியில் தற்காலத்தைவிட மாறுபட்ட அறிவியல் / ஆன்மீக வாழ்க்கை இருந்திருக்கலாம்//
வழிமொழிகிறேன் -:)
//
தேடலில் தொடங்கி அதிலேயே முடிவதைத் தவிர்த்து யாரும் தேடியதைக் கண்டு கொண்டார்களா ? அவர்களுக்கே வெளிச்சம்
//
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்.
இதுவும் தேடல் பற்றிய ஒரு பதிவே
http://nnaan.blogspot.com/2009/01/blog-post.html
எந்த ஒரு விடை அறியாத கேள்விக்கு பதில் கிடைக்கும் போதும் புதிதாக குறைந்தது 100 கேள்விகளாவது பிறக்கிறது.அதனால் தான் வாழ்க்கை பெரும்பாலும் சுவையாகவும் மற்றும் வெவ்வேறு அனுபவங்களின் கோர்வையாகவும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
//மிர்தாதின் புத்தகம் //
?????????
//மனிதன் அறிந்துள்ள வரலாறுகள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குக் குறைவே, கடந்த 200 ஆண்டுகளில் பிரபஞ்ச மறைப்புகள் (ரகசியம்) அனைத்தையும் கிட்டதட்ட அறிந்துவிட்டதாகவும், முழுவதும் அறிந்துவிட முடியும் என்று அறிவியலார் நம்புகிறார்கள்.//
அகழ்வாராய்ந்த பொருட்களை
கார்ப்பன் டேட்டிங் செய்து பார்த்ததில் நாகரீகம் ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆனது தான். அதற்கு முன்புவரை மனிதன் விலங்குதான். அறிவியல் வளர்ச்சி கூட கடந்த 300 ஆண்டுகளில் ஏற்பட்டவைதான். அதற்கு முன் அறிவியல் கண்டுபிடிப்பு செய்ய மனிதனுக்குள் உந்துதல் இல்லை.
சக்கரத்தை கண்டுபிடித்தவுடன் மனிதன் தூங்கிவிட்டான். கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் அறிவியல் மேதைகளை உலகம் பெற்றுவருகிறது.
இது தான் உண்மை. தெரியுமோ?
இப்படிக்கு கண்களை மூடிக்கொண்ட பூனை..
//'தேடல்' ஆன்மிகவாதிகளுக்கு நெருக்கமானச் சொல். தேடலில் தொடங்கி அதிலேயே முடிவதைத் தவிர்த்து யாரும் தேடியதைக் கண்டு கொண்டார்களா ? அவர்களுக்கே வெளிச்சம். உலகத்தில் இரண்டு வகை கூட்டங்கள் உண்டு. ஒன்று அனைத்தையும் ஆன்மிகம் தந்துவிடுகிறது அல்லது தந்துவிட்டது என்று திடமாக நம்புவது. அடுத்தக் கூட்டம் அறிவியல் எல்லாவற்றையும் தந்து கொண்டு இருக்கிறது தந்துவிடும் என்கிற திடமான நம்பிக்கை.//
ஆத்திகனுக்கும் புரியவில்லை; நாத்திகனுக்கும் புரியவில்லை.
தெரிந்த பொருளைப் பற்றி விவதிப்பதை விட தெரியாத பொருள் பற்றி விவாதிப்பதென்பது சுலபமானது. இங்கே சூன்யத்தைப் பற்றிய விவாதம்
சுவையாக நடக்கிறது.
கண்ணில்லாதவன் யானை தடவின கதை மாதிரி சூன்யத்தை பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதில் வந்துகொண்டேயிருக்கிறது.
கடவுள் இருக்கிறார், இல்லை என்ற இந்த இரண்டு கேள்வி தான் இலக்கியதில் அதிகம் இடம்பிடித்துள்ளன.
எப்போதும் தெளிவாகத் தெரியும் பொருள்பற்றி, இரண்டு சிந்தனை இல்லை. தெரியாத பொருள் மீதே சிந்தனை படர்கிறது. கற்பனை திறன் பெருக வேண்டும் என்றே இந்த சூன்யம் பிறந்தது. தத்துவங்கள் பிறக்கவேண்டும் என்றே சூன்யம் தன் இருப்பை தடம் தெரியாமல் அமைத்தது.
விடை இல்லாத கேள்வியாக இது இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
பிறப்பு இறப்பு பற்றி தெரிந்து விட்டால் உலகில் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும் அல்லது தளைத்துவிடும். அப்படி அமைந்துவிடாமலிருக்கவே இந்தச்சூன்யம் மறைந்து கொண்டது. உலகம் மாறி மாறி அமையவேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம் என்பது என் கருத்து.
ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றை ஒன்றை தாக்கியும் அனுசரித்தும் போய்க்கொண்டே இருக்கு. "தனக்கு தெரியவில்லை என்பதால் அது இல்லை என்று சொல்லிவிட முடியாது என்று சொன்னால் " அது அறிவியலையும் சொல்லலாம் ஆன்மீகத்தையும் சொல்லலாம்.. ஆனால் எல்லை வகுக்காத இந்த ஆராச்சிகள் முடிவுக்கே வருவதில்லை. எனவே அவன் மனம் சொல்வதுதான் அறிவியல் அல்லது ஆன்மீகம்...
ஞானச்சுரங்கமே என்று சொல்ல ஆசை, இதற்கு முன்னர், என்னை விட, பெரிய ஞானசுரங்கம் இருந்திருக்கலாம் என்று நீங்க சொல்லுவீங்க..அதனாலே..
அண்ணாச்சி
என்ன சொல்ல வர்றீங்க..
எனக்கு ஒண்ணுமே பிரியலை !
ஹூம்ம்ம்ம்ம்ம்
ம்ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
முடிவற்ற தேடல் தான் வாழ்கைக்கு சுவை.
கருத்துரையிடுக