ஆண் என்கிற ஆணவமோ, வெட்கமோ இன்றி "டீச்சர் ஒண்ணுக்கு..." என்று ஒற்றை விரலைக் காட்டிவிட்டு அவ்வப்போது எழுந்து ஓடும் தொடக்கக் கல்வி அகவையில் நடந்த பள்ளிப் பருவத்து நிகழ்வுகள் பற்றி எழுதும் தொடர் பதிவு. தம்பி "அப்பாவி முரு" அப்பாவியாக புதிய தொடர் தொடங்கி பிள்ளையார் சுழி போட்டு மூன்று கொழுக்கட்டைகளில் ஒன்றை எனக்கு கொடுத்து இருக்கார்.
முதல் வகுப்பு : என்னுடைய பிறந்த திங்கள் (டிசம்பர்) படி பள்ளி தொடங்கும் திங்கள் (ஜூன்) ஆறு திங்கள் முன்பு பின்பு இருப்பதால் 4 1/2 அகவையில் சேர்க்காமல் 5 1/2 அகவையில் பள்ளியில் சேர்த்தார்கள். நகராட்சி(முனிசிபல்)தொடக்கப் பள்ளியில் தான் முதல் வகுப்பு செல்ல தொடங்கினேன். வீட்டில் இருந்து ஐந்து நிமிட நடை தொலைவு.
இங்கு சேரும் முன் அண்ணன் படித்த மற்றொரு பள்ளிக்கு அடிக்கடி சென்று தூங்கி எழுந்த பழக்கம் இருந்தபடியால் பள்ளிக்குச் செல்வது அச்சம் ஊட்டவில்லை. கூடவே என் அகவை தெரு 'பசங்க' பள்ளிக்கு செல்லத் தொடங்கியதால் உற்சாகமாவே சென்றேன். இன்னும் நினைவு இருக்கிறது முதல் வகுப்பு அரிச்சுவடி, பாட நூல் அட்டையில் மயில், உள்ளே குரங்கும் குல்லா வியாபாரியும், கரடி கதை (கரடி துறத்த இறந்ததாக நடித்து தப்பிக்கும் ஒருகதை). அ, ஆ, இ எழுதும் போது இ - போட முடியாமல் கொஞ்சம் திணறுவேன். இ யை சுழிக்க தொடங்கி எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் இ சுழிப்பில் முடிவை ஒரு மூன்று சுற்றாவது சுற்றுவிடுவேன், சுழிப்பை சரியாக நிறுத்தப் பழக ஒரு திங்கள் பிடித்தது. முதல் வகுப்பிற்கு ஆசிரியைதான். கொஞ்சம் கண்டிப்பானவர், ஐந்தாம் வகுப்பு வரை இருபால் வகுப்பு (கோ-எஜுகேசன் ) தான், ஆசிரியையின் பெயர் கொஞ்சம் ஆழ்ந்து நினைத்தால் வந்துவிடும், தற்போதைக்கு நினைவு இல்லை. ஆனால் முகம் இன்னும் நினைவில் இருக்கிறது.
இரண்டாம் வகுப்பு : நேசம்மா டீச்சர், பெந்தகோஸ் கிறித்துவர் மிகவும் அன்பானவர், சனிக்கிழமைகளில் சமய வகுப்புகளுக்கு அழைப்பார், நாங்களும் கூடவே சேர்ந்து 'ஏசு என்னை இரட்சிப்பார்' என்று பாடிவிட்டு கொடுக்கும் திண்பண்டங்களைத் தின்று வருவோம். தவறு எதும் செய்ய வில்லை, பசங்க தவறுதலாக எதோ போட்டுக் கொடுக்க டீச்சர் பிரம்பால் அடிக்க, எனக்கு கடும் சினம், பிரம்பை பிடிங்கி எறிந்தேன். அப்பறம் ? உங்க அம்மாவை கூட்டிவந்தால் தான் பள்ளிக்கு வரமுடியும் என்று டீச்சர் சொல்ல, அதுக்கெல்லாம் அப்ப அச்சமே இல்லை, கூட்டி வந்தேன்.
மூன்றாம் வகுப்பு : ஆசிரியை தான், பெயர் நினைவு இல்லை, அவருடைய மகள் அக்காவுடன் படித்ததால் 'நேவிஸ் அம்மா டீச்சர்' என்று அக்கா சொல்வது நினைவில் இருக்கு. டீச்சரின் கணவர் கொடுமைக்காரர், அவர் டீச்சரை தாறுமாறாக அடித்ததால் டீச்சருக்கு காது சரியாக கேட்காது. பசங்க பேசிக் கொண்டு இருந்தாலும் அமைதியாக இருப்பார், நாங்கள் படித்து முடித்த பிறகு காது சரியாக கேட்காததால் ஒன்றாம் வகுப்புக்கு மற்றிவிட்டு ஒன்றாம் வகுப்பு டீச்சரை மூன்றாம் வகுப்புக்கு மாற்றினார்கள். கூட படித்த செல்வம் என்கிற மாணவனை கண்டிப்பு என்ற பெயரில் அவனுடைய பெற்றோர்கள் சூடு போட்டு அனுப்பி இருந்தார்கள். அப்படியும் பெற்றோர்கள் இருப்பார்களா ? இப்பவும் நினைத்தால் நடு முதுகு சில்லிடுகிறது.
நான்காம் வகுப்பு : ஆசிரியர் ; இப்போது கடைத்தெருவில் பழக்கடை வைத்திருக்கிறார். கண்டிப்பானவர், அப்போது வரும் இந்திப்படங்களில் நாயகர் வைத்திருக்கும் முடி அலங்காரத்தை இவரும் செய்திருப்ப்பார். மாணவர்களைவிட மாணவிகளுக்கு மதிப்பெண் மிகுதியாகப் போடுகிறார் என்கிற கடுப்பு எனக்கு இருக்கும், நான் தான் மதிப்பெண் நிறைய வாங்குவேன். வேண்டுமென்றே இறுதியாக குறைத்துப் போட்டிருப்பார், அடித்து திருத்தியது நன்றாக தெரியும். ஸ்கூட்டரில் தான் வருவார். பேரு 'ஹரி தாஸ்'. பத்து ஆண்டுக்கு முன்பு ஹரி தாஸ் ரிடையரான ஆன பிறகு அவர் தனது விவசாய நிலத்தை விற்க, நாங்க தான் வாங்கினோம். இப்ப கூட அவரது பழக்கடை வழியாகச் சென்றால் பார்த்துப் பேச பயம் தான். மூன்றாம் வகுப்பில் ஆங்கில எழுத்துக்கள் அறிமுகம் ஆகி இருந்தாலும், நான்காம் வகுப்பில் பாடமாக படிக்கத் தொடங்கியது, நினைவுக்கு இருக்கிறது. ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் முன்பு ஒரு பாடத்தின் தலைப்பை நானாகவே எழுத்துக் கூட்டி 'Vilupuram Junction' என்ற ஆங்கிலச் சொல்லை சரியாக 'விழுப்புரம் ஜெங்சன்' என முதன் முறையாக படித்துக் காட்டி உடன் படிக்கும் மாணவர்களிடம் 'ஹீரோ' ஆனேன்.
ஐந்தாம் வகுப்பு : ஆசிரியர் பேரு சுப்ரமணியம், அவரு ஐயரு என்பது அப்போது தெரியாது. நல்ல மனுசன், எப்போதும் மூக்கை நோண்டிக் கொண்டிருப்பதால், அவருக்கு 'மூக்கு நோண்டி சார்' என்பது பட்டப்பெயர். 'சார் உங்களை மூக்கு நோண்டி' என்று சொன்னான் என்று கூடப் படிக்கும் மாணவர்களை மாட்டிவிடுவதும், மாட்டிக் கொண்டு முட்டிப் போட்டதெல்லாம் ஐந்தாம் வகுப்பி நடந்தேறியது. தேர்வெல்லாம் மரத்தடியில் தான், கொய்யாப் பழம், நாவல் பழம் கொண்டுவந்து தருபவர்களுக்கு நான் எழுதியதைக் காட்டுவேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தான் எங்கள் ஊரில் புயல் அடித்தது, ஒரு மாதம் பள்ளிக்கட்டிடத்தில் மேல் கூரை இல்லை, எங்களுக்கு படிப்பும் இல்லை. ஐந்தாம் வகுப்பு வரை நான் தான் வகுப்பின் முதல் மாணவன்.
கூடப் படித்த மாணவிகள் பற்றி எதுவுமே சொல்லவில்லை ? அவங்களெல்லாம் புள்ளக் குட்டிப் பெத்து இருப்பாங்க, சிலருக்கு பேரன் பேத்தியே பிறந்திருக்கும். நீதிபதி ஒருவரின் மகள் பெயர் ஜெயந்தி, வட்டாச்சியர் ஒருவரின் மகள் பெயர் ஹேமா, துணை கண்காணிப்பாளர் ஒருவரின் மகள் பேரு திலகா..... இதில் திலகா வை தக்காளிப்பழம் என்று கிண்டல் செய்ய, அது அழுது கொண்டு ஆசிரியரிடம் முறையிட அடிக்கடி எங்களுக்கு அடிவிழும். ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. அந்த பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை தான் இருந்தது. பள்ளி இடைவேளைகளில் திறந்த வெளிக்குச் சென்று பாத்தி கட்டி ஒண்ணுக்கு அடிப்பது போன்ற விளையாட்டுகளும், யாரு ரொம்ப தொலைவில் ஒண்ணுக்கு அடிப்பது போன்ற போட்டிகளும் நடைபெறும். கெட்ட கெட்ட வார்த்தைகளெல்லாம் அப்ப தான் கற்றுக் கொண்டு, வாய்தவறி சொல்லிவிட்டு பெற்றோர்களிடம் முதுகு வீங்க வாங்குவது...இன்னும் எத்தனையோ சாகசங்கள் எழுதி மாளாது.
தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்கும் மூவர்,
Starjan(நிலா அது வானத்து மேல!)
திகிழ்மிளிர் (என்றும் அன்புடன்)
விஷ்ணு (சில நேரம்)
விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும் !
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
34 கருத்துகள்:
அண்ணே.,
என்னா ஸ்பீடுண்ணே.
படிச்சிட்டி அப்புறம் வார்றேன்.
ஸ்கூலுக்கு போயிருக்கேன்கிறத வரலாற்றில் பதிச்சிட்டீங்க... :)
தொடர் பதிவை ஆரம்பிச்சிட்டீங்களா.. நடக்கட்டும்..
// ஸ்வாமி ஓம்கார் said...
ஸ்கூலுக்கு போயிருக்கேன்கிறத வரலாற்றில் பதிச்சிட்டீங்க... :)
தொடர் பதிவை ஆரம்பிச்சிட்டீங்களா.. நடக்கட்டும்..
//
ஸ்வாமி,
வரலாறு முக்கியம் !
//அப்பாவி முரு said...
அண்ணே.,
என்னா ஸ்பீடுண்ணே.
படிச்சிட்டி அப்புறம் வார்றேன்.
//
அது சரி, நான் பாட்டுக்கு செவனேன்னு இருந்தேன். இப்ப தட்டச்சுட்டு விரலெல்லாம் வலிக்குது.
மறுபடியும் தொடரா?
நல்ல பதிவு!
மலரும் நினைவுகள்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்! தொடரா இது!?
:-))))
ஆவ்...இன்னிக்கு முரு ஆரம்பிச்சது..அதுக்குள்ளவே தொடராயிடுச்சா...மெகா சீரியல் தொல்லையை விட இது பெரிய தொல்லையே...ஆவ்
பாத்தி கட்டி.... செம காமெடியா இருக்கு.
அண்ணே, அடுத்து எழுதுறவர்கிட்ட சொல்லி நம்ம டொன் லீ யைக் கோர்த்து விடுங்கண்ணா.
ரொம்பத்தான் சலிச்சுக்கிறாரு லீ
/தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்கும் மூவர்,//
படம் அருமை!
கோவி.க அண்ணே பழச கிளறாதிங்கண்ணே. நான் அழுதுருவேன்.
ரொம்ப அழகான பதிவு. வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்
நம் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத ஒரு அனுபவம் என்றால் அது நம் பள்ளிநாட்கள்தான். கல்லூரிக்காலங்கள் கூட நம் நினைவில் நிலைப்பதில்லை. அது ஒரு கிடைக்கப்பெறா பொற்காலம்.
இப்போது நினைத்துப்பார்த்தாலும் ஒரு பெரு மூச்சை தவிர வேரொன்றும் செய்ய முடிவதில்லை.
//கூடப் படித்த மாணவிகள் பற்றி எதுவுமே சொல்லவில்லை ? அவங்களெல்லாம் புள்ளக் குட்டிப் பெத்து இருப்பாங்க, சிலருக்கு பேரன் பேத்தியே பிறந்திருக்கும்.//
கிடைத்த தகவல்களின் படி கோவியாருக்கு ஐம்பத்தி ஐந்து வயது என்று நம்பதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன...
//நாமக்கல் சிபி said...
மறுபடியும் தொடரா?
//
நீங்கள் தொட(ர்) நடுங்கி !!!
:)
// ஜோதிபாரதி said...
நல்ல பதிவு!
மலரும் நினைவுகள்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்! தொடரா இது!?
//
தொடரா ? தொடறா(து)?தெரியலையப்ப்பா !
:)
//T.V.Radhakrishnan said...
:-))))
//
இப்பவே டீச்சர் பேரெல்லாம் ரோசிச்சி வையுங்க. :)
//’டொன்’ லீ said...
ஆவ்...இன்னிக்கு முரு ஆரம்பிச்சது..அதுக்குள்ளவே தொடராயிடுச்சா...மெகா சீரியல் தொல்லையை விட இது பெரிய தொல்லையே...ஆவ்
//
சிக்குவீர்.....இருங்கோ!
//வடுவூர் குமார் said...
பாத்தி கட்டி.... செம காமெடியா இருக்கு.
//
சின்ன கால்வாய் போல் தரையை வெட்டிவிட்டு... ஆறு ஓடவைப்பது...இப்பவும் பசுமையாக நினைவில் இருக்கு !
:)
//நாமக்கல் சிபி said...
/தொடரைத் தொடர நான் விரும்பி அழைக்கும் மூவர்,//
படம் அருமை!
//
மூவர் படம் எங்கே ? நான் 'இருவர்' படம் தான் பார்த்திருக்கிறேன்.
//கோ.கண்ணன் said...
கோவி.க அண்ணே பழச கிளறாதிங்கண்ணே. நான் அழுதுருவேன்.
6:51 PM, June 19, 2009
//
வருகைக்கு மிக்க நன்றி கண்ணன்.
//கவிதை காதலன் said...
ரொம்ப அழகான பதிவு. வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்
//
மிக்க நன்றி !
//பாலாஜி said...
நம் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத ஒரு அனுபவம் என்றால் அது நம் பள்ளிநாட்கள்தான். கல்லூரிக்காலங்கள் கூட நம் நினைவில் நிலைப்பதில்லை. அது ஒரு கிடைக்கப்பெறா பொற்காலம்.
7:33 PM, June 19, 2009//
கல்லூரியில் தான் கவனமெல்லாம் பெண்கள் பக்கம் திரும்பிடுமே !
:) அது பருவகாலம் !
// பாலாஜி said...
இப்போது நினைத்துப்பார்த்தாலும் ஒரு பெரு மூச்சை தவிர வேரொன்றும் செய்ய முடிவதில்லை.
//
நினைத்துப் பார்க்க பசுமையான நினைவுகள் இருப்பதும் கூட நாம் ஓரளவு கொடுப்பினை உள்ளவர் என்றும் கொள்ளலாம் அல்லவா ?
:)
மீ த 25
இதோ வந்துட்டேன் .....
என்னை இந்த தொடருக்கு அழைத்து அந்த பொற்காலத்துக்கு அழைத்து சென்று விட்டீர்கள்
அடுத்த தொடரா......ம்ம்ம்ம் நடக்கட்டும்
sirantha pathivu
தங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றிங்க
கண்டிப்பாக எழுதுகின்றேன்.
ஆனால் நேரம் ஆகும் அவ்வளவு தான்
அன்புடன்
திகழ்
குத்துங்க எசமான் குத்துங்க ...
இந்த வாத்தியருங்களே இப்படித்தான் பொம்பள பிள்ளைங்களுக்கு தான் மார்க் அதிகமா போடுவங்க
நன்றி கோவி. கண்ணன் சார். எழுதிருவோம் சார். நம்ம வண்டவாழத்தை தண்டவாளத்தில் ஏத்தலாமுன்னு பாக்குறீங்க.
//விஷ்ணு. said...
நன்றி கோவி. கண்ணன் சார். எழுதிருவோம் சார். நம்ம வண்டவாழத்தை தண்டவாளத்தில் ஏத்தலாமுன்னு பாக்குறீங்க.
//
விஷ்ணு, ஏற்புக்கு நன்றி !
:)
நீங்கள் கிழக்கே போகும் இரயிலா ?
கருத்துரையிடுக