பின்பற்றுபவர்கள்

10 ஜூன், 2009

கலவை !

சென்ற திங்கள் (8/வெள்ளி/2009) பதிவானந்தமயி துளசி அம்மா சிங்கைக்கு திடீர் விஜயம் புரிந்தார். தம்பதி சகிதமாக கோவியார் குடும்பத்துக்கு மட்டும் தனிப்பட்ட காட்சி தந்தார்.

அதுவும் பெருமாள் கோவிலில் துளசி என்ன பொருத்தமான இடம் !!! அங்கே சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன வீணை இசை, கருநாடக இசையில் வைணவ தமிழ்பாடல்கள், சதிராட்டம் (பரதம்) நடந்தது. 5 - 6 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கைப் பெருமாள் கோவிலுக்கு துளசி அம்மாவின் அழைப்பின் பேரில் சென்றுவந்தேன்.
துளசி அம்மா ஜிகேவை இழந்து உடைந்து போய் இருக்கிறார். சும்மா நாமெல்லாம் ஒரு விலங்கு (பூனை) மீது இவ்வளவு பாசமாக இருக்க முடியுமான்னு நினைக்கிறோம். ஒரு உயிருடன் பாசத்துடன் பழகிவிட்டால் அந்த உயிர் மனுசனாலும், விலங்கானலும் ஒண்ணுதான். உடல் அமைப்பு தானே வேறுபடுகிறது. துளசி அம்மாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்டேன். ஆறுதல் சொல்ல சொற்கள் இல்லை. ஆனால் சோகங்கள் பகிர்ந்து கொண்டால் பாதியாகும் என்பது ஆன்றோர் வாக்கு. போகும் இடங்களுக்கு இப்போதும் ஜிகேவுடன் தான் செல்கிறார். ஆமாம் 'கிரிமேசன் செய்து அஸ்தி வாங்கி என்னுடனே எடுத்துச் செல்கிறேன்' என்றார். :((



விடைபெறும் முன் கோவில் எதிரே ஒரு ஆந்திரா சைவ உணவகத்தில் துளசி அம்மாவின் கருணையால் உண்டு வந்தோம், அங்கே சுவற்றில் இருந்த சித்தி புத்தி விநாயகரின் திருமணக் கோலம். 'இதப் பாருங்க பிள்ளையாருக்கு கல்யாணம் ஆகி இருக்கு' என்று காட்டினார். அன்று இரவு சமையல் வேலையில் இருந்து மனைவி தப்பினார். துளசி அம்மாவின் அடுத்த விஜயம் சென்னை. துளசி அம்மா இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றதால், பக்தர்கள் ஏமாந்துவிடக் கூடாதே என்பதற்காக, அறிவதற்கரிய மந்திரத்தை அறிந்துவந்த இராமானுஜர் கோபுரம் ஏறி பொதுமக்களுக்கு அறிவித்தது போல் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் தகவல், எனவே ரகசியம் காக்க வேண்டுகிறேன். :)

*****

எச்1என்1 பன்றிக்காய்சல் வைரஸ் வெகு விரைவாக பரவி வருகிறது "ராகெட்டை தேடிக்கிட்டு மூக்குக்கு அடியில் வந்துட்டான்" விக்ரம் படத்தில் சுகிர்தராஜ சத்தியராஜ் பேசும் சுஜாதாவின் பேச்சுரை. அதுபோல் எச்1என்1 சிங்கை வரை வந்துவிட்டது. வெகுவிரைவாக பரவும் இந்த தொற்று நோய் குறித்து உலக நல நிலையம் (WHO) பெரிய அளவில் கவலை தெரிவித்து வருகிறது. சிங்கையில் நலிவடைந்தோர், தொற்றியோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது. உலக அளவில் 25 ஆயிரத்திற்கும் மிகுதியானோருக்கு பரவி இருக்கிறது. 150க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். நோய்க்கு தடுப்பு கண்டுபிடிக்காவிடில் அணு ஆயுதத்தின் தேவை இல்லாமலேயே எல்லோரும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவுதான்.


*****

அண்மையில் பார்த்த திரைப்படங்களில் 'பசங்க' மிகவும் நன்றாக இருந்தது, அஞ்சலிக் கதையில் அஞ்சலி மற்றும் மேல்தட்டு சிறுவர்கள், காதல் ஜோடி என கமர்சியல் இருந்தது. இது அஞ்சலி இல்லாமல் முழுக்க முழுக்க கிராமத்து சிறுவர்களின் பள்ளிக் குறும்புகள் நிறைந்த படம். வில்லச் சிறுவன் நடிப்பு அட்டகாசம். சிறுவர்களின் குறும்புத்தனங்களில் முகம் சுளிக்காதவற்றை படமாக்கி இருக்கிறார்கள். யதார்த்தம் என்றப் பெயரில் பள்ளிப்பசங்க சிகெரெட் குடிப்பதையெல்லாம் காட்டுகிறேன் என்று காட்டி இருந்தால் ரசிக்க முடியாமல் போய் இருக்கும். பசங்க இயக்குனருக்கும், பசங்களுக்கும், அவங்க பெற்றோர்களாக நடித்தவர்களுக்கும், அந்த காதல் ஜோடிகளுக்கும் பாராட்டுகள்.

*****

ஈழத்தமிழர் இன்னல் குறித்து எங்கோ யாருடைய பதிவிலோ படித்த பொன் மொழி ஒன்று

'கண்ணெதிரே நடக்கும் கொடுரங்களை கண்டும் காணோதர் மன நிலை பிறழ்ந்தோர். அவர்கள் ஒன்று மனநோயாளியாக இருக்க வேண்டும் அல்லது தன் நலம் ஓங்கியவராக இருக்க வேண்டும். சிந்திக்க தெரியாதவர்கள் மனநோயாளி என்றால் மறுப்பவர்களும் மனநோயாளிதானே ?'

*****

ஒருவர் : அந்த சாமியாருக்கு செல்வாக்கு எப்படி ?

மற்றொருவர் : அதான் பாக்குறிங்களே, கையில செல்போன் வச்சிருக்கிறார், அவரு பேரே 'செல்வாக்கு சாமியார்' தான். செல்போன் வழியாகத்தான் வாக்கு சொல்லுவாராம்.

- இது ஸ்வாமி ஓம்கார் குறித்த ஜோக் அல்ல :)

17 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

இவரும் ஆரம்பிச்சுட்டாரு. அவியல் மாதிரி...

பழைய பஞ்சாங்கம டேஸ்ட் இல்லை. ;)

இத்தகைய பதிவுக்கு “கலவை” என பெயர்வைத்ததில் இருக்கும் உள்குத்தை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்....!

மற்றபடி வெளிடப்புக்கும் கடைசி ஜோக்குக்கும் சம்பந்தமில்லை. :)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

துளசியம்மா சிங்கை வந்தாங்களா?

பெருமாள் கோவில் புளி சோறு உண்ணவில்லையா?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

மீ த பர்ஸ்டு போச்சே
சாமியார் வெற்றி பெற்றுட்டாரே!?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
இவரும் ஆரம்பிச்சுட்டாரு. அவியல் மாதிரி...

பழைய பஞ்சாங்கம டேஸ்ட் இல்லை. ;)

இத்தகைய பதிவுக்கு “கலவை” என பெயர்வைத்ததில் இருக்கும் உள்குத்தை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்....!

மற்றபடி வெளிடப்புக்கும் கடைசி ஜோக்குக்கும் சம்பந்தமில்லை. :)
//

ஸ்வாமி கலவை ஏற்கனவே தொடங்கியது தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பெருமாள் கோவில் புளி சோறு உண்ணவில்லையா?

11:27 AM, June 10, 2009
//
ஜோதிபாரதி, அதெல்லாம் சனிக்கிழமைதான் கிடைக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோதிபாரதி said...
மீ த பர்ஸ்டு போச்சே
சாமியார் வெற்றி பெற்றுட்டாரே!?
//

சாமியாருக்கு உரையாடியில் இணைப்பைக் கொடுத்தேன், அதனால் முந்திவிட்டார், நீங்க தமிழ்மணம் வழியாக வந்திங்க. இப்ப அவருதான் பிள்ளையார். அம்மையப்பனை சுற்றிவந்து பழத்தைப் பெற்றுக் கொண்டார்.
:)

சென்ஷி சொன்னது…

எல்லாம் ஓக்கே. ஆனா சின்ன நெருடல், அந்த திரைப்படத்தின் சிறுவனின் கதாபாத்திரத்திற்கு வில்லன் என்ற பட்டப்பெயர் அவசியமா??

கோவி.கண்ணன் சொன்னது…

//சென்ஷி said...
எல்லாம் ஓக்கே. ஆனா சின்ன நெருடல், அந்த திரைப்படத்தின் சிறுவனின் கதாபாத்திரத்திற்கு வில்லன் என்ற பட்டப்பெயர் அவசியமா??
//

ஆனால் படத்துல அந்த பையனுக்கு கொடுத்து இருக்கும் வசனமெல்லாம் அந்தவகைதான், குறிப்பாக
'அவன் வருவானாடா ?' ங்கிற வசனம், பழிவாங்க திட்டமிடுவது இப்படி எல்லாம் பையனை வில்லன் பில்டப்போடு தான் காட்டுவாங்க. அதனால் அப்படி குறிப்பிடேன்.

வேடிக்கை மனிதன் சொன்னது…

//ஒருவர் : அந்த சாமியாருக்கு செல்வாக்கு எப்படி ?

மற்றொருவர் : அதான் பாக்குறிங்களே, கையில செல்போன் வச்சிருக்கிறார், அவரு பேரே 'செல்வாக்கு சாமியார்' தான். செல்போன் வழியாகத்தான் வாக்கு சொல்லுவாராம்.

- இது ஸ்வாமி ஓம்கார் குறித்த ஜோக் அல்ல :)//

பின் குறிப்பு போடாமல் இருந்தால் அப்படித்தான் நினைத்திருப்பேன், ஆனால் பின் குறிப்பை போட்டு விட்டு........

ஓம்காரை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்ட முயற்சிக்கிறீர்கள்.
பலே பலே

நையாண்டி நைனா சொன்னது…

நல்ல கலவை.

லோல்ல்லோ... லோல்ல்லோ... லோல்ல்லோ.... லோல்ல்லோ....

இதுக்கு பேரு கொலவை

கிரி சொன்னது…

கலவை ... வாழ்த்துக்கள்

மணிகண்டன் சொன்னது…

கலவை கலக்கல்.

கோவி.கண்ணன் சொன்னது…

// வேடிக்கை மனிதன் said...
பின் குறிப்பு போடாமல் இருந்தால் அப்படித்தான் நினைத்திருப்பேன், ஆனால் பின் குறிப்பை போட்டு விட்டு........

ஓம்காரை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்ட முயற்சிக்கிறீர்கள்.
பலே பலே
//

அவரை கிள்ளிவிட முடியுமா ? மந்திரம் தந்திரம் எந்திரம் தெரிஞ்சு வச்சிருக்கிறார். அப்பறம் நமக்கு போட்டுவிடுவார் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
நல்ல கலவை.

லோல்ல்லோ... லோல்ல்லோ... லோல்ல்லோ.... லோல்ல்லோ....

இதுக்கு பேரு கொலவை
//

பொங்கப்பானை எல்லாம் எங்கே ? உங்களுக்கு "பானை" இருக்கா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
கலவை ... வாழ்த்துக்கள்

2:03 PM, June 10, 2009
//
நன்றி கிரி !

// மணிகண்டன் said...
கலவை கலக்கல்.
//

நன்றி மணி !

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//5 - 6 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கைப் பெருமாள் கோவிலுக்கு துளசி அம்மாவின் அழைப்பின் பேரில் சென்றுவந்தேன்//

நான் வரும் போது, என்னையும் இங்கே கூட்டிக்கிட்டு போறீங்க! சொல்லிட்டேன்! :)

//ஒரு உயிருடன் பாசத்துடன் பழகிவிட்டால் அந்த உயிர் மனுசனாலும், விலங்கானலும் ஒண்ணுதான். உடல் அமைப்பு தானே வேறுபடுகிறது//

உள்ளம் கோயில்!
ஊன் உடம்பு ஆலயம்!

எதுவானாலும் பாசம் காட்டிய உயிர், உயிர் தானே-ண்ணா!
உங்க மொழியில் சொல்லணும்-ன்னா, மனிதன், விலங்கு, பறவை என்பதெல்லாம் உடல் மட்டுமே வேறு! ஆத்மா என்பது பொது!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//துளசி அம்மா இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றதால், பக்தர்கள் ஏமாந்துவிடக் கூடாதே என்பதற்காக,//

:)

//அறிவதற்கரிய மந்திரத்தை அறிந்துவந்த இராமானுஜர் கோபுரம் ஏறி பொதுமக்களுக்கு அறிவித்தது போல்//

கோவி = இராமானுசர்
காலம் என்னும் பதிவு = கோபுரம்
அப்படின்னு சொல்ல வரீங்களா-ண்ணே? EKI! :)))

//தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் தகவல், எனவே ரகசியம் காக்க வேண்டுகிறேன். :)//

நல்லா காக்கறாங்கப்பா ரகசியத்தை! :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்