பின்பற்றுபவர்கள்

10 ஜூன், 2009

ஆங்கில அகரமுதலியில் 10 லட்சம் சொற்கள் !

புதுடில்லி: ஆங்கில சொற்கள் 10 லட்சத்தை தொடப்போகின்றன. பத்து லட்சமாவது சொல்லுக்கு கடும் போட்டா போட்டி நிலவுகிறது. இதில் ஒன்று, ஆஸ்கர் விருதை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெற்றுத்தந்த "ஜெய் ஹோ' என்ற சொல்.

ஆங்கில சொற்களை ஏற்றுக் கொண்டு, புழக்கத்தில் விடும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள "குளோபல் லேங்குவேஜ் மானிட்டர்' என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு நிபுணர்கள் இதில் உள்ளனர். பல்வேறு நாடுகளில் வெளியாகும் நூல்கள், பாடல்கள், கவிதைகள், இணையம், வலைப்பதிவுகள் போன்றவற்றில் வெளியாகும் புதுப்புது சொற்களை இந்த அமைப்பில் உள்ள நிபுணர்கள் ஆராய்ந்து ஏற்றுக்கொள்வர்.

இந்த வகையில், ஆங்கில சொற்கள் 10 லட்சத்தை தொட ஆயத்தம் விட்டது. இன்று பத்து லட்சமாவது சொல்லை தேர்வு செய்ய நிபுணர் குழு கூடுகிறது. பத்து லட்சமாவது சொல்லாக இடம்பெறும் போட்டியில் மொத்தம் 73 சொற்கள் சேர்ந்துள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து, இந்த சொற்கள் அனுப்பப் பட்டுள்ளன. இதில், இந்தியாவில் இருந்தும் சில சொற்கள் அனுப்பப்பட்டுள்ளன. பெண்கள் அணியும் உள்ளாடை "கட்டீஸ்' என்று சொல்லப்படுகிறது. இந்த சொல்லும் தேர்வுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
ஆஸ்கர் விருதுகளை குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் பெயர் மற்றும் அதில் இடம் பெறும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "ஜெய் ஹோ' என்ற பாடலில் அந்த சொல்லையும், பத்து லட்சமாவது சொல் ஆக்கும் போட்டியில் இடம்பெறுகின்றன. அமெரிக்காவில், டெக்சாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்றிரவு 8.50க்கு (உள்ளூர் நேரம் காலை 10.20)பத்து லட்சமாவது ஆங்கில சொல் அறிவிக்கப்படுகிறது.

ஆஸ்கர் விருது பெற்றதும், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் "ஜெய் ஹோ' என்ற பாடல் வரவேற்பு பெற்றது.. "ஜெய் ஹோ' என்றால் என்ன என்று வெப்சைட்களில் பல லட்சம் பேர் தேடினர். பல செய்தி இதழ்கள், நூல்கள், படங்கள் என்று கோடிக் கணக்கில் இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. இப்படி பல கோடி பேரிடை யே வரவேற்பு பெற்ற ஒரு சொல்லை, வழக்கமாக சிறப்பிப்பதுண்டு; ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கில சொல்லாக அறிவிக்கப்படுவதுண்டு. ஆங்கிலத்துக்கு தொடர்பே இல்லாத சொல்லாக இருந்தாலும், வேற்று மொழி சொற்கள், ஆங்கிலத்தில் இடம்பெறுவதுண்டு. பிரெஞ்சு உட்பட பல்வேறு நாடுகளின் மொழி சொற்களும் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில், "ஜெய் ஹோ' பத்து லட்சமாவது சொல்லாகும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

தகவல் : தினமலர்
(தினமலர் திணித்திருந்த வேற்று மொழிச் சொற்களை மொழி மாற்றி போட்டு இருக்கிறேன்)



அதில்,
அறிவு சீவி ஒருவரின் கேள்வி :
Posted on ஜூன் 10,2009,09:49 IST
It is good to see the English language is increasing its word strength, Similarly Tamil Language should accept such new words from other well spoken languages all over the world, Will our tamil language '' arvalargal'' consider and accept If the word falls within Tamil ''Ilakkanam''?
by R Ganesh,India

எனது பதில்,

மொழி அறிவு அற்றோர், அல்லது அரைகுறைகள், அல்லது அறிவுரை என்ற பெயரில், அல்லது உண்மையிலேயே ஆர்வம் காரணமாக, நல்லது என்று நினைத்தோ இவ்வாறு கேள்வி எழுப்புவதுண்டு.

தொழில் அல்லது விற்பனைத் தொடர்பில் பயன்படும் இணைப்பு மொழிகளில் பிறமொழிகள் சேர்க்கப்படுவதும், நுழைவதும் அதைப் பயன்படுத்துவதும் உலகவழக்கு. ஆங்கிலம் இயற்கை மொழிகிடையாது, உருவாக்கப்பட்ட மொழி, இன்னும் முழுமையடையாத மொழி எனவே அது பிறமொழிச் சொற்களை கடன்வாங்குவது, ஏற்றுக் கொள்வது இயல்பானது. ஆனால் "தாய் மொழிகளின்" தேவை இனக்குழுக்குள் உரையாடவும் அடிப்படை கல்வி அறிவை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது, அதற்குமேல் பயன்படுத்தத் தேவையோ அதற்காக சொற்களை கடன்வாங்க வேண்டும் என்கிற நெருக்குதலோ "தாய் மொழி"களுக்கு ஏற்படுவதே கிடையாது. எனவே ஆங்கிலத்தை ஒப்பிட்டு எந்த ஒரு மொழியும் சொற்களை ஏற்றுக் கொள்ளுமானால் அது மற்றொரு ஆங்கிலமாக மாறிவிடும், அதனுடைய இயற்கைத் தன்மையில் இருக்காது. ஒரு மொழியில் புழங்கும் சொற்களில் 50 விழுக்காட்டு சொற்கள் பிறமொழி என்றால் அந்த மொழி புதுப் பெயரை எடுத்துக் கொள்ளும், திராவிட மொழிக்குடும்பத்தின் தோற்றமும் தன்மையும் அது தான்.

மொழிகளை அந்தந்த இனக்குழுக்கள் சரிவர பராமரிக்காவிடில் மொழிகள் திரிந்து கிளைக்கும் அல்லது அழிந்து போகும் வாய்ப்புள்ளது. வட இந்திய மொழிகளாக வடமொழி பலமொழிகளாக திரிந்தும் மூல மொழியான வடமொழி எந்த ஒரு சிறுநகரத்திலும் பேசப்படும் மொழியாகவோ, புதிய இலக்கியங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் மொழியாகவோ தற்போதைக்கு இல்லை. அதில் உள்ள பழைய நூல்களுக்காகவும், இறைவழிபாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டு இருப்பதால் அதனை தேவைக்கு என்ற அளவில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வளர்ச்சி இன்றி நின்றுபோன மொழிகள் என்ற வகையில் தான் வடமொழியும் இருக்கும், சிலர் வெளிப்படையாகவே இறந்த மொழி என்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. வடமொழிகளுக்கும், சில திராவிட மொழிகளுக்குமான புதிய சொற்களின் வேர்சொற்களுக்காக வடமொழியின் தேவை என்றும் உண்டு, அதனால் வடமொழி தொடர்புள்ள மொழிகள் வடமொழியை வாழவைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தமிழ்மொழி பிறமொழி சொற்களை ஏற்றுக் கொண்டால் ஆங்கிலம் போல் தழைக்கும் என்பது மொழி அறிவற்றோரின் கற்பனை வாதம். ஏனெனில் இனமொழியாக அடையாளப்படுத்தப்படும் எந்த ஒரு மொழியும் பொது மொழியாவது கடினம். தமிழ் இனமொழி, தமிழர்களுக்கு தாய்மொழி என்ற அளவில் தான் என்றும் இருக்கும், அதனை இனம் தாண்டி பேச வைக்கமுடியும் என்பதற்க்கான தேவை இருந்ததில்லை. தமிழர்கள் உலகம் முழுவதையும் ஆளுகைக்கு கொண்டுவந்தால் தமிழ்மொழி பிற இனத்தாலும் பேசப்படும், ஏற்கப்படும் அல்லது திணிக்கப்படும் என்ற வகைக்குள் வரும், ஆனால் இந்தியாவில் ஒரு அங்கமாக இருக்கும் தமிழன் உலகத்தை ஆளுகைக்கு உட்படுத்துவதெல்லாம் நடக்கின்ற செயலா ? நாம் உலகை ஆளவோ, உலகத்தினரை தமிழ் பேசவைக்கவோ முயலவேண்டாம். எனவே வேற்று மொழிச் சொற்களின் ஏற்பு தமிழுக்கு சிறப்பையோ, வள்ர்ச்சியையோ ஏற்படுத்தாது. முடிந்த அளவில் பிறமொழிச் சொற்களை தமிழில் மொழிமாற்றிப் பயன்படுத்தும் அளவுக்கு நம்மிடையே வேர்சொற்கள் (Word Root / Orgin or the Word) நம்மொழியில் உண்டு. வேர் சொல் இல்லாத மொழிகள் தான் பிறமொழிச் சொற்களை கடன் வாங்கும், நமக்கு அதன் தேவை இல்லை. இணையம், வலைப்பக்கம், வலைப்பதிவு என ஆயிரம் ஆயிரம் சொற்களை நம்மால் அமைக்க முடிந்திருக்கிறது, அதை பயன்படுத்து வழக்கில் கொண்டுவர முடிந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்க.

16 கருத்துகள்:

ஆயிரத்தில் ஒருவன் சொன்னது…

ஆங்கிலத்தில் 10 லட்சமாவது சொல்லாக "web 2.0" தெரிவுசெய்யப்பட்டுள்ளது
http://www.msnbc.msn.com/id/31200218/

Samuel | சாமுவேல் சொன்னது…

web 2.0 - 1000000 th word
jai ho -999 999 th word
slum dog - 999 997 th word.

..since they have already added 'obama' as an english word. in my view this is a crap.

ஆங்கிலத்தில் எழுதியதுக்கு மன்னிக்கவும் !

வேடிக்கை மனிதன் சொன்னது…

//அறிவு சீவி ஒருவரின் கேள்வி :
Posted on ஜூன் 10,2009,09:49 IST
It is good to see the English language is increasing its word strength, Similarly Tamil Language should accept such new words from other well spoken languages all over the world, Will our tamil language '' arvalargal'' consider and accept If the word falls within Tamil ''Ilakkanam''?
by R Ganesh,India//

நாம் ஆங்கிலத்தோடு ஒப்பிட்டுபிறமொழிச் சொற்களை தமிழிலே கலப்போமானால், முகவரியை இழந்த நாடோடிகளைப் போல தமிழ் ஆகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை

மேலும், நம் இனம் இருநூறு ஆண்டுகள் அடிமை பட்டுக்கிடந்ததில், ஆங்கிலேயன் எது செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்ற மனநிலை நம் இரத்தத்தில் ஊரிப்போய்விட்டது. அதனாலே இப்படிப்பட்ட எண்ணம் தோண்றுவதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

மணிகண்டன் சொன்னது…

இனிமே எப்படி தமிழ்ல புதுசா பிறமொழி சொற்களை கலக்க முடியும் ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//"ஆங்கில அகரமுதலியில் 10 லட்சம் சொற்கள் !"//


தமிழில் வார்த்தைகள் நூறு லட்சம்
நம்ம கறுப்பு பட்டி சொல்லி இருக்கு!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...

//"ஆங்கில அகரமுதலியில் 10 லட்சம் சொற்கள் !"//


தமிழில் வார்த்தைகள் நூறு லட்சம்
நம்ம கறுப்பு பட்டி சொல்லி இருக்கு!//

அவ்வளவு இருந்துமா சொற்களுக்கு பதிலாக "வார்த்தை" பயன்படுத்துகிறீர்கள் ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// மணிகண்டன் said...

இனிமே எப்படி தமிழ்ல புதுசா பிறமொழி சொற்களை கலக்க முடியும் ?//

"கட்" பண்ணி, பண்ணித் தமிழ் பேசுவதால் கலக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மேலும், நம் இனம் இருநூறு ஆண்டுகள் அடிமை பட்டுக்கிடந்ததில், ஆங்கிலேயன் எது செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்ற மனநிலை நம் இரத்தத்தில் ஊரிப்போய்விட்டது. அதனாலே இப்படிப்பட்ட எண்ணம் தோண்றுவதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.//

அதென்னமோ சரிதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Sammy said...

web 2.0 - 1000000 th word
jai ho -999 999 th word
slum dog - 999 997 th word.

..since they have already added 'obama' as an english word. in my view this is a crap.

ஆங்கிலத்தில் எழுதியதுக்கு மன்னிக்கவும் !//

தகவலுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// san santhosh said...

ஆங்கிலத்தில் 10 லட்சமாவது சொல்லாக "web 2.0" தெரிவுசெய்யப்பட்டுள்ளது
http://www.msnbc.msn.com/id/31200218///

web 2.0 ! ஓ இதெல்லாம் புது சொல்லா ?

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//இணையம், வலைப்பக்கம், வலைப்பதிவு என ஆயிரம் ஆயிரம் சொற்களை நம்மால் அமைக்க முடிந்திருக்கிறது, அதை பயன்படுத்து வழக்கில் கொண்டுவர முடிந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்க.//
ஏற்றுகொள்கின்றேன்...

ஆயிரத்தில் ஒருவன் சொன்னது…

web 2.0 இனது விக்கியின் விளக்கத்தை பெற கீழே உள்ள முகவரிக்கு செல்லவும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88_2.0

மேலும் ஆங்கிலத்தில் விளக்கத்தை பெற அதே தளத்தில் உள்ள "ஏனைய மொழிகள்" இன் கீழே 'english' ஐ சொடுக்கவும்....

நட்புடன் ஜமால் சொன்னது…

web 2.0 ! ஓ இதெல்லாம் புது சொல்லா ?\\

அதானே!

உடன்பிறப்பு சொன்னது…

தலைவா, தமிழிசு ஓட்டு பெட்டியை உங்கள் பதிவில் இணையுங்க. வாசிச்சு முடிச்சவுடன் ஓட்டு போடுவதற்கு தேடினால் கிடைக்கவில்லை. மறுபடி தமிழிசுக்கு போய் தான் ஓட்டு பதிவு செய்தேன்

கோகுலன் சொன்னது…

//jai ho -999 999 th word//

இதும் நல்லாத்தான் இருக்கு.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//கோவி.கண்ணன் said...
//ஜோதிபாரதி said...

//"ஆங்கில அகரமுதலியில் 10 லட்சம் சொற்கள் !"//


தமிழில் வார்த்தைகள் நூறு லட்சம்
நம்ம கறுப்பு பட்டி சொல்லி இருக்கு!//

அவ்வளவு இருந்துமா சொற்களுக்கு பதிலாக "வார்த்தை" பயன்படுத்துகிறீர்கள் ?
:)//

நானா பயன் படுத்துறேன்.
நம்ம கருப்பட்டி பயன்படுத்தியதை அப்படியே எடுத்துப் போட்டேன்!
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்