பின்பற்றுபவர்கள்

4 பிப்ரவரி, 2009

பெசன்ட்நகர் பெத்த பெருமாள் !

சீனப்புத்தாண்டு (கட்டாய) ஒரு வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் சென்று வந்ததால் சரிவர பதிவு கடை போட முடியாமல் போயிற்று. அதைவிட நேரம் பயனுள்ள வகையில் கழிந்ததை நினைத்தால் நினைவோடையில் மகிழ்வுப் பூக்களாக நெருங்கிய சில பதிவுலக நண்பர்களின்
முகம் வந்து போகிறது. செய்திகளைப் படிப்பதற்குக் கூட நேரமின்மையாகிப் போனலும், முத்துக்குமார், நாகேஷ் இறப்புகள் ஊடகங்களைத் தாண்டிய செய்திகளாக காதில் விழுந்தன.

*****

திரு இராதா கிருஷ்ணன் ஐயாவுக்கும் எனக்குமான நட்புகள் வெறும் பின்னூட்டங்கள் வழியாகவும், ஒரு சில குறும் மின் அஞ்சலாக தொடர்ந்தது, முன்பே ஒரு மின் அஞ்சலில், 'சென்னை வந்தால் காஞ்சனா அம்மா கையால் எங்கள் வீட்டில் ஒருவேளை உணவுக்கு வந்துவிடுங்கள்' என்று சொல்லி இருந்தார். தமிழ் மேடை நாடகங்களை நடத்தி வந்தவர், நடந்திக் கொண்டு இருப்பவர் என்று அவரைப் பற்றி அறிந்ததால், அவரை ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு இருந்தது, இந்த முறை சென்னை சென்றால் பார்த்துவரவேண்டும் என்றே எண்ணி இருந்தேன். தேதியைச் சொல்லியதும் 'வாகனம் அனுப்பி வைக்கவா, விமான நிலையத்துக்கே வந்துவிடவா?' என்று கேட்டார், 'அதெல்லாம் வேண்டாம்...நான் சென்னை வந்ததும் போன் போடுகிறேன்...உங்க(ள்) வீட்டில் வந்து உங்களைப் பார்க்கிறேன்' என்று சொல்லி இருந்தேன்.

சென்னை சென்ற அன்று அவரது தொலைபேசி எண் தனியே எழுதி வைக்க மறந்துவிட்டேன். அன்றைய அலைச்சலில் மாலை வரை கணனி பக்கம் போக முடியவில்லை, அதன் பிறகு மாலை நான்கு மணி வாக்கில் இணைய மையத்திற்குச் சென்று மின் அஞ்சலில் அவரது தொலைபேசி எண்ணை தேடி எடுத்து 'நாளை மதியம் வருகிறேன்' என்று சொன்னேன். 'கோவி....உங்களிடமிருந்து போன் வரும் வரும்னு இவர் காலையில் இருந்தே எதிர்பார்த்து இருந்தார்...நீங்களே போன் பண்ணுகிறேன் என்று சொல்லி இருந்தீர்களாம், அதனால் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று காத்திருந்ததர்' என்று காஞ்சனா அம்மா தொலைபேசியில் தெரிவித்தார்.

மறுநாளும் கொஞ்சம் அலைச்சல், முந்தைய நாள் அரக்கோணம் வரை சென்று நண்பர் ஒருவரின் இரட்டை குழந்தைகளைப் பார்த்துவிட்டு, அங்கேயே தங்கிவிட்டு, அந்த குழந்தைகளுக்கு மறுநாள் தடுப்பூசி போடவேண்டி இருந்ததால், நண்பர் இல்லத்தினருடன் சேர்ந்து சென்னைக்கு வர நன்பகல் மணி 2 ஆகிவிட்டது. பின்பு அவரின் மகிழுந்திலேயே, பெசண்ட் நகர் சென்று சற்று திணறி முகவரியை கேட்டறிந்து இராதா கிருஷ்ணன் ஐயா இல்லத்தின் அருகில் மகிழுந்தை நிறுத்திவிட்டு இறங்க, எதிர்கொண்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். இராதாகிருஷ்ணன் ஐயா - காஞ்சனா அம்மா இருவரும் சேர்ந்து வரவேற்புக் கொடுத்தனர். சிறிது நேரம் பேசிய பிறகு சுமார் மூன்று மணி அளவில் உணவருந்த அழைத்தார்கள், 'இன்னுமா சாப்பிடாமல் இருக்கிங்க ?' கேட்டேன். 'கோவிக்காக சில மணி நேர உண்ணாவிரதம் ..தப்பு இல்லையே ?' என்றார். நெகிழ்வாக இருந்தது. அவர்கள் பயன்படுத்தும் தட்டுகளிலேயே உணவை பரிமாரினார்கள். மிகச் சிலரே தங்கள் பயன்படுத்தும் தட்டில் உறவினர் அல்லாதவர்களுக்கும் உணவை பரிமாறுவது வழக்கம்.
பெரும்பாலும் மூன்றாம் மனிதர்கள் என்ன சாதி என்று அறியாததால் பலர் வாழை இலை அல்லது பைபர் தட்டுகளில் தான் உணவு பரிமாறுவார்கள். இராதாகிருஷ்ணன் ஐயாவின் இல்லத்தினர் மனிதர்களை உயர்வாக மதிப்பவர்கள் என்று புரிந்தது. மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

இனிப்பு தேங்காய் போளியில் ஆரம்பித்து அறுசுவை உணவு, திகட்டும் அளவுக்கு உணவு. பாயாசத்தில் முடிந்தது. காஞ்சனா அம்மாவின் கைவண்ணம் பாராட்டியே ஆகவேண்டும். காஞ்சனா அம்மா வலைப்பதிவிலும் சமையல் குறிப்புகள் எழுதி வருவதால் அவரது சமையல் சுவை பற்றி சொல்லத் தேவை இல்லை. எதையும் மீதம் வைக்காமல் தின்றேன். என்னோடு வந்த நண்பருக்கும் அன்று நல்ல விருந்து, 'நானும் பதிவு எழுதினால், இதெல்லாம் கிடைக்கும்...' என்று என்னிடம் தெரிவித்தார்.

பிறகு ஐயாவும், அம்மாவும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். அடிக்கடி அமெரிக்கா சென்று ஒரே மகளின் குழந்தைகளைப் பார்த்துவருவதாக தெரிவித்தார்கள். அதைத் தவிர நாடகங்களை இன்னும் நடத்திவருவதாகச் சொன்னார். அன்று மாலை கிழக்கு பதிப்பகத்தில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு இருந்ததால் சுமார் மாலை 4 மணி அளவில் அவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டு கிளம்ப, என் மகளுக்கு நல்லதொரு நினைவு பரிசினை வழங்கினார். 'மாலை பதிவர் சந்திப்புக்கு வந்துவிடுங்கள்' என்று அழைப்பு விடுத்தேன். 'நீங்க சொல்லிட்டிங்கல்ல...வந்துவிடுகிறேன்' என்றார். எனக்கு அவர் இவ்வளவு மதிப்பு கொடுப்பது எனக்கே கூச்சமாக இருந்தது. வங்கியில் பெரிய பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்கள். நாடகத்துறையில் பிரபலங்களிடம் நல்ல நட்பு வைத்திருப்பவர். வலைப்பதிவு வழியாக மட்டுமே அறிந்த என்மேல் இந்த அளவுக்கு அன்பு செலுத்துவதற்கு எப்படி நன்றி சொல்வது என்றே திகைத்தேன். அடுத்த வாரம் திங்கள் கிழமை மீண்டும் சென்னை வருவேன், அப்பொழுது மீண்டும் சந்திப்போம்' என்று விடைபெற்றேன். பதிவர் சந்திப்புக்கு மாலை 6 மணி அளவில் வந்தார்.

*******

நேற்று நள்ளிரவு 12:45 மணிக்கு சிங்கை செல்வதற்கு முடிவு செய்திருந்த நாள். திங்கள் கிழமையே சென்னை வந்துவிட்டேன். 'கோவி......வர்றிங்களா.....பார்ப்போம்' என்று காலையில் தொலைபேசி அழைத்தார். சிங்கை புறப்படும் முன் முதல் நாள் பெசன்ட் நகர் கடற்கரையில் அவருடன் அமர்ந்து பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன். எனவே அவர் அழைத்ததும், 'நாளை வருகிறேன் ஐயா' என்று சொல்லிவிட்டேன். அதே போல் நேற்று மாலை தொலைபேசியில் தெரிவித்துவிட்டு, நேற்று மாலை 5:30 மணி அளவில் அதே நண்பருடன் அவர் குறிப்பிட்ட (பெசன்ட் நகர் காரைக்குடி செட்டிநாடு) இடத்திற்கு சென்ற போது நின்று கொண்டு இருந்தார். அவரையும் அழைத்துக் கொண்டு எலியட்ஸ் பீச் எனப்படும் பெசன்ட் நகர் கடற்கரையை அடைந்தோம்.
அங்கே மகிழுந்தை நிறுத்திவிட்டு, மூவருமாக நடக்க, எனது நண்பர் துப்பாக்கி சுட ஆவல் கொண்டார். 10க்கு 8 சரியாக சுட்டார். 'முல்லைத் தீவுக்குப் போனால், தமிழர்களுக்கு உதவியாக இருக்கும்' என்றேன். அதன் பிறகு கடலுக்கு சற்று அருகில் மணலில் அமர்ந்தோம். சூரியன் செம்மஞ்சள் நிறத்தில் மறைந்து கொண்டு இருந்தது.
பேசிக் கொண்டு இருந்ததில் எழுந்து செல்லவே மனதில்லை, அன்று நான் புறப்படவேண்டும் என்பதால் 6:45 க்கு அவ்விடத்தை விட்டு மாதா கோவில் அருகில் இருக்கும் முருகன் இட்லி கடைக்கு அழைத்துச் சென்றார். இட்லி, வடை, தோசை, காஃபி என சொல்லி சாப்பிட்டோம், உணவுக்கான கட்டணத்தை வம்படியாக அவரே செலுத்தினார். பிறகு நெகிழ்ச்சியான ஒரு அணைப்புடன் அவரிடமிருந்து விடைபெற்றேன்.

*****

நான் யார், அவர் யார்...சொந்தமில்லை, சாதிக் காரர்களும் இல்லை, ஒத்த வயதுமில்லை, நெடுநாள் நட்புமில்லை, எழுத்தின் வழியாக அறிந்து கொண்டு, எங்களுக்குள் ஏற்பட்ட உணர்வு பூர்வமான அன்பு ....'என்னை வா...போ...ன்னு ஒருமையிலேயே கூப்பிடுங்க...சித்தப்பான்'னு தொண்டையில் நின்ற சொல்லை சொல்லாமலேயே வந்துவிட்டேன் என்பதை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.

பிகு: மற்றவர்களைப் பற்றி அடுத்து அடுத்து...வரும்.

48 கருத்துகள்:

RAHAWAJ சொன்னது…

அந்த உண்ணத வார்த்தையை சொல்லியிருந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் தானே கோவி

முரளிகண்ணன் சொன்னது…

\\'என்னை வா...போ...ன்னு ஒருமையிலேயே கூப்பிடுங்க...சித்தப்பான்'னு \\

உண்மை

தமிழ் சொன்னது…

மகிழ்ச்சியாக இருக்கிறது

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

சிறப்பான + நெகிழ்ச்சியான + பாசமான + சுவையான பயண கட்டுரை.

கார்க்கிபவா சொன்னது…

//நல்லிரவு//

??????????????

ஆளவந்தான் சொன்னது…

//
அதைவிட நேரம் பயனுள்ள வகையில் கழிந்ததை நினைத்தால் நினைவோடையில் மகிழ்வுப் பூக்களாக நெருங்கிய சில பதிவுலக நண்பர்களின்
முகம் வந்து போகிறது.
//
கேட்க ரொம்ப சந்தோசம்...அதே சந்தோசம் படிக்கும் போதும் இருந்தது.

நல்ல பதிவு.. :)

கோவி.கண்ணன் சொன்னது…

// RAHAWAJ said...
அந்த உண்ணத வார்த்தையை சொல்லியிருந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் தானே கோவி
//

:) உணர்ச்சி வசப்பட்டால் சீன் ஆகிடும் இல்லையா, அதனால் அப்படியே வந்துவிட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
\\'என்னை வா...போ...ன்னு ஒருமையிலேயே கூப்பிடுங்க...சித்தப்பான்'னு \\

உண்மை
//

முரளிகண்ணன், நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//திகழ்மிளிர் said...
மகிழ்ச்சியாக இருக்கிறது
//

திகழ்மிளிர்,
நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// ஸ்வாமி ஓம்கார் said...
சிறப்பான + நெகிழ்ச்சியான + பாசமான + சுவையான பயண கட்டுரை.
//

பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி ஸ்வாமி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கார்க்கி said...
//நல்லிரவு//

??????????????
//

கார்க்கி,
நள்ளிரவு ( நடு இரவு ) என்று இருக்க வேண்டும். கவனக்குறைவு ஆகிவிட்டது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆளவந்தான் said...
//
அதைவிட நேரம் பயனுள்ள வகையில் கழிந்ததை நினைத்தால் நினைவோடையில் மகிழ்வுப் பூக்களாக நெருங்கிய சில பதிவுலக நண்பர்களின்
முகம் வந்து போகிறது.
//
கேட்க ரொம்ப சந்தோசம்...அதே சந்தோசம் படிக்கும் போதும் இருந்தது.

நல்ல பதிவு.. :)
//

ஆளவந்தான் சார்,

நன்றி !

வெற்றி சொன்னது…

ஒரு நல்ல பதிவு.
திரு.இராகி அவ்ர்களை கண் முன்னே நிறுத்தி விட்டீர்.
உங்களுக்கு தெரிந்த ஒருவர் எங்களுக்கும் நண்பராகி விட்டார்.
இராகியும்,காஞ்சனா அம்மாவும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//அவர்கள் பயன்படுத்தும் தட்டுகளிலேயே உணவை பரிமாரினார்கள். மிகச் சிலரே தங்கள் பயன்படுத்தும் தட்டில் உறவினர் அல்லாதவர்களுக்கும் உணவை பரிமாறுவது வழக்கம். [Photo]
பெரும்பாலும் மூன்றாம் மனிதர்கள் என்ன சாதி என்று அறியாததால் பலர் வாழை இலை அல்லது பைபர் தட்டுகளில் தான் உணவு பரிமாறுவார்கள்//

ஏன்? நேரே தரையில் கூடப் போடலாம். மனிதரில்லை எனும் முடிவுக்கு வந்த பின்...
எதிலும் போடலாம்.
இன்னுமா??? நமது சமுதாயம் இப்படி??என ஆச்சரியப்பட வைத்தது.
ராதாகிருஸ்ணன் அண்ணர் குடும்பத்தில் உயர் மனப்பாங்குக்கு நன்றி!
இவர்கள் பெருந்தன்மை-பரந்த மனப்பான்மை அனைவருக்கும் வரவேண்டும்.
தங்கள் பயணம் மிக மகிழ்வுடன் அமைந்துள்ளது.

Unknown சொன்னது…

//நான் யார், அவர் யார்...சொந்தமில்லை, சாதிக்காரனும் இல்லை, ஒத்த வயதுமில்லை, நெடுநாள் நட்புமில்லை, எழுத்தின் வழியாக அறிந்து கொண்டு எங்களுக்குள் ஏற்பட்ட உணர்வு பூர்வமான அன்பு//
உணர்வு பூர்வமான அருமையான நட்பு ஜிகே. வாழ்க.
இராதாகிருஷ்ணண் காஞ்சனா தம்பதியினர் போற்றுதலுக்கு உரியவர்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

இந்த பதிவிற்கு..என்ன பின்னூட்டம் இடுவது..எனத் தெரியாது..ஒரு இக்கட்டான சூழலில் வைத்து விட்டீர்கள் கோவி.,
சற்று..மிகைப்படுத்தப்பட்ட பதிவு.
அது சரி ஊருக்கு சௌகரியமாக போய் சேர்ந்தீர்களா?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே!, திரு இராதாகிருஷ்ணன் ஐயாவை சந்தித்து வந்ததில் மிக்க மகிழ்ச்சி!
அவருடைய பதிவுகளை அடிக்கடி நானும் படிப்பதுண்டு.
ஐயா அவர்கள், தமிழர் பண்பாட்டின் தகை சான்ற பெருந்தகையாக, விருந்தோம்பலில் விஞ்சி நின்றதாக அறிந்து பெருமிதம் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தேனியார் said...
ஒரு நல்ல பதிவு.
திரு.இராகி அவ்ர்களை கண் முன்னே நிறுத்தி விட்டீர்.
உங்களுக்கு தெரிந்த ஒருவர் எங்களுக்கும் நண்பராகி விட்டார்.
இராகியும்,காஞ்சனா அம்மாவும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
//

பாராட்டுக்கு நன்றி, தோனியார் அவர்களே.

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//அவர்கள் பயன்படுத்தும் தட்டுகளிலேயே உணவை பரிமாரினார்கள். மிகச் சிலரே தங்கள் பயன்படுத்தும் தட்டில் உறவினர் அல்லாதவர்களுக்கும் உணவை பரிமாறுவது வழக்கம். [Photo]
பெரும்பாலும் மூன்றாம் மனிதர்கள் என்ன சாதி என்று அறியாததால் பலர் வாழை இலை அல்லது பைபர் தட்டுகளில் தான் உணவு பரிமாறுவார்கள்//

ஏன்? நேரே தரையில் கூடப் போடலாம். மனிதரில்லை எனும் முடிவுக்கு வந்த பின்...
எதிலும் போடலாம்.
இன்னுமா??? நமது சமுதாயம் இப்படி??என ஆச்சரியப்பட வைத்தது.
ராதாகிருஸ்ணன் அண்ணர் குடும்பத்தில் உயர் மனப்பாங்குக்கு நன்றி!
இவர்கள் பெருந்தன்மை-பரந்த மனப்பான்மை அனைவருக்கும் வரவேண்டும்.
தங்கள் பயணம் மிக மகிழ்வுடன் அமைந்துள்ளது.
//

பாராட்டுக்கு நன்றி, யோகன் ஐயா !

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
இந்த பதிவிற்கு..என்ன பின்னூட்டம் இடுவது..எனத் தெரியாது..ஒரு இக்கட்டான சூழலில் வைத்து விட்டீர்கள் கோவி.,
சற்று..மிகைப்படுத்தப்பட்ட பதிவு.
அது சரி ஊருக்கு சௌகரியமாக போய் சேர்ந்தீர்களா?
//

ஐயா,
நீங்கள் என்னுடன் இவ்வளவு அன்பாக பழகுவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நானும் வெறென்ன சொல்ல ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
கோவியாரே!, திரு இராதாகிருஷ்ணன் ஐயாவை சந்தித்து வந்ததில் மிக்க மகிழ்ச்சி!
அவருடைய பதிவுகளை அடிக்கடி நானும் படிப்பதுண்டு.
ஐயா அவர்கள், தமிழர் பண்பாட்டின் தகை சான்ற பெருந்தகையாக, விருந்தோம்பலில் விஞ்சி நின்றதாக அறிந்து பெருமிதம் கொள்கிறேன்.
//

ஜோதிபாரதி, TVR ஐயா பழகுபதற்கு இனிய பண்பாளர் என்று உணர்ந்தேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
உணர்வு பூர்வமான அருமையான நட்பு ஜிகே. வாழ்க.
இராதாகிருஷ்ணண் காஞ்சனா தம்பதியினர் போற்றுதலுக்கு உரியவர்கள்.
//

சுல்தான் ஐயா,

நாமும் நெடுநாள் பழகிவருகிறோம், ஆனால் நேரில் சந்திக்கும் வாய்ப்பு தான் இன்னும் கிட்டவில்லை. அமீரகமும் சிங்கையும் அருகருகே இல்லையே. :)

Radhakrishnan சொன்னது…

மிகவும் நெகிழ்ச்சியான பதிவு. நன்றி.

நசரேயன் சொன்னது…

ஐயா ஊருக்கு வந்த உடனே உங்க நாடகத்திலே நடிக்க எனக்கு வாய்ப்பு வேணும், இப்பவோ நான் துண்டு போட்டு வச்சுகிறேன்

TBCD சொன்னது…

ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டீங்களோ..

ஃஃஃஃஃ

அவங்க எல்லாம் ரொம்ப சுத்தம்..என்று மேட்டிமை பேசியது ஒரு காலம்.

அவர்கள் எம்புட்டு சுத்தம் பார்க்கிறவங்க..ஆனாலும் ஓரே தட்டு என்று சொல்வது இந்தக் காலமோ..

ரசிக்கும்படியா இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டீங்களோ..//

உன்னிடமும் கூட அப்படித்தானே !
:)

//ஃஃஃஃஃ

அவங்க எல்லாம் ரொம்ப சுத்தம்..என்று மேட்டிமை பேசியது ஒரு காலம்.

அவர்கள் எம்புட்டு சுத்தம் பார்க்கிறவங்க..ஆனாலும் ஓரே தட்டு என்று சொல்வது இந்தக் காலமோ..//

அவங்க...எவுங்க என்ற ஆராய்ச்சியே இல்லை. அப்பறம் ஏன் ? நான் அந்த பொருளில் சொல்லவில்லை. மூன்றாம் மனிதர்களுக்கு இலையில் சோறுபோடுவது எல்லா வகுப்புக்காரர்களிடமும் பரவலாக நடைமுறையில் உள்ளவையே. வேலைக்காரர்களுக்கு தன் வீட்டு கழிவரையை பயன்படுத்தும் உரிமையைக் கூட எந்த வகுப்புச் சமுகம் கொடுப்பதில்லை என்பதை நினைத்துப் பாருங்கள்.

//
ரசிக்கும்படியா இல்லை.
//

ரசிப்பதற்காக எழுதவில்லை. உண்மையைத்தான் எழுதினேன்.

சின்னப் பையன் சொன்னது…

மகிழ்ச்சியாக இருக்கிறது

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

சிங்கையில் என் மைத்துனர் திருமணத்திற்கு நீங்க வந்த போது இதே உணர்வுதான் எனக்கும் இருந்தது கோவி அண்ணே

ILA (a) இளா சொன்னது…

மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐயாவை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிட்டவில்லை :(

TBCD சொன்னது…

அந்த அவங்க என்பதன் பொருள் அப்படி பார்ப்பவர்கள் என்று வைச்சிக்கலாம்..

தலை வாழையிலைப் போட்டு தடபுடலா விருந்துவைப்பது என்பது தமிழர்களின் பாரம்பரியத்தில் ஒன்று என்று தான் நான் நினைத்தேன்.

ஆனால் அதற்கு இப்படி ஒரு விகாரமான கோணம் யோசித்தது இல்லை.

நீங்க சொன்னதன் தொனி/பொருள் என்னவென்று எதற்கும் ஒரு முறை படிச்சிப் பார்த்துக்கோங்க.

நான் சொன்னதில் அவரை குறை சொல்லவில்லை..கிரமத்தான் மிட்டாய்க்கடைப் பார்த்த மாதிரி நீங்க எழுதியிருக்கீங்க என்று தான் சொல்லுறேன் :))

மணிகண்டன் சொன்னது…

****** நான் சொன்னதில் அவரை குறை சொல்லவில்லை..கிரமத்தான் மிட்டாய்க்கடைப் பார்த்த மாதிரி நீங்க எழுதியிருக்கீங்க என்று தான் சொல்லுறேன்*****

சில சமயம் உணர்ச்சிவசப்படறது தப்பு கிடையாது. அதுவும் தமிழர் பண்பாடு தான் TBCD.

கோவி,

போனமா, நல்லா சாப்பிட்டமான்னு வராம, உங்கள யாருங்க இத எல்லாம் பாக்க சொன்னது ! அதுவும் உங்களோட விளக்கம் சகிக்கல.

வரவங்க நம்ப சாப்பிட்ட தட்டுல சாப்பிடுவாங்காளான்னு தெரியாம கூட சில பேரு இலை போடலாமே !

இலை போட்டு சாப்பாடு போடறது கூட ஒரு மதிப்புக்குரிய பழக்கம் தான !

நீங்க சொல்ல நினைச்சது அவங்க உங்கள குடும்பத்துல ஒருத்தரா நடத்தினாங்க ! அத அப்படியே சொல்ல வேண்டியது தான ! அதுக்கு என்ன வேண்டி கிடக்கு இப்படி ஒரு விளக்கம்.

ராதாகிருஷ்ணன் சார், இனிமே ஊருக்கு வந்தா நிச்சயம் சாப்பிட வந்துடுவோம். ! அமெரிக்கா போகும் போது amsterdam வழியா வாங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

// வெ.இராதாகிருஷ்ணன் said...
மிகவும் நெகிழ்ச்சியான பதிவு. நன்றி.

10:59 PM, February 04, 2009//

மிக்க நன்றி சார்.

கோவி.கண்ணன் சொன்னது…

// நசரேயன் said...
ஐயா ஊருக்கு வந்த உடனே உங்க நாடகத்திலே நடிக்க எனக்கு வாய்ப்பு வேணும், இப்பவோ நான் துண்டு போட்டு வச்சுகிறேன்

11:10 PM, February
//

6 தடவை ஒத்திகை பார்ப்பாராம், பரவாயில்லையா ? அதுக்குள்ளே உங்களுக்கு விடுப்பு முடிந்துவிடும். 'சார் போஸ்ட்' என்று சொல்லும் சிறிய வேடம் பரவாயில்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ச்சின்னப் பையன் said...
மகிழ்ச்சியாக இருக்கிறது//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...
சிங்கையில் என் மைத்துனர் திருமணத்திற்கு நீங்க வந்த போது இதே உணர்வுதான் எனக்கும் இருந்தது கோவி அண்ணே

12:55 AM, February 05, 2009
//

தம்பி,
கட்டி அணைக்கும் போதே தெரிந்தது. இன்னும் கூட விலா எலும்பெல்லாம் வலிக்கிறது :))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA said...
மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐயாவை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிட்டவில்லை :(
//

இளா,
தமிழகம் செல்லும் போது நமக்கு பிடித்தவர்களுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் எல்லாம் கிட்டும்.

துளசி கோபால் சொன்னது…

நாமெல்லாம் வலைப்பதிவர் குடும்பம்தானே கோவியாரே.

அதான் நெடுநாள் பழகுன ஒரு உரிமை & நட்பு வந்துருது.

தேங்காய்ப் போளி பலமோ?

எனக்கும் காஞ்சனா & ராதாகிருஷ்ணன் தம்பதிகளின் ஃபோன் நம்பர் வேணும்:-))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
அந்த அவங்க என்பதன் பொருள் அப்படி பார்ப்பவர்கள் என்று வைச்சிக்கலாம்..//

நீங்கள் அவரைச் சொன்னதாக நானும் பொருள் கொள்ளவில்லை. நான் சொன்னதற்கு மாற்றாக எழுதி இருக்கிறீர்கள் என்றே கொண்டேன்.

//தலை வாழையிலைப் போட்டு தடபுடலா விருந்துவைப்பது என்பது தமிழர்களின் பாரம்பரியத்தில் ஒன்று என்று தான் நான் நினைத்தேன்.//

அதுவேற அது விருந்து, ஆனால் இலை கிடைக்காவிட்டால் சிலர் ரொம்பவே அவஸ்தை பட்டு எப்படியாவது இலைச் சறுகிலாவது போடுவார்கள்.

//ஆனால் அதற்கு இப்படி ஒரு விகாரமான கோணம் யோசித்தது இல்லை.//

எங்காவது யாராவது நடந்து கொள்வதைப் பார்க்க நேரிடும் போது புரியும்.

//நீங்க சொன்னதன் தொனி/பொருள் என்னவென்று எதற்கும் ஒரு முறை படிச்சிப் பார்த்துக்கோங்க.//

நான் அதைப் பாராட்டும் விதமாக மட்டுமே சொன்னேன்.

//நான் சொன்னதில் அவரை குறை சொல்லவில்லை..கிரமத்தான் மிட்டாய்க்கடைப் பார்த்த மாதிரி நீங்க எழுதியிருக்கீங்க என்று தான் சொல்லுறேன் :))
//

யோவ்.......கிராமத்தான் உனக்கு கேவலமாக போச்சா ? உதரணம் கொடுப்பது கூட சறுக்கிவிடும்

தகவலைப் படிச்சமான்னு இருக்கனும் ! :)))

கோவி.கண்ணன் சொன்னது…

// துளசி கோபால் said...
நாமெல்லாம் வலைப்பதிவர் குடும்பம்தானே கோவியாரே.

அதான் நெடுநாள் பழகுன ஒரு உரிமை & நட்பு வந்துருது.

தேங்காய்ப் போளி பலமோ?

எனக்கும் காஞ்சனா & ராதாகிருஷ்ணன் தம்பதிகளின் ஃபோன் நம்பர் வேணும்:-))))))
//

துளசி அம்மா,

இப்பதான் உங்கள் பின்னூட்டம் வரலையேன்னு நினைத்துக் கொண்டு இருந்தேன். :)

போன் நம்பரா ? மின் அஞ்சலில் அனுப்புகிறேன். சென்னை சென்றால் நல்ல உணவு கண்டிப்பாக அவர்கள் இல்லத்தில் உண்டு. :)

யாம் பெற்ற இன்பம் பெறுக !

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...

கோவி,

போனமா, நல்லா சாப்பிட்டமான்னு வராம, உங்கள யாருங்க இத எல்லாம் பாக்க சொன்னது ! அதுவும் உங்களோட விளக்கம் சகிக்கல. //

மணி சார்,
அதை எல்லோரும் செய்தால் நல்லா இருக்குமே என்பதற்காக குறிப்பிட்டு எழுதினேன்.

//வரவங்க நம்ப சாப்பிட்ட தட்டுல சாப்பிடுவாங்காளான்னு தெரியாம கூட சில பேரு இலை போடலாமே !//

அப்படியெல்லாம் இல்லை, சிலர் சைவம் அசைவத்திற்காக தனித்தனி பாத்திரம் வைத்திருப்பார்கள், மற்றபடி மூன்றாம் மனிதர்களுக்கு அவர்கள் இல்ல வழக்கப்படி தான் செய்வார்கள்.

//இலை போட்டு சாப்பாடு போடறது கூட ஒரு மதிப்புக்குரிய பழக்கம் தான !//

அது வேற. உறவினர் சிலருக்கு தலைவாழை இலையில் போடவில்லை என்றால் கோபம் வந்துவிடும்.

//நீங்க சொல்ல நினைச்சது அவங்க உங்கள குடும்பத்துல ஒருத்தரா நடத்தினாங்க ! அத அப்படியே சொல்ல வேண்டியது தான ! அதுக்கு என்ன வேண்டி கிடக்கு இப்படி ஒரு விளக்கம். //

பாராட்டும் விதமாகச் சொன்னதுக்கு, நீங்களும் டிபிசிடியும். அய்யோ அய்யோ......

//ராதாகிருஷ்ணன் சார், இனிமே ஊருக்கு வந்தா நிச்சயம் சாப்பிட வந்துடுவோம். ! அமெரிக்கா போகும் போது amsterdam வழியா வாங்க !//


டிபன் கேரியரில் சாப்பாடு எடுத்துவந்து கொடுத்துட்டு போகனுமா ?
:)

Mahesh சொன்னது…

நல்வரவு !!
நல் உறவு !!
நல் பகிர்வு !!
நல்வாழ்த்து !!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//நான் சொன்னதில் அவரை குறை சொல்லவில்லை..கிரமத்தான் மிட்டாய்க்கடைப் பார்த்த மாதிரி நீங்க எழுதியிருக்கீங்க என்று தான் சொல்லுறேன் :)) //


இந்தியா/தமிழகம் என்பது பெரும்பகுதி கிராமங்களை உள்ளடக்கிய நாடு, விவசாயம் தான் நமக்கு பிரதான தொழில், இந்த பழமொழி பெரும்பாலான மக்களிடம் நெருடலை ஏற்படுத்தும். மேலும் இப்போதெல்லாம் கிராமங்களில் நிறைய மிட்டாய் கடைகள் இருக்கின்றன.கிராமங்களில் தான் இன்னும் விருந்தோம்பல் போன்ற தமிழர் பண்பாடு தழைத்துக் கிடக்கிறது. பழமொழியை மாற்றிப் பயன்படுத்திச் சிறப்பிக்கலாமே?

TBCD சொன்னது…

வேண்டுமென்றால், இப்படி மாற்றி வைச்சுப்போம்..

கோவியார் "அவங்க" வீட்டு தட்டைப் பார்த்த மாதிரி என்று..

ஃஃஃஃஃஃ

அந்த கிழமொழி/பழமொழி எந்த உள்நோக்கமும் இல்லாமல், கருத்தைச் சுட்டவே சொல்லியது.

ஃஃஃஃஃஃ

கிராம மக்கள் இன்னமும் பெருநகரங்களுக்கு வந்தால் அதிசயமாகப் பார்க்கும் நிலை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கின்றது.

நகரத்தான் கூட வெளிநாடு சென்றால், அங்கேயிருக்கும் கழிவறையயைக் கூட அதிசயமாக பார்க்கும் நிகழ்வுகளும் சாதரணமே.

ஃஃஃஃஃ

எனவே கனம் கோர்ட்டார் அவர்களே.. :P


//
Blogger ஜோதிபாரதி said...

இந்தியா/தமிழகம் என்பது பெரும்பகுதி கிராமங்களை உள்ளடக்கிய நாடு, விவசாயம் தான் நமக்கு பிரதான தொழில், இந்த பழமொழி பெரும்பாலான மக்களிடம் நெருடலை ஏற்படுத்தும். மேலும் இப்போதெல்லாம் கிராமங்களில் நிறைய மிட்டாய் கடைகள் இருக்கின்றன.கிராமங்களில் தான் இன்னும் விருந்தோம்பல் போன்ற தமிழர் பண்பாடு தழைத்துக் கிடக்கிறது. பழமொழியை மாற்றிப் பயன்படுத்திச் சிறப்பிக்கலாமே?
//

மணிகண்டன் சொன்னது…

**** டிபன் கேரியரில் சாப்பாடு எடுத்துவந்து கொடுத்துட்டு போகனுமா ? ****

கரெக்டா கண்டுபுடிச்சீட்டீங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//நகரத்தான் கூட வெளிநாடு சென்றால், அங்கேயிருக்கும் கழிவறையயைக் கூட அதிசயமாக பார்க்கும் நிகழ்வுகளும் சாதரணமே.//

தம்பி ! உன் காலைக் காட்டு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// மணிகண்டன் said...
**** டிபன் கேரியரில் சாப்பாடு எடுத்துவந்து கொடுத்துட்டு போகனுமா ? ****

கரெக்டா கண்டுபுடிச்சீட்டீங்க !
//

அமெரிக்காவில் இந்திய வீட்டு சாப்பாடு கிடைப்பது அம்புட்டு கஷ்டமா ?

மணிகண்டன் சொன்னது…

***** அமெரிக்காவில் இந்திய வீட்டு சாப்பாடு கிடைப்பது அம்புட்டு கஷ்டமா ? ****

அமெரிக்கால இருக்கறவங்கள தான் கேக்கணும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
***** அமெரிக்காவில் இந்திய வீட்டு சாப்பாடு கிடைப்பது அம்புட்டு கஷ்டமா ? ****

அமெரிக்கால இருக்கறவங்கள தான் கேக்கணும் !
//

மணி,
ஆம்ஸ்டர்டாம் இப்ப அமெரிக்காவில் இல்லையா ? இப்ப இடம் மாற்றிவிட்டார்களா ? எனக்கு தகவல் வரலை அதனால தெரியல :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்