பின்பற்றுபவர்கள்

28 பிப்ரவரி, 2008

கடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது...!

"கடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது" என்று எனது நண்பர் திரு ரத்னேஷ் அவர்கள் எனக்கு மின் அஞ்சல் செய்திருந்தார். அவரது சொல் எனது 'காலங்கள்' பக்கத்தில் 2008ல் இந்த ஆண்டிற்காகமட்டும் பலிக்கிறதா என்று பார்க்கிறேன். மனக்கட்டுப்பாடு இருக்கவேண்டும். முயற்சி செய்கிறேன். மற்றபடி இதுதான் கடைசி பதிவு என்று உதார் விடுபவர்கள் சிரிப்பையே வரவழைப்பவர்கள்.

யார் யாரோ சுய அரசியலுக்கு என்னைப் பலிகடாவாக ஆக்கி, போலிக்கு கையாள், அடியாள் இன்னும் எத்தனையோ இட்டுக்கட்டுக்களை அள்ளிவிதைத்துச் சென்றார்கள். யார் யார் எப்படி என்று தெரிந்தாலும் அவற்றையெல்லாம் வெளியில் சொல்வதனால் எந்த பயனும் இல்லை. நான் அவர்களின் அரசியலுக்கு பயன்பட்டு இருக்கிறேன் என்று அவர்கள் நினைத்து இருந்து பயன்பட்டு இருந்ததால் மகிழ்ச்சியே. 'தேளுக்கு கொட்டும் குணமாம், எனக்கு காப்பாற்றும் குணம்' என்றார் ஒருமுனிவர். அந்த அளவுக்கு சரியாக இருந்தேனா என்பது நான் சிறிது உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றியதால் எனக்கே சந்தேகம் இருக்கிறது.

போலியும் நண்பர் மூர்த்தியும் ஒன்று என்று தெரிந்தவர்கள் அவரிடம் நேரிடையாகவே முட்டிக் கொள்ளுங்கள். என்னிடம் முட்டை கொடுக்கவேண்டாம். எனக்கு தேவையற்றதும் கூட. நான் அவருக்கு எங்கேயும் எப்போதும் சான்றிதழ் கொடுக்கவில்லை. எனது சான்றிதழ் தேவையற்றதும் கூட. மற்றபடி வேறு விசயங்கள் எவரும் என்னுடன் உரையாட வந்தால் கண்டிப்பாக பேசுவேன்.

மூர்த்தி / விடாது கருப்பு தொடர்பில் எனக்கு இருவரின் நட்புகள் பாதிக்கப்பட்டது ஒருவர் குழலி, மற்றவர் குமரன். மற்றவர்களுடன் நான் பழகியதில்லை என்பதால் அவர்கள் என்னைப் பற்றி தூற்றியதற்காக எதிர்வினை ஆற்றவில்லை. "கேள்விக் கனைகளை தாக்கு பிடிக்காமல் கருத்து கந்தசாமி தப்பி ஓட்டம்" என்றே எழுதிக் கொண்டு மீண்டும் பதிவுலகில் முகம் காட்ட அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டும். எனது பதிவுகளில் 'மஞ்ச துண்டு ' போடும்... ஜயராமன் என்றே விழித்து அழைக்கும் 'பாலா' கூட அவர்களது அவதூறுகளுக்கு பின்னூட்டம் போடாததும் அவர்களுக்கு அவர்களே பின்னூட்டம் போட்டுக் கொண்டதும் எனக்கு வருத்தமாகவே இருக்கிறது. :) அவருக்கு தொலைபேசி செய்தாவது வரவழையுங்கள். :)


மூவாண்டுகள் பதிவு எழுதியதில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி. குறிப்பாக பதிவர் வீஎஸ்கே ஐயா, மகேந்திரன், டிபிசிடி , ரத்னேஷ், சிவபாலன்,ஜெகதீசன், பாரி அரசு, ஆகியோரை மிகவும் நேசிக்கிறேன். அவர்கள் நான் பதிவெழுதும் 'காலங்களில்' வந்திருக்காவிட்டால் தொடர்ந்து இயங்கி இருப்பேனா என்பதே சந்தேகம். எனது கூகுள் சாட் லிஸ்டில் இருந்து தொடர்ந்து என்னுடன் உரையாடும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி.

தொடர்ந்து எழுதியது மிகுந்த அயர்ச்சியைக் கொடுத்துவிட்டது. மீண்டும் 2009ல் எழுதவருவேன். அதற்குள் நல்ல மாற்றங்கள் எனக்குள் ஏற்பட்டு இருக்கும். மற்றபடி பதிவெழுதும் எனது அனைத்து நண்பர்களின் இடுகைகளையும் படித்து நேரமிருந்தால் பின்னூட்டுவேன்.

"எழுதுபவனுக்கும் படிப்பவனுக்குமான தொடர்பு எழுத்தைத் தாண்டி நெருங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் எழுத்து நம்முடைய அன்றாட உணவைத் தீர்மானிக்கிற விஷயம் இல்லையே" - ரத்னேஷ்.

ரத்னேஷ், மீண்டும் எழுதவந்தால் நினைவு வைத்துக் கொள்கிறேன்.

"ஏப்ரல் 14 -தமிழர்களின் முட்டாள் தினம்" என்று ஏப்ரல் 14ல் பதிவு எழுதவேண்டும் என்ற ஒரே ஒரு ஆசைதான் இருந்தது. அது வராது.

எழுத்தாளர் சுஜாதவின் எழுத்துக்களில் விமர்சனங்கள் இருந்தாலும், அவரும் தமிழில் இலக்கிய உலகில் ஆற்றிய சாதனைக்கு என்று நினைவு கூறத்தக்கவர். அவருக்கு இதய அஞ்சலிகள்.

தலைப்பிற்கு மறைமுகமாக உதவிய தன் ஆற்றல் மிகு எழுத்தால் என்னைக் கவர்ந்த நண்பர் ரத்னேஷ் ! 2007ல் எனக்கு கிடைத்த சிறந்த நண்பர்களில் அவர் முதன்மை, ரத்னேஷ் அவர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்லது பதிவு நண்பர்களே. அழுகாச்சி பின்னூட்டங்கள் எதுவும் இங்கு தேவையற்றது !!!


அன்புடன்,

கோவி.கண்ணன்

27 பிப்ரவரி, 2008

விஎஸ்கேவுக்கும் எனக்கும் போலி விவகாரத்தில் முட்டல் ? டோண்டு ராகவனின் புரட்டல் குமட்டல் !

திரு டோண்டு ராகவனுக்கு எழுப்பிய கேள்விகளுக்கு, அவரே அவ்வாறு எழுதச் சொல்லவில்லை என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். எழுதியவர் யார் என்று என்ன எழுதினார் என்ன என்பதும் எல்லோரும் அறிந்தது தான், அவரது மகளை வைத்து போலி ஆட்டத்தில் கலந்து கொண்டு ஆடியவருக்கு மன்னிப்பு வழங்கிட்டேன் என்று சொல்லிவிட்டார். என்மீதான அவர் விமர்சனங்களை புறம்தள்ளுகிறேன். அதற்கு மேல் மதிப்பு கொடுத்து பதில் சொல்லத் எனக்கு தேவை இல்லை. அது பற்றி என்மீது மதிப்பு எவரும் கேட்டால் பதில் சொல்லத் தயங்க மாட்டேன்.

திரு டோண்டு ராகவன் போகிற போக்கில் எனது நண்பர் வீஎஸ்கே ஐயாவை தேவை இன்று தனது இட்டுக்கட்டுதலுக்கு இழுத்து இருக்கிறார். நட்பில் தொடர்புள்ளவர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அதைச் செய்து கொண்டிருப்பது தான் அந்த கூட்டம். மூர்த்தி மட்டும் தான் நட்பை கேவலப்படுத்தினார் என்று சொல்லிக் கொள்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள். இதற்கு மேல் அந்த பிறவிகள் பிரச்சனை எழுப்பும் போது எனது சாட்டில் உள்ளவற்றை ஸ்கீர்ன் சாட் எடுத்துப் போட்டே காட்டுவேன். அதில் எனக்கு மூர்த்திதான் போலி என்பது தெரியுமா ? இவர்களில் யார் யார் விடாது கருப்புடன் என்ன பேசினார்கள் என்பதெல்லாம் உண்டு. என் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்காக திரும்பவும் சொல்கிறேன். மூர்த்தி போலியா ? போலி மூர்த்தியா என்பது எனக்கு தெரியாது. விடாது கருப்புவிற்கு எழுதிய பாராட்டில் விடாது கருப்பு சார்பில் மூர்த்திதான் பேசினார் என்று சொல்லி இருக்கிறேன். மூர்த்தியை எங்கே எப்போது சந்தித்திருக்கிறேன். அதன் பிறகு தொடர்பு இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறேன். என்னைப் பற்றி ஊகமாக சாதிபற்றி எழுதியதைப் பற்றி எனக்கு வருத்தம் இருந்தாலும் விடாது கருப்பு கலைப்பு என்றதால் பாராட்டியே உண்மையையே எழுதினேன்.

இதில் கடுப்படைந்தோர் இதுகாறும் மூர்த்திதான் போலி என்ற கட்டமைப்பை வைத்திருந்தது போலவும் அதனால் அந்த பிம்பம் உடைந்துவிட்டது போலவும் என்மீது காழ்பை உமிழ்கிறார்கள். இவர்கள் யோக்கிதை அம்பலப்பட்டுப் போனதால் என்மீது கற்பனையாக் எதையாவது எழுதிவைக்கிறார்கள். அதில் ஒன்று அமுகவை நான் நடத்துவதாம். அமுக பாஸ்வேர்ட் என்னிடம் இருந்தது உண்மை, மகேந்திரன் இன்னும் சிலரும் சேர்ந்து உருவாகியதாகச் சொல்லி இந்தியா செல்லும் போது கொடுத்துச் சென்றார். அதன் பிறகு எனக்கு வேண்டாம் என்று சொல்லி பாஸ்வேர்டை மாற்றிவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

என்னிடம் இருந்திருந்தால் 'கருத்து கந்தசாமி' என்ற பதிவு மூன்றாவது முறையாக செந்தழல் ரவி எழுதிய போது அதனை அனுமதித்து இருப்பேனா ? அதை அனுமதித்தே இருந்தாலும் அல்லது அதில் என்னைப் பற்றியும் எனது நண்பர்களைப் பற்றியும் இருக்கும் பின்னூட்டங்களை அழிக்காமல் விட்டு இருப்பேனா ?

மூர்த்திக்கு நான் பயப்படுவதாக எனது நண்பர் விஎஸ்கே என்னிடம் சாட்டில் உரையாடிய போது எனக்கு மனவருத்தம் வந்தது உண்மைதான். அதுபற்றி அவருக்கு எழுதிய கடிதங்களை இங்கே இணைக்கிறேன். அந்த கடிதத்தின் பிறகு நான்கு மாதங்கள் வீஎஸ்கே ஐயாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமலே இருந்தேன். பிறகு மறுபடியும் எப்போதும் போலவும் தான் பேசுகிறோம். இந்த கடிதத்தில் மூர்த்தியும் போலியும் ஒரே ஆள் என்பதில் எனக்கு தெளிவு இல்லை என்றே சொல்லி இருக்கிறேன். இது திட்டமிட்டு எழுதிய கடிதம் இல்லை என்பதால், மற்றவற்றை படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

show details 9/17/07

அன்புள்ள விஎஸ்கே ஐயா,

ஒரு ஆத்திக அன்பருக்கு பதவி, படிப்பு, அந்தஸ்து, வயது இவை அனைத்தும் இருந்தாலும் இறைவனுக்கு முன்பு நிற்கும் போது இவை அனைத்திற்கும் எந்த பொருளும் இல்லை. அது போலவே நட்பு என்ற எதையும் எதிர்பார்காத தூய அன்பிற்கும் முன்பும் இவை அனைத்தும் செல்லுபடியாகாது.

DR_சங்கர்_குமார்: அவர் அவன் தனியா தெரிஞ்சுது

10:21 PM பயம் கலந்த மரியாதை புரிந்தது
me: குப்பை
புண்னாக்கு
புடலங்காய்
உங்களிடம் சொன்னதற்கும் என்னை செருப்பால் அடிக்கனும்
DR_சங்கர்_குமார்: இவ்வளவு கோபம் வருவதே அது உண்மை என சொல்லுகிறது


நீங்கள் அவரை போலி என்று நம்புவது உங்கள் கருத்து அதில் எனக்கு எந்த புண்ணாக்கு காழ்ப்பும் கிடையாது. ஆனால் 'பயம் கலந்த மரியாதை' என்று நீங்கள் சொல்ல வருவது எதைக் குறிக்கிறது ? போலி என்பவனின் ஆபாசம் பதிவுலகமே அறிந்தது. அதில் எனக்கு பங்கு இருப்பது போன்ற நீங்கள் நினைப்பதிலிருந்தே நானும் அதில் ஒரு அங்கம் என்ற உங்கள் ஆழ்மன அபத்த நம்பிக்கையின் குரலாக அது ஒலிக்கிறது. மேலோட்டமாக நட்பு என்ற பெயரில் பழகிக் கொண்டே இது போன்ற அபாண்டங்களை சுமத்தியதில் எனக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதுநாள் வரை தாங்கள் இப்படி ஒரு அவநம்பிக்கை வைத்துக் கொண்டு என்னுடன் நீங்கள் நட்பு பாராட்டுவதில் என்ன பயன் இருக்கிறது ? இது போலியான ஒன்று.

அதைவிட 'உண்மையைச் சொல்வதால் உனக்கு கோபம் வருகிறது' என்று தம் இழித்துக் கூறியதற்கு மேலும் சப்பைப் கட்டுவது அதைவிட கேவலம். நீங்கள் என்ன கடவுளா ? என் மனதை அறிந்து கொண்டு அதில் புதையுண்ட உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறீர்களோ ?

நீங்கள் என்னை 'வேசி மகன்' என்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு நான் கோபப்பட்டால் உண்மை சுடுவதால் கோபம் கொள்கிறேன் என்று பொருளா ? அல்லது மவுனமாக சிரித்தால் 'ஆம் நான் வேசி மகன்' தான் என்று ஒப்புக் கொள்கிறேன் என்று பொருளா ? எப்படி பதில் சொன்னாலும் நம்பிக்கை குறித்த உங்கள் கேள்வியே இழிவு படுத்திப் பார்ப்பதுதானே ?

பொதுவில் அவரை குற்றம் சுமத்தியவர்களும் சரி, என்னை அதில் தொடர்பு படுத்தியவர்களும் சரி எனக்கு கருப்புடன் தொடர்பு இருக்கிறது, நலவிரும்பி என்றுதான் சொன்னார்களேயன்றி நான் அவருக்கு அல்லக்கையாக செயல்படுகிறேன் என்றோ, வாசமாக சிக்கிக் கொண்டேன் என்றோ இட்டுக்கட்ட முயற்சிக்கவில்லை. அவர்கள் சொன்னவை அனைத்தும் நானே என்பதிவில் கருப்புடன் தொலைப்பெசி தொடர்ப்பு வைத்திருப்பதை
வெளிப்படையாக சொல்லியதத வைத்துதான்.
என்னைப் பற்றி நன்கு அல்லது ஓரளவுக்கு அறியாதவர்களுக்கே என்மீதான சந்தேகம் என்பது அவரிடம் தொடர்பு கொண்டுள்ளவன் என்ற அளவில் மட்டுமே. அவர்களே அவரை போலி என்று நம்பினாலும் அந்த போலியின் ஆபாச நடவடிக்கையில் எனக்கு தொடர்பு இருப்பதாக ஒருவரும் சொல்லவில்லை. 'பயம் கலந்த' என்ற ஒற்றை சுடுசொல்லில் ஒரு பெரும் குற்றத்தை என்மீது சுமத்தும் அளவுக்கு உங்களிடம் அவநம்பிக்கையாகவோ, போலி வேடமிட்டோ எப்பொழுது நான் நடந்து கொண்டேன் ?

சொன்னதையும் சொல்லிவிட்டு உங்கள் சொற்களை தற்காக்க என் மீதே மறுபழியாக 'உண்மையாக இருப்பதால் தான் கோபம் கொள்கிறேன்' என்று சொல்வது அபத்ததின் உச்சம். இதற்காக நான் மன்னிப்புக் கேட்கச் சொல்லவில்லை. குறைந்த பட்சம் சொன்னது தவறு என்றாவாது சொல்லி இருக்கவேண்டும். நீங்கள் உண்மையானவராக இருந்தாலும் உங்களிடம் நேர்மை இருப்பதில்லை என்பதற்கு இதைவிட என்னால் ஒரு நல்ல உதா'ரணம்' காட்ட முடியுமா ?

நான் பார்பனியத்தை என்பதில் சாடுவதென்பது என்றோ ஒருநாள் அதுபற்றி பேசப்படும் போது மட்டுமே. என்றும் அதே உணர்விலும், உறங்கும் போதும் பார்பனீய காவலாளியாக செயல்படும் தாங்கள் தான் நட்பின் ஊடே அதை அளவுகோலாகக் கொண்டுவருவதைப் பற்றி சுயபரிசோதனைச் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் பார்பனர் அல்லாதவர்களுடன் நல்ல முறையில் பழகுகிறேன் என்பதெல்லாம் பார்பனியத்தைக் கட்டிக் காக்க மட்டுமே பயன்படும் வெளிவேசம்.

எதற்காக இதைச் சொல்கிறேன். போலி என்பவன் பார்பன எதிரி என்று அவனே சொல்லி இருக்கிறான். அவனையும் என்னையும் தொடர்பு படுத்தி நட்பையும் பனையம் வைக்கும் உங்கள் மனநிலையில் மேற்கண்டதை நான் காண்கிறேன். என்பதால் என்கருத்தாக உங்களுக்கு இதைச் சொல்லாமல் இருக்க முடியாது.

இப்படி உடைத்துச் சொல்கிறானே, நம் தகுதியை மறந்துவிட்டு ஒரு இழிபிறவியிடம் நட்பு கொண்டுவிட்டோம் என்று நீங்கள் நினைத்தால் முதல் பத்தியை திரும்பவும் படியுங்கள்.

நீங்கள் சொன்னது தவறு என்று உணராத போது, நாம் பழசை மறந்துவிடுவோம் என்று ஒருவருக்கு ஒருவர் பல் இளிப்பது என்பது நட்பின் ஊடான ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கைக்கு செய்யும் உண்மையான துரோகம். நான் தயாராக இல்லை.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்
Blogger Sites :
http://kaalangkal.blogspot.com
http://govikannan.blogspot.com


கோவி.கண்ணன் to DR_சங்கர்_குமா., விஎஸ்கே
show details 12/10/07 Reply



அன்புள்ள அப்பா,

இந்த இரு சொல் நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்பது பொருள் தராது. கோபம் மைனஸ் என்று மட்டுமே பொருள் கொள்ளலாம். நீங்கள் 'நான் பயப்படுவது' குறித்து உங்கள் பார்வையில் சொன்னது உண்மையோ பொய்யோ.... அது போன்ற கர்பனையில், உள் உணர்வில் நான் பிறரைச் ஒருவேளைச் சொன்னால்.... சொன்னது பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் நானெல்லாம் அதற்கு மன்னிப்பு கேட்பதற்கு தயங்கியதில்லை. நான் உங்களை மன்னிப்பு கேட்கக் கூட சொல்லவில்லை. அப்படி சொல்வது உங்கள் மீதான மதிப்பை நானே குறைத்துவிடுவது போன்றதுதான். அது போல் சிந்திபவனே அல்ல. சொன்னது தவறு என்ற ஒருவார்த்தை ஒரே ஒரு வார்த்தை மட்டுமே எதிர்ப்பார்த்தேன். நீங்கள் என்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பதில்லை... எனக்கும் உணர்வுகள் இருப்பதை ஒப்புக் கொண்டால் போதும் என்று நினைப்பவனே... மனித மனம் உணர்வுகளால் உழல்வதுதானே... அதுவும் நாம் ஒருவரை ஒருவர் புரிந்தவர் என்று எனக்குள் நானாகவே கொண்ட எண்ணம் தான்.

எல்லோரும் சராசரி ஆட்களாகத்தான் இருக்கிறார்கள். இதில் நீங்கள் மட்டும் மாறுபட்டவர் என்று நினைப்பது என் தவறாக கூட இருக்கட்டும்.

எதோ ஒரு காரணத்தில் பெற்றோர்கள் மீது காரணமே இல்லாமல் கோபம் கொள்கிறபிள்ளைகள் தானாகவே சமாதானமாக போகவேண்டும் என்று ஒரு தாயோ, தந்தையோ நினைப்பதில்லை. முடிந்த அளவுக்கு சமாதானப்படுத்த முயன்று அந்த குழந்தையை இயல்புக்கு கொண்டுவருவார்கள். இதெல்லாம் இரத்தம் தொடர்பு இருந்தால் தான் உண்மையோ ? போனால் போ..... நீயாக வந்தால் வா...நான் கவலைப்படவில்லை...எனது இயல்பு வாழ்கை பாதிப்படையாது......என்று சொல்லும் அளவுக்கு, நினைக்கும் அளவுக்கு என்மீதான வெறுப்புகள் உள்ளுக்குள் இருந்தால் அன்றி, ஒரே ஒரு தொலைப்பேசி அழைப்புக் கூட சாத்தியம் இல்லாமல் போகி இருக்குமோ என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. மூத்தோர் வளைந்தால் உடைந்துவிடுவார்களோ ?

நான் மரணத்திற்கு கூட பயப்படுவதில்லை. நாம் பயந்தாலும் அது நம்மை விடப் போவதில்லை. வேறு எதற்காவது பயப்படுகிறேன் என்றால் அடுத்த நொடி மரணம் நிகழ்ந்துவிட்டால் என்மீது வெறுப்புள்ளவர்கள், என்னை வெறுப்பவர்கள் இரண்டுமே என் மரணத்திற்கு பிறகு எனக்கு இருக்கக் கூடது, இவையெல்லாம் எப்போதுமே சரியாக வைத்திருக்க வேண்டும்.. என்பதற்காக மட்டுமே பயப்படுகிறேன். என்னை நினைப்பவர்கள் எவராக இருந்தாலும் என்னை நேசித்துக் கொண்டிருப்பவர்களாகவே இருக்க வேண்டும். அந்த சூழல் இல்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காக மட்டுமே பயப்படுகிறேன்.

அடுத்த நாள் வாழ்க்கை யாருக்குமே நிச்சயம் இல்லை என்பது எனக்கும் பொருத்தமானதுதான், அதனாலேயே
என்னால் வெறுக்கப்படுபவர்கள்...என்னை வெறுப்பவர்கள் இரண்டுமே என் வாழ்க்கையில் இருக்கக் கூடாது என்றே எப்போதும் நினைக்கிறேன். சில சமயம் சிலரிடம் மட்டும் காலில் விழுவதால் மட்டுமே இவை சாத்தியம் என்றால் அதையும் செய்யத் தயங்கியதில்லை.

உங்கள் குடும்பத்தாருக்கும் குறிப்பாக அம்மாவுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

உங்கள் மீது குற்றம் சொல்ல வேண்டும் என்றோ, என் தரப்பை ஞாயப்படுத்த வேண்டுமென்பதற்கான தன்னிலை விளக்கம் இல்லை இது. நாமே தேடிக் கொண்ட அன்புக்கு குழிவெட்டி புதைக்க முடியாது என்பதை எல்லாக் காலமும் நன்கு உண்ர்ந்தவன். உங்களிடம் மட்டுமல்ல பலரிடம், நான் சந்தித்த... பழகிய பலரிடமும் என் மீது குறையில்லாவிட்டாலும் பழியை நானே போட்டுக் கொண்டிருக்கிறேன். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. நல்லோர்க்கு எல்லாவற்றிலுமே நன்மை இருப்பது போல் இந்த கால இடைவெளி எனக்கு மேலும் சில நல்லுள்ளங்களை அடையாளம் காட்டி இருக்கிறது.

--
பழகிய நாள் முதல்,
என்றும் உங்கள் மீதான அன்புடன்,

கோவி.கண்ணன்
Blogger Websites :
http://govikannan.blogspot.com
http://kaalangkal.blogspot.com

*********************

TiS Foundation USA to me
show details 12/10/07 Reply


அன்புக் கண்ணா,
எனக்குக் கோபமே வராது என்பதும், பிடித்தவரை நான் எப்போதும் கோபிப்பதில்லைஎன்பதும் என் மகனுக்குத் தெரியாமல் இருக்கமுடியாது என நான் உறுதியாக நம்புகிறேன்.
பயப்படுகிறேன் என்றா சொன்னேன்? பயம் கலந்த மரியாதையா எனத்தான் கேட்டேன்.
அது பிடிக்கவில்லையென, "கேவலமய்யா" என ஒரு மடல் வந்த போது நான் அதிர்ந்து தான் போனேன் என்பதே உண்மை.
'அப்படி இல்லை' என ஒரு மறுமொழி வந்திருந்தால் உடனே தயங்காமல் மன்னிப்பே கேட்டிருப்பேன்.
"பிடிக்கவில்லை" என்பதற்கு நான் என்ன செய்ய முடியும். இனி அதைச் சொல்லாமல் இருந்திருப்பேன்.
அதன் மூலம் அது தவறு என ஒப்புக் கொள்ளாவிட்டால், இனி தொடர்பு வேண்டாம் என முறித்துக் கொண்டு போனது நானல்லவே.
அதற்கும் கூட என் அன்பான முரட்டுக் கண்ணா என ஒரு பதில் மடல் எழுதினேன்.
எனக்கு எப்போதும் உன் மீது துளிக்கூட கோபம் இல்லை.
கண்ணில் பட்ட போதெல்லாம் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டி என் அக்கறையை அக்கரையில் இருந்து காட்டிக் கொண்டுதான் இருக்கிறேன். என் தேவைகளுக்கு உன்னை அணுகவும் தயங்கவில்லை. என் பேத்தியின் பிறந்த நாளையும் நினைவில் வைத்து வாழ்த்திணேன்.
மற்ற பதிவுகளுக்கு முன்னைப்போல் சுதந்திரமாக மறுமொழி எழுத மனம் வரவில்லை. மேலும், 'சித்தர்' பதிவில் மும்முரமாக இருந்ததால் வரமுடியவில்லை.
அலுவலில் இருந்தும் தமிழ்மணத்துக்கு வர முடியாமல் போயிற்று.
மேலும் பதிவுகளின் தலைப்பும் வரச் சொல்லி அழைக்கவில்லை!!:))

மற்றபடி என் அன்பு எப்போதும் போலவேதான் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என் முரட்டுக் கண்ணா!
நல்லுறவுத்தொடர் கிடைத்து இயல்பாகப் போய்க்கொண்டிருக்கிறது என அறிந்து மகிழ்ச்சி. நானும் ஒரு நல்லுறவாகவே எப்போதும் இருப்பேன்.
"உறவுகள் வளர்ந்தது. எனக்குள்ளே அதில்
பிரிவுகள் என்பது இருக்காதே."

பழையபடி வா! பழகிட வா!
:))))))))))))))))))))))))))))))))))))))))
- Show quoted text -

கோவி.கண்ணன் to TiS
show details 12/10/07 Reply


இட் ஈஸ் ஓகே......!

நான் உணர்ச்சி வசப்பட்டு எழுதவில்லை....ஒருவாரமாகவே எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் இன்று எழுதினேன். எப்போதும் அடி எடுத்து வைக்கும் பாக்கியம் எனக்கே கிடைக்கிறது போலும். :) பிறகு தொலைப்பேசி அட்டை வாங்கி வந்து இந்த வாரத்துக் குள் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்


உடனடி பதிலுக்கு மிக்க நன்றி !

*****************************

நட்பை கேவலப்படுத்தும் நாய்களுக்கு இந்த இடுகையைப் படித்தாவது நட்பின் உன்னதத்தை புரிந்து கொள்ளுங்கள்.

ஒருவேளை மூர்த்தி தான் போலி என்று இருந்தாலும் நான் அது தெரிந்திருந்தால் அவரை கண்டிப்பேன் என்றே நினைத்திருக்கலாம். அந்த அளவு என்மீது மதிப்பு வைத்திருப்பவருக்கு 'அவர் தான் போலி' என்று என்னால் சான்றிதழ் வழங்க முடியாது. முடிந்தால் அவரும் அவருக்கு எதிரானவர்களும் முட்டிக் கொள்ளட்டும், எனக்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பே இல்லை. மூர்த்தியை சந்தித்தி இருக்கிறேன். பேசி இருக்கிறேன். அவர் தான் போலியா என்பது செந்தழல் ரவிக்கு தெரிந்திருக்கலாம். விடாது கருப்புடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த ஓசை செல்லாவுக்கும், திராவிட தமிழர்கள் குழுமத்தில் இருந்த போது நண்பர் குழலிக்கு தெரிந்திருக்கலாம். விடாதுகருப்பாக சாட்டியபோதும் சரி, மூர்த்தியாகச் சாட்டியபோதும் சரி அவர் தன்னை போலி என்று சொல்லிக் கொண்டது கிடையாது. எனக்கு உறுதியாக தெரியாத ஒன்றை எவர்பொருட்டும் 'ஆம்' என்று சொல்ல என்றுமே என் மனசாட்சி இடம் கொடுக்காது.

மூர்த்தி போலி டோண்டு என்று நான் தெரிந்தே பழகியதாக எங்கேயும் எவரிடமும் ஆதாரம் கிடையாது.

எனக்கும் எனது நண்பர் விஎஸ்கேவுக்கு நடந்த தனிப்பட்ட உரையாடலை நான் இங்கு இணைப்பதால் எனக்கும் வீஎஸ்கே ஐயாவுடன் ஆன நட்பிலும் பாதிப்பு இல்லை.

பதிவர் டோண்டு ராகவனுக்கு கேள்விகள்

டோண்டு ராகவன் அவர்களே, நீங்கள் தான் போலியைக் கண்டுபிடிக்கச் செந்தழல் ரவி என்பவரிடம் சொன்னதாகவும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று சொல்லி, எனது மகளைப் பற்றி ஆபாசாமாக எழுதினாலும் கண்டு கொள்ள மாட்டேன் என்று சொல்லி இருந்தீர்களா ?

அப்படி என்றால் எனக்கு ஒரு சந்தேகம்.

போலி என்பவன் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தை ஆபாசமாக எழுதியதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. அதே ஆபாசத்தை இன்னொருவனை வைத்தும் தாங்களே எழுதச் சொல்லி போலியைக் கண்டுபிடித்து என்ன செய்யப்போகீறீர்கள் ? உங்கள் குடும்பத்தைப் பற்றி ஆபாசத்தைப் பலரும் படிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் நீங்கள் போலியைத் தேடிச் சென்றுருக்க வேண்டியதே இல்லையே. அதைத்தானே உங்களால் அனுப்பவட்டவன் என்று சொல்லிக் கொள்பவர் உங்கள் விருப்பத்தோடு செய்ததாக சொல்கிறார்.

தன்னைப் பற்றியும் தன்மகளைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் ஆபாசமாக எழுத அனுமதிக் கொடுத்தவருக்கு போலியின் செயல் எந்த விதத்தில் வருத்தப்படுத்தியது ? என்று அறிய ஆவல்.

மாட்டிக் கொண்ட மைனர் நீங்கள் தான் அதைச் சொன்னதாக சொல்லும் போது நகைக்காமல் இருக்க முடியவில்லை. உங்கள் ஒப்புதலுடன் தான் அவர் உங்களைப் பற்றியும் உங்கள் மகளைப் பற்றியும் ஆபாசமாக எழுதினாரா ?

ஆம்!!! என்று சொன்னீர்கள் என்றால் உங்களைப் பற்றிய ஆபாச ஏச்சுக்கள் உங்களை எந்தவிதத்திலும் பாதித்தே இருக்காது, அது போலி என்பவன் எழுதி இருந்தாலும் சரி, உங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன் எழுதி இருந்தாலும் சரி. எவர் எழுதி இருந்தாலும் ஆபாசம் ஆபாசம் தான். சொந்த தகப்பனே தன் மகளைப் பற்றி ஆபாசமாக எழுதச் சொல்லி இருந்தால் அதைவிட கேவலம் எதுவும் இல்லை, அதற்கு போலியை யார் என்றே தெரிந்து கொள்ளாமலே, போலி எழுதிய ஆபசத்தை படித்துக் கொண்டு மகிழ்ந்து இருந்திருக்கலாம்.

எந்த தகப்பனும் தன்மகள் மானம் போனாலும் பரவாயில்லை எழுதியவனை அறியவேண்டும் என்று ஆசிர்வதித்து அனுப்பமாட்டான். அப்படி இருந்தால் கேள்வி படுபவர்கள் 'த்தூ' என்றே காரி உமிழ்வார்கள். அது உண்மைதான் என்றால், உங்கள் மகளிடம் அந்த ஆபாச பதிவுகளை எல்லாம் எடுத்துக் கொடுத்து ( உங்கள் மின் அஞ்சலில் இருக்கலாம், உங்கள் ஒப்புதலுடன் என்று சொல்லி இருப்பதால் உங்களுக்கு அவர் மின் அஞ்சலில் அனுப்பி எதுகை மோனையெல்லாம் சரிபார்க்கச் சொல்லி இருப்பார்) நான் போலியைக் கண்டுபிடிக்கச் சொல்வதற்காகவே எழுதச் சொன்னேன், என் ஒப்புதலுடன் எழுதப்பட்டது இது என்று படித்துக் காட்டுங்கள். இது சக்ஸஸ் புல் மெத்தேட் என்று சொன்னீர்கள் என்றால் பலரின் போலிப் பதிவுகளைக் கண்டுபிடிக்க பலரும் தன் குடும்பத்தைப் பற்றி ஆபாசமாக அவர்களே எழுதிக் கொடுத்து போலியைக் கண்டுபிடிக்க உபாயம் தேடிக் கொள்வார்கள், அதற்கு செந்தழல் ரவி போன்றவர்களை ஏற்பாடு செய்து தருவீர்களா ? எனக்கு தெரிந்த சில நண்பர்களின் பெயரில் கூட ஆபாச தளங்கள் இருக்கிறது, அவர்களிடமும் கேட்டு அவர்களே அவர்கள் மனைவி, மகளின் பெயரில் ஆபாச பதிவுகள் எழுதி வெளி இடச் செய்து போலியை கண்டுபிடித்துவிடுவார்கள், ஏனென்றால் போலியைக் கண்டுபிடிப்பது தான் முக்கியம். மனைவி மகள் மானமெல்லாம் பிறகுதான். குஷ்பு மேட்டரில் உங்கள் ஆலோசனைகள் போலவே உங்களை சிறந்த வழிகாட்டியாக சொல்வார்கள்




இல்லவே இல்லை. நீங்கள் சொல்லவில்லை என்றால், "நான் சொல்லவில்லை. அந்த கயவனை தெரிந்தே மன்னித்துவிட்டேன்" என்று பெருந்தன்மையாக சொல்லிவிட்டு போங்கள்.

போலிப் பதிவில் உங்கள் மகளைப் பற்றி எழுதி மாட்டிக் கொண்டவர், சந்தர்பவாதத்துக்காக உங்களைப் பயன்படுத்தி நீங்கள் செய்யச் சொன்னதாக ஒழிவது மட்டுமின்றி...இதன் மூலம் உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொண்டது போன்று காட்டியதும் அன்றி தன் செயலை ஞாயப்படுத்திக் கொள்கிறார் என்றே பலரும் சொல்கிறார்கள்.

எனக்கும் காரி உமிழ ஆசை,

எனது மகளைப் பற்றி அச்சில் ஏற்ற முடியாத படுஆபாசமாக எழுதினாலும் கண்டு கொள்ள மாட்டேன் என்று சொல்லி இருந்தீர்களா ? பதில்,

'ஆம்' என்றால் உங்களை நோக்கித் துப்பலாம், 'இல்லை' என்றால் இட்டுக்கட்டும் நபர் மீது துப்பலாம்.

உங்கள் சாய்ஸ் என்ன ?

25 பிப்ரவரி, 2008

நண்பர் குழலிக்கு கோவி.கண்ணனின் அழுகாச்சு காவியம் (கடிதம்)

நண்பர் குழலிக்கு, - 'நண்பர்' வெளியே சொல்லக் கூடாதா ? குறிப்பாக உங்களை சொல்லலாம். போலியான ஒருவரிடம் நண்பராக இல்லை என்றே நினைக்கிறேன், அதனால் உங்களை என் நண்பர் என்று சொல்வதில் தவறே இல்லை. என்னையும் சேர்த்தே நீங்கள் இரண்டு மூன்று முறை பார்த்தவர்களில், உங்கள் அகராதிபடி உங்களுக்கு நான் நண்பராக இல்லாமல் இருக்கலாம். செண்டி மண்ட் அழுகாச்சி சீன் படி எனக்கு நீங்கள் என்றும் நண்பர் தான்.

//
இப்போது கேட்கிறேன் அந்த ஆடியோவில் இருக்கும் குரலும் உங்களோடு பேசிய விடாதுகருப்பு(எ)சதீஷ்குமார்(எ)போலி மூர்த்தியின் குரலும் ஒன்றா இல்லையா? என்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?//

பதிவில் கேள்வியாக கேட்டதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்,

மேற்கண்ட கேள்வியை என்னைக் கேட்டு இருக்கிறீர்கள், இதே கேள்வியை நான் மூர்த்தியிடமே கேட்டேன். உங்கள் குரலை பதிவு செய்து இருக்கிறார்கள், போலியுடன் உரையாடியவர் எவரும், இருகுரலும் ஒன்று என்று உறுதிப்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன், 'உங்களுக்கும் ஒரு சந்தர்பம்... போலி நீங்கள் அல்ல என்று சொல்ல போலியுடன் உரையாடினேன் என்று சொல்பவர்களிடன் நீங்கள் பேசி இருகுரலும் ஒன்றா என்று ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லலாமே' என்று கேட்டு இருக்கிறேன். 'போலியுடன் யார் உறவாடினார்களோ அவர்களை என்னிடம் பேசச் சொல்லுங்கள்' என்று சொன்னார். 'இவர்கள் என்னை போலி என்று சொல்லி தூற்றும் போது நான் எதற்கு ஒத்துழைக்க வேண்டும்' என்றும் கேட்டார்.

அவரிடம் மட்டுமல்ல மேலும் சில பதிவர்களிடமும் யார் போலியுடன் பேசினார்களோ அவர்கள் தான் மூர்த்தியின் டேப் செய்யப்பட்ட குரலையும் போலியின் குரலையும் ஒப்பிட்டு பார்க்க முடியும் என்றும் சொல்லி இருக்கிறேன்.

மூர்த்திதான் போலியா, போலி தான் மூர்த்தியா இதெல்லாம் எனக்கு தெரியாது, நீங்கள் சொல்லும் ஆடியே வெளியீட்டில் இருப்பது மூர்த்தியின் குரல் என்றே உறுதிப் படுத்துகிறேன். அதில் அவர்தான் போலி என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று உங்களால் காட்ட முடியுமா ? நானும் திரும்ப திரும்ப கேட்டுப் பார்த்தேன் ஆபாச அர்சனைகள் தவிர்த்து அப்படி ஒன்று இருப்பது எனக்கு தெரியவில்லை. என்னை சீண்டுபவன் ஒருவனை நான் திட்டினேன் என்று கொள்ளுங்கள் அதை வைத்து, இவன் ஆபாசமாக பேசுகிறான் இவன் தான் போலி என்று சொல்ல முடியுமா ? இரு குரலும் ஒன்று தான் என்று நிரூபிக்க போலியின் குரல் பதிவு செய்யப்பட்டு இருக்கவேண்டும். அப்படி இல்லையா ? போலி நிச்சயம் ஜிடாக்கில் எவருடனாவது உரையாடி இருப்பான், போலியுடன் உரையாடிவர்களிடம் இரு குரல்களும் ஒன்றே போல் இருந்ததா என்று கேட்டு முடிவு செய்து கொள்ளுங்கள். போலியுடன் நான் பேசியது இல்லை, தொடர்பும் இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் என் பெயர் எப்போதோ வெளியில் வந்திருக்கும்.

போலியும், மூர்த்தியும், மூர்த்திக்கு எதிரான உங்கள் சகாக்களும் எந்த அளவுக்கு கீழே இறங்குவார்கள் என்று எனக்கும் பலருக்கும் தெரியும். கவிதாவை யாரும் இன்னும் யாரும் மறந்துவிடவில்லை. எனவே பயப்படுபவர்கள் போலிக்கோ, மூர்த்திக்கோ மட்டும் பயப்படுவார்கள் என்று எண்ணிவிடாதீர்கள். நான் அந்த குரலைக் கேட்டு உறுதிப் படுத்தாதற்கு போலியின் குரலை நான் கேட்டது இல்லை என்பது தான் காரணம் அன்றி மூர்த்தி என்னைத் ஆபாசமாக பேசுவார் என்றோ அல்லது போலி என்னைப் பற்றி ஆபாசமாக எழுதுவானோ என்ற பயம் எதுவும் இல்லை.

நான் தான் அவர் பதிவில் பெரியார் கருத்துக்களை தெரியாமல் படித்தேன். அவருக்கு திராவிட தமிழர்கள் குழுமத்திலும் தொடர்பு இருந்திருக்கிறது, ஓசை செல்லா விடாது கருப்பை தமிழ்மணம் நீக்கிய போது தொடர்ந்து விடாது கருப்பின் பதிவின் RSS Feed கொடுத்து இணைத்து வைத்திருந்தார். அப்பாவியாகவே கேட்கிறேன், அப்போதெல்லாம் அவர் பெரியாரை சொந்த அரசியலுக்கு பயன்படுத்துகிறார் என்று உங்களுக்குத் தெரியாதா ?

என்னைப் பொறுத்து எனக்கு மிகவும் வேண்டியவர், என்னை நன்கு தெரிந்தவர் ஒருவர் என் அம்மாவைப் பற்றி பேசி இருந்தால் கவலைப் படுவேன். ஒரு காமக் கிறுக்ககன் பலரும் சென்று வரும் பொதுக்கழிவரையில் எழுதிவிட்டான் என்பதற்காக அவனுடன் மல்லுக்கு நிற்கமாட்டேன், அதற்கெல்லாம் எதிர்ப்புக்காட்டி அவனுக்கு மரியாதை செய்ய மாட்டேன். அம்மாவை 'கூப்பிடுபவன்' பற்றி மகி எழுதி இருந்தார். அம்மாவை கூப்பிடுவது கருப்பு பதிவில் மட்டும் தான் நடக்கிறதா ? வேறு இடங்களில் நடப்பது உங்களுக்கு பிடித்தமானதா ?

உங்கள் மீது மதிப்பு வைத்திருப்பதால் உங்களுக்கு மட்டுமே பதில் எழுதுகிறேன். இன்னும் இரு காமக் கிறுக்கர்கள், 'அம்மாவின்' நலம் விசாரித்து எழுதி இருந்தார்கள் அவர்களுக்கெல்லாம் நான் மதிப்பு கொடுக்கவில்லை. அவர்களையாவது நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வீர்களா ? போலியைக் கண்டுபிடித்து நிருத்துங்கள் செருப்பால் அடிப்போம். உண்மையாக 'திராவிடம்' பேசும் உங்களிடம் கேட்கிறேன் டோண்டு 'பார்பனர்' என்பதால் அவர் மகளைப் பற்றி ஆபாசமாக எழுதியவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்துவிட்டீர்களா ?அறிய ஆவல். இதை நான் மட்டும் கேட்கவில்லை. உங்கள் அதிரடி பதிவுகளைப் படிப்பவர்கள் அனைவருமே நகைப்புடனே கேட்கிறார்கள்.

கடைசியாக, போலிப் பிரச்சனைக்குப் பிறகு நீண்ட நாள் சென்று என்னிடம் நல்ல முறையில் பேசிக் கொண்டிருந்த போதே பாய்ந்தன் காரணம் இன்னும் விளங்கவில்லை. சத்தியமாக உங்கள் தகவல்கள் எதையும் நான் மூர்த்திடம் பரிமாறிக் கொள்ளவில்லை, வேறு என்னவென்று தெரிந்திருந்தால் உங்கள் பதிவில் எதோ ஞாயம் இருக்கிறது என்றாவது உணரலாம்.

நான் தனிப்பட்ட முறையில் தான் உங்களிடம் நிறைய பேசி இருக்கிறோன், இங்கும் எந்த ரகசியமும் இல்லை. படிப்பவர்கள் தான் பாவம், ஒரு மின் அஞ்சல் அனுப்பி விளக்கம் கேட்டு இருக்கலாம். உங்கள் முன்னாள் நண்பர்கள் பட்டியலில் நான் இல்லை என்றே நம்புகிறேன். பதிவில் கேட்டதால் பதிவிலேயே சொல்லிவிட்டேன்.

மாயக்கண்ணாடி (சேரன் படமல்ல) !

மனம் ஒரு மாயக் கண்ணாடி, யாருக்கு சொந்தமோ அவர்களுக்குத்தான் அவர் மனதில் எண்ண நினைத்திருக்கிறார்கள் என்றே தெரியும். வெளிவேசம், உள்நோக்கம் எல்லாம் அவரவருக்குத்தான் தெரியும்.

மாயா பஜார் படத்தில் ஒரு மாயக்கண்ணாடி இருக்கும், யாரை அதிகம் நேசிக்கிறோமோ அவர்கள் முகம் அதில் தெரியுமாம், அபிமன்யு பார்த்த போது அவன் மாமன் மகள் சுபத்திரா தெரிந்தாள், அடுத்து கண்ணனைப் பார்க்கச் சொன்னார்கள், கண்ணனுக்கு அதில் யார் தெரிவார்கள் என்பது நன்றாகவே தெரியும், தயங்கினான், பிறகு கண்ணாடி எதிரில் அவன் நின்றபோது அதில் தெரிந்த முகத்தைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். வேறு யார் ?பகடையை உருட்டி பாரத போர் மூள்வதற்கு தந்திரம் செய்த சகுனி மாமாதான் கண்ணனுக்கு மிகவும் பிடித்தவராம். ஏனென்றால் பூமி பாரத்தைக் குறைப்பதற்கு பாரத யுத்தத்தை முன்னெடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் கண்ணன், அவனுக்கு அந்த வேலையை இலகுவாக்கித் தந்தது சகுனி.

நடைமுறை வாழ்க்கையில் நண்பர்களைவிட நம்மை விரோதமாக நினைப்பவர்களை ( நாம் அவ்வாறு நினைத்திருக்க மாட்டோம்) த்தான் ஒவ்வொருவரின் மனமும் நினைத்துக் கொண்டிருக்குமாம், காரணம் உளவியல், அவனுக்கு முன்பு நான் வெற்றிப் பெற்றே ஆகவேண்டும் என்று உள்மன உந்தல், அவனையே நினைத்துக் கொண்டிருக்க வைக்குமாம். மன உளைச்சல் தானே. மன உளைச்சல் உடல் நலத்தைக் கெடுக்கும். பழிவாங்கத் துடிப்பதைவிட விலகி இருந்தால் வேறு வேலையைப் பார்க்க முடியும். சனியன் விட்டுச்சே என்று நினைப்பதே சாலச் சிறந்தது !

நாள் முழுதும் மகிழ்வைத் தரும் அன்புடையவர்களின் முகங்களைவிட, நாள் முழுதும் உளைச்சலைத் தருவதில் நம்மை விரோதமாக நினைப்பவர்களின் முகத்துக்கு சக்தி அதிகம். அவர்களை நினைக்காமல் இருக்க ஒரே வழி, நல்லவர்கள் பிரிந்து போனால் ஏங்களாம், நம்மை புரியாதவர்கள் தூற்றிவிட்டுச் செல்லும் போது நமக்கு நட்டம் இல்லை. தக்க சமயத்தில் புரிந்துக் கொண்டு, விலகிச் செல்ல சந்தர்பம் கொடுத்தார்கள் என்று போற்றவேண்டும்.

இருவருக்கும் பிரச்சனை வந்துவிட்டது, நாம் நல்லவரா ? கெட்டவரா ? உங்கள் மனது உங்களுக்குத் தெரியும், நாம் பழிவாங்க சந்தர்பம் பார்த்துக் கொண்டிருந்தால் நாம் நல்லவர் கிடையாது. மனக் கண்ணாடிதான் சோதித்துப் பார்த்தால் சோதனையில் சொல்லிவிடும்.

வளரும் தாதாக்கள் !

விஜயகாந்தை அரசியலில் இருந்து விரட்டப் போவதாக பாமகவும், விசியும் கூட்டறிக்கைவிட்டு இருக்கிறது.விஜயகாந்தின் அரசியல் பலருக்கும் தெரிந்தது தான் அதிமுக, திமுக என அதன் தலைவர்களை வம்புக்கு இழுத்து தினமும் தன் பெயர் செய்தித்தாள்களில் வரும்படி பார்த்து வரும்படியைத் (வெளம்பரம் வரும்படிதான்) தேடிக் கொள்கிறார்.

எதிரிகளை அதிகமாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அரசியலில் வளரலாம் என்பது எழுதப்படாதவிதியோ ? எப்படியும் தேர்த்தல் நேரத்தில் கொள்ளை (எழுத்துப்பிழை அல்ல) அளவில் உடன்பாடு செய்து கொள்வார்கள். அதற்கு முன்பு வரை கடுமையான விமர்சனங்களை வைத்திருப்பார்கள். இராமதாஸ் ஐயாவைப் பொருத்த அளவில் கருணாநிதியைக் கேள்வி கேட்கும் உரிமை ஐயாவுக்குத்தான் இருப்பது போல், கருணாநிதியை விஜயகாந்து குமுதம் பேட்டியில் விமர்சித்ததற்காக விசி திருமாவுடன் இணைந்து விஜயகாந்தை விமர்சித்து அரசியலில் இருந்து விரட்டப் போவதாக அறிவித்திருக்கிறார். நாகரீக( அப்படியெல்லாம்ம் இருக்கிறதா ?) அரசியலில், மக்கள் ஆட்சியில் ஒருவரை ஒரு கட்சித்தலைவரை விரட்டுவேன் என்று சொல்வதற்கெல்லாம் அதிகாரம் இருக்கிறதா ? அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல் தானே ? விஜயகாந்த் சட்ட அவமதிப்பு என்று வழக்குத் தொடர்ந்தால் 'வெறும் மேடைப் பேச்சுக்காக' சொன்னோம் என்று மட்டுமே இவர்களால் சொல்ல முடியும்.

//பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் போயும், போயும் ஒரு நடிகருடன், அவரது கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வோமா? அந்தத் தவறை நிச்சயம் நாங்கள் செய்யவே மாட்டோம்.
//

நடிகர் என்றால் கேவலமா ? முன்னாள் நடிகையுடன் மட்டும் கூட்டணி வைத்திருக்கலாமா ? இவர்கள் நடிகையுடன் கூட்டணி வைத்தது இல்லையா ? மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி என்றால் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கத் தயங்கியவர் அல்லர் மருத்துவர் ஐயா. இவர் கூட்டணி சேரும் கட்சியில் விஜயகாந்தும் கூட்டணி வைத்தால் ஐயா எங்கே முகத்தை வைத்துக் கொள்வார் ?

விஜயகாந்த் நேர்மையான அரசியல் வாதியா?, வேசம் போடுகிறாரா ? என்பதெல்லாம் பிறகு தான். அவர் இந்த தமிழக மைந்தன், அவரை அரசியல் களத்தில் இருந்து விரட்டுவேன் என்று சொல்லும் இவர்களது அறிக்கை, அவரது வளர்ச்சியினால் ஏற்பட்ட மறைமுக எரிச்சல், இதன் மூலம் இவர்கள் விஜயகாந்த் வளர்ந்தை ஒப்புக் கொள்கிறார்கள். பாமக - விசி தலைவர்கள் அரசியல் தாதாக்களாக நினைத்துக் கொண்டு விஜய காந்தை விரட்டுவேன் அறிக்கை விடுகிறார்கள். செல்லுபடியாகாது. யார் யார் அரசியலில் இருப்பதென்பதை ஈடுபட நினைப்பவரும், பொது மக்களும் தான் முடிவு செய்யமுடியும்.

பிகு : முழுக்க முழுக்க 100 விழுக்காடு அக்மார்க் அரசியல் பதிவு. இதில் வெறெந்த உள்நாட்டு, உள்குத்'தூ' அரசியலும் இல்லை. அப்படி எதும் இருக்கும் என்று நினைத்திருந்தால் நான் பொறுப்பு அல்ல.

23 பிப்ரவரி, 2008

விடாது கருப்பு குழுமத்திற்கு ஒரு மின் அஞ்சல் கடிதம் எழுதினேன் !

விடாது கருப்பு குழுமத்தைக் கலைத்ததாக அந்த பதிவில் ஒரு அறிவிப்பு வந்திருந்தது அதைத் தொடர்ந்து, விடாது கருப்பு குழுமத்திற்கு ஒரு கடிதம் எழுதினேன். அதனை அக்குழுவினர் அந்த பதிவில் வெளி இட்டு இருக்கிறார்கள். எனக்கும் விடாது கருப்பு குழுவிற்கும் ஆன தொடர்புகள், அதனால் என்னைப் பற்றி மறைமுகமாக எழுந்த சர்சைகள், எனக்கும் சில நண்பர்களுக்கு ஏற்பட்ட மனக் கசப்புகள் ஆகியவற்றை குறிப்பிட்டு, விடாது கருப்பு குழுவின் இடுகைகளுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் பாராட்டையும் தெரிவித்திருக்கின்றன. விருப்பப்பட்டவர்கள் அங்கு சென்று படிக்கலாம்.

யார் யாருக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் என்று பார்த்தோ, எதிர்காலத்தில் அவர்களுக்குள் சண்டைவந்தால் நாம் யார்பக்கம் நிற்பது என்றெல்லாம் நினைத்து எவரும் எவருடனும் பழகமுடியாது. நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள், நாளை மீண்டும் நண்பர்களாகக் கூட ஆகலாம். நானும் எவரது சொத்தையும் களவாடுவதற்கோ, கருத்துக்களில் காழ்புணர்வு கொண்டோ உள்நோக்கத்துடன் பழகவில்லை. அதையெல்லாம் மீறி என்னைத் தூற்றுபவர்கள் இருந்தால் தாராளமாக தூற்றுங்கள்.

"தூற்றூவர் தூற்றலும் போற்றுவார் போற்றலும் போகட்டும் கோவி.கண்ணனுக்கே"

21 பிப்ரவரி, 2008

தாய் மொழி வேறு, தாய் நாடு வேறா ?

அண்மையில் பெங்களூரில் இருந்து ஒரு க்ளைண்ட் வந்திருந்தார். அவரை அழைத்துவர விமான நிலையம் சென்றேன். 'நீங்க பெங்களூரா ? அல்லது வட இந்தியாவா ? என்று ஆங்கிலத்தில் கேட்டேன். நான் பெங்களூர்காரன், தயக்கத்திற்கு பிறகு 'கன்னடன்' என்றார், எனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆங்கிலம் தெரியும் என்றார். சிறுது நேர ஆங்கில உரையாடலுக்குப் பிறகு தமிழில் பேசினார். பேச்சில் பெங்களூரில் தமிழ் பேசுபவர்களின் மணம் கலந்து இருந்தது. ஒருவேளை என்னுடன் தமிழில் பேசுவது எனக்கு மகிழ்வாக இருக்கும் என்று நினைத்தார் போலும் என்று நானும் தமிழிலேயே பேச ஆரம்பித்தேன். பிறகு அவரது வீட்டுக்கு தொலைப்பேசி பத்திரமாக வந்து சேர்ந்ததை தெரிவிக்க வேண்டும், இங்கே எங்கு சென்று தொலை பேச முடியும் ? என்று கேட்டார்.

என் கைத்தொலைபேசியிலேயே பேசலாம் தொலைபேசி எண்ணைச் சொல்லுங்க என்றேன். நானே எண்ணை அழுத்தினேன். பெங்களூருக்கு அவரது வீட்டில் மணி அடித்தது, ஒரு சுவாரிசியத்துக்காக, நானே அவர் எதிரில் அவரது அப்பாவிடம், க்ளையிண்டின் பேரைச் சொல்லி, 'சந்துரு மனையல்லி இதாரா ?' என்று கன்னடத்தில் கேட்டேன். எதிர்தரப்பில், 'நீங்க யார் பேசறது ?' என்றார்கள். நான் கன்னடத்தில் பேசினால் தொலைபேசியில் பேசுவது தமிழன் தான் என்று எப்படி கண்டு கொண்டார்கள் என்று நினனத்துக் கொண்டே அந்த 'க்ளைண்டிடம்' கைப்பேசியைக் கொடுத்தேன். அவர் என்னிடம் பேசிய அதே (பெங்க்களூர்) தமிழில், 'அப்பா நான் வந்து சேர்ந்துட்டென், ஒன்னும் பிரச்சனை இல்லை' என்றார். அவர் பேசி முடித்ததும். உங்கள் தாய்மொழி தமிழா ? என்று கேட்டேன். ஆமாம், என் தாய்மொழி தமிழ்தான் வீட்டில் தமிழில் பேசுவோம். வெளியில் கன்னடம் பேசுவோம்.
எங்கள் மூதாதையர்கள் பல தலைமுறைக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்து வந்து இங்கே செட்டில் ஆனவர்கள் என்றார்.

என்னை சந்திக்கும் போது அவர் தன்னை தமிழன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. 'கன்னடன் என்று தான் சொன்னார், பின்பு தாய்மொழி தமிழ் என்று மட்டும் சொல்லிக் கொண்டார். இதுபோல் தாய்மொழி எந்த மொழிபேசினாலும், எங்கு வாழ்கிறோமோ அதுதான் தாய்நாடு என்று நினைப்பது தமிழன் மட்டும் தானா ? தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என பலரும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள், அவர்கள் எவரும் தன் தாய்மொழியை சொல்லி பிறரிடம் அல்லது அந்த அந்த மொழிபேசுபவர்களிடம் அடையாளப்படுத்திக் கொள்வது இல்லை, மாறாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவன், 'தமிழன்' என்றே சொல்லிக் கொள்கிறார்கள். இங்குள்ள நம் அரசியல்வாதிகளோ தமிழ்நாட்டில் பிறந்தவன் தான் தமிழன் என்று சான்றிதழ் வழங்குகிறார்கள். :)

தாய்மொழி தாய்மொழி என்கிறோம், இருவேறு மாநில மொழி பேசும் காதலர்கள் மணந்து கொண்டால் அவர்களின் வாரிசுகள் பேசும் மொழி எப்போதும் 'தந்தை' மொழியாகவே இருக்கிறது. அவர்களது குழந்தை(களு)க்கு கற்றுக் கொடுத்து பேசவைக்கும் மொழி தந்தைமொழியாகவே இருக்கிறது, அதற்கு அந்த குழந்தையுடன் சேர்ந்து அந்த தாயும் தன் கணவரின் மொழியை கற்றுக் கொள்கிறார் (ஆணாதிக்கம் ?) :(

தாய்மொழி வேறு, தாய் நாடு வேறு, இரண்டும் ஒன்றாக அமையாவிட்டால், தாய்மொழியில் பேசுவது அவர்களது தனித்தன்மை, அதைவிட நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஊரை / மானிலத்தை / நாட்டை / அங்கு பேசப்படும் மொழியை மிகுந்தே போற்றதல் அது அவர்களது பொதுத்தன்மை.

19 பிப்ரவரி, 2008

தமிழ்நாட்டில் பிறந்தவன் தான் தமிழன் ?

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் 1996ல் "கருத்து" தெரிவித்ததைத் தொடர்ந்து, "தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்" என்ற எதிர்கருதும் எதிரொலித்தது. அதனை குறிப்பிட்டு சாடியதில் மருத்துவர் இராமதாசு ஐயா அவர்களும் அடக்கம். அப்போது அவரது சமூகத்தைச் சேர்ந்த அமரர் வாழப்பாடி இராம மூர்த்தி "தமிழ் பேசுபவர்கள் எல்லோருமே தமிழர் தான்" என்று அவருக்கு பதிலடியாகவும் ரஜினிக்கு ஆதரவாகவும் சொல்லி இருந்தார். அதே பதிலை சன் டிவி நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ரஜினி அவர்களும் தெரிவித்து இருந்தார். நான் ரஜினி தமிழன் என்றோ இல்லை என்றோ சொல்வதற்காக இந்த இடுகையை எழுதவில்லை.

அரசியல்வாதிகளின் பச்சை அரசியல் தனத்தில் மொழி அரசியலே முன்னிலை வகிக்கிறது. இந்த மொழி அரசியலால் பவுத்தமும், சமணமும் எப்படி தந்திரமாக தமிழ்மண்ணை விட்டு அகற்றப்பட்டன என்று ஒரு இடுகையில் சொல்லி இருக்கிறேன். மொழியை அரசியலுக்காக பயன்படுத்துவது... இதை வளரவிடுவது தமிழுக்கு எதிரான ஒன்று, தமிழ்மீது பற்று கொண்ட பிறரையெல்லாம் தள்ளி நிற்க வைத்துவிடும் என்று உணர்ந்தே தான் 'திராவிட' என்ற பொதுப்பெயரை பெரியார் திராவிட இயக்கத்திற்கு சூட்டி இருந்தார். அதையே திரித்து பெரியார் தமிழனல்ல என்பதால் 'திராவிட' என்ற சொல்லை பபயன்படுத்தினார் என்ற திரிப்பு எதிர் அவதூறு பிரச்சாரங்களையும் நாம் பார்த்து வந்திருக்கிறோம். 'திராவிட இயக்கத்தின் வெற்றி என்று தான் அதனை கொள்ளவேண்டும். காரணம் அதன் வளர்ச்சியை குறை சொல்வதற்கு இதுபோன்ற சொத்தை வாதங்களை கேட்கும் போது, அவர்கள் "திராவிட இயக்கத்தில்" உள்ள 'திராவிட' என்ற சொல்லைத்தான் குறை சொல்கிறார்கள். அவரது இயக்கதைச் சொல்வதற்கு இவர்களிடம் எதுவுமே இல்லை என்ற மறைமுக ஒப்புதல் போன்றது அது.

மொழிப்பற்று வேறு, மொழி வெறி வேறு. கர்நாடகாவிலும், மகாராஷ்டிரத்திலும் நடப்பது மொழி அரசியல், வாட்டள் நாகராஜ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தமிழகத்தில் பிறந்திருந்தாலும் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டது கிடையாது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற செய்யுளில் உலகம் ஒரே இல்லமாக நினைத்தும், 'வந்தாரை வாழவைக்கும் செந்தமிழ் நாடு' என்று சிறப்பு பெற்றது நம் தமிழ்நாடு மற்றும் தமிழர்கள். பிறப்பின் அடிப்படையில் தீண்டாமை, சாதிகளை அமைத்துக் கொண்டு மக்களுக்குள் கூறுபோட்டு தள்ளிவைத்தது போலவே, பலர் அரசியலுக்காவே பிறப்பின் அடைப்படையில் தமிழ் நாட்டில் பிறந்தவன் தான் தமிழன் என்கிறார்கள்.

தமிழுக்கு முதன் முதலாக அச்சு எழுத்தை ஆக்கித்தந்த வெளிநாட்டு கிறித்துவ பாதிரிமார்கள், தமிழே இந்தியாவின் தொன்மை மொழி என்று நிறுவிய ஜியுபோப், கால்டுவெல் ஐயர் ஆகிய ஐரோப்பிய இன பாதிரிமார்கள், சீகன் பால்கு, பாதர் பெஸ்கி என்ற பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டு தமிழில் முதல் கிறித்துவ இதிகாசமாக தேம்பாவனியைப் படைத்ததும் இல்லாமல், பரமார்த்த குருகதைகள் என்ற எள்ளல் நடையிலும் எழுதப்பட்ட உரைநடை கதைகளில் மூடர்களையும், மூடப் பழக்கவழக்கங்களையும் சாடிய வீரமாமுனிவர் ஆகியோர் தமிழர்களே. அதை இல்லை என்று மறுப்பவர்கள் தமிழர்களா ?

இன்னும் எத்தனையோ பேர் தமிழ்மண்ணில் பிறக்காது தமிழை தாய்மொழியாக கொண்டிருக்காது தமிழை நேசித்து வளர்த்து வந்திருக்கின்றனர். கன்னடராக பிறந்தாலும், கன்னடத்தை தாய்மொழியாக கொண்டு பலமாநில படங்களில் நடித்து அதில் கிடைக்கும் பணத்தை தமிழில் படமெடுக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழன் தான். மலையாளியாக பிறந்து தமிழ் திரை இசையில் முத்திரை பதித்து, உயரம் குள்ளாமானாலும் புகழில் இமயமாக உயர்ந்து நிற்கும் இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் தமிழன். சவுராஸ்டிராக பிறந்தும் திரை இசைப் பாடலில் பட்டி தொட்டி எங்கும் தொட்டு எழுப்பி இசைத் தொட்டிலால் தாலாட்டி, எழுச்சிப் பாடல்களால் கிராம இளைஞர்களை எழுந்து நிமிர செய்த பாடகர் திலகம் டிம்எம்சவுந்தராஜன் தமிழன். இதுபோன்றே தாய்மொழி தமிழல்லாது தமிழர்களை தாலாட்டிய பிறமாநிலத்து, பிறநாட்டு பெண்கள் எல்லோருமே தமிழச்சிகள் தான்.

"இங்கு தமிழிலும் அர்சனை செய்யப்படும்" என்று தமிழை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டு, "இதுவே அதிகம், அதற்கும் மேல் பேசினால், ஆண்டவனுக்கு அபச்சாரம்" என்று கடவுளை வைத்து வியாபாரம் பேசுபாவன் வெளியில் தமிழை மட்டுமே பிழைப்புக்காக பேசினாலும் அவன் தமிழனல்ல. 'சொம்மொழி சோறு போடுமா ?' என்று நக்கல் பேச்சை நயவஞ்சகமாக படிக்காத பாமரர்களுக்கும் ஒரு சேவை போலவே அதையும் "தமிழிலேயே விதைக்கும்" சோ அண்ட் சோ க்கள் தமிர்களா ?. நாங்களும் தமிழர்கள் தான் என்று பொதுப்படுத்திக் கூறிக் கொண்டே "தமிழ் ஆண்டு துவக்கம் தை முதல் நாளா ?" என்று கேட்டு எக்காளமிட்டு தை தை என்று குதிக்கும் தமிழ்பேசுபவர்களெல்லாம் தமிழர்களா ? தமிழ் ஆண்டு முதல் நாளை தைக்கு மாற்றினால் பங்கு சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயருமா ? என்று தமிழிலேயே எழுதி நக்கல் அடிப்பவர்கள் தமிழர்களா ?. தமிழ் நாட்காட்டியின் மாற்றத்தினால் தமிழ்நாட்டிற்கு, தமிழ் மொழிக்கு ஏதேனும் ஆதாயம் உண்டா? குறைந்தளவாக மென்பொருள் எழுதுவர்களுக்கு Y2K வை சரிசெய்யுமா ? என்று பகடி செய்பவர்களெல்லாம் தமிழர்களா வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழையே பேசினாலும், தன் அடையாளத்துக்கு சாதி பெயரை
சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் தமிழர்களா ?

தமிழ்நாட்டில் குடியேறி தெலுங்கு மொழி, கன்னட மொழி, மலையாளம் ஆகிய ஒன்றை தாய் மொழியாகக் கொண்டு வீட்டிற்குள் தாய்மொழி பேசினாலும் தமிழை விருப்பப் பாடமாக படித்து தமிழுக்கு பெருமை சேர்க்கும், தமிழ்பண்பாட்டை தமது பண்பாடு ஆக்கிக் கொண்டவர்களும், தமிழை நேசித்து தமிழுக்கு புகழ்சேர்த்தவர்கள், தமிழனாகவே மாறிவிட்டவர்கள் என எந்த தாய்மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த மாநில, நாட்டினராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களே.

18 பிப்ரவரி, 2008

திண்ணை எப்போது காலியாகும் ?

ராஜாதி ராஜா படத்தில் ரஜினிகாந்தின் ஒரு பாடலில் "எனக்கு கட்சியும் வேண்டாம் ! கொடியும் வேண்டாம்" என்று பாடுவார்.

பாட்சா சர்சைக்குப் பிறகு, முத்துபடத்தில் "கட்சியெல்லாம் இப்ப நமக்கெத்துக்கு காலத்தின் கையில் அது கெடக்கு" முதலில் வேண்டாம் என்றவர் காலத்தின் கட்டளையாகச் சொல்லி தன் ஆசையை வெளிப்படுத்துகிறார், ஆனால் அதை வெளிப்படுத்திய விதம் தனக்கு அதுப்போன்ற ஆசை இல்லை என்பது போலவே. பாடல் ஆசிரியர் எழுதும் பாடலுக்கு அவர் என்ன செய்வார் ? ரஜினி போன்ற சூப்பர் நடிகர்களுக்கு அவர்கள் சம்மதம் இல்லாமல் ஒருவரி கூட எழுதிவிட முடியாது. கதாநாயகனை கடவுளுக்கும் மேலாக புகழ்ந்த பாடல்கள் தான் பின்பு அரசியல் மேடையில் பின்பாட்டாக ( அதாவது பிரசாரம் செய்யும் போது ஒலிப்பெருக்கியில்) பாடப்படுகிறது. எம்ஜிஆர், வி.காந்து எல்லோரும் அப்படித்தான் படத்தின் பாடல்களை பயன்படுத்துகின்றனர்.

மூன்றாம் நிலை பரிமாணத்தில், "எப்ப வருவேன், எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது, வரவேண்டிய நேரத்துல கரெக்டாக வந்துடுவேன்". - படையப்பா எப்படியும் வருவேன் என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்கிறார். :)

"ஆண்டவன் சொல்றான் அருணாசலம் முடிக்கிறான் " என்று முன்பு சொன்னவர் படத்தில் மட்டுமல்ல மேடையில் கூட இப்போதெல்லாம், நான்காம் நிலை பரிமாணமாக, "ஆண்டவன் முடிவு செய்துவிட்டால் அரசியலுக்கு வருவேன்" என்று நேரடியாகவே சொல்கிறார், இரு இடங்களில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவ்வாறு சொல்லி இருந்ததாக சென்ற வார நக்கீரனில் எழுதி இருந்தது. "ஆண்டவனின் ஆசையே என் ஆசை" என்ற ஸ்டேட்மெண்டுக்கு பிந்திய வர்சன் அதாவது "நான் அரசியலில் இறங்குகிறேன் / குதிக்கிறேன்" என்று ஸ்டேட்மெண்ட் திரு ரஜினியிடம் இருந்து இன்னும் வெளிவரவில்லை. அதுபோலவே முதல் வர்சனான "கட்சியும் வேண்டாம் கொடியும் வேண்டாம்" என்பதை மறந்தும் தற்போது எங்கும் சொல்வதில்லை.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், நடிகர் நாடளாலாமா ? பாமக ராமதாஸ் ஐயாவின் அபத்தக் கேள்வியை புறந்தள்ளுவோம். ஒருவரை மக்கள் ஏற்றுக் கொண்டால் அவர் தலைவர் தான். அதில் நடிகர் என்ன விதமான விதிவிலக்கு ?.


1996 ல் இருந்து அரசியலில் பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்படும் ரஜினி காந்த் ஏன் தயங்குகிறார் ? மூப்பனாருடன் இணைந்து கட்சி ஆரம்பித்தால் வெற்றி வாகை சூடை இருக்கலாமே, அண்ணாமலை சைக்கிளை சின்னமாக எடுத்துக் கொள்ளச் சொல்லி மூப்பானாருக்கு பரிந்துரை செய்து, தமகா - திமுகவை வெற்றிப்பெற உதவினார் என்றெல்லாம் பேசுகிறார்களே ? ஏன் தைரியமாக நேரடி அரசியலில் இறங்கவில்லை ?

அன்றைய தேதிக்கு பாட்சா படவிழாவை தொடந்து, அந்த படத்தயாரிப்பாளர், சத்யா மூவிஸ், முன்னாள் அமைச்சர் இராம.வீரப்பனுக்கும் - ஜெவுக்கு ஏற்பட்ட மோதல், இராமவீரப்பனை கட்சியில் இருந்து ஓரம் கட்டியது. மற்றும் ஜெவின் பல அடவடிக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க தன் செல்வாக்கு உதவும் என்று மட்டுமே ரஜினி நினைத்தார். ஒருவேளை ரஜினி - திமுக - அதிமுக மும்முனை போட்டி என்றால் திரை ரசிகர்கள் மட்டுமே ரஜினிக்கு ஆதரவு கொடுப்பார்கள், அதிமுக வாக்கு வங்கி பிரியும், திமுக முழுபலத்துடனேயே வென்றுவிடும். என்பதால் ரஜினிகாந்த் நேரடி அரசியலுக்கு செல்வதற்கு பின் வாங்கினார். திமுக - தமாக கூட்டணியை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தனது செல்வாக்கால் தான் அவை வென்றது என்று அவராக சொல்லாவிட்டாலும் மற்றவர்களை பேச வைக்கமுடியும். அது போன்றே பேசினார்கள். மற்றவர்களைவிட ஜெவின் 1996 ஆம் ஆண்டு ஆட்சியை இறக்கியதற்கு முக்கிய பங்கு வகித்தது, தொடர்ந்து அதிமுக மற்றும் ஜெ, சசி ஆகியோரைப் பற்றிய சொத்து குவிப்பு மற்றும் அரசியல் முறைகேட்டு, பதிவியை தவறாக பயன்படுத்தி மற்றும் ஊழல் தகவல்களை வெளியிட்டு வந்தது நக்கீரன் மட்டுமே. அதை நன்கு உணர்ந்த ஜெ. பின்னாளில் 2001ல் முதல்வரான போது நக்கீரன் கோபால் மீது பொடொ வைப் பாய்சினார். இதெல்லாம் பலருக்கு புரியாது. ரஜினிகாந்த் செல்வாக்கினால் தான் 1996ல் திமுக வென்றதாகவே திமுகவிற்கு எதிரான பத்திரிக்கை உலகம் தொடர்ந்து எழுதி வந்தது. ரஜினி 1996ல் நின்றிருந்தால் முதல்வராக ஆகி இருக்கலாம் என்றெல்லாம் பரப்பிவிட்டனர். ரஜினிக்கு தெரியாதா ? இருந்தும் அவர் ஏன் 2001 தேர்த்தலில் கூட அரசியல் ஆசையை வெளிப்படுத்தவில்லை ?

திமுக வாக்கு வங்கியின் கவனத்தை பெறாமல் தன்னால் தனித்து வெற்றி பெற முடியாது என்று ரஜினி நினைப்பதே அதற்கு காரணம். அது 100 விழுக்காடு சரியான கணிப்பும் கூட. "கலைஞர் ஐயா, (இருக்கும் வரை) அவரை எதிர்த்தெல்லாம் என்னால் அரசியல் செய்ய முடியாது" என்று முன்பு சொல்லி இருக்கிறார். கலைஞர் மீது வைத்திருக்கும் மரியாதையோ, அல்லது கலைஞர் இருக்கும் போது திமுக வாக்காளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முடியாது என்பதாலேயே ரஜினி தமிழக அரசியலில் குதிப்பதற்கு இன்னும் நேரம் குறிக்கவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவார். ஸ்டாலின் முதல்வராவதற்கு முஸ்தீபு நடக்கும் போது நிச்சயம் ரஜினி அரசியலுக்கு வருவார். ரஜினியின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்தால் தான் அரசியலுக்குள் சொல்ல மாட்டேன் என்று எங்கும் சொல்வதில்லை. ஆண்டவனின் ஆசைப்படி என்றே சொல்லி வருகிறார். 140 கோடியில் பட்ஜெட்டில் படமெடுக்க உத்தரவிட்ட ஆண்டவன் இதற்கும் உத்தரவிடுவார் என்றே நம்புங்கள். நான் நம்புகிறேன்.

எப்போது அரசியலுக்கு வருகிறார் ? தலைப்பை தொட்ட முழுப்பழமொழி புரிந்தவர்களுக்கு புரியும். ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்போ, ஆதரவோ இங்கு எழுதவில்லை. அண்மையில் "அரசியலுக்கு ரஜினி வருவார்" என்று ஒரு பெண் மருத்துவரின் ஆராய்ச்சிக் கட்டுரைப் போன்று, ஆனால் அதனுடன் தொடர்பில்லாத செய்திகளை வைத்து, பத்திரிக்கை வாயிலாக பல்வேறு காலகட்டங்களில் படித்தவற்றை வைத்து "ரஜினி தீவிர அரசியலுக்கு நிச்சயமாக வருவார்" என்றே நினைக்கிறேன். அது திமுக - அதிமுக போன்றே அவைகளுக்கு மாற்றான ஒரு பெரிய கட்சியாக உருவெடுக்கும்.

திமுக - அதிமுகவில் இருக்கும் பெரும் தலைகள் எல்லாம் தங்களை தூய்மையானவர்களாக அறிவித்து வெளியேறி, புதுப்'பித்துடன்' ரஜினி கட்சியில் இணைவார்கள், ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பில் ஏமாந்து தேமுதிகவுக்கு சென்ற தேமுதிக தொண்டர்கள் ரஜினி கட்சிக்கு ஆதரவாக திரும்புவார்கள். அதுவரை ரஜினி தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு மீடியாக்களும், பொதுமக்களுக்கும் தன் இருப்பை உணர்த்திக் கொண்டிருப்பார்.

17 பிப்ரவரி, 2008

மீனுக்கு தலை - விஜயகாந்தின் அரசியல் !

கட்சி ஆரம்பிக்கும் போது திராவிட கட்சிகளின் தொண்டர்களைக் குறிவைத்து கட்சியின் பெயராக தேமுதிக அதாவது தேசிய முற்போக்கு 'திராவிடக் கழகம்' என்று பெயர் வைத்தார் வி.காந்த். அண்ணன் கட்சிப் பெயரிலேயே தேசியமும் திராவிடமும் பேசுகிறார் பாருங்கள் எல்லாம் வசதிக்காகத்தான். எம்ஜிஆர் கூட தனது கட்சியை அ.இ. ( அனைந்து இந்திய) அதிமுக என்று வைத்தார், அதைக் கொஞ்சம் மாற்றி 'அனைத்து இந்திய' என்றால் தேசியம் தானே, அதனால் 'தேசியம்' தழுவிய பெயராக வைத்தார் வி.காந்த். இப்போவவது நம்புங்கப்பா, 'விஜயகாந்த் ஏன் தன்னை எம்ஜிஆரின் வாரிசு என்று சொல்கிறார்' என்று. எனக்கு ஒன்னும் வயிற்றெரிச்சல் இல்லை. நல்ல இருக்கட்டும். :). முன்னோட்டம் இல்லாமல் பதிவெழுதினால் என்ன சொல்கிறோம் என்று புரியவில்லை என்பார்கள். விசயத்துக்கு வருவோம்.

மீனுக்கு தலை, அதாவது
விஜயகாந்த் வெளிப்படையாக அரசியல் பேசிய காலத்தில் இருந்தே திமுக சார்பாக இருந்தவர். சில நேரங்களில் கலைஞர் தனக்கு அரசியல் ரோல் மாடல் என்று கூறிக் கொண்டவர். பொதுமேடையில் கலைஞரின் காலைத் தொட்டு கும்பிட்டு உபிகளின் நெகிழ்சியை நுகர்ந்திருக்கிறார். தன்னை ஒரு திராவிடப் பற்றாளன், கொள்கையாளன் என்று தான் இதுவரைக் காட்டிக் கொண்டார். கட்சியின் பெயரிலும் திராவிடம் இருக்கிறது. கட்சி ஆரம்பித்தபோது ராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்த்து விபூதி சகிதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி துவக்கவிழா ஒரு 'இந்து திருவிழா' போன்றே நடந்தது. பலதரப்பு மக்களையும் இந்துக்களை குறிவைக்கும் உத்தியோ. நல்லா வளரட்டுமே. :)

பாம்புக்கு வால், அண்மையில் நடுவன் அமைச்சர் அருண்குமாரை விமானத்தில் சந்தித்தப்போது தன் குடும்பம் 'காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டது, அப்பா, தாத்தா எல்லோரும் காங்கிரஸ், நானும் மூப்பனாரோடு நெருக்மாக இருந்தவன். எதிர்கால அரசியல் இளைஞர்கள் கையில் இருக்கிறது, தமிழகத்தில் என் பின்னால் இளைஞர்கள் திறள்கிறார்கள், தேசிய அளவில் காங்கிரசில் ராகுல் காந்திக்கு பின்னால் இளைஞர்கள் திறள்கிறார்கள். தேமுதிகவின் கொள்கை(?)யும் காங்கிரஸ் போன்றதுதான். எனவே நாம் அடுத்த தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம்' என்று சொல்லி இருக்கிறார். காமராஜருக்கு பின் கோட்டையை பிடிக்காத காங்கிரசுக்கு விஜயகாந்தின் ஆசை வார்த்தை 'தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி' கனவு கோட்டையை ஏற்படுத்தி இருக்கிறது. தாரளமாக கூட்டணி அமையுங்கய்யா. நல்லா இருங்க.
:)


***

தனித்து 2011ல் கோட்டையைப் பிடிக்கும் வி.காந்தின் கனவு 2016க்கு தள்ளிச் சென்றுவிட்டது போல் தெரிகிறது. 2011ல் தங்கள் ஆட்சி என்று சரத்குமார் கூறிக் கொண்டிருக்கிறார். ஷங்கர் முதல்வன் பகுதி 2 எடுத்தால் இவர்கள் யாரையாவது ஒருவரை வைத்து எடுக்கலாம். இந்த பத்திக்கு முன்பே இடுகை முடிந்துவிட்டது. :)))

16 பிப்ரவரி, 2008

நடிகை ஸ்ரீதேவியின் கணவர்(கள்) !

தலைப்பைப் பார்த்து ஒரு பெண்ணை தவறாக சித்தரிக்கிறேன் என்று கருதவேண்டம். இது உளவியல் பற்றியது. எனது வயதை ஒத்தவர்களுக்கு ஒரு காலத்தில் ஸ்ரீதேவி என்றால் செம கிரேஸ். பதினைந்து ஆண்டுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் சொன்னார், 'என்னோட சித்தப்பா பையன், கட்டுனா ஸ்ரீதேவியைத்தான் கட்டுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான், இப்ப அவனுக்கு கல்யாணம் ஆகி 10 வயசுல பொண்ணு இருக்கு, ஆனால் இன்னும் ஸ்ரீதேவிக்கு கல்யாணம் ஆகல" என்று சொல்லிச் சிரித்தார். அது போல் ஸ்ரீதேவிக்காக ஏங்கியவர்கள் பலர் காத்திருந்து பார்த்துவிட்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

ஸ்ரீதேவிக்கும் எனக்கும் ரகசிய திருமணம் நடந்தது, நாங்கள் இருவரும் மயிலாப்பூரில் இந்த முகவரியில் ஓர் ஆண்டாக குடித்தனம் நடத்தினோம். ஸ்ரீதேவியின் மனதை கலைத்து அனில் கபூரின் அண்ணன் போனிகபூர் திருமணம் செய்து கொண்டார், என்னையும் ஸ்ரீதேவியையும் சேர்த்து வையுங்கள் என்று ஒருவர் வழக்கு தொடர்த்தாராம், வழக்கில் உண்மையில்லை, வேண்டுமென்றே பரபரப்புக்காக தொடுக்கப்பட்டது என்று கூறி அவருக்கு அபராதம் போட்டு எச்சரிக்கை செய்தனராம் நீதிபதிகள். மேலும் அதே நபர் தெலுங்கு நடிகை ஜெயப்ரதாவும் எனது மனைவியாக வாழ்ந்தவர் அவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று ஏற்கனவே ஒரு வழக்கு தொடர்ந்து அதே போன்று கண்டனம் செய்யப்பட்டவர்.

இன்னும் ஒருவர் பிரபலங்கள் போட்டியிடும் தொகுதியில் தனக்கு வெற்றி வாய்ப்பு பலமாக இருப்பதாகக் கூறிக் கொண்டு அங்கு வேட்பாளராக களம் இறங்குபவர் வாஜ்பாய், சோனியா காந்தி ஆகியோரை எதிர்த்தும் பல்வேறு மாநில முதல்வர்களை எதிர்த்தும் நின்றாராம். விருத்தாச்சலத்தில் மூன்று விஜயகாந்த் போட்டியிட்டதாகக் கூட செய்திகள் வந்தது.

ஆங்கிலத்தில் 'நொட்டோரியஸ் பெலொ' என்ற சொல் உண்டு அதன் பொருள் இழிவின் மூலம் பலரால் அறியப்பட்டவர்கள், அவர்களை பலருக்கும் தெரிந்தாலும் அவர்களைப் பற்றி பெருமைபட ஒன்றும் இருக்காது. பரபரப்புக்காக நோக்கத்துடன் இயங்குபவர்களுக்கு இப்படித்தான் பெயர். 'இழிவால் பிரபலமானவர்கள்', ஒருவர் விபச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு அவரின் புகைப்படம் பலர் அறிய வெளியில் வந்து அதற்கும் அவர் 'தன்னை பலர் அறிந்து கொண்டார்கள் என்று மகிழ்ந்தால் அது இழிவால் அவருக்கு கிடைக்கும் புகழ்(?).

தன்னைப் பற்றி பலர் பேசவேண்டும் என்பதற்காக நன்கு அறியப்பட்டவர்கள் மீது அவதூறு செய்து அதன் மூலம் புகழ்பெறலாம் அல்லது நம்மை திரும்பி பார்க்க வைக்கலாம் என்று நினைப்பவர்கள் ஒருவிதத்தில் மனநோயாளிகள். இவர்கள் எவரும் திருந்தியதே இல்லை. மாறாக மனநோய் முற்றிக் கொண்டே இருக்குமாம். இவர்களால் அவதூறு செய்யப்பட்டவர்கள் இவர்களை சட்டை செய்யவதில்லை. அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்த்து அசினுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது என்று புது கதைவசனத்துக்கு மாறிவிடுவார்களாம்.

பின்குறிப்பு : இதுக்கும் ஜெமோவுக்கு தொடர்பு இருக்கிறாதா என்று கேட்காதிங்க.

15 பிப்ரவரி, 2008

கடன் அட்டை பெற்றார் நெஞ்சம் போல

கடன் பெற்றவர்களின் துயர் பெரும் துயரோ ? இலங்கை வேந்தன் 'கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான்' என்று கம்பர் குறித்திருக்கும் அளவுக்கு கடன் பற்றி சங்காலத்திலேயே எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. கடன் வாங்கிக் கொண்டு கொத்தடிமைகளாக கலங்கிய வாழ்க்கை அந்த காலத்திலும் இருந்தது என்பதை குறிப்பிட்டுக் காட்டுவதாக அந்த வரிகளை நினைக்கிறேன்.

கடன் அன்பை முறிக்கும் ? யார் உண்மையானவர்கள் என்பது கடன் கேட்கும் போது தெரிந்துவிடும் என்பதால் அப்படிச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் மாற்றியே புரிகிறது. நம்மிடம் இருந்தால் பொருளுதவி செய்யலாம். ஆனால் வேறு எங்காவது வாங்கி கைமாற்றிவிட்டால் இருபக்கமும் அன்பு முறிந்துதான் போகும் அபாயம் இருக்கிறது.

கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் என்று சொல்வதைவிட கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினான் என்று சொல்வதே பொருத்தம். நம்பிக்கையின்மையும் பொருளியல் ஆசையும் கூடிவிட்டதால் கடன் பெறுபவர்களுக்கு வாங்கும் போது இருக்கும் மகிழ்ச்சியைவிட கொடுக்கும் போது இருக்கும் முகசுழிப்பே மிக்கவை. தம் பொருள் கைவிட்டுப் போவது போலவே எண்ணிக் கொண்டு கொடுப்பர்.

அவசரத்துக்கு ஒருவரிம் போய் நிற்பதைவிட கடன் அட்டை மூலம் பெற்றுக் கொள்வதே சிறந்தது என்று அதை வைத்திருக்கும் நண்பர்கள் சொல்லும் போது ஆமோதிக்காமல் இருக்க முடியவில்லை. என்ன தான் திட்டமிட்டு செலவு செய்தாலும் வசதிகளைப் பெருக்கிக் கொள்ள நினைக்கும் போது எவ்வளவு பெரிய பணக்காரர் ஆனாலும் கடன் பெற்றே ஆகவேண்டும் என்று நிலை இருக்கிறது.

நகர புறங்களில் தவணைத்திட்டம் என்று சொல்லி 100 ரூபாய் முதல் 500ரூபாய் வரை ஏழை எளியோரை குறிவைத்து பிஸினஸ் நடக்கும், வாங்கிய இரண்டு நாட்கள் தவணை செலுத்துவார்கள், மூன்றாவது நாள் முதல் தவணைக்காரன் தெருமுனையில் வருகிறான் என்றாலே மறைந்துவிடுவார்கள். அவன் வாசலில் நின்று வாய்க்கு வந்தபடி திட்டிச் செல்வான். எப்படியும் வசூலித்துவிடுவான். ஆனால் மீண்டும் அடுத்த நாளே தவணைக்கு கடன் தருவான். அவனுக்கும் அவர்களுக்கும் மாற்று இருக்காது.

******

கடன் அட்டையில் இருந்து எடுக்கும் பணத்தை கொடுக்காதவர்களை தாதாக்களை வைத்தே மிரட்டி வசூலிக்கப்படுகிறது என்று உலகெங்கும் புகார்கள் இருக்கிறது. சிங்கையில் அவ்வாறு பணம் பெற்றுக் கொண்டவர்கள் திருப்பிச் செலுத்தாவிட்டால் அவர்கள் வீட்டின் கதவுகளில் வண்ணக் கலவையை கரைத்து ஊற்றுவார்களாம், அப்படியும் செலுத்தாவிட்டால் அவர்கள் போகும் இடத்திற்கெல்லாம் யாரையாவது பின் தொடரவைப்பார்களாம். கடன் பெற்றவர்கள் நெஞ்சம் கலங்காமல் உறுதியாக இருப்பதால் தான் இதையெல்லாம் மீறி தாக்குப் பிடிக்க முடிகிறது போலும்.

போங்கைய்யா நீங்களும் உங்க பித்தலாட்டமும் !

எல்லாஞ்சரிதான் தனக்கு இப்படி ஒரு மோசமான நிலைமை ஏற்படப் போகிறது என்று முன்னமே அறியாமல் இருந்தது ஏன் ? இதுக்கு மட்டும் போலிஸ் வேண்டுமா ? ஒரு பரிகார பூஜையில், அல்லது சூனியம் வைத்து கையெழுத்து வாங்கியவனை வெளங்காமல் செய்ய முடியாதா ?

போங்கைய்யா நீங்களும் உங்க சோசிய பித்தலாட்டமும் !

என்னவா ? கிழே படியுங்கள்.

***************

ஜெ. ஜோதிடரை மிரட்டினாரா சசி உறவினர்?
வியாழக்கிழமை, பிப்ரவரி 14, 2008

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜோதிடரான ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பவரை, சசிகலாவின் உறவினர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் (வயது 43). இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரனிடம் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், நான் ஜோதிடராக இருக்கிறேன். கடந்த 8ம் தேதி சொந்த ஊரான ஈரோடு சென்றிருந்தேன். கடந்த 10-ந்தேதி காலை 10 மணிக்கு எனக்கு ஏற்கனவே அறிமுகமான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் ராவணன் என்பவர் அங்கு வந்தார்.

சசிகலா என்னை பார்க்க விரும்புவதாகவும், உடனே கோவைக்கு அழைத்து வரும்படி சொன்னதாகவும் கூறினார். அவருடன் காரில் ஏறி சென்றேன். ஆனால் சசிகலா அங்கு இல்லை.

பின்னர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது என்னிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டார். நான் எனது சொத்து விவரத்தை கூறினேன். உடனே எனது சொத்தை தனது பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்று கூறினார்.

நான் மறுத்தேன். இதையடுத்து என்னை ஆபாசமாக திட்டினார். எழுதி தராவிட்டால் என்னையும் மனைவி, குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர் என்னை கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்தார்.

ஒரு ஓட்டலில் தங்க வைத்தார். அங்கிருந்து ஒரு பங்களாவுக்கு அழைத்துச் சென்றார். என்னை அடித்து துன்புறுத்தி 10 பத்திர தாள்களிலும், 10 பச்சை காகிதங்களிலும் கையெழுத்து வாங்கிக் கொண்டார். நான் அவர் கூறியபடி 10ம் தேதியை குறிப்பிட்டு கையெழுத்து போட்டேன்.

என்னை மிரட்டி, அடித்து உதைத்து வெற்று பத்திரத்திலும், தாளிலும் கையெழுத்து வாங்கிய சசிகலாவின் உறவினர் ராவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வெற்றிவேல்.

இந்தப் புகார் குறித்து வெற்றிவேல் கூறுகையில், பத்து வருடங்களுக்கு மேலாக ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் நான்தான் ஆஸ்தான ஜோதிடராக இருந்தேன். ஜெயலலிதா 2001ல் முதல்வர் ஆவார் என்று கணித்துக் கூறியிருந்தேன். அதன்படி அவர் முதல்வர் ஆனார்.

பல்வேறு வழக்குகளிலிருந்தும் விடுதலை ஆனார். இடையில் என் மீது பொறாமை கொண்ட சிலர் செய்த சூழ்ச்சியால் என்னை ஒதுக்கி விட்டார் என்றார் வெற்றிவேல்.

தட்ஸ் தமிழுக்கு ஒரு 'ஓ'

ஒப்பீடு செய்யாமல் கருத்துக் கூற முடியாதா ?

பார்ப்பது, கேட்பது, சுவைப்பது இதிலெல்லாம் புதியது தவிர்த்து மற்றதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்ப்பது தன்னிச்சையாகவே நடக்கும், சென்ற வாரத்தில் ஒருநாள் உண்ட அதே வகை உணவில் சுவை குன்றி இருந்தால் உடனே தெரிந்துவிடும். 'தொலைகாட்சி சீரியலை' சபித்துவிட்டு சாப்பிட்டுவிடுவோம். நேற்றைய நினைவு முற்றிலும் இல்லாதவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் என்று சொல்ல முடியுமா ? . 'நான் இருக்கிறேன்' என்ற உள் உணர்வை உறுதிப் படுத்துவது நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் ஒப்பிட்டு அறியும் மனத்திரளின் தொகுப்பு. ஒவ்வொரு நாளின் பெரும்பகுதி ஒப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாகவே கழிகிறது.

நான் எதையும் எதனுடனும் ஒப்பிடமாட்டேன், அதற்கென்று தனிச்சிறப்பு இருக்கிறது அதனால் அவற்றை தனித்தனியாகத்தான் பார்க்கிறேன் என்று சொல்லவது மிகக் கடினம் தான். புதிதாக செல்லும் விமானப் பயணம் கூட பேருந்து பயணத்தைவிட இது நன்றாகவோ, மோசமாகவோ இருக்கிறது என்பதை உடனடியாக ஒப்பிட்டுவிடுவோம். ஒப்பீடுகளில் தனியாக தெரிவது எப்போதுமே நல்லது கெட்டது என்ற பெரும் வேறுபாடுதான்.

******

'எங்க அம்மா சமையல் மாதிரி வருமா ?'... 'அப்போ ஏன் என்னை கட்டிக்கிட்டிங்க, உங்க அம்மாவையே சமைக்கச் சொல்லி சாப்பிட்டுக் கொண்டு இருக்க வேண்டியது தானே ?' இப்பெல்லாம் யாரும் கன்னத்தில் அறைவதில்லை. மாறாக பொறுமையாக சமையல் கற்றுக் கொண்டு சமைத்தும் போடுவதால் 'எங்க வீட்டுக்காரர் சூப்பராக சமைப்பார்' என்று பெருமைபடும் படி நடந்து கொள்கிறார்கள்.

சந்தைகளில் விதம் விதமான ஒரே பயன்பாட்டிற்கான அழகுசாதன பொருள்களின் விற்பனை பெண்களின் ஒப்பீட்டு மனநிலையை மூலதனாமாக வைத்தே கடைதிறந்திருக்கிறது. பெண்கள் அவர்களுக்குள் பல பெண்களை ஒப்பிட்டுக் கொண்டு அவளுடைய புடவை / நகை மாதிரி இல்லை என்று நினைத்து கணவரை அதற்காக நச்சரிப்பது ... தமக்கு தேவை என்பதற்கு மட்டுமே பெண்கள் பெண்களை ஒப்பிடுவார்கள். (அட்சய த்ருதியைக்கு நாள் இருக்கிறது. பயப்படவேண்டாம்). அதுபோல் நாம் குறை கூறுவதற்காகவே ஒரு பெண்ணைக் காட்டி ஒப்பிட்டு சொல்லிவிட்டால் தொலைந்தோம். :)

பெண்கள் மட்டுமில்லை, ஒருவருடன் ஒருவரை குறைச் சொல்வதற்காகவே ஒப்பிடுவதை யாரும் விரும்புவதில்லை. அவரைவிட நீங்கள் நன்றாக செய்திருக்கிறீர்கள் என்று பாராட்டுக்கு ஒப்பிட்டால் மகிழ்ச்சியாக இருக்கும், மாறாக குறைசொல்லும் நோக்கத்துடனோ / நோக்கம் இல்லாமலோ 'அவரே பரவாயில்லை' என்றால் கேட்பவருக்கு எரிச்சல் தானே வரும். ஒப்பிடே இல்லாமலே 'இன்னும் நன்றாக செய்திருக்கலாம்' என்று பாராட்டிக் கொண்டே குறைச் சொல்வதானால் பிரச்சனை இருந்தாலும் வெறும் பெருமூச்சோடு நிற்கும். ஒப்பீடு இல்லாமல் எதுவுமே இல்லை. மனிதர்களுக்குள் ஒப்பிடு செய்யும் போது மட்டும் கவனம் தேவை என்று நினைக்கிறேன்.

14 பிப்ரவரி, 2008

காதல் வெகு சிலருக்கு அழிவதில்லை (சிறுகதை) !

2002 பிப் 14, பெசண்ட் நகர் கடற்கரை :

"நித்யா...எதாவது சொல்லு...நான் பேசிப் பார்த்துட்டேன் ஒன்னும் சரிவருவது போல் தெரியல.."

"என்னத்த சொல்வது...உங்க பெற்றோர்களுக்கு பிடிக்கும் பிடிக்காதெல்லாம் காதலிக்கும் முன்பே உங்களுக்கு தெரியாமல் போச்சா ?"

"பழசை எல்லாம் ஏன் பேசனும், உன்னை கல்யாணம் செய்வதற்கு எனக்கு பூரண சம்மதம் தான், ஆனா அம்மா அப்பா பேச்சை மீறி கல்யாணம் பண்ணிக் கொண்டால், வீட்டில் சாவு விழும் என்று சொல்கிறார்கள்..நாம ஆசைக்காக பெற்றோர்களை பலிகொடுக்கனுமா ? அப்படியும் சமாதானம் செய்தாலும் உன்னை காலத்துக்கும் குறை சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க"

"சாரி சேகர் இவ்வளவு கோழையாக இருப்பீர்கள் என எதிர்பார்கல...சரி என்னமோ செய்யுங்க என் தலையெழுத்துப்படி நடக்கட்டும்"

பேசிவிட்டு சட்டென்று எழுந்து எதிர்திசையில் நடந்து காணாமல் போனாள் நித்யா,

அவளை தடுத்து நிறுத்துவதற்கு எந்த காரணமும் சொல்ல முடியாமல் பிரமை பிடித்தது போல் இரவு 12 மணி வரை அங்கேயே உட்கார்ந்துவிட்டு ஒரு முடிவெடுத்தவனாக் எழுந்துவீட்டுக் சென்றான் சேகர்.

******
ஒன்றரை வருடம் கழித்து.

துக்க விசயம் கேள்விப்பட்டு சேகரை சந்திக்கச் சென்றேன்

உடைந்து போய் இருந்த சேகர் கட்டிக் கொண்டு அழுதான்.

"தம்பி, பாருங்க தம்பி என் பையன் வாழ்க்கை இப்படி பாழாப் போச்சே...பொட்ட புள்ளையை பெத்துப் போட்ட உடனேயே போய் சேர்ந்துட்டாள் புன்னியவதி...நீங்கெல்லாம் பார்த்து அவனுக்கு எதாவது பார்த்து செய்யுங்க" - சேகர் அம்மாவின் கதறல்.

என்ன சமாதானம் செய்வதன்றே தெரியவில்லை. விசயம் கேள்விப்பட்டவுடன் திகைப்பும், நண்பனின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவும், அந்த பெற்றோர்கள் மீது எரிச்சலும் வந்தது.

தாய் இறந்தது கூடத் தெரியாமல் தூளியில் ரோஜாப்பு வண்ணத்தில் தூங்கிக் கொண்டிருந்தது குழந்தை

ஒரு சில நாள் கழித்து அவனை தேற்றுவதற்கு,

"வேற வழி இல்லேடா சேகர், எதுக்கும் பேசிபார்ப்போம்...."

******


"நி......நித்யா...நான் சேகர் பேசுறேன்...."

"ம் குரல் தெரியுது...ஒன்னும் சொல்ல வேண்டாம் ....எல்லாம் கேள்விப்பட்டேன்..."

"எனக்கு இப்ப ஒன்னை விட்டால் யாரும் இல்லை"

"நான் என்ன செய்யனும் ?"

"நான் எப்படியாவது பழைய வாழ்க்கைக்கு திரும்பனும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள், இப்போ எந்த எதிர்ப்பும் இருக்காது"

"ஆகட்டும்...நானும் யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு அவர் இறந்தால், அதன் பிறகு நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம்..."

"....."

நித்யா அவ்வாறு அவனை மறுத்து சொன்னாலும், பெண்களுக்கே உரிய இளகிய மனநிலை கரைந்துவிட்டது. அதன் பிறகு சில தூதுகள்.

நித்யா - சேகரின் காதல், சேகரின் இரண்டாவது திருமணமாக இனிதே முடிந்தது. அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து, தற்போது இரு குழந்தைகள் அவர்கள் வீட்டில் இருக்கிறார்கள்.

மகனுக்கு மீண்டும் வாழ்கை அமைந்த திருப்தியில் பெற்றோர்கள் இருந்தாலும் அவர்கள் முன்பு செய்த தவறு அவர்களுக்கு உறுத்தலாகவே இருக்கிறது.

********
பெற்றோர்களின் வீண் பிடிவாதம் பிடிக்காமல் இருந்திருந்தால் அப்படி ஒரு பிரிவும், சோகமும் அவன் வாழ்க்கையில் வந்திருக்காது. இவர்கள் இருவரும் சேர்வதற்காகவே இடையில் ஒரு பெண் வந்து சென்றாளா ? அவளது பெற்றோர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ? இதற்கெல்லாம் எந்த சமாதனமும் ஈடு ஆகாது.

நடந்ததெல்லாம் விதி என்றே நினைத்து, நடந்தவைகளில் எது எது யாருடைய தவறு என்றெல்லாம் யாரும் குத்திக் காட்டிக் கொள்வதில்லை.

இது நடந்த கதைதான். நண்பரின் மீது நல் மதிப்பு இருப்பதால், பெயர்களை மட்டும் மாற்றி இருக்கிறேன்.

கயவனைப் பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது ?

சரமாரி வெட்டிக் கொலை, கற்பழித்துக் கொலை என்ற செய்திகள் எல்லாம் தலைப்பில் ஒரு ஈர்ப்பை வைத்து பரபரப்புக்காக செய்தி ஊடகங்கள் வெளி இடுவார்கள். பரபரப்பு தலைப்பு வைப்பதால் தான் இதுபோன்ற செய்திகளைப் தேடிப் படிக்கிறார்களா ? படிப்பவர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று அப்படிப்பட்ட தலைப்புகளை வைக்கிறார்களா ? தலைப்பில் ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மையே.

பிறந்த 54 நாள் ஆன குழந்தையை தந்தை கற்பழித்து கொலை, என்ற செய்தியை தாங்கிக் கொண்டு ஊடகம் வந்தால் அதனால் என்ன பயன் ? காமக் கொடுரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இனம், சாதி, மதம் தாண்டி எங்கேயும் இருக்கிறார்கள், அதுபோன்ற விலங்குகளின் விழுக்காடு 0.0000000001% இருக்கலாம். அவர்கள் செய்யும் ஈனச் செயல்களை செய்தியாகப் போடுவதால் யாருக்கு என்ன பயன் ? செய்திகள் என்றால் எதாவது நிகழ்வுகளின் தகவல் தான். ஊடகவாதிகளைப் பொறுத்து அவர்களுக்கு எல்லாமும் செய்திதான். சமூகத்தை சிந்திக்க வைக்கவோ, திசைத்திருப்பவோ ஊடகத்துறைக்கு ஆற்றல் உண்டு. ஊடகத்துறை மக்களுக்காக இயங்குவதால் அதற்கு பொறுப்புணர்வு என்பது மிக முதன்மையானது.

"பிறந்து 54 நாட்களே ஆன தனது பென்குழந்தையை கற்பழித்து கொன்ற தந்தை!! - என்ற செய்திகளை வெளி இடுவதன் மூலம், இவர்கள் பொதுமக்களுக்கு என்ன தகவல் சொல்லப் போகிறார்கள் ?

அதையும் ஒரு பதிவர் மத அரசியலுக்காக பயன்படுத்துகிறார். எல்லா மதத்திலும் கயவர்கள் இருக்கவே செய்கிறார்கள், ஒரு கயவன் செய்யும் கயமைக்காக அந்த மதத்தில் உள்ளவர்களையோ ஒரு மதத்தையோ குறைச் சொல்ல முடியுமா ? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் இருக்கிறது. பின்லேடன் செயலுக்கோ, தீவிரவாதிகளின் செயலுக்கோ 'முஸ்லிம் தீவிரவாதம்' என்று சொன்னால் இஸ்லாமியர்களுக்கு ஏற்புடையதா ?

ஒரு கயவனின் இழிசெயலை செய்தியாக போட்டதே பெரும் தவறு, அதைப் பார்த்து திருந்துவதற்கு அந்த அளவு யாரும் கொடுமைக் காரர்கள் கிடையாது, அந்த செய்தியை அறிந்து கொள்வதால் இதுபோன்ற பிறவிகள் இருக்கும் கேடு கெட்ட உலகத்தில் நாமும் வாழ்கிறோம் என்ற வேதனைதான் மிஞ்சுகிறது. இதுபோன்ற செய்திகளை ஊடகங்கள் தவிர்க்கலாம், அத்தகைய செய்திகள் காவல்துறையின் உள்ளே முடித்துக் கொள்ளப்படவேண்டியவை. அதையும் மத அரசியலுக்காக அந்த பதிவில் பயன்படுத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது

13 பிப்ரவரி, 2008

பலம் பலவீனம் !

ஒருவருடைய பலம் எது என்றால் அவர் தனது பலவீனத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே அவரது பலம் என்று சொல்ல முடியும். அரசியல் வாதிகள் - நடிகை ரகசிய தொடர்பு தெரியவந்தால் ஊருக்கே தெரிந்துவிடும். அண்மையில் மலேசிய அமைச்சர் ஒருவரின் லீலைகள் படமாக ஆக்கப்பட்டு கள்ளச் சந்தையில் சக்கைப் போடுபோடுவதாக சொல்கிறார்கள். சமூக விரோதம் என்று இல்லாமல் பொதுவில் இழிவாக நினைக்கப்படுகின்ற ஒன்றை அதாவது யாருக்கும் பாதிப்பின்றி தானே விரும்பிச் செய்யும் தனிமனித செயல்களை / அபிலாசைகளை பலவீனம் என்று சொல்ல முடியுமா ? இருந்தாலும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் அப்பழுக்கில்லாதவர்களாக இருந்தால் தான் தலைமைத்துவ தகுதி இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். மேற்சொன்ன சர்சைக்குறிய அமைச்சரை அவரது இல்லத்தினர் மன்னித்துவிட்டதாக சொல்லி இருந்தார்.

பொதுவாழ்வில் உள்ளவர்களை விடுவோம், தனிப்பட்ட ஒருவர் குறித்து,
ஜெயகாந்தன் கதை ஒன்றில் சின்ன வீடு வைத்திருக்கும் கணவரை கண்டித்த மகனை தாய் கண்டிக்கிறார். அது அவருக்கும் எனக்கும் உள்ள பிரச்சனை, அதையும் தாண்டி அவரை நேசிக்கிறேன், பிடிக்காவிட்டாலும் ஏற்றுக் கொள்கிறேன். என்பது போல் முடியும். அந்த கதையில் குறிப்பிட்ட ஒரு வரி ரொம்பவே யோசிக்க வைத்தது "ஒருவரை ஏற்றுக் கொள்வது என்பது அவரது பலவீனத்தையும் சேர்த்துதான்", உண்மையாக யாரையாவது நாம் நேசித்தால், ஒருவேளை அவரது பலவீனம் தெரிய வந்தால், அந்த பலவீனமும் சேர்ந்தது தான் முழுமையான அவர். அவரை வெறுப்பதற்கு அவரது பலவீனம் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பது போல் எனக்கு புரிந்தது.

நெருங்கியவர்களின் பலவீனங்கள் நமக்கு தெரியவரும் போது அப்போது அமைதியாக பெரும்தன்மையாக இருந்துவிட்டு சமயம் கிடைக்கும் போது போட்டு உடைத்து அவமானப்படுத்திவிடுவோம். இது ஏறக்குறைய எல்லோருக்கும் இருக்கும் பலவீனம் தான். இதற்கு வெட்கப்பட்டு இருக்கிறோமா ? பலம் என்பது பலவீனத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே. அடுத்தவர்களின் பலவீனத்தை சமயம் கிடைக்கும் போது வெளிப்படுத்துவது, தன்மீது அவர் வைத்திருக்கும் மதிப்பிற்கு எதிரான 'சந்தர்பவாதி' என்ற பலவீனம் தான்.

நண்பர்களோ, உறவினர்களோ எதாவது ஒன்றில் பலவீனமாக இருந்தால் சொல்லிப் பார்க்கலாம், அவர்களால் நமக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொள்ளாது என்று நன்கு உணர்ந்திருந்து, அவர்களின் பலவீனத்தால் அவர்களை வெறுப்பது என்பது, எதையும் 'அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு பழகிக் கொள்ளாத மனக்குறை' என்ற நம்முடைய பலவீனம் தான்.

புரியாதவர்கள் கை தூக்குங்கள் ! எளிமையாகச் சொல்லப் போனால்

மனைவி அருகில் இருக்கும் போது மற்ற பெண்களை சைட் அடிக்கும் கணவரை பெரும்பாலும் 'கணவரின் பலவீனம்' என்று புரிந்து கொண்டுதான் மனைவியர் பெருந்தன்மையாக விட்டுவிடுகின்றனர்.
:)

12 பிப்ரவரி, 2008

சு.சாமியின் வியாதி பலருக்கும் தொற்றியது ?

ஒரு காலத்தில் சு.சாமி என்கிற நகைச்சுவை அரசியல்வாதி சுப்பிரமணிய சாமி தான் தமிழகத்தை / இந்தியாவை சிங்கப்பூர் ஆக மாற்றுவதாக கூறிக் கொண்டு இருந்தார், அதைத் தொடர்ந்து மணி சங்கர் அய்யர் மயிலாடுதுறையை சிங்கப்பூர் ஆக்கிவதாக சொன்னார். தற்பொழுது சரத்குமார் தமிழகத்தை சிங்கப்பூர் ஆக்குவதற்கு சமத்துவ மக்கள் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள், கூட்டணி ஆட்சியை விட தனித்த ஆட்சியே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

சிங்கப்பூர் இயற்கை வளம் எதுவுமின்றி, தொழில் வளத்தையும், தன் நாட்டிலும், சுற்றிலும் உள்ள நாடுகளில் உள்ள மனித வளத்தை மட்டுமே நம்பி இருக்கும் நாடு. தமிழ் நாடு தண்ணீர் இடற் (பிரச்சனை) தவிர்த்து மற்ற எல்லா விதத்திலும் தன்னிறைவு பெற்ற மாநிலம். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ? விடையைச் சொல்லி கேள்வி கேட்கும் இந்த பாடலில் இருக்கும் பொருளை ஆட்சியாளர்கள் எவரும் முழுமையாக முன்னெடுத்துச் செல்லவில்லை.

சிங்கப்பூர் வாசிகளின் வருமானமும் செலவும் சரியாக இருக்கும், சிங்கப்பூர் வெள்ளியின் இந்திய மதிப்பீட்டின் அளவு பெரும் வேறுபாடு ( 1 வெள்ளி = 27 இந்திய ரூபாய்) இருப்பதால் சிங்கை வெள்ளி பெரிதாக தெரிகிறது. இங்கு மூன்று அறை முழுவீட்டின் மாதவாடகை 1200 வெள்ளிகள் வரை இருக்கிறது, ஒருவர் 3000 வெள்ளிகள் ஊதியம் பெற்றாலும் உரிமை வீடு இல்லாவிட்டால் 35 விழுக்காடு வாடகைக்கே சென்றுவிடும். உரிமையுள்ள வீடு இருப்போர்களுக்கும் ஏறத்தாள அதே நிலமைதான். 30 ஆண்டுகளுக்கான தவணைத் தொகையாக 35 விழுகாடு வீடுவாங்கிய கடனுக்கான வட்டியும் அசலுமாக மாத மாதம் செல்லும். குடிமக்கள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் குறைந்த கடனுக்கு அரசு உதவியில் அனைவருக்கும் வீடு இருக்கிறது. நிரந்தரவாசிகளும் வங்கியில் கடன் பெற்று வீடு வாங்கிக் கொள்ளலாம். மற்றபடி சிங்கையில் உள்ள கட்டிடங்களைப் பார்த்து அனைவரும் பணக்காரர்கள் போல நினைத்து தமிழக அரசியல் வாதிகள் பேசிவருகின்றனர்.

ஏற்கனவே சிங்கை / மலேசியாவை விட நில விற்பனையில் சென்னை எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. சிங்கையில் விற்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பின் மூவறை வீடு சென்னையில் விற்கப்படும் மூவறை வீட்டைவிட சில / பல லட்ச ரூபாய்கள் குறைவுதான். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா கதவை திறந்துவிட்டதில் இருந்து வெளிநாட்டு பொருள்கள் அனைத்துமே இந்தியாவில் கிடைக்கிறது. சிங்கையிலும் கிடைக்கிறது.

பதிவர் சித்தூர் முருகேசன் சொல்வது போல் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள், வேலையில்லாமல் இருக்கும் காலத்தில் இரானுவ / காவல் / அரசு துறைகளைச் சேர்ந்தவர்களை மறுநிர்மானப்பணிகளுக்கு பயன்படுத்தி அதன் மூலம் இயற்கை வளங்களை சரியாக பயன்படுத்தி, அணைக்கட்டுவது, நதி நீர் இணைப்பு போன்றவகைகளை திட்டமிட்டு செய்தால், உணவு பொருள் உற்பத்தியியால் ஏற்றுமதி மிக்கவையாக ஆகி இந்தியாவே ஆசியாவில் பணக்கார நாடாக மாறிப் போகும். மணமிக்க பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்துவிட்டு வெளிநாட்டுக் காரன் கொடுக்கும் கெமிக்கல் சோப்பை வாங்கி தேய்துக்கொள்வதில் பெருமை கொள்கிறோம். நம் நாட்டில் கிடைக்கிற வேலையை பார்பதைவிட்டு விரும்பிகிற வேலையை தேடுவோம் என்கிற சோம்பேறித்தனம் இருக்கிறது. சிங்கையில் நல்ல வேலையில் இருந்து எதோ காரணத்தினால் வேலை இழந்திருந்தால் தயங்காமல் டாக்ஸி ஓட்டச் செல்கிறார்கள். கிடைக்கிற வேலையைப் பார்கிறார்கள். வேலை இல்லை என்றால் வாழவே முடியாது என்பதால் அவர்கள் முனைப்புடன் இருக்கிறார்கள்.

அரசியல் வாதிகள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று தண்ணிக்காட்டுறார்கள் என்று நினைக்கிறேன். பயன்படுத்தும் தண்ணீர் குறித்து தமிழகம் ஏற்கனவே சிங்கப்பூராகத் தான் இருக்கிறது. சிங்கப்பூர் பெரும்பகுதி தண்ணீரை மலேசியாவில் இருந்துதான் பெற்றுக் கொள்கிறது.
:))

தமிழத்தின் சென்னை ஏற்கனவே சிங்கை போல் தான் உள்ளது.

வட்டம் : காயா ?... இது கனியா ? கண்களுக்கு மட்டும் தொடுவதற்கு அல்ல !

இலைமறை காயாக நிறைய இரட்டை பொருள் பாடல்கள் எம்ஜிஆரின் திரைப்படப் பாடல்களில் இருந்ததால் தான் என்னவே அவர் 'இரட்டை' இலையை சின்னமாக வைத்தார் என்று நினைக்கிறேன் :)

அப்படித்தான் ஒரு பாடல் 'காயா ? இது பழமா ? கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா ?' விவரம் தெரியாத வயசில கேட்டபோது விரசமாக தெரியவில்லை. 'சோளிக்கே பீச்சே க்யாகே...' என்ற ஒரே ஒரு இந்தி பாடலே பெரும் சர்சையை கிளப்பிவிட்டது. தமிழில் ? ஆபாச பாடல்களுக்கும் தமிழ் திரைக்கும் என்ன தொடர்போ, தற்பொழுதும் காதல் / குத்தாட்டப் பாடல்களில் 50க்கு 50 இருபொருள் பாடல்களாக இருக்கிறது. எதையுமே இன்சுவையாக சொல்வதைவிட இருசுவையாக சொன்னால் இனிமை கூடும் என்று நினைப்பார்களோ என்னவோ. "கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா " இந்த பாடல் கோவில் பின்னனியில் சாயாசிங் - விஜய் குத்தாட்டத்தில் எடுக்கப்பட்டது,வரிக்கு வரி பாதி ஆபாசமாக இருக்கும். எனக்கு மட்டும் தான் 'அப்படி புரிகிறதா?' ஒருவேளை எனது மனசு தான் அழுக்கா ? இந்தப்பாடலை அம்மன் பாடல் போல காட்டும் போது காதல் / குத்தாட்டப் பாடல்களில் உள்ள இருபொருள்களை குறைச் சொல்ல ஒன்றும் இல்லை.

இடுகைக்கும் மேற்கண்ட கருத்துக்கும் தொடர்பு இல்லை. தலைப்பை தொடர்பு படுத்தி இடுகைக்கு வருகிறேன்.

நிழல்படப் (PIT) போட்டிக்கு ஒரு பிட்டை போடலாம் என்று நினைத்தேன். இந்த படம்... கண்ணில் சிக்கியது, நல்ல வேளை குத்தவில்லை. இது ஒருவகை கள்ளிச் செடி, அலங்காரத்துக்காக அலுவலகங்கள், இல்லங்களில் வைத்திருப்பார்கள், பச்சை வண்ணத்தில் இருந்து முற்றும் போது பழுத்தது போல் சிகப்பாகி இருக்கும். காயாகவும்(பச்சை) கனியாகவும் (சிவப்பு) பார்க்கும் போது இருந்தாலும்... கவனக் குறைவாக தொட்டுவிட்டால் விரலில் சிகப்புதான். தலைப்புக்கு வந்தாச்சு. அப்பாடா !
இந்தவகை வட்டக் கள்ளியை ( Barrel cactus) மேலும் பார்க்க வேண்டுமா ? கூகுள் காட்டுகிறது


11 பிப்ரவரி, 2008

ஆதிவாசிகளும் அற்புதமனிதர்களும் !

பதிவு நண்பர் டிபிசிடி அவர்களின் இல்லத்தினருடன் என் இல்லதாரும் இணைந்து இல்லச் சுற்றுலாவாக மலேசியாவில் உள்ள கேமரான் ஹைலாண்ட்ஸ் எனப்படும் ஊட்டி போன்ற குளிர் மலை பகுதிக்கு சுற்றுலா சென்ற பொன்னான அனுபவம் கிடைத்தது. அங்கு சென்ற போது ஆதிவாசிகளின் இருப்பிடமான 'ஓராங் அஸ்லி கம்போங்' என்னும் சுற்றுலா தலத்துக்குச் செல்லலாம் என்று நண்பர் சொன்னார். கோவண ஆண்கள், அரை நிர்வாண பெண்கள் எல்லாம் இருப்பது போல் சில விடுதிகளில் அவர்களின் படங்களை வைத்திருந்தார்கள். சரி அங்கு செல்லலாம் என்று சென்றோம். போகும் வழியில் அந்த ஆதிவாசி ஆண் ஒருவரை பார்த்தோம். நம்மைப் போலவே உடை அணிந்திருந்தார். எரிப்பது போலப் பார்த்தார். அதன் பிறகு இன்னும் உள்ளே சென்றதும் மலை பகுதியின் சரிவில் மேலும் கீழுமாக மரவீடுகளில் ஆதிவாசிகள் வசித்து வந்தனர். ஆனால் ஆதிவாசி என்பதற்கான அடையாளம் முகத்தில் தெரிந்தது மற்றபடி உடைகள் போன்ற பலவற்றில் அவர்கள் ஆதிவாசியாக இருந்ததில் இருந்து நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டு மற்றவர்களைப் போல் மாறிவிட்டிருந்தார்கள். மேலும் அவர்களிடம் விசாரித்தால் இன்னும் அதே கோலத்தில் இருப்பவர்களை சந்திக்க முடியும். மிருக காட்சி சாலைக்குச் சென்று விலங்குகளை வேடிக்கைப் பார்பது போன்றே மனிதர்களை வினோதமாக வேடிக்கைப் பார்க்க வந்திருந்த செயலை நினைத்து முடிவை மாற்றிக் கொண்டு வெட்கப்பட்டு திரும்பினோம்.

சுற்றுலா முடிந்து திரும்பும் வழியில் மலைச் சாலைக்கு அருகிலேயே ஒரு குடில் அமைத்து அங்கு ஆதிவாசி ஒருவர் புகைப்படம் எடுக்க காட்சி தந்தார். சிலர் வாகனத்தை நிறுத்துவிட்டு அவருக்கு பணம் கொடுத்துவிட்டு அருகில் நின்று நிழல்படம் எடுத்துக் கொண்டார்கள். சென்று வந்ததன் நினைவாக இருக்கட்டுமே
என்று நானும் நண்பரும் அந்த ஆதிவாசிக்கு சில மலேசிய வெள்ளிகளை கொடுத்துவிட்டு அந்த ஆதிவாசி இளைஞரின் தோள் மீது கைபோட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தோம், பெயர் மைக்கேல் ஜாக்சனாம். ஓரளவுக்கு 'தாங்க்ஸ்' போன்ற சில ஆங்கிலச் சொற்களை சொன்னார். அவர்களின் முன்னோர் பயன்படுத்திய கருவிகளை இயக்கிக் காட்டினார். அதாவது விசம் தோய்த அம்பை நீளக் குழாயின் அடிப்பகுதி துளைவழியாக வாயால் ஊதி, அது இலக்கு நோக்கி பாய்வதைக் காட்டினார். மேலும் சில ஆதிவாசி இளைஞர்கள் அங்கு இருந்தார்கள். ஆனால் ஒரே ஒரு இளைஞர்தான் ஆதிவாசியின் உடையில் இருந்தார். மற்றவர்கள் நம்மையும் எல்லோரைப் போன்ற உடைகளில் சற்று அழுக்கான உடைகளில் இருந்தனர். நிழல்படம் எடுக்க அனுமதி கேட்டால் எவரும் தயங்கவில்லை.

அங்கிருந்து நகர்ந்ததும், இந்த இளைஞர் உண்மையிலேயே ஆதிவாசி பிரிவை சேர்ந்தவர் தானா ? அல்லது பொருத்தமாக வேடமணிந்து பயணிகள் பார்வைக்காக அரசாங்கமே அல்லது பயணிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு பிழைப்பு நடத்தலாம் என்பதற்காக எவராவது இதுபோன்று நாடகமாக நடத்துகிறார்களா எனக்கு ஐயமாகவே இருக்கிறதென்றேன். நண்பர் அந்த ஆதிவாசி இளைஞர் மற்றும் அங்குள்ளவர்களின் முகத்தை வைத்துப் பார்த்தால் அவர் ஆதிவாசி இளைஞர் தான் என்றார். மற்றபடி அவர்கள் அந்த உடையை இங்கே பயணிகள் பார்வைக்காக மட்டுமே அணிந்திருக்கிறார் என்று புரிந்தது. ஓரளவு சரிதான். வெறும் கோவணத்துடன் அந்த கடும் குளிரில் ஆதிவாசிகள் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

ஆதிவாசிகளின் நிலையை உயர்த்த வேண்டும் என்று நினைக்காமல் அரசுகள், அவர்களின் நிலங்களை சுற்றுலாத்தலமாக ஆக்கியது மட்டுமின்றி, ஆதிவாசிகளை பொதுமக்கள் காட்சிப் பொருளாக பார்பதைப் சுற்றுலாவில் ஒரு இடமாக வைத்திருப்பதற்கு அவைகள் உண்மையில் வெட்கப்படவேண்டும். அதுபோன்ற சுற்றுலா மையங்களை அமைத்து எங்கள் நாடு பழம்பெருமை மிக்கது என்று பறைச்சாற்றும் அதே நேரத்தில் இன்னும் முன்னேறாத மக்கள் இங்கு இருக்கிறார்கள், அவர்களின் இடங்களை அறிவிப்பின்று ஆக்கரமித்துக் கொண்டோம் என்று சொல்லாமல் விட்டதையும் அரசுகள் மறைக்க முடியவில்லை.

எல்லோரும் மனிதர்கள் தான் ஆதிவாசிகளை விநோதமாக பார்க்கும் நமது முன்னேறிய நாகரீகத்தில் கூடத்தான் அரைகுறை ஆடை நடனங்களும் நடக்கின்றன. அவர்கள் உடலை மறைத்துக் வாழப் பழகிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் விநோதமாக இருப்பார்கள் அதை ரசிக்கலாம் என்று செல்லும் நமது மனது நிர்வாணம் ஆகிவிட்டது. எரிப்பது போல் பார்த்த இளைஞர் பார்வையின் பொருள் இன்னும் நாங்கெளென்ன உங்களுக்கெல்லாம் காட்சிப் பொருளா ?' என்று கேட்பது அங்கேயே புரிந்தது. சுற்றுலா முடிந்து திரும்பும் வழியில் ஆதிவாசியை நிழல்படம் எடுத்த போது, அவனும் நம்மினம் தான் என்று நினைத்தப்படி கொஞ்சம் கூட தயங்காமல் அவன் தோள்மீது இருவருமே கைபோட்டு படம் எடுத்துக் கொண்டோம். ஆதி மனிதர்களை காட்சிப் பொருளாக பார்க்கும் சமூகத்தில் தான் வாழ்கிறோம், அதில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன். வெட்கமாகத்தான் இருந்தது. ஆதிவாசிகளை காட்சிப் பொருளாக்கி சுற்றுலா வழிகாட்டிகளும் நிறையவே சம்பாதிக்கின்றனர். அவர்களின் நிலை மாறவேண்டும். அல்லது அவர்களின் விருப்பத்திற்கேற்று வாழ்வதற்கான வழி அமைத்துக் கொடுக்காவிட்டாலும் அவர்களின் சுதந்திரத்தை பரிக்காமல் இருந்தாலே போதும்.

நாம் வாழும் இயந்திர வாழ்க்கையை மறந்து, இதுபோன்ற இடங்களுக்கு மகிழ்வைத் தேடி இரண்டு நாள் சுற்றுலா சென்று ஆற்றிக் கொள்ளும் நம்மைவிட அவர்கள் எவ்வளவோ மகிழ்வாகத்தான் இருக்கிறார்கள்.

5 பிப்ரவரி, 2008

ஆந்தையாரின் அருங்காட்சி !

நேற்று முந்தைய நாள் (ஞாயிறு அன்று) காலை 10 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே இறங்கினேன். 'கீச் கீச்' என்ற மைனா குருவிகளின் சத்தம். மழைவேறு லேசாக தூறிக் கொண்டிருந்தது. என்னவென்று பார்த்தால் அவைகள் ஆந்தையார் ஒருவரை துறத்திக் கொண்டிருந்தன. ஆந்தையாருக்கு பகலில் கண் சரியாக தெரியவில்லை. இருந்தாலும் அருகில் சென்றால் உடனே இறக்கை விரித்து பத்தடி தொலைவுக்கு பறந்து சென்று அமர்ந்து கொண்டார். ஆந்தையார் எங்காவது மரக்கிளையில் அமர்ந்துவிட்டால் திரும்பிவிடலாம், அவருக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று விடாமல் நானும் துறத்தி துறத்திப் போனேன்.


விதவிதமாக போஸ் கொடுக்க அத்தனையும் கையில் இருந்த கேமரா செல்பேசியில் சிக்கியது. சென்றவாரம் பதிவில் ஆந்தையாரைப் பற்றி எழுதிய நேரமோ ? தெரியவில்லை. :) அன்று ஆந்தையார் நேரில் வந்து காட்சி கொடுத்தது மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மிக அருகில் சென்றதும் ஒருவழியாக கொஞ்சம் உயரமாக பறந்து மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். திரும்பிவந்துவிட்டேன்.
கையில் படம்பிடிக்கும் செல்பேசி இருந்தால் எப்படியெல்லாம் பயன் அளிக்கிறது.

மணி காலை பத்து தான் ஆகிறது இன்னும் 8 மணி நேரம் எப்படி போக்குவது ? :(
மனிதர்கள் முகத்தில் விழித்தால் பாவம், அதான் திரும்பிக் கொண்டேன்.
பகலில் கண்ணுதான் தெரியாது ஆனால் பறக்க தெரியுமே.
இந்த இடம் எனக்கு பாதுகாப்பாக இருக்குமா ?
முகம் வட்டமாகத்தான் இருக்கு PIT போட்டிக்கு அனுப்புறியா ?
தைரியம் இருந்தால், இரவு பணிரெண்டு மணிக்கு ஒண்டிக்கு ஒண்டி வர்ரீயா ?
இரவு பணிரெண்டு மணி வேண்டாம், மாலை ஆறுமணிக்கு வரமுடியுமா?
கோவம் வருவதற்குள் மரியாதையாக போடா!!!

சீனப் புத்தாண்டு!

ஆசியான் வட்டாரத்தில் சீனர்களின் ஆதிக்கம் பெரிய அளவில் இருக்கிறது, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் சீனர்கள் பெரிய அளவில் வசிக்கிறார்கள். இந்த நாடுகளில் சீனர்களின் புத்தாண்டுகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பார்கள். சீனப் புத்தாண்டு முறை சந்திரமுறை புத்தாண்டு என அழைக்கப்படுகிறது. அதாவது சந்திரன் நாள்காட்டி முறையை பயன்படுத்துகிறார்கள். முன்பு நமக்கு ஏப்ரல் 14ல் ஒரே தேதியில் தமிழ்ப்புத்தாண்டு வந்தது போல் சீனப் புத்தாண்டு வராது. எப்போதும் பிப்ரவரி மாதத்தின் 2 ஆவது அல்லது 3 ஆவது வாரத்தில் எதாவது ஒரு தேதியில் வரும். இந்த ஆண்டு பிப்ரவரி 7, 8 தேதிகளில் சீனப் புத்தாண்டு வருகிறது.

சீனர்களுக்கு சீனப்புத்தாண்டே மிகப்பெரிய பண்டிகை. அதனால் நாம் நம் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதை இந்திய புத்தாண்டு என்பது போல் நினைப்பார்கள். தீபாவளி என்றால் அவர்களைப் பொருத்து இந்திய புத்தாண்டு. :)

ஆண்டுமுழுவதும் சீனர்கள் காத்திருப்பது இந்த புத்தாண்டு விழாவிற்குத்தான். சீனப்புத்தாண்டின் முதல் நாள் போது சீனர்கள் குளிக்க மாட்டார்களாம், அதிர்ஷ்ட தேவதை அழுக்கோடு சென்று விடும் என்ற நம்பிக்கை போல இருக்கிறது. இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் மூட நம்பிக்கை குறித்த பற்றியத்தில் பெரிய வேறுபாடு கிடையாது. சாமிக்கு நிறையவே பயப்ப்படுவார்கள். சூதாட்டம், லாட்டரி போன்றவற்றில் மிகுந்து செலவளிப்பார்கள். புத்தாண்டுக்கு முன்பே பழைய சாமான்களை எடுத்து வெளியில் போட்டுவிட்டு புதிதாக வாங்கிக் கொள்வார்கள்.

சீனப்புத்தாண்டின் மற்றொரு சிறப்பு அம்சம், சீனப்புத்தாண்டை மதச்சார்பற்று அனைத்து சீனர்களும் கொண்டாடுவார்கள். வாழ்த்துகளை பரிமாரிக் கொள்வதும் சிவப்பு பையில் ( ரெட் பாகெட்) புதிய பணத்தாள்களைப் போட்டு பரிசளிக்கும் வழக்கம் முதன்மையாக கடைபிடிக்கப்படுகிறது. அலுவலகம் போன்ற இடங்களில் மேலாளர்களுக்கு ஆரஞ்சு பழங்களை பரிசளிப்பார்கள். புத்தாண்டின் போது சீன முதலாளிகள் தங்கள் நிறுவனத்திற்கு ஒருவாரம் விடுப்பு விட்டுவிடுவார்கள்.

சீனப்புத்தாண்டின் போது 'சீனா டவுன்' எனப்படும் சீனர்களின் பொருள்கள் விற்கும் இடங்கள் அவை எந்த நாட்டில் இருந்தாலும் நன்றாக அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள்.

சீனப் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு எலி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 12 விலங்குகளின் பெயர்களில் ஆண்டுகள் வழங்கப்படுகின்றன. எலி ஆண்டு திரும்பவம் வருவதற்கு 13 ஆண்டுகள் ஆகும்.

ஜெ ஆடு(ம்) புலி ஆட்டம் !

ராமேஷ்வர கோவிலில் மாடுகள் இறந்ததற்கும், இன்னும் ஏனைய புண்ணாக்கு காரணங்களுக்காக திமுக அரசு பதவி விலகவேண்டும், அதனைத் தொடர்ந்து தேர்தல் நடந்தால் எப்படியும் அரியணை ஏறமுடியும் என்ற சிம்ம (சிம்ம ராசிக்காரர்) சொப்பனத்தில் நாளொரு அறிக்கையை செய்தி ஊடகங்களுக்கு அளித்து வந்தார் ஜெ.

அண்மையில் மோடிக்கு ஜெ வைத்த மாபெரும் விருந்திற்கு பிறகு பாஜகவும், அதிமுகவும் நெருங்குவதாகவும், அதுவே விருப்பம் என்பது போல் பாஜக இல.கனேசன் முதல் அறிவிக்கப்படாத பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரான சோ வும் தங்கள் அவாவை வெளிப்படுத்தினர் (ஆசை வெட்கம் அறியாதாம்)

இப்படி கூட்டணி அமைந்தால் வெற்றி கிடைக்குமா என்று பல்வேறு அலசல்களுக்கு பிறகு பாஜகவுக்கு விருந்தே அதிகம் என்று ஜெ நினைத்ததாகவும், பாஜக கூட்டணி என்றால் அதிமுகவுக்கு பாதகாமத்தான் அமையும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் கொடுத்த ஆலோசனையின் பேரில் பாஜகவுக்கு நிரந்தர 'நோ' சொல்லிவிட்டாராம் ஜெ.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரசை நெருங்கினால் அடுத்த தேர்தல் தனக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் ஜெ. காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுமா ? ஜெ வினால் பல முறை அவமானப்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட சோனியா இதற்கு ஒப்புக் கொள்வாரா ? சோனியா மற்றும் ராகுல் காந்தியின் தயவு வேண்டும் என்பதற்காக 'புலி' வந்துட்டது அரசியல் நடத்துகிறார் ஜெ. தமிழகம் புலிகளின் சரணாலயம் ஆகிவிட்டது என்று குற்றம் சுமத்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சியனரின் மனதையும், ராஜிவ் காந்தியின் இல்லத்தினரையும் கனிய வைக்கமுடியும் என்ற நம்புகிறார். காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கு இளங்கோவன் போன்றவர்களிடம் இருந்து வரவேற்பு இருக்கிறது.

காங்கிரஸ் அதிமுக வை ஆதரித்தால் மத்திய ஆட்சியில் பங்கு கேட்பதில்லை என்றும் தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்தால் ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கொள்ளலாம் என்று தூண்டில் போடப்பட்டு இருக்கிறது என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் அறிவிக்கின்றன. இப்பொழுதெல்லாம் காங்கிரஸ் திமுக அரசுக்கு எதிராக பெரியதாகவே குரல் எழுப்புவதற்கு இதுவே காரணம். எங்கள் தயவில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவரின் வெளிப்படை பேச்சுக்கும் இதுவே காரணம்.

ஜெவின் கைங்கர்யத்தால், 13 மாதத்தில் அல்ப ஆயுளில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்ததை காங்கிரசும் மறந்திருக்காது. ஒருவேளை காங் - அதிமுக கூட்டணி என்று முடிவாகிவிட்டால் புலிகள் நுழைந்துவிட்டதாக, சட்ட ஒழுங்கு காரணம் காட்டி திமுக ஆட்சியை பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் போது கலைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் சற்று தீவிரமாகவே காய்நகர்த்திக் கொண்டிருப்பது தான் தற்போது நடக்கும் ஜெ வின் ஆடு(ம்) புலி ஆட்ட அரசியல். பாராளுமன்ற தேர்த்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் வர இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஜெ புலி அரசியல் காய் நகர்த்தி காங்கிரஸ் ஆட்டை வெட்டுவாரா ?

2 பிப்ரவரி, 2008

பெண்கள் இப்படியெல்லாம் பேசலாமா ?

பொது இடத்தில் பேசவேண்டியவை இவைகள் என்கிற அவை நாகரீகம் என்ற ஒன்று சமுகமாக ஒன்றிணைந்த அனைவருக்கும் உள்ள பொறுப்பு. சென்சார் போர்டு என்று இருப்பதே, பொதுமக்கள் பார்க்கும் காட்சியில் இவை இவையெல்லாம் மட்டுமே அனுமதி என்ற விதிகளையும் வைத்து எல்லை மீறும் இடங்களில் கத்தரி வைக்கின்றனர். அதிலும் வயது வந்தவர்கள் பார்க்கக் கூடிய என்ற பிரிவுகள் இருக்கிறது.

இது போன்றே வார இதழ்கள் இன்னும் செய்தி ஊடகங்கள் என தங்கள் எழுதும் பொருளுக்கு உட்பட்டு வாசகர்களுக்கு எவை எல்லாம் முகம் சுளிப்பாக இருக்கும் என்பதை ஓரளவுக்கு உணர்ந்தே எழுதுகின்றன. முன்பு போல் செய்தித் தாள்களில், 'கதற கதற கற்பழித்தனர்' என்பதற்கு பதில் 'பாலியல் வன்புணர்ச்சி' என்று மாற்றி எழுதிவருகின்றனர். வரவேற்க்கத்தக்கது.

முன்பெல்லாம் பெண்கள் எழுத்து துறையில் நாவல், சிறுகதை எழுதுவர்களாகவே அறியப்பட்டு வந்தனர். இன்று பெண்கள் பத்திரிக்கையாளராகவும், செய்தி சேகரிக்கும் நிருபர்களாகவும் வளர்ந்து நிற்கின்றனர். செய்தி ஊடகங்களில் பெண்களின் பங்கு கணிசமாகவே இருக்கிறது. வரவேற்கத்தக்கது.

ஆனால் சமூகம் பெண்கள் மீது வைத்திருக்கும் பார்வை, இன்னும் பெண்ணை பெண்ணாகத்தான் பார்க்கிறது. பெண் பெண்ணாக நடந்து கொள்ளாவிட்டால் பெண்ணே அல்ல என்று விமர்சனம் செய்கிறார்கள். உடலியல் தவிர்ந்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் இல்லை. ஆண்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அதே போன்று நடந்து கொள்ளும் பெண்களும் அவ்வாறு நடந்து கொள்வதில் என்ன தவறு ? பெண்கள் பொது இடத்தில் புகைப்பிடிக்கலாமா, தண்ணி அடிக்கலாமா ? இதையெல்லாம் ஏற்றுக் கொள்வதோ தூற்றுவதோ பெண்கள் சார்ந்தது, அவற்றை விமர்சனம் செய்வதை பெண்ணிய அமைப்புகள் தான் முடிவு செய்ய முடியும். ஆண்களுக்கு அதில் கருத்து கூற உரிமை இல்லை. பெண்கள் குறித்தான ஆண்களின் அக்கறையை அவனுடைய குடும்பத்து பெண்களுடன் நிறுத்திக் கொள்வதே சரி. வேறு எந்த ஒரு பெண்ணையும் விமர்சிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

பெண் சமூகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டமைக்க ஆணுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார் ?

************

சரி விசயத்துக்கு வருவோம்,

தமிழச்சி ஆபாசத் தலைப்புகளை வைப்பதாகவும், தொடர்ந்து அது போல் பதிவு எழுதி வருவதாக பலர் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த 'குறிச்சொற்கள்' தமிழ்மணத்துக்கு புதியது அல்ல. பல ஆண்பதிவர்கள் ஏற்கனவே அதே குறி சொற்களில் பல கட்டுரைகள், கவிதைகள், மறை பொருளில் படங்களுடன் வந்திருக்கிறது. பதிவரும் எனது நண்பருமான, கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் பெ.மகேந்திரன் 'குறிசொற்'களுடன் வெளியான சுகிர்த்தராணி, புதிய மாதவி, குட்டி ரேவதி கவிதைகள் எடுத்து எழுதி இருக்கிறார். இதுபோல் சுகுணா திவாகர், பொட்டீக்கடை ஆகியோர் 'குறி'சொற்களில் கவிதை கட்டுரைகள் எழுதி இருக்கின்றனர். அவர்கள் எழுதும் போதெல்லாம் ஒன்றும் சொல்லாமல் படித்து ரசித்தவர்கள், தமிழச்சியை மட்டும்
ஏன் கடிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெண் இப்படித்தான் எழுத வேண்டும் என்று சொல்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது.

அவை நாகரீகங்கள் தேவை தான். ஆபசங்கள் தவிர்க்க வேண்டியதே, குற்றம் சுமத்தினால் எல்லோரையும் தான் குற்றம் சொல்ல வேண்டும். பெண் இப்படியெல்லாம் பேசலாமா ?
அதை தீர்மானிக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

1 பிப்ரவரி, 2008

இதறக்கெல்லாம் கீ.வீரமணி பதில் சொல்வாரா ?

டாக்டர் இரா.அசோகன், ஆவடி, சென்னையிலிருந்து எழுதுகிறார்:

"ஆண்டவன் எனக்கு நடிகன் என்ற பாத்திரத்தை வழங்கியதை இப்போது நான் செய்து கொண்டு இருக்கிறேன். எனவே, நாளை நான் அரசியலுக்கு வருவேனா என்பதையும் ஆண்டவன் தான் தீர்மானிக்க முடியும்...' என்று, தூய தெய்வ பக்தியுடன் கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நம்பிக்கை என்பதைத் மட்டுமே கொண்டு முட்டாள் தனமாக எழுப்பிய கேள்விகளுக்கு வீரமணி ஓடி வந்து பதில் சொல்ல வேண்டுமா ?

ரஜினிகாந்த் தனக்கு ஆசை இல்லை என்று காட்டிக் கொள்ள அடிக்கடி விடுக்கும் ஸ்டேட்மண்டுகளில் அதுவும் ஒன்று, 100 கோடி பட்ஜெட்டில் தான் இப்போதெல்லாம் இவர் படம் தயாராகுதாம், இதெல்லாம் வியர்வையால் உழைக்கும் ஏழை ரசிகனின் பணத்தில் இருந்து ஈடு செய்யப்பட்டும், லாபமாகவும் ஆகிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுவோம் என்று சொன்ன நாத்திகன் அறிஞர் அண்ணா இருந்த நாட்டில் ஏழையை சிரிக்க வைக்கிறேன் என்ற பெயரில் லெட்சுமியை (தங்க காசு ) காணும் ரஜினிகாந்தின் ஸ்டேட்மண்டை வைத்து வீரமணிக்கு புளி கரைக்குதா ? பெரியார் வீரமணி கருணாநிதி ஆகியோர் யார் செய்த முடிவினால் அரசியலுக்கு வந்தார்கள் ?

அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போனால், ஏமாற்றமாக இருக்கும். ஏமாற்றத்துடன் வாழ்வதற்கும், பழகிக் கொள்ளவும் எனக்கு தைரியத்தை வழங்குமாறு கடவுளை நான் எப்போதும் பிரார்த் தனை செய்கிறேன்...' என்று, தணியாத கடவுள் பக்தியுடன் பேசியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

பிரதமர் சொல்லுவதை தன்னம்பிக்கை இன்மை, எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை என்று தான் சொல்ல முடியும், எந்த ஒரு நாத்திகனும் ஏமாற்றத்தை தாங்கமுடியவில்லை என்று தற்கொலை செய்து கொள்வது கிடையாது. நாத்திகன் காரணங்களை ஆராய்வான், எல்லாவற்றிற்கும் காரணம் கடவுள் என்று தன் இயலாமைக்குக் கூட கடவுள் மேல் குற்றம் சுமத்தி தன்னை தேற்றிக் கொள்ளலாம் என்று தாழ்வாக நினைக்க மாட்டான். தன் செயலை பிறர் மீது போட்டு தப்பிப்பது உளவியல் காரணமே, அதற்கு கடவுள் பெயர், நம்பிக்கை கருவியாகிவிடுகிறது. அது இல்லாதவன் தானே பொறுப்பு என்று நினைத்துக் கொண்டு அடுத்த முறை திருத்திக் கொள்ளலாம், அல்லது விட்டுவிடலாம் என்று நினைப்பான்.

எங்கள் ஆட்சியை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்...' என்று, கடவுள் மீது நம்பிக்கை வைத் ததால், ஆட்சியை தக்க வைத்து வெற்றி பெற்று விட்டார் கோவா முதல்வர் திகம்பர் காமத்.


ஆட்சி என்பது அய்ந்து ஆண்டுகள் தான், எதுவும் நிலை இல்லை என்று வாய்கிழிய ஆன்மிகம் பேசினால் மட்டும் போதாது, அதை சந்திக்கும் போது அதற்க்கான மனநிலையில் இல்லாமல் கூப்பாடு போட்டுவிட்டு, காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக எதோ நடந்தால் எல்லாம் கடவுள் செயல் என்று கூறினால், ஆட்சி ஆட்டம் கான வைத்தது மட்டும் யார் செயலாம் ? தமிழக அம்மா வேண்டாத தெய்வங்களா ? பண்ணாத யாகங்களா ? என்ன ஆச்சு. கடவுள் கைவிட்டுவிட்டாரா ? அல்லது கடவுளுக்கு தமிழக தேர்த்தல் நடந்த சமயங்களில் காது கேட்காமல் போய்விட்டதா ? தேர்த்தலில் வெற்றிபெருவது கடவுள் செயல் என்றால் தோற்ற கட்சியை சேர்ந்தவர்கள் நாத்திகர்களா ? பிஜேபி தோல்வியை சந்தித்தது இல்லை ? ஆட்சி கவிழ்ந்தது இல்லை ?

ராமநாதபுரம் மாவட் டம் ஏனாதிகோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதி கேட்டு, அமைச்சரிலிருந்து அதிகாரிகள் வரை முறையிட்டும் பலன் இல்லாததால், "அரசு தீர்க் காததை பழநி ஆண்டவரிடம் முறையிடுவோம்...' என, அவ்வூர் மக்கள் முடிவு செய்து, 40 நாள் விரதம் இருந்து 60க்கும் மேற்பட்டோர் முருகனிடம் முறையிட பழநிக்கு பாத யாத்திரை சென்றுள்ளனர்.

பழனி கோவிலில் நடக்கும் முறைகேடுகள், ஊழல்கள், பணம் பிடுங்குதல் உலக பிரசித்தம். பழனி ஆண்டவர் தன்னைச் சுற்றி நடப்பதைப் பார்த்துக் கொண்டு அமைதியாகத்தானே இருக்கிறார். ஊர் மக்கள் எதோ ஒரு நம்பிக்கையில் செல்வதற்கும், வீரமணிக்கும் என்ன சம்பந்தம் ?

"வீரமணி தலைமையிலான சேது சமுத்திர குழுவை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை. ராமர் இல்லை என்று திராவிடக் கழகம் கூறுகிறது. காங்கிரஸ் கட்சியினர் கடவுளை நம்புகின்றனர்....' என்று, தெய்வ நம்பிக்கையுடன் சொல்லியுள்ளார் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம்.

ஆமாய்யா, ராமர் இருந்தார் என்று சொல்லுவீர்கள், அதே சமயத்தில் அல்லா என்று சொன்னால் குல்லாவா ? என்று கேட்பிங்க, நம்பிக்கை என்பது என்ன அவரவர் நம்புவதுதானே? இதில் பொதுப்படுத்துதல் எங்கிருந்து வந்தது ? கடவுள் நம்பிக்கை உடைய, இஸ்லாமியரும், கிறித்துவரும் சேது சமுத்திரத்திட்டத்தை ஆதரிக்கிறார்கள். அவர்களும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தானே ? தெய்வ நம்பிக்கை என்றால் என்ன தான் நம்பும் கடவுளை மட்டும் நம்புவதா ? எங்கும் நிறைந்திருப்பது இறை என்று சொல்லிக் கொண்டு இராமர், இராமர் பாலம் என்று கருத்தை சுறுக்கி கொள்வது இறை நம்பிக்கையின் மீதான அவநம்பிக்கை இல்லையா ?

"ஜல்லிக்கட்டு என்பது மக்களுடைய நம்பிக் கையை சார்ந்த விஷயம் என்று தமிழக அரசு சுபரீம் கோர்ட்டில் வாதாடி தடை யை நீக்கியுள்ளது. இதே போல் தான் ராமர் பாலம் என்பதும் உலகமெங்கும் உள்ள 100 கோடி இந்து மக்களின் நம்பிக்கையை சார்ந்த விஷயம். இதை அடிப்படையாக வைத்து, சுப்ரீம் கோர்ட்டில் வாதாடுவேன்...' என்று, உண்மையான ராமர் பக்தர்கள் சார் பாக சாடியுள்ளார் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி.
கடவுளை பூஜிப்பவர்களுக்கு கைமேல் பலன் உண்டு என்பதற்கிணங்க, மேலே கூறியவர்களின் தெய்வ நம்பிக்கைகளுக்கு வீரமணி என்ன பதில் சொல்லப் போகிறார்...?உண்மையிலேயே வீரமணிக்கு வீரமும் தைரியமும் இருந்தால் துõய தெய்வ பக்தியுள்ள, சூப்பர் ஸ்டாரை எதிர்த்து போராடுவாரா...? பிரதமர், கோவா முதல்வர், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டசபைத் தலைவர் ஆகியோருக்கு, "கடவுளை வணங்குபவன் காட்டு மிராண்டி...' என்று கனல் கக்கி கடிதம் எழுதுவாரா...?மேலே கூறியபடி எல்லாம் எள்முனையளவு கூட எதிர்ப்பே தெரிவிக்க மாட்டார். ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு சமுதாயப் பணியாற்றுவதாக பீற்றி கொள்ளும் வீரமணி எதுவும் செய்ய மாட்டார்.ஆனால், இளிச்சவாய இந்துக்களின் மனம் புண்படும்படி இழிவுபடுத்துவது தான் வீரமணிக்குத் தெரியும்.அதேநேரம், காரியத்தில் கண் வைத்து, பெறவேண் டிய "பரிசுகள்' இன்னும் எவ்வளவோ இருப்பதால், ஆளும் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து அணுஅளவு கூட போராடவோ அறிக்கை வெளியிடவோ விரும்பமாட்டார் வீரமணி.ஆனால், கடவுளை நம்பியோர் கைவிடப்படார் என்பதை தெரிந்து, புரிந்து விட்டால் யாருக்கும் தெரியாமல் கடவுளையும் வணங்குவார் வீரமணி...!

- இங்கே தான் குட்டையை குழப்ப முயற்சி நடக்குது. ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது, அதற்கும் இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனையாக சொல்வதற்கும் என்ன தொடர்பு ? இயேசுவுக்கு திருமணம் ஆகவில்லை என்று கிறித்துவன் சொன்னால் அது அவன் நம்பிக்கையாக தெரியாது, எவனோ ஒருவன் டாவின்சி கோட் என்று கிளப்பி விட்டால், ஏசுவின் லட்சணத்தைப் பார் என்பீர்கள். சுப்பிரமணிய சாமிக்கு தன் மீது கவனம் திரும்புவதாக அடிக்கும் கூத்துகளுக்கு வீரமணி பதில் சொல்ல வேண்டுமா ? வீரமணி மனநல மருத்துவர் அல்ல, வழக்கறிஞர் தான்.

ஏன் இப்படி புலம்புகிறார்கள் என்றே தெரியவில்லை, கடவுள் நம்பிக்கையை தகர்த்த பெரியார் ஆயுள்களோடுதான் இருந்தார், கலைஞர், கி.வீரமணி எல்லோரும் நீண்ட ஆயுள்களோடுதான் இருக்கிறார்கள். கடவுளை பூஜிப்பவர்களுக்கு கைமேல் பலன் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் பூஜை செய்து கொடுப்பவர்களுக்கு தட்டுமேல் பலன் பணமாகவே கிடைக்கும். அதில் ஐயமே இல்லை. :)

கோவிலில் வெட்டிக் கொள்ளப்பட்ட சங்கரராமன் நாத்திகரா ? கடவுள் அன்றுமட்டும் சற்று கண் அயர்ந்தாரா ?

சாமி எது ? எங்கே இருக்கிறது ... என்று காட்டினால் வீரமணி நிச்சயம் வணங்குவார். சாமி எது என்று தெரியாமல் தானே மதச் சண்டையே நடக்கிறது, இந்த கூத்தில் வீரமணியும் வந்து கலந்து கொள்ள வேண்டுமாக்கும். வீரமணியே கும்பிட்டுவிட்டார் என்று சொல்லிக்கொண்டு இன்னும் அரை மில்லியன் வருடத்திற்கு இந்(து)த வருணாசிரம கருமத்தை (கர்மா) :) வழிநடத்திச் செல்லலாம் என்ற நப்பாசை போல தெரிகிறது.

எல்லாம் கடவுள் விருப்பப்படிதான் நடக்குது சாமியோவ்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்