பின்பற்றுபவர்கள்

10 மே, 2008

ரஜினி தன் விருப்பத்தை திரை ரசிகர்களிடம் திணிப்பது சரியா ?

ரசிகர்களின் நாடி பார்த்து படம் எடுக்கிறோம், என்று திரைத்துறையினர் சொன்னாலும், வெற்றி சமன்பாடு(பார்முலா) இல்லாவிட்டாலும் எந்த படமும் ஊத்தல் தான்.

நடிகர்களுக்கான கதை என்று எடுத்து, சரக்கு இல்லாமல் பிரபலமான நடிகரின் முகத்தைக் காட்டினாலே பணத்தை அள்ளிவிடலாம் என்ற நினைப்பெல்லாம் 'பாபா' படத்துடனேயே முதலும் கடைசியுமான முயற்சியாக கோணல் ஆகியது. அதை வைத்துதான் தனது முகத்துக்காக எந்தப் படமும் ஓடவில்லை என்று பிற நடிகர்களும் உணர்ந்து கொண்டு அடக்கிவாசிக்கின்றனர். கூடவே அவரவர்களுக்கான 'ஸ்டைல்' என்ற பெயரில் 10 விரல்களையும், கட்டு தலைமயிரையும் சிலுப்பி சிலுப்பி பஞ்சு வசனம் ( காது அடைக்கிறது என்று ரசிகர்கள் வைத்துக் கொள்வதாலா?) பேசித்தான் படத்தையும் பிழைப்பையும் நடத்துகிறார்கள். 3 படம் தொடர்ந்து வெற்றிபெற்றால் தனுஷ் போல அறிமுக நடிகர்கள் கூட கோடிகளில் சம்பளமும், 2 லட்சம் பதிவு செய்யப்பட்ட ரசிகர்கர் மன்றங்கள் இருப்பதாக அள்ளிவிடுவார்கள். 'உரக்க பேசினால் தான் இருப்பு நிரந்தரம்' என்பதே திரைத்துறையின் 'பார்முலா'. படம் ஓடினால் தன்னுடைய சிறப்பான நடிப்பினாலும், ஓடாவிட்டால் மாறுபட்டக் கதை என்பதால் இது ஒரு மாறுபட்ட முயற்ச்சி என அப்போது நேர்முகம் (பேட்டி) கொடுப்பார்கள். பிறகு தவறான படத்தை யோசனை இல்லாமல் ஒப்புக் கொண்டதாகவும், இமயமாக இருந்த இவர்களின் புகழை அந்த படம் கெடுத்துவிட்டது போலவும் ரொம்பவே 'ப்லிம்' காட்டுவார்கள்.

'ஓடக்கூடிய படம் என்று நம்பியதைவிட, ஓடிய படத்தில் நடித்தால் வெற்றி உறுதி' என்று ஓரளவு தீர்மனிப்பதால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அவர் மருமகன் தனுஷ் வரை நன்கு ஓடிய வேற்று மொழிப்படங்களின் கதைகளை தேர்ந்தெடுத்து தமிழில் மறுபதிப்பு செய்கிறார்கள்.

இதே வெற்றி நினைப்பில் தான் சரத்குமார், டாக்டர் ராஜசேகர் நடித்து தெலுங்கில் சக்கைப் போடுபோட்ட படத்தில் தமிழில் மறுபதிப்பாக நடிக்க, தமிழ் மக்களால் மறந்து போன ராஜசேகரும், அதே படத்தை தமிழில் மொழி மாற்றி வெளியிட்டால் மீள் அறிமுகம் கிடைக்கலாம் என்ற ஆசையில் வெளியிட்டார். இருகதைகளும் ஒரே கதை என்று தெரிந்து போனதால் இரண்டு படமும் திரையரங்கை விட்டே ஓடியது.

ஜெயம்ரவி, விஜய் மேலும் பல நடிகர்களும் புதிய கதையில் நடிப்பதைவிட மற்றமொழிகளில் ஓடி வெற்றிப்பெற்ற கதைகளிலேயே நடித்து தங்கள் படங்களை ஓட வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தரணி கொடுத்த தைரியத்தில் சோதனை முயற்சியாக குருவியில் விஜய் முற்றிலும் தனது ஹீரோயிசத்தைக் காட்ட, தற்போதுதான் அவருடைய இரட்டை வேட இம்சையில் தப்பிவந்த ரசிகர்களுக்கு குருவியில் ஒற்றை வேடமாக அதையே (ஓட்டப்பந்தயம், கார் ரேஸ்) மீண்டும் செய்து காட்ட, படத்தில் எதுவும் இல்லை என்ற சலிப்பில் குருவி 'தூக்கு'னாங்குருவியாக சுருண்டு முடங்கும் அளவுக்கு சென்றுவிட்டது. இதை ஈடுகட்ட அடுத்தப்படம் ? விஜய் மீண்டும் ரீமேக் படத்தில் நடிப்பார் என்றே நினைக்கிறேன்.

மறுதயாரிப்பு (ரீமேக்) படங்களில் நடிகர்கள் நடிப்பது தவறல்ல, ரீமேக் படங்கள் என்று எந்த ரசிகர்களும் ஒதுக்குவதில்லை. ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதிய கதையாக காட்டவேண்டும் என்றால் நடிகர்கள் / தயாரிப்பாளர்கள் / இயக்குனர்கள் எங்கு செல்வார்கள்? அவர்களும் கூடவே வெற்றிபெற்றாகனுமே. ஆனால்...

எந்த நடிகரும் தனக்கு பிடித்த கதை இது என்று என்றோ ஓடிய வேற்று மொழியின் பழைய படங்களை (பில்லா, நான் அவனில்லை பற்றி சொல்லவில்லை - அது மீள்தயாரிப்பு) மறு தயாரிப்பாக ரசிகர்களின் தலையில் கட்டுவதில்லை. அதாவது தனக்கு மிகவும் பிடித்த கதை என்று தனது ரசிகர்களிடம் அதைக் கொண்டு சென்று விற்பனையாக்குவதில்லை. அண்மைய படங்களைத்தான் ரீமேக் செய்கிறார்கள். ரஜினிகாந்த் மட்டுமே தனக்கு பிடித்ததெல்லாம் தன் பாணியில் மாற்றி ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறார். அந்த வகையில் சந்திரமுகி தற்போது குசேலன் இரண்டும் முன்பே எடுக்கப்பட்ட மலையாளப் படங்கள். இந்த இருபடங்களும் வெகு அண்மையில் வெளியான படங்கள் இல்லை. ரஜினி தனக்கு பிடித்ததாக இருக்கிறது என்ற காரணத்தால் தன் பாணிக்கு கதையை மாற்றி ரசிகர்களுக்கு படைக்கிறார். தனக்கு பொருந்தவேண்டும் என்பதற்காக சந்திரமுகி கதையை கொத்து பராட்டா போட்டதைப் பற்றி நண்பர் ஜமாலன் விரிவாக எழுதி இருக்கிறார். இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இது போன்ற தனக்கு விருப்பமான, பிடித்தமான கதைகளைத்தான் ரசிகர்களும் பார்க்க வேண்டும் என்று தன் விருப்பத்தை ரசிகர்களின் மீது திணித்து கொண்டு சென்று, அதைப் பார்ப்பதுதான் அவர்களின் தலையெழுத்து என மாற்றுவதை ஏற்கமுடிகிறதா ?

இந்த படத்தில் ரஜினி தனது ரஜினி பாத்திரத்திலேயே நடிக்கிறார் வருகிறாராம், அவருக்கு இருக்கிற (மாய) புகழையெல்லாம் காட்டினால் தான் படம் இயல்பாக இருப்பது போன்று தோற்றம் வரும், வழக்கமாக வாரிவளங்கும் பாரிவள்ளல் கதையாக இருப்பதால் ரஜினி இதைத் தேர்ந்தெடுத்ததில் வியப்பு இல்லை. தனது செல்வாக்கு எவ்வளவு என்றும் இந்த படத்தில் (காட்சிக்க) காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். பிறந்தநாளன்றாவது பார்க்க முடியுமா ? என வழக்கமாக (அன்பினால்) சென்னை வந்து காத்துக் கிடந்துவிட்டு திரும்பும் கூட்டம் இருக்கவே இருக்கிறது அவர்களுக்காக தாம் தாமாகவே ஒரு படம் முழுவதும் வந்து அருள் தரப்போகிறார். ரஜினிக்கு பிடித்த கதை, ரசிகர்களுக்கும் பிடித்தே ஆகவேண்டும்.

குசேலன் படம், ரஜினி அடுத்த கட்சிக்கு கட்டத்துக்கு செல்வதற்கான முன்னோடியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

17 கருத்துகள்:

ஜமாலன் சொன்னது…

ஒரு ஆலோசனை படத்தை வலது பக்கம் போடுங்கள். ரஜனி குறைந்த பட்சம் உங்கள் பதிவை பார்ப்பது போலாவது இருக்கும். தவிரவும் space symmatry இல்லை.

பதிவின் இறுதி வரிகளில் உங்கள் ஊகம் ரஜனி அடுத்த முதலவராக வேண்டும் என்பதா? :)

கிரி சொன்னது…

கோவி கண்ணன். ரஜினி தன் விருப்பத்தை ஏன் தன் ரசிகர்கள் மீது திணிப்பதாக கொள்கிறீர்கள், ரசிகர்களின் விருப்பத்திற்க்காகவும் தன்னை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்காகவும் மற்றும் விநியோகஸ்தர்களுக்காகவும் நடிப்பதாக ஏன் கொள்ள கூடாது. அவர் ஒன்றும் தன் படத்தில் ஆபாசத்தை திணிப்பது இல்லையே, குடும்பத்துடன் பார்க்கும் படியான படங்களையே கொடுக்கிறார். அவர் மாஸ் ஹீரோ அவரிடம் நீங்கள் பொழுது போக்கான படங்களையே எதிர்பார்க்க முடியும் மற்ற (புதிய முயற்சிகள்) எதையும் இல்லை. அவர் குடும்பத்துடன் சென்று அனைவரும் பார்க்க கூடிய வகையில் அளவில் படங்களை கொடுப்பதற்க்காவது நீங்கள் குறைந்த பட்சம் அவரை பாராட்டலாம். அனைவரையும் யாராலும் திருப்தி படுத்த முடியாது, அதே போல விமர்சனங்களும் தவிர்க்க முடியாதது.

என் மனதில் பட்டத்தையே கூறினேன், மற்றபடி விவாதத்திற்கு நான் வரவில்லை.

//குசேலன் படம், ரஜினி அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கான முன்னோடியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்//

இதையே நானும் எதிர்பார்க்கிறேன். இன்னும் எத்தனை காலத்துக்கு டூயட் பாடி கொண்டு இருப்பது. அமிதாப்பை போல் ரஜினியும் ஒரு நிலைக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம் மற்றும் பல ரசிகர்களின் விருப்பம்.

சந்தோஷ் சொன்னது…

//இந்த படத்தில் ரஜினி தனது ரஜினி பாத்திரத்திலேயே நடிக்கிறார் வருகிறாராம்//

ஆறில் இருந்து அருபது,எங்கேயோ கேட்ட குறல் படம்லாம் பார்த்தது இல்லயா?
ஒரு நல்ல நடிகனை திசை மாற்றி விட்டது இயக்குனரின் தவரு.அவர அப்பிடித்தான் பார்க்க முடியும்.ஆன்மீகம் அதிகமா இருந்ததாலதான் பாபா ஓடல...அவரோட நடிப்ப கின்டல் பன்னாதீங்க...

//அவருக்கு இருக்கிற (மாய) புகழையெல்லாம் காட்டினால் தான் படம் இயல்பாக இருப்பது போன்று தோற்றம் வரும்//

மாய புகழா ? யாருக்கு ? அவருக்குதான் அவர் புகழ் தெரியாமல் நடந்து கொள்கிறார்...
ஒரு blog அ பலபேர் படிக்கராஙனு தெறிச்சவுடனே என்னவேனாலும் எழுதிடரதா ? அவ்லொ பணம் அவர் கிட்ட இருந்தும் எளிமையாதான இருக்கார்...அவர குத்தம் கன்டுபுடிக்க ஒரு கூட்டமே இருக்குங்க...என்ன வேனும் உங்க‌லுக்குலாம்னு தெரில...


//ரஜினிக்கு பிடித்த கதை, ரசிகர்களுக்கும் பிடித்தே ஆகவேண்டும்.//

அடுத்த படத்தோட கதைய ரசிகர்கள்கிட்ட கேட்டு முடிவு எடுக்கனுமா? ஒரு herஒ படதோட கதைய முடிவு பன்னுவாங்க‌லா இல்ல வேர யாராவது பன்னுவாங்கலா?

நா ஒரு விஷயம் சொல்ரேன் கேலுங்க...

நீங்க‌ சொன்ன லாஜிக் படி பார்தா இனிமே நீங்க blog ல எழுதுவதர்கு முன்னாடி blog readerச் கிட்ட consulட் பன்னி எழுதுங்க... உங்க‌ கருத்தை எங மேல தினிக்காதீங்க... இப்படி நா சொல்றது எப்டி இருக்குமோ அப்டிதான் இருக்கு உங்க கருத்து...

நட்புடன்
சந்தோஷ்

Thekkikattan|தெகா சொன்னது…

ஓ! கதை இப்படிப் போகுதா? இதுக்கு பின்னணிதான் இந்த "மோர் வழங்கும்"பந்தல்களா? அதானே என்னாடா எலி அம்மணமா போகுதோன்னு நினைச்சேன். பாவம்யா மக்கள், மக்களின் ஏழ்மையை எவன் எவனெல்லாம் எது எதுக்கெல்லாம் பயன் படுத்திக்கிறான் பாருங்க :-(.

வடுவூர் குமார் சொன்னது…

நம்ம பணம் போடாதவரைக்கும் எது வேண்டுமானாலும் சொல்லலாம். :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
ஒரு ஆலோசனை படத்தை வலது பக்கம் போடுங்கள். ரஜனி குறைந்த பட்சம் உங்கள் பதிவை பார்ப்பது போலாவது இருக்கும். தவிரவும் space symmatry இல்லை.
//

ஜமாலன்,

மாற்றியாச்சு. :)

//பதிவின் இறுதி வரிகளில் உங்கள் ஊகம் ரஜனி அடுத்த முதலவராக வேண்டும் என்பதா? :)
//

ஊகம் இல்லை, நடப்பதையெல்லாம் பார்த்தால் இந்த சாலையின் முடிவு அந்த ஊருக்குத்தான் செல்லும். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
கோவி கண்ணன். ரஜினி தன் விருப்பத்தை ஏன் தன் ரசிகர்கள் மீது திணிப்பதாக கொள்கிறீர்கள், ரசிகர்களின் விருப்பத்திற்க்காகவும் தன்னை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்காகவும் மற்றும் விநியோகஸ்தர்களுக்காகவும் நடிப்பதாக ஏன் கொள்ள கூடாது. அவர் ஒன்றும் தன் படத்தில் ஆபாசத்தை திணிப்பது இல்லையே, குடும்பத்துடன் பார்க்கும் படியான படங்களையே கொடுக்கிறார். அவர் மாஸ் ஹீரோ அவரிடம் நீங்கள் பொழுது போக்கான படங்களையே எதிர்பார்க்க முடியும் மற்ற (புதிய முயற்சிகள்) எதையும் இல்லை. அவர் குடும்பத்துடன் சென்று அனைவரும் பார்க்க கூடிய வகையில் அளவில் படங்களை கொடுப்பதற்க்காவது நீங்கள் குறைந்த பட்சம் அவரை பாராட்டலாம். அனைவரையும் யாராலும் திருப்தி படுத்த முடியாது, அதே போல விமர்சனங்களும் தவிர்க்க முடியாதது.//

கிரி,

ரஜினி படங்களில் ஆபாசம் இல்லை என்று தாங்கள் சொன்னதன் பிறகு, ஷ்ரேயா குடும்ப (தமிழ்) பெண்ணாக அற்புதமாக சிவாஜியில் வந்து சென்றார், மீனாவின் தில்லான தில்லான பாடல்களில் க்ளோசப் தொப்புள் காட்சிகளெல்லாம் எனக்கும் ஆபாசமாக தெரியவில்லை. தெளிய வைத்ததற்கு மிக்க நன்றி ! ரஜினி நடித்த படங்களெல்லாம் குடும்ப படங்கள் தான்.

//என் மனதில் பட்டத்தையே கூறினேன், மற்றபடி விவாதத்திற்கு நான் வரவில்லை.
//

நானும் எனது கருத்தைத்தன் கூறினேன். விவாதம் செய்யவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//சந்தோஷ் said...
ஆறில் இருந்து அருபது,எங்கேயோ கேட்ட குறல் படம்லாம் பார்த்தது இல்லயா?
ஒரு நல்ல நடிகனை திசை மாற்றி விட்டது இயக்குனரின் தவரு.அவர அப்பிடித்தான் பார்க்க முடியும்.ஆன்மீகம் அதிகமா இருந்ததாலதான் பாபா ஓடல...அவரோட நடிப்ப கின்டல் பன்னாதீங்க...
//

சந்தோஷ்,
நான் எங்கே கிண்டல் செய்திருக்கிறேன் ? அந்த படத்தின் கதைபடி ரஜினி ரஜினியாகவே வருகிறார் என்பதுதான் செய்தி.

பாபா ஆன்மிகப் படம் என்று சொல்கிறீர்கள், தனக்கு பிடித்த பாபாஜியை தமிழகத்தில் பிரபலப்படுத்த முயன்றது திணிப்பு இல்லை என்று சொன்னதற்கு பிறகு என்னிடம் மறுப்பு இல்லை. :)


//மாய புகழா ? யாருக்கு ? அவருக்குதான் அவர் புகழ் தெரியாமல் நடந்து கொள்கிறார்...//

புகழ் மாயை என்பது ஆன்மிகவாதிகளுக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா ? அதே பாபா படம் ஊத்திய பிறகு ரஜினி அவ்வளவுதான் என்று சொன்னார்களே ? மாயை என்றால் என்னவென்று ரஜினிக்கு பாபா படம் மூலம் தற்காலிக படிப்பினை கிடைத்திருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

//ஒரு blog அ பலபேர் படிக்கராஙனு தெறிச்சவுடனே என்னவேனாலும் எழுதிடரதா ? அவ்லொ பணம் அவர் கிட்ட இருந்தும் எளிமையாதான இருக்கார்...அவர குத்தம் கன்டுபுடிக்க ஒரு கூட்டமே இருக்குங்க...என்ன வேனும் உங்க‌லுக்குலாம்னு தெரில...//

பலபேர் படிப்பதற்காக ரஜினியை எழுதவேண்டும் என்ற தேவை எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நான் ரஜினியைப் பற்றி எழுதுவதையே பிழைப்பாக கொள்ளவில்லை. பணம் அதிகம் இருந்தால் கறைத்துக் குடிக்க முடிமா ? நாள் தோறும் சிவாஜி போல் மேக்கப் போட்டு இளமையாக இருக்க முடியுமோ ? எது தேவையற்றதோ அதை செய்யாமால் இருக்கிறார். அதற்கு எளிமை என்று பெயர் கொடுத்து இருந்தால் மன்னிக்கவும். எப்போதும் எல்லோருமே பகட்டாகவே நடந்து கொள்வதுதான் சிறப்பு என்ற நினைப்பில் இருப்பவர்களுக்கு ஒருவேளை அவர் இயல்பாக இருப்பதைக் கூட இமயமாக புகழமுடிகிறது ?

சரிவிடுங்க, நடிகர் கமலஹாசனிடமும் இல்லாத பணமா ? புகழா ? அவர் திமிர், பகட்டு என நடந்து கொள்கிறா ?

ரஜினியைக் கடவுளாக நினைப்பது உங்கள் விருப்பம், மாற்றுக் கருத்துச் சொல்பவர்களெல்லாம் காழ்புணர்வாகத்தான் சொல்வார்கள் என்று நினைப்பதும் உங்கள் விருப்பம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சந்தோஷ் said... ஒரு விஷயம் சொல்ரேன் கேலுங்க...

நீங்க‌ சொன்ன லாஜிக் படி பார்தா இனிமே நீங்க blog ல எழுதுவதர்கு முன்னாடி blog readerச் கிட்ட consulட் பன்னி எழுதுங்க... உங்க‌ கருத்தை எங மேல தினிக்காதீங்க... இப்படி நா சொல்றது எப்டி இருக்குமோ அப்டிதான் இருக்கு உங்க கருத்து...

நட்புடன்
சந்தோஷ்//

சரிங்க, இடுகை என்பெயரிலேயே தான் வருகிறது, படிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வது பதிவர்கள் தான். நான் சொல்வதே சரி என்று எங்கும் சொன்னது கிடையாது. பதிவுலகில் கட்டுடைத்தல் உண்டு, கட்டமைத்தல் என்றுமே எடுபடாது, அந்த ஒருகாரணத்தினால் தான் தொடர்ந்து எழுத முடிகிறது. ரஜினி ரசிகர்கள் புண்படுவார்கள், பெரியார் பற்றாளர்கள் புண்படுவார்கள், ஆன்மிகவாதிகள் புண்படுவார்கள் என்றெல்லாம் எவரும் நினைத்தால் ப்ளாக் எழுதாமல் நண்பர்களுக்கு மின் அஞ்சல் எழுதுவதோடு நிறுத்துக் கொள்ளலாம்.

பதிவுகள் open discussion forum, எனது கருத்தை நான் சொல்கிறேன், எதிர்கருத்துகளை வரவேற்கிறேன். பிறக்கிறவர்கெல்லாம் சாகிறார்கள் என்பது உறுதி என்பதற்காக பிறக்கவே தேவை இல்லை என்பது போல் உங்கள் வாதம் இருப்பதால், இதற்கு மேல் பதில் சொல்ல விருப்பம் இல்லை. :(

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
நம்ம பணம் போடாதவரைக்கும் எது வேண்டுமானாலும் சொல்லலாம். :-))

8:48 PM, May 11, 2008
//

குமார்,

100 கோடியில் படம் எடுத்தால் தான் தயாரிப்பாளர்கள் செழிப்படைவதாக ரசிகர்கள் நினைத்து அதை ஊக்கப்படுத்துகிறார்கள்.

ரோபோ 100 கோடியில் உங்கள் பங்கு என்ன ?
:)

Udhayakumar சொன்னது…

//ஆனால் இது போன்ற தனக்கு விருப்பமான, பிடித்தமான கதைகளைத்தான் ரசிகர்களும் பார்க்க வேண்டும் என்று தன் விருப்பத்தை ரசிகர்களின் மீது திணித்து கொண்டு சென்று, அதைப் பார்ப்பதுதான் அவர்களின் தலையெழுத்து என மாற்றுவதை ஏற்கமுடிகிறதா ?//

கண்ணன், தனக்கு பிடித்தாக இருக்கும் காரியம் மற்றும் செயல்களிலேயே அவர்களுடைய அதிக பட்ச உழைப்பு/திறமை வெளிப்படும். இது எந்த இசத்தில்லும், எந்த மறுப்பு கொள்கைளிலும் தெளிவாகக் காண முடியும். நீங்கள் முக்கி முக்கி தமிழ்நாடு உயர வேண்டும், அனைவரும் அய்யர் என பதிவு போட்டாலும் சூடான இடுகைகளில் வருவது **** ஜொள் விடுவது தவறா? வகையாறாக்கள்தான்.

உங்கள் கூற்றுப்படி அனைத்தும் திணிப்புதான். (இறை பரப்பும்/மறுப்பும்). கல்யாணத்தில் மணமக்களை வாழ்த்திப் பேசும் அரசியல்வாதி கூட டெயில்பீஸாக அரசியலை திணிப்பதும், எனது கட்சியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாது யோகாசனம் பயில வேண்டும் என சொல்வதும் திணிப்புதான். நல்ல பலன்கள் விளையும் எனில் அதை திணிப்பாக கொள்ள முடியாது. இது மேற் சொன்ன அனைத்துக்கும் பொருந்தும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கண்ணன், தனக்கு பிடித்தாக இருக்கும் காரியம் மற்றும் செயல்களிலேயே அவர்களுடைய அதிக பட்ச உழைப்பு/திறமை வெளிப்படும். இது எந்த இசத்தில்லும், எந்த மறுப்பு கொள்கைளிலும் தெளிவாகக் காண முடியும். நீங்கள் முக்கி முக்கி தமிழ்நாடு உயர வேண்டும், அனைவரும் அய்யர் என பதிவு போட்டாலும் சூடான இடுகைகளில் வருவது **** ஜொள் விடுவது தவறா? வகையாறாக்கள்தான்.//

உதயகுமார்,
அனைவரும் அய்யர் என பதிவு போட்டதை இவ்வளவு தூரம் நினைவு வைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. :) அந்த பதிவுக்கு எதிர்ப்பு எதும் வரவில்லை. விஜயின் டாக்டர் பட்டம் போல் தான் பிராமணர்கள் உட்பட அனைவரும் 'ஐயர்' பட்டம் போட்டுக் கொள்வது

//உங்கள் கூற்றுப்படி அனைத்தும் திணிப்புதான். (இறை பரப்பும்/மறுப்பும்). கல்யாணத்தில் மணமக்களை வாழ்த்திப் பேசும் அரசியல்வாதி கூட டெயில்பீஸாக அரசியலை திணிப்பதும், எனது கட்சியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாது யோகாசனம் பயில வேண்டும் என சொல்வதும் திணிப்புதான். நல்ல பலன்கள் விளையும் எனில் அதை திணிப்பாக கொள்ள முடியாது. இது மேற் சொன்ன அனைத்துக்கும் பொருந்தும்.//

நான் மேலே சொல்லி இருக்கிறேன், எனது இடுகைகள் எதிலும் நான் வலியுறுத்துதல் செய்வதில்லை. எனது கருத்தை நான் எழுதுகிறேன். எதிர்ப்பாக ஆபாசமின்றி வரும் பின்னூட்டங்களையும் வரவேற்கிறேன்.
100 கோடி பட்ஜட்டில் படம் வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களின் பணத்தையெல்லாம் தயாரிப்பாளர்களின் பாக்கெட்டில் சேர்க்க வேண்டும் என்று எந்த ரசிகன் சொல்லுகிறான்? 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்று பழமொழி தான் நினைவுக்கு வருகிறது நண்பரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan|தெகா said...
ஓ! கதை இப்படிப் போகுதா? இதுக்கு பின்னணிதான் இந்த "மோர் வழங்கும்"பந்தல்களா? அதானே என்னாடா எலி அம்மணமா போகுதோன்னு நினைச்சேன். பாவம்யா மக்கள், மக்களின் ஏழ்மையை எவன் எவனெல்லாம் எது எதுக்கெல்லாம் பயன் படுத்திக்கிறான் பாருங்க :-(.
//

தெகா,

'என்னவோ திட்டம் இருக்கு' குலுவாலிலே முத்து வந்தல்லோ.
:)

எலி என்னிக்கும் அம்மணாகத்தான் ஓடும். ஆடையோடு ஓடி பார்த்திருக்கிறீர்களா ?

Shahul Hameed Adanoorar சொன்னது…

இந்த பதிவுக்கு இவ்வளவு கடும் பதில் (வழக்கம் போல்), வரும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. நாம் எல்லோரும் இந்தியர்கள் தான். அதில் எனக்கு முரண்பாடு இல்லை. நானும் ஒரு இந்தியன் என்பதில், எனக்கு பெரும் பெருமை உள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும், தமிழன், தமிழனுக்கு சங்கம், மன்றம் அமைப்பதைவிட, வந்தாருக்கு செய்வது (வந்தாரை வாழ வைக்கும் தங்கத் தமிழகம்), வழக்கமாகி விட்டது. அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்தான் வியப்பாக உள்ளது. சாதி, மதம், சம்பிரதாயமின்றி, இன உணர்வு, ஒவ்வொரு தமிழனுக்கும் வேண்டும். ஒன்று பட்ட தமிழனாக இருக்கக் கற்றுக்கொள்வோம். அதற்குப்பின் ரசிகனாக இருங்கள் (இது எனது தமிழ் சகோதரர்களுக்கு).

கோவி.கண்ணன் சொன்னது…

//Shahul Hameed Adanoorar said...
இந்த பதிவுக்கு இவ்வளவு கடும் பதில் (வழக்கம் போல்), வரும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. நாம் எல்லோரும் இந்தியர்கள் தான். அதில் எனக்கு முரண்பாடு இல்லை. நானும் ஒரு இந்தியன் என்பதில், எனக்கு பெரும் பெருமை உள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும், தமிழன், தமிழனுக்கு சங்கம், மன்றம் அமைப்பதைவிட, வந்தாருக்கு செய்வது (வந்தாரை வாழ வைக்கும் தங்கத் தமிழகம்), வழக்கமாகி விட்டது. அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்தான் வியப்பாக உள்ளது. சாதி, மதம், சம்பிரதாயமின்றி, இன உணர்வு, ஒவ்வொரு தமிழனுக்கும் வேண்டும். ஒன்று பட்ட தமிழனாக இருக்கக் கற்றுக்கொள்வோம். அதற்குப்பின் ரசிகனாக இருங்கள் (இது எனது தமிழ் சகோதரர்களுக்கு).

10:07 PM, May 12, 2008
//

Shahul Hameed Adanoorar,

கருத்துக்கு மிக்க நன்றி, ரசிகர்கள் எப்போதும் ஆவேசம் அடைவார்கள். இது பல்வேறு அமைப்புகளில் பார்த்தே வருகிறோம். இதில் வியப்பு இல்லை.

எந்த ஒரு கலைஞனையும், போற்றுவது புகழ்வது வேறு, அந்த கலைஞனுக்கு அடிமையாகவே இருப்பது வேறு. தமிழ்நாட்டு ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள்.

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) சொன்னது…

திணிப்பு என்று எதைக் கூறுகிறீர்கள் ? எதையும் கட்டாயத்தின் பேரில் செய்யத் தூண்டுவது தான் திணிப்பு. யாரையும் பார்த்துத் தான் ஆக வேண்டும் என்று அவர் சொன்னதில்லை. ஒரு கலைஞன் தனக்கு பிடித்ததை செய்கிறான். அவன் செய்வதை விரும்புவர்கள் பார்க்கிறார்கள். (தலைவர் பாஷையில் - இது சேக்கற கூட்டம் இல்லை...தானா சேர்ற கூட்டம். )

இதில் திணிப்பு எங்கிருந்து வந்தது?

பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டவர்கள் சற்று சமூக அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பது உண்மை. (அவர்கள் சொல்வதை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பும் ரசிகர்கள் இருப்பதால்). ஆனால் தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்கும், ஒழுக்க விதிமுறைகளுக்கும் கட்டுபட்டவனாய் ஒரு கலைஞன் இருக்க முடியாது. அவனுக்கு பிடித்ததை செய்பவனாகத் தான் அவன் இருக்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...
திணிப்பு என்று எதைக் கூறுகிறீர்கள் ? எதையும் கட்டாயத்தின் பேரில் செய்யத் தூண்டுவது தான் திணிப்பு. யாரையும் பார்த்துத் தான் ஆக வேண்டும் என்று அவர் சொன்னதில்லை. ஒரு கலைஞன் தனக்கு பிடித்ததை செய்கிறான். அவன் செய்வதை விரும்புவர்கள் பார்க்கிறார்கள். (தலைவர் பாஷையில் - இது சேக்கற கூட்டம் இல்லை...தானா சேர்ற கூட்டம். )

இதில் திணிப்பு எங்கிருந்து வந்தது?

பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டவர்கள் சற்று சமூக அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பது உண்மை. (அவர்கள் சொல்வதை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பும் ரசிகர்கள் இருப்பதால்). ஆனால் தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்கும், ஒழுக்க விதிமுறைகளுக்கும் கட்டுபட்டவனாய் ஒரு கலைஞன் இருக்க முடியாது. அவனுக்கு பிடித்ததை செய்பவனாகத் தான் அவன் இருக்க வேண்டும்.

//

வந்தியத்தேவன்,

'பாபாஜி' என்ற சாமியாரை படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது திணிப்பு இல்லையா ? 'பாபாஜி' இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரரா ? அல்லது சமூக சீர்த்திருத்தவாதியா ? இவருக்கு பிடித்தவர் என்ற காரணத்தினால் தானே அந்த சாமியாரை படத்தின் மூலம் அறிமுகப்படுத்த முயன்றார்.

100 கோடி பட்ஜட்டில் படம் ? இதுவும் ரசிகர்கள் எப்படியும் தன் படத்தைப் பார்த்துவிடுவார்கள் என்ற திணிப்புதானே ?

படையப்பா படத்தில் ஜெவுக்கு சவால் விடுவது போன்ற வசனங்கள் இவையெல்லாம் திணிப்பு இல்லையா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்