பின்பற்றுபவர்கள்

5 மே, 2008

இந்தியர்கள் வைகோல் சாப்பிடனுமா ?

உயர்சாதி மனப்பான்மை எப்போதும் ஏழை எளியவர்களுக்கு சத்தான உணவு கிடைத்தால் பொறிந்து தள்ளிவிடுவார்கள். மூன்றுவேளையும் ஏழை எளியவர்களுக்கு அரசாங்க மானியத்தில் தரமான உணவு கிடைத்தால் 'அரசாங்கம் எல்லாவற்றையும் இலவசமாக அறிவித்து மக்களை சோம்பேறி ஆகிவிட்டது என்றெல்லாம் புலம்புவார்கள். அதே சமயத்தில் அவர்கள் செத்த விலங்கைத் தின்றாலும் 'இவன் இழிபிறவி, தீண்டத்தகாதவன்' என்றெல்லாம் சொல்லி அவன் உணவு முறைகளை வைத்தே அவனை தூற்றுவார்கள்.

அந்த செய்தி உண்மையா என்று தெரியவில்லை, உண்மை என்றால், அமெரிக்காவைப் பொறுத்து இன்னும் இந்தியா, சீனா ஏழை நாடுகள்தான் போலும், இவர்கள் தரமான, சத்தான உணவு வகைகளை உண்ணக் கூடியவர்கள் அல்ல என்று நினைத்திருப்பார்கள் போலும், கடந்த பத்தாண்டில் இந்தியா, சீனாவில் மென்பொருள் வேலை முதல் இயந்திரவியல் வேலைகள் செய்யும் அனைவருக்கும் கனிசமான ஊதியம் கிடைக்கிறது, நடுத்தர வர்கத்தினரின் தனிமனித வருமானம் உயர்ந்திருக்கிறது.

இத்தகைய பொருளியல் உயர்வால் நல்ல பொருள்களை தேடி வாங்கும் திறனும் மிகுந்திருக்கிறது. முன்பெல்லாம் பெயர் பெற்ற (Branded) பொருள்களை பகட்டுக்காக வாங்குவார்கள், தற்பொழுது தரம் காரணமாக அத்தகைய பொருள்களை நடுத்தர வர்கத்தினரும் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள், 100 ரூபாய்க்கு நான்கு பொருள் வாங்கி நான்கு மாதத்தில் அது தரத்தை இழந்து பல் இளிப்பதைப் பார்பதைவிட, 100 ரூபாய்க்கு ஒரு பொருள் கிடைத்தாலும் அது நீண்ட நாட்கள் நிற்கும் என்ற நம்பிக்கையில் தரமான பொருள்களையே விரும்பி வாங்குகிறார்கள், ஏற்றுமதி விற்பனைக்கு என்று பொறிக்கப்பட்ட பொருள்கள் இந்தியாவிலேயே நன்றாக விற்பனை ஆகிறது.

முன்பெல்லாம் சீனத்தயாரிப்புகள் தரம் காரணமாக ஐரோப்பிய நாடுகளால் புறக்கணிக்கப்ப்ட்டு வந்தது, தற்பொழுது விலைக் குறைவு என்ற காரணத்தினால் சீனத்தயாரிப்புகளை ஐரோப்பியர்களும் நாட ஆரம்பித்துவிட்டார்கள், அதற்கு காரணம் சீனத்தயாரிப்பு மேம்பட்டு இருக்கிறது என்ற பொருள் அல்ல, மாறாக தரமான பொருள்களின் உலகளாவிய தேவை மிகுந்துவிட்டது. அதற்கு ஈடுகொடுத்து உலக நாடுகளால் தரமிக்க பொருள்களை உற்பத்தி செய்ய முடியாமல் சென்று, அந்த கூடுதல் தயாரிப்புகளையும் சீனா, இந்திய நாடுகளிலேயே உற்பத்தி செலவு குறைவு என்பதால் செய்யும் நிலமை ஏற்பட்டுவிட்டது.

ஆசிய நாடுகள் என்றாலே எதோ காட்டுமிராண்டிகள் என்று நினைத்துவந்த மேற்கத்திய நாடுகளுக்கு, இந்தியாவும் சீனாவும் தரமான பொருள்களை வாங்குவதும் அன்றி உற்பத்தி செய்வதற்கும் இந்த நாடுகளின் தயவு வேண்டி இருப்பது எரிச்சலையே ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் தரமான பொருள்களையும், உணவுகளையும் நாடாமல் தன் போக்கில் தன் உற்பத்தியிலேயே காலம் தள்ளிய இவ்விரு நாடுகளும், தரமான பொருள்களை உலக சந்தையில் பெருவதால், இந்த பொருள்களின் விலை உயர்வும் தவிர்க்க முடியாததாகவே சென்றுவிட்டது. உலக நாடுகள் எங்கும் உணவு பொருள்களின் விலை ஏற்றம், சிங்கையில் அரிசி விலை கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இருமடங்கு. ஆயத்த (ரெடிமேட்) உணவின் விலைகளும் உயர்ந்துவிட்டன.

உலக நாடுகளில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் உணவு பொருள் விலை உயர உயர அந்த அரசாங்கங்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது, மக்களிடம் மனக்குறையும்(அதிருப்தியும்) ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் சீனாவும், இந்தியாவும் தரமான உணவு பொருள்களை வாங்குவது தான் காரணம் என்று சொல்கிறார்கள். வாங்குவதுதான் காரணமே அன்றி இந்தியர்களும் சீனர்களும் நிறைய சாப்பிடுகிறார்கள் என்று சொல்வது கண்டனத்துக் குரியதுதான். இந்தியர்களும் சீனர்களும் சாப்பிடுவது உலக நாடுகளால் தரப்படும் இலவச உணவு இல்லை.

உழைப்பு என்றால் என்னவென்று தெரியாத உயர்சாதி மனப்பான்மைக்கும், மேல்நாட்டு மன்னர்களுக்கும் நடுத்தரவர்கம் நன்றாக சாப்பிட்டால் வயுறு எரியும் போல் தெரிகிறது. இவர்களுக்காக இந்தியர்களும் சீனர்களும் வைக்கோல் சாப்பிட முடியுமா ?

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல தரமானவற்றை இந்தியர்கள் வாங்குவதும் உபயோகிப்பதும் அமெரிக்க உலகச்சந்தை பார்வையில் தவறாக இருக்கிறது.
சராசரி ஒரு இந்தியர் வருடத்துக்கு சுமார் 190கிலோ உணவு உண்பதாகவும், சராசரி ஒரு அமெரிக்கர் ஒரு வருடத்தில் சுமார்1080கிலோ உணவைத் தின்று தீர்ப்பதாகவும் அமெரிக்க ஆய்வுகளே தெரிவிக்கின்றன என்று சமீபத்தில் படித்தேன்.

குமரன் (Kumaran) சொன்னது…

இந்த செய்தி உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் புஷ்ஷும் அவரது வெளியுறவுத் துறை செயலாளர் ரைசும் அப்படிப் பேசக் கூடியவர்கள் தான் என்பதால் நம்பத் தோன்றுகிறது. இணையத்தில் தேடிப் பார்த்ததில் இந்திய ஊடகம் இதனைப் பற்றி பேசியவை தான் கிடைக்கின்றன; அமெரிக்க ஊடகமோ வேறு வெளிநாட்டு ஊடகமோ இதனைப் பற்றி பேசியதாகத் தெரியவில்லை.

சுல்தான் சொன்னது போல் தான் தனிநபர் நுகர்வு இருக்கிறது. இது வரை அமெரிக்கர்கள் உலக உற்பத்தியை அதிகமாக நுகர்ந்தார்கள். இப்போது மற்றவர்களும் நுகர வந்துவிட்டார்கள் என்பதால் தனிப்பட்ட அமெரிக்கர்கள் அதனைப் பொருட்படுத்துவார்களா தெரியவில்லை. நம் நாட்டில் உள்ளூர் அரசியலுக்காகப் பேசுவார்களே அது போல் தான் அமெரிக்க அரசியல்வாதிகளும் பேசியிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. அவர்களுக்கு எத்தனால் நிறுவனங்களின் பணம் தேவை; வெப்ப நிலை மாற்றத்தைப் பற்றி பேசினாலும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு (நிறுவனங்களுக்குப்) பிடிக்காது. அதனால் வழக்கம் போல் எல்லாவற்றிற்கும் இந்திய சீன வளர்ச்சியைக் கைகாட்டுக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

சீனப் பொருட்களின் தரத்தைப் பற்றி பேசும் போது உங்கள் எண்ணம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இது ஒரு மனநிலை (Mind Set) போல் தோன்றுகிறது. சீனப் பொருட்கள் சிறந்த தரம் (the best) கொண்டவை இல்லாவிட்டாலும் மற்ற நாட்டுத் தரத்திற்கு (குறிப்பாக நம் நாட்டுத் தரத்திற்குக்) குறைந்தவை இல்லை என்பது இங்கே அமெரிக்காவில் சீனப் பொருட்களை நுகர்ந்ததில் கிடைத்த அனுபவம். ஆனாலும் சீனப் பொருட்களின் தரத்தைப் பற்றி நம்மால் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதே போன்ற மனநிலையை புஷ்ஷும் ரைசும் காட்டுகிறார்களோ என்னவோ?

இந்தச் சுட்டியையும் பாருங்கள். http://answers.yahoo.com/question/index?qid=20080504091124AAAlX5U

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
நல்ல தரமானவற்றை இந்தியர்கள் வாங்குவதும் உபயோகிப்பதும் அமெரிக்க உலகச்சந்தை பார்வையில் தவறாக இருக்கிறது.
சராசரி ஒரு இந்தியர் வருடத்துக்கு சுமார் 190கிலோ உணவு உண்பதாகவும், சராசரி ஒரு அமெரிக்கர் ஒரு வருடத்தில் சுமார்1080கிலோ உணவைத் தின்று தீர்ப்பதாகவும் அமெரிக்க ஆய்வுகளே தெரிவிக்கின்றன என்று சமீபத்தில் படித்தேன்.
//

சுல்தான் ஐயா,

உங்கள் தகவல் படி,
சுமார் 5 பங்கு மிக்கவையாகவே உண்ணும் அமெரிக்கர்களை வைத்துக் கொண்டு இந்தியர்களை சாப்பாட்டு இராமன்களாக நினைக்கும் அவர்களை என்னவென்று சொல்வது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

குமரன் (Kumaran) said...
இந்த செய்தி உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் புஷ்ஷும் அவரது வெளியுறவுத் துறை செயலாளர் ரைசும் அப்படிப் பேசக் கூடியவர்கள் தான் என்பதால் நம்பத் தோன்றுகிறது. இணையத்தில் தேடிப் பார்த்ததில் இந்திய ஊடகம் இதனைப் பற்றி பேசியவை தான் கிடைக்கின்றன; அமெரிக்க ஊடகமோ வேறு வெளிநாட்டு ஊடகமோ இதனைப் பற்றி பேசியதாகத் தெரியவில்லை.
........ இந்தச் சுட்டியையும் பாருங்கள். http://answers.yahoo.com/question/index?qid=20080504091124AAAlX5U//

குமரன்,

தங்கள் நீளமாக பின்னூட்டத்தகவல்களுக்கு நன்றி. நிறைய தகவல்களை கருத்தாக சொல்லி இருக்கிறீர்கள்.

சீனத்தயாரிப்புகளின் தரம் இந்திய தயாரிப்புகளைவிட ஒப்பீட்டு அளவில் தரம் குறைந்தவை என்று சொல்ல முடியாது. இந்தியா உற்பத்தி பொருள்கள் பெரும்பாலும் உணவு பொருள்கள் தான். இரு நாட்டு உற்பத்தி பொருள்களும் வெவ்வேறானவை, இந்திய உற்பத்தி உணவு பொருள்களுக்கு வளைகுடா நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சீனா தயாரிக்காத பொருள்களே இல்லை, தாஜ்மகாலைக் கூட மாதிரியாக செய்து தங்கள் நாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்த முயன்றிருக்கிறார்கள். சீனத்தயாரிப்புகளை சிங்கை சீனர்கள் கூட வாங்கத் தயங்குகிறார்கள்.
:)

நான் ஊருக்குச் செல்லும் போது நண்பர்கள் எதாவது மின்னனனு பொருள்களை வாங்கிவரச் சொல்லி சீனத் தயாரிப்பு வேண்டாம், ஜப்பான் தயாரிப்பு என்றால் வாங்கிவா என்று சொல்லுவார்கள். சீன குறைவான விலைக்கு பொருளை விற்க முனைவதற்கு மிகுந்து உற்பத்தி செய்யும் திறன் மட்டுமே காரணமல்ல, அதன் தரமும் காரணம் என்றே நினைக்கிறேன்.

ILA (a) இளா சொன்னது…

Unbalanced ...

Unknown சொன்னது…

இந்தியர்கள் பிட்சாவும், பர்கரும், வறுத்த் கோழியும் (மேரி பிரவுனாமே?) சாப்பிடுவதால், அமெரிக்கர்கள் மாதிரி கொழுப்பு வேண்டுமானால் இந்தியர்களுக்கு அதிகரிக்கலாம். விலைவாசி உயர்கிறது என்பது 'புதரின்' பிதற்றல்களில் ஒன்று.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்