பின்பற்றுபவர்கள்

5 ஏப்ரல், 2008

கர்நாடகத்தில் யாருடைய அரசு - கலைஞர் எடுத்த முடிவு !!!

இடையூறப்பா வேண்டுமென்றே நடத்திக்காட்டிய ஒக்கனேகல் கிறுக்குத்தனம், மேலும் கர்நாடக அரசியல் வாதிகளின் தேர்த்தல் நோக்கத்தில் நடந்த கேலிக் கூத்தை தனது அறிவு கூர்மையால் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் கலைஞர். ஒகனேகல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக தேர்த்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப் போவதாக அறிவிப்பை வெளி இட்டுவிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து வரும் 10 ஆம் தேதி கர்நாடக மாநிலம் தழுவி நடக்கவிருந்த கடையடைப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆட்சி அதிகாரம் என்னும் தேனடைக்கு எச்சில் ஒழுகி காத்திருந்த கர்நாடக தேசிய வாதக் கட்சிக்களுக்கு, குறிப்பாக 'இடையூறப்பா'வுக்கு பெரும் பின்னடைவு, காங்கிரஸ் சார்பில் அதே உத்தியில் களம் இறங்கிய எஸ் எம் கிருஷ்ணாவுக்கு பெரும் பின்னடைவு. வரும் தேர்த்தலில் ஒக்கனேக்கல்லை முன்னிருத்தி ஓட்டு வேட்டையாடிவிடலாம் என்று கர்நாடக மாநில கட்சிகள் போட்ட மிக மோசமான நாடகம் பாதியில் முடிவுக்கு வந்திருக்கிறது.

இப்படி ஒரு பிரச்சனை கிளம்பாது என்று எண்ணி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய போது கலைஞர் அரசுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கர்நாடகா தேர்த்தலை சந்திக்கும் நிலை இருந்ததாலேயே இந்த பிரச்சனையை இடையூறப்பா தொடங்கி வைத்தார். நினைத்தபடி எல்லாம் நடக்கும் என்று நினைத்தவர்களின் எண்ணத்தில் காவேரி ஆற்றின் மண் விழுந்துவிட்டது. அடுத்து என்ன திட்டம் போடுவார்களோ!!!

கலைஞரின் அறிவிப்பை தொடர்ந்து கடையடைப்பை தள்ளி வைத்தைததைத் தொடர்ந்து ஒக்கனேகல் யாருக்கு சொந்தம் என்பதை விட அதில் தண்ணீர் சேமிப்பதில் தான் எரிச்சல் அடைந்திருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. என்ன மாதிரி ஒரு மட்டமான எண்ணம், அதில் தேங்கும் தண்ணீர் அங்கிருந்து வரும் உபரி நீர்தான், அதையும் சேமிக்கக் கூடாது என்றால் தமிழ்நாட்டின் மீது தமிழர்கள் மீதும் உள்ள வெறுபிற்காரணம் தமிழர்கள் எல்லாவிததிலும் முன்னோடியாக எப்போதுமே இருப்பது தான்.

மொழி உணர்வு சரியாக புரிந்து கொண்டு அதன் வளர்ச்சி நோக்கிய எண்ணம் இல்லை என்றால் அது மொழி வெறியாக மாறி பகை அரசியலையே வளர்க்கும், முன்பு தமிழ் தீண்டத்தகாத மொழி என்று வடமொழி / இந்தி மொழி வெறியர்களால் தமிழகத்திலேயே சொல்லிக் கொண்டு பகையை வளர்த்துக் கொண்டார்கள் என்பது கண்கூடு, தமிழ் மொழியை தாங்கிப் பிடிக்க நாம் இனரீதியிலான தாக்குதல் நடத்தாமல் மொழிக்கலப்பை வெற்றிகரமாக களையெடுத்து, விலக்கி வைத்து தமிழை வளர்ந்தோம். இதில் நாம் தனித்தன்மையுடன் இருப்பது அவர்களுக்கெல்லாம் எரிச்சல் தான், தமிழனை தள்ளிவைக்கிறார்களா ? அவர்கள் யார் நம்மை தள்ளி வைக்க ? அவர்களின் வெளிப்படையான காழ்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள். தமிழன் என்றும் பின்னடையவும் மாட்டான் தாழ்ந்துவிடவும் மாட்டான்.

கலைஞரின் இந்த தற்காலிக முடிவு பாரட்டத்தக்கது, நடந்த விரும்பத்தக்காத நிகழ்வுகள் தான் தமிழன் தன்னை உணர்ந்து கொள்ளவும் தமிழர்களுக்குள் ஒற்றுமையையும், மாற்று மொழி பேசுபவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பதை உணர்த்தவும் வாய்பாக அமைந்துவிடுகிறது. தமிழர்களைப் போல் கன்னடர்களும் புரிந்து கொள்ள காலம் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கட்டும்.

எது எப்படியோ, கர்நாடகத்தில் அடுத்த ஆட்சியை தமிழர்கள் மீது உள்ள வெறுப்புணர்வை / கன்னட மொழி வெறியைத் தூண்டி அமைத்துக் கொள்ள முடியாது என்ற அளவில் பக்கத்து மாநில முதல்வர் யார் என்பதை கலைஞரின் செயல் தான் தீர்மானித்து இருக்கிறது.

5 கருத்துகள்:

Thekkikattan|தெகா சொன்னது…

பொறுத்தது பொறுத்தோம் இன்னுமொரு இரண்டு மாதங்கள் பொறுக்க முடியாதா என்ன. கலைஞர் இந்த நேரத்தில் இதனை செய்யதது ரொம்ப சரியான செயல், இல்லையென்றால் பிரச்சினை கண்டிப்பாக பெரிய வடுவாக இரண்டு மாநிலங்களுக்கும் நிகழ்ந்து முடிய காரணமாக போயிடும்.

இப்பொழுது தமிழகத்தில் கொஞ்சம் ச்சூடு ஏறி இருக்கிறது, திரையுலக தெய்வங்கள் கொஞ்சம் கொதித்து தமிழணர்வை அவர்களிடம் விதைத்து விட்டதால்... :).

உடன்பிறப்பு சொன்னது…

தலைவரின் ஸ்ட்ரோக் எப்போதுமே மாஸ்டர் ஸ்ட்ரோக் தான்

ராவணன் சொன்னது…

ஏப்ரல் 1 உலக முட்டாள்கள் தினம்,ஆனால் 365 நாளும் தமிழர்களுக்கு முட்டாள்கள் தினம் என்று கருணாநிதியின் அறிக்கையிலிருந்து அறிய முடிந்தது.வாழ்க தமிழினத்தலைவர்!!!!!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களின் நெருக்குதாலால், இத்தாலிய அம்மையார் சோனியாவின் உத்தரவின் பேரில் எடுத்த முடிவே தவிர தமிழர் நலன் கருதி எடுத்த முடிவாக எனக்குத் தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால், இனி காங்கிரஸ் கலைஞரைத் தொங்கவேண்டியதில்லை. கலைஞர்தான் தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் சொல்வது எல்லாவற்றையும் கேட்கவேண்டும்.(பதவி பெரிதென்று நினைத்தால்)

அன்புடன்,
ஜோதிபாரதி.

G.Ragavan சொன்னது…

தமிழக முதல்வர் கருணாநிதியின் செயல் எவ்வளவு சரியானது என்று சொல்ல முடியவில்லை. அதே நேரத்தில் இதைப் பெரிய அறிவுப்பூர்வமான முடிவு என்றெல்லாம் உணர்ச்சிவசப்படவும் முடியவில்லை. இனிமேல் பாருங்கள். கர்நாடகத் தேர்தலில் ஓட்டு வாங்கப் போடும் கோஷம் என்னவாக இருக்கும் தெரியுமா? "நாங்கள் பதவிக்கு வந்தால்....ஒகேனக்கல்லை கர்நாடகத்தோடு இணைப்போம்." இதுதான். அதுவும் அங்க நல்லா விக்கும். உண்மையிலேயே கொஞ்சம் முன்னாடியே யோசிச்சிருந்து தள்ளிப் போட்டிருந்தா அறிவுப்பூர்வமான அணுகுமுறைன்னு உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்