ஐயர் என்ற சொல் சாதிக் குறித்த சொல்லே அல்ல. ஆசிரியன், குரு என்பவர்களை ஐயர் அந்தணர் என்று குறிப்பது பண்டைய தமிழர் வழக்கம், ஆசிரியன், குருவாக இருப்பவர்கள் உயர்வாக கருதப்பட்டனர், அந்த வகையில் திருவள்ளுவர் கூட ஐயர் அந்தணர் என்று சொல்லப்பட்டார், சங்ககாலத்தில் பிராமணர்களைக் குறிக்கும் சொல் பார்பனர் என்பதே, 'மழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம் பழித்து...' என்ற குறளை பார்பனர் குறித்தே திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார். அந்த காலத்திலேயே வெளிப்பெருமைக்காக சில அடையாளங்களைப் பார்பனர்கள் பூண்டிருந்தனர் என்பது அந்த குறளில் இருந்து தெளிவாகிறது.
பரிமேலழகர் போன்ற பார்பன புலவர்கள், புலவர் என்ற தொழில் முறையால் ஐயர்களாக அழைக்கப்பெற்றனர். அதன்பிறகு அவர்களுக்கு வாரிசாக வந்தவர்களும் ஐயர்கள் என அழைத்துக் கொண்டனர். இங்கே தான் ஒரு கூத்தை கவனிக்க வேண்டும். பார்பனர்கள் இருபிரிவுகளாக பிரிந்து ஒருவர் சைவர்களாகவும், மற்றொருவர் வைணவர்களாகவும் அறிவித்துக் கொண்டு சென்றனர். ஆனாலும் ஒருவிசயத்தில் இருபிரிவினராலும் சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. அதுதான் 'ஐயர்' என்ற அடைமொழி யாருக்கு சொந்தம் என்பதில் வைணவ பார்பனர்கள் சமரசமின்றி 'ஐயங்கார்' என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். தேவர்களில் வைணவ பிரிவு வந்திருந்தால் தேவாங்கார் என வந்திருக்குமோ ?, பிள்ளைமார்களில் வைணவ பிரிவு ஏற்பட்டு இருந்தால் பிள்ளையாங்கார் என்று மாறி இருக்குமோ. :) செட்டியாங்கார், முதலியாங்கார் கொடுமைடா சாமி ! :)
ஐயர் என்ற சொல் உயர்வின், படித்தவன் என்ற தன்மையைக் குறிப்பதால் ஐயர் என்பதை சாதிப்பெயராக பார்பனர்கள் எடுத்துக் கொண்டனர். சமூக இழிவுகள் தொடர்வதற்கு உயர்வுதாழ்வு என்ற இருதன்மைகள் என்றும் இருப்பதே காரணம், ஒருசாரர் உயர்வாக தம்மை அழைத்துக் கொள்வதன் மூலம் மற்றோர் தாழ்வாக இருப்பதை மறைமுகமாகவே சொல்லிவருகின்றனர் (தன் மனைவி பத்தினி / உத்தமி என்று தம் வீட்டின் முன் எழுதி வைப்பது போன்றதே).
ஐயர் என்பதை படித்தவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதைப் போன்றே தமிழர்கள் சூட்டி மகிழ்ந்தனர். கால்டுவெல் அருள்தந்தையை 'கால்டுவெல் ஐயர்' என்றும், ஐயுபோப் அவர்களை ஐயூபோப் ஐயர் என்று அழைக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழுக்கும் தமிழ்சார்ந்த முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்களை ஐயர் என்று அழைக்கப்படுவதன் மூலம் அவை சாதிப்பெயர்கள் என்ற தோற்றத்தில் நிலைபெற்று இருப்பதை மாற்ற முடியும்.
எனக்கு தெரிந்த தமிழர்களுக்கு 'ஐயர்' (சர் பட்டம் போல்) பட்டம் கொடுக்க வேண்டுமென்றால் தந்தை பெரியார் (ராமசாமி ஐயர்), அண்ணாதுரை ஐயர், கருணாநிதி ஐயர், தேவநேயபாவாணர் ஐயர், (இவர்களுக்கு ஏற்கனவே சிறப்பு வழங்கு பெயர்கள் இருக்கிறது. அது ஐயர் என்று சொல்வதைக் காட்டிலும் உயர்வானது) பொங்குதமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் திருமாவளவன் மற்றும் இராமதாஸ் ஐயா ஆகியோரையும் திருமாவளவன் ஐயர், இராமதாஸ் ஐயர் என்றும் அழைக்க முடியும். அவர்களெல்லாம் அதை விரும்புவார்களா என்பது வேறு விசயம் :)
பார்பனர் என்று சொல்வது இழிவுபடுத்துவது போல் உள்ளது ( தற்பொழுதுதான் இழிவு என்றால் என்ன வென்று புரிகிறது போலும்) அதனால் பிராமணர்கள் என்று சொல்லச் சொல்லுவோம், பிராமணர் என்றே சொல்லிக் கொள்வோம் என பார்பனர்கள் பிரமணர்களாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவன் தன்னை / பிறரை பிரமணன் என்று ஒப்புக் கொண்டால், மனுவேதப்படி அவர் முகத்தில் இருந்து பிறந்தவர், சூத்திரன் காலில் இருந்து பிறந்தவன் என்பதை நம்புபவனாகவே பொருள். எனவே பார்பனர்களை பார்பனர் அல்லோதோர் பிராமணர் என்று சொல்லாமல் 'பார்பனர்' என்றே அழைப்பதே சரி. தலித் பெருமக்களை மகாத்மா காந்தி 'ஹரிஜென்' என்று அழைக்க பரித்துரைக்காமல் 'பிராமணர்' என்று அழைக்க பரிந்துரைத்திருந்தால், 'பிராமணர்' என்ற சொல்லைக் கூட பார்பனர்கள் துறந்து, அதனை இழிவாகப் பார்த்து 'ஆரியர்கள்' ஆகி இருப்பார்கள்.
ஐயர் பட்டம் பொதுப்படுத்தப்பட்டால் பார்பனர்களின் சாதிப்பெயராக இருக்கும் 'ஐயர்' என்பது கூட இழிவின் பெயராக நினைத்து, பார்பனர்களே 'ஐயர்' என்று சாதியின் பெயர் போட்டுக் கொள்வதை நிறுத்திவிடுவார்கள். பார்பனர் என்பது கூட நிறத்தை குறிக்கும் சொல் தான் பால் + பணர் > பாற்பனர் > பார்பனர் அதாவது பால் போன்ற வெண்மை நிறத்தை உடையவர்கள் என்று குறிப்பதாக பொருள், வெள்ளைக்காரர்கள் சுதந்திர போராட்டத்துக்கு முன் இந்தியாவில் ஊடுறுவிய போது தனிநிறத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டத்தைப் போன்றே திருவள்ளுவர்கள் காலத்தில், பார்பன ஊடுறுவல்கள் இருந்தபோதும், தமிழர் யார் ? பார்பனர் யார் ? என்பதை நிறத்தை வைத்தே அறிந்து கொள்ளப்பட்டது. காலப்போக்கில் எல்லோரும் எல்லோரிடமும் கலந்த போது பார்பன, திராவிட நிறமெல்லாம் மாறிவிட்டது. இன்று கரிய நிறத்தில் இருக்கும் ஆதிதிராவிட பழங்குடியினர் தவிர்த்து எல்லோருடைய முன்னோர்களும் பல்வேறு கலவையை ஏற்படுத்தியவர்களே. தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் தவிர்த்து தமிழகத்தில் எந்த சாதியும் கலப்பில்லாதது அல்ல. நாங்கள் தான் அக்மார்க் ஒரிஜினல் சாதி என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எந்த சாதிக்காரனுக்கும் இல்லை.
அதாவது தலித்துகளை அண்டவிடாமல் செய்துவிட்டதால் அவர்கள் மட்டுமே பிறசாதிகளிடம் கலக்க வழி இல்லாமல் கலப்பில்லா சமூகமாக இன்றுவரை இருக்கிறார்கள், மற்றவர்கள் தங்கள் சமூகம் தூய்மையானது என்று சொல்லிக் கொள்ள எந்த தகுதியும் இல்லை. இதில் வன்னியர், பிள்ளைமார், தேவர், முதலியார், பார்பனர் வரை எவரும் கலப்பில்லாதா சமூகமே இல்லை. இவர்கெளெல்லாம் சேர்ந்து தலித்துகளை தாழ்ந்த சாதி என்று சொல்வதுதான் கொடுமையோ கொடுமை.
உயர்சாதிப் பெயர்கள் என சொல்லிக் கொள்ளப்பட்டு வரும் ஐயர், தேவர், பிள்ளைமார் எல்லாம் உயர்வுக்காக சொல்லப்படும் வெறும் அடைமொழி பெயர்களே, இவற்றை யாருக்கு வேண்டுமானாலும் அடைமொழியாக கொடுக்க முடியும். இந்த பெயர்கள் எந்த சாதிக்கும் உரிமையான, பாத்தியப்பட்ட பெயர்களோ, பரம்பரை சொத்தோ அல்ல.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
15 கருத்துகள்:
கோவி.கண்ணன் ஐயர் வாள் செளக்கியமா...?
ஐயர் என்பது சான்றோர் போன்ற ஒரு சிறப்பைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லே. இன்று அது சைவப்பார்ப்பனர்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. காரணம் சைவத்திலிருந்து பிந்தைய வைணவப்பிரிவு உருவானபோது பழைய அய்யர்கள் என்பது சைவப்பார்ப்பனருக்கும் அய்யங்கார் என்பது வைணவ பார்ப்பனருக்கும்
வழங்கலாயிற்று.
//பார்பனர்கள் இருபிரிவுகளாக பிரிந்து ஒருவர் சைவர்களாகவும், மற்றொருவர் வைணவர்களாகவும் அறிவித்துக் கொண்டு சென்றனர். ஆனாலும் ஒருவிசயத்தில் இருபிரிவினராலும் சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. அதுதான் 'ஐயர்' என்ற அடைமொழி யாருக்கு சொந்தம் என்பதில் வைணவ பார்பனர்கள் சமரசமின்றி 'ஐயங்கார்' என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர்.//
இது அறிவித்துக்கொண்ட செயலல்ல. கறாரான தத்துவ,சித்தாந்தங்களையும் வேறுபாடுகளைக் கொண்டது. இக்கருத்தில் வைணவர்களின் தோற்றம் பற்றியும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் முற்றிலுமாக விட்டுவிட்டீர்கள். சைவ வைணவம் என்பது இந்துமதம் என்று இன்று வழங்கப்பட்டுவரும் ஒரு பெருமதத்தின் இரண்டு முக்கியப் பிரிவுகளாகும். இரண்டின் தோற்றத்திற்கும் வரலாற்றுரீதியான காரணங்கள் மட்டும்மின்றி சமூகப்பின்னணி, வழிபாடு (சிவன் திருமால்), புற அடையாளங்கள் (ராமம் பட்டை இடுதல்) என்று பல வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக வைணவம் தமிழக வேர்களைக் கொண்டதாக ஆய்வாளர்கள் சுட்டுகிறார்கள். தவிரவும் பார்ப்பனர்களிடையே இன்றும் கூட அகமணமுறை என்பதே நிலவிவருகிறது. அதாவது ஒரே கோத்திரத்தில் அவர்கள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. காரணம் கோத்திரம் என்பது ஒரு இனக்குழுச் சார்ந்த கணவடிவமாக (clan system) காப்பாற்றப்பட்டு வருகிறது. ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் ஒரே குடும்பமாக அதாவது சகோதர உறவு கொண்டவர்களாகக் கருதப்படுகிறது. அவர்களிடையே திருமண உறவு தடையாக பார்க்கப்படுகிறது. ஆகையால்,இந்த வேறுபாட்டை பெயர் சார்ந்த ஒன்றாக பார்க்க முடியாது. இது விரிவான மற்றும் ஆழமான பின்புலங்களைக் கொண்டது. இன்னும்கூட வடகலை மற்றும் தென்கலை அய்யங்கார் என்கிற வடமாநில மற்றும் தென்னிந்தியப் பிரிவு ஒன்று நிலவிவருகிறது. வைணவத்தில் வடவர் தென்னிந்தியர் என்கிற பிரிவு தெளிவாக உண்டு. இப்படி பல நுட்பமான மற்றும் நுண்ணிய வேறுபாடுகள் அவற்றில் உண்டு.
-அன்புடன்
ஜமாலன்.
//TBCD said...
கோவி.கண்ணன் ஐயர் வாள் செளக்கியமா...?
//
டிபிசிடி ஐயா,
உங்களுக்கு எந்த பட்டப்பெயர் பிடித்து இருக்கு ?
டிபிசிடி தேவாங்கார் அல்லது டிபிசிடி செட்டியாங்கார் ?
பார்பதற்கு செட்டியார் பொம்மை மாதிரி தான் இருக்கிங்க.
:)
அப்ப ஐயங்கார் ஆக முடியாதா...
அதுக்கு சின்னம் குத்தனும் தெரியுமோல்லியோ...
சங்கும், சக்கரமும் குத்திவிடுவா..
//TBCD said...
அப்ப ஐயங்கார் ஆக முடியாதா...
அதுக்கு சின்னம் குத்தனும் தெரியுமோல்லியோ...
சங்கும், சக்கரமும் குத்திவிடுவா..
//
"TBCD அய்யங்கார்" என்றே சொல்கிறேன்,அடுத்த முறை பார்க்கும் போது பரந்த நெற்றியில் செந்தூர நாமம் போட்டுக் கொள்ளுங்கள், U அல்லது V எதைப் போடுவது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
:)
//ஜமாலன் said... இது அறிவித்துக்கொண்ட செயலல்ல. கறாரான தத்துவ,சித்தாந்தங்களையும் வேறுபாடுகளைக் கொண்டது. இக்கருத்தில் வைணவர்களின் தோற்றம் பற்றியும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் முற்றிலுமாக விட்டுவிட்டீர்கள்//
ஜமாலன் ஐயர் அவர்களே, :)
இங்கு சைவ வைணவ வரலாறு பற்றிப் பேசவில்லை. 'அய்யர்' என்ற அடைமொழி பெயர் குறித்து எழுதி இருக்கிறேன். உங்கள் விரிவான கருத்துக்கள் பலவற்றைச் சொல்கின்றன. ஐயங்கார்களில் கருப்பு நிறத்தை வைத்தே தென்கலை என்று சொல்லிவிடுவார்கள். வடகலையிலும் கருப்பு ஐயங்கார் பார்பனர்கள் உண்டு. :)
//கொல்டி நாய் said...
This post has been removed by a blog administrator. //
கொல்டி நாயே,
உங்கள் ஆபாச பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டது.
//Balachandar has left a new comment on your post "யார் வேண்டுமானாலும் ஐயர் ஆகலாம் !":
Hello Kannan,
You are truly amazing//
Thanks !
//கொல்டி said...
This post has been removed by a blog administrator. //
கொல்டி ஐயர்,
உங்கள் 2 ஆவது ஆபாச பின்னூட்டமும் மட்டுறுத்தப்பட்டது,
பின்னூட்டம் கீழே சென்றதும் மூன்றாவதை வெளி இட்டு நீக்குவேன். பின்னூட்ட ஆதரவிற்கு நன்றி !
//பார்பனர் என்பது கூட நிறத்தை குறிக்கும் சொல் தான் பால் + பணர் > பாற்பனர் > பார்பனர் அதாவது பால் போன்ற வெண்மை நிறத்தை உடையவர்கள் //
எங்கெருந்து இதையெல்லாம் பி(ப)டிச்சீங்க?:-))))
கன்னங்கரேல்லுன்னு இருக்கறவங்களும் இருக்காங்க!
//அந்த காலத்திலேயே வெளிப்பெருமைக்காக சில அடையாளங்களைப் பார்பனர்கள் பூண்டிருந்தனர் என்பது அந்த குறளில் இருந்து தெளிவாகிறது. //
பழமொழிகளும் அந்த நாளிலே இருந்து நடைமுறையில் இருக்குல்லே?
'--------- ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு' ன்னு ஒரு சாதியைப் பற்றி பழமொழி இருக்கு.
ஏன்?
சாப்பிட்டு முடிஞ்சதும் அந்த வாழையிலையில் கொஞ்சம் விளக்கெண்ணெய் தடவி, வீட்டுக்கு வெளியில் போட்டு அதுமேலே கை கழுவுவாங்களாம். அந்த எண்ணெய் மினுமினுப்பில் தண்ணீர் ஒட்டாம தண்ணீர் துளிகள் நிற்குமாம்.
அப்ப மத்த சாதியினர் அந்த இலையைப் பார்த்து, 'எவ்வளோ நெய் ஊத்தித் தின்னுருக்காங்க'ன்னு நினைச்சு மனசு வெம்பணுமாம்.
இது எப்படி இருக்கு?
இப்படி ஒரு சாதியையும் விட்டுவைக்காம பழமொழிகள் எக்கச் சக்கமா கிடக்கு.
சாதியை ஒழிக்கணுமுன்னா அதைப் பத்திப் பேசாம நிராகரிச்சா ஒழிஞ்சு போகாதா?
என்னவோ போங்க......
//நாயுடு ('நாய்'டு) said...
**** நாயுடு சாதி பத்தி எழுதுடா
//
நாயுடு (என்ற பெயரில் குடுமி வைத்த) நாயண்ணே,
நீங்கள் பயன்படுத்தும் வசைச்சொற்களெல்லாம் தஞ்சாவூர் மாவட்டத்து சொல்லுங்கண்ணே, நம்ம ஊர் பக்கம் இருந்துக் கொண்டு வட்டாரவழக்கை மறக்காமல் இருக்கிங்கண்ணே.
நாய்கர்வாளைப் பற்றி எழுத எதாவது இருந்தால் சொல்லுங்கண்ணே எழுதிடுவோம்.
//துளசி கோபால் said...
எங்கெருந்து இதையெல்லாம் பி(ப)டிச்சீங்க?:-))))//
துளசியம்மா,
நிறம்குறித்து வந்த சொல்லே பார்பனர் என்ற சொல். தற்போதைக்கு அந்த பெயர்சொல் எடுக்காது.
//கன்னங்கரேல்லுன்னு இருக்கறவங்களும் இருக்காங்க!பழமொழிகளும் அந்த நாளிலே இருந்து நடைமுறையில் இருக்குல்லே?//
இருக்காங்க, அதெல்லாம் இராமனுஜர் செய்த உபயத்தாலும் ஏற்பட்டது.
:)
//'--------- ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு' ன்னு ஒரு சாதியைப் பற்றி பழமொழி இருக்கு.
ஏன்?
சாப்பிட்டு முடிஞ்சதும் அந்த வாழையிலையில் கொஞ்சம் விளக்கெண்ணெய் தடவி, வீட்டுக்கு வெளியில் போட்டு அதுமேலே கை கழுவுவாங்களாம். அந்த எண்ணெய் மினுமினுப்பில் தண்ணீர் ஒட்டாம தண்ணீர் துளிகள் நிற்குமாம்.
அப்ப மத்த சாதியினர் அந்த இலையைப் பார்த்து, 'எவ்வளோ நெய் ஊத்தித் தின்னுருக்காங்க'ன்னு நினைச்சு மனசு வெம்பணுமாம்.
இது எப்படி இருக்கு?//
"முதலியார் ஜம்பம் விளக்கெண்ணைக்குக் கேடு " பழமொழி கேள்விப்பட்டு இருக்கிறேன், அது எப்படி கேடு என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன், விளக்கெண்ணைப் பற்றி விளக்கியதற்கு மிக்க நன்றி !
:)
நெய்க்கு வாசனை இருக்கும் என்பதை எப்படி மறந்து விளக்கெண்ணையை வீணடித்தார்கள் ? அடப்பாவிகளா !!!
//இப்படி ஒரு சாதியையும் விட்டுவைக்காம பழமொழிகள் எக்கச் சக்கமா கிடக்கு.//
இதுபற்றி ஏற்கனவே ஒரு இடுகை இட்டு இருக்கிறேன். பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் - அவப்பெயரே...
அதில் நீங்கள் பின்னூட்டி இருக்கிறீர்கள்.
//சாதியை ஒழிக்கணுமுன்னா அதைப் பத்திப் பேசாம நிராகரிச்சா ஒழிஞ்சு போகாதா?
//
சபை நடுவே சின்னஞ்சிறு லாவண்யாக்களை சாதிப் பெருமைப் பேசச் சொல்லி சொல்லிக் கொடுத்து பிஞ்சு மனதில் நஞ்சு விதைக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்களே. இதெல்லாம் நிற்கவேண்டும் என்று தான் பலருக்கும் ஆசை.
கருத்துரையிடுக