பின்பற்றுபவர்கள்

14 ஏப்ரல், 2008

உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததுண்டா ?

எந்த ஒருவருக்கும் உலகத்திலேயே மிகவும் பிடித்தது அவரது முகம் தான். ஒரு சில தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தவிர்த்து தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளாத முகம் என்ற புரிந்துணர்வு இருப்பதாலும், நமக்கு கிடைத்தது இது என்ற மனநிறைவு இருப்பதாலும் தத்தமது முகத்தை, தோற்றத்தை நேசிக்காதவர் மிகக் குறைவே.

ஒரு மனிதர் கோபப்படும் போது முகத்தில் இருக்கும் 46 தசைகளில் அதன் தூண்டல் இருக்கிறதாம். அதுவே மி(க்)கவும் மகிழ்ச்சி அடையும் போது ஒருவரது முகத்தில் 16 தசைகளில் மட்டுமே அதன் தூண்டல் இருக்கிறதாம். அதாவது கோபப்படும் போது நம் முகம் முற்றிலும் மாறிவிடுகிறது, முகம் சிவந்துவிடுகிறது, இரத்த ஓட்டம் கூடுதலாகிறது.

கோபப்படும் போது நாம் 46 தசைகளும் மாறி இருக்கும் நமது நரசிம்ம அவதாரத்தை நம்மீது மதிப்பு வைத்துருப்பவர்கள் மட்டுமே பார்த்து பயந்து நடுங்குவார்கள், நம்மை உதாசினப்படுத்துபவர்கள் கண்டு கொள்ளக் கூட மாட்டார்கள்.

நம் மகிழ்வான முகத்தையும், கலைந்த தலையை சரிசெய்யவும், முகத்தை அழகு படுத்தவும் அடிக்கடி பார்க்கும் நாம், ஒருமுறை கோபம் கொப்பளித்து உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும்
போது நம் முகத்தை கண்ணாடியில் பார்த்தால் நம்மீது நமக்கே வெறுப்பு வரும், கோபப்படுவது பொருளற்றது என்று நினைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும், அதன் பிறகு கோபம் குறைந்து பொறுமையாக (நிதானமாக) யோசித்துப் பார்க்க முடியும்.

நமது இதுநாள் வரையிலான கோபங்களை திரும்பிப் பார்க்கும் போது, முன்பு எதோ ஒரு காரணத்திற்காக கோபப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைத்துப் பார்த்தோமேயானால், எந்த ஒரு நல்ல மனிதனும், 'நான் அப்படி நடந்திருக்கக் கூடாது' என்றே நினைப்பார்.

கோபத்துக்கான சரியான காரணம் இருந்தால் கோபம் தவறு அல்ல, அந்த கோபம் தவறு செய்தவர்களுக்கு படிப்பினையைத் தர, அவர்கள் உணர்ந்து கொள்ள அதனை முறையாக பயன்படுத்தலாம், ஆனால் அதே கோபம் தனக்கும் பாதிப்பையும் படிப்பினையும் தருமென்றால் அது எல்லை மீறிய கோபமாகத்தான் இருக்கும். அதைத் தவிர்ப்பது (சுயநலநோக்கோடு) நல்லதென்றே தவிர்க்கலாம்.

அடுத்த முறை அடங்கா கோபம் வரும் போது கண்ணாடியில் முகத்தைப் பார்ப்போம், நமக்கே அது பார்க்கும் வண்ணம் இருக்கிறதா என்று அப்போது தெரிந்து கொள்ளலாம்.

எந்த ஒரு தனிமனிதனின் கோபமும் தன்னைச் சேர்ந்தாரை மட்டுமே வஞ்சிக்கும், அதே கோபம் மற்றோரிடம் செல்லும் போது, பழிவாங்கும் உணர்வாக என்றாவது ஒருநாள் தன்னை நோக்கியே திரும்பிவரும். இரண்டுமே முடிவில் வருத்தம் தருவதில்தான் முடியும்


குறள் : 306
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.


ஐயன் திருவள்ளூவர் எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறார் பாருங்கள்

கொண்டவரை அழிப்பது, கோபத் தீ அவரை மட்டுமல்ல, அவருக்குத் துணையாகத் தோன்றும், அனைவரையுமே, அது அழிந்து விடும்.

11 கருத்துகள்:

TBCD சொன்னது…

கோவத்தைப் பற்றி நீங்களா சொல்லுறீங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
கோவத்தைப் பற்றி நீங்களா சொல்லுறீங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

யோவ்,

எதாவது பொடி வைக்காதேய்யா,

என்னோட கோப்ம் எப்போதும் அடுத்த மணிநேரத்துக்குக் கூட தங்காது !

Mathuvathanan Mounasamy / cowboymathu சொன்னது…

என்னோட கோப்ம் எப்போதும் அடுத்த மணிநேரத்துக்குக் கூட தங்காது !

கோவி.கண்ணன் அப்போ உங்க கோபம் ஒரு மணிநேரத்துக்கு இருக்குமா? மொத்தமா 60 நிமிடம். அது நல்லதில்லீங்க.

நீங்க சொன்னத வச்சு பாத்தா கோபப்பட்டா முகத்துக்கு நல்ல எக்ஸர்சைஸ் மாதிரி இருக்கு. கூடுதலான தசை வேலை செய்யும்.

அப்புறம் நம்ம நண்பர்கள் சிலபேர் இருக்காங்க. அவங்க கண்ணாடியும் கையுமா தான் அலையணும் போல இருக்கு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

ஆறுவது சினம்...அறிந்தும் பெருமுயற்சி செய்தும் சிலசமயம் தோற்று விடுகிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அடுத்த முறை அடங்கா கோபம் வரும் போது கண்ணாடியில் முகத்தைப் பார்ப்போம், நமக்கே அது பார்க்கும் வண்ணம் இருக்கிறதா என்று அப்போது தெரிந்து கொள்ளலாம். //


நல்ல யோசனை!

அப்படின்னா ஒரு கண்ணாடியை வாங்கி எப்பவும் பையில் வைத்திருக்க வேண்டும்.
கோபம் வரும் போது முகத்தைப் பார்த்துக்கொள்ளலாம்.

இன்னொரு விடயம், கோபம் வரும்போது நாம் சிந்திக்கும் தன்மையை இழந்துவிடுகிறோம். அதனால் கையில் கண்ணாடி வைத்திருந்தால் கூட அந்த ஞாபகம் வராது. எதிராளியை கண்ணாடியால் அடிக்காமல் இருந்தால் உத்தமம்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

வடுவூர் குமார் சொன்னது…

கோபத்துக்கு விலை??
என்னுடைய வேலை,இன்று இந்த நிறுவனத்தில் கடைசி நாள்.
கோபம் எனக்கல்ல என் "தல"க்கு. :-))
கோபத்தை பிறரிடம் காட்டும்போது இம்மாதிரியான் விளைவுகளே ஏற்படும்.

வடுவூர் குமார் சொன்னது…

என்ன பண்ணுவது எங்க "தல" அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்கமாட்டேன் என்கிறாரே??

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ஆறுவது சினம்...அறிந்தும் பெருமுயற்சி செய்தும் சிலசமயம் தோற்று விடுகிறேன்.
//

யோகன் ஐயா, உணர்ச்சிவசத்தில் மகிழும் மனம், கோபப்படுவதும் இயல்பே, தப்பு இல்லை, பெரிய விளைவுகளை ஏற்படுத்தா வண்ணம் கட்டுக்குள் இருந்தால் போதும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்ல யோசனை!

அப்படின்னா ஒரு கண்ணாடியை வாங்கி எப்பவும் பையில் வைத்திருக்க வேண்டும்.
கோபம் வரும் போது முகத்தைப் பார்த்துக்கொள்ளலாம்.

இன்னொரு விடயம், கோபம் வரும்போது நாம் சிந்திக்கும் தன்மையை இழந்துவிடுகிறோம். அதனால் கையில் கண்ணாடி வைத்திருந்தால் கூட அந்த ஞாபகம் வராது. எதிராளியை கண்ணாடியால் அடிக்காமல் இருந்தால் உத்தமம்.

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

ஜோதி,

கண்ணாடியைக் கையில் வைத்திருந்தால், அடங்காக் கோபத்தின் போது அதைத்தான் முதலில் போட்டு உடைக்கத் தோன்றுமோ !
:)

கோபத்தில் 10 வரை எண்ணுவது போல் இது ஒரு மாற்றுவழி.
கோபம் தவறு என்று நினைப்பவர்கள் முயற்சிக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
கோபத்துக்கு விலை??
என்னுடைய வேலை,இன்று இந்த நிறுவனத்தில் கடைசி நாள்.
கோபம் எனக்கல்ல என் "தல"க்கு. :-))
கோபத்தை பிறரிடம் காட்டும்போது இம்மாதிரியான் விளைவுகளே ஏற்படும்.
//

குமார்,

அவரது கோபம், பொறுப்பான ஒருவரை இழந்திருப்பது தெரிகிறது.:(

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//வடுவூர் குமார் said...
கோபத்துக்கு விலை??
என்னுடைய வேலை,இன்று இந்த நிறுவனத்தில் கடைசி நாள்.
கோபம் எனக்கல்ல என் "தல"க்கு. :-))
கோபத்தை பிறரிடம் காட்டும்போது இம்மாதிரியான் விளைவுகளே ஏற்படும்.

9:51 AM, April 15, 2008
வடுவூர் குமார் said...
என்ன பண்ணுவது எங்க "தல" அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்கமாட்டேன் என்கிறாரே??//

திரு.வடுவூர் குமார்,

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்று சொல்லுவார்கள். இதற்கெல்லாம் கவலைப்படவேண்டியதில்லை. இன்னொரு நல்ல வேலையைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். இவர்களைப் போல் நிறைய மேலாளர்கள் இருக்கிறார்கள். நிறைய பயிற்சிக்கெல்லாம் செல்வார்கள். ஆனால் அதைப் பயன்படுத்த மாட்டார்கள். வசதியாக மறந்து விடுவார்கள்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்