சிங்கப்பூர் வட்டாரத்தில் தற்போதைய பேச்சு 'அரிசி', 'அரிசி', 'அரிசி'. பொதுவாக ஆசியநாடுகளில் விரும்பி உண்ணப்படும் உணவு தானியங்களில் அரிசிக்கே முதலிடம். சிங்கைக்கு தருவிக்கப்படும் மொத்த அரிசி அளவில் 60 விழுக்காடு தாய்லாந்தில் இருந்தும் 30 விழுக்காடு இந்தியாவில் இருந்தும், மீதம் வியட்நாமிலிருந்து கிடைக்கிறது.
இந்த ஆண்டு அறுவடைகாலங்களில் வயல்வெளிகள் வெள்ளக்காடாக ஆனாதில் அரிசி உற்பத்தி பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்த நிலைமை இந்தியாவில் மட்டுமல்ல மற்ற ஏசிய நாடுகளிலும் இதே நிலைமைதான். இந்தியாவில் உள்நாட்டுத் தேவைக்கு(ம்) தட்டுப்பாடு ஆகிவிடும் என்பதால் இந்திய அரசு அரிசி ஏற்றுமதியை தடை விதித்திருக்கிறது. இதனால் அதன் பாதிப்பு சிங்கை வரை எதிரொலிக்கிறது.
அரிசிவிலை கிடுகிடுவென உயர்ந்ததாக்ச் சொல்கிறார்கள், 25 கிலோ எடையுள்ள பொன்னி அரிசி இந்தியாவில் இருந்து வாங்குவதற்கு 14 வெள்ளிகள் வரை ஆனதாம், தற்பொழுது 32 வெள்ளி வரை உயர்ந்ததாகச் சொல்கிறார்கள், நம் இந்தியர்கள் பொன்னி அரிசி தவிர வேறு எதுவும் வாங்க மாட்டார்கள். தாய் லாந்து அரிசி சோற்றில் இனிப்பு அதிகமாக இருக்கும் அதுதவிர ஒருவித மணம் (ஜாஸ்மின் ப்ராக்ரெண்ட்) இருக்கும், நான்கு உருண்டைகளுக்கு மேல் உள்ளே இறங்காது. பொன்னி அரிசி இந்தியாவில் இருந்து மட்டுமே வந்து கொண்டிருந்தது, தடை செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பொன்னி அரிசி தட்டுப்பாடு இருக்கும் என்கிறார்கள், கூடவே பயனர்கள் பொன்னி அரிசிக்கு மாற்றாக வேறு ரக அரிசிகளை பயன்படுத்த பழகிக் கொள்ளச் சொல்கிறார்கள்.
இந்த ஆண்டு விலைவாசி உயர்வு விழுக்காட்டு அளவில் உயர்ந்துள்ளது, தற்பொழுது அரிசியும் உயருவதால், உணவு அங்காடிகளில் உணவின் விற்பனை விலை கூடுதலாகும், ஏற்கனவே இந்த ஆண்டு ஒருமுறை உயர்ந்திருக்கிறது. மீண்டும் உயரும் வாய்ப்புகள் இருப்பதால் வரவு செலவு கணக்கு வைத்து செலவு செய்பவர்கள் அச்சப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.
பருவமழை காலம் கடந்து பெய்து வெள்ளக்காடாக மாறி நெற்பயிரை அழித்தது உலக சுற்றுச்சூழல் வெப்பம் அடைந்திருப்பதும், உலக நாடுகளினால் கட்டுப்படுத்த முடியாத மாசுக்களால் குளோபல் வா(ர்)னிங் எனப்படும் உலக சுற்றுச் சூழல் எச்சரிக்கை ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இந்த ஆண்டு அரிசி தேவையை சமாளிப்பதற்கு போதியளவு கையிருப்பு இருப்பதாக சிங்கை அரசாங்கம் சொன்னாலும் அவற்றின் விலை நிர்ணயம் எப்படி இருக்கப் போகிறதென்று தெரியவில்லை. பேரங்காடிகளில் அரிசி விலை உயரவில்லை என்பது தற்போதைக்கு ஆறுதலானது தான். ஆனால் அவை எவ்வளவு நாளைக்கு அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது, அரிசியை மூன்று மாதத்திற்கு மேல் கையிருப்பாக வைத்திருக்க முடியாது என்பதாலும் உணவுக்காக அரிசியின் தேவை குறித்து அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.
அடுத்த ஆண்டும் சுற்றுச் சூழல் பாதிப்பால் அரிசி உற்பத்தி நட்டம் அடைந்தால், அரிசி விலையை எட்டிப்பிடிக்க முடியாது. விவசாயம் கெட்டால் சாப்பிடுவதற்கு ஒன்றும் இருக்காது. உலகமாயமாக்கல் தாரளமயமாக்கல் என்று விரிவடைந்த இந்தியா விவாசாயத்தில் தன்னிறைவை தொலைத்துவிடும் போல் இருக்கிறது. ஏழை எளியோருக்கு அரிசி கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகிவிடும்.
சாப்ட்வேர் வல்லுனர்களுக்கு வேண்டுமானால் எந்த விலை கொடுத்தேனும் அர்சி வாங்கிக் கொள்ள முடியும் ? மற்றவர்களுக்கு. சாப்ட் வேர்தான் அதாவது கிழங்கு வகைகள், தற்பொழுது தாய்லாந்தில் அரிசிக்கு மாற்றாக உருளைக் கிழங்கை உண்ணச் சொல்லி அரசாங்கம் கேட்டுக் கொள்கிறதாம்.
உணவு பஞ்சமே சமூக விரோத செயல்களுக்கு முதன்மை காரணியாக அமைந்துவிடும்.
இது தொடர்பான செய்திகளைக் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தபோது இறுதியாகச் சொன்னார்கள். நாம் குப்பைத்தொட்டியில் கொட்டி வீணாக்கும் ஒரு அரிசி(யின் அளவு) ஒரு எறும்புக்கு ஒரு நாள் உணவாம். அரிசியை சோறாக்கலாம், சோறாக்காமல் வீணாக்கலாமா, சோறாக்கியும் வீணாக்கலாமா? குப்பையில் கொட்டும் முன்பும், பாதி சாப்பட்டுடன் தட்டில் கைகழுவும் (சினிமாவில் தான் அப்படி காட்டுவாங்க) முன்பு ஒரு நிமிடம் யோசிப்பதற்கு முன்பு, எந்த அளவு நமக்கு போதுமானதோ அந்த அளவை சமைக்கலாம்.ஆக்கிக் கீழே கொட்டுவதை தவிர்ப்பது மறைமுகமாக சேமிப்பு.
பின்பற்றுபவர்கள்
3 ஏப்ரல், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
11 கருத்துகள்:
////கைகழுவும் (சினிமாவில் தான் அப்படி காட்டுவாங்க) முன்பு ஒரு நிமிடம் யோசிப்பதற்கு முன்பு, எந்த அளவு நமக்கு போதுமானதோ அந்த அளவை சமைக்கலாம்.ஆக்கிக் கீழே கொட்டுவதை தவிர்ப்பது மறைமுகமாக சேமிப்பு.////
இது பாயிண்ட்!ஆனா நம்ம மக்களுக்கு Pointஐச் சொன்ன ஏறாதே - கேட்க மாட்டானே சுவாமி!
இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி தடை செய்யப்பட்டிருப்பது விலைவாசியைக் குறைக்கும் நடவடிக்கையாகத் தான். சுற்றுப்புற நாடுகளில் ஆகியுள்ள சூழலில் நம் வியாபாரிகள் அடிக்க இருந்தத பம்பர் தடை செய்யப்பட்டுள்ளது, கம்யூனிஸ்டுகளின் புண்ணியத்தால். மற்றபடி தானியக்கையிருப்பு குறித்த விஷயத்தில் இந்தியாவில் இன்றையத் தேதியில் பிரச்னை இருப்பதாக நான் எதிலும் படித்த நினைவில்லை.
"திங்க" என்று நீங்கள் தலைப்பு வைத்திருப்பது ஆழமான பொருள் கொண்டது. பதிவின் மையக் கருத்துக்குப் பொருத்தமானதும் கூட. உண்பதற்கும் தின்பதற்கும் உள்ள வித்தியாசத்தை "தேடிச் சோறு நிதம் தின்று" என்கிற பாரதி பாடலின் உட்பொருளில் காணலாம்.
"அரசியல்" பேசி கொண்டிருந்த நீங்கள், திடீரென "அரிசியல்" பேச வந்தது ஏனோ?
//SP.VR. SUBBIAH said...
இது பாயிண்ட்!ஆனா நம்ம மக்களுக்கு Pointஐச் சொன்ன ஏறாதே - கேட்க மாட்டானே சுவாமி!
8:43 PM, April 03, 2008
//
ஐயா,
சாப்பாடு என்பது ஒருநாள் மனநிறைவுதான். அடுத்தவேளைக்கு எதுவும் இல்லை என்றால் மறுநாளே கூட கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்
:)
//RATHNESH said...
"திங்க" என்று நீங்கள் தலைப்பு வைத்திருப்பது ஆழமான பொருள் கொண்டது. பதிவின் மையக் கருத்துக்குப் பொருத்தமானதும் கூட. உண்பதற்கும் தின்பதற்கும் உள்ள வித்தியாசத்தை "தேடிச் சோறு நிதம் தின்று" என்கிற பாரதி பாடலின் உட்பொருளில் காணலாம்.
9:24 PM, April 03, 2008//
ரத்னேஷ் அண்ணா,
பொறுத்தமான தலைப்பா, நான் அப்படி நினைத்து வைக்கவில்லை, உணவுக்கு ஆளாகப் பறப்பவர்களை திங்க அலைகிறார்கள் என்பார்கள், அரிசி கிடைக்கலை என்றால் அதுதான் நிலைமை. அதை நினைத்து வைத்தேன், அந்த பொருளில் தான் உறுதி படுத்தினீர்கள் போல்.
எல்லாத்துக்கு ஒரு பாட்டு கைவசம் இருக்கே எப்படி எப்படி ?
:)
//நையாண்டி நைனா said...
"அரசியல்" பேசி கொண்டிருந்த நீங்கள், திடீரென "அரிசியல்" பேச வந்தது ஏனோ?
9:34 PM, April 03, 2008
//
நைனா,
அதுவா ? சகோதர(ர்) யுத்தம் வேண்டாமென கொஞ்சம் தடம் மாற்றியிருக்கிறேன்.
:)
சிங்கை மட்டுமல்ல பல வெளிநாடுகளிலும் குறிப்பாக இந்தியர்கள் வாழும் இடங்களில் எல்லாம் அரிசி விலை அதிகரித்து வருகிறது
ஜாஸ்மின் அரிசிக்கு ஏன் இந்த அவப்பெயர்?
நாலு உருண்டையே அதிகமாச்சே எனக்கு.
பொன்னி அரிசி இப்ப இங்கேயும் கிடைக்குது. ஆனா எனக்குச் சரிப்பட்டு வரலை. மென்னியைப் பிடிக்குது.
மைக்ரோவேவில் சமைச்சா நல்லா இல்லை. அதுக்காக ( ஒரு ஆழாக்கு அரிசி) குக்கர் வைக்கணுமா? (-:
//மருதநாயகம் said...
சிங்கை மட்டுமல்ல பல வெளிநாடுகளிலும் குறிப்பாக இந்தியர்கள் வாழும் இடங்களில் எல்லாம் அரிசி விலை அதிகரித்து வருகிறது
//
மருதநாயகம் சார்,
அப்படியா ? நாமும் மாற்று உணவு வகைகளை பழகிக் கொள்வது நல்லது தான். இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் அரிசி உணவின் காரணமாகவே வருவதும், அதனை கட்டுப்படுத்துவதும் கடினமாக போய்க் கொண்டிருக்கிறது,
//துளசி கோபால் said...
ஜாஸ்மின் அரிசிக்கு ஏன் இந்த அவப்பெயர்?
நாலு உருண்டையே அதிகமாச்சே எனக்கு.
பொன்னி அரிசி இப்ப இங்கேயும் கிடைக்குது. ஆனா எனக்குச் சரிப்பட்டு வரலை. மென்னியைப் பிடிக்குது.
மைக்ரோவேவில் சமைச்சா நல்லா இல்லை. அதுக்காக ( ஒரு ஆழாக்கு அரிசி) குக்கர் வைக்கணுமா? (-:
//
துளசி அம்மா,
ஜாஸ்மின் அரிசி எனக்கு முன்பு பிடித்திருந்தது (ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்கரை என்பது போல்) , திருமணத்திற்கு பிறகு ஒருமுறை வாங்கியபோது என்னில் பாதிக்கு பிடிக்காமல் போனபிறகு எனக்கும் அந்த அரிசியின் மணம் தூக்கலாக இருப்பதாகவும் அடிப்பது போல் தான் உணர்கிறேன். இங்கே காலை நேரங்களில் குக்கர் விசில் சத்தம் கேட்டால் அது இந்தியரின் வீடு என்று எவரும் தெரிந்து கொள்வார்கள்.
நம்ம ஆளுங்க ப்ரசர் குக்கரில் சமைக்கிறார்கள். பொன்னி அரிசி கிடைக்காத நாட்களில் ஜாஸ்மின் அரிசி சோற்றை முக்கு பிடித்து (பிடிக்க அல்ல) தான் சாப்பிடுவோம். :)
எனக்கும் இந்த ஜாஸ்மின் அரிசி ஒத்து வருவதில்லை. போதாக்குறைக்கு பாத்திரத்துடன் ஒட்டிக்கொள்கிறது. கழுவுவதற்கு பெரும்பாடாக இருக்கிறது. பொன்னி அரிசி இன்று வரை கிடைத்து வருகிறது. நம்ம மறுபாதி துளசி டீச்சர் மாதிரி Sticky Rice பிரியர். நம்ம வீட்டில் இரண்டும் இருக்கும். ஆனாலும் பெரும்பாலும் பொன்னிதான் உபயோகிக்கிறோம். கூடிய சீக்கிரம் பொன்னி அரிசிக்கு தட்டுப்பாடு வந்துவிடும்போல் தான் இருக்கு
கருத்துரையிடுக