பின்பற்றுபவர்கள்

2 ஏப்ரல், 2008

தமிழர்கள் மீதான வெறுப்பிற்கு தமிழன் முன்னேறியதே காரணம்.

பெங்களூருவில் நடக்கும் வன்முறைக்கு தண்ணீர் பிரச்சனைதான் காரணமா ? அது வெறும் போக்குகாட்டுவதற்கான சாக்குதான். தமிழர்கள் புலம் பல இடங்களுக்கு பெயர்ந்தது, குறிப்பாக பெங்களூருவுக்கு பஞ்சம் பிழைக்கத்தான் என்றாலும் நாளடைவில் தமிழன் முன்னேறி இருக்கிறான். நம்மிடம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இன்று பொருளியல் வளர்ச்சி பெற்றுவிட்டார்கள் என்ற பொறாமை உணர்வே காரணம். பெங்களூருவில் தமிழர்கள் வசிக்கும் இடங்கள் ஒன்று குடிசைகள் நிறைந்த இடங்களாக (Slum) இருக்கும் இடம், அங்கு ஆட்டோ ஓட்டுனர்கள், நாள் கூலிகள் முழுவதும் தமிழர்களாகவே இருப்பார்கள், பெங்களூருவின் ஒதுக்குபுரங்களில் பல இடங்களில் இதைப் பார்க்கலாம், அது போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று வந்திருக்கிறேன். அடுத்து நகரியம் ஆக்கப்பட்ட இடங்களில் வசதிவாய்ப்போடு கூடுதலாக வாழ்ப்பவர்களும் தமிழர்கள் தான். குறிப்பாக அல்சூருக்கு அடுத்து கிருஷ்ணராஜ புரம், இந்திரா நகர் போன்ற விரிவடைந்த புதிய நகர்களில் தமிழர்களே கூடுதலாக வசிக்கின்றனர். மேலும் பெங்களூரு மென்பொருள் பூங்காக்களில் 60 விழுக்காடு தமிழக தமிழர்களே மென்பொருள் வல்லுனர்களாக இருக்கின்றனர்.

பெங்களூர் விரிவடைந்து வந்த போதுதான் அங்குள்ள தமிழர்கள் வளர்ந்து இருப்பதை அக்கம் பக்கம் உள்ள கன்னடர்கள் உணர ஆரம்பித்தார்கள். அவர்களின் வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாது போனதாலும், அரசியல் லாபநோக்கத்திற்க்காகவும் கன்னட அமைப்புகள், தமிழர் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டன. அதற்கு முழுவதும் பயன்படுத்தப்பட்டவர்கள் ராஜ்குமாரின் அப்பாவி ரசிகர்கள் தான். ரஜினி வியர்வைக்கு தங்ககாசு, தமிழ்பால் என்று தமிழ் ரசிகர்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது போலவே, தமிழகத்தில் பிறந்தாலும் கன்னட திரைநட்சதிரமாக உயர்ந்துவிட்டதாலும் கன்னட அரசியலை முன்னெடுத்துச் செல்லும் சக்தியாக மாறினார் இராஜ்குமார். இதற்கு ஆதரவாக தமிழகத்தில் பிறந்த வாட்டாள் நாகராஜ் போன்றோரும் அரசியல் முதன்மைத்துவம் பெற வேண்டும் என்று ஒத்துழைத்தனர். தமிழக ரசிகர்கள் ரஜினி மீது மயக்கம் கொண்டிருப்பதைப் போன்றே, இராஜ்குமார் ரசிகர்களும் அவருடைய விரல் அசைவுக்கு விட்டம் தாவினார்கள். இன்றும் கன்னட திரையுலகம் இராஜ்குமாரின் மூன்று மகன்களின் கையில் இருக்கிறது.

நாளடைவில் தமிழ்திரையுலம் வளர்ந்து தரமான படங்கள் பெங்களூரிலும் வெற்றி நடை போட்டு கன்னடர்களாலும் விரும்பிப் பார்க்கப்பட்டதாலும், இந்தி திரைபடங்களின் ஆதிக்கத்தாலும் கன்னட திரையுலகம் பெரிய இழப்பை சந்தித்தது. அதன் காரணியே தமிழர்களுக்கு எதிரான நடவெடிக்கையை தூண்டிவிடுவதாகும் அமைந்தது. ஏற்கனவே தமிழர்களின் வளர்சியினால் புகையாக இருந்த எதிர்ப்புணர்வு, நெருப்பாக மாறி 1990 களில் தான் முதன் முதலில் பெங்களூரூவில் கலவரம் வெடித்தது. தமிழர்கள் கடைகள் சூறையாடப்பட்டன, தமிழர்கள் தாக்கப்பட்டனர். அதன் பிறகும் கன்னட படங்களுக்கு வரவேற்பு எதுவும் இல்லை. 1992ல் வந்த ரோஜா படமும், ஏஆர்ரகுமான் இசையும் கன்னடர்களை மீண்டும் தமிழ் திரைப்படங்கள் பக்கம் திருப்பிவிட்டுவிட்டது. இவற்றைச் சமாளிக்க தமிழர்களுக்கு எதிரான உணர்வை ஈரம் போகமல் வைத்திருப்பதற்க்காகவே காவேரி பிரச்சனையில் தமிழகம் உரிமை கோருவது தவறனது என்றும் அபகரிப்பு போன்று கன்னடர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. ஞாயங்கள் என்பது இருந்தாலும் தமிழகத்துடன் உடன்பாடு செய்து கொண்டால் கன்னடர் - தமிழர் பிரச்சனை இன்றி அரசியல் செய்யமுடியாது என்பதால் தான் காவேரி ஆணையத்தின் தீர்ப்பையும் குப்பையில் போட்டனர்.

தற்பொழுது தேர்தலை சந்திக்க இருப்பதால் தேசியவாதக் கட்சியான பாஜகவின் 'இடையூற'ப்பா ஒக்கனேகல் கூட்டுகுடிநீர் திட்டத்தை தடுப்பதன் மூலம் பாஜக அரசு அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். தமிழர் எதிர்ப்பு உணர்வுக்கு கர்நாடகத்தில் உள்ள ஒட்டுமொத்த கன்னடர்களின் ஆதரவு இருப்பதால் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் அதே உத்தியில் சென்றால் கிடைக்கப் போகும் ஓட்டு உண்டியல் கனிசமாக நிரையும் என்றும், தமிழர் எதிர்புணர்வின் பலனை பாஜக மட்டுமே பங்கு கொண்டுவிட்டால் ஆட்சி அமைத்துவிடும் என்ற சிக்கல் இருப்பதால், காங்கிரஸ் தலைமையிலான நடுவன் அரசும் கூட வெளிப்படையான தீர்வு சொல்லாமல் இருபக்கம் மனுவை வாங்கிக் கொண்டு மவுனம் சாதிக்கிறது. இதெல்லாம் விட பெரிய கூத்து மகாராஷ்டிராவில் ஆளுனாராக இருக்கும் (இருந்த?) சரோஜா தேவி காதல் புகழ் எஸ் எம் கிருஷ்ணாவும் இதில் நேரடியாக களத்தில் குதித்து இருக்கிறார் என்றால் அதற்கு நடுவன் அரசின் ஆதரவு இல்லாமல் செய்திருப்பாரா என்று யோசிக்கவும் வேண்டி இருக்கிறது. ஆளுனர் என்பவர் அரசு பதவி வகிப்பவர் அவர் அரசியல் நிலை எடுப்பது பிரச்சனைக்குறியது.

பெங்களூர்வாழும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தண்ணீர் காரணமாக சுமத்தப்பட்டாலும் அவர்கள் வளர்ந்ததால் பொறுக்க மாட்டாத தமிழர்களுக்கு எதிரான வெறுப்பும், தமிழ் திரைப்படங்கள் பெங்களூருவில் வெற்றிநடை போட்டதும் தான் முதன்மை காரணங்கள். இதில் கன்னட திரைப்படத்துறை நஷ்டம் அடைந்ததால் கன்னட ரசிகர்களை உணர்வு பூர்வமாக தூண்டிவிடுவது எளிதாக ஆகி இருக்கிறது. சவுக்கார் பேட்டை சேட்டுக்களைப் பார்த்து தமிழர்கள் பொறுமுவதைப் போலவே தமிழர்களின் வளர்ச்சியே அவர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வை வழுப்படுத்தும் காரணியாக அமைந்துவிட்டது.

இதற்கும் ரத்னேஷ் அண்ணா சொல்லி உள்ள தமிழர்களின் பல பின்னடைவுகளுக்கு “திராவிட” வாய்க் கொழுப்பே காரணம் - என்று சொல்லி இருப்பதற்கும் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லை. தமிழர்கள் பின்னடையவும் இல்லை, பின்வாங்கவும் இல்லை. திராவிட என்ற சொல்லுக்கும் கூட தொடர்ப்பு இருப்பதாக தெரியவில்லை. பெங்களூர் வாழ்தமிழர்கள் காவேரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொண்டார்கள் என்பது அங்குள்ள கன்னட அமைப்புகளுக்கு நன்கு தெரியும். வெறுப்புணர்வுக்கு காரணம் தமிழனின் வளர்ச்சி மற்றும் தமிழன் தன் அடையாளத்தை துறந்துவிடாமல் லோக்கல் தமிழ்நாளிதழ், தமிழ்சேனல்கள், தமிழர்பண்டிகை எதையும் விட்டுக் கொடுக்காமல் தமிழனாகவே இருப்பதும் அவர்களுக்கு உறுத்தல் தான். தமிழ்சார்ந்தவற்றில் பெங்களூர் தமிழர்கள் பற்றுதல் வைத்திருக்கிறார்கள், அதைத்தவிர கர்நாடகமாநிலத்தார் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு கன்னடப்பாடத்திட்டத்தைதான் பயிற்றுவைக்கிறார்கள். நான் பார்த்தவரையில் பெங்களூர் வாழ்தமிழர்கள் பெங்களூரை பற்றி, கர்நாடக அரசாங்கத்தை பற்றிய ஆதரவு நிலையில், கர்நாடக மாநில உணர்வில் தான் இருக்கிறார்கள். தமிழகத்திலும் திரைப்படத்துரையினர் இதற்கு முனைப்புக் காட்டுவதும் கூட பெங்களூரில் தமிழ் திரைப்படம் ஓடுவதற்கு தடை என்பதால் ஏற்பட்ட வெறுப்பே.

பெரியாரின் நடவடிக்கையால் பார்பனிய கட்டுமானம் உடைந்து தமிழர்கள் விழிப்பு பெற்று முன்னேறியதால் தமிழர்களால் தந்தைப் பெரியார் என்று அழைக்கப்படுபவரை திராவிட கலகக்காரர் என்றும் மாமா என்றும் பல பார்பனர்கள் தூற்றுகிறார்களே அது போன்ற காழ்புணர்வு அரசியல் தான் பெங்களூருவில் நடந்துவருகிறது. இதற்கும் 'திராவிட' அரசியலுக்கும் துளியும் தொடர்பு இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. :)

6 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

தொடர்புடைய மற்றொரு சுட்டி

உடன்பிறப்பு சொன்னது…

//சவுக்கார் பேட்டை சேட்டுக்களைப் பார்த்து தமிழர்கள் பொறுமுவதைப் போலவே தமிழர்களின் வளர்ச்சியே அவர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வை வழுப்படுத்தும் காரணியாக அமைந்துவிட்டது//

உங்களுடைய இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சொளகார்பேட்டை சேட்டுகள் இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டே உழைப்பவனிடம் வட்டி வாங்கி பிழைக்கிறார்கள். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் அப்படி இல்லையே. முடிந்தால் இந்த கருத்தை திரும்ப பெற்றுக் கொள்ளவும். சேட்டுகளிலும் பலர் வியாபாரம் செய்து முன்னேறி இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அப்படி உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு என் மரியாதைகள்

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்களுடைய இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சொளகார்பேட்டை சேட்டுகள் இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டே உழைப்பவனிடம் வட்டி வாங்கி பிழைக்கிறார்கள். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் அப்படி இல்லையே. முடிந்தால் இந்த கருத்தை திரும்ப பெற்றுக் கொள்ளவும். சேட்டுகளிலும் பலர் வியாபாரம் செய்து முன்னேறி இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அப்படி உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு என் மரியாதைகள்

1:25 AM, April 03, 2008
//

சேட்டுகள் மீது பொறுமுகிறார்கள் என்றது பொறாமையினால் அல்ல, அவன் எதுவுமே செய்யாமல், பணத்தை மட்டுமே வைத்து பணம் சம்பாதிக்கிறான் ஏழைகளை சுரண்டுகிறான் என்று தான் சொல்வதாக பொருள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//தமிழர்கள் மீதான வெறுப்பிற்கு தமிழன் முன்னேறியதே காரணம்//

உண்மைதான். தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் இருந்து வரும் ஒரு தமிழனுக்கு கூட சமமில்லாதவர்கள் இந்தியாவின் சிலிகன் வேலி என்று சிலாகித்துக் கொள்பவர்கள். புலம் பெயர்ந்து தமிழன் உழைப்பதால் அவனை கிண்டல் அடிக்கும் நாய்களும் உண்டு. அவன் யாரையும்(உங்களைப்போல்) ஏமாற்றாமல் தானே உழைக்கிறான். ஒரு படிக்காதத் தமிழனைப் பார்த்து கிண்டல் அடிக்கும் படித்த நாய்களுக்கு அறிவு இல்லை என்று சொல்வேன். இந்த நாய்கள் தங்களை இந்தத் தமிழர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றன. அந்த வகையில் எல்லோருக்கும் தமிழன் மேல் பொறாமை உண்டு.

அன்புடன்,
ஜோதிபாரதி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...

உண்மைதான். தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் இருந்து வரும் ஒரு தமிழனுக்கு கூட சமமில்லாதவர்கள் இந்தியாவின் சிலிகன் வேலி என்று சிலாகித்துக் கொள்பவர்கள். புலம் பெயர்ந்து தமிழன் உழைப்பதால் அவனை கிண்டல் அடிக்கும் நாய்களும் உண்டு. அவன் யாரையும்(உங்களைப்போல்) ஏமாற்றாமல் தானே உழைக்கிறான். ஒரு படிக்காதத் தமிழனைப் பார்த்து கிண்டல் அடிக்கும் படித்த நாய்களுக்கு அறிவு இல்லை என்று சொல்வேன். இந்த நாய்கள் தங்களை இந்தத் தமிழர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றன. அந்த வகையில் எல்லோருக்கும் தமிழன் மேல் பொறாமை உண்டு.

அன்புடன்,
ஜோதிபாரதி.

//

ஜோதி சார்,

மையம் தொட்டு உங்கள் கருத்தை சற்று சினத்துடன் சொல்லி இருக்கிறீர்கள். உடமைகள் பறிக்கப் படும் போது(ம்) சினம் வரவில்லை என்றால் பிணம் தான், புரிகிறது.

மிக்க நன்றி !

யாழ் Yazh சொன்னது…

migavum sarie..
ithu bangaloreil mattum illai.thamilan munnerukira pala nadukalilum ithuthan nadakkirathu.ex:malaysia. ipothu singaporelum (chinise)ullukkul kanithu kondu irukirathu.
indiavil north indianungalukkum thamilanai kandal pidipathillai.
yen enral ellaruyaiyum ethirpatharku thamilanai vida thguthiyavan ulagathil illai.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்