மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் காரணம் அந்தந்த மொழி பேசும் அம்மாநில மக்களின் மொழிப் பெரும்பான்மைக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்பதற்க்காகத்தான். கர்நாடாகவைப் பொறுத்தவரை 60 விழுக்காடு கன்னடர்களுக்கு தெலுங்கே தாய்மொழி. இந்தியனாக பிறந்தவன் எங்கு வேண்டுமானாலும் வாழ அவனக்கு தாய்மொழி தடைகிடையாது என்கிறது இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள். அண்மையில் தாக்ரேக்களின் தாக்குதல் பிறமாநில மக்களுக்கு எதிராக நடந்தது போலவே, பக்கத்து மாநிலம் கர்நாடகாவில் தமிழருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தேறிவருகிறது. தமிழகத்தில் இருக்கும் தமிழர்கள் அதே போன்று மொழிவெறியில் திருப்பித் தாக்கமாட்டார்கள் என்ற நினைப்பில் இது தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் 1000 க் கணக்கான பெங்களூர் ஐயங்கார் பேக்கரிகளும், உடுப்பிவிலாஸ் ஹோட்டல்களும் பரவிக் இருக்கின்றன. இவர்களெல்லாம் தமிழருக்கு எதிரான கன்னட போராட்டாங்களில் வாய்மூடித்தான் கிடக்கிறார்கள்.
தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாமும் கன்னட வெறியர்களைப் போல் வன்முறை போராட்டங்களில் இறங்க வேண்டியது இல்லை. கன்னடர் நடத்தும் நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்களை புறக்கணித்தால் போதும், திரைப்படங்களில் கன்னட நடிகர் நடிகைகளை புறக்கனிக்க தீர்மானம் கொண்டுவரலாம். எப்போதும் எதிர்வினை ஆற்றவில்லை என்றால் இது போன்ற தொல்லைக்களைக் கொடுத்து ஏறிமிதித்துக் கொண்டே இருப்பர். அடிக்கு பயந்து தமிழன் என்ற அடையாளத்தை இழக்காத தமிழர்களுக்கு நாம் தமிழகத்திலிருந்து குரல் வரவில்லை என்றால் தமிழ்நாடு என்று சொல்லிக் கொள்வதில் தான் என்ன பொருள் இருக்கிறது. காவேரி பிரச்சனையில் தமிழகத்தை ஏமாற்றியது போல் இந்த முறை ஒக்கனேகேகல் அபகரிப்புத்திட்டத்தை முறியடித்து கன்னடவெறியர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
மாநிலத்துக்கென தனிக்கொடி கொண்டுள்ள கன்னடவெறியர்கள் தனிநாடு போலவே செயல்படுகிறார்கள், அங்கு இருக்கும் தேசியவியாதிக் கட்சிகளும் இதற்கு உடந்தை.
தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும், கன்னட, தாக்ரே அமைப்புகளை இந்திய அரசு தடைவிதிக்கவேண்டும். இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை இன்றி தமிழர்கள் மீதோ, பிறமானிலத்தவர் மீதோ தாக்குதல் நடத்த முடிவு செய்து கொள்ள கர்நாடகமோ, மகாராஷ்டிராவோ தனிநாடு அல்ல.
26 கருத்துகள்:
இன்னிக்குச் செய்தித்தாளில் நானும் படிச்சேன் இவுங்க பண்ணும் அராஜகக் கூத்துகளை.
மத்திய அரசைத்தான் குத்தம் சொல்லவேண்டி இருக்கு. பேசாம மழை, காற்றுக்கும் தடை போட்டுக்கவேண்டியதுதானே?
அவுங்க மாநிலத்தைச் சுத்தி இருக்கும் மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து பார்டரை சீல் செஞ்சுறணும்.
அப்புறம் கர்நாடகாவுக்குள்ளேயே கிடக்கட்டும்(-:
போச்சு ! கோவி கண்ணன் ஒரு தமிழ் தீவிரவாதி ..மொழி வெறியர் ..பிரிவினை வாதி ..தேச துரோகி ..நாம் முதலில் இந்தியன் ..அவர்கள் பஸ்சை கொளுத்தலாம் .தமிழனை அடிக்கலாம் ,தமிழ் திரைப்படங்களை ,தொலைகாட்சிய தடை செய்யலாம் ,ஏதாவது ஒரு காரணம் சொல்லி தமிழனை வம்புக்கு இழுக்கலாம் .நேரடியாகவே மிரட்டலாம் ..அதற்காக நீங்கள் கண்டனம் தெரிவித்தால் எப்படி ? கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டாமா ? நாம் முதலில் இந்தியன் என்பதை உணருங்கள் . கருணாநிதீக்கு ஏனிந்த வேண்டாத வேலை .. திராவிட கட்சிகள் தமிழனை அழிக்காமல் விட மாட்டார்கள் ..அவர்களுக்கு தேசிய உணர்வே இல்லை.. அதிலும் இந்த்த கருணாநிதி இருக்காரே ..
வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
//
துளசி கோபால் said...
அவுங்க மாநிலத்தைச் சுத்தி இருக்கும் மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து பார்டரை சீல் செஞ்சுறணும்.
அப்புறம் கர்நாடகாவுக்குள்ளேயே கிடக்கட்டும்(-:
//
//துளசி கோபால் said...
பேசாம மழை, காற்றுக்கும் தடை போட்டுக்கவேண்டியதுதானே?
அவுங்க மாநிலத்தைச் சுத்தி இருக்கும் மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து பார்டரை சீல் செஞ்சுறணும்.
அப்புறம் கர்நாடகாவுக்குள்ளேயே கிடக்கட்டும்(-:
//
துளசி அம்மா,
மனபுழுக்கத்தில், பாவனா ரசிகர்கள் மனசொடிஞ்சி போய்டுவாங்க.
அவர்களுக்கு அரசியல் பரபரப்புக்குக் காரணம் வேண்டுமென்றால் நாம்தான் மாட்டுவோம் எப்போதும்...
இம் என்றால் வனவாசம்..ஏன் என்றால் சிறைவாசம் என்று சுதந்திரப் போராட்டத்தின் நிகழ்வுகளைப் பள்ளி வகுப்பில் படித்தது நினைவுக்கு வருகிறது..
அப்ப என்ன தப்பு செஞ்சிட்டார்..
தர்மபுரி, கிருஷ்னகிரி பக்கம் தண்ணிக்கு ஏதோ ஒரு ஏற்பாடு செஞ்சிட்டார்..
அதுலே உங்களுக்கு(கர்நாடாகா) என்ன வந்திச்சு..
சும்மா சந்தடி சாக்கில் கோல் அடிக்கிறீங்க..
தவறு முழுக்க கர்நாடகத்தின் பேரில்..
கலைஞர் செய்திருப்பது, பூனையயை வெளியே கொண்டு வந்தது..
கோவியார் சொல்லியிருப்பதில் உடன்பாடில்லை..
அதற்காக நீங்கள் சொல்லுவதும் சரியில்லை..
//
ஜோ / Joe said...
நாம் முதலில் இந்தியன் என்பதை உணருங்கள் . கருணாநிதீக்கு ஏனிந்த வேண்டாத வேலை .. திராவிட கட்சிகள் தமிழனை அழிக்காமல் விட மாட்டார்கள் ..அவர்களுக்கு தேசிய உணர்வே இல்லை.. அதிலும் இந்த்த கருணாநிதி இருக்காரே ..
//
TBCD,
நல்ல தமாஷ் .. உண்மையிலேயே என் கிண்டலை புரிந்து கொண்டு தான் சொல்லுகிறீர்களா ? அல்லது என்னை ஏப்ரல் பூல் செய்கிறீர்களா ?
சீ.. அவங்க சுத்த கருணாடகம்......
//கோவியார் சொல்லியிருப்பதில் உடன்பாடில்லை..//
TBCD,
என்ன உடன்பாடில்லை ? இதைப்பற்றி ஒரு அதிருப்தி தெரிவிப்பதே தவறா?
என்ன கோவி.கண்ணன்,
//தமிழர்கள் மீதோ, பிறமானிலத்தவர் மீதோ தாக்குதல் நடத்த முடிவு செய்து கொள்ள கர்நாடகமோ, மகாராஷ்டிராவோ தனிநாடு அல்ல.//
தனிநாடுகள் என்றால் தாக்குதல் நடத்தலாமா? அப்போ, இலங்கையிலும் மலேஷியாவிலும் நடக்கும் தாக்குதல்கள் தங்களுக்கு ஆட்சேபணையானவை அல்ல?
//RATHNESH said...
என்ன கோவி.கண்ணன்,
தனிநாடுகள் என்றால் தாக்குதல் நடத்தலாமா? அப்போ, இலங்கையிலும் மலேஷியாவிலும் நடக்கும் தாக்குதல்கள் தங்களுக்கு ஆட்சேபணையானவை அல்ல?
//
நேரம் கிடைக்காததால் சிறிய கண்டனமாக எழுதினேன். அதனால் நீங்கள் சொல்லியுள்ளவையில் ஒப்புதல் என்று பொருளா ? சிலவற்றைச் சொல்லாமல் விட்டுவிட்டால் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா ?
இலங்கை, மலேசியாவில் இருப்பது மொழி பிரச்சனை இல்லை, அது இனப்பிரச்சனை, இங்கு அதை பொருத்திப் பார்ப்பதில் உடன்பாடு இல்லை. வெளிநாடுகளில் உதைத்தால் தமிழன் என்பதால் உதைக்க மாட்டான், இந்தியன் என்பதாலேயே உதைக்கிறான். பெரும அளவில் தமிழர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள், அவர்களுக்கு இந்தியன் என்ற அளவில் குரல் கொடுப்பதற்கும் தமிழனைத் தவிர யாரும் முன்வரவில்லை என்பது தங்களுக்கு தெரியாதா ?
இந்தியாவுக்குள் நடப்பதைப் பற்றி பேசும் போது வெளிநாடு பற்றி இங்கே குறிப்பிடுவது எனக்கு பொருத்தமற்றதாகவே தெரிகிறது.
கர்நாடக வெளிநாடக இருந்தால் இது போல் நடந்து கொண்டால் நாமும் மற்றொரு பாகிஸ்தானகத்தானக்தானே பார்ப்போம். அடிவாங்கிக் கொண்டு இருப்போமா ?
கர்நாடக வெளிநாடாக இருந்தால் இதை தமிழன் என்ற முறையில் எழுதி இருக்க மாட்டேன். இந்தியனாகத்தான் எழுதி இருப்பேன். இது உள்நாட்டு பிரச்சனை.
நையாண்டி நைனா has left a new comment on your post "கர்நாடகா தனிநாடா ?":
என்ன சொல்ல அவர்களை.
முட்டாள் என்றால் கற்பிக்கலாம்,
மூளை என்ற பெயரில் களிமண் கூட இல்லாமல் வேறு ஏதோ எச்சமா இருந்தால் இப்படி தான் நாறும்.
அதென்ன? தமிழர்களையும், தமிழ்ஸ்தாபனங்களையும் தாக்குவது.
தமிழ் ஸ்தாபனங்களுக்கு செல்வதை நிறுத்தி கொள்ளட்டும், தமிழர்களின் சேவை தேவை இல்லை என்று சொல்லட்டும், ( நாம் கொடுக்கும்) மின்சாரம் தேவை இல்லை என்று சொல்லட்டும்.
தமிழர்களோடு வர்த்தக தொடர்பு வைக்க மாட்டோம் என்று சொல்லட்டும், தமிழ் மருத்துவரிடம் மருத்துவம் பார்க்க மாட்டேன் என்று சொல்லட்டும்,
இவ்ளோ ஏன்? இந்தியாவுடன் இயை ந்து இருக்க மாட்டேன் என்று சொல்லட்டும்.
**********
நையாண்டி நைனா, நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு சொல்லி இருக்கும் சில வார்த்தைகளில் உடன்பாடு இல்லை. நாமும் தரம் தாழ்ந்து போகக் கூடாது.
முழுமையாக வெளி இடாததற்கு வருந்துகிறேன்.
ஜோ
ஏனிந்தப் பதட்டம்? அப்புறம் அசடு வழிதல் ? யாரேனும் சொல்லட்டும் அப்புறம் முத்திரையை தூக்கிக் கொண்டு ஓடலாம் :)
கோவி
தமிழகத்தில் முதற்கண் செய்ய வேண்டியது இந்த மாதிரி விடயங்களில் இரட்டை நிலைபாடுடைய தேசிய கட்சிகளை திராவிட கட்சிகள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாமல் தனிமைப் படுத்துவதே. காங்கிரஸ் உட்பட. ஏனெனில் திராவிட கட்சிகளை சாராமல் இந்த கட்சிகள் தமிழகத்தில் அரசியல் பண்ண முடியாது.எனவே அண்டை மானிலத்தில் ஒரு மாதிரியும் இங்கு ஒரு மாதிரியும் பேசும் தேசிய கட்சிகளை தோலுரித்தாலே போதுமானது.அவர்களுக்கு சிறிதேனும் பயம் வரலாம். வன்முரைக்கு பின்புலமாக இருப்பதே இந்த அரசியல் கட்சிகள்தான் என்பதால் இதைச் சொல்கிறேன்.இதில் மானில அரசியல் கட்சிகளை..ராஜ்குமார்,தாக்கரே இன்ன பிறவற்றை ஒன்றும் செய்ய முடியாது .ஏனெனில் அவை இங்கு இல்லை .ஆனால் தேசிய கட்சி என்று சொல்லிக் கொண்டு இந்த செயல்களை செய்பவர்களை சும்மா விடக் கூடாது.
//"கர்நாடகா தனிநாடா ?"//
கொஞ்சம் தலைப்பைப் பார்ப்போம். எனக்குத் தெரிந்து கனடா தான் தனி நாடு.
இந்த சீறும் கருநாகத்திற்கு நாடு என்ற நினைப்போ?
இந்தியாவையே ஆழ, ஆள ஆசைப்படுகிறவர்கள் பி.ஜெ.பி. அவர்கள் இங்கே மொழி பேதத்தை ஊக்கு விக்கிறார்கள். எல்லாம் ஆதயத்துக்குத் தான். காவிரியில் தான் விவசாயம் பண்ணுகிறார்கள். இரண்டு பேருந்தான்! அதான் அரசியல் விவசாயம்.
ஒகனேக்கல்லில் விவசாயம் பண்ணி அரிசி எடுக்கப் பார்க்கிறார்கள். அரிசியில்தான் கல்லைப் பார்த்திருப்போம். இவங்க கல்லுலேயே அரிசி எடுக்குறாங்க. கொஞ்சம் குழப்பமாவே இருக்கு. வரும் தேர்தலில் பி.ஜெ.பி கருநாகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்பட்டு, கல் தரிசனம் வந்திருக்கிறாங்க!
அப்படியே ஒரு மாலையைக் கட்டி போட்டு கும்ப்பிட்டு விட்டு போகச்சொல்லாம்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
நாறிப்போன இந்தியா லோகல் அரசியல் இப்ப எடுத்துருக்கிற ஆயுதம் ரொம்ப டேஞ்சரல்லத் தெரியுது. இப்படியே வளர விட்டுக்கிட்டு செண்ட்ரல் அரசியல் நடத்தினா, அவன் அவனும் இடுப்புல குண்டை கட்டிக் கிட்டி இவன் மாநிலத்தில இருந்து அவன் மாநிலத்தில போயி வெடிச்சிக்கிட்டு திரியப் போறாய்ங்க.
இதெல்லாம் நல்லாவா இருக்கு... இதுதான் மனுசன மனுசன் அடிச்சி சாப்பிடுறதுக்கு கொஞ்ச முன்னாடி உள்ள ஸ்டேஷ்-அ (கிட்னியைத் தான் உறுவி எப்பவோ பணம் பண்ண ஆரம்பிச்சாச்சே).
கண் கொண்டு பார்க்க முடியலைடா சாமீ இவிங்க அடிக்கிற கூத்தை... :((.
ஜோ, நான் சொல்ல வந்ததையே, ரத்னேஷ் அண்ணாவும் சொல்லியிருக்கிறார்..
அடக்குமுறைகளும் வன்முறைகளும் கூடாது என்றுச் சொல்ல, அதே வழியயை கடைப்பிடிக்க நினைக்கலாமா.
கொஞ்சம் நடுநிலை வியாதியாக மாறி யோசிக்கனும்..இதுக்கு...
அந்த வியாதி அப்படியே தொடரவும் வாய்ப்பிருக்கு...
ஃஃஃ
ஜோ / Joe said...
//கோவியார் சொல்லியிருப்பதில் உடன்பாடில்லை..//
TBCD,
என்ன உடன்பாடில்லை ? இதைப்பற்றி ஒரு அதிருப்தி தெரிவிப்பதே தவறா?
ஃஃஃஃ
//பாச மலர் said...
அவர்களுக்கு அரசியல் பரபரப்புக்குக் காரணம் வேண்டுமென்றால் நாம்தான் மாட்டுவோம் எப்போதும்...
இம் என்றால் வனவாசம்..ஏன் என்றால் சிறைவாசம் என்று சுதந்திரப் போராட்டத்தின் நிகழ்வுகளைப் பள்ளி வகுப்பில் படித்தது நினைவுக்கு வருகிறது..
//
பாச மலர் மேடம்,
இந்த முறை அவர்களும் மாட்டுவார்கள். எப்போதும் ஏறி மிதித்துக் கொண்டிருக்க முடியாதே !
//ஜோ / Joe said...
போச்சு ! கோவி கண்ணன் ஒரு தமிழ் தீவிரவாதி ..மொழி வெறியர் ..பிரிவினை வாதி ..தேச துரோகி ..நாம் முதலில் இந்தியன் ..அவர்கள் பஸ்சை கொளுத்தலாம் .தமிழனை அடிக்கலாம் ,தமிழ் திரைப்படங்களை ,தொலைகாட்சிய தடை செய்யலாம் ,ஏதாவது ஒரு காரணம் சொல்லி தமிழனை வம்புக்கு இழுக்கலாம் .நேரடியாகவே மிரட்டலாம் ..அதற்காக நீங்கள் கண்டனம் தெரிவித்தால் எப்படி ? கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டாமா ? நாம் முதலில் இந்தியன் என்பதை உணருங்கள் . கருணாநிதீக்கு ஏனிந்த வேண்டாத வேலை .. திராவிட கட்சிகள் தமிழனை அழிக்காமல் விட மாட்டார்கள் ..அவர்களுக்கு தேசிய உணர்வே இல்லை.. அதிலும் இந்த்த கருணாநிதி இருக்காரே ..
//
:)
//கோவியார் சொல்லியிருப்பதில் உடன்பாடில்லை..
//
டிபிசிடி ஐயா,
வாங்க நாம 2 பேரும் பெங்களூருக்கு சென்று 'அமைதி' 'அமைதி' ஊர்வலம் சென்று எதிர்ப்பை சாத்வீகமாக காட்டி முதுகை பழுக்க வைத்துக் கொண்டு வருவோம்.
:)
//ஜோ / Joe said...
TBCD,
நல்ல தமாஷ் .. உண்மையிலேயே என் கிண்டலை புரிந்து கொண்டு தான் சொல்லுகிறீர்களா ? அல்லது என்னை ஏப்ரல் பூல் செய்கிறீர்களா ?
//
ஜோ,
எரிகிற வீட்டுக்கு வெளியே நின்று பிடில் வாசிக்கக் கூடாது, வெப்பம் தெரியாமல் இருக்க ஐஸ்வாட்டர் குடிக்கலாம் என்கிறார் போல.
:)
//நையாண்டி நைனா said...
சீ.. அவங்க சுத்த கருணாடகம்......
3:02 PM, April 01, 2008
//
'அ' வேண்டுமென்றே விட்டுவிட்டீர்களா ? புரிகிறது !
:)
//சரவணகுமார் said...
ஜோ
ஏனிந்தப் பதட்டம்? அப்புறம் அசடு வழிதல் ? யாரேனும் சொல்லட்டும் அப்புறம் முத்திரையை தூக்கிக் கொண்டு ஓடலாம் :)
கோவி
தமிழகத்தில் முதற்கண் செய்ய வேண்டியது இந்த மாதிரி விடயங்களில் இரட்டை நிலைபாடுடைய தேசிய கட்சிகளை திராவிட கட்சிகள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாமல் தனிமைப் படுத்துவதே. காங்கிரஸ் உட்பட. ஏனெனில் திராவிட கட்சிகளை சாராமல் இந்த கட்சிகள் தமிழகத்தில் அரசியல் பண்ண முடியாது.எனவே அண்டை மானிலத்தில் ஒரு மாதிரியும் இங்கு ஒரு மாதிரியும் பேசும் தேசிய கட்சிகளை தோலுரித்தாலே போதுமானது.அவர்களுக்கு சிறிதேனும் பயம் வரலாம். வன்முரைக்கு பின்புலமாக இருப்பதே இந்த அரசியல் கட்சிகள்தான் என்பதால் இதைச் சொல்கிறேன்.இதில் மானில அரசியல் கட்சிகளை..ராஜ்குமார்,தாக்கரே இன்ன பிறவற்றை ஒன்றும் செய்ய முடியாது .ஏனெனில் அவை இங்கு இல்லை .ஆனால் தேசிய கட்சி என்று சொல்லிக் கொண்டு இந்த செயல்களை செய்பவர்களை சும்மா விடக் கூடாது.
//
சரவணகுமார்,
மிகச் சரியான கருத்து, தேசிய வாதக்கட்சிகள், கர்நாடகத்துக்கு தலையையும் தமிழகத்துக்கு வாலையும் காட்டி இரட்டை நிலைபாடு கொண்டிருப்பது வெள்ளிடை மலைதான்.
//ஜோதிபாரதி said...
//"கர்நாடகா தனிநாடா ?"//
கொஞ்சம் தலைப்பைப் பார்ப்போம். எனக்குத் தெரிந்து கனடா தான் தனி நாடு.
இந்த சீறும் கருநாகத்திற்கு நாடு என்ற நினைப்போ?
இந்தியாவையே ஆழ, ஆள ஆசைப்படுகிறவர்கள் பி.ஜெ.பி. அவர்கள் இங்கே மொழி பேதத்தை ஊக்கு விக்கிறார்கள். எல்லாம் ஆதயத்துக்குத் தான். காவிரியில் தான் விவசாயம் பண்ணுகிறார்கள். இரண்டு பேருந்தான்! அதான் அரசியல் விவசாயம்.
ஒகனேக்கல்லில் விவசாயம் பண்ணி அரிசி எடுக்கப் பார்க்கிறார்கள். அரிசியில்தான் கல்லைப் பார்த்திருப்போம். இவங்க கல்லுலேயே அரிசி எடுக்குறாங்க. கொஞ்சம் குழப்பமாவே இருக்கு. வரும் தேர்தலில் பி.ஜெ.பி கருநாகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்பட்டு, கல் தரிசனம் வந்திருக்கிறாங்க!
அப்படியே ஒரு மாலையைக் கட்டி போட்டு கும்ப்பிட்டு விட்டு போகச்சொல்லாம்.
அன்புடன்,
ஜோதிபாரதி.
10:54 PM, April 01, 2008
//
ஜோதிபாரதி கலக்கல். கூடவே 'மைசூர்' அகர்பத்தியும் கொளுத்து வச்சிட்டுப் போகலாம்.
:)
//Thekkikattan|தெகா said...
நாறிப்போன இந்தியா லோகல் அரசியல் இப்ப எடுத்துருக்கிற ஆயுதம் ரொம்ப டேஞ்சரல்லத் தெரியுது. இப்படியே வளர விட்டுக்கிட்டு செண்ட்ரல் அரசியல் நடத்தினா, அவன் அவனும் இடுப்புல குண்டை கட்டிக் கிட்டி இவன் மாநிலத்தில இருந்து அவன் மாநிலத்தில போயி வெடிச்சிக்கிட்டு திரியப் போறாய்ங்க.
இதெல்லாம் நல்லாவா இருக்கு... இதுதான் மனுசன மனுசன் அடிச்சி சாப்பிடுறதுக்கு கொஞ்ச முன்னாடி உள்ள ஸ்டேஷ்-அ (கிட்னியைத் தான் உறுவி எப்பவோ பணம் பண்ண ஆரம்பிச்சாச்சே).
கண் கொண்டு பார்க்க முடியலைடா சாமீ இவிங்க அடிக்கிற கூத்தை... :((.
//
தெகா,
தேசிய அரசியலும், மாநில அரசியலும் சரியான போட்டியில் தான் இறங்கி இருக்கின்றது. நல்லவேளை தமிழகத்தில் தேசிய கட்சிகள் வெறும் பாம்புதான். பல்லை எப்போதோ பிடிங்கிவிட்டார்கள்.
//TBCD said...
ஜோ, நான் சொல்ல வந்ததையே, ரத்னேஷ் அண்ணாவும் சொல்லியிருக்கிறார்..
அடக்குமுறைகளும் வன்முறைகளும் கூடாது என்றுச் சொல்ல, அதே வழியயை கடைப்பிடிக்க நினைக்கலாமா.
கொஞ்சம் நடுநிலை வியாதியாக மாறி யோசிக்கனும்..இதுக்கு...
அந்த வியாதி அப்படியே தொடரவும் வாய்ப்பிருக்கு...
//
டிபிசிடி ஐயா,
பிரச்சனை பெருசானதுக்கு நாம மட்டும் காரணமில்லை. அடங்கி இருந்தால் ஏறி மிதித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.
கலைஞர் உணர்ச்சிவசப்பட்டதையும், வீரமணி பேசி இருப்பதையும் பாருங்க
http://thatstamil.oneindia.in/news/2008/04/03/tn-kveeramani-condemns-karnataka.html
பொறுத்தது போதும் என்று பொங்கி எழத்தான் செய்வார்கள்.
முதலில் ரஜனிகாந்த் என்ற நடிகனுக்கு கொடுக்கும் அதீத மரியாதை நிறுத்துங்கள். வருவேன் இப்போ வருவேன் வரும்போது வருவேன் என இவரால் சும்மா டயலாக் மட்டும் விடத்தெரியும் ஆனால் தமிழ்னாட்டுக்கு இவரால் எந்தப் பிரயோசனமும் இல்லை. என்றைக்கு ரஜனிகாந்த் போன்ற அரிதார புருஷர்களையும் சவடால் பேர்வழிகளையும் தமிழர்கள் அரிவருடுவதை நிறுத்துகின்றார்களோ அன்றுதான் தமிழ்னாடு உருப்படும்
கருத்துரையிடுக