பின்பற்றுபவர்கள்

25 பிப்ரவரி, 2008

நண்பர் குழலிக்கு கோவி.கண்ணனின் அழுகாச்சு காவியம் (கடிதம்)

நண்பர் குழலிக்கு, - 'நண்பர்' வெளியே சொல்லக் கூடாதா ? குறிப்பாக உங்களை சொல்லலாம். போலியான ஒருவரிடம் நண்பராக இல்லை என்றே நினைக்கிறேன், அதனால் உங்களை என் நண்பர் என்று சொல்வதில் தவறே இல்லை. என்னையும் சேர்த்தே நீங்கள் இரண்டு மூன்று முறை பார்த்தவர்களில், உங்கள் அகராதிபடி உங்களுக்கு நான் நண்பராக இல்லாமல் இருக்கலாம். செண்டி மண்ட் அழுகாச்சி சீன் படி எனக்கு நீங்கள் என்றும் நண்பர் தான்.

//
இப்போது கேட்கிறேன் அந்த ஆடியோவில் இருக்கும் குரலும் உங்களோடு பேசிய விடாதுகருப்பு(எ)சதீஷ்குமார்(எ)போலி மூர்த்தியின் குரலும் ஒன்றா இல்லையா? என்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?//

பதிவில் கேள்வியாக கேட்டதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்,

மேற்கண்ட கேள்வியை என்னைக் கேட்டு இருக்கிறீர்கள், இதே கேள்வியை நான் மூர்த்தியிடமே கேட்டேன். உங்கள் குரலை பதிவு செய்து இருக்கிறார்கள், போலியுடன் உரையாடியவர் எவரும், இருகுரலும் ஒன்று என்று உறுதிப்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன், 'உங்களுக்கும் ஒரு சந்தர்பம்... போலி நீங்கள் அல்ல என்று சொல்ல போலியுடன் உரையாடினேன் என்று சொல்பவர்களிடன் நீங்கள் பேசி இருகுரலும் ஒன்றா என்று ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லலாமே' என்று கேட்டு இருக்கிறேன். 'போலியுடன் யார் உறவாடினார்களோ அவர்களை என்னிடம் பேசச் சொல்லுங்கள்' என்று சொன்னார். 'இவர்கள் என்னை போலி என்று சொல்லி தூற்றும் போது நான் எதற்கு ஒத்துழைக்க வேண்டும்' என்றும் கேட்டார்.

அவரிடம் மட்டுமல்ல மேலும் சில பதிவர்களிடமும் யார் போலியுடன் பேசினார்களோ அவர்கள் தான் மூர்த்தியின் டேப் செய்யப்பட்ட குரலையும் போலியின் குரலையும் ஒப்பிட்டு பார்க்க முடியும் என்றும் சொல்லி இருக்கிறேன்.

மூர்த்திதான் போலியா, போலி தான் மூர்த்தியா இதெல்லாம் எனக்கு தெரியாது, நீங்கள் சொல்லும் ஆடியே வெளியீட்டில் இருப்பது மூர்த்தியின் குரல் என்றே உறுதிப் படுத்துகிறேன். அதில் அவர்தான் போலி என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று உங்களால் காட்ட முடியுமா ? நானும் திரும்ப திரும்ப கேட்டுப் பார்த்தேன் ஆபாச அர்சனைகள் தவிர்த்து அப்படி ஒன்று இருப்பது எனக்கு தெரியவில்லை. என்னை சீண்டுபவன் ஒருவனை நான் திட்டினேன் என்று கொள்ளுங்கள் அதை வைத்து, இவன் ஆபாசமாக பேசுகிறான் இவன் தான் போலி என்று சொல்ல முடியுமா ? இரு குரலும் ஒன்று தான் என்று நிரூபிக்க போலியின் குரல் பதிவு செய்யப்பட்டு இருக்கவேண்டும். அப்படி இல்லையா ? போலி நிச்சயம் ஜிடாக்கில் எவருடனாவது உரையாடி இருப்பான், போலியுடன் உரையாடிவர்களிடம் இரு குரல்களும் ஒன்றே போல் இருந்ததா என்று கேட்டு முடிவு செய்து கொள்ளுங்கள். போலியுடன் நான் பேசியது இல்லை, தொடர்பும் இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் என் பெயர் எப்போதோ வெளியில் வந்திருக்கும்.

போலியும், மூர்த்தியும், மூர்த்திக்கு எதிரான உங்கள் சகாக்களும் எந்த அளவுக்கு கீழே இறங்குவார்கள் என்று எனக்கும் பலருக்கும் தெரியும். கவிதாவை யாரும் இன்னும் யாரும் மறந்துவிடவில்லை. எனவே பயப்படுபவர்கள் போலிக்கோ, மூர்த்திக்கோ மட்டும் பயப்படுவார்கள் என்று எண்ணிவிடாதீர்கள். நான் அந்த குரலைக் கேட்டு உறுதிப் படுத்தாதற்கு போலியின் குரலை நான் கேட்டது இல்லை என்பது தான் காரணம் அன்றி மூர்த்தி என்னைத் ஆபாசமாக பேசுவார் என்றோ அல்லது போலி என்னைப் பற்றி ஆபாசமாக எழுதுவானோ என்ற பயம் எதுவும் இல்லை.

நான் தான் அவர் பதிவில் பெரியார் கருத்துக்களை தெரியாமல் படித்தேன். அவருக்கு திராவிட தமிழர்கள் குழுமத்திலும் தொடர்பு இருந்திருக்கிறது, ஓசை செல்லா விடாது கருப்பை தமிழ்மணம் நீக்கிய போது தொடர்ந்து விடாது கருப்பின் பதிவின் RSS Feed கொடுத்து இணைத்து வைத்திருந்தார். அப்பாவியாகவே கேட்கிறேன், அப்போதெல்லாம் அவர் பெரியாரை சொந்த அரசியலுக்கு பயன்படுத்துகிறார் என்று உங்களுக்குத் தெரியாதா ?

என்னைப் பொறுத்து எனக்கு மிகவும் வேண்டியவர், என்னை நன்கு தெரிந்தவர் ஒருவர் என் அம்மாவைப் பற்றி பேசி இருந்தால் கவலைப் படுவேன். ஒரு காமக் கிறுக்ககன் பலரும் சென்று வரும் பொதுக்கழிவரையில் எழுதிவிட்டான் என்பதற்காக அவனுடன் மல்லுக்கு நிற்கமாட்டேன், அதற்கெல்லாம் எதிர்ப்புக்காட்டி அவனுக்கு மரியாதை செய்ய மாட்டேன். அம்மாவை 'கூப்பிடுபவன்' பற்றி மகி எழுதி இருந்தார். அம்மாவை கூப்பிடுவது கருப்பு பதிவில் மட்டும் தான் நடக்கிறதா ? வேறு இடங்களில் நடப்பது உங்களுக்கு பிடித்தமானதா ?

உங்கள் மீது மதிப்பு வைத்திருப்பதால் உங்களுக்கு மட்டுமே பதில் எழுதுகிறேன். இன்னும் இரு காமக் கிறுக்கர்கள், 'அம்மாவின்' நலம் விசாரித்து எழுதி இருந்தார்கள் அவர்களுக்கெல்லாம் நான் மதிப்பு கொடுக்கவில்லை. அவர்களையாவது நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வீர்களா ? போலியைக் கண்டுபிடித்து நிருத்துங்கள் செருப்பால் அடிப்போம். உண்மையாக 'திராவிடம்' பேசும் உங்களிடம் கேட்கிறேன் டோண்டு 'பார்பனர்' என்பதால் அவர் மகளைப் பற்றி ஆபாசமாக எழுதியவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்துவிட்டீர்களா ?அறிய ஆவல். இதை நான் மட்டும் கேட்கவில்லை. உங்கள் அதிரடி பதிவுகளைப் படிப்பவர்கள் அனைவருமே நகைப்புடனே கேட்கிறார்கள்.

கடைசியாக, போலிப் பிரச்சனைக்குப் பிறகு நீண்ட நாள் சென்று என்னிடம் நல்ல முறையில் பேசிக் கொண்டிருந்த போதே பாய்ந்தன் காரணம் இன்னும் விளங்கவில்லை. சத்தியமாக உங்கள் தகவல்கள் எதையும் நான் மூர்த்திடம் பரிமாறிக் கொள்ளவில்லை, வேறு என்னவென்று தெரிந்திருந்தால் உங்கள் பதிவில் எதோ ஞாயம் இருக்கிறது என்றாவது உணரலாம்.

நான் தனிப்பட்ட முறையில் தான் உங்களிடம் நிறைய பேசி இருக்கிறோன், இங்கும் எந்த ரகசியமும் இல்லை. படிப்பவர்கள் தான் பாவம், ஒரு மின் அஞ்சல் அனுப்பி விளக்கம் கேட்டு இருக்கலாம். உங்கள் முன்னாள் நண்பர்கள் பட்டியலில் நான் இல்லை என்றே நம்புகிறேன். பதிவில் கேட்டதால் பதிவிலேயே சொல்லிவிட்டேன்.

12 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

பதிவை படிப்பவர்களுக்கு 'சப்' என்று ஆகி இருந்தால் நான் பொறுப்பு அல்ல. இருப்பதைத்தான் சொல்ல முடியும்

லக்கிலுக் சொன்னது…

சூடான இடுகைகளில் கட்டாயம் இடம்பெறும் :-)

இரண்டாம் சொக்கன்...! சொன்னது…

அளுவாச்சி...அழுகாச்சி...அழுக்காச்சு....எது ரைட்...

ஒரே கன்ப்யூசனாக்கீது...கேன் யு எக்ஸ்ப்ளெய்ன்...

இரண்டாம் சொக்கன்...! சொன்னது…

இதை படிச்சிட்டு குழலி அழுதாரா...என்பதை எங்களுக்கு தெரியப்படுத்தவும்...

-கும்பலில் நின்னு வேடிக்கை பார்க்கும் அ(ட)ப்பாவி!

Darren சொன்னது…

//போலியும், மூர்த்தியும், மூர்த்திக்கு எதிரான உங்கள் சகாக்களும் எந்த அளவுக்கு கீழே இறங்குவார்கள் என்று எனக்கும் பலருக்கும் தெரியும்.//

போர் யுக்தி பற்றியெல்லாம் பேசப்பிடாது...என்ன இது தத்து பித்துன்னு உளறிண்டு..நெருப்புக் கண் திறந்திடப்போது.. ha ha ha

எவனோ ஒருவன் சொன்னது…

இரண்டாம் சொக்கன் என்ற பெயரில் பின்னூட்டம் போடுவது டோண்டு என்பது மட்டுமாவது குழலிக்கு புரியவேண்டும். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கூட்டத்தின் சதிகள் குழலிக்கு என்றுதான் புரியுமோ?

கோவி.கண்ணன் சொன்னது…

//எவனோ ஒருவன் said...
இரண்டாம் சொக்கன் என்ற பெயரில் பின்னூட்டம் போடுவது டோண்டு என்பது மட்டுமாவது குழலிக்கு புரியவேண்டும். பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கூட்டத்தின் சதிகள் குழலிக்கு என்றுதான் புரியுமோ?

8:17 PM, February 25, 2008
//

பொதுவில் எழுதி இருந்தாலும் இது எனக்கும் நண்பர் குழலிக்கு உள்ள பிரச்சனை, இதில் மூன்றாம் நபர்கள் ஊகமாக எதையும் சொல்லாதீர்கள்.

பின்னூட்டத்தை வெளி இட்டதற்கு காரணம் இது போல் யாரும் குளிர் காய வேண்டாம் என்பதற்காக மட்டுமே.

வீனாக வந்தால் 'கிராஸ் பயரில்' சிக்கிக் கொள்வீர்கள், அதையும் என் பொருட்டே நண்பர் குழலி செய்வார் என்று சொல்லிக் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
சூடான இடுகைகளில் கட்டாயம் இடம்பெறும் :-)
//

லக்கி,
எனக்கு வருத்தமே அதைவிட இது மேலே போய்விடக் கூடாது என்பதே. நண்பர் மனம் வருந்தினால் எனக்கும் வருத்தமாகவே இருக்கும். இங்கு போட்டிப் போடவோ, நீதான் யோக்கியமா என்று கேட்பதற்காக எழுதவில்லை. அவர் பெயரைக் குறிப்பிட்டு கேட்டார் என்பதற்காக எழுதினேன். மற்றபடி அவரை குறை சொல்வது என் நோக்கம் அல்ல. அப்படி இருந்திருந்தால் ஒரு மாதம் முன்பு ஏன் உங்களையும் 'செண்டி மெண்ட்' கடிதம் எழுத சொல்லி இருக்கப் போகிறேன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

நடப்பது அரசியல், வலைப் பதிவுகளில் பேசப்பட வேண்டும் இதில் பேசப்பட்டால் வாழ்க்கையில் எதையோ சாதித்து விட்டதாக நினைத்துக் கொள்ளும் மனித அற்பத்தனம்.

இதில் சரி, தவறு என்பதே கிடையாது மிருமமும் மனிதனும் அனைவரிடத்திலும் கலந்தே இருக்கிறது சிலர் தன்னிடம் இருப்பதை விட பிறரிடம் மிருகத்தனம் அதிகமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க தன் மிருகத்தனம் பலப் பல மடங்கு அதிகரிப்பதைப் பற்றி கூட கவலைப்படாமல் முயலுகிறார்கள்.

ஈகோ பிரச்சனைக்காக மனிதம் குறைத்து வெறி என்ற மிருகத்தனத்தை அதிகரித்துக் கொண்டு கடித்து குலைத்துக் கொண்டிருக்கும் ஒருவன், சேற்றுப் புண்ணை விழுப்புண்ணாக்கி புகழ் என்னும் மிருக குணத்திற்காக மனிதம் குறைத்து குழையும் மிருக குணம் கொண்டிருக்கும் ஒருவன், ஜாதி பிடித்து கவனம் அதில் செல்லாமல் இருக்க பூசி மொழுக கள்ளத்தனம் என்ற மிருக குணம் வளர்த்துக் கொண்டிருக்கும் ஒருவன், ஈகோ ஈகோவை எதிர்க்க அதே ஈகோவுக்காக வெறி என்ற மிருக குணம் எல்லை தாண்டி குறைத்து கடித்து குலைத்துக் கொண்டிருக்கும் ஒருவன். இவர்களுக்கிடையே மிருக குணம் குறைவாக இருக்கும் மனிதர் தள்ளி இருப்பதே நலம்.

இன்னும் பல விதமான மிருக குணங்கள்(அரசியல் மிருகம், ஆதிக்க மிருகம்) சுற்றி சுற்றி இருக்கின்றன இவ்விடத்தில், மனிதம் குறைந்திருக்கும் இவர்கள் தவறானவர்கள் இல்லை மூடர்கள் மனிதத்தின் அருமை புரியாமல் ஒதுக்கி வாழ்க்கையை வீணாக்கும் மனிதர்கள் அவ்வளவே. எப்போது யார் கடிப்பார்கள் ஏன் கடிப்பார்கள் என்பதெல்லாம் தெளிவே கிடையாது. ஆனால் கடித்தவுடன் திருப்பிக் கடிப்பதாலோ இல்லை ஏன் கடித்தாய் என்று கேட்பதாலோ எந்த விதமான பிரயோஜனமும் கிடையாது. ஏனெனில் கடிப்பது தவறு என்று மிருக குணம் அறியாது, அப்படி அறிந்திருந்தால் அங்கு மிருக குணமே கிடையாது(catch 22????)

இந்த catch 22 பற்றிய அறியாமையே எனக்குத் தெரிந்து பல பதிவுகளுக்கு காரணியாக இருந்திருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து.

டார்வின் தத்துவப்படி இயற்கைக்கேற்ப தேர்ந்தெடுப்பதில்(Natural Selection) மிகச் சிற்ப்பான இடத்தைப் பெற்றவனே மனிதன் என்பது அறிவியல் வாதம்

இரண்டாம் சொக்கன்...! சொன்னது…

கோவி.கண்ணன்...

முந்தைய எனது இரு பின்னூட்டங்களையும் தரன் குறிப்பிட்டவாறு வேறு யாரும் இடவில்லை...எழுதியது நானேதான்.

கடந்த சில நாட்களாய் வலைபதிவு பக்கம் வராததனால்...பிரச்சினையின் தீவிரம் புரியாமல் சூட்டை தணிக்கும் என நினைத்தே அந்த பின்னூட்டங்களை இட்டேன்...இப்பொழுதுதான் தொடர்பான எல்லா பதிவுகளையும் படிக்க நேர்ந்தது....

எனது பின்னூட்டங்கள் உங்களுக்கு மனவருத்தம் தந்திருப்பின்...வருந்துகிறேன்....

வருத்தங்களுடன்...
-இரண்டாம் சொக்கன்

கோவி.கண்ணன் சொன்னது…

//இரண்டாம் சொக்கன்...! said...
கோவி.கண்ணன்...

முந்தைய எனது இரு பின்னூட்டங்களையும் தரன் குறிப்பிட்டவாறு வேறு யாரும் இடவில்லை...எழுதியது நானேதான்.

கடந்த சில நாட்களாய் வலைபதிவு பக்கம் வராததனால்...பிரச்சினையின் தீவிரம் புரியாமல் சூட்டை தணிக்கும் என நினைத்தே அந்த பின்னூட்டங்களை இட்டேன்...இப்பொழுதுதான் தொடர்பான எல்லா பதிவுகளையும் படிக்க நேர்ந்தது....

எனது பின்னூட்டங்கள் உங்களுக்கு மனவருத்தம் தந்திருப்பின்...வருந்துகிறேன்....

வருத்தங்களுடன்...
-இரண்டாம் சொக்கன்
//

புரிந்து கொண்டதற்கு நல்லது.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இருவருக்கும் சண்டை மூட்டிவிட பலர் முயலக்கூடும் என்பதால் பதில் சொல்ல வேண்டியதாயிற்று, எவனோ ஒருவன் பெயரில் போட்டது நீங்கள் இல்லை என்பது தெரியும்.

அவரும் நானும் எதிரி கிடையாது. அவருக்கு நன்றி சொல்லவே கடமை பட்டு இருக்கிறேன். அவர் கேள்வி எழுப்பி இருக்காவிட்டால் அவரைப் போன்று ஐயம் உள்ளவர்களுக்கும் இதுபற்றி கருத்து தெரிவிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

நன்றி செந்தில் குமரன்,

ஏன் கடிக்கிறார்கள் என்று முகம் தெரியாதவர்களுக்கு பதில் அளிப்பது நேரவிரயம் தான்.அவர்களின் நோக்கமும் தொடர்ந்து எதாவது சர்சையைக் கிளப்பி வருவதுதான். இங்கு நான் இங்கு பதில் சொல்லி இருக்கும் நண்பர் அந்த வகையில் இல்லை என்பது நன்கு பழகி இருப்பதால் புரிந்து கொள்ள முடிகிறது.

உங்கள் பின்னூட்டம் அவருக்கும் புரிந்தால் நல்லது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்