பின்பற்றுபவர்கள்

14 பிப்ரவரி, 2008

காதல் வெகு சிலருக்கு அழிவதில்லை (சிறுகதை) !

2002 பிப் 14, பெசண்ட் நகர் கடற்கரை :

"நித்யா...எதாவது சொல்லு...நான் பேசிப் பார்த்துட்டேன் ஒன்னும் சரிவருவது போல் தெரியல.."

"என்னத்த சொல்வது...உங்க பெற்றோர்களுக்கு பிடிக்கும் பிடிக்காதெல்லாம் காதலிக்கும் முன்பே உங்களுக்கு தெரியாமல் போச்சா ?"

"பழசை எல்லாம் ஏன் பேசனும், உன்னை கல்யாணம் செய்வதற்கு எனக்கு பூரண சம்மதம் தான், ஆனா அம்மா அப்பா பேச்சை மீறி கல்யாணம் பண்ணிக் கொண்டால், வீட்டில் சாவு விழும் என்று சொல்கிறார்கள்..நாம ஆசைக்காக பெற்றோர்களை பலிகொடுக்கனுமா ? அப்படியும் சமாதானம் செய்தாலும் உன்னை காலத்துக்கும் குறை சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க"

"சாரி சேகர் இவ்வளவு கோழையாக இருப்பீர்கள் என எதிர்பார்கல...சரி என்னமோ செய்யுங்க என் தலையெழுத்துப்படி நடக்கட்டும்"

பேசிவிட்டு சட்டென்று எழுந்து எதிர்திசையில் நடந்து காணாமல் போனாள் நித்யா,

அவளை தடுத்து நிறுத்துவதற்கு எந்த காரணமும் சொல்ல முடியாமல் பிரமை பிடித்தது போல் இரவு 12 மணி வரை அங்கேயே உட்கார்ந்துவிட்டு ஒரு முடிவெடுத்தவனாக் எழுந்துவீட்டுக் சென்றான் சேகர்.

******
ஒன்றரை வருடம் கழித்து.

துக்க விசயம் கேள்விப்பட்டு சேகரை சந்திக்கச் சென்றேன்

உடைந்து போய் இருந்த சேகர் கட்டிக் கொண்டு அழுதான்.

"தம்பி, பாருங்க தம்பி என் பையன் வாழ்க்கை இப்படி பாழாப் போச்சே...பொட்ட புள்ளையை பெத்துப் போட்ட உடனேயே போய் சேர்ந்துட்டாள் புன்னியவதி...நீங்கெல்லாம் பார்த்து அவனுக்கு எதாவது பார்த்து செய்யுங்க" - சேகர் அம்மாவின் கதறல்.

என்ன சமாதானம் செய்வதன்றே தெரியவில்லை. விசயம் கேள்விப்பட்டவுடன் திகைப்பும், நண்பனின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவும், அந்த பெற்றோர்கள் மீது எரிச்சலும் வந்தது.

தாய் இறந்தது கூடத் தெரியாமல் தூளியில் ரோஜாப்பு வண்ணத்தில் தூங்கிக் கொண்டிருந்தது குழந்தை

ஒரு சில நாள் கழித்து அவனை தேற்றுவதற்கு,

"வேற வழி இல்லேடா சேகர், எதுக்கும் பேசிபார்ப்போம்...."

******


"நி......நித்யா...நான் சேகர் பேசுறேன்...."

"ம் குரல் தெரியுது...ஒன்னும் சொல்ல வேண்டாம் ....எல்லாம் கேள்விப்பட்டேன்..."

"எனக்கு இப்ப ஒன்னை விட்டால் யாரும் இல்லை"

"நான் என்ன செய்யனும் ?"

"நான் எப்படியாவது பழைய வாழ்க்கைக்கு திரும்பனும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள், இப்போ எந்த எதிர்ப்பும் இருக்காது"

"ஆகட்டும்...நானும் யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு அவர் இறந்தால், அதன் பிறகு நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம்..."

"....."

நித்யா அவ்வாறு அவனை மறுத்து சொன்னாலும், பெண்களுக்கே உரிய இளகிய மனநிலை கரைந்துவிட்டது. அதன் பிறகு சில தூதுகள்.

நித்யா - சேகரின் காதல், சேகரின் இரண்டாவது திருமணமாக இனிதே முடிந்தது. அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து, தற்போது இரு குழந்தைகள் அவர்கள் வீட்டில் இருக்கிறார்கள்.

மகனுக்கு மீண்டும் வாழ்கை அமைந்த திருப்தியில் பெற்றோர்கள் இருந்தாலும் அவர்கள் முன்பு செய்த தவறு அவர்களுக்கு உறுத்தலாகவே இருக்கிறது.

********
பெற்றோர்களின் வீண் பிடிவாதம் பிடிக்காமல் இருந்திருந்தால் அப்படி ஒரு பிரிவும், சோகமும் அவன் வாழ்க்கையில் வந்திருக்காது. இவர்கள் இருவரும் சேர்வதற்காகவே இடையில் ஒரு பெண் வந்து சென்றாளா ? அவளது பெற்றோர்களுக்கு ஏற்பட்ட இழப்பு ? இதற்கெல்லாம் எந்த சமாதனமும் ஈடு ஆகாது.

நடந்ததெல்லாம் விதி என்றே நினைத்து, நடந்தவைகளில் எது எது யாருடைய தவறு என்றெல்லாம் யாரும் குத்திக் காட்டிக் கொள்வதில்லை.

இது நடந்த கதைதான். நண்பரின் மீது நல் மதிப்பு இருப்பதால், பெயர்களை மட்டும் மாற்றி இருக்கிறேன்.

16 கருத்துகள்:

மங்களூர் சிவா சொன்னது…

உண்மை கதையா :(


ஆனா இது காதலுக்கான வெற்றி , உண்மை காதல்னு எப்பிடி சொல்லறீங்க :(

TBCD சொன்னது…

இதுவே அந்தப் பொண்ணு விதவை ஆனப் பிறகு என்றால், அவன் வந்திருப்பானா..

இதுலே காதல் என்று வேறுச் சொல்லுகிறீர்கள்..

இது வியாபார ஒப்பந்தம்... :(

கோவி.கண்ணன் சொன்னது…

//

மங்களூர் சிவா said...
உண்மை கதையா :(


ஆனா இது காதலுக்கான வெற்றி , உண்மை காதல்னு எப்பிடி சொல்லறீங்க :(
//

சிவா,
காதலில் உண்மையா பொய்யா என்ற ஆராய்சியை விட.
இருவருக்கும் காதல் பந்தம் இல்லை என்றால் இருவரும் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
இதுவே அந்தப் பொண்ணு விதவை ஆனப் பிறகு என்றால், அவன் வந்திருப்பானா..

இதுலே காதல் என்று வேறுச் சொல்லுகிறீர்கள்..

இது வியாபார ஒப்பந்தம்... :(
//

பெண்ணின் பெரும்தன்மைக்கு உதாரணமாக கொள்ளலாமே.

வாழ்க்கையில் சில தவறுகள் நம் சம்மதத்துடன் நடக்கலாம். ஆனால் அதையே பேசிக் கொண்டிருந்தால் முடிவு என்று ஒன்று வரவே வராது.

ஆண்களில் சிலர் விதவையை மனம் செய்வது லட்சியமாகவும் கொண்டிருக்கிறார்கள்.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

இதைக் காதல் என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை..ஏதோ ஒரு வசதிக்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கை போல் தோன்றுகிறது..

நித்யா அதுவரை ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதற்குச் சரியான காரணம் புலப்படவிலையே..

உண்மைக் கதை என்பதால் சரிதான்..எதார்த்தம் இப்படித்தான் இருக்கும்..

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...
இதைக் காதல் என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை..ஏதோ ஒரு வசதிக்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கை போல் தோன்றுகிறது..

நித்யா அதுவரை ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதற்குச் சரியான காரணம் புலப்படவிலையே..

உண்மைக் கதை என்பதால் சரிதான்..எதார்த்தம் இப்படித்தான் இருக்கும்..
//

அவர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். இவை ஒன்றரை ஆண்டுக்குள் நடந்து முடிந்ததால் நித்யா வேறொரு கல்யாண முடிவுக்கு செல்வதற்கு போதிய அவகாசமாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் உடனே ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

//அவர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள்//

அதுதானே வேண்டும்..வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...
//அவர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள்//

அதுதானே வேண்டும்..வாழ்த்துகள்.
//

இன்னொன்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது. சேகர் நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவன், அவனுக்கு வேறொரு இடத்தில் இரண்டாவது திருமணம் செய்வது பெரிய விசயமே இல்லை. நித்யாவை மீண்டும் அடைந்ததை காதல் தான் காரணம் என்று ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? இதை ஒப்பந்தம் என்று மட்டும் எப்படிச் சொல்ல முடியும் ?

கொஞ்சம் வசதி வாய்ப்பு இருந்தால், பிரச்சனை இல்லாத இடம் என்றால் இரண்டாவது திருமணத்திற்கு கூட
பலர் பெண் கொடுக்கத் தயாராகத்தானே இருக்கிறார்கள்.

அவனுக்கும் நித்யாவை மட்டுமே கட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் எதுவும் இருந்தது போல் தெரியவில்லை.

TBCD சொன்னது…

அந்தப் பெண்ணின் பெரிய மனசு என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.

அவருக்கு காதல் வந்து அவர் போய் கேட்கவில்லை..

////"எனக்கு இப்ப ஒன்னை விட்டால் யாரும் இல்லை"

"நான் என்ன செய்யனும் ?"

"நான் எப்படியாவது பழைய வாழ்க்கைக்கு திரும்பனும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள், இப்போ எந்த எதிர்ப்பும் இருக்காது"
////

தூண்டில் வாசங்கள் கதைக்காக எழுதப்பட்டவை என்றால், மீ த எஸ்கேப்பு..

மற்றவர்கள் நினைக்கிறார்கள்..இவரின் காதல் இழுக்கவில்லை..

அந்தப் பெண் செய்துக் கொண்டதும் சமரசமே..


///

கோவி.கண்ணன் said...
இன்னொன்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது. சேகர் நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவன், அவனுக்கு வேறொரு இடத்தில் இரண்டாவது திருமணம் செய்வது பெரிய விசயமே இல்லை. நித்யாவை மீண்டும் அடைந்ததை காதல் தான் காரணம் என்று ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை? இதை ஒப்பந்தம் என்று மட்டும் எப்படிச் சொல்ல முடியும் ?

கொஞ்சம் வசதி வாய்ப்பு இருந்தால், பிரச்சனை இல்லாத இடம் என்றால் இரண்டாவது திருமணத்திற்கு கூட
பலர் பெண் கொடுக்கத் தயாராகத்தானே இருக்கிறார்கள்.

அவனுக்கும் நித்யாவை மட்டுமே கட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் எதுவும் இருந்தது போல் தெரியவில்லை.
///

TBCD சொன்னது…

நான் பூயிரிஸ்ட் தியரி பேசவில்லை..

இதில் சுயநலம் மேலோங்கியிருக்கிறது..இருவருக்கும்மே..என்றுத் தான் தோன்றுகிறது..

கோவி.கண்ணன் சொன்னது…

டிபிசிடி ஐயா,

இருவருக்குமே நிர்பந்தம் எதுவும் இல்லை. அவர்களாகவே எடுத்த முடிவுதான். ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள், ஓரளவு புரிந்துணர்வு இருந்ததால் சுபமாக முடிந்தது. இதை அவர்களின் சுயநலம் என்று சொல்ல முடியுமா ? சுயநலம் என்றாலும் அப்படி இந்த விசயத்தில் சுயநலமாக இருந்ததில் அதை தப்பாக கொள்ள முடியுமா ? தப்பாக சொல்ல முடியாவிட்டால் சுயநலம் என்று அதை வகைப்படுத்த முடியுமா ?

அரை பிளேடு சொன்னது…

காதலோ அல்லது உடன்பாடோ...

எனது பரிதாபம் அற்பாயுளில் இறந்து போன பெண் மீது மட்டுமே.

சர்வேசனின் நச் போட்டியில் வெற்றி பெற்ற அருட் பெருங்கோவின் கதையில் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக நாயகி மணக்க, மணவாளன் இறக்க காத்திருந்த காதலன் மீண்டும் அவளை மணக்கிறான்.

அப்போதும் என்னுடைய பரிதாபம் அற்பாயுளில் உயிர்விட்ட அந்த கணவன் மீதுதான் இருந்தது.

காதல் வென்றது என்று சொல்வீராயின் இறந்த உயிரை நினைவு கூற யாருமில்லாது போவதும் பரிதாபம்தான்.

காதல் பீடத்தில் பரிதாபமாக காதலிக்கப்படாமலேயே உயிர் விட்ட ஜீவன்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அரை பிளேடு said...
காதலோ அல்லது உடன்பாடோ...

எனது பரிதாபம் அற்பாயுளில் இறந்து போன பெண் மீது மட்டுமே.//

அரைபிளேடு சார், நானும் பதிவில் அதை குறிப்பிட்டு இருக்கிறேன்.

//சர்வேசனின் நச் போட்டியில் வெற்றி பெற்ற அருட் பெருங்கோவின் கதையில் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக நாயகி மணக்க, மணவாளன் இறக்க காத்திருந்த காதலன் மீண்டும் அவளை மணக்கிறான்.

அப்போதும் என்னுடைய பரிதாபம் அற்பாயுளில் உயிர்விட்ட அந்த கணவன் மீதுதான் இருந்தது.

காதல் வென்றது என்று சொல்வீராயின் இறந்த உயிரை நினைவு கூற யாருமில்லாது போவதும் பரிதாபம்தான்.

காதல் பீடத்தில் பரிதாபமாக காதலிக்கப்படாமலேயே உயிர் விட்ட ஜீவன்கள்.
//

நாம் தொலைவில் இருந்து பேசினாலும். அந்த சூழல்களில் உள்ளவர்களின் மனது எத்தகைய போடாட்டத்தில் இருக்கும் என்று முற்றிலும் தெரியாது.

Unknown சொன்னது…

இங்கே காதலென்று எதுவுமில்லை. ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் நடந்திருக்கிறது.

//இதுவே அந்தப் பொண்ணு விதவை ஆனப் பிறகு என்றால், அவன் வந்திருப்பானா..// என்ற tbcdன் கூற்று யோசிக்க வேண்டியது.

விட்டுக் கொடுத்ததால் பெருமை பெற்ற பெண். மகிழ்வு குறையும் போதெல்லாம் அப்பெண்ணுக்கு நெருடும்.

நன்றாக வாழ்வது மகிழ்ச்சி.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

அரை பிளேடு சொல்வது போல்..அந்த மனைவி பாத்திரமும் பரிதாபப் பட வேண்டிய ஒன்றுதான்..

அவளுடைய காதலும் அந்தக் கணவன் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்..

RATHNESH சொன்னது…

நண்பருக்கு,

// உண்மைக் கதை என்பதால் கதாபாத்திரங்களை விமர்சனம் செய்வதற்கு தயக்கம் வருகிறது... //

நன்றி.வாசக உபயம்: பாசமலர் மேடம்.

இயற்கை இணைத்தவர்கள், நிறைவுடன் வாழ்க.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்