ஒருவருடைய பலம் எது என்றால் அவர் தனது பலவீனத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே அவரது பலம் என்று சொல்ல முடியும். அரசியல் வாதிகள் - நடிகை ரகசிய தொடர்பு தெரியவந்தால் ஊருக்கே தெரிந்துவிடும். அண்மையில் மலேசிய அமைச்சர் ஒருவரின் லீலைகள் படமாக ஆக்கப்பட்டு கள்ளச் சந்தையில் சக்கைப் போடுபோடுவதாக சொல்கிறார்கள். சமூக விரோதம் என்று இல்லாமல் பொதுவில் இழிவாக நினைக்கப்படுகின்ற ஒன்றை அதாவது யாருக்கும் பாதிப்பின்றி தானே விரும்பிச் செய்யும் தனிமனித செயல்களை / அபிலாசைகளை பலவீனம் என்று சொல்ல முடியுமா ? இருந்தாலும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் அப்பழுக்கில்லாதவர்களாக இருந்தால் தான் தலைமைத்துவ தகுதி இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். மேற்சொன்ன சர்சைக்குறிய அமைச்சரை அவரது இல்லத்தினர் மன்னித்துவிட்டதாக சொல்லி இருந்தார்.
பொதுவாழ்வில் உள்ளவர்களை விடுவோம், தனிப்பட்ட ஒருவர் குறித்து,
ஜெயகாந்தன் கதை ஒன்றில் சின்ன வீடு வைத்திருக்கும் கணவரை கண்டித்த மகனை தாய் கண்டிக்கிறார். அது அவருக்கும் எனக்கும் உள்ள பிரச்சனை, அதையும் தாண்டி அவரை நேசிக்கிறேன், பிடிக்காவிட்டாலும் ஏற்றுக் கொள்கிறேன். என்பது போல் முடியும். அந்த கதையில் குறிப்பிட்ட ஒரு வரி ரொம்பவே யோசிக்க வைத்தது "ஒருவரை ஏற்றுக் கொள்வது என்பது அவரது பலவீனத்தையும் சேர்த்துதான்", உண்மையாக யாரையாவது நாம் நேசித்தால், ஒருவேளை அவரது பலவீனம் தெரிய வந்தால், அந்த பலவீனமும் சேர்ந்தது தான் முழுமையான அவர். அவரை வெறுப்பதற்கு அவரது பலவீனம் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பது போல் எனக்கு புரிந்தது.
நெருங்கியவர்களின் பலவீனங்கள் நமக்கு தெரியவரும் போது அப்போது அமைதியாக பெரும்தன்மையாக இருந்துவிட்டு சமயம் கிடைக்கும் போது போட்டு உடைத்து அவமானப்படுத்திவிடுவோம். இது ஏறக்குறைய எல்லோருக்கும் இருக்கும் பலவீனம் தான். இதற்கு வெட்கப்பட்டு இருக்கிறோமா ? பலம் என்பது பலவீனத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே. அடுத்தவர்களின் பலவீனத்தை சமயம் கிடைக்கும் போது வெளிப்படுத்துவது, தன்மீது அவர் வைத்திருக்கும் மதிப்பிற்கு எதிரான 'சந்தர்பவாதி' என்ற பலவீனம் தான்.
நண்பர்களோ, உறவினர்களோ எதாவது ஒன்றில் பலவீனமாக இருந்தால் சொல்லிப் பார்க்கலாம், அவர்களால் நமக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொள்ளாது என்று நன்கு உணர்ந்திருந்து, அவர்களின் பலவீனத்தால் அவர்களை வெறுப்பது என்பது, எதையும் 'அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு பழகிக் கொள்ளாத மனக்குறை' என்ற நம்முடைய பலவீனம் தான்.
புரியாதவர்கள் கை தூக்குங்கள் ! எளிமையாகச் சொல்லப் போனால்
மனைவி அருகில் இருக்கும் போது மற்ற பெண்களை சைட் அடிக்கும் கணவரை பெரும்பாலும் 'கணவரின் பலவீனம்' என்று புரிந்து கொண்டுதான் மனைவியர் பெருந்தன்மையாக விட்டுவிடுகின்றனர்.
:)
20 கருத்துகள்:
//மனைவி அருகில் இருக்கும் போது மற்ற பெண்களை சைட் அடிக்கும் கணவர்களை பெரும்பாலும் 'கணவரின் பலவீனம்' என்று புரிந்து கொண்டுதான் மனைவியர் பெரும்தன்மையாக விட்டுவிடுகின்றனர்.
:) - இதுமட்டும்
ரத்னேஷ் பதிவில் அவர் எழுதும் பெண்ணிய கருத்துக்களை அடிக்கடி படிப்பதால் வந்த பாதிப்பு. கிரிடிட் கோ டு ரத்னேஷ்.
:)
என்னை யாரும் அடிக்க வராதிங்க !!!
இது நன்பர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
நிறை, குறைகளை தெரிந்தே நன்பர்கள் நன்பர்களாக நீடிக்கிறார்கள்.
சண்டைகள் போட்டாலும் மீண்டும் இனைவதன் காரணம் இதுவாகவே இருக்கும்.
ஹில்லாரி தான் இதில் முதன்மை...மலேசிய விவகாரம் பின்னாடி வந்தது.. ;)
//ஒருவரை ஏற்றுக் கொள்வது என்பது அவரது பலவீனத்தையும் சேர்த்துதான்//
பலவீனத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை விட, தொலஞ்சிட்டு போகட்டும் அல்லது பரவாயில்லை, (ஆங்கிலத்திலே) Ignore செய்து சமாளிக்கிறார்கள் என்று சொல்லலாம்.
//நண்பர்களோ, உறவினர்களோ எதாவது ஒன்றில் பலவீனமாக இருந்தால் சொல்லிப் பார்க்கலாம்,//
என் தந்தை சொல்லுவார்:
"புத்திமதி அடுத்தவருக்கு இரண்டு நேரங்களில் மட்டுமே சொல்ல வேண்டும்.
ஒன்று, உன்னைக் கேட்டால்!
இரண்டாவதாக, உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளில். [புகை பிடித்தல், தற்கொலை போன்றவை].
மற்றபடி உனக்குப் பிடிக்கவில்லை என்பதால் மட்டும் ஒருபோதும் புத்தி சொல்லாதே!"
நல்ல பதிவு கோவியாரே!:))
கோவி.மு.கண்ணன் அய்யா,
பலவீனத்தை வெளிக்காட்டாம இருப்பதுதான் பலம்னு சொல்றதை விடுங்க;உண்மையிலேயே கேவலமான பலவீனம் என்பது தங்கள் பலவீனத்தை, பலம் என்று நினைத்து பறைசாற்றிக் கொண்டு திரிவது தான்.உதாரணத்துக்கு இந்த மஞ்சதுண்டு,வாரிசு கும்பல், மற்றும் ஜால்ராக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.இவங்க பலவீனம் என்ன?ஒவ்வொரு மூஞ்சியும் கேவலமா பூனை குதறிப் போட்ட பெருச்சாளி மாறி இருக்கும்.ஆனால், இந்த மூஞ்சிகள் கண்ணாடியை பார்த்து நினைத்துக் கொள்வது என்ன?தாங்கள் கிரகரி பெக் லெவலுக்கு இருப்பதாக நினைத்து புளகாங்கிதம் அடையும்;தாம் பெற்ற இன்பம் இந்த வையகம் அடையட்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாட்டெங்கும் போஸ்டர்,பேனர் ஒட்டி நாட்டையே நாற அடிக்கும் கேவலம் ஒரு பலவீனத்தின் வெளிப்பாடு தானே?
பாலா
// bala said...
கோவி.மு.கண்ணன் அய்யா,
பலவீனத்தை வெளிக்காட்டாம இருப்பதுதான் பலம்னு சொல்றதை விடுங்க;உண்மையிலேயே கேவலமான பலவீனம் என்பது தங்கள் பலவீனத்தை, பலம் என்று நினைத்து பறைசாற்றிக் கொண்டு திரிவது தான்.உதாரணத்துக்கு இந்த மஞ்சதுண்டு,வாரிசு கும்பல், மற்றும் ஜால்ராக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.இவங்க பலவீனம் என்ன?ஒவ்வொரு மூஞ்சியும் கேவலமா பூனை குதறிப் போட்ட பெருச்சாளி மாறி இருக்கும்.ஆனால், இந்த மூஞ்சிகள் கண்ணாடியை பார்த்து நினைத்துக் கொள்வது என்ன?தாங்கள் கிரகரி பெக் லெவலுக்கு இருப்பதாக நினைத்து புளகாங்கிதம் அடையும்;தாம் பெற்ற இன்பம் இந்த வையகம் அடையட்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாட்டெங்கும் போஸ்டர்,பேனர் ஒட்டி நாட்டையே நாற அடிக்கும் கேவலம் ஒரு பலவீனத்தின் வெளிப்பாடு தானே?
பாலா
//
ஜயராமன் சார்,
எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்குறாண்டா என்கிறார்களே, அதுதான் உங்க பலம்.
கேவலமாக மொத்துப்பட்டாலும் மஞ்சதுண்டு சிவப்புத்துண்டு என்று உளறிக் கொட்ட காவிக் கோமணத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு மூச்சுவாங்க மாங்கு மாங்குன்னு பலர் பதிவுகளில் நீங்கள் பின்னூட்டம் போடுவது பலமா ? பலவீனமா ?
அதென்ன கண்ணன் 'பாலா'ன்னு ஒருத்தர் சொன்ன கருத்துக்கு ஜயராமனுக்கு பதில் சொல்றீங்க? ஒருவேளை அவர்தான் அப்படியொரு புனைப்பெயர்ல எழுதறாரோ?
சரி... நல்லதொரு பதிவுல இந்த மாதிரி பின்னூட்டம் வர்றது என்னவோ மாதிரி இருக்கு...
ஜயகாந்தன் சொன்னது கணவன் மனைவி உறவுகளிலுள்ள விட்டுக்கொடுத்தலை... கணவந்தான் தனக்கு எல்லாம் நினைத்திருக்கும் ஒரு மனைவி சொல்வதாக வரும். ஆனால் அதுவே சரி என்பதாகிவிடாது.
பலமும், பலவீனமும் சேர்ந்தவந்தான் மனிதன். எனக்கு எந்த பலவீனமும் இல்லை என்று சொல்வன் பொய்யன் என்று பைபிளே சொல்கிறது. கடவுள் ஒருவர் மட்டுமே (அதாவது இதை நம்புபவர்கள் நினைப்பது)பலவீனம் இல்லாதவர்.
ஒருவரை அவருக்காகவே ஏற்றுக்கொள்ளும்போது அவருடைய நிறை, குறைகளோடு ஏற்றுக்கொள்கிறோம்... இதில் தவறேதும் இல்லையே...
எனக்கு பிடிக்காதது எதுவும் குறை என்றோ அல்லது எனக்கு இரூப்பதுதான் பலம் என்றோ நினைக்காமல் இருந்தாலே எந்த நட்பிலும் உறவிலும் விரிசல் விழுவதில்லை.
இத்தகைய பதிவுகளை படிக்கும்போது ஏற்படும் நிறைவுக்காகவே இன்னும் தமிழ்மணத்தை மறந்துவிடவில்லை...
வாழ்த்துக்கள் கண்ணன்..
//tbr.joseph said...
அதென்ன கண்ணன் 'பாலா'ன்னு ஒருத்தர் சொன்ன கருத்துக்கு ஜயராமனுக்கு பதில் சொல்றீங்க? ஒருவேளை அவர்தான் அப்படியொரு புனைப்பெயர்ல எழுதறாரோ?//
ஜோசப் ஐயா,
என் இடுகைகளில் 'பாலா'வுக்கும் ஜயராமன் என்று மறுமொழி இடுவது ரொம்பநாளாகவே நடக்குது. அவர் கோவித்துக் கொள்ள மாட்டார், கோவித்துக் கொண்டாலும் குடிமுழுகி போய்விடாது.
:)
எதுக்கும் சமீபத்து லக்கியார் பதிவை கொஞ்சம் எட்டிப்பாருங்க.
****
//சரி... நல்லதொரு பதிவுல இந்த மாதிரி பின்னூட்டம் வர்றது என்னவோ மாதிரி இருக்கு...
ஜயகாந்தன் சொன்னது கணவன் மனைவி உறவுகளிலுள்ள விட்டுக்கொடுத்தலை... கணவந்தான் தனக்கு எல்லாம் நினைத்திருக்கும் ஒரு மனைவி சொல்வதாக வரும். ஆனால் அதுவே சரி என்பதாகிவிடாது.
பலமும், பலவீனமும் சேர்ந்தவந்தான் மனிதன். எனக்கு எந்த பலவீனமும் இல்லை என்று சொல்வன் பொய்யன் என்று பைபிளே சொல்கிறது. கடவுள் ஒருவர் மட்டுமே (அதாவது இதை நம்புபவர்கள் நினைப்பது)பலவீனம் இல்லாதவர்.
ஒருவரை அவருக்காகவே ஏற்றுக்கொள்ளும்போது அவருடைய நிறை, குறைகளோடு ஏற்றுக்கொள்கிறோம்... இதில் தவறேதும் இல்லையே...
எனக்கு பிடிக்காதது எதுவும் குறை என்றோ அல்லது எனக்கு இரூப்பதுதான் பலம் என்றோ நினைக்காமல் இருந்தாலே எந்த நட்பிலும் உறவிலும் விரிசல் விழுவதில்லை.
இத்தகைய பதிவுகளை படிக்கும்போது ஏற்படும் நிறைவுக்காகவே இன்னும் தமிழ்மணத்தை மறந்துவிடவில்லை...
வாழ்த்துக்கள் கண்ணன்..
//
ஐயா, மலேசிய பயணங்கள் வெற்றிகரமாக முடிந்ததா ? மனிதர்களின் தனிப்பட்ட குணங்களை, இயல்புகளை வைத்து என்னுலகத்தில் நீங்கள் எழுதும் பதிவுகளை முன்பு அடிக்கடி படித்ததால் அதுபோன்று எழுதுகிறேன். உங்கள் பாராட்டு உங்களுக்கும் தகும். :)
வயதில் மூத்தவர்கள் உங்களைப் போன்று கண்ணியமாக நடந்து கொண்டால் உண்மையான இளைஞர்களுக்கு பிரச்சனை எங்கே வரப்போகிறது ?
:))
உளவியல்பூர்வமாக நிறைய சிந்திக்கிறீர்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது.
அடுத்தவர்களுடைய பலவீனங்களைச் சகித்துக் கொண்டு யாரும் நண்பராகவோ உறவினராகவோ இருப்பதில்லை. அந்த பலவீனங்களுக்காகத் தான் நட்பையும் உறவையும் தொடர்கிறோம் என்கிற கோணத்தையும் யோசியுங்கள். (அறிவுரை சொல்வதை விடப் பெரிய அளவில் ஈகோவை சந்தோஷப்படுத்துகின்ற விஷயம் கிடையாது; அதற்கு வாய்ப்பு தருகின்ற பலவீனமானவர்களை யாரும் ஒதுக்க மாட்டார்கள்).
பலவீனமே இல்லாத ஒருவனை விட பலவீனமாக எண்ணப்படும் குணங்களைக் கொண்டவனுக்குத் தான் அதிக அளவில் உறவும் நட்பும் இருக்கும். கொஞ்சம் சபலபுத்தி உடைய கணவர்களே மனைவிகளால் அதிகம் விரும்பப் படுவதாகப் புள்ளி விவரங்கள் உண்டு. (குத்திக் காட்ட, சண்டை போட வாய்ப்பே இல்லாத தாம்பத்யம் சுவைக்குமா என்ன?)
தலைவர்கள் கடவுளர்கள் விஷயத்திலும் அஃதே. ஆதிசங்கரரின் ஆவியையே அடுத்தவன் உடம்புக்குள் புகுந்து அவன் மனைவியை அனுபவிக்க வைத்த 'பரந்த மனத்தவர்' தாம் நாம்.
காஞ்சிப் பெரியவர்களில் அதிக பாப்புலர் யார் என்று நினைக்கிறீர்கள்?
கோவி.கண்ணன்,
// ரத்னேஷ் பதிவில் அவர் எழுதும் பெண்ணிய கருத்துக்களை அடிக்கடி படிப்பதால் வந்த பாதிப்பு. கிரிடிட் கோ டு ரத்னேஷ்.
:)
என்னை யாரும் அடிக்க வராதிங்க !!! //
இப்போது தான் பார்த்தேன்.
நல்ல மனம் வாழ்க.
இதுவும் சேர்த்து தான் நீங்க என் நண்பர்.
// RATHNESH said...
உளவியல்பூர்வமாக நிறைய சிந்திக்கிறீர்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது.//
ரத்னேஷ், இந்த இடுகைக்கு உங்களின் விரைவான பின்னூட்டம் - எனக்கும் மகிழ்ச்சி. மாலையில் தான் உங்களுக்கு நேரம் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன்.
//அடுத்தவர்களுடைய பலவீனங்களைச் சகித்துக் கொண்டு யாரும் நண்பராகவோ உறவினராகவோ இருப்பதில்லை. அந்த பலவீனங்களுக்காகத் தான் நட்பையும் உறவையும் தொடர்கிறோம் என்கிற கோணத்தையும் யோசியுங்கள். //
சரிதான், ஆனால் எந்த உறவோ / நட்போ கெட்டுப் போகும் போது அதிகமாக தூற்றப்படுவது அவர்களின் பலவீனங்கள் தான், அதுவரை அதை உள்வாங்கி அப்படியே தான் வைத்திருந்தோம் என்பதை எப்படி பெரும்தன்மை என்று கொள்ள முடியும் ?
//(அறிவுரை சொல்வதை விடப் பெரிய அளவில் ஈகோவை சந்தோஷப்படுத்துகின்ற விஷயம் கிடையாது; அதற்கு வாய்ப்பு தருகின்ற பலவீனமானவர்களை யாரும் ஒதுக்க மாட்டார்கள்).//
:))
நாம் சொல்வது கருத்தா ? அறிவுறையா ? சில சமயம் கேட்பவருக்கு குழம்பிப் போவதும் உண்டு. - கருத்து கந்தசாமி !
:))
//பலவீனமே இல்லாத ஒருவனை விட பலவீனமாக எண்ணப்படும் குணங்களைக் கொண்டவனுக்குத் தான் அதிக அளவில் உறவும் நட்பும் இருக்கும். கொஞ்சம் சபலபுத்தி உடைய கணவர்களே மனைவிகளால் அதிகம் விரும்பப் படுவதாகப் புள்ளி விவரங்கள் உண்டு. (குத்திக் காட்ட, சண்டை போட வாய்ப்பே இல்லாத தாம்பத்யம் சுவைக்குமா என்ன?)//
சரிதான். தாம்பத்தியத்துக்கு ஓகே தான். விலகமுடியாது. ஆனால் நட்பு கெடுவது பற்றி இன்னும் சரியாக பிடிபடவில்லை. அதிகம் விட்டுக் கொடுத்தால் நட்பு உடையும் போது மீண்டும் சேராது. ஒருபக்க ஈகோ விட்டுக் கொடுத்தவருக்கு இருக்கும்.
//தலைவர்கள் கடவுளர்கள் விஷயத்திலும் அஃதே. ஆதிசங்கரரின் ஆவியையே அடுத்தவன் உடம்புக்குள் புகுந்து அவன் மனைவியை அனுபவிக்க வைத்த 'பரந்த மனத்தவர்' தாம் நாம்.//
அந்த கதை தெரியும். உடல் தூய்மையே மேன்மையானது, மனம் அப்படி இருக்க வேண்டியதல்ல என்று சொல்லும் தவறான செயல் அது.
//
காஞ்சிப் பெரியவர்களில் அதிக பாப்புலர் யார் என்று நினைக்கிறீர்கள்?
//
வேலூரில் பொற்கோவில் கோவில் உண்டு, அங்கும் பகவானுக்கு பக்கத்தில் சென்றவர் / இருந்தவர் தான் பாப்புலர் !
//RATHNESH said...
கோவி.கண்ணன்,
இப்போது தான் பார்த்தேன்.
நல்ல மனம் வாழ்க.
இதுவும் சேர்த்து தான் நீங்க என் நண்பர்.
//
தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று எனக்கு தின்னமாக தெரியும்,
பெண்களுக்கு ஆதரவாக எழுதுபவர் என்ற பொருளில் தான் சொல்லி இருக்கிறேன்.
:)
//காஞ்சிப் பெரியவர்களில் அதிக பாப்புலர் யார் என்று நினைக்கிறீர்கள்?//
ஆமாம் இதைக் கண்டு பிடித்து சொல்ல ஷெர்லக் ஹோல்ம்ஸ் வரணுமாக்கும்? அண்ணாதுரை தான் காஞ்சிப் பெரியவர்களிலேயே மிகவும் பாப்புலர்.
பாலா
பி கு:
கோவி.மு.கண்ணன் அய்யா,
உடனே நீங்க உங்க கருப்பு கோமணத்தை இறுகப் பிடித்துக்கொண்டு காவிக் கோமணம்னு கேவலமா சீறிக்கொண்டு பாய்ந்து வராதீங்க.FYI நான் போடுவது ஜட்டி.சிவப்பு ஜட்டி;நம்ம பனியன் தியாகு அய்யா திருப்பூர்ல,தோழர்கள், சேகுவேரா அய்யாவுக்கு தினம் ஒரு வீர வணக்கம் போடுவதற்க்காக கைப்பட தயார் செய்து விறக்கப்படும் ஜட்டி.காவிக் கோமணம் என்று உளற வேண்டாம்.ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு வன்மம் இருக்கக் கூடாது;வன்மம் தான் உங்க பலவீனம்.இதை இப்படி வெளிக்காட்டறீங்களே?You must practise what you preach.
//கோவி.மு.கண்ணன் அய்யா,
உடனே நீங்க உங்க கருப்பு கோமணத்தை இறுகப் பிடித்துக்கொண்டு காவிக் கோமணம்னு கேவலமா சீறிக்கொண்டு பாய்ந்து வராதீங்க.FYI நான் போடுவது ஜட்டி.சிவப்பு ஜட்டி;நம்ம பனியன் தியாகு அய்யா திருப்பூர்ல,தோழர்கள், சேகுவேரா அய்யாவுக்கு தினம் ஒரு வீர வணக்கம் போடுவதற்க்காக கைப்பட தயார் செய்து விறக்கப்படும் ஜட்டி.காவிக் கோமணம் என்று உளற வேண்டாம்.ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு வன்மம் இருக்கக் கூடாது;வன்மம் தான் உங்க பலவீனம்.இதை இப்படி வெளிக்காட்டறீங்களே?You must practise what you preach.//
ஜயராமன் சார்,
குடுமியை வெட்டிப் போட்ட அதே கையால் பஞ்சகச்சத்தையும் கோவணத்தையும் கழட்டி எறிஞ்சு, ஜட்டிக்கு மாறிட்டேளா ?
//வயதில் மூத்தவர்கள் உங்களைப் போன்று கண்ணியமாக நடந்து கொண்டால் உண்மையான இளைஞர்களுக்கு பிரச்சனை எங்கே வரப்போகிறது ?
:))//
கோவி அய்யா,
பதிவை விட இந்த பின்னூட்டத்தை ரொம்பவும் ரசித்தேன் அய்யா.
உங்க பதிவில் அதர் ஆப்ஷன் இருந்திருந்தால் பாலா அய்யாவின் காவிக்கோணத்தை சூப்பராக உருவியிருக்கலாம் அய்யா :-))))
//பாலா அய்யாவின் காவிக்கோணத்தை சூப்பராக உருவியிருக்கலாம் அய்யா :-))))//
லக்கி லுக் அய்யா,
அடப்பாவி,கோமணத்தை உருவி பார்ப்பது தான் உன் பலவீனமா?பெரியாரிஸ்ட்களுக்கு பொதுவா ஒரு மன விகார வெளிப்பாடு இருப்பது தெரிந்தது தான்.அதுக்காக இப்படி வெறி பிடித்து அலையணுமா?இப்படி பாத்து பாத்து தான் உன் லுக் ஒரு மாறி கேவலமான லுக் ஆகிவிட்டதா?என்னவோ போங்க நீங்க முழிக்கற முழியே சரியா இல்லையே.
பாலா
//bala said...
லக்கி லுக் அய்யா,
அடப்பாவி,கோமணத்தை உருவி பார்ப்பது தான் உன் பலவீனமா?பெரியாரிஸ்ட்களுக்கு பொதுவா ஒரு மன விகார வெளிப்பாடு இருப்பது தெரிந்தது தான்.அதுக்காக இப்படி வெறி பிடித்து அலையணுமா?இப்படி பாத்து பாத்து தான் உன் லுக் ஒரு மாறி கேவலமான லுக் ஆகிவிட்டதா?என்னவோ போங்க நீங்க முழிக்கற முழியே சரியா இல்லையே.
பாலா
//
ஜெயராமன் சார்,
பத்தரமாக மூடிக் கொள்ளுங்கள் கோமணத்தை அவிழ்த்தை கையோடு அறுத்தும் விடுவார்கள், பூணூலைச் சொன்னேன்.
//bala has left a new comment on your post "பலம் பலவீனம் !":
//பத்தரமாக மூடிக் கொள்ளுங்கள் கோமணத்தை அவிழ்த்தை கையோடு அறுத்தும் விடுவார்கள்,//
கோவி.மு.கண்ணன் அய்யா,//
ஜயராமன் சார்,
கோட்டா ஓவர். அடுத்த இடுகையில் பார்ப்போம். மீனிலும் நாறியவன் எழுதியாச்சா ? இன்னிக்கு எத்தனை ஸ்ரீராம ஜயம் எழுதினேள். இங்கே சொல்ல வேண்டாம். அடுத்த இடுகையில் சொன்னால் போதும்.
:)
கோவி.மு.கண்ணன் அய்யா,
நம்ம திருட்டு முழி லக்கி லுக் அய்யாவுக்கு "ஆயிரம் கோமணம் உறுவி இரண்டாயிரம் கொட்டயறுத்து முழுங்கிய பெருங்கொட்டையோன்" என்ற தூய திராவிடப் பட்டத்தை வழங்கி இருக்கிறேன்.ஏற்றுக் கொள்ள சொல்லுங்கள்.
பாலா
வணக்கம் திரு. கோவி. கண்ணன்,
பலம் பலவீனம் என்பதற்கு ஏதேனும் பொது வரையறையுண்டா..
இவை இரண்டுமே சூழலும் பார்வையாளனும் நிர்ணயிக்கிற ஒன்றாகவே படுகிறது..
ஒருவருடைய பலம் மற்றும் பலவீனம் என்று நாம் கருதுவது நம்முடைய பார்வையே என்று கருதுகிறேன்.
ஆனாலும், நீங்கள் பதிவிடும் வேகம் வெகுவாய் அசரவைக்கிறது..
கருத்துரையிடுக