பின்பற்றுபவர்கள்

10 மே, 2006

கலைகளின் உறைவிடம் ...

நம் நாட்டில் ஓவியர்கள் நிறைய பேர் ஒரு இருட்டு அறைக்குள்ளேயே திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். சில ஓவியங்கள் குகை ஓவியங்கள் போல கோடுகளாக காணப்படும், முன்பெல்லாம் அருவருப்பாக பார்த்த ஓவியங்கள், பின்பு அதில் மறைந்துள்ள கலைதான் நினைவுக்கு வந்தது, இவர்களின் அறிவு மட்டும் நேராக இருந்தால் இவர்களால் நல்ல கார்டூனிஸ்டாக வரமுடியும் என்று நினைத்துக் கொள்வேன் அத்தகைய கருப்பு வெள்ளை ஓவியங்களை பொதுக்கழிப்பிடங்களுக்கு செல்லும் போது நீங்கள் பார்த்திருக்கலாம். சிலர் காமக்கவிதை எழுதுவதும், சிலர் தத்துவங்களை எழுதுவதும் இங்குதான்.

நான் பார்த்ததில் மிகவும் சங்கடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் இடம் எது என்றால் சென்னை போன்ற மாநகரங்களில் கழிப்பிடத்திற்காக காலை நேரங்களில் வரிசையில் நின்றுகொண்டு இருப்பதுதான். பொறுமையை சோதிப்பது போல் உள்ளிருந்து நிதானமாக வெளியே வரும் சிகரெட் புகை, அந்த நேரத்தில் உள்ளே இருப்பவரை வெட்டிக் கொல்லாம் போல இருக்கும். தண்ணீரையும் ஊற்றாமல் ஏதோ சொத்து சுகங்களை பொதுமக்களுக்கு எழுதிவைத்தது போல், நிம்மதி பெருமூச்சுடன் சிலர் கம்பீரமாக வெளியே சென்று விடுவார்கள். அரசு மருத்துவமனைகளில் இருக்கும் கழிவரைகளுக்கு சென்றுவந்தால், நமக்கு நோயாளிகள் இங்கு எப்படித்தான் உயிரோடு இருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றும்.

அரசாங்கங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க எடுக்கும் முயர்ச்சிகள் போல் நகர் புறங்களில் சுகாதாரமான நல்ல கழிவரையை கட்டிக் கொடுத்து தனியாருக்கு டெண்டர்விட்டு கண்காணித்தால் நல்லது. அரசு ஊழியர் பெரும்பாலும் மெத்தனமாக இருப்பதால் இத்தகைய பொது வசதிகளை தனியார் வசம் விடுவதுதான் நல்லது.

கழிவறை விசயத்தில் பெரும் அவதிக்கு ஆளாகுபவர்கள் நகர்புறத்திலும், மாநகரிலும் பெண்களே. பெண்கள் அருகில் வருவதைக் கூட சட்டை செய்யாமல் சிலர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடத்துகிறார்கள், சிலர் மட்டும் ஏதாவது ட்ரான்ஸ்பாமர் தெரிகிறாதா என்று தேடி போய்விடுகிறார்கள். பெண்கள் அமைப்புகள் போராடும் போராட்டம் பெரும்பாலும் ஆண்வர்கத்திற்கு எதிராகவே போராடி தங்கள் சத்தி விரயமாவதாலா ஏனோ பெண்களுக்காக சுகாதார பொதுக் கழிப்பிடங்களை கட்டித்தரவேண்டும் என்று அவர்கள் போராடுவதில்லை.

அறுசுவையான உணவு எங்கே கிடைக்கும் என்றால், சரவணபவன், ரெத்னாபவன், முனியாண்டி, செட்டினாடு என நாம் ஆயிரம் இடங்களை காட்ட முடிகிறது. சுத்தமான கழிப்பிடம் ஒன்றையும் நம்மால் காட்ட இயலாமல் போவது நம்மூடைய சமூக ஒழுங்கீனத்தின் அடையாளம்.

வெளிநாடுகளில் பொதுச் சுகாதர இயக்கங்களும், ஹேப்பி டாய்லட் அசோசியேசன், தன்னார்வ தொண்டு நிறுவணங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதாரங்களை வழியுறுத்துகின்றன. நம் நாட்டில் இளைஞர்கள் நடிகர்களுக்கு ரசிகராக இருப்பதிலும், கட்சிக்கு தொண்டனாக இருப்பதிலும் பெருமையாக நினைக்கிறார்கள். பொதுசுகாதார தொண்டூழிய அமைப்பை ஏற்படுத்துவதற்கோ, அத்தகை அமைப்புகளில் பங்குகொள்வதற்கோ யாரும் முன்வருவதில்லை என்பது நம் பொறுப்பின்மையை காட்டுகிறது.

தற்போதைக்கு நன்றாக இழுத்து மூச்சை விடுங்கள்.

சுகாதாரம் மீண்டும் தொடரும் ...

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு. நியாயமான கேள்விகள். கண்டிப்பாக ஒரு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும். நான் பார்த்தவரை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் சிறிது பரவாயில்லை. பராமரிப்பு நன்றாக இருக்கிறது. அதுபோல அனைத்து இடங்களிலும் செயல்படுத்த வேண்டும்.
சரி நம்ம விசயத்துக்கு வருவோம், பணக்கார பிள்ளையார் இல்ல சொல்லுறதுக்கு பதிலா தில்லையில் ஆடுவனின் பெயர் கொண்ட பள்ளிக்கு அருகில் எனக் கூறி இருந்தால் பளிச்சுனு புரிஞ்சு இருக்கும். உங்களை பற்றி எனக்கு தனி மடல் இட்டால் நன்றாக இருக்கும்.
அன்புடன்
நாகை சிவா

பெயரில்லா சொன்னது…

தமிழ் நாட்டில் தான் இந்த நிலை என்று நினைக்கிறேன். நான் போன மாதம் தென் கர்நாடகா சுற்றுப் ப்யணம் போயிருந்தபோது இந்தத் தொல்லை இல்லை. பொது மக்களும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். வட நாட்டில் எல்லாம் எனக்குத் தெரிந்து பல வருடங்களாக வசதிகள் உண்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//கண்டிப்பாக ஒரு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும்.//
சிவா,ஆதங்கங்கள் இருந்தாலும் எதுவும் செய்யமுடியவில்லை, எழுதால் ஏதாவது செய்யமுடியுமா என்று முயற்சி செய்கிறேன்.

//Geetha Sambasivam said...
தமிழ் நாட்டில் தான் இந்த நிலை என்று நினைக்கிறேன். நான் போன மாதம் தென் //

உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி

பெயரில்லா சொன்னது…

கோவிகண்ணன்,

மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான சேவைகளில் கட்டணம் விதிப்பது நல்ல அரசாங்கத்துக்கு அழகல்ல. அவசரத்தில் செல்பவர்கள் சில்லரையும் கொண்டு வர வேண்டியுள்ளது.

இவ்விடயம் பற்றிய உங்கள் பதிவை நான் இதற்கு முன் நான் படிக்கவில்லை. சில பொதுவான விசயங்களில் ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் இப்படி சில நேரம் பொருந்தும்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்