பின்பற்றுபவர்கள்

5 மே, 2006

பரிணாம வளர்ச்சி - ஸ்டாலின் மீது திடீர் பாசம்

முன்பு திராவிடக் கட்சிகளை குறை சொல்பவர்கள், பெரியாரையும், பகுத்தறிவு வாதத்தையும் குறைகூறிவந்தார்கள். அவர்கள் வாய் அடையும் படி திமுக இரண்டாக உடைந்து, அதிமுக என்னும் கட்சி எம்ஜிஆர் தலைமையில் உதயமானது. இருந்தாலும் கருணாநிதிக்கு எதிர்நிலை எடுக்க வேண்டும் என்றால் எம்ஜிஆரையும், அதிமுகவையும் ஆதரிக்க வேண்டுமே என்று திராவிடக் கட்சி கொள்களை குறைகூறுவதை ஓரளவுக்கு குறைத்துக் கொண்டார்கள்.

கருணாநிதியின் திராவிட அரசியலை குறைசொல்ல வேண்டுமே, விட்டுவிடுவார்களா ?, இருக்கவே இருக்கு குடும்ப அரசியல் என்று ஸ்டாலினையும், அழகிரியையும் சாடி வந்திருந்தார்கள், ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் முட்டல் மோதல் என்று எழுதிப்பார்த்தார்கள். அவர்கள் இருவருக்கும் சண்டை மூட்டிவிட எவ்வளவோ முயன்றார்கள், இதை உணர்ந்ததால் தானோ அவர்கள் அடக்கி வாசிக்க, ஸ்டாலின் இரு முறை மேயர், துணைப் பொதுச் செயலாளர் என்று அரசியலில் திமுகவில் ஒரு தவிற்க முடியாத சக்தியாகிவிட்டார்.

சற்று முன்பு வரை, கட்சியில் மூத்த தலைவர்கள் என பேராசிரியர் அன்பழகன் முதலியோர் இருக்க, கருணாநிதி மகனுக்கு மகுடம் சூட்டப் பார்க்கிறார் என்றார்கள். அன்பழகன் போன்றோரை எப்படியாவது திமுகவிலிருந்து விலக வைக்க வேண்டும் என்று போட்ட திட்டம் பலிக்க வில்லை. அதற்கு பதில் போலவே பேராசிரியரும், அடுத்த முதல்வர் திமுக சார்பில் ஸ்டாலின் தான் என்று வழிமொழிந்து முற்றுப் புள்ளிவைத்தார்.

நான் வளர்கிறேனே மம்மி என்று ஸ்டாலின் படிப்படியாக அரசியலில் வளர்ந்துவிட்டார். பத்திரிக்கை துறையிலும், தொலைக்காட்சியிலும் சன் டீவி நிறுவனதினர் வளர்ந்து பிராமன பத்திரிக்கைகளுக்கு வேட்டு வைக்க தொடங்கியதும், இப்பொழுது தான் பிராமணப் பத்திரிக்கைகளுக்கு ஸ்டாலின் மீது திடீர் பாசம் வந்துள்ளது. அதாவது மாரன் மகன்கள் ஆன தயாநிதி மாரனும், கலாநிதி மாரனும், திமுகவை கைப்பற்றி ஸ்டாலினை அமுக்க பார்க்கிறார்களாம். கதை எப்படி போகுது பாருங்க.

ஆக ஸ்டாலினை வளர்த்து விட்டவர்களே இவர்கள் தாம்.

17 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//ஆக ஸ்டாலினை வளர்த்து விட்டவர்களே இவர்கள் தாம். //

அப்பாடா.. ஸ்டாலின் அப்படியொன்றும் தி.மு.க. தலைவர் சொன்ன மாதிரி கட்சிக்காக பாடு பட்டெல்லாம் வளரவில்லை. மத்தவங்க தான் வளர்த்துவிட்டாங்கன்னு ஒப்புக்குறீங்க!

பெயரில்லா சொன்னது…

அடேயப்பா மாயவரத்தான், அப்படியே புல்லரிச்சுப் போச்சு போங்க.
இதைத்தா கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வைம்பாங்க...

அவரு சொன்ன அத்தனையும் விட்டுட்டு கட்டுரையோட சாராம்சமா ஒரு கருத்து சொல்றீங்க பாருங்க, அங்க நிக்குறீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவரு சொன்ன அத்தனையும் விட்டுட்டு கட்டுரையோட சாராம்சமா ஒரு கருத்து சொல்றீங்க பாருங்க, அங்க நிக்குறீங்க.//

என்ன உள்குத்து வரும்னு பார்க்கத்தான் அப்படி ஒரு கருத்தை இறுதியில் வைத்தேன். பாவம் மாயவரத்தான் அகப்பட்டு கொண்டார்

பெயரில்லா சொன்னது…

//என்ன உள்குத்து வரும்னு பார்க்கத்தான் அப்படி ஒரு கருத்தை இறுதியில் வைத்தேன். பாவம் மாயவரத்தான் அகப்பட்டு கொண்டார் //

ஆஹா...எறும்பு ஏரோப்ளேன் ஓட்டுது பார்.

பெயரில்லா சொன்னது…

அது சரி.. திராவிட கட்சி கொள்கை..கொள்கைன்னு சொல்றீங்களே.. அது என்னான்னு சொல்லுங்களேன். தெரிஞ்சுக்குவோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

அது சரி.. திராவிட கட்சி கொள்கை..கொள்கைன்னு சொல்றீங்களே.. அது என்னான்னு சொல்லுங்களேன். தெரிஞ்சுக்குவோம்.

//அது சரி.. திராவிட கட்சி கொள்கை..கொள்கைன்னு சொல்றீங்களே.. அது என்னான்னு சொல்லுங்களேன். தெரிஞ்சுக்குவோம். //

அப்படி ஒரு கொள்கையில்லேன்னா, இப்படி மாஞ்சி மாஞ்சி கருணானிதியை திட்டி பதிவு போட உங்களால முடியுங்களா ?

பெயரில்லா சொன்னது…

உண்மையிலேயே தெரியாமல்தான் கேட்கிறேன். வை கோபால்சாமி இருக்க ஸ்டாலினுக்கும், அவரை விட அதிகமாக கழகத்துக்கு உழைத்தவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்க தயாநிதி மாறனுக்கும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது/ கொடுக்கப்படுகிறது?

அண்ணா உருவாக்கிய இயக்கத்தை, அவரது கனவை, தனது சுயநலத்தாலும், குடும்பப் பாசத்தாலும் சீர்குலைத்து விட்டார் கலைஞர் என்பதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? ஏன் இயக்கத்தை குடும்பச் சார்பில்லாமல் நடத்திச் செல்ல முடியவில்லை?

காங்கிரஸில் செய்யவில்லையா என்று கேட்காதீர்கள்? கம்யூனிஸ்டுகளின் ஒரு நல்லகண்ணு போல அடுத்த தலைமுறைக்கு தலைமையை விட்டு தன் மகளின் வாடகை வீட்டில் கடைசி காலத்தைக் கழிக்கும்படி கலைஞர் அரசியல் நடத்தி இருந்தால் ஜெயலலிதா போன்ற ஆட்சியாளர்களைத் தமிழ் நாடு பார்த்திருக்க வேண்டுமா?

தமிழ், தமிழ் நாடு, மாநில சுயாட்சி, ஈழத் தமிழர் நலன்கள் என்று எல்லாவற்றையும் அடகு வைத்து விட்ட கலைஞர் திராவிட பாரம்பரியத்தை சொந்தம் கொண்டாடுவது என்ன நியாயம்?

இதை கொஞ்சம் சீரியஸாக விவாதிக்க முன் வந்தால் மகிழ்வேன்.

பெயரில்லா சொன்னது…

கருணாநிதியை திட்டி பதிவு போடுறேனா? அது எங்கே?

ம்..அப்போ 'திட்டுறது' தான் திராவிட கொள்கைன்னு சொல்றீங்களா? புரிஞ்சு போச்சுங்க!

பெயரில்லா சொன்னது…

Aaa Kovikanna Varthai Vilayattu vilayadukerar. Kamudithanama ivragal yeen DMK adharikindraner endru therivillai...

Jadi duvesam, Mozhi duvesam seidee ivargal valladanar enbedu nethrsana unmai!!!

(Tamiz font illai...)

கோவி.கண்ணன் சொன்னது…

//இதை கொஞ்சம் சீரியஸாக விவாதிக்க முன் வந்தால் மகிழ்வேன்.//
ம.சிவக்குமாருக்கு என்பதில், என்னுடைய இந்த பதிவைப் பாருங்கள்

http://govikannan.blogspot.com/2006/04/blog-post_24.html

கோவி.கண்ணன் சொன்னது…

//கருணாநிதியை திட்டி பதிவு போடுறேனா? அது எங்கே?//
உங்கள் எழுத்து உங்களுக்கு புரியவில்லை என்றால் நான் என்ன செய்யமுடியும்

பெயரில்லா சொன்னது…

இது என்ன உல்டாவா இருக்கு? 'என் பதிவு உங்களுக்கு புரியவில்லையென்றால் நான் என்ன செய்ய முடியும்' அப்படீன்னு நான் அல்லவா கேட்க வேண்டும்?!

பெயரில்லா சொன்னது…

கோவிக் கண்ணன்,

உங்களது பதிவில், குடும்ப அரசியலை தாங்கித்தான் எழுதியிருக்கிறீர்களே தவிர, என் கேள்விகளுக்குப் பதில் இல்லை?

காந்தியின் குடும்பத்தில் எத்தனை பேரை காந்தி அரசியலில் ஈடுபடுத்தினார்?
ராஜாஜியின் குடும்பம்?
காமாராசர், அண்ணா பற்றி நீங்களே கூறி விட்டீர்கள்.

இரண்டு தவறுகள் ஒன்றை ஒன்று ரத்து செய்து விடா. மன்னராட்சி போய் நிறைய நாளாகி விட்டது. குடும்ப/வாரிசு அரசியல் என்பது நம் நாட்டைப் பீடித்த பிணி. அது வாசனாயிருந்தாலும் சரி, அன்புமணியாயிருந்தாலும் சரி, ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி.

கோவி.கண்ணன் சொன்னது…

இது என்ன உல்டாவா இருக்கு? 'என் பதிவு உங்களுக்கு புரியவில்லையென்றால் நான் என்ன செய்ய முடியும்' அப்படீன்னு நான் அல்'வா கேட்க வேண்டுமா ?

சிரிக்க முடியவில்லை

பெயரில்லா சொன்னது…

//அப்படீன்னு நான் அல்'வா கேட்க வேண்டுமா ?//

ஷோக்கு? சிரிச்சிடுறோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உண்மையிலேயே தெரியாமல்தான் கேட்கிறேன். வை கோபால்சாமி இருக்க ஸ்டாலினுக்கும், அவரை விட அதிகமாக கழகத்துக்கு உழைத்தவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்க தயாநிதி மாறனுக்கும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது/ கொடுக்கப்படுகிறது?//

நான் குடும்ப அரசியலை ஆதரித்து எழுதவில்லை, எப்படி குடும்ப அரசியல் வளர்ச்சி பெறுகிறது, வீழ்கிறது, அதற்கு யார் காரணம் என்றுதான் எழுதியிருக்கிறேன். நான் இங்கு ஸ்டாலினைப் பற்றி எழுதியது பத்திரிக்கைகளின் பல்வேறு கால கட்ட நிலைகளைத்தான், திமுகவிற்கு நான் கொடிபிடிக்க வில்லை, குடைசாய்க்கவும் வில்லை. அரசியல் காட்சிகளை ரசித்துதான் எழுதுகிறேன். மூத்த அரசியல் தலைவர் என்ற முறையிலும், தமிழ்காவலர் என்ற முறையிலும் மு.க மீது மதிப்பு உண்டு, இது எனக்கு மட்டுமல்ல தமிழார்வளர் எல்லோருக்கும் உள்ளதுதான். தேர்தல் காலமாக இருப்பதால் கொஞ்சம் நகைச் சுவையும், கொஞ்சம் சர்சையையும் சேர்த்து எழுதுகிறேன் அவ்வளவு தான். நீங்கள் என்னை திமுக கொ.ப. செ நினைக்க வேண்டாம்.

TBCD சொன்னது…

என்ன கேள்வி இது, வைகோவை ஆதரித்திருந்தால், மதிமுக என்ற ஒரு காமெடி கட்சி பிறந்திருக்கும்மா..

ராமதாஸ் ஐயா தனியா இருக்கிறதா நினைச்சு வருத்தப்பட மாட்டாரா...(கட்சி தாவுறதில்..)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்