பின்பற்றுபவர்கள்

28 ஆகஸ்ட், 2012

யார் மூத்தப் பதிவர்கள் ?


தமிழ் பதிவர்களின் மாபெரும் ஒன்று கூடலை நேரடி ஒளிபரப்பை நேரம் கிடைக்கும் பொழுது பார்க்க முடிந்தது, இந்த ஏற்பாடு சிறப்பு,  இணைய வேகத்தில் குறைபாடு இருந்ததால் விட்டு விட்டு தெரிந்தது, இருந்தாலும் என்ன நடக்கிறது என்பதை பார்க்கும் ஒரு வாய்ப்பு என்ற அளவில் இதை நான் குறையாகவும் கருதவில்லை. தமிழகத்தில் இந்த அளவு ஏற்பாடு செய்ய முடிவதே பெரிய அளவு.  நான் பார்க்கத் துவங்கிய பொழுது பதிவர் அறிமுக நிகழ்ச்சி நடந்தேறியது. இந்த நிகழ்ச்சி கிட்டதட்ட இரண்டு மணி நேரம் நடந்ததாக பின்னர் தெரிந்தது.  சிங்கப்பூரில் சிறிய அளவிலான சந்திப்புகளில் பதிவர் அறிமுகங்களை தவிர்ப்போம், காரணம் தேவையற்ற நேர விரயம் என்பதுடன், திட்டமிட்ட மற்ற நிகழ்ச்சிகளை நடத்த போதிய நேரம் கிடைக்காது என்பதால் பதிவர் அறிமுகங்களை தவிர்ப்போம், அதற்கு மற்ற காரணம், வலைப்பதிவில் எழுதுகிறார்கள், ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்ற அளவில் திரும்பவும் அறிமுகப் படுத்திக் கொள்வது தேவையற்றது என்பதாலும், மிகவும் புதியவர் / வாசகர் என்றால் மட்டுமே சிறு அளவிலான தகவல்களை கேட்டுப் பெருவதுடன் சரி. சிலருக்கு பேசவே கூச்சமாக இருக்கும்  அவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொல்ல நெளிவார்கள்.  பெரிய கூட்டங்களில் சிலர் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாமே என்று நினைத்திருப்பார்கள். அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பாத நிலையில் அவர்களை மேடை ஏற்றி அறிமுகம் செய்யது கொள்ளச் சொல்வதும் அவர்களை வர்புறுத்துவதாகும். சிலர் அறிமுகம் என்ற அளவில் இல்லாமல் பேசிக் கொண்டே இருப்பார்கள், அதை கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் நெளிவார்கள். இதற்கு மாற்றாக பெயர் அட்டைகளில்  (பேட்ஜ்) அவர்களது பெயர், தேவை என்றால் ஊர் மற்றும் வலைப்பதிவு பெயரை, வருகையை உறுதிப்படுத்தியவர்கள் என்ற அடிப்படையில் முன்கூட்டியே அச்சடித்து வைத்திருந்து வருகையின் பொழுது அணிந்து கொள்ளச் சொல்லலாம். அதைப் படிப்பவர்கள் இன்னார் இன்னார் என்று தெரிந்து கொள்வார்கள். விருப்பம் இருந்தால் நிகழ்ச்சி இடைவெளிகளில் தான் உரையாட விரும்புவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து தொடர்ப்பு கொள்வார்கள்.

*****

மூத்தப் பதிவர் யார் என்ற (சுரேகாவின்) விளக்கம் சிறப்பாக இருந்தது,  வலைப்பதிவில் ஓரளவு தொடர்ந்து செயல்படும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூத்தப் பதிவர்கள் என்ற விளக்கம் எனக்கும் பிடித்திருந்திருந்தது, ஏற்கிறேன், என்னைக் கவர்ந்த மற்றொன்று தமிழ் பதிவர்களிடையே பெரியவர்களை மதிக்கும் பண்பு, இவை யாருமே சொல்லிக் கொடுக்காமல் வளர்ந்திருக்கிறது, இதற்கு அடிப்படைக்காரணம் நமது பண்பாடு என்றே நினைக்கிறேன், பெரியவர்களிடம் கருத்து மோதல் செய்வதுடன் அவர்களுக்கு கொடுக்கும் மதிப்புகளை இணைத்துப் பார்க்கலாகது என்ற புரிந்துணர்வு பங்குபெற்ற அனைவருக்குமே இருந்தது பாராட்டத்தக்கது, வலைப்பதிவில் எழுதுகிறார்கள், வயதில் மூத்தவர்கள் என்ற அளவில் அனைவரும் மதிக்கின்றனர் என்ற உணர்வே மூத்தவர்களுக்கு கிடைக்கும் சிறந்த வெகுமதியாகும், என்னுடைய தனிப்பட்ட நன்மதிப்பு பெற்றவர்கள் என்ற அளவில் மூத்த வலைப்பதிவர்கள் சிலரை நேரடியாக சந்திக்கும் பொழுது அவர்களின் காலில் கூட விழுந்து எழுந்திருக்கிறேன், அதற்காக அவர்கள் எழுதுவதையெல்லாம் சரி என்றெல்லாம் நான் ஒப்புக் கொண்டதோ, மறுக்கத் தயங்கியதோ இல்லை,  தீமையான கருத்துகளைப் பரப்புவர்கள் என்பவர்கள் தவிர்த்து மூத்தவர்களை மதிக்க வேறெந்த அளவுகோலும் தேவையற்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

வலைப்பதிவில் நீண்டகாலமாக எழுதிவரும் திரு டோண்டு இராகவன் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளாதது சற்று ஏமாற்றம் தான், சந்திப்பில் அனைவரையும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர், திரு டோண்டு இராகவன் கலந்து கொள்ளவதை ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்திருந்தால் அவருக்கும் சிறப்பு செய்திருபார்கள் என்றே நினைக்கிறேன், அது தவிர்த்து டிபி ஆர் ஜோசப், தருமி மற்றும் டிவிஆர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், டிவிஆர் / தருமி கலந்து கொள்ளாததன் தனிப்பட்ட காரணங்களை பதிவில் எழுதி இருந்தனர்.  விழாவில் கலந்து கொள்ளபவர்கள் என்ற அடிப்படையில் இல்லாமல் முன்கூட்டியே ஏற்பாட்டாளர்கள்  மூத்தப்பதிவர்களை அடையாளம் கண்டு, தொடர்பு கொண்டு அவர்களின் விருப்பம் கேட்டிருந்தால் விடுபட்டவர்கள் ஒருவேளை கலந்து கொள்ள நேரிட்டிருக்கும். விழாவில் கலந்து கொள்பவர்கள் தவிர்த்து வெளிநாட்டில் வசிக்கும் மூத்தப்பதிவர்களையும் பாராட்டி அவர்களுகான சான்றிதழ்களை அனுப்பியும் வைக்கலாம், நேரடியாக அனைவரும் பங்குபெற முடியும் என்பது வாய்ப்பற்றது. உதாரணத்திற்கு திருமதி துளசி கோபால், இவரைத் தெரியாத பதிவர் வலைப்பதிவராக இருக்க முடியாது, வலைப்பதிவு முன்னோடி என்பது தவிர மூத்த வலைப்பதிவர் என்கிற தகுதியும் பெற்றவர், இவரைப் போன்றவர்களை நினைவு கூர்ந்து பாராட்டாமல் மாபெரும் சந்திப்புகளில் வெற்றி என்ற சொல்லாடலை இணைத்துக் கொண்டால் மட்டும் போதாது. இதை நான் குறை என்ற அளவுகோளில் குறிப்பிட வில்லை, நிகழ்ச்சி பற்றிய எனது எண்ணம், அதை வெளியே சொன்னால் தான் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மற்றவர்கள் நிகழ்ச்சி பற்றி என்னக் கூறுகிறார்கள் என்பது தெரியவரும் என்பதால் குறிப்பிடுகிறேன், எனவே குறை / எதிர்கருத்து என்ற அளவில் இதைப் பொருத்திப்பார்க்காதீர்கள்.

*****

தமிழ் வலைப்பதிவர்களுக்கு பொது அமைப்பு தேவையா ? சாத்தியமா ? - இதையெல்லாம் கடந்த ஆண்டே பலர் எதிர்த்தும் ஆதரித்தும் எழுதிவந்தார்கள், பொது அமைப்பு என்றால் யார் தலைமை ஏற்பது ? கருணாநிதி உலகத் தமிழர்களின் தலைவர் என்று திமுகவினரால் சொல்லப்பட்டால் கருணாநிதி உலகத் தமிழர்களின் தலைவர் ஆகிவிடுவாரா ? அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா ? என்பது போன்றது தான் வலைப்பதிவர்களுக்கான பொது அமைப்பும் தலைமையும். எந்த ஒரு அமைப்பும் வெற்றிகரமாக செயல்பட தலைமை மிகவும் தேவை, வழிகாட்டல் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அமைப்பாக செயல்படவும், தலைமை தாங்குபவர்களை தேர்ந்தெடுக்கவும் விளக்கங்கள் காரணங்கள் தேவைப்படுகிறது. சிலர் சென்னைப் பதிவர் சந்திப்பு என்றார்கள், சிலர் தமிழ் நாட்டு பதிவர்கள் சந்திப்பு என்றார்கள், வெளிநாடுகளில் இருந்து சிலர் கலந்து கொண்டதால் உலக தமிழ் பதிவர்கள் சந்திப்பு என்றார்கள். வலைப்பதிவர்களுக்கான பொது அமைப்பு ஏன் ? என்பதற்கான காரணங்களை நாம் தெளிவாக வரையறுக்காதவரை அதுபற்றியும் அதன் தலைமை பற்றியும் பேசுவது வீண். மற்றபடி

நகரம் சார்ந்து ஒருசிலரின் உந்துதலில் வலைப்பதிவாளர்கள் ஒன்றுகூடி நிகழ்ச்சி நடத்துவதில் ஏதும் சங்கடங்கள் இல்லை, சென்னை நிகழ்ச்சியைக் கூட நான் அப்படித்தான் பார்க்கிறேன், இது போன்ற நிகழ்ச்சி ஏற்பாடுகள் மதுரை, கோவை, திருச்சி, பெங்களூர் டெல்லி மற்றும் வலைப்பதிவர்கள்  எண்ணிக்கை அளவில் மிகுந்திருக்கும் இடங்களில் நடத்துவது அவசியம் தான்.  நாங்கள் சிங்கையில் மணற்கேணி நிகழ்ச்சி நடந்தினோம், முதலாண்டு வெற்றியாளர்களுக்கு மறைந்த வலைப்பதிவர்களை நினைவு கூறும் வகையில் அவர்கள் பெயரிலேயே விருதுகள் வழங்கினோம்,  இதில் அமைப்பு என்பது சிங்கைப்பதிவர்கள், அதிலும் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் கலந்து பேசி பொறுப்புகளைப் பிரித்துக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினோம். தொடர்ந்து செயல்படாமல் இருப்பதற்கு வேறு சிலகாரணங்கள் இருந்தாலும் யாருக்கும் அதில் தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகள் எதுவும் இல்லை. 

இதுபோன்ற பொது நிகழ்ச்சியில் கணக்கு வழக்குகள் மிகவும் முக்கியம் யாரும் மட்டமான கமெண்ட் அடித்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் ஏன் நடத்தினோம் ? என்று வருந்துவார்கள். ஸ்பான்ஸர் சிப் அல்லது விருப்பத்தின் பெயரில் விரும்பியதைக் கொடுக்கலாம், திட்டச் செலவு இவ்வளவு என்று சொல்லிவிட்டால் விரும்பியவர்கள் பொருளுதவி செய்வார்கள்,  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி நடந்த பிறகு பல்வேறு தரப்பினரால் சர்ச்சைக்கு உள்ளாவர்கள். எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அதன் பிறகான சர்சைகளும் அங்கமே, அத்துடன் சேர்த்து தான் நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வருகின்றது, எனவே சர்சைகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது, மிகவும் மோசமான சர்சை என்றால் மட்டுமே விளக்கங்கள் கொடுக்கலாம்.

நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பில் பார்க்கும் பொழுது நானும் கலந்து கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது, அதற்கான முன்னேற்பாடுகளை நான் எதுவும் செய்யவும் இல்லை, ஆனாலும் இதுபோன்ற மாபெரும் சந்திப்புகளில் கலந்து கொள்வதால், என்னைப் பிடிக்காதவர்களையும் நான் சந்திக்க வேண்டிய சங்கடமாக அமைந்துவிடும், அதனால் முடிந்த அளவு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வது ஐயமே. கருத்து தெரிவித்தல் என்ற அடிப்படையை மறந்து தனிமனித தாக்குதல் செய்தவர்களை நேர்முகம் கண்டு கட்டித் தழுவுவது பெரும்தன்மை, சமூக நல்லிணக்கம் என்றெல்லாம் நான் நினைப்பது இல்லை.

52 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

பொன்னாடை போச்சே என்றிருந்தேன் கோவியாரே!

இங்கே தங்கமீனில் அங்கீகாரம் கிடைத்துவிட்டது:-))))

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் கூறியது...
பொன்னாடை போச்சே என்றிருந்தேன் கோவியாரே! //

உங்க தோழி வல்லியம்மா வாங்கிட்டாங்களே.
:)

துளசி கோபால் சொன்னது…

அவுங்க முதலில் போகலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. மெதுமெதுவா தேரைக் கிளப்பிய பெருமை எனக்குத்தானாக்கும்:-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//அவுங்க முதலில் போகலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. மெதுமெதுவா தேரைக் கிளப்பிய பெருமை எனக்குத்தானாக்கும்:-))))//

அப்படியா ? உங்கப் புண்ணியத்தில் அவங்களை நேரடி ஒளிபரப்பில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது, சரியாக பொன்னாடை போர்த்தும் நேரத்தில் பார்த்தேன்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல பதிவு..

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல பதிவு..

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…


//Your comment has been saved and will be visible after blog owner approval.//

:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.ராதாகிருஷ்ணன் கூறியது...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

:)))//

கமெண்ட் மாடுரேசன் இல்லை என்றால் நம் வலைப்பதிவை கழிவறை ஆக்கிவிடுகிறார்களே.

:)

Paleo God சொன்னது…

கோவியாரே உங்களின் பெரும்பாலான கருத்துக்களை, ஏற்கனவே நடந்த அரசியல்களை, முன்னெடுப்பதில் உள்ள சிரமங்களை தனிப்பட்ட சந்திப்பில் அவர்களுக்குச் சொல்லிவிட்டு வந்தோம்.

வல்லியம்மாவைப் பார்த்ததும், துளசி டீச்சரை மிஸ் பண்ணினோம். :))

பெரும்பாலானவர்களைத் தெரியாது என்றாலும், சுதந்திரமாகச் சென்று மன நிறைவோடு திரும்ப வந்தோம். மகிழ்ச்சியான சந்திப்புதான்.

CS. Mohan Kumar சொன்னது…

இதை சொல்ல சற்று வருத்தமாக இருக்கிறது இருந்தாலும் சொல்ல வேண்டியிருக்கிறது. தூரத்தில் இருந்து எதுவும் பேசலாம். சொல்லலாம். களத்தில் நின்று பணியாற்றும் போது தான் பிரச்சனைகளும், வலியும், முப்பது பேரை கொண்ட குழவில் முடிவெடுப்பதில் உள்ள சங்கடங்களும் புரியும். இத்தகைய நிகழ்ச்சி என்பது நாமே எழுதி நாமே பப்ளிஷ் செய்து கொள்ளும் பதிவு போலன்று. அங்கு முப்பது பேர் கூடி, மெயிலிலோ நேரிலோ பேசி, விவாதித்து முடிவெடுக்கிறார்கள்.

கணக்கு வழக்கை பொறுத்த வரை இதுவரை நடக்காத எந்த நிகழ்விலும் நடக்கிறதா வெளிப்படையான அணுகுமுறையை
நாங்கள் கடைபிடித்ததை நீங்கள் விரைவில் அறிவீர்கள் அதை நான் சொல்வதை விட விரைவில் ஜெயகுமார் அறிவிக்கும் போது தெரிய வரும்

எதிர் கருத்தே தேவையில்லை என்பதல்ல என் நிலை. ஆனால் "குணம் நாடி குற்றமும் நாடி" என்பது போல், இந்த நிகழ்வில் நல்லவை அதிகம்; குறைகள் மிக குறைவு; அதை இந்த பதிவு வெளிப்படுத்தியதா என்று தெரியவில்லை

மூத்த பதிவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டியதை லேசாக பாராட்டியதை தவிர மற்றபடி மிக அதிக குறைகளே நீங்கள் சொன்னது விழாவிற்காக மிக உழைத்தவர்களை ( நான் இல்லப்பா !) காயப்படுத்தும் என்பது என் தாழ்மையான கருத்து !

கோவி.கண்ணன் சொன்னது…

//மிக அதிக குறைகளே நீங்கள் சொன்னது விழாவிற்காக மிக உழைத்தவர்களை ( நான் இல்லப்பா !) காயப்படுத்தும் என்பது என் தாழ்மையான கருத்து !//

இது உங்கப் பார்வையில் இங்கு எழுதி இருப்பதை புரிந்து கொண்ட விதம் மட்டுமே.

இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய இராமனுசம் ஐயாவின் மீது நன்மதிப்பு உள்ளவன் என்ற நிலையில் நீங்கள் நினைப்பது போல் நான் இதை எழுதவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//வல்லியம்மாவைப் பார்த்ததும், துளசி டீச்சரை மிஸ் பண்ணினோம். :))//

வல்லியம்மாவை நிகழ்ச்சி ஒளிபரப்பில் தான் நேரடியாகப் பார்த்தேன், எனக்கும் மிக்க மகிழ்ச்சி

வவ்வால் சொன்னது…

கோவி,

குறை,நிரை இல்லாமல் எந்த நிகழ்வும் இருக்காது,எது அதிகமோ அதனை எடுத்துக்கொள்ளலாம்.

கலந்துக்கொண்டவர்களை விட கலந்துக்கொள்ளாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது அவரை அழைத்து இருக்கலாம், இவரை அழைத்திருக்கலாம் என எப்படி சொல்ல முடியும்.

நிர்வாகிகள் குழுவின் சார்பாக ஒருவரை மட்டும் வேண்டி விரும்பி அழைக்க முடியாது,யாரேனும் நண்பர்களாக இருந்து ,ஏன் வரவில்லை வாங்க என அழைக்கலாம்.எனவே பொதுவான அழைப்பு மட்டுமே சாத்தியம் ,தெரிந்து விரும்பி வந்தால் மட்டுமே உண்டு.

வராத மூத்தப்பதிவர்களுக்கு சான்றிதழ்னு சொல்வதும் பிரச்சினையை உருவாக்கும் யாருக்காவது விட்டுப்போச்சுன்னா என்னை ஏன் விட்டிங்கன்னு மல்லுக்கட்டக்கூடும் :-))

// எந்த ஒரு அமைப்பும் வெற்றிகரமாக செயல்பட தலைமை மிகவும் தேவை, வழிகாட்டல் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அமைப்பாக செயல்படவும், தலைமை தாங்குபவர்களை தேர்ந்தெடுக்கவும் விளக்கங்கள் காரணங்கள் தேவைப்படுகிறது.//

இது ஒரு முக்கியமான வினா, சம்பந்தப்பட்டவர்கள் ஆலோசிக்க வேண்டிய ஒன்று.

ஏன் எனில் யாரேனும் ஒரு கருத்து சொன்னால் சொன்னது யார் எனப்பார்க்காமல் சொல்லப்பட்ட விஷயத்தினை பார்க்க வேண்டும்,அப்படியானவர்கள் பொறுப்பில் வரவேண்டும்.

எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் கையில் பொறுப்பு ஒப்படைத்தால் ஒற்றுமை போய்விடும் என்பது எனது கருத்து.

நிகழ்வு வெற்றிகரமாக நடத்திக்காட்டப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, இனிமேல் அடுத்து என்ன என்பது தான்.

suvanappiriyan சொன்னது…

'குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் உள்ளார்கள். எனக்கு பரிசு வேண்டாம். நான் வருகிறேன்.'

திருவிளையாடலில் வரும் தருமி பாத்திரம் ஏனோ இந்த நேரத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது. :-(

கோவி.கண்ணன் சொன்னது…

//திருவிளையாடலில் வரும் தருமி பாத்திரம் ஏனோ இந்த நேரத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது. :-(//

எச்சலையை பிரச்சனையாக்கிப் பதிவு போட்டதைவிட ????

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்வு வெற்றிகரமாக நடத்திக்காட்டப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, இனிமேல் அடுத்து என்ன என்பது தான்.//

இங்கே சொல்லி இருப்பதும் அடுத்து என்ன என்பது பற்றித்தான்.

:)

ராஜ நடராஜன் சொன்னது…

இது வரையிலும் நான் பின்னூட்டங்களில்
கோவி!என்றே சொல்லி வந்தேன்.புதுசா ஒருத்தர் இப்ப முளைச்சிருப்பதால இனி மேல் நீங்கள் கண்ணன்!

பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும்,முன்னின்று நிகழ்த்திய அனுபவம் கொண்டு உங்கள் கருத்தை பதிவு செய்கிறீர்கள் என்பதால் உங்கள் கருத்தையும் உள் வாங்கிக்கொள்வதில் தவறில்லை.ஆனால் கட்டித் தழுவிக் கொள்வது குறித்து உங்கள் பார்வையே எனக்கும் பட்டது.ஆனால் ஆழ்ந்து யோசிக்கும் போது இது போன்ற கட்டித்தழுவல் நியாயமானதும் அவசியமானதும் கூட.நான் என்ற ஈகோவை இந்த கட்டித்தழுவல் குறைக்கும்.முகம் அறிமுகமல்லாது சொற்போர் செய்வதை விட நேரடி அறிமுகமாகும் போது நட்புக்கான சூழல் உருவாகிறது.டேக் இட் இஸி செய்த கட்டித்தழுவலை வரவேற்போம்.

நேரலையில் கூட கரமுர சத்தம் இருந்தது.ஆனாலும் காட்சிபடுத்தியது பெரிது.காணொளியின் படி பதிவர்களின் சந்திப்பு சிறப்பாகவே அமைந்தது.ஒவ்வொருவரின் கழுத்திலும் பேட்ஜ் மாட்டி விட்டு கழுத்தை நோக்குவதை விட நேரம் அதிகம் பிடித்தாலும் ஒவ்வொருவரையும் மேடையில் அறிமுகப்படுத்தியதே சிறப்பு என்பேன்.பேசக் கூச்சமென்றாலும் கூட பேசும் வாய்ப்பு கிடைப்பது நல்லதுதான்.பள்ளிக்காலம்,கல்லூரிக்காலம்,குடும்பஸ்தனாகியும் கூச்சம் போகவில்லையென்றால் அப்புறம் எப்பத்தான் கூச்சம் போவது:)

ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார் என்பதே தவறு என கருதுகிறேன்.பதிவுலக சண்டைகளையும்,அனானி பின்னூட்டங்களில் சில அவதூறுகளாய் இருக்கும் போதெல்லாம் எனக்கு என்ன தோன்றுமென்றால் எழுத்தை பதிவு செய்யும் போது யார் பதிவு செய்கிறார்கள் என்ற நேரடி காணொளி மாதிரியோ அல்லது கருத்தோடு கூடிய காணொளி விவாதம் (சி.என்.என்.புதிய தலைமுறைல பேசிக்கிற மாதிரி)பிளாக்கர் தொழில் நுட்பம் வளருமான்னு தோன்றும்.

தற்போதைய சூழலில் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்கள் நேரடி கலந்துரையாடல் லட்டு சாப்பிட விரும்பாதவர்களாகவே இருப்பார்கள்.விரும்பாத கட்சிகள் கூட சட்டசபை,பாராளுமன்றம் நடத்துவதால் பதிவர் நேர் கலந்துரையாடலே ஜனநாயகத்தின் புதிய முகமாக அமையும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார் என்பதே தவறு என கருதுகிறேன்//

நான் குறிப்பிட்டு இருப்பது பெண்களையும் சேர்த்ததே, பலர் புனைப் பெயர்களுடன் எழுதுகிறர்கள், நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களாக வந்து போவதுடன் தனது அடையாளம் வெளிப்படுத்திக் கொள்வதற்கு அல்ல என்று நினைக்கும் பொழுது அவர்களை அறிமுகம் செய்துக் கொள்ளச் சொல்வது அவர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும்.

//பேசக் கூச்சமென்றாலும் கூட பேசும் வாய்ப்பு கிடைப்பது நல்லதுதான்.//

கூச்சம் வேறு விருப்பமின்மை வேறு, விருப்பமற்றவர்களை கூச்சப்படுபவர்கள் என்று சொல்ல முடியாது.

//ஆழ்ந்து யோசிக்கும் போது இது போன்ற கட்டித்தழுவல் நியாயமானதும் அவசியமானதும் கூட/

ஆனால் இதெல்லாம் தனிமனித தாக்குதல் இன்றி கருத்துவிமர்சனம் என்றால் பரவாயில்லை, டோண்டு இராகவனுக்கும் எனக்கும் 100 விழுக்காடு கருத்து ஒற்றுமைகள் கிடையாது, ஆனாலும் அவரை சந்திக்கும் வேளைகளில் அவர் கட்டியணைப்பதை நான் வரவேற்றிருக்கிறேன். அவரோட அரசியல் நிலைப்பாட்டில் அவர் எழுதுகிறார் என்று நினைப்பது தவிர்த்து நான் அவரை எதிரியாகக் காணவில்லை. அடிப்படை புரிந்துணர்வு இன்றி காயப்படும்படி தாக்கிவிட்டு பின்னர் கட்டிப்பிடிப்பது ஒன்று எழுதும் பொழுது நிதானம் இன்றி இருக்க வேண்டும், இல்லை என்றால் கட்டிப்பிடிக்கும் பொழுது நிதானம் இன்றி இருக்க வேண்டும்.
:)

ராஜ நடராஜன் சொன்னது…

வவ்ஜி!எனக்காவது வீட்டுக்கு தூரம்ன்னு ஒரு காரணம் சொல்லலாம்:)உங்களுக்கெல்லாம் வெத்தலை பாக்கு அழைச்சாலும் வரமாட்டீங்களே?அதென்ன உணர்ச்சி வசப்படுபவர்கள் கையில் பொறுப்பு ஒப்படைக்க கூடாது?எனக்கும் தான் சிலரின் பின்னூட்டங்கள்,பதிவுகள் பார்க்கும் போது ஜிவ்வுங்குது.உங்க கானா பாடலை கேட்கும் இகி..கிகிங்குது.இன்னும் சில யாரு இந்த தல ன்னு யோசிக்க வைக்குது.இந்த மாதிரி யார் எதுல சேர்த்தி?எப்படி உணர்ச்சி வசப்படுபவர்கள் என அடையாளப் படுத்துவீர்கள்?காணாமல் சண்டைப் போட்டு விட்டு நேரடியாக நட்பு பாராட்டவில்லையா?மனித மனம் ஒரே நிலையில் இருப்பதில்லை.அவ்வளவுதான்.

ராஜ நடராஜன் சொன்னது…

கண்ணன்!டோண்டு ராகவனை நீங்கள் குறிப்பிட்டதால் அவரை பற்றி இங்கே கருத்து சார்ந்து விமர்சிக்க வேண்டியிருக்குது.டோண்டு ராகவனின் நீண்ட பதிவுகளில் அவரது நிலைப்பாடு என்ன என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் பார்வதி அம்மாள் தமிழக வருகைக்கு ஒரு பதிவு போட்டாரே!அவரின் அசட்டுத்தனத்தின்,முட்டாள்தனத்தின் உச்சம் அது என்ற கோபம் தணிய நிறைய நாட்கள் எடுத்தது.ஆனாலும் பதிவுகள் கண்ணில் பட்ட போது கருத்து சார்ந்து அவரது பதிவுகளில் பின்னூட்டமிடவே செய்கிறேன்.

ஒருவர் சண்டை போட்டுக்கொண்டால் பேசிக்கொள்ளக்கூடாது என்பது தமிழகத்தில் எங்கும் பரவிக்கிடக்கும் ஈகோ.சகோ.சுவனப்பிரியனுக்கு இப்பத்தானே இந்தியா,பாகிஸ்தான் பிரிவினை பற்றி பின்னூட்டம் போட்டுட்டு வந்தீங்க?சர்தாரிக்கும்,நம்ம சர்தாருக்கும்தான் ஆகாது.ஆனால் சந்தர்ப்பம் கிடைச்சதும் நாடு சேரா அணிகள் சந்திப்பில் பேச போவதில்லையா?இவங்க இரண்டு பேரையுமாவது சாதுகள் பேசிக்கொள்கின்றன என்று சொல்லி விடலாம்.கார்கில் சண்டையின் கதாநாயகன் முஷ்ரப் கூட வாஜ்பாய் கை குலுக்கிக் கொள்ள வில்லையா?

நீங்க சொல்கிற மாதிரியான பார்வை நிரந்தர ஈகோவை உருவாக்கி விடும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்ஜி!எனக்காவது வீட்டுக்கு தூரம்ன்னு ஒரு காரணம் சொல்லலாம்:)உங்களுக்கெல்லாம் வெத்தலை பாக்கு அழைச்சாலும் வரமாட்டீங்களே?//

:)

இவரையும் கல்வெட்டையும் பார்க்கவே முடியவில்லை. அசரிரி மாதிரி ஒலித்துக் கொண்டே இருப்பார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//.டோண்டு ராகவனின் நீண்ட பதிவுகளில் அவரது நிலைப்பாடு என்ன என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் பார்வதி அம்மாள் தமிழக வருகைக்கு ஒரு பதிவு போட்டாரே!அவரின் அசட்டுத்தனத்தின்,முட்டாள்தனத்தின் உச்சம் //

தமிழ்நாட்டில் காங்கிரஸ்காரனும், திமுகவும் பார்வதி அம்மாள் குறித்து நடந்து கொண்டவைகளை ஒப்பிட இவரின் பங்கு குறைவு தான், அதில் எல்லோருமே கண்டனம் தெரிவித்தார்கள், அதையும் அவர் வெளி இட்டார்.

பார்பனரை பார்பனர் என்று எழுதுபவர்களில் டோண்டு இராகவனும் ஒருவர். அவரது அரசியல் நிலைப்பாடுகளை சோ, தினமலர் வகை(யறாவாக)யாக பார்க்கிறேன். அதற்காக அவர் ரொம்ப மோசமானவர் என்றெல்லாம் கருத முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//இவங்க இரண்டு பேரையுமாவது சாதுகள் பேசிக்கொள்கின்றன என்று சொல்லி விடலாம்.கார்கில் சண்டையின் கதாநாயகன் முஷ்ரப் கூட வாஜ்பாய் கை குலுக்கிக் கொள்ள வில்லையா?//

தனிமனித நிலைப்பாடுகளும், நாடு சார்ந்து எடுக்கும் முடிவுகளும் ஒன்றாகிவிடாது. கருணாநிதியையும், ஜெவையும் ஒரே விமானத்தில் பயணம் செய்யச் சொல்லுங்க பார்ப்போம். :)

ராஜ், நான் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன், மாற்றுக் கருத்து உள்ளவர்களை கட்டித் தழுவது வேறு, ஒருவரை கேவலாமகப் பேசிவிட்டு அவரை கட்டி அணைப்பேன் என்பது வேறு. இரண்டிற்கும் அடிப்படைவேறுபாடுகள் இருக்கின்றன, குறைந்த பட்சம் கட்டிப் புடிக்கிறவர்கள் தங்களின் ஈகோக்களை மறந்து ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டிருந்தால் நீங்கள் சொல்வதில் ஞாயம் இருக்கலாம், பழையபடிக்கு நிகழ்வுகள் தொடரும் என்னும் பொழுது ?

Doha Talkies சொன்னது…


//வலைப்பதிவில் நீண்டகாலமாக எழுதிவரும் திரு டோண்டு இராகவன் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளாதது சற்று ஏமாற்றம் தான்//

நானும் அவர் வருவார் என்று நினைத்திருந்தேன்.
நீங்கள் சரியாக குறிப்பிடுள்ளீர்கள்.
நன்றி.
http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கோவி கண்ணன்!
இங்கு தங்களால் சுட்டிக்காட்டப்பட்ட கருத்துக்களை எதிர்கால சந்திப்புக்களில் கவனித்து தவிர்க்கப்படலாம்.
ஆனாலும் "குடிகாரர் ஒன்றுகூடல்" எனும் துணைப்பெயருடன் ஆரம்பித்த இந்த விழா இவ்வளவு சிறப்புற அமைந்ததில் மகிழ்வே!
உழைத்தவர்கள் பாராட்டுக்குரியோர்.
தொய்வின்றி எழுதும் துளசி அக்கா செல்லாதது, எனக்கும் வருத்தமே!

வவ்வால் சொன்னது…

ராச நடராசர்,

உங்களுக்கு தலையில ஆணி அடிச்சு இறக்கணும் :-))

//எப்படி உணர்ச்சி வசப்படுபவர்கள் என அடையாளப் படுத்துவீர்கள்?//

இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் ஊழல் குற்றச்சாட்டில் பெரும் தண்டனை வாங்கவில்லை, எனவே யாரையும் ஊழல் வாதிகள் என அடையாளப்படுத்தக்கூடாது சரிதானே.

தனிப்பட்ட முறையில் பேசுவது வேறு பொதுவான பொறுப்பில் வந்து இருக்கும் போது பேசுவது வேறு என பலரும் சொல்வார்கள், நான் இந்த பொறுப்பில் இல்லைனா நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன், இங்கே இருந்து அப்படி பேசமுடியாது என சொல்வதைக்கேட்டுள்ளேன் அதான் எளிதில் உணர்ச்சி வசப்படாமைக்கு அடையாளம்.

நீங்க என்ன மனிதர்கள் இல்லாத தீவிலா இருக்கிங்க?

---------

கோவி,

//இவரையும் கல்வெட்டையும் பார்க்கவே முடியவில்லை. அசரிரி மாதிரி ஒலித்துக் கொண்டே இருப்பார்கள்//

ஹி..ஹி அசரீரி போல ஒலிக்கலாம் அசட்டுத்தனமாக ஒலிக்காம இருந்தாப்போதும் தானே.

வேண்டுதல்,வேண்டாமை வேண்டும் என வள்லுவர் சொல்லிக்கீறார் அப்படி இருக்கணும்ன அசரீரியாக இருந்தால் மட்டுமே முடியும் :-))


உங்களுக்கு ஒரு ஸ்கூப் கல்வெட்டு போட்டோ எல்லாம் போட்டு பதிவர் சந்திப்பு பதிவு இருந்தது அப்போ ,இப்போ இருக்கான்னு தெரியலை.ஸ்மார்ட்டா பழைய நடிகர் வெங்கடேஷ் போல இருப்பார்.(கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்ற இயக்குனரின் மகன்)

Admin சொன்னது…

தனக்கு பரிசும் பாராட்டும் இருக்கிறது என்பதை அறியாமல் விழாவிற்கு வருகிறேன் என்று ஆர்வம் கொண்டு அதை உறுதிப்படுத்திய பெரியவர்களை மட்டுமே மேடையில் கௌரவித்தோம். உங்களுக்கு பரிசு தருகிறோம் வாருங்கள் என்று யாரையும் விழாக் குழுவினர் வற்புறுத்தி அழைக்கவில்லை. என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நன்றி..

வவ்வால் சொன்னது…

ராச நடராசருக்கு,

பொலிட்டிக்கல் டிப்ளமசி அப்படினா என்னனு ஒரு கிளாஸ் எடுங்க கோவியாரே :-))

சீமான் பிரதமரா??!! ஆகி அப்போ ராச பக்சே உடன் சார்க் மாநாட்டில் கலந்துக்க வேண்டி இருந்தாலும் கலந்துக்கிட்டு தான் ஆவார் :-))

எனவே அது வேறு ,இது வேறு. ஆனால் தனிநபர்கள் அதுவும் இணையத்தில் வாதிடுவது கருத்து வாதமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும், தனி நபர் தாக்குதல் என எடுத்துக்கொள்வது குறுகிய மனப்பான்மை,இன்னமும் அவர்கள் இணைய சூழலுக்கு ஏற்ற முதிர்ச்சி அடையவில்லை என்பேன்.

ஏன் எனில் வலைப்பதிவுகள் என்பது கட்டற்ற ஊடகம் என்பது எனது கருத்து,விமர்சனங்கள் ஊடகத்தின் பங்காகவே கருத வேண்டும்.

கலைஞர் ஒரு இயக்கத்தின் தலைவர், சோ விமர்சிக்கிறார் ,அதே சமயம் சோ ஒரு பேட்டிக்கு கலைஞரிடம் நேரம் கேட்கலாம், ஏன் விமர்சித்துவிட்டு பேட்டிக்கு வர்ர என கலைஞர் சொல்லக்கூடாது. அதே சமயம் முடியாது எனவும் கலைஞர் சொல்ல உரிமை இருக்கு, ஆனால் பேட்டிக்கு எப்படி என்னை அணுகலாம் என சொல்ல உரிமை இல்லை.

இப்போவாது புரியுதா ராச நடை :-))

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

வாழ்த்துக்கள்...

நீங்களும் வந்திருக்கலாமே சார்...

கோவி.கண்ணன் சொன்னது…

//தனக்கு பரிசும் பாராட்டும் இருக்கிறது என்பதை அறியாமல் விழாவிற்கு வருகிறேன் என்று ஆர்வம் கொண்டு அதை உறுதிப்படுத்திய பெரியவர்களை மட்டுமே மேடையில் கௌரவித்தோம்.//

இது உங்கள் தனிப்பட்ட கருத்து என்றும் விழா குழுவினரைச் சார்ந்தது இல்லை என்றும் எடுத்துக் கொள்கிறேன், நீங்கள் சொல்வதுபடி பார்த்து... கலந்து கொள்ளாத மூத்தப்பதிவ்ர்கள் அதற்கெல்லாம் ஆசைப்படுபவர்கள் இல்லை என்பதைக் கூறிக் கொள்கிறேன்.

ஜோதிஜி சொன்னது…

அடேங்கப்பா நான் உருவாக்கிய வவ்வுஜி என்ற பெயரை உச்சரித்த நடாஜிக்கு என் வாழ்த்தகள்.

கண்ணன் உங்கள் பொதுப்படையான பார்வையில் ஏதும் குறை இருப்பதாக தெரியல. எனக்கும் வல்லியம்மாவை படங்களில் பார்த்து போது ஆச்சரியம் + சந்தோஷம். வேலை நியூசிலாந்தில் இருந்தா?

டீச்சருக்கு தனிப்பட்ட பாராட்டா? சூரியனுக்கே டார்ச்சா?

விடுங்க நம்ம வெயிலானிடம் சொல்லி திருப்பூரில் கொண்டாடிவிடுவோம்.

ராஜ நடராஜன் சொன்னது…

வவ்ஜி&ஜோதிஜி! பெயர் பொருத்தம் நல்லாயிருக்குதே:)

வவ்ஜி!நீங்க சொல்வதாவது பொலிட்டிகல் டிப்ளமசிக்காக, போட்டோவுக்காக கை குலுக்கிக் கொள்கிறார்கள் எனலாம்.பதிவர்கள் கை குலுக்கி கொள்வதற்கு பதிவுகளின் கருத்து விவாதம் தவிர பெரிய ஈகோ இல்லாது தழுவிக் கொள்வது வரவேற்க தக்கது.

ஊர் ரெண்டானா வவ்வாலுக்கு கொண்டாட்டம்ன்னு புதுமொழி சொல்ல வைப்பீங்க போல இருக்குதே:)

kaialavuman சொன்னது…

காணொலியிலிருந்து பதிவர் சந்திப்பு நன்றாக நடந்துள்ளதாகவேத் தெரிகிறது. இவ்வள்ளவு பெரிய நிகழ்ச்சியில் தவறுகளும் சிறுசிறு குறைபாடுகளும் சாதாரணம் தான். முதல் முயற்சி, குறைந்த பட்சம் இவ்வளவு பெரிய அளவில் நடப்பதில், என்பதால் அதை பெரிது படுத்த வேண்டியதில்லை. சிறு தவறுகள் தான் அடுத்த முறை நிகழ்சி நடக்கும் பொழுது அதன் வெற்றிக்காக அதிகம் மெனக்கெட வைக்கும்.

மற்றபடி நிகழ்சி ஒரு வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை என்றே கூறவேண்டும்.

வவ்வால் சொன்னது…

ஜோதிஜி,

நீங்க சூட்டிய நாமகரணத்துக்கு ராச நடை மூலம் புகழ் சேர்ந்தா சந்தோஷம் தான் :-))

//எனவே அது வேறு ,இது வேறு. ஆனால் தனிநபர்கள் அதுவும் இணையத்தில் வாதிடுவது கருத்து வாதமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும், தனி நபர் தாக்குதல் என எடுத்துக்கொள்வது குறுகிய மனப்பான்மை,இன்னமும் அவர்கள் இணைய சூழலுக்கு ஏற்ற முதிர்ச்சி அடையவில்லை என்பேன்.//

இதை தானே சொல்லி இருக்கேன் ,நீங்க அதையே மாற்றி சொல்லிட்டு புதுசா சொல்லுங்க :-))


//ஊர் ரெண்டானா வவ்வாலுக்கு கொண்டாட்டம்ன்னு புதுமொழி சொல்ல வைப்பீங்க போல இருக்குதே:)//

இதை உங்களுக்கு தான் சொல்லணும் ஏன் எனில் அன்னிக்கு விவாதம் செய்தது நான்,நக்ஸ், மூனா,அஞ்சா ஸிங்கம்,வீடுஜி போன்றோர் ,நீங்க ஒய்யாரமா ஓசுல சினிமா பார்க்கிறேன்னு வேடிக்கைப்பார்த்தீங்க :-))

எனவே நாங்க தான் சரி போனாப்போகுதுன்னு அமைதியா கைக்குலுக்கிட்டோம், அது பொறுக்கலையே உங்களுக்கு :-))

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

|| வேண்டுதல்,வேண்டாமை வேண்டும் என வள்லுவர் சொல்லிக்கீறார் அப்படி இருக்கணும்ன அசரீரியாக இருந்தால் மட்டுமே முடியும் :-)) ||

வவ்ஸ்,
இது ரொம்பவும் உண்மை...

:))

குட்டிபிசாசு சொன்னது…

// கருத்து தெரிவித்தல் என்ற அடிப்படையை மறந்து தனிமனித தாக்குதல் செய்தவர்களை நேர்முகம் கண்டு கட்டித் தழுவுவது பெரும்தன்மை, சமூக நல்லிணக்கம் என்றெல்லாம் நான் நினைப்பது இல்லை.//

உண்மை தான்

வவ்வால் சொன்னது…

அறிவன்,

//வவ்ஸ்,
இது ரொம்பவும் உண்மை...

:))//

நன்றி! நாம் உண்மைன்னு நினைக்கிறத நீங்களும் நினைக்கிறிங்களே, ஒத்த அலைவரிசை தான் அப்போ :-))

ஆனால் இதில் இருக்கும் உண்மை பலருக்கும் புரிவதில்லை,இன்னமும் பிற்போக்கில் ஊறிக்கிடக்கிறாங்க.

ஹி...ஹி..நல்ல வேளை "லு" தப்பா வள்ளுவர்ல போட்டு இருக்கேன் அதுக்கு கொட்டு வைக்கவில்லை :-))

தணல் சொன்னது…

////தனக்கு பரிசும் பாராட்டும் இருக்கிறது என்பதை அறியாமல் விழாவிற்கு வருகிறேன் என்று ஆர்வம் கொண்டு அதை உறுதிப்படுத்திய பெரியவர்களை மட்டுமே மேடையில் கௌரவித்தோம்.//

இது உங்கள் தனிப்பட்ட கருத்து என்றும் விழா குழுவினரைச் சார்ந்தது இல்லை என்றும் எடுத்துக் கொள்கிறேன், நீங்கள் சொல்வதுபடி பார்த்து... கலந்து கொள்ளாத மூத்தப்பதிவ்ர்கள் அதற்கெல்லாம் ஆசைப்படுபவர்கள் இல்லை என்பதைக் கூறிக் கொள்கிறேன்.//

அவர் கூறியதை அப்படியே தவறாகப் புரிந்து கொண்டீர்களே! 'அறியாமல்' என்பதை கவனிக்க! வந்தோரை வாழ்த்தியிருக்கிறோம் என்று மட்டுமே அவர் சொல்லியிருக்கிறார்.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,
நல்ல பதிவு.அருமையான விளக்கம்!!
மூத்வர்கள்க்கு மரியாதை செய்வதே நன்று!!!
*****************8

எனக்கு ஒரு சந்தேகம்!!

தீர்த்து வையுங்கள்!!!!!!!!!!!!

" கட்டிப் பிடிப்பது மூடநம்பிக்கையா இல்லையா???"

புத்தகத்தில் சான்று இருக்கிறதா???இல்லை எனின்..........



நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//" கட்டிப் பிடிப்பது மூடநம்பிக்கையா இல்லையா???"//

முன்னாபாயிடம் தான் கேட்கனும், இல்லைன்னா மும்தாஜிடம் கேட்கனும், அவங்க இரண்டு பேரும் தான் கட்டிபிடியில் பிஎச்டி செய்தவர்கள்.
:)

//புத்தகத்தில் சான்று இருக்கிறதா???இல்லை எனின்..........


நன்றி//

புத்தகத்தில் சான்று இல்லாவிட்டாலும் பிராக்கெட் போட்டு சான்றாக்கிக் கொள்ளலாம், அதற்கு வேதப் புத்தகம் அனுமதி அளிப்பதாக நாமாக முடிவு செய்து கொள்ளனும், கூடவே வேத புத்தகம் மாற்றமில்லாதது என்று முரணாகவும் பேசனும்.

தணல் சொன்னது…

நான் ஒரு பின்னூட்டம் போட்டதாக நினைவு! என்னாயிற்று என்று தெரிந்து கொள்ளலாமா?

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

|| ஹி...ஹி..நல்ல வேளை "லு" தப்பா வள்ளுவர்ல போட்டு இருக்கேன் அதுக்கு கொட்டு வைக்கவில்லை :-)) ||

வவ்ஸ், நான் சந்தி,ஒற்று,லகரப் பிழைகளை எல்லாம் பெரும்பாலும் சுட்டிக் கொண்டேதான் இருப்பது வழக்கம்..

என்ன பிரச்னை என்றால், நம்மைக் குற்றம் கண்டு பிடித்தே பெயர் இழக்கும் புலவராக மாற்றி விட்டார்கள்..

தமிழில் எழுதுவது என்பதில் கருத்து செலுத்துபவர்கள், அதைத் தவறில்லாமல் எழுத வேண்டும் என்று முனைவதும் கட்டாயம் என்று நினைப்பவன் நான்..ஆனாலும் சுட்டுவது பலருக்கும் பிடிப்பதில்லை..சமீப காலங்களில் !

கண்ணன் கூட மூத்த பதிவரை அழுத்தம் திருத்தமாக மூத்த'ப்' பதிவராக ஆக்கி விட்டார்; தட்டச்சுப் பிழையில் மூ, மு'வாகி விட்டால் இந்தப் பிரயோகத்தில் வேறு அபாயங்களும் இருக்கின்றன..இருந்தாலும் நான் சுட்டிக் காட்டவில்லை என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்..அப்புறம் கண்ணன் கோபித்துக் கொண்டால் என்ன செய்வது ?!

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் ஒரு பின்னூட்டம் போட்டதாக நினைவு! என்னாயிற்று என்று தெரிந்து கொள்ளலாமா?//

மொபைலில் இருந்து பின்னூட்டம் வெளி இடும் பொழுது சில சமயம் விடுபட்டுவிடும், பொருத்தருள்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவர் கூறியதை அப்படியே தவறாகப் புரிந்து கொண்டீர்களே! 'அறியாமல்' என்பதை கவனிக்க! வந்தோரை வாழ்த்தியிருக்கிறோம் என்று மட்டுமே அவர் சொல்லியிருக்கிறார்.//

அவரு எப்படிச் சொல்லி இருந்தாலும், சர்ப்ரைசாக நடந்தது என்பது போல் தான் எழுதி இருந்தார். ஆனால் அதில் எதுவும் சர்ப்ரைஸ் இல்லை, வெளி இட்ட அழைப்பிதழ்களில் பெயர்கள் இருந்தன. கலந்து கொள்ளாத மற்ற மூத்தப் பதிவர்கள் வெளிப்படையாக எதுவும் சொல்ல விரும்ப மாட்டார்கள். மூத்தப்பதிவர்கள் குறித்த தகவல்களை பதிவர் முன்னோடிகளையும் தொடர்பு கொண்டு கேட்டு இருக்கலாம்.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், பரிசும் பாராட்டுக்கும் யாரும் எழுதுவதில்லை, ஆனால் இவைகள் கிடைக்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சி அவர்களுக்கு அளவில்லாதது, டிவிஆர் போன்றோர்கள் வாங்காத பரிசுகள் கிடையாது, அவரை பரிசுக்கு ஏங்குபவராக நான் பார்க்கவில்லை, ஆனால் அவர் போன்றவர்களுக்கு முன்கூட்டியே தொடர்ப்பு கொண்டு கேட்டு இருந்தால் கலந்து கொள்வது பற்றி அவர்கள் தங்கள் விருப்பங்களை தெரிவித்திருப்பார்கள்.

விழாக்களுக்கு காலம் வாய்ப்பது அரிது என்பதுடன் நான் ஒப்பிட்டுபார்க்க, அந்த விழாக்களில் யாரையுமே அவர்கள் நடமாடும் நிலையில் / சுறுசுறுப்புடன் இருக்கும் பொழுது வாழ்த்துவது தான் சிறப்பு.

இதை எழுதும் பொழுது நான் கூட சிலர் பெயர்களை மறந்துவிட்டேன், குறிப்பாக இராமகி ஐயா பெயரை மறந்துவிட்டேன்.

வலைப்பதிவு, பின்னூட்டம் போன்ற எண்ணற்ற வலைப்பதிவு சார்ந்த கலைச் சொற்களை ஆக்கித் தந்தவர் அவர் தான், முன்னோடி மற்றும் மூத்த வலைப்பதிவர் என்று நான் கருதுபவர்களில் அவரும் ஒருவர்.

மூத்தப்பதிவர்கள் யார் யார் என்று திரட்டிகளிடம் கேட்டிருந்தால் கூட அவர்கள் பட்டியலைத் தருவார்கள், அதை வைத்தும் மூத்தப்பதிவர் பட்டியலை செம்மை செய்திருக்க முடியும்.

ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன், கவுரவிக்கப்பட்ட மூத்தப் பதிவர்கள் அனைவருமே போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

தணல் சொன்னது…

//அவரு எப்படிச் சொல்லி இருந்தாலும், சர்ப்ரைசாக நடந்தது என்பது போல் தான் எழுதி இருந்தார். ஆனால் அதில் எதுவும் சர்ப்ரைஸ் இல்லை, வெளி இட்ட அழைப்பிதழ்களில் பெயர்கள் இருந்தன.//

கலந்து கொள்ள விரும்புபவர்கள் பெயர் பதிவு செய்ய ஆரம்பித்தது முதலில் நடந்தது. அதில் பெரியவர்களும் பதிந்து இருந்திருப்பார்கள், மேலும் விழாக் குழுவிலும் பெரியவர்கள் இருந்தார்கள். எனவே அவர்களைச் சிறப்பிக்கலாம் என்று பிறகு முடிவு செய்து அழைப்பிதழில் போட்டிருப்பார்கள். மதுமதி சொல்ல வந்தது, யாரையும் குறிப்பிட்டு செலக்ட் செய்யவில்லை என்று தான். நீங்கள் சொன்ன சஜஷன் நல்லது தான், ஆனால் இது முன்னேயே முடிவு செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட ஒன்றாக இருந்திருக்காது. இனி அப்படிச் செய்வதாக இருந்தால் யார் யார் என்று விசாரித்து எல்லாரையும் சேர்க்கலாம்.

priyamudanprabu சொன்னது…

:)

வவ்வால் சொன்னது…

அறிவன்,

//என்ன பிரச்னை என்றால், நம்மைக் குற்றம் கண்டு பிடித்தே பெயர் இழக்கும் புலவராக மாற்றி விட்டார்கள்..

தமிழில் எழுதுவது என்பதில் கருத்து செலுத்துபவர்கள், அதைத் தவறில்லாமல் எழுத வேண்டும் என்று முனைவதும் கட்டாயம் என்று நினைப்பவன் நான்..ஆனாலும் சுட்டுவது பலருக்கும் பிடிப்பதில்லை..சமீப காலங்களில் !//

ஆஹா உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைச்சிருக்கா, அதே தான் பிழையை சுட்டிக்காட்டினால் ... ஏதோ குற்றவாளி போல நம்மைப்பார்க்கிறார்கள், குறை சொல்வதே வேலையா வச்சிருக்கான்னு சொல்லிடுறாங்க, நாம பிழையை சரி செய்ய ஆசைப்பட்டு சொல்கிறோம் என்பதை எண்ணிப்பார்ப்பதில்லை.


எழுத்துப்பிழையை சொல்லியதற்கே அப்படின்னா நான் கருத்துப்பிழையை சுட்டிக்காட்டி "நல்ல பெயர்" வாங்கியவனாக்கும் :-))

ஹி...ஹி இப்போ குழு உருவாகி என்னோட பின்னூட்டங்களை வெளியிட கூடாதுன்னு தீர்மானம் போட்டு இருக்காம் , கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தார் அவரே சிரிப்பார் :-))

மக்கள் விரும்புவது என்னவெனில் பாராட்டு மட்டுமே, இப்படி பாராட்டு வாங்கி உலகின் சிறந்த மனிதன் ஆக முடியும் எனில் பாராட்டிக்கொண்டே இருக்கலாம் :-))

ஜோதிஜி சொன்னது…

ஹி...ஹி இப்போ குழு உருவாகி என்னோட பின்னூட்டங்களை வெளியிட கூடாதுன்னு தீர்மானம் போட்டு இருக்காம் , கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தார் அவரே சிரிப்பார் :-))
அப்ப நீங்க பிரபல பதிவரா? பிரபல பின்னூட்டக்காரரா?

வவ்வால் சொன்னது…

ஜோதிஜி,

//அப்ப நீங்க பிரபல பதிவரா? பிரபல பின்னூட்டக்காரரா?//

ஆனாலும் ரொம்பெ நக்கல் தான், பிராபல்யம் என்ற சொல்லைக்கேட்டாலே எனக்கு குளிர்க்காய்ச்சல் வந்திடும் :-))

ஆரம்பத்தில நான் வலைப்பதிவுகளை படிக்கும் வாசகனா ,அனானியா கமெண்ட் போட்டு தான் பதிவுக்குள்ள வந்தேன்,சிலப்பேரு அனானிக்கமெண்ட் போட மாட்டேன்னு குரல் வளைய \நெரிக்கவே ஒருப்பதிவு ஆரம்பிச்சேன், அப்புறம் என்னடா உனக்கு ரேஷன் கார்ட் ,பாஸ்போர்ட் இருக்கா ,எங்கே ஓட்டர் ஐடின்னு கேட்கிறாங்க :-))

இப்போ சொல்லுங்க நான் பதிவரா இல்லை பின்னூட்டம் போடுறவனா இல்லை ஏதேனும் வேற்றுக்கிரக வாசியா?

ஜோதிஜி சொன்னது…

ஆமா இந்த பதிவுக்கு ரெண்டு மைனஸ் ஓட்டு விழுந்துருக்கு? யாருக்கப்பா எரிச்சர்,

வவ்வுஜி

பொதுவா ஒரு பதிவை ஆணித்தரமா அக்குவேறு கிழித்து மேய்ந்து உண்மையான விசயத்தை விமர்சனமாக எழுதினால் உங்களை என்னை விரும்ப மாட்டார்கள். எவரும் விமர்சனத்தை விரும்புவதே இல்லை. பாராட்டுக்களை தான் விரும்புகிறார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது எழுத்தின் தரத்தை மாற்றவோ, அல்லது கற்றுக் கொண்டதை செயல்படுத்துவதோ செய்வதில்லை. காரணம் அறியாமை என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லது நிமிட நேர அங்கீகாரத்திற்கு ஏங்குபவர்களாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

நான் எழுத கற்றுக் கொள்ள எழுதிக் கொண்டே இருப்பேன் என்று நம் போக்கில் போய்க் கொண்டே இருக்க வேண்டும். நான் அப்படித்தான்.

வவ்வால் சொன்னது…

ஜோதிஜி,

//பொதுவா ஒரு பதிவை ஆணித்தரமா அக்குவேறு கிழித்து மேய்ந்து உண்மையான விசயத்தை விமர்சனமாக எழுதினால் உங்களை என்னை விரும்ப மாட்டார்கள். எவரும் விமர்சனத்தை விரும்புவதே இல்லை. பாராட்டுக்களை தான் விரும்புகிறார்கள்//

அதே ...அதே .

நீங்க சொன்ன எழுத எழுத...காலம் ஆக ஆக மெருகேறணும், என்பதும் உண்மையே, நிறையப்பேரு இன்னும் ஒரே ஸ்டீரியோ டைப்பா பல வருடமாக இருக்காங்க.

நான் எழுதுவதை விட வாசிப்பதை விரும்புபவன் ...பாகுபாடு இல்லாமல் எல்லாப்பதிவும் படிப்பேன், புத்தகங்களும் அப்படித்தான் , சிலர் மனசுக்கு புடித்த எழுத்தாளர் மட்டும்னு செலெக்டிவா படிப்பாங்க நான் அப்படியில்லை, எல்லாவற்றையும் மேய்வேன் , அப்போ தானே "அடுத்த பக்கமும் " தெரியும் , சொர்க்கத்தில் இருந்தாலும் நரகம் எப்படி இருக்குன்னு எட்டிப்பார்த்திடணும் :-))

வேகநரி சொன்னது…

கருத்து தெரிவித்தல் என்ற அடிப்படையை மறந்து தனிமனித தாக்குதல் செய்தவர்களை நேர்முகம் கண்டு கட்டித் தழுவுவது பெரும்தன்மை சமூக நல்லிணக்கம் என்றெல்லாம் நான் நினைப்பது இல்லை என்ற உங்கள் நேர்மையான கருத்த ஏற்று கொள்கிறேன்.
பதிவு கழிவறை ஆகாமல் இருக்க மட்டுறுத்தல் என்ற பூட்டு அதுவும் இஸ்லாமிய மத வெறியர்களுக்காக ஒருவர் தனிமனித தாக்குதல் ஆபாச பின்னோட்டங்கள் செய்யும்போது அவசியம் தேவைப்படுகிறது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்