மணவிலக்கு என்பது மனித உரிமை. மனித பண்பு நலன் போற்றப்படுகின்ற சமூகத்தில் அவற்றைக் காப்பதற்கு மணவிலக்குகள் இன்றியமையாதவை. மனித திருமண பந்தம் என்பது விரும்பிய வாழ்க்கை என்பதைவிட வெறுக்கத் தக்க வாழ்கை இல்லை என்ற அளவில் அந்த பந்தம் அறுபடாமல் தொடர்கிறது, மண வாழ்க்கை வெறுப்பாகவும், சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தொடரும் போது வாரிசுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மணவாழ்க்கை கசப்பாக இருந்தாலும் அவை தொடருகின்றன. வாரிசுகளுக்காக சகித்துக் கொள்ளுதல் என்பதில் கூட ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தான், ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையும் இன்றியமையாதது என்பதில் வாரிசுகளின் நலன் இரண்டாம் இடத்திற்கு செல்லும் போது மணவிலக்குகள் நடைபெறுகின்றன. தனிமனித நலன் என்று பார்க்கும் போது இது தவறு இல்லை. பிரச்சனை முற்றும் போது பொறுக்கமுடியாமல் என்றோ ஒரு நாள் கொலை / தற்கொலை என்னும் போது பாதிக்கப்படாத வாரிசுகள் மணவிலக்கினால் பாதிக்கப்பட்டுவிடுவார்களா ? என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டால் மணவிலக்கு பற்றிய முடிவின் போது வாரிசுகள் பற்றிய கேள்விகள் பின்னுக்கு தள்ளப்படும்.
நண்பர் சுவனப்பிரியன் 'விவாகரத்தில் முதல் 10 இடத்தை பெற்ற நாடுகள்' என்று ஒரு பதிவை இட்டு அதில் இஸ்லாமிய நாடுகளின் பெயர்கள் இல்லை என்று புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். முதலில் மணவிலக்கு செய்யப்படும் நாடுகளில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன என்பதை இவர் புரிந்து கொண்டு இருக்கிறாரா என்றே தெரியவில்லை, இரண்டாவதாக மணவிலக்கு குறைவாக உள்ள நாடுகளில் மணவிலக்கு செய்துவிட்டு தனித்து வாழும் ஒரு சூழல் இருக்கிறதா என்று இவர் ஆராய்ந்து பார்த்தாரா என்றும் தெரியவில்லை, இவர் குறிப்பிடும் சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் ஒரு பெண் தனித்து வாழவே முடியாத நிலையில் ஆணைச்சார்ந்து வாழும் வாழ்கை என்பதில் மணவிலக்குகள் நடைபெற சாத்தியமே இல்லை என்பதைத் தவிர்த்து வேறு என்ன காரணிகள் இருக்க முடியும் கணவன் நான்கு திருமணம் செய்து கொண்டாலும் தலையிட முடியாத நிலைதான் முதல் மனைவியின் நிலை. இதில் அவள் எங்கிருந்து மணவிலக்கை நினைத்துப் பார்ப்பாள் ? பொருளாதாரத்திற்கு ஆணைச் சார்ந்திருக்கும் அடிமைகளாக பெண்கள் இருக்கும் சமூகத்தில் மணவிலக்கு குறைவாக இருக்கும், ஆனால் கள்ளத் தொடர்புகள் உள்ளிட்ட மற்ற தற்சமூக சீர்கேடுகள் மிகுதியாக இருக்கும். வெளி உலகுக்கு கட்டுப்பட்டவர்களாக காட்டப்படுபவர்கள் கட்டி வைத்து தான் காட்டப்படுகிறார்கள் என்பது நாம் அறியாத ஒன்றா ?
கள்ளத் தொடர்புகள், நம்பிக்கை துரோகம், அடித்து துன்புறுத்தி (இஸ்லாம் கணவன் மனைவியை லேசாக அடிக்கலாம் என்று உரிமை வழங்கியுள்ளது, அந்த லேசாக என்பதைக் குறித்த அளவுகளையெல்லாம் பெண் பிள்ளைப் பெற்ற அப்பனைத் தான் கேட்கவேண்டும்) வைத்திருத்தல், கொலை, தற்கொலை இவற்றையெல்லாம் விட ஒத்துவரவில்லை என்றால் மணவிலக்கு பெற்று பிரிந்து போவதில் என்ன பெரிய தவறும், சமூகக் குற்றமும் இருக்க முடியும் ?
மணவிலக்கு என்பது சமூக சீர்கேடாகவும், மேற்கத்திய கலாச்சார நுழைவு என்று காட்டப்படுவதன் காரணம் என்ன ?
நடுத்தர வர்க்கம் என்னும் ஒரு போலி சமூகம் உருவாகாத காலத்தில் மணவிலக்குகள் மிகச் சாதாரணமானவையே, ஒரு ஆலமரத்தடியில் நாட்டமையின் தீர்ப்பாக 'வெட்டி விடுதல்' நடைபெறும். ஆண் மற்றும் பெண்ணுக்கு உழைப்பு இன்றியமையாததாக இருந்த காலத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழுதல் என்பது குடும்பம் என்னும் ஒரு அமைப்பில் இருவரும் வாழ்ந்து சந்ததிகள் பெருக்கிக் கொள்ளத்தான் என்பதன் புரிந்துணர்வு இருந்தது, ஒருவருக்கு ஒருவர் ஒத்துவரவில்லை என்றால் ஒரே நாளில் பிரிந்து போய்விடுவார்கள், அவர்களுக்கு மறுமணமோ, விரும்பியவருடன் வேறொரு வாழ்கையோ நடைபெற்று தான் வந்ததன. இன்றைக்கும் கிராமங்களில் இருந்து நீதிமன்ற வழக்காக மணவிலக்கு வழக்குகள் செல்வது கிடையாது. இன்றைக்கு நடுத்தரவர்கம் என்னும் போலி சமூக வர்க்கமும் உருவாகிய பிறகு மணவிலக்கு என்று பேசுவதே பாவம், கெடுதல், கலாச்சார சீர்கேடு என்பது போன்ற கருத்துகள் பரவலாகப்பட்டன. நடுத்தர வர்க்கத்து கனவுகள் தான் இன்றும் திரைபபட வடிவமாக முன்வைக்கபடுகின்றன, நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியில், தனி மனித உரிமை என முன்னேறி மேல் தட்டு நிலையை அடையும் போராட்டம் நடந்தே வருகிறது. தனக்கும் கீழாக இருக்கும் கீழதட்டு மக்களை பின்பற்றி மணவிலக்கு செய்து கொள்கிறார்கள் என்று சொல்வது கூட தம்மை தாழ்வானதாக்கிவிடும் என்று கருதும் நடுத்தரவர்க்கம், அதனை ஞாயபடுத்தி அதே சமயத்தில் பட்சாதாபம் ஏற்படுத்தும் முயற்சியாக மேற்கத்திய கலாச்சாரம் நுழைந்து தம் சமூகத்தைக் கெடுத்துவருவதாக புலம்பிவருகிறது. ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி அந்த சமூகத்திற்கு பிற சுதந்திரங்களையும் சலுகைகளையும் வழங்கிவிடும் அவற்றில் ஒன்று தான் ஒத்துவராத திருமண பந்தங்களை விலக்கிக் கொள்ளும் உரிமை.
மணவிலக்கிற்கும் இறை அச்சத்திற்கும் என்ன தொடர்ப்பு ? அடி உதை வாங்கிக் கொண்டு திருமண பந்தம் தொடரப்பட வேண்டும் என்பது தான் இறை அச்சங்கள் சொல்லும் தீர்ப்பா ? வஹாபிய விளம்பர விளம்பி திரு சுவனப்பிரியன் இவ்வாறு தான் கூறுகிறார். அதாவது இறை அச்சம் மிக்க இஸ்லாமியர்களிடமும் இஸ்லாமிய நாடுகளிலும் மணவிலக்கு குறைவாம் நல்ல வேளை இல்லவே இல்லை, இஸ்லாம் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் கிளப்பிவிட்ட வதந்தி என்று சொல்லாதவரை. இவர் வாதம் காலில் கொஞ்சமாக ஒட்டிக் கொண்டிருக்கும் 'பீ' நாறாது, இருந்துவிட்டு போகட்டும். ஒருவேளை 'தலாக் தலாக் தலாக்' சொல்வது மணவிலக்கு ஆகாது என்று கருதுகிறாரோ.
இறை அச்சம் மணவிலக்கு வேண்டாம் என்று சொல்கிறதா ?
இஸ்லாமியர்களின் ஹதீது அறிவிப்பாளர்களில் ஒருவர் மற்றும் அவர்களால் இஸ்லாமிய அன்னையர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜைனப்(ரலி), இவர் முகமதுவின் வளர்ப்பு மகன் ஜையதுவின்(ரலி) மனைவியாகவும் வாழ்ந்தார். பின்னர் மணவிலக்கு பெற்று முகமதுவிற்கே மனைவி ஆனார், அதை ஞாயப்படுத்த அல்லாவே தனிக் குரானெல்லாம் இறக்கி இருக்கிறார். அதில் கூட இறை அச்சம் இல்லாதால் ஜைனப் மணவிலக்கு பெற்று முகமதுவை மணந்து கொண்டார் என்று சொல்லபடவில்லை, பிறகு எப்படித்தான் சுவனப்பிரியர் மணவிலக்கிற்கும் இறையச்சத்திற்கும் முடிச்சுப் போடுகிறார் என்றே தெரியவில்லை, இதை ஒத்து ஓத நான்கு வகாபிகளின் பின்னூட்டம் அதில் என்னை இழுத்து நக்கல் வேறு அடித்து இருக்கிறார்கள்.
பட்டப் பகலில் பூனை கண்ணை மூடாவிட்டாலும் பூளோகத்தின் மறுபகுதி இருட்டாகத்தான் இருக்கும்,
Malaysian Muslim Divorce Rate Up: Muslim Couple Splits Every 15 Minutes
என்னைப் பொருத்த அளவில் இந்தத் தகவல் மலேசியாவில் மனித உரிமைகளை மதிப்பதில் வளர்ச்சி கண்டுவருகிறது. குறிப்பாக பெண்கள் வேலை வாய்ப்பில் இருப்பதால் அவர்களால் பொறுத்தமற்ற மணவாழ்கையை உதறிவிட முடிகிறது என்று கருதுகிறேன்.
பின்குறிப்பு : இதை நான் மதவாதமாகவோ , மதம் சார்பிலோ, அல்லது குறிப்பிட்ட மதத்தை தாக்க வேண்டும் என்றோ எழுதவில்லை, அடிப்படை வாதிகள் சமூகக் கருத்தை திணிக்கும் போது அவற்றிற்கு பதில் சொல்வது 1400 பழமை வாத சிந்தனைகளை நீர்த்துப் போக வைக்கும் என்கிற நம்பிக்கையால் எழுதுகிறேன். எனது இடுகைகளில் கண்டிப்பாக புதிய சிந்தனைகளுக்கு ஓரிருவரிகளாக வாய்பளிக்கும், இதை எதோ சுவனபிரியனுக்கு எழுதிய எதிர்பதிவாக நினைக்க வேண்டாம். சுவனப்பிரியன்கள் போன்றோர் வலைப்பதிவுகள் எழுதாமலும் இருப்போர், அவர்களும் ஆதரங்கள் இன்றி விவாதிக்கும் போது இதை எடுத்துச் சொல்லுங்கள்.
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயக்கப்பட்டால் மறுமணங்கள் எங்கு நிச்சயக்கப்படுகின்றன ?
28 கருத்துகள்:
நல்ல கட்டுரை. கண் விழிக்கமாட்டேன் என்போரை எழுப்புவது சிரமம்.
//அதிக சுதந்திரமும் சுய சம்பாதனையும் உள்ள பெண்கள் அதிகம் வாழுகிற நாடுகளில் விவாகரத்துப் பெறுவோர் எண்ணிக்கை அதிகம்; சுய சம்பாதனை இல்லாமல், அடிமைகளாக நடத்தப் படுகிற பெண்கள் அதிகம் உள்ள நாடுகளில் விவாகரத்து குறைவு என்று சொன்னால் அது தவறாகுமா?//
முனைவர் பரமசிவம் மிக மிகச் சுருக்கமாகச் சொல்லிவிட்டாரே!
திரு கோவி கண்ணன்!
//அதில் கூட இறை அச்சம் இல்லாதால் ஜைனப் மணவிலக்கு பெற்று முகமதுவை மணந்து கொண்டார் என்று சொல்லபடவில்லை, பிறகு எப்படித்தான் சுவனப்பிரியர் மணவிலக்கிற்கும் இறையச்சத்திற்கும் முடிச்சுப் போடுகிறார் என்றே தெரியவில்லை, இதை ஒத்து ஓத நான்கு வகாபிகளின் பின்னூட்டம் அதில் என்னை இழுத்து நக்கல் வேறு அடித்து இருக்கிறார்கள்.//
தலாக் என்பது ஒருவர் மண வாழ்வு ஒருவரோடு சரியாக நாம் எதிர்பார்த்த அளவு அமையாத போது நல்லவிதமாக பிரிந்து விடுவது. 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்' என்று நடைபிணமாக அவனொடு வாழ்க்கையை நடத்தச் சொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. அந்த வகையில் அன்னை ஜைனபுக்கு தனது கணவன் பிடிக்கவில்லை யாதலால் தலாக் விடுகிறார். அதன் பிறகு முகமது நபியை மணந்து கொள்கிறார். அந்த வாழ்க்கை அவர்கள் இருவருக்குமே இன்பமாகத்தானே கழிந்தது!
பிரச்னை எங்கு வருகிறதென்றால் தனது மனைவி வீட்டில் இருக்க பிற பெண்களை நாடும் போதும் அதே போல் நல்ல ஆண் துணை இருக்க பிற ஆண்களை ஒரு மனைவி நாடுவதும் கலாசார சீரழிவால் ஆங்காங்கு நடைபெறுகிறது. அடுத்து மன நிமம்தி இன்மை. இதனாலும் பல விவாகாரத்துகள் நடைபெறுகிறது. விவாகரத்து வாங்குவதற்காக பொய்யான காரணங்களை துணிந்து இட்டுக் கட்டி பல குடும்பங்களை பிரித்து விடுகின்றனர். இதற்க் கெல்லாம் காரணம் இறை நம்பிக்கை அற்று போய் சுதந்திர பறவைகளாக திரிவதே முக்கிய காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது.
//பட்டப் பகலில் பூனை கண்ணை மூடாவிட்டாலும் பூளோகத்தின் மறுபகுதி இருட்டாகத்தான் இருக்கும்,
Malaysian Muslim Divorce Rate Up: Muslim Couple Splits Every 15 Minutes//
நான் முன்பு கோலாலம்பூர் ஒரு வாரம் சுற்றுலாவுக்கு வந்திருந்தபோது நிலைமைகளை நேரிலேயே பார்த்தேன். எனது குடும்ப பெண்களோடு பயங்கர வாக்குவாதத்திலும் ஈடுபட்டேன். ஏனெனில் அந்த நாடு கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய சூழலை இழந்து கொண்டிருந்தது. பெண்கள் ஆண்களை போல் உடைகளை அணிந்து கொண்டு இஸ்லாத்தை தூரமாக்கினார்கள். ஆணும் பெண்ணும் அவசியமில்லாமல் அனைத்து இடங்களிலும் ஒன்றாக்கப்பட்டார்கள். இதன் பாதிப்பு இன்னும் பத்து வருடங்களில் தெரிய வரும் என்று அப்போதே சொன்னேன். அது இன்று நிறைவேறி வருகிறது. அந்த மக்கள் என்று இஸ்லாத்தை தூரமாக்கினார்களோ அன்றிலிருந்தே பிரச்னைகள் தலைஎடுக்க ஆரம்பித்து விட்டது. தற்போதுதான் அரசு விழித்துக் கொண்டு இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்த யோசித்து வருகிறதாம்.
'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்'
எனவே விவாகரத்து மலேகியாவில் அதிகமானதற்கு காரணம் இஸ்லாத்தை தூரமாக்கியதே!
இங்கு சவுதியிலும் தற்போது விவாகரத்துகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் சவுதிகள் கல்வி கற்க வெளிநாடு சென்று அந்த கலாசாரத்தை இங்கு கொண்டு வந்ததே என்று கண்டறியப்பட்டு தற்போது அதுபோன்ற தரம்வாய்ந்த கல்விக் கூடங்களை சவுதியில் நிறுவ பிரிட்டனோடு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
எனவே இங்கு தவறு இஸ்லாத்தில் அல்ல: அதை சரி வர பின்பற்றாத முஸ்லிம்களே காரணமாகின்றனர்!
//முனைவர் பரமசிவம் மிக மிகச் சுருக்கமாகச் சொல்லிவிட்டாரே!//
முனைவர் பரமசிவத்திற்கு ஜைனப் விவாகரத்து பற்றி தெரியாது.
:)
//எனவே இங்கு தவறு இஸ்லாத்தில் அல்ல: அதை சரி வர பின்பற்றாத முஸ்லிம்களே காரணமாகின்றனர்!//
பிரச்சனை இஸ்லாத்தில் இல்லை, இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதால் இஸ்லாமிய நாடு இஸ்லாமிய ஆட்சி நடத்துதுன்னு பொருள் இல்லை. நான் இஸ்லாமை பின்பற்றுபவர்கள் தான் இஸ்லாமியர்கள் என்று நினைத்திருந்தேன். இந்த விவாகரத்து விசயத்தை வைத்து சவுதியிலும் இஸ்லாமிய ஆட்சி முறையாக நடப்பதில்லைன்னு இப்ப நீங்க சொல்றிங்க. இறையச்சத்திற்கும் விவாகரத்திற்கும் முடிச்சு போட்டவர் தாங்கள் தான் இப்ப ஜைனப் விவாகரத்து கேஸ் வேறன்னு சொல்றிங்க. அதே போல் விவாகரத்து செய்ய ஒவ்வொருக்கும் ஒரு காரணம் இருக்கும். புள்ளைக் குட்டிங்களை மதராச பள்ளியில் மட்டுமே படிக்கவைக்காமல் மற்ற பள்ளிகளிலும் படிக்க வைங்க சார். சொந்த காலில் நிற்கப் பழகுவாங்க.
//பிரச்னை எங்கு வருகிறதென்றால் தனது மனைவி வீட்டில் இருக்க பிற பெண்களை நாடும் போதும் அதே போல் நல்ல ஆண் துணை இருக்க பிற ஆண்களை ஒரு மனைவி நாடுவதும் கலாசார சீரழிவால் ஆங்காங்கு நடைபெறுகிறது. அடுத்து மன நிமம்தி இன்மை//
ஆக உங்க அவதனிப்பு ஒழுக்கம் கெட்டவர்கள் தான் மணவிலக்கு செய்கிறார்கள். இங்கெல்லாம் இறைவனின் நாட்டம் கீட்டம் ஒண்ணும் இல்லையா ? இறைவனின் நாட்டம் உள்ளவர்கள் நல்லா வாழ்க்கை நடத்துகிறார்கள், இறைவனின் நாட்டம் இல்லாதவர்களின் வாழ்கை சீரழிகிறது ன்னு வைத்துக் கொண்டாலும் தனிமனித தவறுக்கு இறைவனின் செயல் தான் காரணம் என்று நம்புறிங்க, ஆனாலும் தனிமனிதனை குறைச் சொல்லாமல் மதத்தைப் புனிதப்படுத்த முடியாது.
நல்லா இருக்கு சார் உங்க வாதம். இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வுகளுக்கு உங்களைப் போன்றவர்களின் தவறான கருத்துகளும், உலகத்தினர் மீதான உங்கள் பார்வையும் தான் காரணம் என்று நினைக்கலாம்.
//இஸ்லாமிய சூழலை இழந்து கொண்டிருந்தது. பெண்கள் ஆண்களை போல் உடைகளை அணிந்து கொண்டு இஸ்லாத்தை தூரமாக்கினார்கள். //
ஆக பெண்களின் உடையும் அவர்கள் மீதான ஆண்களின் கட்டுப்பாடும் தான் மதச் சூழலை காக்கிறது எனறு நேரிடையாக ஒப்புக் கொண்டதற்கு பாராட்டுகள். உங்களைப் பொருத்த அளவில் பெண்கள் கல்வி கற்று முன்னேறினால் அவர்கள் விருப்படி நடந்து கொள்வார்கள் எனவே அவர்கள் படிக்கும் பள்ளிகளில் தலிபான் பள்ளியில் விசவா(யு)யை வைத்து தாக்கினாலும் பரவாயில்லை.
பெண் உடல் மீதான கட்டுப்பாடுகளே மதங்கள் என்பது சரியாகத்தான் பொருந்திவருகிறது.
ஹை, இதையே தான் இந்துமத குரு காஞ்சி (நடு) தலைவரும் சொல்லியிருக்காருங்க. "வேலைக்குப்
போக ஆரம்பிச்சதனாலத்தான் பொம்மனாட்டிகள் கெட்டு போயிட்டா" என்று .
சுவனப்பிரியன் அவர்களின் பதிவில் நான் இட்ட கருத்துரையை இங்கு எடுத்துரைத்த தருமி அவர்களுக்கும், ஜைனப்புவின் மணவிலக்கை நான் உட்படப் பிறர் அறியச் செய்த கண்ணன் அவர்களுக்கும் நன்றி.
தொடரும் மணவிலக்கு பற்றிய இவ்விவாதம், ’பக்க விளைவு’களை ஏற்படுத்தாமல், மணவிலக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விழைவு.
நன்றி.
கோவி கண்ணன்!
//புள்ளைக் குட்டிங்களை மதராச பள்ளியில் மட்டுமே படிக்கவைக்காமல் மற்ற பள்ளிகளிலும் படிக்க வைங்க சார். சொந்த காலில் நிற்கப் பழகுவாங்க.//
உளறல்களிலேயே உச்சகட்ட உளறல் இதுதான். எனது மூத்த பையன் மெகானிகல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு. இளையமகன் இந்த வருடம் முதலாம் ஆண்டு பிகாம். நாங்களும் கோதாவுல இறங்கிட்டோம்ல....
இளைய மகன் விடுப்பை வீணாக்காமல் மதரஸா சென்று அரபி எழுத படிக்க கற்று வருகிறார். நான் சொல்லாமலேயே தவ்ஹீத் (அதாவது உங்கள் பாஷையில் வஹாபியம்) கூட்டங்கள், அதிலும் பிஜெ கூட்டங்களில் நண்பர்களோடு கலந்து கொள்கிறார். ஆக உலக கல்வி மார்க்க கல்வி இரண்டையும் ஒன்றாக எனது குழந்தைகள் கற்று வருகின்றனர். பெரும்பாலான இஸ்லாமிய குடும்பங்களின் நிலை தற்போது இதுதான். கவலை வேண்டாம். இனி பிராமணர்களுக்கு சமமாக படிப்பில் போட்டியிடும் சமூகமாக இன்னும் 10 ஆண்டுகளில் இஸ்லாமியர்களை நீங்கள் தமிழகத்தில் பார்க்கலாம்.
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயக்கப்பட்டால் மறுமணங்கள் எங்கு நிச்சயக்கப்படுகின்றன ?
/
மறுமணங்களும் திருமணங்கள் தான் என்றால் அதுவும் சொர்கத்தில் தான் :))
ஜைனப்புக்கு இறை அச்சம் இல்லையாம் !
அவர்கள் மணவிலக்கிற்கு சொன்ன காரணபடி ஜைனப் இறை அச்சம் இல்லாததினால் மணவிலக்கு பெற்று முகமதுவை மணந்து கொண்டார். அருமையான, எளிமையான விளக்கம். நன்றி நண்பரே.
பெண் தனது நகங்களுக்கு பாலிஷ் கூட போட அனுமதிக்காதவர்களிடம், பெண் தனது முகத்தை கூட காட்ட அனுமதிக்காமல் பர்தாவால் மறைக்க சொல்பவர்களிடம், பெண்களை கார் ஓட்ட அனுமதிக்காதவர்களிடம் பெண்களுக்கு மணவிலக்கிற்கு உரிமை????
சகோ
சு.பி
//அந்த வகையில் அன்னை ஜைனபுக்கு தனது கணவன் பிடிக்கவில்லை யாதலால் தலாக் விடுகிறார். அதன் பிறகு முகமது நபியை மணந்து கொள்கிறார். அந்த வாழ்க்கை அவர்கள் இருவருக்குமே இன்பமாகத்தானே கழிந்தது!//
இது ஒரு ஆதாரம் இலாத விடயம்.குரானின் படி முகமது எதையோ [விரும்பி!?] அதனை மனதில் வைத்து மறைத்ததால் அல்லாஹ் வசனம் இறக்கி அனுமதி கொடுத்ததாக கூறுகிறது.உன் மனைவியை நீயே வைத்துக் கொள் என்றும் ஜைதுவிடம் முகமது கூறுகிறார்.
//33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.
33:38. நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை; இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.
33:39. (இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.//
இத்திருமணத்தின் முக்கிய காரணம் முஸ்லிம்கள் வளர்ப்பு மகனின் மனைவிகளை[ அவர்கள் விவாக இரத்துக்கு பின்] மணந்து கொள்ள தடை இல்லை என்பதை வலியுறுத்த என பிஜே கூறுவதை கவனியுங்கள்,
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/319/
1.ஜைதுக்கும்,ஜைனஃப்க்கும் பிரச்சினை என்பதற்கு ஆதரப்பூர்வ ஹதிது உண்டா?
2.) முகமது மனதில் எதனை வெடக்ப்பட்டு [வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் ]மறைத்தார்?
3.)ஜைதுக்கும்,ஜைனப்புக்கும் பிரச்சினை என்று சொல்லாமல் உன் மனைவியை நீயே வைத்துக் கொள் என ஏன் கூறினார்?
இதற்கு சரியான விடை தெரிந்தும் [வழக்கம் போல்] கூறாவிட்டால் ஹி ஹி ஒன்னுமே இல்லை!
நன்றி
ஜைனப்பைத்தவிர வேறு மூமீன்கள் அதாங்க முஸ்லீம் பெண்கள் தலாக் சொல்ல முடியுமா..?அல்லது அது ஜைனப்பிற்கு மட்டுந்தான்னு அல்லாஹ் எதாச்சும் சொல்லியிருக்காரா...???
ஜைனப்பைத்தவிர வேறு மூமீன்கள் அதாங்க முஸ்லீம் பெண்கள் தலாக் சொல்ல முடியுமா..?அல்லது அது ஜைனப்பிற்கு மட்டுந்தான்னு அல்லாஹ் எதாச்சும் சொல்லியிருக்காரா...???
கோவி,
Year 2012 ----> ஏதோ ஒரு காரணத்தினால் உங்கள் மருமகள் உங்கள் மகனிடம் இருந்து மணவிலக்குப் பெற்று உங்களை மணமுடிக்க நினைக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சராசரி மனிதன் என்ன செய்வான்?
நாம் வாழும் இந்த காலகட்டத்தில் எனக்குச் சரியாகத் தெரிவது ... ஒரு நல்ல வாலிபனுடன் (மருமகளின் வயதை ஒத்த ஒருவரை) மருமகளுக்கு மணம்புரிந்து வைத்து வாழச்சொல்லலாம்.
**
Year 0012 --->
மாமனரையே கட்டிக்கொள்ளும் செயல்களை அங்கீகரித்த மனிதர்கள் மற்றும் அத்தகைய மனிதர்கள் சொன்ன கருத்துகளையோ அந்தக்காலத்திற்கு ஒத்து வந்து இருக்கலாம்.
I am not judging their era. I respect that because who knows ..may it was the best option for that period.
அவை எல்லாம் அவர்கள் வாழ்ந்த காலகட்டம். அதை நாம் இன்று தவறோ சரியோ என்று சீர்தூக்கிபார்த்து தீர்ப்புச் சொல்ல முடியாது. :-((
***
அன்று செய்த செயல்களை சரிபார்த்து அது இந்தக்கால கட்டத்திற்கு ஒத்துவருமா பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்து அது இந்தக்காலத்திற்கு ஒத்துவராத செயல் என்றால் இன்று செய்ய/வாழ விரும்பாதவர்கள்..
அதை இந்தக்காலத்தில் செய்யத்துணியாதவர்கள் , துணிந்து அது இந்தக்காலத்திற்கு ஒத்துவராது அது தவறு என்று சொல்ல வேண்டும்.
அப்படிச் சொன்னால்.... அவர் செய்ததில் / சொன்னதில் எந்த எந்த செயல்கள் இந்தக்காலத்திற்கு ஒத்துவராது என்ற அடுத்த கேள்வி வரும். :-((((
இறைக்கருத்துகளில் இந்தக்காலத்திற்கு ஒத்துவாராத கருத்து என்ற ஒன்று இல்லவே இல்லை என்பது நம்பிக்கை (please note it is not a fact it is a their belief).
அது எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதால் அப்படிப் பொருந்தாது என்று சொல்வது இறை நிந்தனையாக முடியும் என்பதால் யாரும் சொல்லவும் முடியாது.
இதில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.
***
பகுத்து அறியும் ஆற்றலை அடகு வைத்தால்மட்டுமே மதங்களில் நிலைத்து இருக்க முடியும்.
கட்சித் தலைமை செய்துவரும் ஊழல்களுக்கு சப்பைக்கட்டும் தொண்டனும், தான் நம்பும் ஒரு மதத்தின் வரலாற்றை அறியாமல் அதன் புனிதத்தைக் காக்க மட்டுமே நினைப்பவனும் எனது பார்வையில் மகிழ்ச்சியானவர்கள்.
Is Ignorance Bliss? ...yes it is.
I just avoid them.
**
இசுலாத்திற்கு ஆட்பிடிக்கும் கும்பல் தலை சு.பிரியர் எழுதுவதற்கு மாறாக எறைஅச்சம் அதிகரித்தால் விவாகரத்தும் அதிகமாகிவிடும் போலிருக்கிறது.
மலேசியாவில் மற்ற மதத்தவரோடு ஒப்பிட்டால் முசுலிம்களிடம் விவாகரத்து 5 மடங்கு அதிகமாம். ஆனால் "விவாகரத்து மலேகியாவில் அதிகமானதற்கு காரணம் இஸ்லாத்தை தூரமாக்கியதே" என சமாளிக்கிறார் சு. பிரியர்.
இஸ்லாத்தை தூரமாக்காத சவுதி நிலமை எப்புடி என பார்த்தால் உலகில் மிக அதிக விவாகரத்து நடைபெறுவது எறைஅச்சம் கொண்ட சவுதியில்தான் போலிருக்கிறது! ~62% கல்யாணம் விவாகரத்தில் முடிகிறதாம். ஒரு சவுதி அம்மையார் அவரது புருசன் திரையை விலக்கி மூஞ்சியை காட்ட சொன்னதிற்காக குலாவிவிட்டராம் (Khula = divorce,female version). சில சவுதி பெண்கள் தமது புருசனுக்கு மட்டுமல்லாது தமது குழந்தைகளுக்கும் முகத்தைகாட்ட மாட்டார்களாம்.
இப்படி இல்லாத பொல்லாத காரணங்களுக்காக ஏன் எறைஅச்சம் கொண்டோர் விவாக ரத்து கோருகிறார்கள். ஒருவேளை எல்லோரும் எறைஅச்சம் அதிகமானதினால்அன்னை ஜைனப் வழியை பின்பற்றி மாமனார்களுக்கு ரூட் போடுகிறார்களா என சு.பிரயர் வெளக்குவாரா?
//இதற்கு முக்கிய காரணம் சவுதிகள் கல்வி கற்க வெளிநாடு சென்று அந்த கலாசாரத்தை இங்கு கொண்டு வந்ததே என்று கண்டறியப்பட்டு தற்போது அதுபோன்ற தரம்வாய்ந்த கல்விக் கூடங்களை சவுதியில் நிறுவ பிரிட்டனோடு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.//
பார்த்து சார். பிரிட்டிஷ் ஆசிரியர்கள் கல்லூரிப் பாடம் நடத்தாமல் *பள்ளிப்* பாடம் நடத்திரப் போறாய்ங்க.
அதனால காதல் வயப்படாத வெறும் ரோபோக்களையே இறக்குமதி செய்யச் சொல்லுங்க.
//அந்த வகையில் அன்னை ஜைனபுக்கு தனது கணவன் பிடிக்கவில்லை யாதலால் தலாக் விடுகிறார்.
//
அவங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்னதாங்க பிரச்சினை?
//அவங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்னதாங்க பிரச்சினை?//
பிரச்சனை என்னனு சுவனப்பிரியன் எழுதி இருக்கிறார். ஜைனப் உயர்குலமாம், சைது அடிமையாக எடுத்து வளர்க்கப்பட்டவராம், அதனால் இயல்பாகவே ஜைனப்புக்கு சைதுவுடன் வாழப்பிடிக்கவில்லையாம்.
இரண்டாவதாக சைது முன்கோபியாம் அதனால் அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லையாம்.
அடிமையாக எடுத்துவளர்க்கப்பட்டவர்களின் முன்கோபம் அனுமதிக்கப்படுமா ? அல்லது அடிமைகளுக்கு முன்கோப உணர்வு இருக்குமா என்பதை சுவனப்பிரியன் விளக்கவில்லை,
தவிர குலம் பிரச்சனையையும் அவர் கூறி இருப்பதால் ஜைனப்பிற்கு சைதுடன் ஆன திருமணம் ஜைனப்பின் விருப்பதைக் கேட்காமல் நடைபெற்ற ஒன்று என்றும் மறைமுகமாகச் சொல்கிறார்
இதில் என்னக் கூத்து என்றால் திருமணத்திற்கு சம்மதம் கேட்காமல் செய்துவைக்கப்படும் திருமணத்தில் விவாகரத்திற்கு விருப்பம் தெரிவித்தால் செய்துவிக்கப்படுமாம், அதை ஏன் திருமணத்தின் முன்பு கேட்டு தேவையற்ற விவாகரத்தை தவிர்க்க முடியவில்லை ? என்று தனக்குள் கேள்வி கேட்டு இவர்கள் பதிலும் சொல்லமாட்டார்கள்.
நாம இவர்கள் கொடுக்கும் விளக்கத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்
// சிரிப்புசிங்காரம் கூறியது...
ஜைனப்பைத்தவிர வேறு மூமீன்கள் அதாங்க முஸ்லீம் பெண்கள் தலாக் சொல்ல முடியுமா..?அல்லது அது ஜைனப்பிற்கு மட்டுந்தான்னு அல்லாஹ் எதாச்சும் சொல்லியிருக்காரா...???//
ஜைனப்பிற்கு முகமதுவை மணந்து கொள்ளும் முன் அந்த உரிமை இருந்தது உண்மை தான், அதனால் தான் அவரால் முகமதுவை மணந்து கொள்ள முடிந்தது.
ஆனால் முகமதுவின் மனைவியர் எவருக்கும் விவகரத்து செய்யும் உரிமையோ அல்லது மறுமணம் செய்து கொள்ளும் உரிமையோ கிடையாது, ஏனெனில் அவர்கள் இஸ்லாமிய அன்னையர் என்கிற பதவியைப் பெற்றுவிடுகிறார்கள்,
இவர்கள் இணை வைக்கக் கூடாது என்று கொள்கைப் பாடம் நடத்தினாலும், அல்லாவுக்கு முகமதுவை இணை வைப்பார்கள், முகமதுவிற்கு அவரது மனைவிகளை இணை வைப்பார்கள்.
இஸ்லாமியப் பெயர்களின் அல்லாவின் பெயரைவிட முகமதுவின் பெயர்கள் தான் மிகுதியாக உள்ளது, மதத்திற்கும் மற்றொரு பெயர் முகமதியர்கள் தானே
//1.ஜைதுக்கும்,ஜைனஃப்க்கும் பிரச்சினை என்பதற்கு ஆதரப்பூர்வ ஹதிது உண்டா?//
சார்வாகன், சுவனப்பிரியனின் பதிவுகள் கூட வருங்காலத்தில் ஹதீதாக ஏற்றுக் கொள்ளப்படும் போல, அவர் அரபியில் எழுதி இருந்தால் பீஜே போல் பிரபலம் ஆகி இருப்பார், நம்மைப் போல் வெளங்காவெட்டி தமிழ் பயலுவலுக்கு வெளக்கியே அவரோட சக்தியெல்லாம் வீணாகுது
//உளறல்களிலேயே உச்சகட்ட உளறல் இதுதான். எனது மூத்த பையன் மெகானிகல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு. இளையமகன் இந்த வருடம் முதலாம் ஆண்டு பிகாம். நாங்களும் கோதாவுல இறங்கிட்டோம்ல....//
படிக்க வைங்கன்னு சொல்வது உளறல் என்றால் உங்களுக்கு படிப்பின் மீது இருக்கும் வெறுப்பு ஏன் என்று விளங்கவில்லை, ஒருவேளை பெண்களுக்கு கல்வி என்பது மட்டும் தான் கசப்பானதோ.
நீங்கள் கோதாவில் இறங்குவது நல்லது தான், படிப்பறிவு மிகும் போது சிந்திக்கும் திறன் மிகுதியாகும் வருங்காலத் தலைமுறையாவது அல்கொய்தா அடியார்களாக ஆகாமல் இருந்தால் சரி
//ramachandranusha(உஷா) கூறியது...
ஹை, இதையே தான் இந்துமத குரு காஞ்சி (நடு) தலைவரும் சொல்லியிருக்காருங்க. "வேலைக்குப்
போக ஆரம்பிச்சதனாலத்தான் பொம்மனாட்டிகள் கெட்டு போயிட்டா" என்று .//
நன்றி உஷா,
ஆண்டுகள் கழித்து உங்கள் பின்னூட்டம், இடையில் வார இதழ்களில் எழுதிவருவதாகவும் கேள்விப்பட்டேன். நல்வாழ்த்துகள்.
ஆண்டுகள் கழித்து உங்கள் பின்னூட்டம், இடையில் வார இதழ்களில் எழுதிவருவதாகவும் கேள்விப்பட்டேன். நல்வாழ்த்துகள்.//
கோவி, இப்படி எல்லாம் வதந்திகளை யார் கிளப்புறாங்க :-) சம்சார சாகரத்தில் முக்குளித்துக்
கொண்டு இருப்பதால் வாசிப்பு மட்டுமே! எழுதுவது என்பதே ஏறக்குறைய மறந்துப் போய்விட்டது.
கோவி கண்ணன்..
எனது முதல் பின்னூட்டம் அநாகரீகமாக தோன்றியிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.. எனது கருத்துக்கு ஒரு உருவகமாகத்தான் உங்க குடும்பத்தை இழுக்க வேண்டி ஏற்பட்டது..
உங்கள் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக மட்டும்தான் எனது பின்னூட்டம்.. மற்றபடி சுவனப்பிரியனுக்கு ஆதரவாக கூஜா தூக்குவதாக நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல! சுவனப்பிரியன் கருத்துக்களிலும் பல விமர்சனம் எனக்குண்டு!!
பொதுவில் ஒரு கருத்தை வைக்கும் போது. அதற்கு எதிரான விமர்சனங்களும் வரும் அப்படி வந்தால் அவற்றை ஏற்றுக்கொண்டு பதில் அளிக்கும் தைரியம் வேண்டும்.. உங்களுக்கு சார்பானவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு, பதில் சொல்ல முடியாதவற்றை குப்பையில் போடுவது உங்கள் கோழைத்தனத்தைதான் காட்டுகிறது..
உங்களுக்கு சார்பாக, ஆனால் மற்றவரை கீழ்த்தரமாக விமர்சித்து வரும் பல பின்னூட்டங்களை நீங்கள் பிரசுரித்திருக்கிறீர்கள்.. அப்போதெல்லாம் நீங்கள் எந்த நாகரீக அலகை பயன்படுத்தினீர்களோ தெரியவில்லை..
நான் பின்னூட்டமாக இட்டதையே ஒரு பதிவாக்கி "ஆணைச்சார்ந்திருக்கும் பெண்கள் கள்ளத்தொடர்புடையவர்கள்-கோவி கண்ணன் வாதம்" என்று சூடான தலைப்பிற்று தமிழ்மணத்தில் சூடான பகுதிக்கு வந்திருக்க முடியும்.. அது உங்கள் வேலை!! எனதல்ல!!!
மற்றபடி எனது அறிவெல்லாம் உங்களிடம் நிரூபித்துக்காட்டி தரச்சான்றிதல் பெறும் தேவை எனக்கில்லை..
//பொதுவில் ஒரு கருத்தை வைக்கும் போது. அதற்கு எதிரான விமர்சனங்களும் வரும் அப்படி வந்தால் அவற்றை ஏற்றுக்கொண்டு பதில் அளிக்கும் தைரியம் வேண்டும்.//
ஆமாம் சார், நீங்க பொது சாலையில் போகும் போது சாலை பொதுவானது தானேனு உங்க மேல் எவனாவது ஒண்ணுக்கு அடிச்சா எதிர்ப்பு காட்டாமல் அப்படியே 'தம்பி இப்படியெல்லாம் செய்யக் கூடாது'ன்னு சொல்லி அவனுக்கு பாடம் எடுப்பிங்க, உங்க அளவுக்கு எனக்கு தன்மை கிடையாது.
எப்படித்தான் யார் என்றே தெரியாதவர்களின் குடும்பதை வைத்துக் கேள்வி எழுப்ப முடிகிறதோ ? நான் இங்கே சுவனப்பிரியன் பற்றி எழுதி இருப்பது அவரை எனக்கும் அவ்ருக்கு என்னையும் தெரியும் என்பதால் தான், எத்தனையோ பிற அடிப்படைவாதிகள் எழுதிகிறார்கள் அவர்களையெல்லாம் நான் பொருட்படுத்துதில்லை.
//Rizi கூறியது...பொதுவில் ஒரு கருத்தை வைக்கும் போது. அதற்கு எதிரான விமர்சனங்களும் வரும் அப்படி வந்தால் அவற்றை ஏற்றுக்கொண்டு பதில் அளிக்கும் தைரியம் வேண்டும்.. உங்களுக்கு சார்பானவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு, பதில் சொல்ல முடியாதவற்றை குப்பையில் போடுவது உங்கள் கோழைத்தனத்தைதான் காட்டுகிறது//
ஆமாம் கோவி அவர்கள் இஸ்லாமிய குப்பைகளை கொட்டுவார்கள் நீங்கள் அவற்றை எல்லோரும் படிக்கும்படியாக வெளியிட்டு தாவா பணி செய்ய வேண்டும்.
கருத்துரையிடுக