பின்பற்றுபவர்கள்

3 மே, 2012

இவர்களால் மட்டும் எப்படி ? எல்லாம் (ஏக) இறைவனின் ஆசி !

நான் கடந்த 4 - 5 மாதங்களாக வலைப்பதிவுகளை குறிப்பாக தமிழ்மணம் திரட்டியில் வரும் வலைப்பதிவுகளைப் பார்க்க ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது.

உலகத்தில் உள்ள ஒரே ஒரு நல்ல அமைதியான மார்க்கம் வாஹபிய மார்க்கம் தான். வஹாபியர்களின் சுறுசுறுப்பும், ஒற்றுமையும், இறை அச்சமும், இறைப் பற்றும், இறைப் பறைச்சாற்றலுக்கும் முன் ஒரு பய மார்த்தட்ட முடியாது. அதற்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் என்ன என்ன நான் கேள்விபட்ட வரையில் அவர்களது செயல் திறன் சிலிர்க்க வைக்கிறது, ஒற்றுமையாக ஒரு நாளைக்கு 10 பதிவுகள் எழுதுவதாகட்டும், அதில் கள்ள ஓட்டோ நல்ல ஓட்டோ ( மற்றவர்கள் ) போட்டு குத்தாது தற்காத்து தாமே ஓட்டுகளைப் போட்டு கண்ணும் கருத்துமாக குத்தி மகுடம் ஏற்றுவதாகட்டும் வியக்க வைக்கிறார்கள், சிலிர்க்க வைக்கிறார்கள். இதைப் படித்து வஞ்சப் புகழ்ச்சி மாதிரி தெரிந்தால் உங்களுக்கு வாசிப்பு அனுபவமே இல்லை என்றே சொல்வேன். இவர்களைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இன்றைய உலகத்தில்  இவர்களது வஹாபிய மார்க்கம் தான் வேகமாக வளர்க்கிறது, தொடர்ந்து இவர்கள் மகுடம் ஏற்றும் பதிவுகள் அதைத்தான் சொல்கின்றன. உங்களால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. ஏனெனில் சிலை வணங்கி உங்களுக்கு ஏக இறைவனின் ஆதரவு இல்லை, நீங்கள் செய்வது இறைச் சேவையும் இல்லை. இவர்களால் மட்டும் இது எப்படி சாத்தியம்  ? ஆச்சர்யபட்டீர்களா ? நானும் வியப்படைந்தேன் ஏக இறைவனின் ஆசி இல்லாமல் இவர்களால் இவ்வளவு ஒற்றுமையாக செயல்படமுடியாது, இதை மறுப்பவர்கள் இந்தப் பதிவுக்கு நெகட்டிவ் வாக்குப் போடலாம். 


Add caption
Add caption

Add caption


Add caption(யாராவது வஹாபி நண்பர்கள் பெயர் விட்டிருந்தால் மன்னிக்கவும், எனக்கு போதிய நேரமின்மையால் உங்கள் அத்தனை பேரின் மகுடங்களை ஸ்கீர்ன் ஷாட் எடுக்க முடியவில்லை, இருந்தாலும் 30 நாளைக்கு 25 பதிவுகளுக்கு மேல் உங்களது தான் மகுடம் சூட்டியது என்பதை நான் சாட்சியாகவும், வாழ்த்தாகவும் தெரிவித்துக் கொள்கிறேன், ஆமினா போல் 55 வாக்குகளை ஒருத்தனும் இதுவரை வாங்கவில்லை)

சவுதியில் பாலாறும் தேனாறும் ஓடுவதைத் தெரிந்ததால் தான் என்னவோ, இது போல் இந்தியாவில் ஓடினால் இந்தியா எப்படி இருக்கும், கூடவே அல்லாவின் ஆட்சி நடந்தால் எப்படி இருக்கும் ? நம் வாஞ்ஜையுடன் வாஞ்சூர் ஐயாவைக் கேளுங்கள், கேடுகெட்ட இந்தியா, அசிங்கப் பிடித்த இந்தியா, நாகரீகமற்ற இந்தியா எப்படி இருக்கும்? இது பற்றி இதுவரை ஒரு 10 பதிவாக எழுதி இருப்பார்,. இவருக்கு இருக்கும் தேசப்பற்று தான் என்னை சிந்திக்க வைக்கிறது, இறைவன் நாடி இந்தியாவில் இஸ்லாமிய வஹாபிய ஆட்சி ஏற்படும் போது நம் வாஞ்சூர் ஐயாவின் இந்தியாவின் மீதான வருத்தமெல்லாம் நீங்கி இருக்கும்.
(வாஞ்சூர் ஐயாவின் விடா முயற்சிக்கு என் வாழ்த்துகள், இந்த காஃபீரின் வாழ்த்து உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்று தெரியும், இருந்தாலும் என் திருப்திக்காக வாழ்த்துகிறேன், எங்காளுங்க சாகுற வயதானால் (தான்) சங்கரா சங்கரான்னு சொல்லுவாங்க, ஆனா ஒருத்தரும் உங்களைப் போல் இறைச் சேவை செய்யமாட்டார்)

ஒருவனுக்கு முக்கியத் தேவை நாட்டுப் பற்றா ? இறைப் பற்றா ? இதில் என்ன சந்தேகம், இறைவனின் படைப்பாற்றலை ஒப்பிட நாடு என்பதே அற்பம், இதன் மீது பற்று வைப்பதைக் காட்டிலும் இறைப் பற்று எவ்வளவோ மேல், நாட்டு பற்று 'நாம் சிட்டிசன் ஆப் வேர்ல்ட்' ஆக இருக்கும் வரை தான், அதன் பிறகு மறுமை இந்த நாடு எப்படிப் போனால் என்ன ? இறைப் பற்றில் இளைப்பாருங்கள், அதைத் தான் நம் வாஞ்சூர் ஐயா 'இந்தியாவின் அவலங்கள் இவை' என்று தோல் உறித்துக் காட்டுகிறார். மார்க்கத் தடையில்லை என்றால் இந்தியாவில் பிறந்ததற்காக உயிரை விட்டு இருப்பார். சிந்திக்க வேண்டாமா மனிதர்களே, அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவலங்கள் நிறைந்த நாட்டில் ஒரு வஹாபியாக பிறந்தது மட்டுமே, அவருக்கு ஜென்மங்களின் மீது நம்பிக்கை இல்லை என்பதால் நீங்கள் அடுத்த பிறவியில் அரேபியாவில் பிறக்கவும் என்று என்னால் வாழ்த்தவும் முடியவில்லை. இருந்தாலும் அவருக்கு இந்தியா மீது இருக்கும் வெறுப்பான பற்றிற்கு என் வாழ்த்துகள், உங்களைப் போல் குடிமகனைப் பெற இந்தியா தான் தவம் செய்திருக்க வேண்டும். அரேபிய அவலங்கள் என்று எவரேனும் எதிர்பதிவு போட்டு படம் போட்டால் நம்பாதீர்கள், நாட்டில் கிராபிக்ஸ் தொழில் நுட்பம் தெரிந்த நயவஞ்சகர்கள் நிறைய உண்டு, அவர்கள் உங்களை காழ்புணர்வால் தூற்றுவதற்கும் இட்டுக் கட்டிய படங்களைக் காட்டக் கூடும்.

யா அல்லா, இந்தியாவில் உன் நல்ல ஆட்சியை நயவஞ்சக வெள்ளையர்கள் களைத்துவிட்டார்கள் மீண்டும் அது ஏற்படுமா ? ஏற்படும் என்கிறார் நண்பர் சுவனப்பிரியன் இந்தியாவில் அவருடைய மார்க்கம் வேகமாக வளர்ந்துவருகிறதாம். எல்லாம்..... எல்லாம் வல்ல அல்லாவின் ஆ(ட்)சி நாம என்ன செய்ய ? நானும் அவருடைய மார்க்கத்திற்கு திரும்ப வேண்டுமாம், மார்க்க சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டுமாம், தீர்ப்பு நாளில் நிற்க வைத்து அல்லா கேள்வி கேட்கும் பொழுது சுவனப் பிரியன் எனக்கு ஒழுங்காக புரியும் படிச் சொல்லிக் கொடுக்கவில்லை என்று சொன்னால் அவருக்கு கிடைப்பதில் எண்ணிக்கை குறையுமாம். எல்லாம் சரி தான் ஆனால் எனக்கு குபீர்னு செண்ட் அடித்துக் கொள்பவர்களுடன், பலநாள் மழிக்காத தாடி உள்ளவர்களுடன் சொர்கம் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லையே., மயக்கமாகி சொர்கத்தில் கிடப்பதைவிட அல்லாவின் தண்டனையை ஏற்று சுவனப் பிரியன் நல்லா தான் விளக்கினார் நான் தான் வெளங்கிக் கொள்ளவில்லை, நம்பவில்லை என்று இறைவனிடம் கூறி அவருக்கு எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு நகரம் செல்ல இருக்கிறேன்.

இதை யாரும் நக்கல் பதிவாகக் கொள்ளவேண்டாம்.

***********

தமிழ்மண மகுடத்தை கைப்பற்றுவதில் காஃபிர்கள் தோல்வி அடைந்துவிட்டனர், ஆனால் அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதற்கு தான் நான் இங்கே சாட்சிகளை வைத்துள்ளேன்.  பதிவை மகுடம் ஏற்றுவது எவ்வளவு கடினம் தெரியுமா ? கள்ள ஓட்டைப் போட்டு கீழே தள்ள காஃபிர் கும்பல் சதி தீட்டும், இதையும் மீறி இம்புட்டு பேர் நாளொரு மேனியும் பொழுதெருவண்ணமும் மகுடம் ஏற்றுவதைப் பார்க்க அவங்க ஒழைப்பு எனக்கு பிடிச்சிருக்கு.  இதை நான் மனதில் கொள்ளும் போது இதே வேலையாக இவர்கள் இருப்பதால் தொழுகையை தவறி இறைதண்டனைக்கு ஆளாகிவிடுவார்களோ, வேலையை இழந்துவிடுவார்களோ என்று நானும் அச்சப்படுகிறேன், ஆகவே நண்பர்களே நீங்கள் வேண்டுகோள் வைத்தால் தமிழ்மணம் மகுடம் பகுதியை வஹாபிய மகுடம் என்று மாற்றி அவர்களது பதிவு ஒவ்வொன்றாய் மணிக்கு ஒரு முறை மாற்றி மாற்றி காட்டும், அவர்களுக்கு தேடித் தேடி வாக்குப் போடும் நேரமும் மிச்சம், தொழுகையை ஒழுங்காக தொழுது இறைவனின் அன்பையும் மறுமை வாழ்வில் மேன்மையும் பெறுவார்கள். 

தமிழ் மணம் திரட்டிக்கு பணிவான வேண்டுகோள் 'தமிழ்மணம் மகுடம்' என்பதை 'வஹாபிய மகுடம்' என்று பெயர் மாற்றி எங்களது அன்பு வஹாபிய நண்பர்களுக்கு உதவுங்கள், சக பதிவர்கள் நீங்கள் எந்த ஒரு பிற பதிவுக்கும் வாக்கு செலுத்தி வஹாபியர்களின் இறைச் சேவையை நிந்தித்து இறை தண்டனை[ப் பெற வேண்டாம்.

இறைவன் மிகப் பெரியவன், மகுடம் ரொம்ப ரொம்ப சிறுசு. ஆகாவே வஹாப்பி அல்லாத பதிவர்கள் தமிழ்மண மகுடத்தை வஹாப்பிய பதிவர்களுக்கே விட்டுக் கொடுங்கள் / பெயர் மாற்ற பரிந்துரை செய்யுங்கள்.

இன்ஷா அல்லா, மாஷா அல்லா !

இந்தியாவில் நல்லாட்சி ஏற்படும் முன் இந்த தமிழ்மணத்தை வஹாபிய மணமாக்கிக் நல் அத்தாட்சி வைத்துவிட்டாய். நீயே மிகப் பெரியவன்.

அவர்களும் திட்டமிட்டார்கள். இறைவனும் திட்டமிட்டான். தவிரவும், திட்டமிடுதலில் இறைவனே சிறந்தவனாவான் - குர்ஆன் 3:54

ஏக இறைவனின் ஆசி பெற்றவர்களிடம், அவன் புகழ் பாடுபவர்களிடம் மோதினால் தோல்வி என்று நன்கு உணர்ந்து கொண்டேன், இனி அவர்கள் என்ன எழுதினாலும் (இறை நாடினால் அன்றி) இனி இது குறித்து எதுவுமே சொல்வதாக இல்லை.

19 கருத்துகள்:

Mathuran சொன்னது…

வணக்கம் கோவி.கண்ணன் அண்ணா

நீங்கள் சொன்னதுபோல தமிழ்மணம் மகுடம் இனி வஹாபிய மகுடம் என்று பெயர் மாற்றிக்கொள்ளவேண்டியதுதான். தமிழ்மணம் திரட்டியும் சரி, மகுடம், சூடான இடுகை, வாசகர் பரிந்துரை போன்றன நல்ல, காத்திரமான பதிவுகளை முன்னிலைப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான். ஆனால் இன்று திரும்புமிடமெல்லாம் இவர்களின் மதவாத பதிவுகள்தான் நிறைந்திருக்கிறது.. போற போக்கில் தமிழ்மணம் இஸ்லாமிய பிரச்சார தளமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

Mathuran சொன்னது…

அதற்காக தமிழ்மணத்தையும் முழுமையாக குறை சொல்லமுடியாது. நேர்மையாக வாக்களிப்பார்கள் என்ற நோக்கத்திலேயே தமிழ்மணம் இவற்றை செயற்படுத்தியது. ஆனால் இவர்கள் போலி ஐடிகளில் தமக்கு தாமே வாக்களித்து அல்லவா மகுடத்துக்கு கொண்டுவருகிறார்கள்...

Unknown சொன்னது…

ஸலாம் சகோ கோவி,
ஓரிறையின் அருளால் தங்களுக்கு சாந்தியும் சமாதானமும் ஏற்படுவதாக!

அருமையான படங்கள்
அழகிய விளக்கங்கள்
மாஷா அல்லா!
எல்லாம் வல்ல அந்த ஓரிறை உங்கள் அறிவை, ஞானத்தை, உண்மைகளை கண்டறிந்து பதிவிடும் ஆற்றலை என் போன்றவர்களுக்காக இன்னும் விரிவு படுத்தி எமக்கும் நல்லருள் புரிவானாக!

"வஹாபி என்று சொன்னேனடா... தமிழ்மணத்தில்
வாகை சூடி நின்றேனடா..."

இறை நாடினால் மீண்டும் வருகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

யந்திரம் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"இவர்களால் மட்டும் எப்படி ? எல்லாம் (ஏக) இறைவனின் ஆ...":

இதை ஒரு அல்ப சந்தோஷம் எனலாம். இஸ்லாமிய மதவாதிகளால் தமிழ்மணத்தில் இருந்து விரட்டப்பட்ட
பகடு போன்ற நாத்திக முஸ்லீம் தளங்கள் - alexa தரவரிசை பட்டியலில் - இந்த தமிழ்மண முஸ்லீம் பதிவுகளை விட உச்சத்தில் உள்ளன. திரும்ப திரும்ப அந்த நூறுபேர்களே வாசித்து, வாக்களித்து வாகை சூடிக்கொள்வது தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ளுவதை தவிர வேறில்லை.

வவ்வால் சொன்னது…

கோவி,

அஷ்டலக்கடி கொய்யா!


அரபியர்களுக்கு எதுக்கு ம(ண்)குடம் தண்ணி பிடிக்கவா?

ஜமாலக்கடி கிரி கிரி!

suvanappiriyan சொன்னது…

திரு கோவி கண்ணன்!

//உலகத்தில் உள்ள ஒரே ஒரு நல்ல அமைதியான மார்க்கம் வாஹபிய மார்க்கம் தான்//.

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் முன்னோர்களின் கொள்கையிலேயே நீங்கள் நீடித்திருந்தால் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டியதிருக்காது. சந்தோஷம்.

//வஹாபியர்களின் சுறுசுறுப்பும், ஒற்றுமையும், இறை அச்சமும், இறைப் பற்றும், இறைப் பறைச்சாற்றலுக்கும் முன் ஒரு பய மார்த்தட்ட முடியாது.//

உங்களுக்கும் இப்படி ஒரு நிலை வர வேண்டும் என்றால் ஒரே வேதம்: ஒரே கடவுள்: ஒரே இறை தூதர்: ஒரே சட்ட திட்டம்: உலக மக்கள் அனைவரின் மூலம் ஒரு ஆண் பெண்ணிலிருந்து பல்கி பெருகியது என்ற குறைந்த பட்ச கோட்பாட்டிற்கு வர வேண்டும். வருவீர்களா?

//நம் வாஞ்ஜையுடன் வாஞ்சூர் ஐயாவைக் கேளுங்கள், கேடுகெட்ட இந்தியா, அசிங்கப் பிடித்த இந்தியா, நாகரீகமற்ற இந்தியா எப்படி இருக்கும்? இது பற்றி இதுவரை ஒரு 10 பதிவாக எழுதி இருப்பார்,//

. நாம் பிறந்து வளர்ந்த நமது தாய் நாடு இந்த அளவு கேடு கெட்டு போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் பதிவுகளாக வடிக்கிறார் வாஞ்சூர் பாய். அப்படியாவது இந்த மக்கள் திருந்தி நமது நாட்டை முன்னேற்ற மாட்டார்களா? என்ற ஆதங்கமே. நாட்டுப் பற்று அதிகரித்ததினால் வந்த பதிவுகளே அவை.

naren சொன்னது…

சகோ. கோவி கண்ணன் அவர்களே,

உங்களுக்கு எனது கடுமையான கண்டனங்கள்.-:)

இப்படி வாஹாபிகளுடன் கொஞ்சி குலாவியதால், வாஹாபிகளைப் போல, குரான் வசனத்தை இட்டுகட்டி, அல்லாவை சிறுமைபடுத்தியுள்ளீர்கள்.

அந்த 3:54 குரான் வசனம் இப்படிதான் ஜாக்கேட் போட்டு இருக்க வேண்டும்.

“ ஆனால் (ஈஸாவை கொன்றுவிட) அ(வரை நிராகரித்த)வர்கள் சூழ்ச்சி செய்தனர்; அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்: சூழ்ச்சி செய்கிறவர்களில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்”

இப்படி மிகச் சிறந்த சூழ்ச்சிகாரனாக சதிகாரனாக இருக்கும் அல்லாவை, ஐந்தாண்டு திட்டக்குழு தலைவரை போல, சிறந்த திட்டமிடுபவர் என்று சிறுமைபடுத்திவிட்டீர்களே. ஜாக்கிரதை அல்லா உங்களை சுவனத்தில் தள்ளினாலும் தள்ளிவிடுவார். பூனையார் கூட உங்களை காப்பாற்ற முடியாது.

அல்லாவிற்கு மட்டும் ஏன் ”அவன் இவன்” என்று சொல்கிறார்கள்.

Ramya Parasuram சொன்னது…

நீங்கள் பட்டியல் போட்டதிலே எத்தனை பேர் தமிழ்மணத்திலேயிருந்து விலகிப் போகிறோமென்று அறிக்கை கொடுத்தவர்கள், தமிழ்மணத்தை சவூதியிலே தடைசெய்தவர்கள், தமிழ்மணத்துக்கு நடக்கறதே வேறே என்று பயமுறுத்தியவர்கள் என்பதையும் பாருங்கள். அப்போது இப்போது இந்த மதவெறியர்களுக்கு மதச்சார்பின்றிக் குரல் கொடுக்கிறோம் என்று தலைகீழாக நின்றவர்கள் இப்போது தமிழ்மணம் நடத்துகிறவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றால் எப்படி?

http://blog.thamizmanam.com/archives/359

http://blog.thamizmanam.com/archives/344

என்ன நான் சரியா பேசறனா?
http://youtu.be/0IFrpNko-Es

உங்களில் சாந்தியும் சமாதானமும் உண்டாகுக

G u l a m சொன்னது…

அன்பு சகோ கோவி கண்ணன் அவர்களுக்கு
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்பதற்காக...

(சென்ற முறைப்போல் இதையும் வெளியிடாமல் இருந்து விடாதீர்கள். டைப் அடித்தது வேஸ்ட் ஆகி விடும்)

உங்களின் மனநிலை எனக்கு புரிகிறது. முதலில் உங்களை அசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். எனது இலக்கு தமிழ்மணம் மட்டுமல்ல மாறாக உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் தமிழ்மனங்களே..

நான் ஒரு நாத்திக விமர்சகன். போலி முகவரி தந்து எங்கும் என் கருத்தை பதிவது இல்லை. இறை நாடினால் இனியும் பதிய மாட்டேன். நேரடியாகவே எங்கும் என் கருத்தை முன்வைக்கிறேன். என் சொந்த பெயரிலே என் விவாதத்தை தொடர்ந்திருக்கிறேன். என் எதிர் தரப்பு கருத்துக்கள் உங்களை போன்றோர்களால் ஈர்க்கப்படுவதுப்போல் என் கருத்தும் என் ஓத்த சிந்தனையுடைய சிலரால் ஈர்க்கப்படுவது இயல்பே. அதற்காக எனது கருத்துக்களுக்கு ஓட்டளிப்பின் மூலம் ஆங்கிகாரம் அளிக்கிறார்கள். இதில் என்ன தப்பு?
தனிமனிதர்கள் செய்யும் தவறுகளை முன்னிருத்தி அவர்கள் சார்ந்த கொள்கைகளை விமர்சித்து பதிவுகளை எழுதியதும் இல்லை. இப்படி உங்களைப்போல புழம்பித்தள்ளி பதிவெழுதியதும் இல்லை.

முதல் முறை அடிவாங்கினால் அதற்கு அடுத்தவர் மீது குறை சொல்ல வாய்ப்பிருக்கிறது. இரண்டாம் முறையும் அடிவாங்கினால் அதற்கு நாம் தாம் பொறுப்பு சகோ. உங்கள் தரப்பில் என்ன பிரச்சனை என்பதை நிதர்சனமாக ஆராயுங்கள் 2006 ஆண்டிலிருந்து இணைய பயணத்தை துவங்கிய உங்களுக்கு என்னைப்போல நேற்று இணையத்தில் கை வைத்தவன் பிரச்சனை என்றால்... நீங்கள் தான் யோசிக்க வேண்டும் ? உங்களின் எழுத்துக்கள் ஆக்கப்பூர்வமானவை. சமூகத்தின் பயன்பாட்டிற்கு வலு சேர்ப்பவை. அதை நோக்கி உங்கள் காலம் பயணிக்கட்டும்.

வாய்ப்பிருந்தால் நான் முஸ்லிம் தளம் வாருங்கள். எதிர்மறை கருத்து இருந்தால் பதியுங்கள். இறை நாடினல் தாரளமாக உரையாடலாம் அதை விட்டுவிட்டு உங்கள் பொன்னான "காலத்தை" இதைப்போன்ற வயிற்றெரிச்சல் பதிவுகளால் விரயமாக்காதீர்கள். வேண்டுமானால் இதன் பிரதிபலனாய் இன்னும் இரண்டு மைனஸ் ஓட்டு கூடுதலாக என் போன்றவர்களின் பதிவுகளுக்கு விழலாம்.

என் பதிவின் தமிழ்மண க்ரீன்ஷாட்டையும் வெளியிட்டதற்கு நன்றி. முடிந்தால் அப்படியே தமிழ்10, இன்ட்லி, உலவு, யுடான்ஸ், போன்றவற்றிலும் வாக்களிப்பு எண்ணிக்கையே கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அடுத்த முறை தவறால் செய்யவும்.


உங்கள் சகோதரன்
குலாம்.

வேகநரி சொன்னது…

தமிழ்மணம் மணக்கவில்லை, நெடியாகி எங்களுக்கெல்லாம் குமட்டுகிறது என்று இஸ்லாமிய மத வெறியர்கள் எழுதியதெல்லாம் மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது அதே தமிழ்மணத்தை பாவித்து கடைந்தெடுத்த பிற்போக்கு மதமான இஸ்லாமை காஃபிர்களுக்கு வாந்தி வரும் படி பெண்கள் பெயரில்(அமினா) ஆண்களும் பிரசாரம் செய்கிறார்கள்.

? சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
? சொன்னது…

//ஒரே கடவுள்: ஒரே இறை தூதர்://

ஒரே தூதரா? ஆதம், நூஹ்,இத்ரீஸ், ஹூத்,ஸாலிஹ், இப்ராஹீம்,லூத், ஷூஐப், இஸ்மாயீல், இஸ்ஹாக், யூஸுஃப், அய்யூப், துல்கிஃப்லு, யூனுஸ், மூஸா, ஹாரூன், இல்யாஸ்,அல்யஸா, தாவூத்,ஸூலைமான், ஜக்கரியா, யஹ்யா, ஈஸா இவுங்கல்லாம் இப்ப இறைதூதர் இல்லையா? ஏதாவது கேஸ்ல மாட்டி பென்சனை நிறுத்திவிட்டாரா அல்லாஹ்?

//ஒரே சட்ட திட்டம்//

காங்கிரஸ் கட்சி மாதிரி உமக்குள்ளராயே ஏகப்பட கோஷ்டி இருக்கும் போல இருக்குது. http://en.wikipedia.org/wiki/File:Islam_branches_and_schools.svg இங்க பார்த்தா தலையே சுத்துது.இதுல ஒரே சட்டதிட்டத்துக்கு எங்க போறது?

கோவி.கண்ணன் சொன்னது…

//முதல் முறை அடிவாங்கினால் அதற்கு அடுத்தவர் மீது குறை சொல்ல வாய்ப்பிருக்கிறது. இரண்டாம் முறையும் அடிவாங்கினால் அதற்கு நாம் தாம் பொறுப்பு சகோ. உங்கள் தரப்பில் என்ன பிரச்சனை என்பதை நிதர்சனமாக ஆராயுங்கள் 2006 ஆண்டிலிருந்து இணைய பயணத்தை துவங்கிய உங்களுக்கு என்னைப்போல நேற்று இணையத்தில் கை வைத்தவன் பிரச்சனை என்றால்... நீங்கள் தான் யோசிக்க வேண்டும் ? //

சாத்தான் வேதம் ஓதினால் எப்படி இருக்கும் தெரியுமா ? குலாம். உங்களது தட்டச்சு வீனாகிவிடக் கூடாது என்பதற்காக உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டேன். மற்றபடி உங்கள் கருத்துகள் எதிலும் எனக்கு ஆர்வம் இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் கூறியது...
திரு கோவி கண்ணன்!


'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் முன்னோர்களின் கொள்கையிலேயே நீங்கள் நீடித்திருந்தால் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டியதிருக்காது. சந்தோஷம்.//

நம் முன்னோர்களா ? நல்ல நகைச்சுவை சார் உங்களுக்கு. உங்களுக்கும் அவங்க முன்னோர்கள் என்று எனக்கு இப்ப தான் தெரியவருகிறது, அவங்க அப்ப பாலாறும் தேனாறும் ஓடின தமிழகத்தில் இருந்தாங்களா ?


//
உங்களுக்கும் இப்படி ஒரு நிலை வர வேண்டும் என்றால் ஒரே வேதம்: ஒரே கடவுள்: ஒரே இறை தூதர்: ஒரே சட்ட திட்டம்: உலக மக்கள் அனைவரின் மூலம் ஒரு ஆண் பெண்ணிலிருந்து பல்கி பெருகியது என்ற குறைந்த பட்ச கோட்பாட்டிற்கு வர வேண்டும். வருவீர்களா?//

கருத்து சொன்னா சிரிச்சிட்டு போகனும் இப்படி ஆராய்ச்சி செய்யப்படாது. என்னைப் பொருத்த அளவில் ஒரே மனிதனில் இருந்து கிளைத்தது என்பது முட்டாள்களின் கோட்பாடு. உங்க கருத்து உங்களுக்கு. எனக்கு ஆப்பிள் கிடைத்தால் போதும், ஆதாம் - ஏவாளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்


//. நாம் பிறந்து வளர்ந்த நமது தாய் நாடு இந்த அளவு கேடு கெட்டு போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் பதிவுகளாக வடிக்கிறார் வாஞ்சூர் பாய். அப்படியாவது இந்த மக்கள் திருந்தி நமது நாட்டை முன்னேற்ற மாட்டார்களா? என்ற ஆதங்கமே. நாட்டுப் பற்று அதிகரித்ததினால் வந்த பதிவுகளே அவை.//

ஒடம்பெல்லாம் அரிக்கிறது.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ

இது திரு குலாம் அவர்களுக்கு
நிங்கள் நாத்திக ஸ்பெசல் இஸ்லாமிய பிரச்சாரகர் என்று அறிந்து மகிழ்ச்சி.நாமும் இஸ்லாமிய மறுப்பு ஸ்பெசல் நாத்திகர் என்ற முறையில் மகிழ்ச்சி.பரிணாம் எதிர்ப்பு ஸ்பெசல் இஸ்லாமிய பதிவுகள் வராமல் போர் அடிக்கிற‌து.

உங்களின் ஒரு பதிவில் உலகின் முதல் மதம் ஓரிறை என்று இரு வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாக தகவல் வெளியிட்டு இருந்தீர்கள்.நான் அவர்கள்
கூறிய விடயத்தை சரி பார்க்க சுட்டி அல்லது புத்தக விவரம் அளிக்க இயலுமா என் கேட்டு பின்னூட்டம் இட்டேன் பின்னூட்டம் வெளியிடவில்லை.

ஆகவே உலகின் முத‌ல் மதம் ஓரிறைதான் என்பதற்கு வரலாற்று சான்றுகள் அளிக்க வேண்டுகிறோம்.

இந்த கேள்விக்கு மிக சரியான நிரூபணம் அளித்தால் உங்கள் பதிவு மகுடம் ஏறுவது சரிதான் என ஏற்கிறேன்.

உங்கள் பதிவுகள் அனைத்துமே கீறல் விழுந்த இசைத்தட்டு போல் விடை தெரியா கேள்விக்கு வித்தக்னே காரணம்.அறியா விடையின் சந்தேகத்தின் பலனை அல்லாவுக்கு கொடுப்போம் என்ற பாணியில் அமைந்தவை.மதங்களின் வரலாறு பற்றிய பல் ஆய்வு சஞ்சிகைகள் இருப்பதை அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.ஒரு மாதிரி

http://www.wiley.com/WileyCDA/Section/id-350805.html

http://www.press.uchicago.edu/ucp/journals/journal/hr.html

http://uiuc.libguides.com/content.php?pid=46481&sid=342864

கொஞ்சம் மாத்தி யோசித்து நகைச்சுவையாக மத அறிவியல் பரிணம் எதிர்ப்பு வரலாற்று ஆதாரம் என்று எழுதினால் மறுப்பு வெளியிட நம்க்கும் ஒரு ஆர்வம் வரும்.

நன்றி

வேகநரி சொன்னது…

//நான் ஒரு நாத்திக விமர்சகன்-குலாம்//
இதன் உண்மையான அர்த்தம் என்ன? நாத்திகர்களுக்கு மட்டும் தான் இவர் நாத்திகத்தை விமர்சித்து அரேபியர்களின் இஸ்லாமிய மதத்தை பிரசாரம் செய்வார்.
//எனது இலக்கு தமிழ்மணம் மட்டுமல்ல மாறாக உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் தமிழ்மனங்களே//
பின்பு எதற்க்கு இந்த இஸ்லாமிய வெறி?

படித்துறை.கணேஷ் சொன்னது…

திரு கோவி அவர்களே,

இயற்கை என்னும் கடவுளின் செயல்பாடுகளைக் கவனித்தல் உலகில் எதுவும் எதைவிடவும் சிறந்ததில்லை
என்பது புரியும். நமக்கு விவரம் தெரிந்த வரலாற்று காலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் . தகவல் தொடர்பும்
போதிய போக்குவரத்து வசதிகளும் இல்லாதிருந்த காலங்களில் தனித்தனி பூகோளப் பிரதேசங்களாயிருந்த
பல இடங்களில் பல மத வழிபாட்டு முறைகள் இருந்து வந்தன. எல்லா விஷயங்களிலும் ஆராய்ச்சிக்கு அனுமதி
கொடுத்திருக்கும் இயற்கை என்னும் கடவுள் இறைவனைப் பற்றிய ஆராய்ச்சிக்கும் தாராளமாக இடமளித்திருக்கிறது
அதனால் தான் மதங்களின் கோட்பாடுகளில் இவ்வளவு வேறுபாடுகள் நிறைந்திருக்கின்றன.

இந்தியாவில் மன்னராட்சி காலத்தில் பங்காளிச் சண்டை வலுத்திருந்த காலத்தில் இசுலாமியர்களை உள்ளே விட்டு
பல சிற்றரசுகளாய்ப் பிரிந்திருந்த இந்தியாவை ஒன்றிணைத்து ஒரு பேரரசாக்கியது இயற்க்கை . பின்னர் இசுலாத்தை
அவர்கள் மார்கமாக திணிக்க முயன்ற போது வெள்ளைக்காரர்களை உள்ளேவிட்டு போக்குவரத்தையும், தகவல்
தொடர்பையும் செம்மையாக்கி ஒரு முறையான ஆட்சிமுறையைக் கொண்டுவந்தது . வந்தவர்கள் அவர்களது வேலையைவிட்டு கிறித்துவ மதத்தைப் பரப்ப முயன்ற போது அவர்களை விரட்டிவிட்டு ஜனநாயகத்தைக் கொண்டு வந்தது. (நினைவிருக்கட்டும் எத்தனையோ நாடுகளை காலனிகலாக்கிய பிரிட்டன் இன்று எந்த வேற்றுநாட்டிலும் ஆட்சியில் இல்லை ) இந்தியாவில் கூட ஜனநாயகத்தைக் கொண்டு வரும் முன்பே ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலையை முதலிலேயே கொடுத்துவிட்டது. கூர்ந்து கவனித்தால் ஒரு திட்ட மிட்ட அணுகுமுறை புரியும். ஆக நாம் எந்த மதம் வெல்லும் என்று கவலைப்படத்தேவை இல்லை இயற்கை தன போக்கில் தன காரியங்களை முடித்துக் கொண்டு நம்மைப் பார்த்து நக்கலாய் சிரிக்கும் என்பது தான் உண்மை;.

Darren சொன்னது…

Whatever you say they never gonna accept and think. Male chauvinist religion.

சீனு சொன்னது…

இவர்கள் செய்யும் இதே வேலையைத்தான் சில வருடங்களுக்கு முன், so called, தமிழ் பகுத்தறிவாளர்களும் செய்துகொண்டிருந்தனர். இப்போ இவர்கள். History repeats itself.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்