மனிதனுக்கு (ஆண் / பெண் இருவருக்கும் தான்) அமைதி படுக்கை அறையில் கிடைக்கிறது என்றால், உடல் அழுத்தக் குறைவதும், புத்துணர்வும் கிடைப்பது கழிவறையில் தான், இதன் பிறகே பூசை அறையின் முக்கியமெல்லாம், ஒருவீட்டில் நல்லப் படுக்கை அறையும், கழிவறையும் இல்லை என்றால் அங்கு குடி இருப்பது மறைவான தெருவோரங்களில் குடியிருப்பதற்கு ஒப்பானது. பூசை அறைகளின் நறுமணங்களின் முக்கியங்களைவிட கழிவறைகளின் தூய்மையும் உலர்வும் மிகவும் இன்றியமையாதது. நாகரீக மேன்மை என்பதைவிட உலகின் பசிப்பிணி அகற்றமே மனித சமூகத்தின் முதல் நோக்கம் என்பது போல் தூய்மையான கழிப்பிடம் மிகவும் இன்றியமையாதது மற்றும் நோக்கமாகவும் இருக்க வேண்டும். 'தனித்திரு, பசித்திரு' - இதில் முதலில் வரும் தனித்திரு பூசை அறையில் யோக நிலையில் அல்லது தொழுகை / வழிபாட்டில் தனித்திருப்பதைக் காட்டிலும் கழிவறையில் தனித்திருத்தல் தான் தனிமனிதனின் உன்னதமான தேவையாக இருக்கிறது. நல்ல சுகாதாரமான, காற்றோட்டமான கழிவறையில் ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தாலும் அதில் கிடைக்கும் மன அமைதிக்கு ஈடு இணையை எந்த ஒரு வழிபாடும் தந்துவிடமுடியாது என்பதை நான் இங்கு பதிக்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால் உடலின் கழிவேற்றம் உடலுக்கும் மனதிற்கும் சிறு இன்பத்தைத் தான் கொடுக்கும், அந்தக் கழிவு உயிர்நீர், சிறுநீர் மற்றும் உணவுக்கழிவாகக் கூட இருக்கலாம்.
அடக்கமுடியாமல் சிறுநீரை கழிவறைக் கிடைக்கும் வரை அடக்கிக் கொண்டு இருப்போர் கழிவறையில் அதை கழிக்கும் போது கிடைக்கும் தற்காலிக நிம்மதி பெருமூச்சு, அது தரும் புத்தணர்வு சுவையான ஐஸ்க்ரீம் உண்பதைக் காட்டிலும் உடலின்பம் தரக் கூடியவை. மலச்சிக்கல், நீர்கடுப்பு என்பதையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு முறை கழிவு வெளியேற்றமும் மனிதனுக்கு கொஞ்சமேனும் உடலின்பத்தைத் தூண்டிவிட்டு தான் செல்கிறது. உங்கள் கழிவறை தனிமைகளில் இங்கு படிப்பது நினைவிருந்தால் ஒப்பிட்டுப்பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். அடுத்தது பசித்திரு, பசித்திருக்க உணவு செரிமானமும் அதன் பிறகு வயிறு காலியாகவும் இருக்க வேண்டும். தனித்திரு, பசித்திரு இந்த இரு சொல்லின் பொருளை முழுமையாக உணரவைப்பது ஆழ்மனத்தேடல்களோ, ஆன்மிகத் தேடல்களோ இல்லை கழிவறைகள் தான். பூசை அறைகளைவிட கழிவறைகளின் பரப்பளவும் உள் அலங்காரமும் நன்றாகவும், தூய்மையாக இருக்க வேண்டும். மனித சமூகத்தில் இலட்சியங்களில் ஒன்றாக தூய்மையான கழிப்பிடத்தின் தேவை எங்கும் உணர்த்தப்படவேண்டும். கழிவறைகளை தூய்மை செய்ய முகம் சுளிக்காதவர்களால் தான் இதனை மேம்படுத்த வேண்டும், என்னைப் பொருத்த அளவில் என் வீட்டு கழிவறைகளை நான் கழுவுவதை விரும்பிய செயல்களுள் ஒன்றாகத்தான் செய்கிறேன். பொதுக் கழிவறைகளை கழுவ அழைத்தாலும் என்னால் தயங்கமல் மனம் உவந்து அதைச் செய்ய முடியும். தொற்று நோய்க் கூடம், நெடி என்பது தவிர்த்துப் பார்த்தால் நம் உடலில் உள்ளவை தானே அங்கும். இங்கு கழிவறை என்று பொதுவாக நான் குறிப்பிட்டு இருந்தாலும் அவை குளியல் அறையையும் சேர்த்தே குறிப்பதாகும், வீடுகளில் அவை சேர்ந்து தான் இருக்கின்றது. உடலே ஒரு கோவில் என்பது போல் உடலே கழிவறைகளினாலும் ஆனது என்றும் சொல்லலாம்.
*******
கழிவறைச் சின்னங்கள் ஒவ்வொரு நாடுகளின் ரசனைக்கேற்று வரைந்துள்ளனர், குறிப்பாக உடைகள் அந்தப் பகுதி கலைகள் உள்ளிட்டவை கூட கழிவறைச் சின்னங்களில் காட்சியாக்கப்பட்டிருக்கும். ஒரு காலத்தில் (30 ஆண்டுகளுக்க்கு முன்பு) தமிழகத்தின் பிரபல கழிவறைச் சின்னங்களாக, ஆண் பெண் கழிவறைகளைக் குறிக்க ரஜினியின் தலையையும், ஶ்ரீ தேவியின் தலையையும் வரைந்தோ அல்லது படத்தில் இருந்து வெட்டி ஒட்டியோ வைத்திருந்தனர், இவை பெரும்பாலும் நகர மற்றும் சிறு நகர திரையரங்க பொதுக்கழிவறைகளின் காட்சியாக இருக்கும். இப்போதெல்லாம் நடிகர் நடிகைகளின் படங்களைப் போடுவதில்லை. கரியால் ஆண் / பெண் உருவங்களை வரைந்து வைத்திருக்கின்றனர். ஒரு படத்தில் கூட கவுண்டமணியையும் படத்தில் அவரின் மனைவியையும் படம் பிடிக்கும் செந்தில் அதை திரையரங்க கழிவறைகளில் ஆண் / பெண் கழிவறைக் குறிக்கும் சின்னமாக ஆக்கி வைத்திருப்பார், அதைப் பார்த்துவிட்டு கவுண்டமணி செம டென்சன் ஆகிவிடுவார். கழிவறையின் முகப்புகளில் குறிப்பிட்டவரின் அனுமதி இல்லாமல் அவர்களின் படங்களை வைப்பது தமிழகத்தின் நடைமுறையாக இருந்தது, மற்றும் அதில் இடம் பெறும் படத்திற்க்குரியவர்கள் அதை விரும்பமாட்டார்கள் என்பதும் அந்தக் காட்சியில் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டு இருந்தது. வெள்ளைக்கார சமூகத்தின் அடி ஒற்றிய நாடுகளின் கழிவறை சின்னங்கள் பொதுவானது நீலக் கால் சட்டை அணிந்த ஆண் நிழல் உருவமும், முழுகால் வரை உடை அணிந்த நிழல் பெண் உருவமும் கழிவறைச் சின்னங்களாக இருக்கும்.
சில ரசிக்கத் தக்க நகைச்சுவையான கழிவறைச் சின்னங்கள்.
மேலும் சில
(வளைகுடா நாடுகளில்?)
கீழே உள்ளதை பார்த்த பிறகு திறந்த ஜிப்போடு வெளியே வருபவர்கள் தான் நினைவுக்கு வந்தது :)
ரொம்ப நகைச்சுவையாக நான் ரசித்தது கீழே
அது அது........
இணைப்புகள் :
28 கருத்துகள்:
:)
ஹாய் கோவி,
வணக்கம், குட் டே ,Sela mat tengahari
பதிவை ரசித்தேன்.
மேற்கத்திய கழிவறை பயன்படுத்துவது எப்படி
http://www.eegarai.net/t44414-topic
http://www.theage.com.au/news/world/man-dies-bleeding-in-toilet-accident/2006/05/23/1148150235957.html
http://www.videofy.me/mrcrime/498465
http://www.slideshare.net/Dondu
pls make a post in this
சின்னங்கள் ரசிக்கும்படி இருந்தது.நல்ல தொகுப்பு !
நல்ல தொகுப்பு!
இந்தியப் பயணங்களில் ரொம்பவே பயமும் கவலையும் அடைவது இந்த விஷயத்தில்தான்.
சாலைகளில் பயணிக்கும்போது ரெஸ்ட்ரூம்களைத் தேடித்தேடி.... அலுத்து.....
எப்பதான் நம்ம மக்கள் இதன் அவசியத்தைப்புரிஞ்சு கொள்வாங்களோன்னு இருக்கும்.
செல்ஃபோனுக்கு இருக்கும் முக்கியத்துவம் சுத்தத்துக்கு இல்லையே:(
சாப்பாடு எனக்கு ரெண்டாம் பட்சம். வெறும் சோறு மட்டும் இருந்தால் போதும்.
//துளசி கோபால் கூறியது...
நல்ல தொகுப்பு!
இந்தியப் பயணங்களில் ரொம்பவே பயமும் கவலையும் அடைவது இந்த விஷயத்தில்தான்.
சாலைகளில் பயணிக்கும்போது ரெஸ்ட்ரூம்களைத் தேடித்தேடி.... அலுத்து.....
எப்பதான் நம்ம மக்கள் இதன் அவசியத்தைப்புரிஞ்சு கொள்வாங்களோன்னு இருக்கும்.
செல்ஃபோனுக்கு இருக்கும் முக்கியத்துவம் சுத்தத்துக்கு இல்லையே:(
சாப்பாடு எனக்கு ரெண்டாம் பட்சம். வெறும் சோறு மட்டும் இருந்தால் போதும்.//
இந்தியா ஒரு ஆணாதிக்க நாடு பெண்களின் வசதி பற்றி கவலைப்படமாட்டார்கள். கொஞ்சமும் கூச்சப்படாமல் ஆள் பார்க்கவில்லை என்றால் அங்கு சிறுநீர் கழித்துவிட்டு சென்றுவிடுவார்கள் ஆண்கள், அதனால் தான் அவர்களுக்கு பெண்களின் தேவைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. பெரிய பெரிய துணிக்கடைகளிலும் கழிவறை நிலவரம் சென்னையில் மிகவும் மோசம் :(
//பிரியமுடன் பிரபு கூறியது...
:)//
நன்றி
// thequickfox கூறியது...
ஹாய் கோவி,
வணக்கம், குட் டே ,Sela mat tengahari
பதிவை ரசித்தேன்.//
மிக்க நன்றி, இது பற்றி அவ்வப்போது எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன்
//Vinoth Kumar கூறியது...
மேற்கத்திய கழிவறை பயன்படுத்துவது எப்படி //
இணைப்புகளுக்கு மிக்க நன்றி
//கபிலன் கூறியது...
சின்னங்கள் ரசிக்கும்படி இருந்தது.நல்ல தொகுப்பு !//
நன்றி கபிலன்
கழிவறையைப் பற்றி பதிவு எழுத வேண்டும் என்றால் ரொம்பவும் குஷியாயிடுவீங்களோ! சரி.
ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம் என்று சொல்லும் நீங்கள் ஆண் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது போலவும் பெண் உட்கார்ந்து சிறு நீர் கழிப்பது போலவும் படத்தை வெளியிட்டிருப்பது நியாயமா? :-)
//கழிவறையைப் பற்றி பதிவு எழுத வேண்டும் என்றால் ரொம்பவும் குஷியாயிடுவீங்களோ! சரி.
ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம் என்று சொல்லும் நீங்கள் ஆண் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது போலவும் பெண் உட்கார்ந்து சிறு நீர் கழிப்பது போலவும் படத்தை வெளியிட்டிருப்பது நியாயமா? :-)//
எவருக்கு எது வசதியோ அதைத்தான் செய்ய முடியும். யூரினல் என்கிற சிறுநீர் பீங்கான்கள் இல்லாத காலத்தில் ஆண்களின் சிறுநீர் அவர்கள் காலிலும் தெறிக்கும், அதனால் அவ்வாறு செய்வது சுகாதாரக் கேடானது, தற்போது என்ன பிரச்சனை ? ஒரு காலத்தில் ஆண் / பெண் உட்கார்ந்து தான் சிறுநீர் கழித்தனர்.
ஆண் பெண் சமம் என்பதை முடிவு செய்யும் இடமாக கழிவறையில் நின்று கொண்டு கழிப்பதைப் பற்றி பேசுவது புரட்சி கிடையாது, அது வசதியைப் பொருத்தது, மாறாக பெற்ற குழந்தைக்கு ஒரு ஆணால் குண்டி கழிவி விடும் வேலையை செய்ய முடியுமா ? என்று கேட்டுப் பதிலைப் பெற்றாலா / தந்தாலோ அங்கு உங்களுக்கு பெண்கள் மீதான கரிசனம் இருப்பதை நான் ஒப்புக் கொள்வேன்.
வெறுமனே குரான் ஆண்களை உட்கார்ந்து கழிக்கச் சொல்கிறது என்கிற மதவாத சிந்தனைகளை பெண்ணிய ஊறுகாய்க்குள் நுழைக்கும் உங்கள் எள்ளல் முயற்சி சிரிப்பையே வரவழைக்கிறது.
வருகைக்கு நன்றி
காலையிலேயே தலைப்பு கண்ணை இழுத்துச்சு.ரொம்பத்தான் மெனக்கெடுறீங்க:)
கற்பனைக்கும் மிஞ்சிய சின்னங்கள்.
கோவி கண்ணன்!
//வெறுமனே குரான் ஆண்களை உட்கார்ந்து கழிக்கச் சொல்கிறது என்கிற மதவாத சிந்தனைகளை//
தவறான தகவல். குர்ஆனில் அப்படி எந்த கட்டளையும் இல்லை. முகமது நபியே அவசியம் ஏற்படும் போது சில நேரங்களில் நின்று கொண்டு சிறுநீர் கழித்திருக்கிறார்.
//ஆண் பெண் சமம் என்பதை முடிவு செய்யும் இடமாக கழிவறையில் நின்று கொண்டு கழிப்பதைப் பற்றி பேசுவது புரட்சி கிடையாது, அது வசதியைப் பொருத்தது,//
இந்த பதிலைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆணும் பெண்ணும் உடற்கூறு ரீதியாக சில மாற்றங்கள் இருக்கும் போது ஆணைப் போலவே பெண்ணும் உடை அணிய வேண்டும் என்ற வாதம் வைக்கப்படுகிறது. பெண்களின் உடற்கூறுக்குத் தக்கவாறு சில உடைகளை மேலதிகமாக இஸ்லாம் இடச் சொல்லும் போது அதை பலர் குறை கூறுவதைப் பார்க்கிறோம். இங்கும் பெண்களின் உடல் அமைப்பில் நின்று கொண்டு அவர்களால் சிறுநீர் கழிக்க முடியாது. என்னதான் சமத்துவம் பேசினாலும் ஆணுக்கென்று சில சிறப்புகள் உண்டு. பெண்ணுக்கென்று சில சிறப்புகள் உண்டு. இரண்டும் எக்காலத்திலும் சமமாக முடியாது. இதைச் சொல்லவே வந்தேன்.
நல்ல பதிவு,
இதில் முக்கியமான செய்தி :-)...
////அடக்கமுடியாமல் சிறுநீரை கழிவறைக் கிடைக்கும் வரை அடக்கிக் கொண்டு இருப்போர் கழிவறையில் அதை கழிக்கும் போது கிடைக்கும் தற்காலிக நிம்மதி பெருமூச்சு, அது தரும் புத்தணர்வு சுவையான ஐஸ்க்ரீம் உண்பதைக் காட்டிலும் உடலின்பம் தரக் கூடியவை.////
இது ஆண்களின் உச்சநிலைக்கு ஒப்பானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். -:)
நம்ம பூனையார் இந்த விஷயத்தில் எப்பூடி???
அடடா அருமை. Forward email ல வர தயங்கும் விசயம் :)
கோவி,
கழிவறை சின்னங்களுக்கும் அரசியல் சின்னங்கள் போல போடுங்கம்மா ஓட்டூனு கூவாத குறையா இருக்கு பதிவு :-))
வந்துட்டார் சு.பிரியன், அவர கவனிப்போம்,
//ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம் என்று சொல்லும் நீங்கள் ஆண் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது போலவும் பெண் உட்கார்ந்து சிறு நீர் கழிப்பது போலவும் படத்தை வெளியிட்டிருப்பது நியாயமா? :-)//
பாலைவனத்துல ஆயி போனப்பிறகு மண்ணைப்போட்டு மூட சொன்னது குரான்னு எனவே வெஸ்டர்ன் டாய்லெட்டிலும் மண்ணை போட்டு மூடுறிங்களா :-))
ஒரு ஆணுக்கு நான்கு மனைவிகள் வைத்துக்கொள்ளலாம்னு உரிமை தருவது போல பெண்ணுக்கும் நான்கு கணவன் வைத்துக்கொள்ளலாம் என உரிமை தரப்ப்ட்டுள்ளதா?
ஆண்களும் புர்க்கா போட்டுக்கிறாங்களா?
எனது கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு அப்புறமா ஆண் நிற்கிறான் , பெண் உட்காருகிறாள் போல சின்னம் போட்டதை நீங்க பேசலாம் :-))
//இந்த பதிலைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆணும் பெண்ணும் உடற்கூறு ரீதியாக சில மாற்றங்கள் இருக்கும் போது ஆணைப் போலவே பெண்ணும் உடை அணிய வேண்டும் என்ற வாதம் வைக்கப்படுகிறது.//
அதை வைக்க வேண்டியது ஒரு பெண் தான். சுவனத்தில் கன்னிகை(களை) விரும்புவர் அல்ல. தவிர இது தான் பெண் உடை என்று யாருக்கும் வரையறுக்க அருகதை இல்லை, உங்கள் மதம் சார்ந்தவற்றைப் பொது வாக்க முயன்று சூடுபட்டுக் கொள்ளாதீர்கள். உங்கள் மதம் கல்லால் துடைத்துக் கொள்ளச் சொன்னால் நீங்கள் செய்யலாம், ஆனால் அது தான் தூய்மையைச் செய்ய வல்லது என்று நீங்கள் விவாதம் செய்ய முடியாது.
//பெண்களின் உடற்கூறுக்குத் தக்கவாறு சில உடைகளை மேலதிகமாக இஸ்லாம் இடச் சொல்லும் போது அதை பலர் குறை கூறுவதைப் பார்க்கிறோம்.//
என்னைக் கேட்டால் குளிர் மிகுந்த நாடுகளில் ஆண்களும் முழு உடலைப் போர்த்தியாக வேண்டும், தவிர காமவெறியர்கள் உள்ள நாடுகளில் பச்சைக் குழந்தைகளுக்கும் பர்தா போடவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று பல பதிவுகளில் பதித்தே வருகிறேன்.
//இங்கும் பெண்களின் உடல் அமைப்பில் நின்று கொண்டு அவர்களால் சிறுநீர் கழிக்க முடியாது. என்னதான் சமத்துவம் பேசினாலும் ஆணுக்கென்று சில சிறப்புகள் உண்டு. பெண்ணுக்கென்று சில சிறப்புகள் உண்டு. இரண்டும் எக்காலத்திலும் சமமாக முடியாது. இதைச் சொல்லவே வந்தேன்.//
இதில் சமத்துவம் என்பது எங்கிருந்து வந்தது, ஒரு ஆணால் 10 கவளம் உண்ண முடிந்தால் 5 கவளம் உண்ண முடிந்த பெண்களைப் பார்த்து சமத்துவம் இல்லை என்று சொல்வதா ? சுத்த பேத்தலாக இருக்கு சார் உங்க வாதம். இல்லாட்டி ஒண்ணு பண்ணுங்க ஆண்களைப் போல் பெண்களால் பல திருமணங்களை ஒரே நேரத்தில் செய்து கொள்ள முடியுமா ? என்று கேட்டு சவால் விடுங்களேன்.
ஒரு ஆணுக்கு சாட்சியாக இரண்டு பெண்களின் சாட்சி என்று சமத்துவம் பேசும் உங்கள் மத லட்சணம் தெரிந்த ஒன்று தான், உங்களுக்கெல்லாம் மதம் தாண்டிய வரையரைகளில் சமத்துவம் பேசுவதற்கே தெரியாது என்பதால் உங்கள் பொதுவானக் கருத்துகள் யாவும் புறம் தள்ளக் கூடியதே.
//ராஜ நடராஜன் கூறியது...
காலையிலேயே தலைப்பு கண்ணை இழுத்துச்சு.ரொம்பத்தான் மெனக்கெடுறீங்க:)
கற்பனைக்கும் மிஞ்சிய சின்னங்கள்.//
எதோ என்னால் முடிந்த சமூக சேவை
:)
// ILA(@)இளா கூறியது...
அடடா அருமை. Forward email ல வர தயங்கும் விசயம் :)//
:)
//கந்தசாமி. கூறியது...
:)//
நகைப்புக்கு நன்றி
||சாப்பாடு எனக்கு ரெண்டாம் பட்சம். வெறும் சோறு மட்டும் இருந்தால் போதும்.||
ரீச்சர்,சுந்தர்ராசன் 500 ரூபாய் கொடுத்து வெறும் இட்லி மட்டும் போதும் என்று சொன்ன மாதிரி அனுபவம் ஏதும் கோபால் சாருக்கு இருக்கா??
:))
(with due respect to sir.:))
அறிவன்,
ஆஹா...... இது சினிமா சம்பவமா?
எந்தப்படம்? எந்தப்படம்?
Overall என்கின்ற ஒரே மாதிரியான வேலை ஆடையை ஆண்களும், பெண்களும் அணிந்து பல முன்னேறிய நாடுகளில் சர்வ சாதாரணமாக ஒன்றாக தொழில்சாலைகளில் வேலை செய்கிறார்கள். பெண்ணுக்கு மேலதிகமாக எந்த உடையும் கிடையாது. குரானை பின்பற்றும் இவர்களுக்கு தான் பெண்கள் மூடி வைக்கபட வேண்டிய பொருளாக போய்விட்டது.
{{அறிவன்,
ஆஹா...... இது சினிமா சம்பவமா?
எந்தப்படம்? எந்தப்படம்?}}
நட்புக்காக படத்தில் சுந்தர்ராசன் எனக்கு வெறும் இட்லி போதும் என்று செந்திலிடம் கூறுவார்.
பின் என்ன நடந்தது என்பதை வெள்ளித்திரையில் காண்க. :)
நன்றி அறிவன்,
நம்மகிட்டே அந்தப்படம் இருக்கணும். தேடிப் பார்த்துடலாம்:-))))
படங்கள் நன்றாக இருக்கு :-)
கழிவறைகள் குறித்த ஒரு சிறப்பான பதிவு .. உண்மை தான் கழிவறைகள் இல்லாத வீடு எல்லாம் ஒரு வீடா... பல பூசை அறைகள் வைத்திருப்பார்கள் - ஆனால் கழிவறை இருக்காது ... !!! இது தான் பல இந்தியர்களின் நிலை இன்று ..
கழிவறையில் கலைவண்ணம் கண்ட புகைப்படங்கள் இரசிக்கும்படியானவை .. சிலப் புகைப்படங்கள் இந்தியாவில் வைத்தால் கலாச்சாரக் காவலர்கள் கொந்தளிக்கக் கூடும் .. ஆனால் கொடுமை என்னவெனில் - பல ஆண்கள் / பெண்கள் திறந்தவெளியில் கழிப்பதை விடவும் இந்த சின்னங்கள் ஆபாசமானவை அல்லவே !!!
கருத்துரையிடுக